இதய திருடா

Door kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... Meer

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

13

12.4K 342 21
Door kuttyma147

சக்திக்கு ரேஷ்மாவின் மேல் எந்த சந்தேகமும் இல்லை. அவளின் திடீர் மாற்றம் அவனுக்கு சந்தோஷத்தைத் தந்தது.

ஆதிராவின் மனதின்  ஒரு ஓரத்தில் சக்தி ரேஷ்மாவை விரும்பி இருப்பானோ என்ற நெருடல் இருந்தது.ஆனால் அவளின் தாய் தந்தையின் நினைவு அதை மிஞ்சிட அதை அவள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

தன் முதல் மாத சம்பளத்தில் ஆதிரா தனக்கென ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டாள்.

இவ்வாறாக நாட்கள் மெல்ல நகர நான்கு மாதங்கள் முடிய ஜானகி வீடு வந்து சேர்ந்தார்.

"என்னம்மா இப்டி திடீர்னு வந்து நிக்கிற. சொல்லிருந்தா நான் ஏர்போட்ல வந்து கூட்டிட்டு வந்துருப்பேன்ல"..என்றவனை முறைத்தவர்...

"ம்ம்ம் உன் மொபைல் எங்கடா எத்தன டைம் உனக்கு கால் பன்றது ஸ்விட்ச் ஆஃப்னு வருது.அதான் உன்னலாம் எதிர்ப்பார்த்தா வேலைக்கு ஆகாதுனு நானே வந்துட்டேன் "...என ஜானகி சளித்துக் கொள்ள.

"மொபைல் ஸ்விட்ச் ஆப்னு வருதா.இரு நான் போய் பாக்கறேன் "...என தன் அறைக்குள் நுழைந்தவன் தன் மொபைலை பார்க்கச் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.சார்ஜ்15% என காட்ட அதை சார்ஜ் போட்டிருந்தான்.ஆனால் ஸ்விட்ச் போடில் ஸ்விட்ச் ஆன் செய்ய மறக்கவே மீதி இருந்த சார்ஜும் இறங்கி ஸ்விட்ச் ஆப் ஆனது.அதை கவனித்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.

அறையிலிருந்து வெளியே வந்தவன் சோபாவில் சோர்வாக அமர்ந்திருந்த தன் தாயிடம் ...

"ம்மா சாரிமா சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு"... என  மன்னிப்பு கேட்டவன்...

" நீ ரொம்ப டயர்டா இருக்க நான் காபி போட்டுக்கொண்டுவரேன் "...என கிட்சனில் நுழைந்தான்.

காபியை  குடுத்துவிட்டு தன் அன்னையின் மடியில் படுத்துக் கொள்ள ஜானகி மெல்ல அவன் தலையை வருடியபடி...

" சக்தி எப்படி டா இருக்கான் "...என வினவ.

"அவனுக்கென்னமா மேரேஜ் ஆகிடுச்சு சந்தோஷமா இருக்கான் "...என கண்களை மூடியபடி உளறி வைக்க...

"என்ன மேரேஜ் ஆகிடுச்சா"... .

அப்போது தான் உளறி வைத்ததை உணர்ந்தான். படார் என தாயின் மடியில் இருந்து எழுந்தவன் திருட்டு முழி முழிக்க அதைக் கண்டவர். 

"கேக்றேன் இல்ல சொல்லு "... என மிரட்ட.

" அது அதுவந்து ... ஆமாம் மேரேஜ் ஆகிடுச்சு."...என்றான்.

"அவன் எங்கிட்ட கூட சொல்லல. என்னால நம்ப முடியலடா எப்படி"... என வினவ.

தன் தாயிடம் என்ன சொல்லி சமாளிப்பது என யோசித்தவன் சக்தி இந்த  திருமணம்    எவ்வாறு நடந்தது என ஜானகியிடம் தெரியப்படுத்தவேண்டாம் தெரிந்தால் என்னை வெறுத்துவிடுவார் என கூறியது நினைவிற்கு வர ...

"லவ் மேரேஜ் பன்னிக்கிட்டான்.அந்த பொண்ணு வீட்ல எதோ பிரச்சனைனு அவசரமா பன்னிக்கிட்டான்"...என்றதும் ...

"அதெல்லாம் இருக்கட்டும் எங்கிட்ட ஏன் சொல்லல."...

"சொன்னா நீ உடனே இங்க வந்து நிப்ப. நீ அக்கா கூட இருக்கனும்னு சொல்ல வேண்டானு சொல்லிட்டான்"... என சமாளிக்க. 
புரிந்துக்கொண்டவர்.

"எப்போ மேரேஜ் ஆச்சு "...என்றார்.

"நாளு மாசம் ஆயிருக்கும்மா"... என அசால்ட்டாகக் கூற...

"அடபாவிகளா"... என தன் வாயின் மீது கைவைத்தவர்

"இரு அவனுக்கு இருக்கு"... என பொய்க் கோவத்துடன் அங்கிருந்து கிளம்ப...

" இப்ப எங்கமா போற"... என குழப்பத்துடன் வருண் வினவ...

"அங்க போய் என்னோட மருமகள பாத்துட்டு அப்படியே அவனுக்கு ரெண்டு போடு போட்டுட்டு வரேன் . நான் அங்க வரேனு சக்திக்கிட்ட சொன்ன அப்றம் இங்கயும் விழும் "...என மிரட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தன் தாயின் பொய் கோபத்தை அறிந்தவன் எதுவும் சொல்லாமல் டீவியில் மூழ்கினான்.

இன்று ஆபிஸ் விடுமுறை என்பதால் சக்தி ஆபிஸிற்குச் செல்லவில்லை.ஆதிராவும் தலை வலி என்பதால்  விடுப்பு எடுத்திருந்தாள்.

அவளுக்குத் தலை வலி என்பதால் சக்தி காபி போடுவதற்காக கிட்சனுள் நுழைந்துக் கொண்டான்.

காலிங் பெல்லின் ஓசைக் கேட்கவே ஆதிரா கதைவை திறக்க அங்கு புன்னகையுடன் ஜானகி நின்றுக்கொண்டிருந்தார்.

"எப்படி இருக்க என் மருமகளே"... என ஆதிராவின் கண்ணத்தை கிள்ளியபடி ஜானகி வினவ ஆதிரா யாரென்று தெரியாமல் திரு திருவென முழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அரவம் கேட்டு வெளியே வந்தவன் ஜானகியை அங்கு பார்க்க முழு உற்சாகத்துடன்

"அம்மா எப்ப வந்திங்க. எப்படி இருக்கிங்க .அக்கா மாமா அப்றம் குட்டிலாம் எப்படி இருக்காங்க "....என்றான்.

அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள...

"அம்மா ப்ளீஸ் கோவிச்சிக்காதிங்க சொல்ல முடியாத சூழ்நிலை அதான் "...என இழுக்க.

"நான் ஒன்னும் உங்கிட்ட பேச வரல என்னோட மருமககிட்ட பேச வந்தேன் நீ வாடா "...என ஆதிராவின் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவர் சோபாவில் தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

அவர் அருகினில் அமர்ந்தவள் அவர் யார் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சக்தியை நிமிர்ந்துப் பார்க்க அவள் பார்வையினை புரிந்துக் கொண்டவன்

"வருண் அம்மா எனக்கும் அம்மா தான் "...என கூற அவர் முகத்தைப் பார்த்து சிறு புன்னகையை தந்தாள்.

"என்னப்பத்திக் கூட அவக்கிட்ட சொல்லல இல்ல"... என்றவரின்  முகம் வாட.

"இல்லைங்க ஆன்ட்டி அவர் சொல்லிருக்காரு .நான் உங்கள பார்த்தது இல்லைல அதான் தெரியல"... என சமாளித்தாள் அவர் முக வாடலை போக்குவதற்காகவும் சக்தியை காப்பதற்காகவும்.

"ஓ..,.,... நான் கூட என்ன மறந்துட்டானோனு நினைச்சேன் "...என சக்தியை பொய்யாக முறைத்தபடி.

"என் செல்ல அம்மாவ நான் எப்படி மறப்பேன் "...என ஜானகியின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

தன் உயிர் நண்பனின் அன்னையை தன் அன்னைப் போல் நடத்தும் சக்தியின் குணமும் தன் பிள்ளையின் நண்பனை தான் பெற்ற பிள்ளைப்போல் நடத்தும் ஜானகியையும் ஆதிராவிற்கு பிடித்திருந்தது.

"ஆன்ட்டி இருங்க உங்களுக்கு குடிக்க ஜுஸ் எடுத்துட்டு வரேன் "என்று  எழுந்தவளை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டவர் சக்தியின் புறம் திரும்பி ...

"நீ  போய் ஜுஸ் எடுத்துட்டு வா நான் என் மருமகக் கிட்ட பேசிட்டு இருக்கேன்."...

"அப்பாடி  கோபம் போயிடுச்சு  "... என நினைத்துக் கொண்டவன்
ஜுஸ் போட கிளம்பினான்.

"உன் பேர் என்னம்மா"...

"ஆதிரா ஆன்ட்டி "...என புன்னகைத்தபடி கூற

"ஆன்ட்டி வேண்டா அத்தைனு கூப்டுடா"...என்றார்.

அவர் அத்தை என்று சொல்லவும் சந்திராவின் நினைவு வந்தது. அவர் ஆதிராவை கொச்சை சொற்களால் திட்டிய நினைவு வந்தது. கண் கலங்க ஜானகியிடம் திரும்பியவள் நான் உங்கள அம்மா னு கூப்பி்டவா என்றாள் "...ஒரு வித ஏக்கத்தோடு.

"தாராளமா கூப்பிடலாம் "...என ஆதிராவின் நெற்றியில் இதழ் பதித்தார்.

அவரிடம் ஜுஸை  நீட்டியவன் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

"என்னோட மரு மகளுக்காக உன்ன மன்னிக்கிறேன்.அப்றம் நான் எதுக்கு வந்தேன் அதையே மறத்துட்டேன். கல்யாணம் ஆகி நீங்க அந்த வீட்டுப் பக்கமே வரலல அதான் அழைக்க வந்தேன்.ரெண்டு பேரும் இன்னும் ரெண்டு மணி நேரத்துல அங்க இருக்கனும்"... என்றார் கட்டளையாக.
அதற்கு
"சரிமா",...என்றான்.

"ஏன்மா உன்னோட முகம் டல்லா இருக்கு .....ம்ம்ம் விஷேஷம் எதுவும் உண்டாடா"... என ஆசையுடன் வினவ.

அவர் கேள்வியின் அர்த்தம் புரிந்துக் கொண்டவள் சட்டென நிமிர்ந்து சக்தியை பார்க்க அவன் அவரின் கேள்விக்கு அர்த்தம் புரியாமல் முகத்தை சுழித்தபடி வைத்திருந்தான்.அதைக் கண்டு நிம்மதி பெருமூச்சொன்றை விட்டவள் தயங்கியபடி ஜானகியிடம்

"இல்லைங்கமா அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்சம் தலைவலி அதான் "என்றாள் குனிந்தபடி...

"ஓ..,. இன்னும் வலிக்குதா நான் வேணும்னா தைலம் தேச்சிவிடவா "...என்றவரின் குரலில் அக்கறை இருந்தது.

"இப்பதான் டேப்ளட் போட்டேன் மா சரி ஆகிடும் "...என்றாள்.

"சரிப்பா நான் கிளம்புறேன் ரெண்டு பேரும் வந்துருங்க"... என விடைப்பெற்றுக் கொண்டார்.
அவரை வாசல் வரைச்சென்று வழி அனுப்பி வைத்தனர்.

ரூமினுள் நுழைய எத்தனித்தவளிடம் 

"உனக்கு அங்க வர விருப்பம் தானே"... என கேட்க...

"எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு ரொம்ப பாசமா நடந்துக்குறாங்க .அவங்க கூப்பிட்டு வரமாட்டேனு சொல்லுவேனா. நான் விருப்பட்டுதான் அங்க வரேன் "...என்றாள் .

அவள் பதிலில் சக்தியின் முகம் மலர்ந்தது.

"சரி  எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன் "...என ரூமிற்குள் நுழைந்தவளை மறுபடியும் அழைத்தவன் அவளிடம். .....,.

"அம்மா அப்படி என்ன கேட்டாங்கனு நீ ஷாக் ஆன"... என கேட்க.
அதிர்ந்தவள் இவனிடம் என்னவென்று சொல்லி புரியவைப்பது என கையை பிசைந்துக் கொண்டிருந்தாள். தயக்கத்துடன் சக்தியை நிமிர்ந்துப் பார்க்க அவனோ பதிலிற்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தயக்கத்துடன் ,,., "அவங்க என்ன பிரக்னன்ட்டா இருக்கியானு கேட்டாங்க "...என கூறியவள் விரு விருவென அறையில் நுழைந்துக் கொண்டாள்.

"ஓ,".,.... என இழுத்தவன் அர்த்தம் புரிய தலையில் அடித்துக்கொண்டான்.

"இப்பதான் கொஞ்சம் இயல்பா எங்கிட்ட பேசறா அத நானே கெடுத்துக்கிட்டேன் "...என தன்னைத் தானே நொந்துக் கொண்டான்....

Ga verder met lezen

Dit interesseert je vast

134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
56.7K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
84.2K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...