அது மட்டும் ரகசியம்

By sankaridayalan

39.7K 2.2K 2.9K

கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
15
16
17
18
19
Author update
Author update
20
21
22
😍

14

1.2K 84 88
By sankaridayalan

சூரியன்   ஆரஞ்சு   வண்ண  பந்து  போல  தன்  உருவத்தை  மாற்றிக்கொண்டு  அஸ்தமனமாகப்போகும்  அந்த  மாலை  வேளையில்  ராமின்  கார்  அந்த  சாலையில்   வழுக்கிக்கொண்டு  சென்றுகொண்டிருந்தது . 

        காரை  ராம்  செலுத்திக்கொண்டிருக்க   அவன்   அருகில் உள்ள   இருக்கையில்  ராஜீவ்   அமர்ந்திருக்க  விஷ்ணுவும்  வேதாவும்  பின்  இருக்கையை  ஆக்ரமித்திருந்தனர் . நாள்   முழுவதும்  அந்த   சுற்றுலாத்தலத்தினை  நன்றாக   சுற்றிப்பார்த்ததில்  சிறிது  களைத்திருந்தனர் .  ஆனாலும்  அந்த  இடத்தின்  அழகானது   மனத்தில்  ஒருவித  கிளர்ச்சியை   இவர்களுக்குள்  பதித்துவிட்டுத்தான் அனுப்பியிருந்தது . விஷ்ணு ஒருவனுக்குத் தவிர.

         அடுத்த  இரண்டுமணி  நேரத்தில்   அவர்கள்  வீட்டை  அடைந்தனர் .   அங்கே  ஹாலில்  ராமின்  தந்தை  ஈஸ்வரபாண்டியன்   அவ்வூர்  பெரிய  மனிதர்களோடு   அமர்ந்து ஏதோ  பேசிக்கொண்டிருந்தார் .  

          "என்ன சதாசிவம் நம்ம ஊரு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு…"என்று  நெற்றியில் பெரிதாக பட்டைத் தரித்திருந்திருந்த மனிதரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஈஸ்வரபாண்டியன்.

       "அதெல்லாம் கடவுள் அருளால நல்லா போய்கிட்டு இருக்கு… கோவில்ல இன்னும் கொஞ்சம் அறைங்கள்லாம் சுத்தம் பண்ணனும் . கோயில் மண்டபம் , பாதள அறைன்னு ஒரு சிலது சுத்தம் பண்ண வேண்டி இருக்குங்கய்யா" என்று சதாசிவமும் சொல்லிக்கொண்டிருந்தார்.

"நம்ம கோவில்ல பாதாள அறை இருக்குன்றதையே சமீபத்துல தான் நாம கண்டுபிடிச்சோம் … அதுக்குள்ள என்னெனல்லாம் இருக்குன்னே தெரியாது … ஏதாவது பூச்சி பொட்டு இருக்கப்போகுது ...அந்த அறையை எப்படிய்யா சுத்தம் பண்றது… எவன் தைரியமா உள்ள போய் க்ளீன் பண்ணுவான்" கேள்விக்குறி தொக்கிய முகத்துடன் கேட்டார் ஈஸ்வரபாண்டியன்.

"இல்லைங்கய்யா அது அதுக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான் எனக்கு தெரிஞ்ச ஆளுங்களை வரவழைக்கட்டுங்களா?" எனக் கேட்டார் சதாசிவம்.

நல்ல ஆளுங்களா பார்த்து கூப்பிடுய்யா… வேலை சர்வ சுத்தமா இருக்கனும்.கூலி முன்ன பின்ன ஆனாலும் பராவாயில்லை… எல்லாம் நான் பார்த்துக்குறேன்"என்று கூறினார் ஈஸ்வரபாண்டியன்.

"சரிங்கய்யா … சீக்கிரமே நம்ம கோவில்ல வந்து சீரமைக்க சொல்லிட்றேன்" என்றார் சதாசிவம்.

"அய்யா… அப்புறம் நம்ம கோவில்ல கண்டுபிடிச்ச  ஓலைச்சுவடில என்ன இருந்துச்சுன்னு அதிகாரிங்க ஏதாவது சொன்னாங்களா?" என்று சதாசிவம் ஈஸ்வரபாண்டியனிடம் கேட்டார்.

இந்த சம்பாஷனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தான் ராம் உடன் விஷ்ணுவும் வந்தான்"என்னது நம்ம கோவில்ல ஓலைச்சுவடி கிடைச்சுதா? இன்ட்ரஸ்டிங்… எப்ப ,எப்படி கண்டுபிடிச்சீங்க… அதுல என்ன இருந்துச்சு… ?" எனக் கேள்வி அம்புகளை வரிசையாக தொடுத்தான்.

" வாங்க வாங்க தம்பி… நம்ம கோவில்ல கும்பாபிஷேகமும் திருவிழாவும் வரப்போகுல்ல… அதுனால கோவில சீரமைக்கிற வேலை நடந்துட்டு இருக்கு. ஒரு வாரத்துக்கு முன்னாடி  பொக்கிஷ அறையை நாங்க சுத்தம் செஞ்சிட்டு இருக்கிறப்ப ஒரு மரப்பேழையை பார்த்தோம். அதுலதான் அந்த ஓலைச்சுவடி இருந்தது.

"அப்படியா…?அதுல என்ன இருந்தது" ஆர்வம் தாளாமல் விஷ்ணுவே கேட்டான்.

அதற்கு ஈஷ்வரபாண்டியன் "எங்க யாருக்குமே அந்த சுவடில உள்ள எழுத்துக்களை படிக்க தெரியலை. அதனால அரசு அதிகாரிகளை வரவழைச்சு அவங்க கிட்ட கொடுத்துட்டோம். 

இப்பதான் அவங்க வந்துட்டு போனாங்க. ஓலைச்சுவடில என்ன இருக்குன்னு சொன்னாங்க… நம்ம கோவிலோட சொத்துக்கள் ,நகைகள், சாமி சன்னிதானங்கள்னு முழுக்க முழுக்க கோவில பத்திதான் இருக்காம் . நம்ம கோவில்ல மரகதலிங்கம் கூட இருந்துச்சாம். இந்த விஷயத்தைதான் அவங்க சொல்லிட்டு போனாங்க " என்று கூறினார் ஈஷ்வரபாண்டியன்.

மேலும் ராமினை அருகே அழைத்த ஈஷ்வரபாண்டியன்“ தம்பி  ..... நம்ம  கோவில்ல  திருவிழா  நடத்தறதை  பத்திதான்  இங்க  பேசிட்டு  இருந்ததை கேட்டல்ல .  எனக்கு  அப்புறம்  இதை  எல்லாம்  நீதான்  எடுத்து  நடத்தனும் .  இப்பவே  அதே  எப்படி  எல்லாம்  செய்யனும்னு  கூட  இருந்து  கத்துக்கனும் . இன்னும்  ஒரு  வாரம்  பத்து  நாள்ள   திருவிழாக்கான  எல்லா  ஏற்பாடும்  முடிக்கனும்  ... நாளும்  ரொம்ப  குறைவா  இருக்கு ... அதனால  என்னால  மட்டும்  தனியா  செய்யமுடியாது ... நீயும்  என்  கூட   ஒத்தாசையா  இருக்கனும் ... புரியுதா ?  என  ஒரு  வித  மிடுக்குடன்  கூறியவரின்   சொல்லுக்கு  “ சரிப்பா ... நீங்க  சொல்ற  மாதிரியே  செய்றேன் “ என  சம்மதம்  கூறி  அங்கிருந்து  நகன்றான் ராம். 

          நடப்பதை  எல்லாம்  பார்த்துக்கொண்டிருந்த  விஷ்ணுவிடம்   வந்த  ராம்  “ என்னடா   விஷ்ணு   இப்படி   ஆகிடுச்சு .... நான்  உங்க  கூட  இன்னும்  நல்லா  என்ஜாய்  பண்ண  ஆசையா  இருந்தேன் ... ஆனா  அப்பா  இப்படி   இவ்வளவு  பெரிய  வேலையை  என்  தலையில  கட்டிட்டாரேடா ! “ என சற்று  வருத்தம்  மேவிய  குரலில்  கூறினான் . 

          “ ஏய்  இதுக்கெல்லாம்  போய்  ஃபீல்  பண்ணிக்கிட்டு ...  கிராமத்து  திருவிழாலாம்  நான்  பார்த்ததே  இல்ல .  எனக்கே  ரொம்ப  எக்ஸைட்மென்ட்டா  இருக்கு ... அப்பா  ஹெல்ப்  தானே  கேக்குறார் ... நீயும்  இதையெல்லாம்  கத்துக்கிடனும்  இல்லையா … சோ  ஃபீல்  பண்ணாம  போய்  இருக்குற  வேலையைப்பாரு  என  சொல்லிவிட்டு  தனதறைக்கு  சென்றான்  விஷ்ணு . 

              என்னதான்   வெளியில்   தான்   இயல்பாக   இருப்பதைப்போல்  காட்டிக்கொண்டாலும்   மனத்தினில்   ஒரு   பிரளயமே   நடந்துகொண்டிருந்தது  அவனுக்கு .  காலையில்   தன்  மீது   மோதிய  அந்த  வளவனைப்போன்ற   தோற்றம்  கொண்டவனைப்பார்த்த   பொழுதிலிருந்தே  இதே  நிலைதான்  நீடித்துக்கொண்டிருந்தது . 

                “ அவன்  யார் ? நான்  ஏன்  அவனைப்  பார்க்கனும் ?  அவன்  ஏன்  வளவனைப்  போல  இருக்கனும் ? அவனுக்கும்  வளவனுக்கும்  ஏதாவது  கனெக்ஷன்  இருக்குமா ?  அப்படி  அவன்  வளவனா  இருந்தா  பழைய  ஞாபகம்   எனக்கு  வந்த  மாதிரி   அவனுக்கும்   வந்திருக்குமா ? “ கேள்விக்  கனைகளால்   தன்னைத்   தானே   துளைத்துக் கொண்டிருந்தான்  விஷ்ணு . 

                    “ எது  எப்படி  இருந்தாலும்  இனி   கொஞ்ச   நேரம்   கூட  தாமதிக்காம  அந்த  லிங்கத்தைக்   கண்டுபிடிக்கிற  வேலையை  மட்டும்  உடனே  பார்த்துடனும் “   என  எண்ணியவன்  தன்னைத்தானே  ஆசுவாசப்படுத்திக்கொண்டான் . 

                      மறுநாள்   பொழுது   விடிந்து   வெகுநேரம்   கழிந்தே    உறக்கத்திலிருந்து  எழுந்தான் .  எழுந்தவன்    தன்    முகத்தை   அலம்பிக்கொண்டு      ஹாலிற்க்கு  வந்தான் .  அங்கே    ராமின்  தாய்  கௌரி   சோஃபாவில்  அமர்ந்துகொண்டு   செய்தித்தாள்களைப்  புரட்டிக்கொண்டிருந்தார் .  அவனைப்பார்த்தவுடன்  “ மனோ .... ஒரு  கப்  காஃபி  சூடா  எடுத்துட்டு   வா ....” என்று  வேலையாள்  மனோன்மணியிடம்  கட்டளையிட்டுவிட்டு  “ என்ன  விஷ்ணு..... இவ்வளவு  லேட்டா  எழுந்துக்கிட்ட ? நைட்  சரியா  தூங்கலையா ? “ என  வினவினார் . 

             அதற்க்குள்  மனோன்மணி  காஃபி   ட்ரேயுடன்  அங்கே   விஜயமானாள் .  “ காஃபி  எடுத்துக்கோ   விஷ்ணு ... ராம்   அவங்க  அப்பா   கூட  காலையிலேயே   திருவிழா   விஷயமா   வெளியே  கிளம்பிட்டான்.  நீ   எழுந்த  உடனே   உன்கிட்ட  சொல்ல  சொன்னான் “ என்றார்   கௌரி . 

           அந்த  நேரம்  பார்த்து   சமையலறையில்   ஏதோ   பாத்திரங்கள்  தொடர்ச்சியாக   கீழே   விழுந்து   உருளும்  சப்தம்  கேட்கவும்  “ மனோ....அங்கே  என்னத்தை  போட்டு  உடைச்சிட்டு   இருக்க ....என்றபடியே  சமயலறையை  நோக்கி   சென்றுவிட்டார் . 

             ஹாலில்   தனித்து  விடப்பட்ட  விஷ்ணு “ இதான்   லிங்கத்தை  தேட  சரியான  நேரம் .  ராம்   இருக்கும்போது  வெளிய  போனா  எங்க  போற ?  ஏன்  போறன்னு   நச்சரிச்சிட்டு  இருப்பான் .  சோ   இப்போ  கிளம்பறதுதான்   பெட்டர்  “ என்று   நினைத்தான் . 

             அதன்படியே   அடுத்த   அரைமணி   நேரத்தில்   கிளம்பி   வீட்டின்   வாயிலை   அடைந்தவனை    இடைமறித்தது   வேதாவின்  குரல் . 

          “ விஷ்ணு  .... எங்க  கிளம்பறீங்க ...”  என்றபடி   விஷ்ணுவின்  அருகில்  வந்து  நின்றாள்  வேதா . 

            திடீரென்று   வேதா  கேட்கவும்   என்ன  சொல்வதென்று  முழித்தவன் “  அது... அது  சும்மா  லாங்  ட்ரைவ்   போலாம்னு  கிளம்பினேன்  “ என்றான் . 

            “ என்னது   லாங்   ட்ரைவா ! சூப்பர் .... நானும்  வரேன் ... லாங்  ட்ரைவ்னா  எனக்கும்   ரொம்ப  இஷ்டம்  ...” என்று  குதூகலத்துடன்  கூறினாள் . 

             உடனே   விஷ்ணு  “ இல்லைடா  நீ   வீட்லயே   இரு ...இப்போ  என்  கூட  வந்தா  அம்மா   ஏதாச்சும்  நினைச்சிடுவாங்க ...சோ  வேண்டாம்டா “ என்றான் . 

               “ என்ன  விஷ்ணு  நீங்க ... எல்லாரும்  லவ்  பண்ற  பொண்ண   எப்படா  வெளிய  கூட்டிட்டு  போகமுடியும்னு   ஆசையா   வெய்ட்   பண்ணிட்டு   இருப்பாங்க ... நீங்க  என்னடான்னா    நானே   வந்து   கேட்டாக்கூட  இப்படி   பயப்பட்றீங்களே .. .. டூ   பேட் “ என  சலித்துக்கொண்டாள் . 

              “ ஹே   சொல்லறத   கேளுடா ... இது   சிட்டி  இல்ல ...கிராமம் ... இடத்துக்கு   தகுந்த  மாதிரிதான்  நாம  இருக்கனும் .  மனம்  போன   போக்குல  நடந்தா  அது  சங்கடத்துலதான்  முடியும் . ப்ளீஸ்டா  கண்ணா... என்றவனின்  வார்த்தைகளில்   சமாதானமடைந்த   வேதா  “ சரி  ஓகே   போய்ட்டு   வாங்க  “ என்று   ஒற்றை   வரியில்   பதிலளித்தாள் . 

                “ ஹ்ம்ம்   குட்   கேர்ள் ...”  என்ற  விஷ்ணுவிற்க்கு   தன்   மொபைலை   அறையிலேயே   மறந்து   வைத்துவிட்டது   நினைவிற்க்கு   வர  அதை  மேலே   சென்று   எடுத்துக்கொண்டு  வந்தான் . 

                போர்டிகோவில்    நிறுத்தியிருந்த   தன்   காரிற்க்கு   வந்தவன்  இக்னீஷியனை    உயிர்ப்பித்தக்கொண்டு   புறப்பட்டான் .  அவனின்  எண்ண  ஓட்டத்திற்க்கு   இசைந்தாற்ப்போல்   அவனின்   காரும்   வேகமாகவே   சென்றது  .   

              அந்த   ஊரைத்தாண்டி   சற்று   ஒதுக்குப்புறமாக  இருந்த   அந்த குன்று இருக்கும் காட்டுப்பிரதேசத்தில்   வண்டியை   நிறுத்தியவன்  சுற்றும்   முற்றும்  பார்த்தான் .   ஆள்அரவமே  இல்லாமல்  இருந்த  அப்பகுதி   ஒருவித   நிசப்தத்துடனே   காட்சியளித்துக்கொண்டிருந்தது .  

காரில் இருந்து இறங்கியவன்  விறுவிறுவென்று அந்த குன்றை நோக்கி நடையை துரிதப்படுத்தினான்.ஒரு இனம் புரியா ஒரு உணர்வு மனதுக்குள் ஊர்ந்தது.

             அருகே   செல்ல  செல்ல   இருதயத்தின்   படபடப்பானது   நொடிக்கு  நொடி  கூடிக்கொண்டே   சென்றது   அவனுக்கு .  விஷ்ணுவின்   மனதில்  ஓரத்தில்    தன்னை  யாரோ   பின்தொடர்வது   போன்ற   பிரமை   ஏற்படவும்    திரும்பிப்  பார்த்தான் .  ஆனால்   அங்கே   அதுபோல்   யாரும்   இல்லாமல்   போகவே   மீண்டும்   தன்   நடையினை   அக்குன்றை  நோக்கி   துரிதப்படுத்தினான்  அவன் . 

              “ இதோ   ...இதோ வந்துட்டோம் ... பல  வருஷ  சபதம்  நிறைவேற   இன்னும்   கொஞ்ச  நேரம்தான்  இருக்கு" என   நினைத்தவன்   பரவசமானான் . 

             அந்த   குன்றை   அடைந்தவுடன்  வளவன்  அங்கு நடந்த அத்தனை நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வர தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

குன்றின் அடிப்பகுதியில் குகைபோன்ற அமைப்பே தெரியாதவாறு முட்செடிகளும் புதர் செடிகளும் ஓங்கி வளர்ந்திருந்தன.

அதே நேரம் விஷ்ணு என்று அழைத்தபடி அவனின் முதுகில் ஒரு  கை விழவே பதறியடித்துக் கொண்டு திரும்பிப்பார்த்தான் விஷ்ணு.

           “ வேதா.... நீயா ? ... நீ எப்படி இங்க வந்த" அங்கு   கண்களில்   மிதமிஞ்சிய  சந்தேகத்துடன்   நின்றிருந்த   வேதாவைப்பார்த்துக்   கேட்டான்  விஷ்ணு . 

             “ ஹ்ம்ம்   நான்தான்  ....  நானேதான் .... வேதாவேதான் ....இந்த  அத்துவானக்   காட்டுல   என்ன  பண்ணிட்டு   இருக்கீங்க ? இதான்   உங்க   லாங்   ட்ரைவ்வா ?  எதுக்கு  இங்க   வந்து   இந்த குன்றுகிட்ட நின்னுட்டு இருக்கீங்க … என்ன  நடக்குது   இங்க   “ என  காட்டமாக  கேட்டாள்   வேதா . 

              வேதாவிற்க்கு   என்ன  பதில்   சொல்வது   எனத்தெரியாமல்   திருதிருவென   முழித்தான்  விஷ்ணு .  பின்   ஒரு  நிமிடம்   சுதாரித்தவன் “ ஹ்ம்ம்  ... இதுக்கு   மேலே  நான்  உன்   கிட்ட   எதுவும்   மறைக்க  விரும்பல ....  எல்லாத்தையும்   சொல்லிட்றேன் .  அதுக்கு  முன்னால  நீ  எப்படி  இங்க  வந்த ?  அதை  முதல்ல  சொல்லு “ என்றான் . 

             

              “ உங்க  கூட  வரக்கூடாதுன்னு  நீங்க  என்னை  எவ்வளவு   சமாதானப்படுத்தினாலும்  என்  மனசு   கேகக்கவேயில்லை .... உங்க   கூட   டைம்   ஸ்பென்ட்   பண்ணணும்னு   ரொம்ப   ஆசையா   இருந்துச்சு ... நீங்க   உங்க   மொபைலை   மறந்துட்டீங்கன்னு   அதை  எடுத்துட்டு   வர   உங்க   ரூம்க்கு   போனீங்க  இல்லையா .... அப்போ   உங்களுக்குத்  தெரியாம  காரோட  பின்  சீட்ல  போய்  ஒளிஞ்சிகிட்டேன் .  நீங்களும்   புறப்பட்ற  அவசரத்துல என்னை  பார்க்கல . 

                 ஆனா   ஃப்யூ  மினிட்ஸ்ல  என்னை     கண்டுபிடிச்சிடுவீங்கன்னு  நினைச்சேன் .  பட்   நீங்க   ஏதோ   திங்க்   பண்ணிட்டே   இருந்தீங்க.  நானும்   சரி   இப்படியே   அமைதியா  இருந்து   நீங்க  என்ன   பண்றீங்கன்னு   பார்க்கலாம்னு  இருந்தேன்  .திடீர்னு   இந்த   இடத்துல  காரை  நிறுத்திட்டு   நீங்க  பாட்டுக்கு   இந்த  பக்கம்   நடந்துட்டே  போனீங்க  ...அப்போதான்  நீங்க   இங்க  ஏதோ  ப்ளான்   பண்ணி   வந்திருக்கீங்கன்னு   கெஸ்   பண்ணேன் .  சோ  உங்களை  ஃபாலோவ்   பண்ணிட்டு   வந்தேன்.   போதுமா ?  உங்க  கேள்விக்கு   பதில்   கிடைச்சுதா ?  இப்போ  நீங்க  சொல்லுங்க   விஷ்ணு  இங்க   என்ன  நடக்குது ?  “ என்று   கேட்டாள்   வேதா . 

               “ வேதா .... நான்   இதுவரையும்   இந்த   விஷயத்தைப்பத்தி   யார்கிட்டயும்   எதுவும்   சொல்லலை ... ஏன்   என்னோட   க்ளோஸ்   ஃப்ரண்ட்ஸ்   கிட்ட   கூட   ஷேர்   பண்ணிக்கலை .  உன்கிட்டதான்   முதல்ல   சொல்றேன்  .  “ என்ற   பீடிகையுடன்   ஆரம்பித்தவன்   தான்   அடிக்கடி  கண்ட  கனவு , குகையில்   சந்தித்த   சந்நியாசி , தன்   முன்   ஜென்மத்தில்   நடந்தது   என    அத்தனை   விஷயங்களையும்     அவளிடம்   கூறிக்கொண்டே   வந்தான் . 

              அவையனைத்தையும்    கடைசிவரை    கேட்டவள்    முகத்தை    தீவிரமாக   வைத்துக்கொண்டு   எதையோ   சிந்திக்கலானாள் . 

              “ ஏய் .... என்ன  யோசிச்சிட்ருக்க   .... அதான்   நான்   எல்லாத்தையும்   சொல்லிட்டேனே  ! “ என்றவனை    மேலும்   பேச  விடாமல்  தடுத்தது   அவளின்   சிரிப்புச்   சத்தம் . 

               “ ஏய் ... நிறுத்து ... எதுக்கு   இப்படி  சிரிக்கிற   இப்போ ? “ விஷ்ணு   கோபமாக   கேட்டான் . 

                 “ பின்ன  என்ன  செய்வாங்க ?  இதெல்லாம்   நம்பற   மாதிரியா   இருக்கு   ? ஏதோ   அம்புலி   மாமா   கதையையும்   ஒரு   ஃபாண்டசி   கதையையும்   சேர்த்து   கேட்கிற   மாதிரி   இருக்கு .  நிறைய   கற்பனைக்  கதை   படிப்பீங்களா   விஷ்ணு  ? “ எனக்   கேட்டவளின்   வார்த்தையில்   வருத்தமடைந்தான்   விஷ்ணு . 

              “ நீ என்னை நம்பல இல்ல… நான் சொல்றது உண்மையில்லைன்னு நீ நினைக்கிற இல்ல … உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு எந்த ப்ரயோஜனமும் இல்ல வேதா …. என்னை, நான் சொல்றதை நீ நம்ப மாட்டியா?  “ எனக் கேட்டான் விஷ்ணு. 

         

           அவன்   இவ்வாறு   கேட்டவுடன்   சற்று   சிந்திக்கத்   துவங்கிய   வேதாவைப்  பார்த்தவன்  “ இன்னும்   நான்   சொல்றது   எல்லாம்   வெறும்   கற்பனைக்கதைனு   நினைக்கிறியா  ?  எனக்கேட்டவனிடம்   எதுவும்   பதில்   பேசாமல்   அமைதியாகவே   இருந்தாள்  அவள் . 

             “  இரு   இன்னும்   கொஞ்ச   நேரத்தில   உனக்கு    ஆதாரத்தோட   நிரூபிக்கிறேன்   என்றவன்   ஓங்கி வளர்ந்திருந்த புட்களையெல்லாம்  தள்ளிவிட்டு குன்றை நோக்கினான் .  குன்றின் மேற்பரப்பு யாரோ குடைந்தெடுத்தது போல் குகையைக் கொண்டிருந்தது.

           பகல் நேரத்திலேயே மையிருட்டாக இருந்த குகைக்குள் நுழைந்தான் விஷ்ணு. அவன் மட்டும் உள்ளே சென்றதை விரும்பாத வேதா "விஷ்ணு இருங்க நானும் வரேன்"  என்றபடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

 உள்ளே நுழைந்தவுடன்   கும்மிருட்டு   கண்ணைப்   பிடுங்கியது   போன்ற   பிரமையை   ஏற்படுத்தியது .  நல்ல  வேளையாக   விஷ்ணு   முன்னெச்சரிக்கையாக   கையோடு   கொண்டுவந்த  டார்ச்சின்   உதவியினால்   வந்த   ஒளிக்கீற்றினால்   அந்த   இடத்தில்   ஓரளவு   வெளிச்சம்   பரவியது . 

                         வித்தியாசமான   ஏதோ   ஒருவித   வாடை   மூக்கை   நிரடியபடி   இருந்தது  .   வேதாவிற்க்கு   அந்த   இடத்தின்    தன்மையே   ஒருவித   அச்சத்தை   மனதிற்க்குள்   விதைத்தது . 

                        விஷ்ணுவோ   அந்த   இடத்தை    தன்   கண்களின்    பார்வையினால்   துழாவிய   வண்ணம்      இருந்தான் . 

                           வெகுநேரம்   தேடியும்    கண்ணுக்கு   ஏதும்   புலப்படாமல்   போகவே   “ விஷ்ணு .... இன்னும்   எவ்வளவு   நேரம்   இங்கயே  நாம  இருக்கபோறோம் . என்னால  முடியலை .  இரிடேட்டிங்கா   இருக்கு . வாங்க  போகலாம்   “ என்றாள்  வேதா . 

                           அவள்   கூறுவது   எதையும்   காதில்   வாங்காமல்    அந்த  இடத்தை  நோட்டம்விட்டவன் நிலவறை போன்ற அமைப்பை தேடியபடி இருந்தவன்    ஒரு   இடத்தைப்   பார்த்தவுடன்   மலைத்துப்போய்   நின்றான் .

Continue Reading

You'll Also Like

133K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
39.7K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
334K 21.9K 50
#ashaangi . . this is purely fiction..... the characters in the story are real....but the story is entirely fictional. This is an ashaangi story. Ca...
113K 6.6K 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற...