ЁЯТЮроирпА родрпАропро╛ропрпН роЗро░рпБ, роОройрпИ родро┐ро░ро┐ропро╛ропрпН...

By kamadevan69

14.2K 472 145

ЁЯднBet роЯро┐ро▓рпН роЖро░роорпНрокро┐родрпНродрпБ Bed роЗро▓рпН роорпБроЯро┐роирпНродродрпБ ЁЯдЧ More

родрпАЁЯТЮро░родрпНродройрпН
родро┐ропро╛ЁЯТЮро┤ро┐ройро┐
родрпАро░ройрпН ЁЯТЮродро┐ропро╛
роЪро╡ро╛ро▓рпН
роХрпЛро▓рпН рооро╛ро▓рпН
рокродрпНродрпЗ роиро┐рооро┐роЯроорпН ЁЯШБ
роХрпЗроЯрпНроЯрпБроЯрпНроЯро╛ройро╛..?
роХро┤рпБродрпИ роХро╛родро╛
роЕро┤роХрпБро▓ рооропроЩрпНроХро┐роЯрпНроЯрпЛроорпН
роОройрпНрой ЁЯднрооро╛родрпНродро┐ро░
роОройрпНрой роЪрпЖропрпНроп рокрпЛро▒ро╛ройрпЛ?
роХродроорпН роХродроорпН
ро╡ро┐ро┤рпБроирпНродрпБ роОро┤рпБроирпНродрпБ роТро░рпБ роХро╛родро▓рпН
роХрооро▓рпН ЁЯШН рооро┐ройро┐
ропро╛ро░рпБ родро╛ройрпН роЗроирпНрод роХрооро▓рпЗро╖рпН..?
роорпАрогрпНроЯрпБроорпН рооропроХрпНроХроорпЛ?
ро░рпАро▓рпНро╕рпН роороЯрпНроЯрпБроорпН рокро╛рокрпНрокрпЛроорпН ЁЯдЧ
роЕро╡ройрпН рооро╡ройро╛ роирпА???
роОройрпНрой роЪрпКро▓рпНро▓ рокрпЛро▒ро╛ройрпН??
роЕрокрпНрокроЯро┐ роОройрпНрой рооро╛ роЪрпКройрпНрой???
роТро░рпБ ро╡ро┤ро┐ропро╛ роХроЯрпНроЯро┐роЯрпНроЯро╛ройрпН рокро╛ родро╛ро▓ро┐ропрпИ ЁЯдЧ
роорпБро▒рпНро▒рпБроорпН ЁЯЩПЁЯП╝

роЗроирпНрод рокрпБро│рпНро│ рокрпВроЪрпНроЪро┐ родрпКро▓рпНро▓ родро╛роЩрпНроХро▓

453 19 3
By kamadevan69

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 19

வாசு தேவன் - என்னடி உளர்ற....
இவன் என் மகனா...!?
என்றவன் கோவமாக பற்களை கடிக்க..... வித்தியா அம்மா என்னை தன் இதயத்தோடு இணைத்து கொண்டார்கள் ...

வித்தியா - ஆமா... உன் மகன் தான்....வேலைக்கு போன இடத்துல.... உன்கூட வேலை பார்த்த சின்ன பெண்ணை ஏமாற்றி.... அந்த ஊர் காரங்க உனக்கு 18 வயசு பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சி.... அவகூட நீ ஒழுங்கா வாழணும்னு கண்டிச்சதுக்கு பிறகு.... நீ அந்த பெண்ணை இந்த ஊருக்கு அழைச்சிட்டு வந்து... அவளை கொடுமை படுத்தி.... அவ நிறை மாசம் கர்ப்பிணியா இருக்கும் போது... என்னை கல்யாணம் பண்ணிக்க அவகிட்ட விவாகரத்து கேட்டு... அவ அதுக்கு சம்மதிக்கலன்னு சொன்னதும்.... அவளை எட்டி உதைத்து.... அவளை சாகுற நிலைமையில டிரைவர் மகாலிங்கம் அண்ணன்கிட்ட சொல்லி ஹாஸ்பிடல்ல சேர்த்து..... அவ கதையை அங்கேயே முடிக்க சொன்னியே.... அந்த புண்ணியவதி பெற்ற உன்னோட முதல் ஆண் பிள்ளை தான் இந்த கமலேஷ்...... என்று வித்தியா அம்மா.....என்னோட அப்பா அம்மா யாரென்று சொல்லும் போது... எனக்கு என் அப்பனை என் கையாலயே கொலை பண்ண வேண்டும் என்ற வெறி தான் வந்தது....

வாசு தேவன் - என்ன என் மகனா....
அப்போ இவனோட அம்மாவும் உசுரோடு தான் இருக்காளா...? ஏய் மகா லிங்கம்... எங்க டா இருக்க.... கூடவே இருந்துகிட்டு என் குடியை கெடுத்துட்ட இல்ல

வித்தியா - போதும் நிறுத்து..... மகா லிங்கம் அண்ணனை ஏன் திட்டுற.... நீ ஏவுன வேலையை எல்லாம் தட்டாமல் பண்ண மகாலிங்கம் அண்ணனுக்கு ஒரு உயிரை பலி கொடுக்க மனசு இல்லாம தான் உன்னோட முதல் மனைவியை மருத்துவ மனையில சேர்த்து அவளை காப்பாற்ற முயற்சி பண்ணிருக்காரு.... ஆனா பாவம் அந்த பொண்ணு... இவனை பெத்து போட்டுட்டு அவ போய் சேர்ந்துட்டாள்... எங்க இந்த பையன் உயிரோடு இருக்குறது உனக்கு தெரிய வந்தால் நீ இவனையும் கொலை பண்ணிட போறேன்னு தான் இவனை அவரே வளர்த்துக்கிட்டு இருக்காரு.... அன்னைக்கு கோவிலுக்கு போகும் போது....எதார்த்தமா இந்த பையனை நான் அவர்கூட பார்த்து என்ன ஏதுன்னு விசாரித்த போது தான் நீ பண்ண எல்லா அநியாயத்தையும் சொன்னாரு... ச்சீ என்ன மனுஷன் நீ..... என் சொந்த அண்ணனுக்கு நண்பனா என் வீட்டுக்குள்ள நுழைந்து... உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து... என்னை காதலிக்கிறதா சொல்லி நாடகமாடி.... என்னை வலுகட்டாயமா கோவிலுக்கு வர சொல்லி ..... வர வழியில ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போய்... எனக்கு மயக்கம் மருந்து கலந்த கூல் ட்ரிங்க்ஸை கொடுத்து... நான் சுய நினைவுல இல்லாத போது என்னை நாசமாக்கி... உன் பிள்ளையை நான் கருவுல சுமந்துகிட்டு இருக்கேன்னு தெரிந்து... என் அண்ணன் சேர்த்து வைத்த லட்ச கணக்கான பணம் நகைன்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்தா தான் என்னை கல்யாணம் பண்ணிப்பேன்... அப்போ தான் என் மகன் தீரா..வுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னு என் மூளையை சலவை செய்து.... உன் கையில கிடைத்த பொம்மை போல என்னை ஆட்டி வைத்து வேடிக்கை பார்த்தியே... நீயெல்லாம் என்னையா ஜென்மம் ச்சீ....

வாசுதேவன் - ஏய் போதும் நிறுத்துடி...
என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுற... ஆமா.... நீ சொன்னதை எல்லாம் நான் பண்ணேன் தான்.... நீ சொல்லாததை கூட நான் பண்ணி இருக்கேன்.... ஆனா அதெல்லாம் உனக்கு தெரிய வாய்ப்பு இல்ல...... இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற..

வித்தியா - நீ எதுவும் பண்ண வேண்டாம்.... உன்னோட பாவ பட்ட கண்ணுல என் மகன் தீரத்தன் பட கூடாதுன்னு தான் நான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்குறேன்.....இதோ இந்த கமல்..... இவன் உன்னோட முதல் மனைவிக்கு பிறந்து இருந்தாலும், இவனையும் என் மகனா தான் இத்தனை வருஷமா உனக்கு தெரியாம வளர்த்து வந்து இருக்கேன்....

இனி அதுக்கெல்லாம் அவசியம் இல்ல.... உன்னோட நிழல்ல வாழ இனி நான் தயாரா இல்ல....இனி நீ இந்த வீட்டுக்கு வராத... நீ கண்டவளை அழைச்சிட்டு வந்து குடும்பம் நடத்த இது லாட்ஜ் இல்ல... போ முதல்ல.. வெளிய போ...

வாசுதேவன் - நான் ஏன் டி போகனும்... இது என் வீடு...வேணும்னா நீ போ.. அப்படியே போகும் போது இந்த அனாதை பயலையும் தூக்கிட்டு போ.... எனக்கு என் தீரத்தன் போதும்.... அவன் தான் என்னோட அரசியல் வாரிசு... என்னோட முதல் மனைவி கதை எல்லாம் என்னோட அரசியல் வாழ்க்கையில தெரிய வந்துச்சுன்னா... இது நாள் வர நான் சேர்த்து வைத்த எல்லா நல்ல பெயரும் நக்கி கிட்டு போயிடும்... அதனால... இந்த பீடை செத்தவன் செத்தவனாகவே இருக்கட்டும்.... நீ இவன அழைச்சிட்டு.. எனக்கு துரோகம் பண்ண அந்த மகாலிங்கம் கூட பேசாம எங்காவது ஓடி போய்டு....

வித்தியா - நான் ஏன் ஓடி போகணும்... என் அண்ணன் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் நான் உன்கிட்ட தான் கொண்டு வந்து கொடுத்தேன்.. அந்த பணத்துல வாங்குன வீடு தான் இது.... அதாவது இது என் வீடு.... நீ போ.... இனி உன் கால் இந்த வீட்டுல பட்டுச்சுனா.... உன் அரசியல் வாழ்கை நாரி போற மாதிரி பண்ணிடுவேன்...

வாசு தேவன் - என்னடி விட்டா ஓவரா பேசுற.... என்னை நீ நாசமாக்கிடுவியா... ஏய்.... உன்னை நான் இனி உயிரோடு விட்டா தானே டி நீ என்னை நாசமாக்குவ.. இப்பவே உன்னையும் இதோ இந்த
கமலா ரஜினியா....எவனோ ஒருத்தன்... இந்த பொடியனையும் போட்டு தள்ளுறேன் பாரு.......

என்றவன் வித்தியா அம்மாவின் கழுத்தை பிடித்து என் எதிரிலேயே நெருக்கினான்..... அந்த நிமிஷம் எங்க இருந்து அவ்வளவு கோவம் வந்துச்சுன்னு எனக்கு தெரியாது.... நான் பக்கத்துல இருந்த மது பாட்டிலை உடைத்து அந்த ஆள் தொடையில குத்திட்டேன்....

வலியால் அந்த ஆள் கத்த..... வாசலில் இருந்து வேகமாக மகாலிங்கம் அப்பா ஓடி வந்தார்....

ஐயோ கமலேஷ்... நீ ஏன் பா இங்க வந்த...ஐயையோ ஐயா.... ஐயா உங்களுக்கு என்னாச்சு... என்று மகா லிங்கம் அப்பா..... வாசுதேவனை பார்த்து பதறினார்...

டேய் என்ன நடிக்கிறியா...... நான் உன்கிட்ட ஹாஸ்பிடல்ல சொல்லி என் முதல் பொண்டாட்டி கதையை அங்கேயே முடிச்சிடுடான்னு சொன்னேன்.... ஆனா நீ என்னடானா.... அவ பெத்து போட்ட இந்த புள்ளையை எனக்கு எமனா வளர்த்து வச்சி இருக்க இல்ல...... உன்னை என்ன பண்ணுறேன் பாரு.... என்ற வாசுதேவன்....என்னை இதுநாள் வரை அன்பாக வளர்த்த மகாலிங்கம் அப்பாவை அடிக்க கை ஓங்கியதை பார்த்து... நான் மீண்டும் அந்த ஆளு தொடையில் கண்ணாடி பாட்டிலை கொண்டு குத்த..... அந்த ஆளு வலி தாங்காமல் அங்கேயே சுருண்டு விழுந்தான்......

ஐயோ கமலேஷ்.... என்ன பா நீ இப்படி பண்ணிட்ட...ஐயா... ஐயா இருங்க உங்கள ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறேன்னு.. சொல்லி மகாலிங்கம் அப்பா தான் என்னை பெற்ற அந்த எம காதகன் வாசுதேவனை மருத்துவ மனைக்கு அழைச்சிட்டு போனாரு....

அந்த ஆளு போனதுக்கு பிறகு என்னை கட்டி அணைத்து அவர்களின் கண்ணீர் வத்தும் வரை என் வித்தியா அம்மா அழுத காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது...

வித்தியா - கமல்..... என்னை மன்னிச்சுடு செல்லம்... தீரனோட அப்பா தான் உனக்கும் அப்பான்னு நான் உன்கிட்ட சொல்லாம மறச்சிட்டேன்.... என்னை மன்னிச்சுடு பா.....

கமலேஷ் - இல்ல..... அந்த ஆளு என் அப்பா இல்ல..... நான் அந்த ஆளோட மகன் இல்ல......அந்த ஆளை பார்த்தாலே எனக்கு பிடிக்கல..... அடுத்த முறை அந்த ஆளை பார்த்தால் கண்டிப்பா நான் என் கையால அந்த ஆளை கொலை பண்ணிடுவேன்.... ஆமா..... என்னோட அம்மாவை கொலை பண்ண அந்த ஆளை நான் கண்டிப்பா என் கையால கொலை பண்ணியே தீருவேன்...

வித்தியா - ஐயோ கமல்... அப்படி எல்லாம் சொல்லாத செல்லம்.... அந்த ஆளை கொலை பண்ணிட்டு நீ உன் வாழ்கையை ஜெயில்ல கழிக்கவா பிறந்த.... இல்ல பா... வேணா... அந்த ஆளு பண்ண பாவத்துக்கு எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் அவன் அனுபவிப்பான்... ஆனா நீ வாழ வேண்டிய பிள்ள...... எனக்கும்.. நீ வேற தீரன் வேற எல்லாம் இல்ல..... எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு தான்.... நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி பெரிய வேலைக்கு எல்லாம் போகணும்.....என்னை என் அண்ணன் நல்லா படிக்க வச்சாரு.... ஆனா நான் தான் இந்த பாவியை நம்பி ஏமாந்து போயிட்டேன்.... ஆனா உங்க வாழ்கை இப்படி எல்லாம் ஆக கூடாது... என்னைக்குமே உனக்கு துணையா தீரனும்.... தீரனுக்கு துணையா நீயும் இருக்கணும்..... பணம் காசு அந்தஸ்து இதெல்லாம் எதிர் பார்க்காத நல்ல மனுஷங்களை நம்ம சம்மாதிக்கணும்... அவங்க தான் நம்ம எந்த நிலைமையில இருந்தாலும் நம்ம கூட கடைசி வரைக்கும் இருப்பாங்க....

கமலேஷ் - எனக்கு அவங்க எல்லாம் வேணா... நீங்க என்கூட கடைசி வரைக்கும் இருந்தால் போதும்...

வித்தியா - கண்டிப்பா நான் உங்க கூட தான் இருப்பேன்.... நீயும் தீரனும் என்னைக்கும் பிரியாமல் ஒற்றுமையா வாழ போற வாழ்க்கையில கண்டிப்பா நான் இருப்பேன்... ஆனா என்ன ஒன்னு... இந்த ஆளு உன்னை எதாவது பண்ண போறான்னு தான் எனக்கு பயமா இருக்கு.... பேசாம நீ தீரன் படிக்கிற ஹாஸ்டல்ல போய் படிக்கிறியா.... அம்மா உன்னை அங்க சேர்த்து விடவா...

கமலேஷ் - ஹ்ம் ஹ்ம் மாட்டேன்.... நான் உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன்...வேணும்னா ... நம்ம இந்த ஆளை போலீஸ்ல பிடிச்சி கொடுக்கலாம்

வித்தியா - அது முடியாது..... இவனுங்க மாதிரி பெரிய மனுஷனுங்க எல்லாம் சட்டத்துக்கு பயப்படாத சாத்தான்ங்க...

கமலேஷ் - அந்த ஆளு சாத்தான் தான்.... ஆனா அந்த சாத்தானு..க்கு எமன் நான் தான்.. இனி அந்த ஆளு உங்க மேல கை வைக்கட்டும் நானே அந்த ஆளை போட்டு தள்ளிடுறேன்...
என்று அன்னைக்கே நான் என் வித்தியா அம்மாவுக்கு தைரியம் சொன்னேன்....

அன்றைய நாளில் இருந்து என்னுடைய பதினாறு வயது வரை நான் என் வித்தியா அம்மாகூட அவங்க வீட்டுல தான் இருந்தேன்..... லீவுக்கு தீரன் வரும் போதெல்லாம் அவன் என்னை அண்ணனாக பார்க்காமல் அவன் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவர் மகாலிங்கத்தின் மகனா பார்த்து தான் என்கூட நண்பனா பழகுவான்....

எனக்கும் அதெல்லாம் பெரிய விஷயமாக தோன்றியது இல்லை..... தீரன் லீவுக்கு வரும் போதெல்லாம் வாசுதேவன் டெல்லியில் இருந்து அவனை பார்க்க தவறாமல் வந்து போவார்....

நாங்க ஒரு பக்கம் வளரும் போது.... வாசுதேவனின் அரசியல் செல்வாக்கும் ஒரு பக்கம் வளர்ச்சி அடைந்து கொண்டு வந்தது.....

அந்த ஆளுக்கு பதவி கிடைக்க வில்லை என்றாலும்... பணம் அந்தஸ்து..னு எல்லாமே அதிகமா கிடைத்தது....

அந்த ஆளோட அரசியல் வாரிசாக தீரன் இருக்க வேண்டும்.... அதனால அவனை ஹாஸ்டல்ல இருந்து நான் டெல்லிக்கு என் அக்கா வீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க படிக்க வச்சி.... அப்படியே அவனை அரசியல்ல பெரிய ஆளாக ஆக்க போறேன்னு வாசுதேவன் அடிக்கடி என் வித்தியா அம்மாகிட்ட சொல்லி தீரனை அவருடன் அழைத்து செல்ல முயற்சி பண்ணாரு...

ஆனால் வித்தியா அம்மாவின் பிடிவாதத்தால் தீரனை அவரால் டெல்லிக்கு அழைச்சிட்டு போக முடியல....

எனக்கும் வயதாக வயதாக.... நான் வாசுதேவனை எதிர்த்து நின்றேன்....
என்னை அவர் மனதார மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் என்னை அழிக்க வேண்டும் என்று அவர் எண்ண வில்லை....

அவரால் என் வித்தியா அம்மாவுக்கு நிம்மதி கிடைக்காமல் போனாலும்.... பிரச்சனை வராமல் நானும் என்னை வளர்த்த மகாலிங்கம் அப்பாவும் பார்த்து கொண்டோம்...

தீரத்தனுக்கு அவன் அம்மாவை மட்டும் தான் பிடிக்கும்.... அவங்க என்ன சொன்னாலும் அப்படியே பண்ணுவான்.... அவனுக்கு..னு எந்த ஒரு ஆசையும் இல்லை.... ஆனால் அவனுக்கு நல்ல பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்து அவன் வாசுதேவனின் அரசியல் போதைக்குள் சிக்கி விட கூடாது என்பது தான் வித்தியா அம்மாவின் ஆசை...

அன்றைய தினம் நான் என்னோட 12 ம் வகுப்பு கடைசி exam முடிச்சிட்டு ரொம்ப சந்தோசமா வித்தியா அம்மா பங்களாவுக்கு போனேன்...அந்த பங்களா வெளிய பெரிய பெரிய கார் எல்லாம் நின்னுகிட்டு இருந்தது.....

கொஞ்ச நேரத்துல ஒரு ஆம்புலன்ஸ்ல வெள்ளை துணி சுற்றி வித்தியா அம்மா சடலத்தை அந்த பங்களாவுக்குள்ள ரெண்டு பேர் stretcher ல தூக்கிட்டு வந்தாங்க..

அவங்க சடலத்தை பார்த்து வாசுதேவன் அழுதபடி நின்று இருந்தவரை தோளில் தட்டி கொடுத்து நிறைய பேர் ஆறுதல் சொன்னார்கள்...

அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல..... தோட்டக்காரர் ஓடி வந்து...என் அப்பா.... அதாவது மகா லிங்கம் அப்பா ஓட்டிட்டு போன கார்  accident ஆகிடுச்சு... அதுல தான் வித்தியா அம்மாவும் மகாலிங்கம் அப்பாவும் இறந்துட்டாங்க..... அவரோட உடல martury ல வச்சி அப்படியே புதைக்க சொல்லி வாசுதேவன் சொல்லிட்டதா அந்த தோட்டக்காரர் சொன்னாரு....

அந்த இடத்துல 16 வயது பையனா இருந்த என்னால எதுவுமே பேச முடியல.. நான் பேய் அறைந்தது போல நடு வீட்டுல நின்று இருந்தேன்....

அப்போ தீரத்தன் ஹாஸ்டல்ல இருந்து வித்தியா அம்மாவின் இறுதி சடங்கை செய்ய ஓடி வந்தவன்.... வித்தியா அம்மாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதான்....

நீ அழாத டா.... உனக்காக இனி நான் இருக்கேன்... என்று அவனை கட்டி அணைத்து அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் பத்தோடு பதினொன்றாக தான் ஒரு மூலையில் நின்று இருந்தேன்....

வித்தியா அம்மாவின் இறுதி சடங்குக்கு வந்தவர்களில் சில பேர்.... இந்த மரணம் விபத்து இல்லை..... வாசு தேவன் தான் எலெக்ஷன் வர நேரத்துல எதிர் கட்சி ஆளுங்க தன் குடும்பத்தை அழிச்சிட்டாங்கன்னு பொய் சொல்லி அனுதாப ஓட்டு வாங்க சொந்த மனைவியையே போட்டு தள்ளிட்டாரு.. என்று அங்கு அரசல் புரசலாக பேசிய வார்த்தைகள் என் காதில் மட்டும் இல்லாமல் தீரத்தன் காதிலும் விழ தான் செய்தது....

ஆனால் அவனுக்கு வாசுதேவனை பற்றிய சுயரூபம் முழுதாக தெரியாத காரணத்தால் வித்தியா அம்மாவின் மரணம் விபத்து என்று அவனும் நம்பினான்...

ஊர் கூடி வித்தியா அம்மாவின் சடலத்தை மயானத்தில் அக்னிக்கு இரையாக்கினார்கள்.... தீரத்தன் மீண்டும் மேற்படிப்பை தொடர ஊட்டி போவதற்காக கிளம்பினான்.... அவனுக்கு துணையாக பொம்மி என்ற பெண்மணியை  வாசுதேவன் ஏற்பாடு செய்தார்....

பொம்மிக்கு அவருடைய பிள்ளை இறந்த காரணத்தால்.... தீரத்தனை அவர்கள் தன் பிள்ளையாக பாவித்து அவன் மீது பாசமாக இருந்தார்கள்....

என்னை வளர்த்த மகாலிங்கம், என்னை பிள்ளையாக எண்ணிய வித்தியா அம்மா என்று இருவரையும் ஒருசேர இழந்து நான் அனாதையாக நின்று இருந்தேன்... தீரத்தன் எதிரில் சென்று நான் உன் அண்ணன் என்று என்னால் சொல்ல முடியாத நிலைமை தான் எனக்கு இன்று வரை உள்ளது....

நான் இந்த உலகத்துக்கு வர காரணமாக இருந்த அந்த வாசுதேவன் நான் இருப்பதையே மறக்க நினைத்தான்...

நானும் அவனை நினைக்க மறந்தேன்.... ஒரு பக்கம் படிப்பு, மறு பக்கம் வேலை என்று என்னை நானே தயார் படுத்திக்கொண்டேன்...

வித்தியா அம்மாவுக்கு பிறகு தீரத்தனுக்கு எல்லாமுமா நான் தான் இருக்க வேணும் என்று முடிவு செய்தேன்.....

ஊர் அறிய நான் அவனை சொந்தம் கொண்டாட முடியவில்லை என்றாலும்.... அவன் என் பார்வையில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்....

என் எண்ணத்துக்கு ஏற்றது போலவே.. தீரத்தன் என்னுடன் நட்பின் ரீதியில் பழக ஆரம்பித்தான்...

என்ன நடந்தாலும் வித்தியா அம்மாவின் இறந்த நாளுக்கு தீரத்தன் அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவான்....

அவனுடைய பத்தொன்பது வயதில் அவன் என்ன நினைத்தனோ தெரியவில்லை... வித்தியா அம்மாவின் நினைவு நாளுக்கு இங்கே வந்தவன் மீண்டும் வேறு எங்கேயும் போகாமல் வித்தியா அம்மா வாழ்ந்த வீட்டிலேயே இருக்க முடிவு செய்தான்...

வாசுதேவன் பல முறை தீரனை டெல்லிக்கு அழைத்தாலும் அவன் வித்தியா அம்மா வாழ்ந்த வீட்டை விட்டு போக மறுத்தான்...
அவனுக்கு துணையாக பொம்மியும் இருக்க... எனக்கு என் கண் எதிரில் நடமாடும் என் தம்பியை பார்க்கும் போதெல்லாம் என் வித்தி அம்மா நினைவு தான் வரும்....

தீரத்தன் உலகம் தெரியாதவன்.. அதனால தான் வாசுதேவன் தன்னுடைய அரசியல் வாரிசாக தீரத்தனை கொண்டு வர.. தன்னுடைய அக்கா மகளை தீரத்தனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று ஆசை கொண்டான்...

ஆனால் வித்தியா அம்மாவிற்கு...  பணம் பதவி அதிகாரம் என்று இப்படி எதுக்கும் அடிமை ஆகாமல்... உண்மையான காதலுடன் இருக்கும் ஒரு பெண்ணை தான் தீரத்தனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள்...

நான் தீரத்தனுக்கு அண்ணனாக இருந்து என்னால் செய்ய முடியாத பல நல்லதை.... அவனுக்கு எதிரில் நின்று செய்ய எண்ணினேன்..

தீரத்தனுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் எனக்கும் பிடித்ததாக மாற்றிக்கொண்டு அவனுடனே நானும் பயணம் செய்ய ஆரம்பித்தேன்....

ஆனால் எக்காரணத்தை கொண்டும் நான் வாசுதேவனின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளை என்று தீரத்தனுக்கு தெரிய கூடாது... அப்படி தெரிந்தால்... இந்த சொத்தில் பங்கு கேக்க தான் நான் அவனுடன் இருக்கிறேன் என்று அவன் எண்ணி கொள்ள போகிறான் என்ற பயத்தில் தான் இன்று வரை நான் எங்கள் உறவை பற்றி அவனிடம் பேசியதே இல்லை...

தன் குடும்பத்தை விட்டு.... இந்த வாசுதேவன் நல்லவன் என்று எண்ணி ஓடி வந்த வித்தியா அம்மாவுக்கு... வாழும் போது தான் நிம்மதி இல்லை..... அட்லீஸ்ட் அவங்க இறந்த பின்னாடியாவது அவங்க ஆசை பட்டது போல.... தீரத்தனுக்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்து அவனை விரும்புற பெண்ணாக இல்லாமல்.... தீரத்தன் மீது உண்மையான காதலை மட்டுமே வைத்து இருக்கும் ஒரு பெண்ணை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு.... நான் அதன் பிறகு யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்பது தான் என் ஆசை..

கண்டிப்பா.... வித்தியா அம்மா ஆசிர்வாதத்தால தீரத்தன் மனசை மட்டும் நேசிக்கிற பெண்ணை அவன் கல்யாணம் பண்ண நான் ஏற்பாடு பண்ணுவேன்... அப்போ தான் என் வித்தி அம்மா என் மேல வைத்த அன்புக்கு நான் தரும் சின்ன காணிக்கையா அது இருக்கும்..

என்று கமலேஷ்..... தன் பிறப்பின் ரகசியத்தை.... அவன் கைக்குறிப்பு புத்தகத்தில் எழுதி இருந்ததை படித்து பார்த்து தீரத்தன் கண்கள் கலங்கியவன்... மது மயக்கத்தில் இருந்த கமலேஷ் கன்னத்தில் முத்தமிட்டப்படி அவன் அருகில் அமர்ந்து இருந்தவன் தன்னை மறந்து உறங்கவும் செய்தான்...

விடியல் காலை நேரம் மது மயக்கத்தின் வீரியம் குறைந்து.... கமலேஷ் கண்களை திறந்தவன் அருகில் தீரத்தன் அமர்ந்து கொண்டே உறங்குவதை பார்த்து கமலேஷ் அழுத்தமாக கண்கள் மூடி திறந்தவன்... தீரத்தனை உத்து பார்த்து அவன் தோளில் கை வைத்து அவனை எழுப்பினான்..

டேய்....டேய் தீரா உன்ன தான் டா.... என்று கமலேஷ் தீரனை எழுப்ப...

தீரன் - ம்... என்னடா... ஏன் கத்துற... என்றவன் மீண்டும் வாட்டமாக உறங்கி கொண்டு இருந்தான் ..

தீரத்தன் அருகில் இருந்த தன்னுடைய கை குறிப்பு புத்தகத்தை கண்டு அதை உடனே ஒளித்து வைக்க எண்ணிய கமலேஷ், அந்த டைரியை கையில் எடுத்தவன் வேகமாக அங்கிருக்கும் சின்ன அலமாரியில் வைத்து பத்திர படுத்தினான்...

கமலேஷ் - டேய் தீரா.... நீ எப்படி இங்க..... நான் எப்படி வீட்டுக்கு வந்தேன்.. என்று ஏதும் நினைவு இல்லாமல் கேக்க..

தீரா - குடிச்சவன் எல்லாத்தையும் மறக்கலாம்... ஆனா குடித்தவனை அழைச்சிட்டு வந்து பத்திரமா அவனை அவனோட வீட்டுல விட்ட அந்த குடிகாரனின் தம்பி எதையும் மறக்க முடியாது ல்ல.
என்று தீரத்தன் சொன்னதும் கமலேஷின் முகம் மாறியது...

என்ன... என்ன சொல்லுற..?தம்பியா ...!? என்று கமலேஷின் வார்த்தை  வெளிவராமல் தர்க்கம் செய்ய..

ஆமா.....தம்பி தான்.... நான் உனக்கு தம்பி தானே.... என்று தீரத்தன் சொன்னதும்... கமலேஷ் சிலை போல நின்று இருந்தான்...

தீரன் - என்ன அப்படி பாக்குற.... அம்மா என்கிட்ட எல்லா விஷயத்தையும் எப்போவோ சொல்லிட்டாங்க... ஆனா நீயா என்னை தம்பியா ஏத்துக்காத போது... நான் ஏன் உன்னை அண்ணன்னு சொல்லணும்னு எனக்குக்குள்ள ஒரு கேள்வி.... அதான்... நானும் நம்ம உறவை நட்பின் ரீதியாவே பார்த்தேன்...
என்று தீரத்தன் சொன்னவன்..... கமலேஷின் அருகில் சென்று அன்பாக அவன் தோள் மீது கை போட..... கமலேஷ் சட்டென்று அவனை கட்டி கொண்டவன்...

கமலேஷ் - நான் உன் அண்ணன்னு சொன்னால்... எங்க உன் பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு நான் உன்கிட்ட உறவை வளத்துக்குறேன்னு அந்த வாசுதேவனை போலவே நீயும் நினைச்சிட போறன்னு தான் டா நான் இத்தனை வருஷமா உன்கிட்ட இருந்து தள்ளியே இருந்தேன்.... என்றவன் தன் தம்பியை முழு அன்போடு கட்டிக்கொண்டான்...

தீரன் - சரி சரி அழாத.... நீ அழுதா பாக்க சகிக்கல..... ஆமா.. என் கல்யாணம் நல்ல படியா நடக்க தான் நீ இந்த ஊருல இருக்கியா... எனக்கு கல்யாணம் முடிந்ததும் நீ இந்த ஊர விட்டு போயிடுவியோ...??

கமலேஷ் - ஆமா...வித்தி அம்மா ஆசைப்பட்டது போல உன் கல்யாணம் நல்ல படியா முடிந்ததும்.... நான் அந்த வாசுதேவன் கதையை முடிச்சிட்டு இந்த ஊரை விட்டே போய்டுவேன்..... அவன் சரியான மொள்ளமாரி டா.... என் அம்மாவை கொன்னவன் டா அவன்.... அது மட்டுமா.... வித்தியா அம்மா சாவுல கூட இவனோட பங்கு இருக்கு.... இவன் எல்லாம் வாழவே கூடாது....

தீரன் - சரி சரி உணர்ச்சி வசப் படாத...

கமலேஷ் - ஆமா ஆமா உணர்ச்சி வசப்படாம என்னையும் உன்னை போல ஜடமா இருக்க
சொல்லுறியா...

தீரன் - டேய் அடங்கு..... இப்போ என்னத்த நான் ஜடமா இருக்குறத நீ கண்டுட்ட...

கமலேஷ் - ஆமா.... நீயெல்லாம் என் தம்பியா டா... இது வர ஒரு பொண்ணு கையையாவது டச் பண்ணிருக்கியா நீ..... நான் மட்டும் சரியான நேரத்துல உன்னை divert பண்ணலனா.... நீ அந்த dimple கழுத்துல தாலி கட்டி.... அவளுக்கு அடிமையா தான் வாழ்ந்து இருப்ப...

தீரன் - ஓ.... இப்போ மட்டும் நீ எனக்காக என்ன பண்ணிட்ட...

கமலேஷ் - டேய் அப்பன் மவனே.... என்ன டா இப்படி கேக்குற..... தியாவை நீ காதலிக்க காரணமே நான் தான் டா....

தீரன் - Nice ஜோக்.... நான் தியாவை காதலிக்கிறேன்னு யாரு டா சொன்னாங்க...
Bet க்காக தான் நான் அவ கூட பழகுறேன்..

கமலேஷ் - ம்... நம்பிட்டேன் டா தம்பி.....

தீரன் - நீ நம்பலைனாலும் அது தான் உண்மை... எப்ப தியா என்னை பார்த்து I🫰U சொல்லுறாளோ அப்போவே இதெல்லாம் Just For Bet ன்னு சொல்லிடுவேன்...

கமலேஷ் - அப்போ நீ தியாவை காதலிக்கல... அப்டி தானே...

தீரன் - ம்ஹூம் இல்ல....நான் தியாவை காதலிக்கல....

என்று தீரத்தன் சொல்ல.... அதேசமயம் கமலேஷின் வீட்டு வாசல் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டு கமலேஷ் வீட்டு வாசல் கதவை திறக்க.... அங்கே வாசலில் தியா கண்களில் கண்ணீரோடு நின்று இருந்தவளின் கூந்தலை கெட்டியாக தன் கைப்பிடியில் பிடித்து கொண்டு தீரத்தன் கண் எதிரில் வாசுதேவன் நின்று இருக்க.... கமலேஷும்.... தீரத்தனும் கொலை வெறியோடு வாசுதேவன் முன் நின்று இருந்தனர்...

Author - இந்த வாசுதேவன் புள்ள பூச்சி தொல்லை தாங்கல டா கமலேஷா... 🤗
.
.
.
லீலா சந்திரன் 💜

Continue Reading

You'll Also Like

357K 9.2K 46
роиро╛ройрпН роОродрпИ ро╡рпЗрогро╛ро▓рпБроорпН рооройрпНройро┐рокрпНрокрпЗройрпН роЖройро╛ роОройрпНроХрпВроЯро╡рпЗ роЗро░рпБроирпНродрпБроЯрпНроЯрпЗ роОройроХрпНроХрпБ роироорпНрокро┐роХрпНроХрпИ родрпБро░рпЛроХроорпН рокройрпНро▒ ропро╛ро░рпИропрпБроорпН роиро╛ройрпН рооройрпНройро┐роХрпНроХро╡рпЗ рооро╛роЯрпНроЯрпЗройрпН.....роЕродрпБ ропро╛ро░ро╛ роЗро░рпБроирпНродро╛ро▓рпБроорпН роЪро░ро┐...
41K 1.2K 45
роХро╛родро▓рпН роХро▓роирпНрод роХрпБроЯрпБроорпНрок роиро╛ро╡ро▓рпН - роОро┤рпБродро┐ропродрпБ : 2005 - ро╡рпЖро│ро┐ропрпАроЯрпБ : 2010 - рокродро┐рокрпНрокроХроорпН : роЕро░рпБрогрпЛродропроорпН https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
61.8K 4.1K 70
родройро┐роорпИ... роЕро╡ройрпБроХрпНроХрпБ ро╡рпЗрогрпНроЯро┐ропродрпЖро▓рпНро▓ро╛роорпН роЕродрпБ роороЯрпНроЯрпБроорпН родро╛ройрпН. роЕро╡ройрпБроЯрпИроп роЙро▓роХроорпН ро╡ро┐родрпНродро┐ропро╛роЪрооро╛ройродрпБ. роЕроирпНрод роЙро▓роХродрпНродро┐ро▓рпН роЕро╡ройрпБроХрпНроХрпБ ро╡рпЗро▒рпБ ропро╛ро░рпБроорпН родрпЗро╡рпИрокрпНрокроЯро╡ро┐ро▓рпНро▓рпИ. роЕро╡ройрпБроорпН роЕро╡ройродрпБ родрой...
174K 6.7K 36
роПройрпНроЯро╛ роЕро╡рпБроЯрпН роЯрпЗроЯрпНроЯроЯро╛ роЗро░рпБроХрпНроХ.... роЕродрпИроХрпН роХрпВроЯ ро╡ро┐роЯрпБ! роиро╛ройрпН роЪрпЗро▓рпИ роорпВроЯрпБроорпН роЗро│роЮрпНроЪрпЛро▓рпИропро╛; ропро╛ро░ро╛ро╡родрпБ роХрпЗроЯрпНроЯро╛ роЪро┐ро░ро┐роЪрпНроЪрпБроЯрпБро╡ро╛роЩрпНроХ рокро╛ро╡ро╛; ро╕рпНроХро░рпНроЯрпН рокрпЛроЯрпНроЯ рокрпБродро░рпН роХро╛роЯрпБройрпНройрпБ ро╡рпЗрогрпБроорпНрой...