ரகஸ்யம்

By Balasubramaniyanv

540 21 20

கல்லூரியில் ஆர்க்கிடெக் படிக்கும் மாணவன் சந்துரு தஞ்சை பெரிய கோவிலின் ரகசியத்தை கண்டறிய முற்படுகிறான். அவ... More

1.தீயை சுடு

2. ரௌத்திரம் பழகினால்

232 10 18
By Balasubramaniyanv

ரகஸ்யம் - Secret golden desert


மாமல்லபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி கிளம்பியதும் அவனுக்கு துணையாக வந்தவன் யஷ்வந்த். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஏன் அவனுக்கே கூட அவன் பெயர் மறக்குமளவு Stoneman என்று தான் அவனை அழைப்பதுண்டு. காரணம் அவன் உடல் வலிமை பற்றியதல்ல கடவுள் அவனை படைத்த போது உணர்ச்சிகளை அவனுள் வைக்க மறந்துவிட்டார் போலும். எல்லா நிகழ்ச்சிக்கும் அவனிடம் இருந்து வெளிப்படும் ஒரே முகபாவம் மற்றவர்களுக்கு சலிப்பை தரும். அவனும் மற்றவர்களிடம் அவ்வளவாய் பழகுவதில்லை. சிறு வயது முதல்தோழன் என்பதால் யஷ்வந்த் பற்றி சந்துரு அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்.அதனால் தான் நம்பிக்கையோடு அவனை இந்த பயணத்திற்கு அழைத்தான். யஷ்வந்த் வீட்டில் சந்துருவிற்கு ஏகப்பட்ட மரியாதை. ஒரே ராஜ உபச்சாரமாக இருக்கும். ஆனால் அவன் வீட்டில் எல்லோரும் துப்பறியும் நிபுணர் போல விறைப்பாகத்தான் இருப்பர். அவன் வீட்டில் விளையாடும் போது இவன் ஏதேனும் உடைத்தால் கூட திட்டு யஷ்வந்த்திற்கு தான்.ஆனாலும் யஷ்வந்த் கோபப்படமாட்டான். அது அவன் நட்பிற்கு கொடுக்கும் மதிப்பு. ஒரே ஒரு ஆச்சர்யம் அந்த பயணத்தில் எனில் அது மகிழின் வரவு.

ஸ்கூல் டூருக்கே அவன் வர மாட்டேன் என பயப்படுவான். ரூர் வேண்டாம் விளையாட playground கூட அவன் வர மாட்டான். ஆனால் இந்த கல்லூரி வாழ்க்கை அவனுள் ஏகப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன்

philosopy யில் பட்டப் படிப்பு முடித்திருந்தான். கடைசியாக அவர்கள் சிவப்பு நிற ஜாகுவர் காரில் கிளம்பிய போது மூன்று பேராக சென்றால் காரியம் உருப்புடாது என யாரோ சத்தமிட்டனர்.

"அவ்வளவுதானே" என மகிழ் கேட்டு விட்டு ஒரு கழுகையும், ஆந்தையையும் எடுத்துக் கொண்டு வந்தான். மகிழின் மாற்றங்கள் உச்சத்தை தொட்டு விட்டதாய் மற்றவர் இருவரும் எண்ணிக் கொண்டனர். அதை விட பேராச்சர்யம் அந்த இரண்டு பரம எதிரி பட்சிகளும் ஒன்றை ஒன்று கண்டு கொள்ளாதது போல கிடந்தது தான்.

முதலில் அவர்கள் சென்றது தஞ்சை சரஸ்வதி மகாலுக்குத் தான். இன்னும் ஒரு மாதத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் சந்துருவிற்கு தோன்றியது.ஏன் ஒரு மாதம் என தாத்தா கூறியிருப்பார்? அந்த ஜப்பான் போட்டி முடிவதற்குத்தான் மூன்று மாதம் முழுதாக கிடக்கிறதே.

சரபோஜி மன்னனுக்கு நிச்சயம் கோவில் கட்ட வேண்டும். எத்தனை முயற்சித்திருந்தால் இத்தனை பெரிய புத்தகக் கோவிலை அவன் கட்டியிருக்க வேண்டும் .

தஞ்சை சரஸ்வதி மகாலில் நூலக விற்பனை பிரிவு பக்கம் போனான். ஏதோ சிறப்புத் தள்ளுபடி 50% disCount

என்றார்கள்.

மகிழ் கண்ணில் பட்ட வரலாற்று நாவல்களை எல்லாம் வாங்கிக் குவிக்க தயாரானான். கல்கியின் பொன்னியின் செல்வனை படித்த பிறகு இந்த போதை அவனுக்குள்ளும் வந்து விட்டது.

ஆனால் அவனுடைய துர்திஷ்டம் அங்கு சில ஆய்வுக் கட்டுரை நூல்களை தவிர வேறெதும் இல்லை.

அங்கிருந்து அவன் நகர முற்படும்போது தான் பக்கத்தில் இருந்த பழம்பொருள் மற்றும் புத்தக காப்பக அறை என்று எழுதி சீல் வைக்கப்பட்ட அறையை பார்த்தான். அதற்கு கீழே அந்நியர்கள் உள்ளே நுழையக் கூடாது என சிகப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.

அவன் கால்கள் அந்த அறையை நோக்கி நகர முற்பட்டன. அந்த சீல் வைத்த பூட்டை உடைத்து விட்டு உள்ளே நுழையும் படி அவனுக்கு யாரோ கட்டளை இடுவது போல தோன்றியது.

அப்போது அங்கு சந்துருவும் யஷ்வந்தும் வந்து சேர்ந்தனர். மகிழ் மெதுவாக அந்த சீல் பூட்டை உடைக்க முற்பட்டு கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் மகிழை எவ்வளவு தடுத்து நிறுத்த முற்பட்டும் அவன் வெறி கொண்ட மிருகம் போல அந்த கதவை உலுக்கினான். அவர்கள் அவனை கடினப்பட்டு இழுத்து புறம் தள்ளினர். அதற்குள் சத்தம் கேட்டு இரண்டு பேர் வந்தனர். ஒருத்தன் அவர்களிடம் இங்கெல்லாம் வரக்கூடாது என்றான். இன்னொருவன் நீங்கல்லாம் ஆபிஸ் ரூமுக்கு வாங்க என்றான். மகிழின் தோள் மீது ஒருத்தன் கை வைத்து இழுத்துப் பார்த்தான். அவன் சிறிது கூட அசையவில்லை. திரும்பி பார்த்து ஒரு காவலாளி மீது கழுத்தில் ஓங்கி அடித்தான் . அவன் கத்தக் கூட இயலாமல் மயங்கி சாய்ந்தான்.

இன்னொருவனை பார்த்து கதவை திறக்கும் படி சைகை காண்பித்தான் மகிழ் . அவன் மறுப்பு தெரிவிக்காமல் கட்டளையை சிரமேற்கொண்டுமுடித்தான்.அருகே

வைக்கப்பட்டிருந்த இரும்பு லத்தியால் பூட்டை உடைத்தான்.

அப்படியே பூட்டை உடைத்தும் அவன் விழுந்து விட்டான். மகிழ் கதவை திறந்து உள்ளே போனான். பழங்கால செப்பு திருமேனிகள் , ஐம்பொன் சிலைகள் பல வைக்கப்பட்டு இருந்தன. அவற்றுள் பல சிலைகளின் கண்கள் துணியால்

சுற்றப்பட்டு இருந்தன. அதில் ஒரு காளியின் சிலை ஒன்றும் இருந்தது. ஆனால் வழக்கம் போல சிம்ம வாஹினியாக அச்சிலை அமையவில்லை. தாமரை மலர் மீது நர்த்தனம் ஆடுவது போல ஒன்னே கால் அடியில் இருந்தது.

அதை பார்த்ததும் மகிழ் கண்ணில் நீர் கசிந்தது. அச்சிலையின் கண்களும் கட்டப்பட்டு கிடந்தது. மெல்ல அதை நீக்கினான். ஒரு மாபெரும் வெளிச்சம் . அந்த அறை முழுதும் வெளிச்சத்தில் மூழ்கியது.மகிழின் கண் முழுவதும் சிவந்து போனது. அவன் கருவிழி இரண்டும் மறைந்து தீக்கோளமாக உருவெடுத்தது . அவன் உக்கிர மூர்த்தியாக உருவெடுத்தான். அவன் சிந்தனை முழுதும் அழிவு மட்டுமே நிறைந்தது.

அவன் உதடு ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தது. ஒரு அகோர சிரிப்புடன் சந்துருவை நோக்கினான். அவன் கண்களுக்குள் ஏதோ சிகப்பு விளக்கு எரிவதை போல சந்துருவுக்கு தோன்றியது.போதாக்குறைக்கு சதங்கையோ, கொலுசோ அதன் ஒலியும் கேட்டது. அப்படியே அவன் காற்றில் எழும்பி சந்துரு நோக்கி நகர்ந்தான். தடுக்க வந்த யஷ்வந்த் அவனின் ஒரே அடியில் பறந்தான் . பின் ஒரு மூலையில் சுவற்றில் தடுக்கப்பட்டு விழுந்தான்.

வாழ்க்கையில் இதுவரை அவன் பார்க்காத அமானுஷ்ய நிகழ்வு அவன் கண் முன்பு நடந்து கொண்டிருந்தது. மீண்டும் சதங்கை ஒலி பலமாகக் கேட்டது. அப்போது அந்த காளிதேவியே நித்ய சாந்த சொரூபினியாக வாசல் வழியாக ஓடி வந்தாள். ஆகா , என்ன ஒரு திருக்காட்சி எவ்வளவு தெய்வீக திருமுகம் , அடர்த்தியான சிகை நேர்த்தியாக பின்னப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெத்தி சுட்டியின் வைர கற்களுக்கு போட்டியாக கண்களும் ஒளிர்ந்தது. என்ன விந்தை உள்ளேவந்து கதவை தாழ்ப்பாள் போட்டார். பின்னர் மீண்டும் ஒரு ஓட்டம் அவரின் விலை உயர்ந்த புடவையை ஒரு ஓரமாக கிளித்தார். பின் அந்தகாளி சிலையின் கண்களை துணியால் மூடினார். எதற்காக இந்த செயல்.காளிதேவியே தன் உருவ சிலையின் கண்களை மூடுவது ஏன்? அந்த அறையில் நிலவிய ஒளி வெள்ளம் சட்டென நின்றது. மகிழும் மயங்கி விழுந்தான்.

இப்போது அந்த காளிதேவி அவனை திரும்பி பார்த்தார். சுவற்றோடு சுவறாக ஒட்டிக் கொண்டிருந்த சந்துரு இரண்டடி முன்னால் வந்து காளிதேவியின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். கால்களை இரண்டடி பின்னால் தள்ளி கொண்ட காளிதேவி கோபத்தோடு சந்துருவை பார்த்து முறைத்தார். அவன் உடல் மயிரெல்லாம் பயத்தோடு கூடிய பூரிப்பில் குத்திட்டு நின்றது.

அச்சோ சாபம் வழங்குவார் போலுள்ளதே! அவன் இதயம் ஸ்தம்பித்தது. ஏதோ காளி உதடுகளை அசைத்து கூற முற்பட்டார்.

சந்துருவின் ஐம்புலன்களும் தீவிரமாக வேலை செய்தது.

" டேய் அறிவில்லாத முண்டம் அந்த ரெண்டு லூசுங்களையும் எழுப்பு. செக்யூரிட்டி வர்றதுக்குள்ள இந்த சிலையோட தப்பிச்சாகனும் "

தன் காதுகள் வேலை செய்யவில்லையோ என்னவோ மீண்டும் ஒருமுறை பார்த்தான்.

" ஏண்டா உனக்கு இன்னொரு முறை சொல்லுனுமா? Are U deff?"

சாட்சாத் காளிதேவி தான் இங்கிலீஸில் பேசியது. அப்போதுதான் கவனித்தான். காளிதேவி கையில் சூலாயுதத்திற்கு பதில் ஐபோனும் காலில் ஹை ஹீல்ஸ்சும் .......

"டேய் என்னடா பேய பாத்த மாதிரி முழிக்கிற நானும் மனுஷிதான் சீக்கிரம் அந்த ரெண்டு பேரையும் எழுப்பு." .










Continue Reading

You'll Also Like

21 2 2
The narrative revolves around an adolescent leading an ordinary life when, unexpectedly, he finds himself transported to an entirely new realm known...
15 0 2
A girl who loves unconditionally(Neena yenakku rompa istam), a boy who hates love..😠(i hate you di ) kojcham adventure 😁 Introduction H...
9 0 1
உணவும் மருந்தும் ஒன்றே.
92 7 2
அஸ்ஸலாமு அலைக்கும் Hello நன்பர்களே இது என்னோட முதல் கதை ஏன் கதையில்் ஏதாவது words தப்பக இருந்த என்னை மன்னித்து விடுங்கள் இது இரண்டு இரட்டை சகோதரர்க...