ЁЯТЮроирпА родрпАропро╛ропрпН роЗро░рпБ, роОройрпИ родро┐ро░ро┐ропро╛ропрпН...

By kamadevan69

13.4K 469 145

ЁЯднBet роЯро┐ро▓рпН роЖро░роорпНрокро┐родрпНродрпБ Bed роЗро▓рпН роорпБроЯро┐роирпНродродрпБ ЁЯдЧ More

родрпАЁЯТЮро░родрпНродройрпН
родрпАро░ройрпН ЁЯТЮродро┐ропро╛
роЪро╡ро╛ро▓рпН
роХрпЛро▓рпН рооро╛ро▓рпН
рокродрпНродрпЗ роиро┐рооро┐роЯроорпН ЁЯШБ
роХрпЗроЯрпНроЯрпБроЯрпНроЯро╛ройро╛..?
роХро┤рпБродрпИ роХро╛родро╛
роЕро┤роХрпБро▓ рооропроЩрпНроХро┐роЯрпНроЯрпЛроорпН
роОройрпНрой ЁЯднрооро╛родрпНродро┐ро░
роОройрпНрой роЪрпЖропрпНроп рокрпЛро▒ро╛ройрпЛ?
роХродроорпН роХродроорпН
ро╡ро┐ро┤рпБроирпНродрпБ роОро┤рпБроирпНродрпБ роТро░рпБ роХро╛родро▓рпН
роХрооро▓рпН ЁЯШН рооро┐ройро┐
ропро╛ро░рпБ родро╛ройрпН роЗроирпНрод роХрооро▓рпЗро╖рпН..?
роорпАрогрпНроЯрпБроорпН рооропроХрпНроХроорпЛ?
ро░рпАро▓рпНро╕рпН роороЯрпНроЯрпБроорпН рокро╛рокрпНрокрпЛроорпН ЁЯдЧ
роЕро╡ройрпН рооро╡ройро╛ роирпА???
роЗроирпНрод рокрпБро│рпНро│ рокрпВроЪрпНроЪро┐ родрпКро▓рпНро▓ родро╛роЩрпНроХро▓
роОройрпНрой роЪрпКро▓рпНро▓ рокрпЛро▒ро╛ройрпН??
роЕрокрпНрокроЯро┐ роОройрпНрой рооро╛ роЪрпКройрпНрой???
роТро░рпБ ро╡ро┤ро┐ропро╛ роХроЯрпНроЯро┐роЯрпНроЯро╛ройрпН рокро╛ родро╛ро▓ро┐ропрпИ ЁЯдЧ
роорпБро▒рпНро▒рпБроорпН ЁЯЩПЁЯП╝

родро┐ропро╛ЁЯТЮро┤ро┐ройро┐

1.1K 23 8
By kamadevan69

👩‍❤️‍💋‍👨 நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு👩‍❤️‍💋‍👨

🤗பாகம் 2

👉இடம் தீரத்தனின் இல்லம்....

பொம்மி - தம்பி....

தீரத்தன் - சொல்லுங்க மா...

பொம்மி - அப்பா போன் பண்ணாரு பா..

தீரத்தன் - ம்...

பொம்மி - இன்னும் நாலு ஐந்து மாசத்துல உங்க அத்த பொண்ணு dimple வெளிநாட்டுல இருந்து வர போறாங்களாம்...

தீரத்தன் - ம் அதுக்கு...

பொம்மி - அவங்க வந்ததும் உங்களுக்கு அவங்க கூட கல்யாணம் பண்ணனும்னு சொன்னாரு...

தீரத்தன் - அவரு சொன்னா நான் பண்ணனுமா...

பொம்மி - அப்படி இல்ல பா...

தீரத்தன் - இங்க பாருங்க மா... எனக்கு இந்த கல்யாணம் காட்சில எல்லாம் intrest இல்ல... pls அவர்கிட்ட நீங்களே இத பற்றி சொல்லிடுங்க.....

பொம்மி - இல்ல தம்பி அது வந்து...

தீரத்தன் - அம்மா.... pls.... வேணா... உங்கள நான் எதிரித்து பேசுற நிலைமைக்கு என்னை ஆளாக்காதீங்க...

பொம்மி - சரி பா.. அப்புறம் உன் இஷ்டம்...

தீரத்தன் - ஆமா... நீங்க சாப்பிடிங்களா...

பொம்மி - இன்னும் இல்ல பா...

தீரத்தன் - முதல்ல நீங்க வந்து இப்படி உக்காந்து சாப்பிடுங்க....

என்றவன்.. தன் கையாலேயே பொம்மிக்கு காலை உணவை பரிமாறினான்.... இவனின் அன்பை கண்டு பொம்மியின் கண்கள் கலங்கியது...

தீரத்தன் - ஏன் கண் கலங்குறீங்க....

பொம்மி - என் பிள்ளையை அல்பாயுசுல வாரி கொடுத்துட்டு அனாதையா நான் நின்னப்பா... என்னை உன் அம்மா ஸ்தானத்துல வச்சி அழகு பார்க்குற உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே பா...

தீரத்தன் - ஐயோ அம்மா....நான் விளையாட்டா எல்லாம் சொல்லல... எனக்கு இது வரை எந்த பெண்ணையும் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எல்லாம் தோன்றியதே இல்ல...நான் என்ன பண்றது...

பொம்மி - அதெல்லாம் உனக்குன்னு ஒரு பொண்டாட்டி வந்தா உனக்கு அவங்கள பிடிச்சிடும் பா.... உன் அத்த மகளை சின்னதுல இருந்தே உனக்குன்னு தானே பேசி வச்சிருக்காங்க... போதாக்குறைக்கு உங்க மாமா வேற, கட்சில பெரிய ஆளு... உங்க மாமா மகளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா.... உங்க அப்பாவுக்கும் நல்ல பதவி கிடைக்கும்..

தீரத்தன் - ஓ.... இப்போ கூட என் அப்பா இந்த கல்யாணத்தை ஒரு பிஸ்னஸ் போல தான் டீல் பண்ண பாக்குறாரா...

பொம்மி - அப்டி இல்ல தம்பி... நான் என்ன சொல்லறேனா....

தீரத்தன் - இப்போ என்ன மா.... நான் டிம்பளை கல்யாணம் பண்ணிக்கணுமா...

பொம்மி - ம் ஆமா பா...

தீரத்தன் - சரி நான் யோசிக்கிறேன்..

பொம்மி - என்ன... யோசிக்கிறீயா.....

தீரத்தன் - சரி சரி... யோசிக்கல... நீங்க சொன்னா, நான் யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்..

பொம்மி - தம்பி... இந்த காலத்துல பெற்ற பிள்ளைங்க கூட.... என் கல்யாண விஷயத்துல எல்லாம் நீங்க தலையிடாதீங்கன்னு தான் சொல்லுவாங்க.... ஆனா ஒரு வேலை காரி நான்.... என் பேச்சுக்கு நீ மரியாதை தந்து உன் விருப்பு வெறுப்பை எனக்காக விட்டு தரது எல்லாம் பெரிய விஷயம் பா....

தீரத்தன் - அம்மா... நான் உங்கள என்னோட அம்மாவா தான் நினைக்கிறேன்.... So நீங்க இதுக்கெல்லாம் worry பண்ணாம...என் அப்பா.... sorry....அந்த பிஸ்னஸ் man கிட்ட... நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்னு சொல்லிடுங்க ....

பொம்மி - ரொம்ப சந்தோஷம் தம்பி, நான் சொல்ற எல்லா விஷயத்தையும் நீ ஒன்னு விடாம கேக்குற.... ஆனா ஒரு விஷயம் மட்டும் நீ உன் கிட்ட இருந்து மாத்திக்கவே மாட்டுற....அதுதான் தம்பி எனக்கு கஷ்டமா இருக்கு..

தீரத்தன் - ம்... I know அம்மா... நான் ரேஸ் போற விஷயத்தை பற்றி தானே பேசுறீங்க...

பொம்மி - அது மட்டும் இல்ல பா.... உன் friends அந்த நாலு பேர் கூட சேர்ந்துகிட்டு நீ பெட் கட்டி தேவையில்லாத விஷயமெல்லாம் பண்றது கூட எனக்கு பிடிக்கல...

தீரத்தன் - பொம்மு.... கூல்... பெட் கட்டி அந்த challenge ல வின் பண்றது எல்லாம் ஒரு கிக்.... அதுவும் life ல சாகுற அளவுக்கு ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்... So இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்னை கட்டி போட நினைக்காதீங்க pls...

என்றவன்.... தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு... பொம்மியை பார்த்து கண்கள் சிமிட்டியப்படி தன் அலுவலகத்திற்கு கிளம்பினான்....

********************************************

தீரத்தன் கோடிஸ்வரன் என்றாலும்... அப்பன் சொத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்று எண்ணியவன்... தனக்கென்று ஒரு கம்பெனியை நடத்தி கொண்டு வருகிறான்...

இவனுக்காக இதே ஊரில் பல பங்களாக்கள் இருந்தாலும்... தன் அம்மா வாழ்ந்த இந்த வீடு தான் இவனுக்கு பிடித்த இடம்.....

இவனுடைய ஒரே தோழி காமினி.... தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருக்கிறாள்...... பேருக்கு தான் அது காமினியின் வீடு.... ஆனால் எப்போதுமே இவள் தீரத்தன் பங்களாவில் தங்குவது தான் வழக்கம்....

இவள் மட்டும் இல்லாமல்.... கமலேஷ், அருண்,வருண் என்று நால்வரும் தீரத்தன் பங்களாவிலேயே குடித்து கும்மாளம் போட்டு பொழுதை கடத்துவார்கள்....

இருப்பினும்.... இவர்கள் ஐவரும் சேர்ந்து அவ்வப்போது பைக் race போவதும் வழக்கம்....அதுவும் பெட் கட்டி race போவதில் இவர்களுக்கு அலாதி இன்பம்.....மாதத்தில் ஒரு முறையெனும் இரவு நேரம் ECR ரோட்டில் இவர்கள் நடத்தும் பைக் race kku அவ்வப்போது வெளியூர் வீரர்களும் வருவதுண்டு.....

அதனாலேயே தீரத்தன்க்கு, சில கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் உள்ளனர்...

என்னதான் காமினி பெண்ணாக பிறந்து இருந்தாலும்.... அவள் ஆணுக்கு சலைத்தவள் இல்லை என்ற எண்ணம் எப்பேதும் காமினி மனதில் இருப்பத்தாலேயே.... அவளும் இந்த ஆண்கள் கூட்டத்திற்கு சமமாக தன்னை காட்டி கொண்டு பைகை ride செய்வாள் ....

தீரத்தனின் நண்பன் அருண் மற்றும் வருண் ஆகிய இருவருமே இரட்டையர்கள்.... இவர்களின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருப்பதால், இவர்கள் இருவருமே தீரத்தன் வீட்டிலேயே தங்கி உள்ளார்கள்...

தீரத்தன்...காலை முதல் மாலை வரை அலுவலக பணியில் தன்னை பிஸியாக வைத்து கொள்பவன் .. மாலை முதல் இரவு வரை தன் நண்பர்களுடன் பொழுதை போக்கி விட்டு .... நள்ளிரவு மட்டும் தனிமையை விரும்ப காரணம்,தினமும் அவன் கனவில் தோன்றும் தன் அன்னையின் முகத்தை கண்டு.. கற்பனை என்று தெரிந்தும்.. அவளிடம் நிஜத்தில் பேசி மகிழ்ந்து உறங்க தான்..
அதனாலேயே....இதுவரை தீரத்தனின் அறைக்குள் எவரும் வர அவன் அனுமதித்ததே இல்லை....

இப்படிபட்ட சூழ்நிலையில் வாழும் நம் கதையின் நாயகன் தீரத்தனின் வாழ்க்கையை மாற்ற வர போகும் அழகிய தேவதை தான் நம் கதையின் நாயாகி
" தியா @ தியாழினி "

********************************************

மாலை நேரம் ரயில்வே நிலையத்தில் தன் சித்தி மகளுக்காக காத்து இருந்தாள் காமினி......

"ரயில் வந்து இவ்ளோ நேரமாச்சு... எங்க இவளை இன்னும் காணோம்"... என்று தனக்குள் புலம்பியப்படி கையில் உள்ள கடிகாரத்தை பார்த்த காமினியின் ஹாண்ட் பேகை ஒருவன் பிடுங்கி கொண்டு ஓட... அவனை விரட்டி கொண்டு ஓடிய காமினி... அந்த திருடனை வளைத்து பிடித்து அவனை அடி பின்னி எடுக்க...
அந்த இடத்தில் கூட்டம் கூடியது.... கூடி இருக்கும் அனைவரும் ஆளாளுக்கு அந்த திருடனை உதைக்க....

"நிறுத்துங்க, நிறுத்துங்க....ஐயோ பாவம் அவரை அடிக்காதிங்க"....
என்று பதற்றதுடன்......கூட்டத்தை விளக்கி கொண்டு.... வெள்ளை நிற சல்வாரில்,அளவான ஒப்பனையில், மையிட்ட விழிகளில் கருணையும்... ரசாயன சாயம் இல்லாமலேயே சிவந்து இருக்கும் இதழ்களில் உச்சி கொட்டியப்படி... சின்ன ஜிமிக்கியை தாங்கி இருக்கும் காதின் அருகே சுருண்டி இருந்த கூந்தலை, காதின் பின்னே எடுத்து விட்டப்படி .... தன் பேகை தூக்கி கொண்டு திருடனின் அருகில் ஓடி வந்தாள்..
"கடவுளின் தயவு பெற்று....
யாழ் போன்ற இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான "தியாழினி"...

"என்ன மா நீ..... நீயும் இந்த திருடனோட கூட்டு களவாணியா...அதான் இவனை அடிக்க வேணான்னு சொல்லுறியா"...
என்று உரும்பினான் கூட்டத்தில் ஒருவன்..

"ஐயோ இல்ல அண்ணா.... நான் இவரோட கூட்டணி எல்லாம் இல்ல.... ஆனா இவரை நீங்க அடிக்காதீங்க.... பாவம், எதாவது தேவைக்காக திருடி இருப்பாரு.... அவருக்கு என்ன பிரெச்சனையோ என்னமோ"..
என்று சொல்லிக்கொண்டே.. திருடனுக்கு பாவம் பார்த்த தியாழினி...... முகமெல்லாம் ரத்தகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த திருடனை கை பிடித்து மேலே தூக்கி விட்டவள்.....

"அண்ணா... திருடுறது தப்பு... உங்களுக்கு எதாவது தேவையினா யாருகிட்டையாவது உதவி கேளுங்க.... உங்க தேவைக்காக நீங்க ஒருவரிடம் இருந்து திருடுற அந்த பணம்..... ஏதோ ஒரு தேவைக்காக அவங்க சேமிச்சு வச்ச அவங்களோட உழைப்பு அது..... பாவம் அவங்க..pls இனிமே திருடாதீங்க.... எங்கேயாவது வேலை தேடி அங்க வேலைக்கு போங்க"....
என்று திருடனுக்கு புத்தி சொல்லும் பெண்ணை பார்த்து கோவமாக பல்லை கடித்து கொண்டு...."தியா" என்று கத்தினாள் காமினி......

காமினி கத்தும் சத்தத்தில் திருடன் தன் கையில் இருந்த பேகை கீழே போட்டவன், வேகமாக ஓடி மறைந்தே போனான்...

காமினி கண்களில் கோவத்தை கண்ட தியாழினி....

"ஐ காமு".....என்று உற்சாகமாக முகம் மலர்த்தவள் கையை பிடித்து தன் வசம் இழுத்து கொண்ட காமினி..

"ஏன் டி,அறிவு இல்ல உனக்கு.... இந்த ஊரை பற்றி உனக்கு என்ன தெரியும்ன்னு.. நீ வந்ததும் வராததுமா திருடனுக்கு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்குற".... என்று காமனி கத்த.....

"இப்போ ஏன் காமு என்கிட்ட நீ இவ்ளோ கோவமா கத்துற..... நீ இப்படி கோவப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்"...
என்று பாவமாக கேட்ட தியாழினி முகத்தை பார்த்த காமினிக்கு சிரிப்பு தான் வந்தது.....

"என்னாச்சு உனக்கு... நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை திட்டுன... இப்போ நீயே ஏன் சிரிக்குற".... என்று தியாழினி பரிதாபமாக கேக்க.......

"இந்த ஊருல நீ எப்படி குப்பை கொட்ட போறன்னு நினைச்சு தான் சிரிச்சேன்"...
என்று சலிப்புடன் காமனி சொன்னதும்...

"அதெல்லாம் நான் நல்லாவே,குப்பை தொட்டியில குப்பையை கொட்டுவேன்... சரி நீ என்ன இப்படி கிழிஞ்ச ட்ரெஸ்ஸய் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்க... ஏன் டி காமு, உனக்கு வேலை போயிடுச்சா என்ன... நீ கஷ்டத்துல இருக்கியா.... ஐயோ.. நான் வேற என் ஊரை விட்டுட்டு உன்னை நம்பி இங்க வந்து இருக்கேன்.... பாவம்.. நீயே கந்த துணி போட்டுக்கிட்டு இருக்குற"...
என்று புலம்பும் பேதையை பார்த்து காமினி நெருப்பாய் முறைத்தாள் ...

காமினி - "சத்த வாயை மூடிக்கிட்டு வாடி"....
என்று தியாழினியை அழைத்து கொண்டு அவள் வீட்டிற்கு வந்தவள்...

காமினி - நீ குளிச்சிட்டு ரெடியா இரு.... நம்ம Pub ல போய் ரத்தன்னை மீட் பண்ணனும்...

தியாழினி - என்ன... pub baaaaaaa

காமனி - ஏன் டி இப்படி வாயை புலக்குற..

தியாழினி - ஹ்ம் ஹ்ம் நான் அங்க எல்லாம் வரமாட்டேன்...

காமினி - ஏய்... நானே ரத்தன் கிட்ட உனக்கு வேலை வேணும்னு request பண்ணி கேட்டு இருக்கேன்....அவன் நல்ல மூட் ல இருக்கும் போதே உன்னை அவனுக்கு intro பண்ணி வச்சிட்டா... உனக்கு கண்டிப்பா அவன் கம்பெனில ஒரு வேலை போட்டு தருவான்....

தியாழினி - எனக்கு புரியுது காமு.... ஆனா pub க்கு எல்லாம் போய் எனக்கு பழக்கம் இல்லையே...அதுவும் இல்லாமல் அங்க எல்லாம் நிறைய ஆம்பளைங்க இருப்பாங்க....

காமினி - ஆமா... இவ பெரிய பேரழகி... அங்க வர ஆம்பளைங்க எல்லாம் இவளை பார்த்ததும் கை குலுக்கி, கட்டி அணைத்து, இவக்கூட டிஸ்கோ ஆட போறாங்க பாரு.....

தியாழினி - ஹ்ம்.... அப்படியே எவ்ளோ பெரிய ஆண் அழகன் அங்கே இருந்தாலும்.... நான் யாருக்கும் சிக்க மாட்டேன்.... ஏன்னா என் மனசுல வேற ஒரு ஆளு இருக்காரு.....

காமினி - என்னடி சொல்லுற.... என்ன காதலா.... ஆளு யாரு.. எங்க இருக்கான்...அவன் பெயர் என்ன.....

தியாழினி - அவரு பெயரு தீரன்...... நான் மட்டும் அவர தீரான்னு தான் கூப்பிடுவேன்.... அவரும் இந்த ஊர்ன்னு தான் சொன்னாரு .... இன்னும் சொல்ல போனா... நீ என்னை இந்த ஊருக்கு கூப்பிட்டதும்... நான் இங்க கிளம்பி வர காரணம் கூட அவரை தேடி கண்டு பிடிக்கணும் என்ற ஆசையில் தான்...

காமினி - என்னடி சொல்ற... அப்போ நீ அந்த ஆளை காதலிக்கிறியா....

தியாழினி - எனக்கு அந்த தீரனை பிடிக்கும்....அதுக்கு காரணம் என் அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை தான்....ஆனா காதல் ......???

Author - ஆனா காதலோ, ஆவனா காதலோ.... எந்த காதலா இருந்தாலும்.. அத பிரித்து விடவும்..... வேற காதலை சேர்த்து விடவும் தான் நாங்க இருக்கோமே 🤗

விரைவில் தீரனுடன் சந்திப்போம்....
-உங்கள் நான்
லீலா சந்திரன்💜

Continue Reading

You'll Also Like

94.8K 4.1K 25
роХроЯроирпНрод роХро╛ро▓родрпНродрпИ рооро▒роирпНродрпБ рокрпБродрпБ ро╡ро╛ро┤рпНроХрпНроХрпИ родрпКроЯроЩрпНроХ рокрпЛро░ро╛роЯрпБроорпН роТро░рпБ рокрпЖрогрпН роорпБройрпН роорпАрогрпНроЯрпБроорпН роХроЯроирпНрод роХро╛ро▓роорпН ро╡роирпНродро╛ро▓рпН роОройрпНройро╛ро╡ро╛ро│рпН..
451K 15.1K 50
роорогро╡ро╛ро┤рпНроХрпНроХрпИ роХрпБро▒ро┐родрпНрод родройрпН роХройро╡рпБроХро│рпИ родрпКро▓рпИродрпНродродро╛роХ роОрогрпНрогрпБроХро┐ро▒ро╛ро│рпН.. роЙрогрпНроорпИропро┐ро▓рпЗ родрпКро▓рпИродрпНродрпБ ро╡ро┐роЯрпНроЯро╛ро│ро╛.. роТро░рпБ роЪро┐ро▓ рокрпЖрогрпНроХро│ро╛ро▓рпН роОро▓рпНро▓ро╛ро░рпИропрпБроорпН родро╡ро▒ро╛роХ роОрогрпНрогрпБроХро┐ро▒ро╛ройрпН.. роЕро╡ро│рпН роЕрокрпНрокроЯро┐роп...
91.1K 7.7K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.