அது மட்டும் ரகசியம்

By sankaridayalan

39.7K 2.2K 2.9K

கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு... More

1
2
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
Author update
Author update
20
21
22
😍

3

1.8K 129 242
By sankaridayalan

மூர்த்தி அந்த கதையை கூற ஆரம்பித்த வேளையில் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய் "தம்பி நான் அந்த கதையை உங்களுக்கு சாயந்தரம் வந்து சொல்றேன் .இப்போ அய்யா என்னை தென்னைமண்டிக்கு போய் அதோட வரவு செலவு கணக்கை எடுத்துட்டு வர சொன்னாரு.உங்க எல்லாருக்கும் டீ கொடுத்துட்டு அப்புறம் அங்க போகலாம்னு வந்தேன்.இப்பொ போகலைன்னா லேட் ஆகிடும் தம்பி.அதனால நான் இப்போ கிளம்பறேன் "என சொல்லி அங்கிருந்து வெளியேற எத்தனித்தார்.

        “ மூர்த்தி  … சொல்லிட்டு போங்களேன் … அவ்ளோ நேரமா ஆகிடப்போகுது இந்த விஷயத்தை சொல்ல”

        “ அப்படி இல்ல தம்பி  அந்த கதையை விட இப்ப தென்னைமண்டி வரவு செலவு கணக்குதான் முக்கியம்… இப்ப மட்டும் நான் அதை எடுத்துட்டு போகலைன்னா ஐயா என்னை வகுந்து எடுத்துருவாரு… கண்டிப்பா சாயந்தரம் வந்து நான் உங்களுக்கு நான் சொல்றேன் “ என்றவர் அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

"ஹ்ம்ம் அப்போ ஈவ்னிங் வரையும் வெய்ட் பண்ணனுமா!? சந்தோஷம் ....... என சலித்துக்கொண்டே தனக்குள் சொல்லிக்கொண்டான்.இவர் கொடுத்த பில்டப்ப பார்த்தாலே இன்ட்ரஸ்ட் தாறுமாறா ஏறுது......அன்ட் அந்த குன்றை பார்த்த உடனே ஏன் எனக்கு ஏதோ டிஃப்ரண்ட் ஃபீல் ஆகுது.அதைப்பற்றி பேசினால் நான் ரொம்ப ஆர்வமாகிட்றேன்.அப்படி என்னதான் இருக்கு அங்கே!!!!? என நினைக்க ஆரம்பித்தான்.

பிறகு பாலாவைப் பார்ப்பதற்க்காக பாலாவின் அறைக்கு சென்றான் விஷ்ணு. இப்போ எப்படிடா இருக்கு . உனக்கு வலி அதிகமாக இருக்கா?! என கேட்டான். டேய் மச்சி அப்படி ஒன்னும் பெரிய அடி இல்லைடா .....ஆஸ் எ டாக்டரா இதுக்கே இப்படி பயந்துட்டா எப்படி!? ஆனாலும் ரொம்ப பாசக்கார நண்பன்டா நீ!. " என சிரித்துக்கொண்டே கூறினான்.

"ஏன்டா சொல்லமாட்ட உனக்கு அடிபட்ட உடனே நாங்க எப்படி பயந்தோம்னு எங்களுக்குத்தான் தெரியும்.எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சுடா!." என கூறிக்கொண்டே அவனை முறைத்தான்.

"சும்மா சொன்னேன் டா உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா?" என பாலா கூறிக்கொண்டிருக்கும்போதே ஜீவாவும் ராமும் ஒருவர் முறையே மற்றவர் பாலாவின் அறைக்கு வந்தனர்.

வந்தவர்கள் பாலாவின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டு சற்று நேரம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேச்சின் ஊடே ஜீவா ராமிடம் டேய் ராம் உனக்கு அத்தைப் பொண்ணு இருக்குன்னு எங்ககிட்ட சொல்லவே இல்லை!?." இப்பதான் தெரியுது நீ ஏன் காலேஜ்ல யாரையும் சைட் அடிக்கலன்னு.இவ்வளவு அழகா அத்தைப் பொண்ணு இருக்கும்போது எப்படி மத்தவங்களை பார்க்க மனசு வரும்" என நிலைமையை சுமூகமாக்க ஜீவா ராமை வம்பிற்கு இழுத்தான்.

" அட க்ராதகா உனக்கு வேற வேலை இல்லையா ? வேதா எனக்கு தங்கச்சி மாதிரிடா.....அவளும் அப்படித்தான் நினைக்கிறா .சின்ன வயசில இருந்தே நாங்க அண்ணன் தங்கையாதான் பழகுறோம்.நீ லூசு போல எதையும் உளரிட்டு திரியாதே". என கூறி அவர்களின் உறவுமுறையை தெளிவுபடுத்தினான் ராம்.

**************

சமையலறையில் தன் அத்தை கௌரிக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று உள்ளே நுழைந்த வேதா அவரை வேலை செய்யவிடாமல் தன் கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தாள்.

வேதா "அத்தை ......ராமோட ஃப்ரண்ட்ஸ் எப்போ இங்க இருந்து கிளம்புவாங்க !!? ". என கேட்டாள்.அதற்க்கு கௌரியோ அந்த பிள்ளைங்களே நேத்துதான் இங்க வந்தாங்க அதுக்குள்ள அவங்க எப்போ கிளம்புவாங்கன்னு கேக்குறியே !? ஏன் அந்த பிள்ளைங்க அவங்க பாட்டுக்கு இருந்துட்டு போறாங்க .நீ ஏன் இவ்ளோ அவசரப்பட்ற "என்று குழப்பமாக கேட்டார் கௌரி.

"அது ஒன்னும் இல்ல அத்தை அந்த விஷ்ணு இருக்காரு இல்ல அவரைப்பார்த்தா சரியான முசுடு போல இருக்காரு.பார்த்தாலே பயமா இருக்கு அதான் கேட்டேன்" என்று தன் பக்க கூற்றை எடுத்து கூறினாள்.

   “ அந்த புள்ள நல்ல பையனாச்சே… அவன் எப்பவும் எல்லார்கிட்டயும் சிரிச்ச முகத்தோட அன்பா பேசுற பையன் அவனைப்போய் முசுடுன்னு சொல்றியே…. “ 

      “ எனக்கு என்னவோ அவரைப் பார்த்தா சிடுமூஞ்சு போலதான் இருக்கு… என்ன எப்படி திட்டிட்டாரு தெரியுமா… ரொம்ப அசிங்கமா போய்டுச்சு … வந்த கோபத்துக்கு நானும் நாலு வார்த்தை நல்லா கேட்டிருப்பேன்… பட் தப்பு என் மேல இருக்குன்னு அமைதியா இருந்துட்டேன்… ஆனா அத்தை… இன்னொரு முறை அந்த ஆளு என்ன ஏதாவது திட்டட்டும் அப்போ தெரியும் இந்த வேதா யாருன்னு…

" அடி என் தம்பி பெத்த தங்க கம்பியே நீ செஞ்ச வேலைக்கு திட்டினதோட விட்டானேன்னு நினை . அடி பலமா பட்டிருந்தா அந்த பையன் பாலாவோட நிலைமை என்ன ஆகிறது சொல்லு…  சரி சரி நீ அதையே நினைச்சுட்டு வருத்தப்பட்டிகிட்டு இருக்காதே… சகஜமா இரு சரியா… இனி அந்த புள்ளைய முசுடுன்னுலாம் சொல்லாத … அவன் நல்ல பையன்டா " என விஷ்ணுவைப்பற்றி பாராட்டு பத்திரம் வாசித்தார்.

இந்த அத்தை அவனுக்கு அவார்டு கொடுத்தாலும் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க இப்போ இங்க இருந்து கிளம்பறதுதான் நமக்கு நல்லது என நினைத்தவள் " சரி அத்தை எனக்கு டயர்டா இருக்கு நான் என் ரூமுக்கு போறேன் என சொன்னாள்.

"ஏய்..... நான் அப்போல இருந்து அததானே சொல்லிட்டு இருக்கேன் .நீதான் பரவால்லை அத்தை.... பரவால்லை அத்தைன்னு இங்கயே சுத்திட்ருக்க .... போடி போ போய் எல்லாரையும் சாப்பிடக்கூப்பிடு.சாப்பிட்டு பிறகு உன் ரூமுக்கு போ " என கூறினார்.

“சரி சரி கத்தாதிங்க.....இதோ போறேன்” என கூறியவள் முதலில் தன் மாமாவின் அறைக்கு அவரை கூப்பிட சென்றாள்.பின் ராமின் அறைக்கு சென்றவள் அவனை அங்கு காணாததினால் அவனின் நண்பர்களின் அறைக்கு சென்றாள். பாலாவின் அறையில் அவர்களைக் கண்டவள் "ராம் அத்தை உங்க எல்லாரையும் சாப்பிட வர சொன்னாங்க" என கூறினாள்.

அந்த அறையில் இருந்த விஷ்ணுவைப் பார்த்தவள் அய்யோடா இவனைப்பார்த்தாலே கைகால் நடுங்குதே.....ஆனாலும் நல்ல பவர்ஃபுல் கண் தான் இவனுக்கு ......என நினைத்துக்கொண்டே எவ்வளவு நேரம் நின்றாள் என்று அவளுக்கே தெரியவில்லை. விஷ்ணு அவள் முகத்தின் அருகே கையை இடம்வலமாக ஆட்டிய பின்தான் சயநினைவுக்கு வந்தாள்.

"ஹலோ மிஸ் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்க போறீங்க.நீங்க சாப்பாடு ரெடின்னு சொன்ன அடுத்த செகண்ட் எல்லாரும் மாரத்தான் ரேஸ்ல ஒட்ற மாதிரி ஓடிட்டானுங்க. வாங்க சாப்பிட போகலாம் இல்லைன்னா நமக்கு சாப்பாடு இல்லாம போகிடும்". என தன் ட்ரெட் மார்க் சிரிப்போடு கூறினான்.

" அச்சோ மானம் போச்சா .....!???" இப்படி இவன் கிட்ட அடிக்கடி அசிங்கப்பட்றோமே என தன் நிலைமையை எண்ணி நொந்துகொண்டாள். ஆனா இவனோட ஆட்டிட்யூட் இப்போ சுத்தமா வேற மாதிரி இருக்கே!!!???காலைல அப்படி ஒரு இன்சிடென்ட்டே நடக்காத மாதிரி இவ்வளவு நல்லா பேசறான்.ஹ்ம்ம்..... நல்லா குழப்பிவிட்றான் " என. நினைத்துக்கொண்டாள்.

அனைவரும் வழக்கம்போல் கேலி கிண்டல்களுக்கு குறைவில்லாமல் உணவருந்தினர்.உணவருந்திவிட்டு சிறிது நேரம் அனைவரும் சேர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். விஷ்ணுவிற்க்கு தூக்கம் வருவது போல் இருந்ததால் அவன் தன் அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று படுத்தான்.படுத்தவுடன் உறங்கியும் போனான்.

உறக்கத்தில் ஏதேதோ இனம் தெரியாத கனவுகள் விட்டு விட்டு தெளிவில்லாமல் வந்த வண்ணம் இருந்தது. முதலில் ஏதோ அரண்மனை தெரிந்தது, பின் ஒரு சிவன் கோவில் , அங்கு யாரோ ஒரு ஆடவன் தலையில் போர் வீரனுக்கு உரித்தான மகுடமும்,மார்பில் கவசமும் தரித்திருந்தான்.அவன் அந்த கோவிலில் உள்ள சிவனை வணங்கிக் கொண்டு இருந்தான். பின் சட்டென்று காட்சிகள் மாறியது.இப்போது அவன் ஒரு அரசவையில் நின்றுக்கொண்டு ஏதொ வாதிட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் அக்கனவு அந்த குன்றில் வந்து நின்றது. அந்த குன்றின் அருகில் அவன் யாருடனோ கத்திச்சண்டை போட்டுக்கொண்டிருந்தான்.அந்த சண்டையின் இறுதியில் கத்தி யாருடைய வயிற்றிலோ குத்தி இரத்தம் வெளியே தெரித்து தரையில் சிந்தியது. காட்சிகள் தெளிவில்லாத காரணத்தினால் யார் யாரை குத்தியது? என விளங்கவில்லை. 

சட்டென்று தூக்கத்திலிருந்து விழித்த விஷ்ணுவிற்க்கு வியர்த்துக் கொட்டியது. ச்ச என்ன கனவுடா இது. சோ ஹாரிபிள். மை காட் என்று தனக்குள்ளே கூறியவன் அருகில் இருந்த டீபாயில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்தான். அப்பொழுதும் அந்த படபடப்பு குறைந்தபாடில்லை.

இந்த கனவு ஏன் எனக்கு வந்தது ....!!? யார் அந்த வாரியர் காஸ்ட்யூம்ல இருந்தது? யாரோட இரத்தம் அது!?. மோஸ்ட் இம்பார்ட்டன்ட்லி அந்த குன்று பக்கம் ஏன் அந்த சண்டை நடந்தது.!????. காட் இப்படி புலம்ப வச்சிட்டியே என கடவுளிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான்.கடவுள் அனைத்தையும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறான் என்பதை அப்போது நம் நாயகன் மறந்து விட்டான்.

பகல் முழுவதும் நிலமகளின் அழகினை கண்களால் பருகிய ஆதித்யன் தன் பணியினை செவ்வனே செய்துவிட்ட திருப்தியில் மேற்கு வானில் மறைய ஆரம்பித்து மாலை வந்துவிட்டதை உணர்த்தினான்.

அக்கனவினைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த விஷ்ணு வாசலில் யாரோ வரும் அரவம் கேட்கவே திரும்பிப்பார்த்தான். அங்கு மூர்த்தி நின்று கொண்டிருந்தார். அவரைப்பார்த்த விஷ்ணு "வாங்க வாங்க உங்களுக்காதான் ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்ருக்கேன் ப்ளிஸ் இப்பவும் அவசர வேலைன்னு நடுவுல எஸ்கேப் ஆகிடாதீங்க" என கெஞ்சும் தொனியில் கேட்டான்

விஷ்ணு கூறியதைக்கேட்டு நகைத்தவர் " இல்லை தம்பி இப்போ எல்லா வேலையும் முடிஞ்சுடுச்சி. இப்போ எனக்கு எந்த வேலையும் இல்லை அதுமட்டும் இல்லாம எனக்கு அந்த குன்றைப்பத்தி ரொம்ப விலாவரியாக தெரியாது. எனக்கு ஓரளவுதான் தெரியும் அதுவும் என் தாத்தா சொல்லித்தான் தெரியும். " என கூறி நிறுத்தினார். 

"ஹம்ம் பரவாயில்லை தெரிஞ்ச வரையும் சொல்லுங்க" என விஷ்ணு கூறினான். சரியென்று தனக்கு தெரிந்த கதையை கூற ஆரம்பித்தார் மூர்த்தி.

அவர் அந்த கதையைக்கூறி முடித்ததும் சிறிது நேரம் அப்படியே உறைந்து நின்றான் விஷ்ணு. "இல்ல!!! இல்ல ....!!!! அது  போல   மாதிரி எதுவும் நடக்கல ....அங்க நடந்ததே வேற என்று திடீரென்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

"என்ன தம்பி சொன்னீங்க!???" என்று அவன் வார்த்தை காதில் விழாததால் மூர்த்தி கேட்டார். தன் சுய நினைவிற்க்கு வந்த விஷ்ணு இல்ல இல்ல நான் எதுவும் சொல்லல ....நீங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாலதான் எழுந்தேன் அதான் தூக்க கலக்கத்தில ஏதோ சொல்லிட்டேன் போல ". என மூர்த்தியிடம் கூறினான்.

Continue Reading

You'll Also Like

48.2K 3.4K 51
Arun a young man , falls in love with a wrong girl and somehow escapes from her trap ! Maya a pure sweet hearted girl , makes him feel better with h...
20.4K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
10.5K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
9.1K 305 160
Any one can send messages through this privately .... send your feedbacks... you can even scold ... Visit part - 1 then follow the link ...