தென்றலில் தேவதைகள்

By Balasubramaniyanv

2.3K 87 63

திமிர் பிடித்து திரிகின்றாயா ஆண்களை திமிரப் பிடித்து கண்களால் தின்கின்றாயா? தென்றலில் தேவதையாக நீ தெரு வாடை க... More

அவளும் குறும்பும்
ஆள்வது அவளது பணி
விசித்திர விநாடிகள்
ஆண்பாவம்
பழிக்குப் பழி
காதல் சொல்ல வந்தேன்
"கல்லூரி " காதல்
காதல் மடல்
வரவேற்பு மடல்
விழிப்புணர்வு
ஆணென்ன ?பெண்ணென்ன ??
நல்லரசு ஆகுக
கடவுள் ஏன் கல்லானான்?
காலப் பிழை
தோழனின் தோழி
தமிழாண்டு
Let'sLove
நரகம் நடுவே சுவர்க்கம் தேடு
காதல் முரண்
பயணம்
காதல் ஒரு வெங்காயம்
Without you what I am?
காதலோடு விளையாடு
மீளும் காதலே
விழி திற நிலவே
ராகிங்
கவிஞன்
ஓ என் பேசும் கல்லூரி நாட்குறிப்பே !
சிரித்தாலும் இன்பமில்லை
தோழனின் சாபம்
சவம்
காலாவதி கனவு

கவிதை சிற்பி

108 2 2
By Balasubramaniyanv

கவிதையே !

நீயும்

நிழலும் மட்டுந்தான்

இறுதி வரை .

உலகம் என்னை

தாங்க கூடாதென்று

நழுவ விட்டு

வேடிக்கை பார்ப்பதாய்

ஓர் தோற்றம்.

அவ்வபோது தோன்றும்...

நீ எந்தன்

எண்ணச் சிறகாய் விரிந்து

காற்று வெளிதனில்

தூக்கி நிறுத்தாவிடில்

என் உணர்வுகள் என்றோ

தூக்கு மேடையை

முத்தமிட்டிருக்கும்.


என் கண் கலங்கி

கை நடுங்கும் போதெல்லாம்

 ஊன்றுகோல் தேடி அலைவதில்லை.

எழுதுகோல் பிடித்துன்னை

அரவணைக்க துடிக்கின்றேன்.


எழுதுகோல் மையுடன்

என் கண்ணீர் புரியும்

இரசவாதம்

உன் கவிதை மொழி பேசும்..


 உவமை கூட கிட்டாது

வறுமையாய் சில நேரம்

உன்னை நான் வாட

விட்டதுண்டு.

அப்போதும்

உணர்ச்சி யொன்றே

உடமை என போதுமென்று

உணர்வு கொடுத்தது நீதான்.


தனிமையில் 

நான்... என்னுடன் நீ

எனக்குள்ளே எண்ணங்களாய் நீயும்

உனக்குள்ளே உணர்வுகளாய் நானும்

எனக்கு நீ காதலியோ?

 ஏன் ஊடல் நிகழ்த்துகிறாய்?

சில சமயம்

விடா மழையாய்

சில சமயம்

வெட்ட வெளியாய்.


கனவினில் உன்னை

கைப் பிடித்தாதாலும்

கனந்தனில் கலையாத

மாயம் அது.....

மனமொடிந்த

நிலைதனிலும்

காட்டாறாய் என்னை

கட்டவிழ்த்து

ஓட வைத்தாய்.


சிற்பம் வடிக்கும்

சிற்பியை உலகறியும் !

சிற்பியை செதுக்கும்

சிற்பங்களை யாரறிவார்?

அந்த சிற்பி நான் - ,

எனக்குள்

உணர்வை செதுக்கும்

சிற்பம் நீ '

Continue Reading

You'll Also Like

15 1 1
என் எண்ணங்களின் எழுத்து வடிவம்.... என் உணர்ச்சிகளின் உருவ வடிவம்.....💫
22.2K 2.2K 107
மனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....
34 5 2
காதலையும்❤, காதலனையும்🥰 ரசிக்கும் அவனின் காதலியாக.....😍 என்னுடைய காதல் கிறுக்கல்களை📜 எழுதலாம் னு இருக்கேன்😉 காதலிப்பவர்களும்.... காதலிக்க ஆசைப்ப...
32.9K 5.1K 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..