மாவீர‌ன் பார்த்திப‌ன்

By ArunaSuryaprakash

41.2K 3.6K 540

இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு... More

1.
2.
3.
Authors Note
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
Author's Note

24.

781 84 6
By ArunaSuryaprakash

ம‌றுநாள் காலை வெற்றிவீர‌ன் ஒரு வேலையாக‌ ப‌க்க‌த்து ஊருக்கு சென்றான்.த‌ன‌து வீர‌ர்க‌ளை சந்தித்து எப்போது வேண்டும் என்றாலும் போர் துவ‌ங்க‌லாம்.அத‌னால் த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்று எச்ச‌ரித்துவிட்டு சென்றான்.

அவ‌ன் சென்று ச‌ரியாக‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் வ‌ட‌நாட்டு ம‌ன்ன‌ன் ராஜ் தில‌க் ம‌கேந்திர‌ பூப‌தியின் கோட்டை மீது ர‌க‌சிய‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தினான்.
அவ‌ன் வீர‌ர்க‌ள் மிக‌ வேக‌மாக‌ வெற்றிவீர‌னின் வீர‌ர்க‌ளை வீழ்த்திவிட்டு முன்னேரினார்க‌ள்.
ம‌கேந்திர‌ பூப‌தி ச‌ற்று அதிர்ந்து போனார்.நேர்மையான‌ போரை எதிர்பார்த்து இருந்து 60 வ‌ய‌து அர‌ச‌ருக்கு ராஜ் தில‌க்கின் திடீர் தாக்குத‌ல் அதிர்ச்சியை த‌ந்த‌து.வீர‌ர்க‌ள் கோட்டைக்குள் புகுந்த‌ன‌ர்.கோட்டையில் பாதுகாப்புக்காக‌ இருந்த‌ வீர‌ர்க‌ளோடு வாள் ச‌ண்டை இட்ட‌ன‌ர்.

ஒரு வீர‌ன் மூல‌ம் த‌க‌வ‌ல் அறிந்த‌ வெற்றிவீர‌ன் கோட்டைக்கு விரைந்தான்.

ராஜ் தில‌க் ம‌கேந்திர‌ பூப‌தியின் அறைகுள் நுழைந்தான்.
"வ‌ண‌க்க‌ம் அர‌ச‌ரே"என்றான் வ‌ட‌மொழியில்.அதை த‌மிழில் மொழி பெய‌ர்ந்தான் அவ‌ன் காவ‌லாளி.
"நீ செய்யும் க‌ரிய‌ம் த‌ர்ம‌த்துக்கு எதிர‌ன‌து ராஜ் தில‌க்.எத‌ற்காக‌ இங்கே வ‌ந்தாய்?"என்றார் அர‌ச‌ர்.
அவ‌ன் காவ‌லாளி மொழி பெய‌ர்க்க‌ ராஜ் தில‌க் சிரித்தான்.

"த‌ர்ம‌ம் எல்லாம் ம‌னித‌ர்க‌ளுக்கு தான் அர‌சே.நான் தெய்வீக‌மான‌வ‌ன்"என்றான் ராஜ் தில‌க்.

"கோட்டையில் வேறு யார் இருக்கிறார்க‌ள் என்று பார்த்து இங்கே அழைத்து வா" என்றான் ராஜ் தில‌க் அவ‌ன் காவ‌லாளியிட‌ம்.
குடிலுக்கு கில‌ம்பிக் கொண்டு இருந்த‌ அஞ்ச‌னையை இழுத்து வ‌ந்தான் காவ‌லாளி.

அஞ்ச‌னையை பார்த்த‌ ராஜ் தில‌க் அவ‌ளை மேல் இருந்து கீழ் ஒரு முறை பார்த்தான்.

"ஆஹா என்ன‌ ஒரு அழ‌கி இவ‌ள்"என்று கூறி அஞ்ச‌னையின் க‌ன்ன‌த்தை தீண்டினான் ராஜ் தில‌க்.
அவ‌ள் அவ‌ன் ஸ்ப‌ரிச‌த்தில் புழுவாக‌ துடித்தாள்.

"வைர‌மும் வைடூரிய‌மும் ம‌ற்ற‌ விலை உய‌ர்ந்த‌ க‌ற்க‌ளும் எங்கே வைத்து இருக்கிறாய்.அதை என்னிட‌ம் கொடுத்து விடு"என்றான் ராஜ் தில‌க்.

"என்னால் த‌ர முடியாது.அது வ‌ழி வ‌ழியாக‌ என் ப‌ர‌ம்ப‌ரை காத்து வ‌ரும் சொத்து.அதை உன்னிட‌த்தில் த‌ர‌ முடியாது"என்றார்.

"ச‌ரி நீ த‌ர‌ வேண்டாம்.ஆனால் உன் ம‌க‌ளின் ம‌ர‌ண‌த்துக்கு நீ கார‌ண‌ம் ஆக‌ போகிறாய்"என்றான் ராஜ் தில‌க்.

"வேண்டாம்.த‌ய‌வு செய்து வேண்டாம்"என்று ம‌ன்றாடினார் அர‌ச‌ர்.

"நான் இற‌ந்தாலும் ப‌ர‌வாயில்லை த‌ந்தையே ந‌ம‌து ப‌ர‌ம்ப‌ரை சொத்தை அவ‌னிட‌ம் த‌ர‌ வேண்டாம்"என்றாள் அஞ்ச‌னை.

"வேண்டாம் அஞ்ச‌னை நீ வாழ‌ வேண்டிய‌வ‌ள்.உன்னை விட‌ அந்த‌ உயிர‌ற்ற‌ க‌ற்க‌ள் என‌க்கு பெரிய‌த் அல்ல‌"என்று கூறி அவ‌ர் அறையில் இருக்கும் பெரிய‌ ர‌த்தின‌ம் ப‌தித்த‌ பெட்டியை திற‌ந்தார்.
அதன் உள்ளே இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவ‌ன் கையில் கொடுத்தார்.

"அதை திற‌ந்து காட்டு"என்றான் ராஜ் தில‌க்.

த‌ன‌து க‌ழுத்தில் அணிந்து இருந்த‌ த‌ங்க‌ ச‌ங்கிலியில் ம‌றைத்து வைத்து இருந்த‌ சாவியை எடுத்து அதை திற‌ந்தார்.

பெட்டியின் உள் வைர‌ க‌ற்க‌ளும் ம‌ற்ற‌ விலை உய‌ர்ந்த‌ க‌ற்க‌ளும் ஜொலித்த‌ன‌.அத‌ன் ஒளி க‌ண்க‌ளை கூச‌ செய்த‌ன‌.
அதை க‌ண்ட‌ ராஜ் தில‌க் ம‌கிழ்ச்சியில் திகைத்தான்.

"இவ்வ‌ள‌வு தானா இல்லை இது போன்று வேறு வைத்து இருக்கிறாயா"என்றான்.

"இது ம‌ட்டும் தான்"என்றார் அர‌ச‌ர்.

"ந‌ல்ல‌து.வீர‌னே இவ‌ர்க‌ளை கொன்று விடு"என்றான் ராஜ் தில‌க்.

அவ‌ன் வீர‌ன் த‌ன் வாளை எடுத்து அர‌ச‌ரை கொல்ல‌ முற்ப‌ட்டான்.

அப்போது ஒரு க‌த்தி வேக‌மாக‌ வ‌ந்து அவ‌ன் க‌ழுத்தை குத்திய‌து.அவ‌ன் ச‌ரிந்து கீழே விழுந்தான்.
அதிர்ச்சியில் ராஜ் தில‌க்கும் அவ‌ன் வீர‌ர்க‌ளும் திரும்பி பார்த்த‌ன‌ர்.
வெற்றிவீர‌ன் அங்கே நின்று கொண்டு இருந்தான்.
ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் அவ‌னை நோக்கி பாய்ந்த‌ன‌ர்.வெற்றிவீர‌ன் த‌ன‌து வாளை சுழ‌ற்றி அனைவ‌ரையும் ச‌மாளித்தான்.ஒவ்வொருவ‌ராக‌ ச‌ண்டையிட்டு வீழ்த்தினான்.

அவ‌ன் திற‌மையை பார்த்து விய‌ந்த‌ ராஜ் தில‌க் எப்ப‌டியாவ‌து அங்கு இருந்து செல்ல‌ வேண்டும் என்று எண்ணி அவ‌ன் பின்னாலிருந்து அவ‌னை தாக்க‌ வ‌ந்தான்.

"அண்ணா உங்க‌ள் பின்னால் பாருங்க‌ள்" என்று கத்தினாள் அஞ்ச‌னை.
வெற்றிவீர‌ன் திரும்பிய‌ நொடி ம‌கேந்திர‌ பூப‌தி இவ‌ர்க‌ள் இடையில் வ‌ந்தார்.ராஜ் தில‌க்கின் வாள் அவ‌ர் நெஞ்சில் பாய்ந்த‌து.

வெற்றிவீர‌ன் ராஜ் தில‌க்கை எட்டி உடைத்தான்.அவ‌ன் கீழே விழுந்தான்.

ம‌கேந்திர‌ பூப‌தியின் நெஞ்சில் இருந்து இர‌த்த‌ம் வ‌ழிந்த‌து அவ‌ர் கீழே விழுந்தார்.அவ‌ரை தாங்கி பிடித்தான் வெற்றிவீர‌ன்.அவ‌ன் க‌ண்ணில் இருந்து க‌ண்ணீர் வ‌ழிந்த‌து.அஞ்ச‌னை ஓடி வ‌ந்து அவ‌ள் த‌ந்தையின் அருகில் அம‌ர்ந்தாள்.

"அர‌சே உங்க‌ளுக்கு எதுவும் ஆகாது.நான் ஆக‌ விட‌ மாட்டேன்.நான் ம‌ருத்துவ‌ரை அழைத்து வ‌ருகிறேன்"என்றான் வெற்றிவீர‌ன்.

"வீரா அத‌ற்கு நேர‌ம் இல்லை.என்னை ப‌ற்றி க‌வ‌லை ப‌டாதே."என்று கூறி அஞ்ச‌னையின் கையை அவ‌ன் கையில் ஒப்ப‌டைத்தார்.
"இவ‌ள் வாழ‌ வேண்டும்.இங்கே இருந்து இருவ‌ரும் சென்று விடுங்க‌ள்.இவ‌ளை கொன்று விடுவார்க‌ள்.இவ‌ளை எங்கேயாவ‌து அழைத்துச் செல்"என்றார்.

"அர‌சே உங்க‌ளை த‌னியாக‌ விட்டு என்னால் செல்ல‌ முடியாது"என்றான் வெற்றிவீர‌ன் அழுது கொண்டே.

"நீ என்னை காப்பாற்ற‌ முடியாது.அவ‌ளை இங்கே இருந்து அழைத்து எங்கேயாவ‌து சென்றுவிடு.இது என் ஆனை"என்றார்.

அஞ்ச‌னை அவ‌ர் அருகில் அழுது கொண்டு இருந்தாள்.
அவ‌ள் முக‌த்தை ஒரு முறை பார்த்தார்.வெற்றிவீரா என்னை ஒரு முறை த‌ந்தை என்று அழைப்பாயா"என்றார் ஏக்க‌மாக‌.

வெற்றிவீர‌ன் வாய்விட்டு அழுதான்.

"த‌ந்தையே என்னை விட்டு போய் விடாதீர்க‌ள்"என்று க‌த‌றினான்.

ம‌கேந்திர‌ பூப‌தி சிரித்துக் கொண்டே இற‌ந்து போனார்.

கீழே விழுந்து ம‌ய‌க்க‌மாக‌ இருந்த‌ ராஜ் தில‌க் ம‌ய‌க்க‌ம் தெளிந்தான்.

"வா அஞ்ச‌னை நாம் செல்ல‌ வேண்டும்"என்று கூறி க‌ற்க‌ள் அட‌ங்கிய‌ பெட்டியை எடுத்துக் கொண்டு அவ‌ளோடு வெளியேரினான் வெற்றிவீர‌ன்.

இருவ‌ரும் வெற்றிவீர‌னின் குதிரையில் ஏறி ப‌ய‌ண‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.வெற்றிவீர‌ன் காட்டுக்குள் விரைந்தான்.

ராஜ் தில‌க் த‌ன‌து வீர‌ர்க‌ளோடு அவ‌ர்க‌ளை பின் தொட‌ர்ந்தான்.

Continue Reading

You'll Also Like

108 5 3
A book which takes you 1400 years back to ancient Tamilnadu. It describes the greatness of Pallava kings and how they retained their dynasty from "Ka...
95 11 6
நூற்றாண்டுகள் கடந்து காதலை அடையும் காதலர்கள்
1.9K 147 9
My giving back to my lovely language. My first attempt.. so please bear wih my grammatical/ spelling mistakes. Have a great time with a modern novel...
41.2K 3.6K 46
இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க...
Wattpad App - Unlock exclusive features