டிடெக்டிவ் திருமதீஸ் (Complet...

d-inkless-pen által

36.4K 3.8K 3.3K

மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக... Több

கடற்கரை
கே.ஜி. அப்பார்ட்மெண்ட்
டாமியைத் தேடி
மித்ரன்
காயத்ரி
மொபைல்
அமைதி
ஆ...சாமி
துப்பாக்கி
மரணம்
ஜெர்ரி
தோட்டா
சுமோ
நூர்
விடியல்
ஆயத்தம்
தேக்கம்
ஸ்டோன் கோல்டு செல்வா
ஆள்மாற்றம்
விசாரணை
டாமி
பலி கெடா
அலைகள்
கொண்டாட்டம்
ஜனனம்
திருப்பம்
கொல்லும்

வேடம்

853 125 144
d-inkless-pen által

காயத்ரி தன் கனவில், பல தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் போல பந்தாடிக் கொண்டிருக்கையில், சட்டென சடன் பிரேக் போட்டு அவள் கனவை கலைத்தான் ட்ரைவர் வாசு, பதறி விழித்தவள் கண்களை கசக்கியவாறே,
"என்னாடாப்பா இடம் வந்துடுத்தா.."

வாசு இளைஞன் தான், இருபது வயது தான் இருக்கும். காவலராக பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. காக்கி சட்டையுடன் கூர்க்கா வந்தாலும் சல்யூட் அடித்து விடுவான் அவ்வளவு பயம். காயத்ரி வேறு காலை எட்டு மணியிலிருந்து சிபிஐ ஆக அவதாரமெடுத்திருக்கிறாள் பயப்படாமல் இருப்பானா.. பவ்யமாக
"வந்தாச்சு மேடம்" என்றான்.

காயத்ரி கை கால்களை நீட்டி வளைத்து கும்பகர்ணன் யோகாசனம் செய்வது போல சோம்பல் முறித்தவாறே இறங்க முற்பட, அதற்குள் கான்ஸ்டபிள் செந்திலும், ட்ரைவர் வாசுவும் இறங்கி விட்டிருந்தனர். கீழே இறங்கிய காயத்ரி அண்ணாந்து தன் கண் முன்பு இருந்த கட்டிடத்தை பார்த்தாள்,
"என்னது இது சிபிஐ ஆபிஸ் மொக்கையானா இருக்கு, ஆபிசரலாம் பார்த்தா நோயாளி மாதிரி இருக்காளே..? " என்றாள்.

"ஆமாம் மேடம் , கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல நோயாளிங்க தானே இருப்பாங்க.." என்றான் செந்தில் அந்த கட்டிடத்தை நோட்டமிட்டவாறே

"என்னது தர்மாஸ்பத்திரியா.." வாயை பிழந்தாள் காயத்ரி.

"உங்கட்ட சொல்லலய்யா.. மித்ரன் பாடிய இங்கதான் வச்சுருக்காங்க... நீங்க தான் அடையாளம் காட்டனும்.."
அந்த கட்டடத்தை மேலும் கீழும் பார்த்தாள் காயத்ரி. பரபரப்பாக இருந்தாலும் பழைய கட்டிடம் ஆங்காங்கே விழுந்த விரிசலும் படர்ந்த கறையும் சேர்ந்து அந்த கட்டிடமே காச நோயாளி போல தான் காட்சியளித்தது.

"உங்களுக்கு முழுசா சொல்லலனு நினைக்குறேன் , நேத்து நைட்டு இன்ஸ்பெக்டர் நாராயணன் வண்டில வந்து சில பேர் ஒரு பாடிய பள்ளிகரனை குப்பை கிடங்குள போட்டிருக்காங்க.. அந்த பாடி மித்ரன் தான்னு எங்களுக்கு தோணுது . அதான் அவன நீங்க தானே பாத்திருக்கீங்கனு உங்கள அடையாளம் காட்ட கூட்டிட்டு வந்தோம்.."

"என்ன டெட் பாடியா ..! அதுக்கு ஏன் நான் சிபிஐ ஆக நடிக்கனும்..?"

"சிபிஐ யா..? " குழம்பி போனான் செந்தில் " மேடம் கண்ணாடில உங்கள பாத்திருக்கீங்களா..உங்கள சிபிஐ னு சொன்னா எந்த மடையனாச்சும் நம்புவானா.. உங்கள தவிர " என சொல்லி முடிப்பதற்குள், டிவிஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்தது போல் பிண்ணணியில் சிரித்தான் ட்ரைவர் வாசு.

காயத்ரிக்கு அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோபம் மண்டையைத் தாண்டி கொண்டை வரை ஏறியது.
செந்தில் வேறு ஏதோ சொல்ல முயல, பாட்சா ரஜினி போல அவனை ஒரு முறை முறைத்தாள்.
"நான் இப்போ என்ன செய்யனும்.." என்றாள் காயத்ரி.

"மேடம் இப்போ சஸ்பென்சன்ல இருக்காங்க வேற எந்த கேஸ்லயும் தலையிட கூடாதுனு ஸட்ரிக்டா சொல்லிருக்காங்க.. அதனால.." இழுத்தான் செந்தில்

" சுத்தி வளைக்காம டேரக்டா மேட்டருக்கு வரேலா..!" இன்னும் பாட்சா மோடிலேயே இருந்தாள் காயத்ரி

"மித்ரன வச்சிருக்க மார்ச்சுவரில தான் இன்னொரு லாரி ட்ரைவரையும் வச்சிருக்காங்க.. அதான் நீங்க அவன் வொய்ப்பா நடிச்சீங்கன்னா.."

"என்னது .. யாரை பாத்து பேசரேள்... போலீஸனு பாக்கறேன்" கண்ணை உருட்டினாள் காயத்ரி.

"கோவப் படாதீங்க, அக்கா தங்கச்சினா ரொம்ப நோண்டுவாங்க .. அதான் வொய்ப்னு சொன்னா ஈஸியா விட்டுருவாங்க.. வேற வழியில்ல மேடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ரெண்டு மினிட்ஸ் தான் எல்லாம் முடிஞ்சிரும் .. ப்ளீஸ் .."

செந்தில் ஒரு புறம் கெஞ்சிக் கொண்டிருக்க, காயத்ரி மனதில் கார்கில் போரே நடந்துக் கொண்டிருந்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பதும் அவளுக்கு புரிந்ததால், மனமின்றி ஒத்துக் கொள்ள தயாரானாள்,

"நான் எங்கேயும் அவன் வொய்ப்னு சொல்ல மாட்டேன், நீங்க தான் பேசிக்கனும்"

"ஓகே ஓகே.. நான் வந்தா மாட்டிப்பேன், இங்க எனக்கு தெரிஞ்ச போலீஸா சுத்தறாங்க.. வாசு வருவான்.

டீச்சரின் கேள்விக்கு பதில் தெரியாமல் விளிக்கும் கடைசி பெஞ்ச் மாணவனைப் போல நெளிந்து கொண்டிருந்தான் வாசு, அவனை அரைத்துக் கொண்டு அங்கிருந்து நகன்ற காயத்ரி ஒரு கணம் தாமதித்து,
"இதெல்லாம் முடிஞ்சதும் நீங்க எனக்கு துப்பாக்கி சுட சொல்லித் தரனும், ... ரெண்டு பேர சுட வேண்டி இருக்கு.. ரெண்டு ரெண்டு முறை.." செந்திலிடம் கூறி விட்டு நகன்றாள்.

அவர்கள் இருவரும் மார்ச்சுவரியின் வாயிலை நெருங்கையில் இடை மறித்தான் அட்டென்டர்.
"யாரு நீங்க.. நீங்க பாட்டுக்கு போறீங்க.."

"சார் இவங்க செத்துப் போன லாரி ட்ரைவரோட வொய்ப் , பாடிய பார்க்க வந்திருக்காங்க.." என்றான் வாசு

அட்டைன்டர் காயத்ரியை ஏற இறங்க பார்த்து விட்டு , " நாகூர் பிரியாணி எப்பவும் நாய்க்கு தான் கிடைக்கும் போல .." என வாய் விட்டே கூறினான்.

"ஏம்மா .. நீ உண்மையாவே அவன் வொய்ப்பா.."

ஆமாம் என சொல்ல இயலாமல் தலையை மட்டும் அசைத்தால் காயத்ரி
"அப்போ நான் யாரு.." என்றது ஒரு கரகரத்த குரல், குரல் வந்த திசையில் அனைவரும் திரும்ப, அங்கே புடவை சுற்றிய பெண் கொரில்லாவாக ஒருத்தி இவர்களை நெருங்கினாள்,
"வாடி என் சக்காளத்தி.. உன்ன பாக்க போனவன் தான்டி ஒரேயடியா மேல போய்ட்டான் என் புருசன்.. இங்கேயும் வந்துட்டியாக்கும்.. "

"உன் புருசனா..!" வாசுவை திண்பது போல முறைத்தாள் காயத்ரி.

"அங்க என்னடி பார்வை .. என்ன பாருடி.. அப்படி என்னடி உங்கிட்ட இருக்கு.. செவ செவனு செவந்து போயி கிடக்க.."

மனதை கல்லாக்கி கொண்டு தன் கடவுளை எண்ணி வாய் விட்டே வேண்டினாள் காயத்ரி,
"பெருமாளே...!"

" அடி பாவி பெருமாளுனு என் புருசன பேர் சொல்லியே கூப்புடுறியா..!"

"நான் என் கடவுள சொன்னேன்டியம்மா.."

" ச்சே.. புரிசன கடவுள்னு சொல்றா பாரு இவ தான்டா பத்தினி.." என்ற அட்டென்டர் அஸிஸ்டென்டின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டாள் கொரில்லா பெண்மணி

"அவ பத்தினினா நான் என்ன பரதேசியா.." அவள் ஆவேசம் அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது.

இதற்கு மேல் பொறுக்க இயலாதவளாய் காயத்ரி,
"என் புருசன் பேரு ரங்கநாதனாக்கும்"

"என்ன ரங்கநாதனா..? உன் புருசன் எப்போ செத்தான் இன்னும் பாடி வரலியே.." அட்டன்டர் தன் ரிஜிஸ்டரை புரட்ட,

" பாவி .. உன் வாயை ஆஸிட் ஊத்து கழுவனும்.. என் ஆத்துக் காரருக்கு ஆயுள் கெட்டி" தன் தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டாள் காயத்ரி.
அட்டென்டர் குழம்பி போக, நிலை கை மீறி போவதை உணர்ந்தவனாய் வாசு ,
"சார் அவங்க புருசன் செத்த அதிர்ச்சியில புத்தி குழம்பிப் போய்ட்டாங்க.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.." என குசு குசுவென கெஞ்ச, அட்டென்டருக்கு சென்டிமென்ட் டச் ஆகி போனதால் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தார்.
பெண் கொரில்லா பேக்ரவுண்டில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் வாத்தியமின்றி கச்சேரி ஆரம்பிக்க, காயத்ரியும் வாசுவும் அட்டென்டரின் அஸிஸ்டென்டுடன் மார்ச்சுவரிக்குள் நுழைந்தனர்.

P.S: hi guys.. sorry for the delay.. i got stuck in my work ☹️. I try to update soon in future. Thanks a lot for ur warming support. Please share your thoughts in the comments.

Olvasás folytatása

You'll Also Like

2.9K 213 32
நட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்தி...
208 20 6
ஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சமையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறைய...
43.7K 941 9
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கி...
174 11 6
இது ஒரு கதை. இதுவும் ஒரு கதை தான். வேணும்னா படிச்சிப்பாருங்க. நிறைய பேர் சொல்லுவாங்க ஒரு தடவை படிக்கலாம்னு. 'சார், ஒரு தடவை படிக்கலாம் சார்'. ஒரு கதை...