அலைபாயுதே (Completed)

By Bookeluthaporen

11.7K 447 87

ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ண... More

அலை - 1
அலை - 2
அலை - 3
அலை - 4
அலை - 5
அலை - 6
அலை - 7
அலை - 8
அலை - 9
அலை - 10
அலை -11
அலை - 12
அலை - 14
அலை - 15
அலை - 16
அலை - 17
அலை - 18
அலை - 19
அலை - 20
அலை - 21
அலை - 22

அலை - 13

449 18 2
By Bookeluthaporen

விமான நிலையத்திலிருந்து இறங்கியவன் நேரடியாக வந்து நின்றது அன்னை வீட்டில் தான். பம்பரமாக வீட்டினுள் நுழைந்தவனை அவன் தந்தையே வித்தியாசமாகப் பார்த்தார்.

"கங்கிராட்ஸ் அஸ்வின்!" மூன்று சதம், ஒரு அரை சதம், மூன்று மேன் ஆஃப் தி மேட்ச் இவை அனைத்திற்கும் சேர்த்து, மேன் ஆஃப் தி சீரிஸ் என, அஸ்வின் பாராட்டு மழையில் நனைந்துதான் போனான்.

அந்த மகிழ்ச்சி தந்தை முகத்திலும் தெரிய, "தேங்க்ஸ் ப்பா!" மனதார அவரை அணைத்து விடுவித்தவன் பார்வை, அவரிடமிருந்து விடைபெற்று வீட்டை அலசியது.

"அம்மா எங்க ப்பா?" என்றவன் உள்ளே சென்று, "மதி..." என அழைக்க, அவரும் வந்து தன் பங்கிற்கு மகனைக் கொஞ்சி தீர்த்துவிட்டார்.

"ஆரோஹி எங்க? சித்தார்த் கூட வெளிய போயிருக்காளா?" என்றான் ஆர்வத்தை அடக்க முடியாமல்.

"உனக்கு தெரியாதா? அவ சொல்ல சொல்ல கேக்காம உன் வீட்டுக்கு போயிட்டாடா. வேலைல ஏதோ பிரச்சனை போல, திடீர்னு வர சொல்லிட்டாங்களாம்."

"இல்லையே ம்மா, எப்ப போனா? நீங்க ஏன் தனியா விட்டீங்க? வீட்டுல சமைக்கவும் ஆள் ரெடி பண்ணல, அவளுக்கு சமைக்கவும் தெரியாது. என்ன பண்றா, தனியா அங்க?" அன்னையைத் திட்டி வைத்தான்.

"டேய் நான் என்னமோ தனியா விட்ட மாதிரி பேசுற? ரெண்டு மணி நேரம் என் கூட சண்டைக்கட்டி நின்னுதான் போயிருக்கா. சாப்பாடுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிதான் அனுப்பி வச்சிருக்கேன்." என்றபின்னும் நிற்கவில்லை.

"சரி ம்மா, நான் வர்றேன். வர்றேன் ப்பா!" சிட்டாக பறந்துவிட்டான்.

வீட்டிற்கு விரைந்து வந்தவன், மனைவியை வீடெங்கும் தேடி இறுதியாக வாட்ச்மேனிடம் வந்தான்.

"பாப்பா வீட்டுக்கு மூணு நாளா வரலையே சார்?" பெரிய குண்டாக அவன் தலையில் அவர் இறக்க அஸ்வின், மனைவிக்கு உடனே அழைக்கத் துவங்கினான்.

அழைப்பு சென்றுகொண்டே இருந்தது. அவள் அதனை ஏற்கவே இல்லை. அன்று இருவருக்கும் நடந்த உரையாடலுக்கு பிறகு, இருவருக்கும் இடையில் அதிகமான பேச்சு வார்த்தை இல்லை.

அஸ்வின் தன்னுடைய கவனம் மொத்தத்தையும் விளையாட்டில் செலுத்த, பொதுவாகவே கைப்பேசியிலிருந்து அனைத்தையும் தவிர்த்து விடுவான். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் கூட, அவனுடைய சோசியல் மீடியா மேனேஜர் தான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு கிளம்பி வருவதாக இருந்த பயணத்தை ரத்து செய்து, மனைவியை இன்ப அதிர்ச்சியில் உள்ளாக்க தீர்மானித்து வந்தவனுக்கு, அவள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தாள்.

பயம் ஒட்டிக்கொண்டது. திவ்யா கைப்பேசி எண்ணும் அவனிடம் இல்லை. அன்னைக்கு அழைத்து கேட்டால் அதற்கும் அஞ்சுவார் என்கிற பயத்தில் தயங்கியவன் சித்தார்த்துக்கு அழைத்துவிட்டான்.

வாகனத்தின் சாவியைத் தேடி எடுத்தவன் சித்தார்த்துக்கு அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான். சகோதரன் அழைப்பை ஏற்றதும், "திவ்யா அட்ரஸ் தா." என்றான் வேகமாக.

அஸ்வின் பதட்டம் உணர்ந்தவன், "என்னாச்சு அஸ்வின்? நீ சென்னை வந்துட்டியா?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுடா, இவ எங்க போனானு தெரியல. மூணு நாளா வீட்டுக்கு வரலையாம். என்ன பண்றா, எங்க இருக்கானு கூடவா உங்களால பாக்க முடியல?"

கோவமாக வாகனத்தின் கதவினை அறைந்து சாத்தும் சத்தம் கேட்டு, சித்தார்த் தன்னுடைய அலுவலக அறையிலிருந்து வெளியில் வந்தான்.

"அஸ்வின் நீ இரு, நான் திவ்யாக்கு கால் பண்ணி பாக்குறேன்." மாறன் எண் மட்டுமே அவனிடம் இருக்க, அழைத்தால் அவனும் எடுக்கவில்லை.

"அவர் எடுக்கலடா... நான் என்னனு பாக்குறேன்."

"கிழிச்ச வரை போதும், அட்ரஸ் சொல்லு."

சித்தார்த், "அது ரொம்ப கூட்டமான ஏரியாடா. நீ போகாத, நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன். எனக்கு பக்கம் தான்..."

அஸ்வின், "பரவால்ல, நான் பாத்துக்குறேன்."

சித்தார்த், "சொன்னா கேளுடா, நீ இரு." விடாப்பிடியாக அவனை அடக்கி இவன் சென்றாலும், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழைப்பு விடுத்தான் அஸ்வின் விடாமல்.

அஸ்வின் தவிப்பு புரிந்ததோ, இல்லையோ அவசரமாக வீட்டினுள் நுழைந்தாள் அவன் மனைவி. அவளைப் பார்த்ததும் தான் மூச்சே சீரானது போல் நிம்மதி அஸ்வினுள்.

உடனே சகோதரனுக்கு செய்தி அனுப்பி வைத்து, அவளை முறைத்துக்கொண்டு வீட்டினுள் அவள் பின்னே சென்றான். ஆரோஹி அவனை அங்கு எதிர்பார்க்கவே இல்லை என்றாலும், அமைதியாக அறையை நோக்கி நடந்தாள்.

"ஆரோஹி எங்க போயிருந்த?" கேள்வி கேட்டு நிறுத்தினான்.

"ஆபீஸ் போய்ட்டு வர்றேன்." முகத்தைச் சுளித்து பதில் கொடுத்தாள்.

"ஏன் வீட்டுக்கு மூணு நாள் வரல? எங்க போயிருந்தனு கேட்டேன்..."

"நீங்க எங்க போயிருந்திங்கனு நான் கேட்டா தப்பு, அதே என்னை நீங்க கேட்டா அது சரியா?"

சம்மந்தமே இல்லாமல் கோவத்தைக் காட்டிய அவளின் இந்த அவதாரம், முற்றிலும் அஸ்வினுக்கு பரிட்சயமில்லாதது. அவளை உன்னிப்பாக கவனித்தவன் கண்களுக்கு, சிவந்த அவள் முகத்தைத் தவிர மாற்றம் வேறு தெரியவில்லை.

"ஆபீஸ்ல எதோ பிரச்சனைனு அம்மா சொன்னாங்க, என்ன ஆச்சு ஆரூ?"

"அதெல்லாம் ஒன்னுமில்ல, எனக்கு தூக்கம் வருது." என்றாள் எரிச்சல் குறையாமல்.

"சரி வா, சமைக்கிறேன் சாப்பிட்டு போகலாம்."

அதற்கும், "சாப்பிட்டு தான் வந்தேன்." என முகத்திலடித்தாற் போல் பேசிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

பல ஆசைகள், பல நிகழ்வுகளை அவளோடு பகிர்ந்து, தான் பெற்ற கோப்பைகள், பாராட்டுகளை எல்லாம் அவளிடம் சமர்ப்பித்து, அதனால் அந்த முகத்தில் தோன்றும் பெருமை எல்லாம் பார்த்து, மகிழ நினைத்த ஆணுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவள் மறுத்த உணவினை அவனாலும் உண்ண முடியவில்லை. பசிப்பதும் வரம் தான் போல?!

அடுத்த நாள் அஸ்வின் எழுந்து வரும் முன்பு ஆரோஹி விரைவாகவே அலுவலகம் சென்றிருந்தாள். அது அஸ்வினுக்கு வியப்பாகவே இருந்தாலும், அவள் வரும் முன்பு அவளுக்கு ஒரு பரிசை வாங்கி வைத்திருந்தான்.

அதனை அவளிடம் காட்டி, அந்த சிறிய முகத்தில் தோன்றும் ஆரவாரத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைய காத்திருந்தவனை, அதிகம் காக்க வைத்தாள் அவன் மனைவி.

நேற்று போல் இல்லாது ஏழு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டாள். வந்தவளை உடை மாற்ற கூட விடாமல் பிடித்து நிறுத்தினான்.

"நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேனே..." சோர்வாய் அவன் முகம் பார்த்துக் கூறியவளிடம், "இதை பாத்தா உன்னோட டயர்ட்னஸ் எல்லாம் பறந்து போய்டும்."

விடாப்பிடியாக அவள் கை பிடித்து வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றவன், புதிதாக மின்னிய அந்த மார்டன் வகை கியர் சைக்கிள் ஒன்று அவளைக் கண் சிமிட்டி அழைத்தது.

அவன் அருகில் அவள். அவள் நிழல் உரச அவன்... அவள் இதழ் விரிய எழில் கொஞ்சும் சிரிப்பில், அவன் மனம் மயங்கி கிறங்க காத்திருக்க, அஸ்வின் எதிர்பார்த்து வந்த எதிர்வினைக்கெல்லாம் எதிராய் நின்றாள் ஆரோஹி.

"இது என்ன பசங்க சைக்கிள்?" கருத்த வானம் காட்டும் இரக்கமற்ற கருமை அவள் முகத்தில். முகமெல்லாம் புன்னகையோடு தாவி அணைத்து நன்றி கூறுவாள் என, ஒரு கற்பனைக் கோட்டையே கட்டி நின்றவனை மொத்தமாய் வீழ்த்தியிருந்தாள். அவளது இந்த பரிமாணம் அஸ்வின் சிரிப்பைக் கொள்ளையடித்திருந்தது.

"ஆரூ!"

"ப்ளீஸ் அஸ்வின், இதுக்கெல்லாம் நான் ரெடி இல்ல. இதை எடுத்து ஓட்டுற வயசும் இல்ல, நிலைமையும் இல்ல. இதை பெரிய விஷயமா எடுத்து வந்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு..."

அன்றைய அவன் பெயரின் அழைப்பிற்கும், இன்றைய அவன் பெயரின் அழைப்பிற்கும் இருந்த வித்தியாசத்தை அறவே வெறுத்தான். அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க நினைத்து, அவனே அதனை அனுபவித்தான்.

விறுவிறுவென வீட்டினை நோக்கி நடந்தவள் திடீரென நின்று அவனிடம், "இதை என்ன பண்ண போறீங்க?" என கேட்டாள்.

தான் கொடுத்த முதல் பரிசின் நிராகரிப்பில் இருந்தே மீளாதவன் முகத்தில் தெரிந்த, அப்பட்டமான வலியை மறைத்து மௌனமாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அன்றைய இரவு இருவருக்குமே உணவு தேவைப்படாமல் போக, உறக்கத்தைத் தழுவ முயன்று அயர்ந்துதான் போனான். ஏதோ சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தவன், ஆரோஹியின் அறையில் தெரிந்த வெளிச்சத்தில் புருவம் இடுங்க நெருங்கினான்.

அறையின் கதவு நன்றாகவே திறந்திருக்க உள்ளே தயக்கத்தோடு தான் எட்டிப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னல் ஒட்டி அமைத்திருந்த, நீள்வாக்கு இருக்கையில் அமர்ந்து காரிருளை வெறித்திருந்தாள். நிழலாடிய அவன் உருவம் கண்டு திகைத்தவள், உரியவனைப் பார்த்ததும் தான் ஆசுவாசம் வந்தது.

இருவரும் மற்றவரைக் கண்டபிறகு வார்த்தை எழாமல், சில நொடிகள் மௌனத்தை அனுபவித்தனர். ஆரோஹிக்கு அந்த அமைதி இதமாய் இருந்தாலும், அஸ்வினுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.

மனம் கனக்க நகரப் போனவனைப் பார்த்து, உடனே கால்களைக் குறுக்கிப் பார்த்தாள் கெஞ்சலான விழிகளோடு. நொடிகள் பல எடுத்துக்கொண்டான் அவள் கேட்டதை நிறைவேற்ற.

மெல்ல முன்னேறிய அவன் பாதங்கள், அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்துதான் ஆசுவாசமடைந்தன. அவனை அழைத்துவிட்டாள், அதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை, வார்த்தைகள் தடுமாறியது.

இந்த கோவம், வெறுப்பு இது எதுவும் அவள் இல்லையே...?!

சூழலின் கணம் புரிந்தே அவனை சுட்டது அவள் செயல்கள். கண்களில் அருவியாக பெறுக இருந்த நீருக்கு, அணை கட்டி தடுத்தாள்.

கணவனுக்கோ அவள் தவிப்பு புரிந்தது போல், அவனே அவளது அமைதி கண்டு பேச முற்பட்டான். "என்ன ஆச்சு ஆரூ? நீ இது இல்லையேடா?" தலை அசைத்தாள், 'இல்லை' என இருளை வெறித்து.

"ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா? அம்மா சொன்னாங்க, நான் எதுவும் பண்ணவா? சரி, என்னை விடு சித்தார்த்தை எதாவது பண்ண சொல்லலாம்."

தாராளமாக கண்ணீர் மடையாய் வழிந்தது. கைத்தேர்ந்த சிற்பி செதுக்கிய கண்கள் போல், சொக்க வைக்கும் அந்த விழிகளின் வேதனையை, அவனால் காண முடியவில்லை. அதே நேரம் அவளது செயல்களால் அவளை நெருங்கி ஆறுதலும் கூற முடியவில்லை.

பதறித்தான் போனான்... ஒரே நிமிடத்தில் பல வகையான சாத்தியக் கூறுகளை முடிச்சிட்டு காட்டிய சிந்தனையை திட்டி திட்டி அடக்கினான்.

"ஆரூம்மா எதுவும் பிரச்சனையா? யாரும்..." திக்கி திணறி கேட்கவே முடியாது சிரமப்பட்டவன் துடிப்பு அவளைச் சுட, வேகமாக அவன் முகம் பார்த்து தலையை இல்லை என ஆட்டினாள்.

"அப்புறம் ஏன்டி அழகுற? உன்னை இப்டி பாக்க முடியல." ஏதாவது பதில் சொல்லேன் என பார்த்தவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

"ஆ... ஆபீஸ்ல ஒரு முக்கியமான பேக்அப் ஃபோல்டர் டெலீட் பண்ணிட்டேன். பெரிய இஸ்... இஸ்யூ ஆகிடுச்சு. மேனேஜர் ரொம்ப ஹார்ஷா பேசிட்டாங்க."

அவன் விரல்களை மொத்தமாய் தன்னுடைய இரு உள்ளங்கைகளுக்குள் இறுக்கமாக பொத்திக்கொண்டவள் சூடு, அஸ்வினுக்கு பனியாய் குளிரூட்டியது.

"சாரி கிரிக்கெட்டரே... நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல... ஏதோ புத்தி பேதலிச்சு போச்சு."

விழிகள் இரண்டும் சிவந்து, கன்னம் வற்றி உயிரே இல்லாத அவள் வதனத்தை, சிறிதும் பார்க்க மனம் ஒப்பவில்லை. நிறைய அழுத்திருப்பாள் என பார்த்தாலேத் தெரிந்தது.

"இவ்ளோ தானா? நான் என்ன என்னமோ யோசிச்சிட்டேன் ஆரூ."

"காரணமே இல்லாம இவ்ளோ பேசிருக்கேன்ல, எதுவும் சொல்லாம இப்படி டக்குனு சமாதானம் ஆகிட்டீங்க?"

"என்ன சொல்ல சொல்ற? உன்னோட குணம் இது இல்லனு தெரியும். அதையும் மீறி இவ்ளோ ஆடா நீ பிஹேவ் பண்றனா, உனக்கு ஏதோ பிரச்சனைனு சின்னதா யோசிச்சேன், அவ்ளோ தான்."

"ஒரு வேளை அந்த பிரச்சனை சால்வ் பண்ண முடியாததா இருந்தா?"

அஸ்வின், "ப்ராப்ளம்னு ஒன்னு இருந்தா, அதுக்கு சொல்யூஷன்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்."

ஆரோஹி, "இல்லனா?"

மென்னகை அவனிடம், "இது என்ன உயிரா, ஒன் வே பாத்னு சொல்ல? என்னனு சொல்லு, நான் சொல்யூஷன் சொல்றேன்."

பதில் பேசாமல் அவனைப் பிடித்து வாசல் தாண்டி சைக்கிள் இருந்த இடம் அழைத்துச் சென்றாள். முன்பு அந்த சிறு வாகனம் நிரம்பியிருந்த இடத்தை, இப்பொழுது வெறுமை நிறைத்திருந்தது.

"நாராயணா...!" அவள் மொழி புரிந்து, "வேணாம் விடு ஆரூ, நான் அதை ரிட்டர்ன் பண்ண சொல்லிட்டேன்." கணவன் கண்களில் தென்பட்ட அந்த ஏமாற்றம், அவன் குரலில் இல்லாமல் போனது அவளை அதிகம் வேதனைப்படுத்தியது.

"எங்க இருக்கு?"

"சைக்கிளா?"

"ம்ம்ம்..."

"பின்னாடி நிக்கும்." அவனை அப்படியே விட்டு, அவள் பின்பக்கம் நோக்கிச் செல்ல, "ஆரூ அங்க போகாத, நாயை அவுத்து விட்ருப்பாங்க."

அஸ்வின் அவளைத் தடுக்க முயன்று பார்க்க, அவளோ திரும்பி அவனைப் பார்த்து உதட்டைச் சுளித்து நிற்காமல் நடையைத் தொடர்ந்தாள்.

சில நொடிகள் முன்பு தூக்கி வைத்திருந்த முகத்திற்கும் இந்த முகத்திற்கும் ஆன வித்தியாசம் ஏகத்திற்கும் இருக்க, அவளை மீண்டும் காய்ச்சலில் விட விரும்பாமல் அஸ்வின் வேகமாக நடக்க, அதற்குள் அவன் மனைவி ஓடியே சென்றிருந்தாள்.

தானும் வேகத்தைக் கூட்டிச் சென்ற அஸ்வின் பார்த்தது, அவளுக்கு அரணாக காப்பர், மேவரிக் இருவரும் நடந்து செல்ல, அவன் மனைவி சிறிதும் அச்சம் காட்டாமல் அவைகளோடு பேசியபடியே நடந்தாள்.

அவளது கேள்விக்கு மேவரிக் சரியாக மிதிவண்டி இருந்த பக்கம் பார்த்து குரைக்க, அவனைத் தொடர்ந்தே நடந்தவள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து அஸ்வினை முறைத்தாள்.

"எப்போ பழகுன இவங்ககிட்ட?" அவளை முந்தி அவனே கேள்வி கேட்டு வைத்தான்.

"அது எதுக்கு உங்களுக்கு? என் சைக்கிளை இப்படித்தான் தூக்கி போடுவீங்களா?" கோவமாக அவனைக் கேட்டாள்.

"யாரோ அதை வேணாம்னு சொன்னதா ஞாபகம்..."

ஆரோஹி, "சொன்னா சமாதானம் பண்ணிருக்கணும், அதை விட்டு மூலைல தூக்கி போட்டுடுவீங்களா?" பெண்களுக்கான இந்த மூட் ஸ்விங்கை சமாளிப்பது என்பது, அந்த இறைவனுக்கே சவாலாக இருக்க, அஸ்வின் சாதாரண மானுடன் தானே?! திணறினான் அவனும்.

"சரி, எடுத்துக்கோ."

அனுமதி கொடுத்தவன் கண்களில் பல மடங்கு மகிழ்ச்சி. பளிச்சென மின்னல் சிரிப்பு இதழ்களில் மலர்ந்திட, ஆரோஹி அந்த மிதிவண்டியில் ஏறி அமர, அவள் உயரத்திற்கு அது எட்டாமல் இருந்தது.

சீட்டை இறக்கி விட்டால் சரியாக இருக்குமோ என்கிற எண்ணத்தில் அஸ்வினிடம் கேட்க, நாளை செய்து தருவதாக கூறினான். ஆரோஹிக்கு திடீரென தோன்றிய எண்ணம் முகத்தை பிரகாசமாக்க, மிதிவண்டியை தள்ளியபடியே அஸ்வினிடம் அதனை ஒப்படைத்தாள்.

"நான் ஓட்டவா?"

"ம்ம்ம்..."

"எனக்கு சைக்கிள் எல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்ல ஆரூ, நாளைக்கு சீட் அட்ஜஸ்ட் பண்றேன், இப்ப வா."

ஆரோஹி, "இல்ல, நான் இப்ப கண்டிப்பா போகணும்."

அஸ்வின், "நீ போகணும்னா நான் ஓட்டுனா எப்டிம்மா சரியா வரும்?"

"நீங்க இங்க உக்காருங்க, நான் இங்க ஒக்காருறேன்." சீட்டை காட்டி அஸ்வினுக்கு இடம் ஒதுக்கியவள், அந்த சீட்டுக்கும் ஹாண்ட்பாருக்கும் இடையே இருக்கும், கிராஸ்பார் எனப்படும் கம்பியைக் காட்டி தனக்கென கூற, அஸ்வின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

"ஆரூ, அது கம்ஃபர்டபிளா இருக்காது."

ஆரோஹி உடனே, "அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல, வாங்க." அவனை இடைமறித்து நிறுத்தினாள்.

'உனக்கு யாருடி சொன்னது? பிரச்சனை எனக்கு தான்...'

ஒரே பிடியாக நின்ற ஆரோஹியின் வார்த்தையை மீறாமல், தானே சைக்கிளில் ஏறி அமர்ந்தவன் அவளைப் பார்க்க, ஆரோஹி கரங்கள் கூட சற்று நடுங்கத்தான் செய்தது. இருவரையும் மீறி அவரவர் உள்ளத்தினில் வந்தமர்ந்த சுவாரஸ்யம், மேலும் இந்த செயலை செய்ய உந்தியது.

அஸ்வின் இதழ்களில் இருந்த சிரிப்பு, அதன்பின் ஒளிந்திருந்த ஆசை, அவளது அருகாமையைப் பெரிதும் தேடியது.

"என்ன வேணாமா?" ஒரு வேகத்தில் கேட்டாயிற்று, அதன்பிறகு தொடரப்போகும் நெருக்கம், அவன் தேகத்தோடு உறவாடும் அவள் தேகம் என, உண்மைகள் உரைக்க தூக்கிவாரிப் போட்டது.

'வேண்டும் தான், ஆனாலும்...' முரண்பட்டு நின்ற எண்ண சந்தங்களுக்கு, செவிமடுத்து அவன் கேள்விக்கு பதில் கொடுக்க மறந்தாள்.

அஸ்வினுக்கோ அவன் சிந்தை இந்த நிகழ்வை நினைத்து, ஒரு அழகிய சொப்பனத்தையே கண்டுவிட்டது. வெட்டிவிட்டால் ஏமாற்றம் மொத்தமும் அவனுடையது ஆகிவிடும்.

"ஆரூ..." ஏமாற்றத்தின் தொடக்கத்தில் ஒலித்த அவன் குரலைக் கேட்டவளுக்கு, இதயம் தாறுமாறாக அலறியது.

இந்த ஒரு அழைப்பை விதவிதமாக அழைத்து அழைத்து தானே, அவளை சிந்தையிழக்க செய்திருக்கிறான்.

"நீங்... நீங்க கொஞ்சம் பின்னாடி தள்ளி ஒக்காருறீங்களா?"

பின்னால் திரும்பிப் பார்த்தவன் அவளிடம், "எங்க ம்மா?" அவனைப் போலவே அவளும் எட்டிப் பார்த்தாள். சக்கரத்தைத் தவிர எதுவும் இல்லை. இருந்தாலும் மனம் கேளாமல்,

"பின்னாடி?" அப்பாவியாக கேட்டவளிடம், சண்டித்தனம் செய்யாமல் மனம் மண்டியிட்டது.

"நான் வீல்ல, நீ சீட்லயா?" அஸ்வின் கேட்ட பிறகல்ல, அதற்கு முன்பே அவளுக்கு அவள் கேள்வி அபத்தமாக தோன்றியது தான்.

ஒருவழியாக மனதினை நெறிப்படுத்தி, "சரி, கை எடுங்க." அஸ்வின் கை எடுக்க, அந்த கம்பியில் அமர்ந்தவள் தன்னாலே வழுக்கிக்கொண்டு அவன் மார்பினில் முட்டி நின்றாள்.

காரணம், அந்த கம்பி சற்று வழுக்கிவிழுகும் வகையில் சாய்வாக அமைந்திருந்தது. இது அஸ்வினுக்கு சாதகமாகி போக, மார்பினில் விழுந்த மனைவியை அனிச்சையாக இடை வளைத்து தாங்கினான், "ஹே... பாத்து...!" என வேகமாக.

ஆரோஹி குணம் அறிந்து அவள் நிலைப்பாட்டினை உறுதி செய்தவன், கையை அவளிடமிருந்து எடுத்து அவளது தவிப்பை உடனே போக்கினான்.

சிறிதும் உணர்வைக் காட்டாத அந்த தொடுகையில் உணர்ச்சிகளைப் பூட்டி வைத்து, பெண்ணின் மனம்தான் காரணம் இல்லாமல், நீரினில் அடித்துச் செல்லப்படும் இலையாக மிதக்கிறது.

"பேலன்ஸ்க்கு என் கையையும் புடிச்சுக்கோ ஆரூ." அவன் கூறியதைப் போலவே ஒரு கையை சைக்கிளிலும், மற்றொரு கையை பிடிமானத்திற்காக அவனது கையையும் பிடிக்க, ஆரோஹியின் சைக்கிள் தன்னுடைய முதல் சவாரியைத் துவங்கியது.

பழைய படங்களில் வரும் இது போன்ற காட்சிகளைப் பார்த்து அன்னை, தந்தையிடம் கேலி பேசிய நாட்களை நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்புதான். அன்று கேலியில் விரிந்த இதழ்கள், இன்று அதே காட்சியை அனுபவித்து ரசனையாக இதழ் விரிக்கிறான். ரசனைக்காரர்கள் தான் அவர்கள் என இன்று பாராட்டியது மூளை.

நெஞ்சம் முட்ட முட்ட நிறைந்து கொண்டிருப்பவளை நெஞ்சோடு அணைத்து, இரவில் சாதாரண மிதிவண்டியில் உலா வருவது கூட, இத்தனை பேரின்பம் கொடுக்குமா என வியந்தே போனான் அஸ்வின் நாராயண்.

அந்த விசாலமான இடத்தினில் மிதிவண்டியை செலுத்த, அஸ்வினுக்கு சிரமமானதாக இருக்கவில்லை. கை திருப்பும் திசையில் வாகனம் செல்ல, மனைவியின் வாசத்தை நுகர்ந்து கொண்டே ரம்மியமான இரவை நீட்டினான்.

"எப்படி காப்பர், மேவரிக் கூட பழகுன?" பாறையைப் போல் கனத்த அந்த நொடியினை இலகுவாக்க, தானே பேச்சு கொடுத்தான்.

"அதை ஏன் கேக்குறீங்க? அவனுங்க பக்கம் போனாலே உர்ருனு பாத்துட்டே இருப்பானுங்க. நானும் போவேன், பாப்பேன், எஸ்கேப் ஆகிடுவேன். அப்புறம் இப்டியே விட்டா இவனுங்க சரி வரமாட்டானுங்கனு தெரிஞ்சு போச்சு. போய் நின்னுடுவேன், குறைஞ்சது அரை மணி நேரமாவது.

குறைச்சு குறைச்சு டயர்ட் ஆகிடுவானுங்க. அப்புறம் சாப்பாடு நான்தான் உள்ள வைப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டோம். இப்ப அவனுங்க கூட கொஞ்ச நேரம் இருந்தாதான், எனக்கு அன்னைக்கு டே கம்ப்ளீட் ஆகுது. சேட்டைக்கார பசங்க அவங்க..."

ரோபோ போல் விறைப்பாக இருந்தவள் உடல் தளர்ந்து மெல்ல, அஸ்வின் மார்பினில் தன்னையே உணராமல் சாய்ந்திருந்தது.

"எதுக்கு செய்ற? உனக்கு தான், நாய் மேல பயம் அதிகம்ல?"

"பயம் இருக்கு தான்..."

"ம்ம்... அப்றம் ஏன்?" ஏகாந்த இரவினில் அஸ்வின் குரலிலும் ஏகாந்தம் வீசியது.

"உங்களுக்கு புடிச்சது எப்படி இருக்கும்னு நானும் ஃபீல் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டேன்."

பறந்து விரிந்து வேரூன்றி நிற்கும் மர நிழலின் அடியில் நிற்கும் பொழுது, வீசும் காற்று அஸ்வின் உடலினுள் இப்பொழுது வீசியது. அந்த குளிர்ந்த காற்று அவன் உடலையே சிலிர்க்க செய்தது.

"ஏன்?" என்றான், மீண்டும் உனக்காக தான் என அவள் உதிர்க்கப் போகும் அந்த ஒரு வார்த்தைக்காக ஏங்கி.

"எத்தனை ஏன்?" அஸ்வினைத் திரும்பி பார்த்து ஆரோஹி சிரிப்போடு கேட்க, அவளது சிரிப்பில் சொக்கிப் போனவன் வண்டியை நிறுத்தி மெல்ல அவளை நோக்கி குனிந்தான்.

அஸ்வின் செயலை சிரிப்பு மறைய உணர்ந்தவள் தலையைப் பின்னால் இழுக்க, சைக்கிளைப் பிடித்திருந்த அவன் வலது கை அவள் இடையை மென்மையாக வளைத்து, தன்னோடு பிடித்துக்கொண்டான்.

"நாராயணா..." ஆரோஹி மூச்சு வாங்க அஸ்வினைத் தடுக்க பார்க்க, அவனோ அவளது மூச்சினில் குளிர் காய்ந்தவன் போல் தலையைத் தாழ்த்தி, அவளது நெற்றியில் முட்டி இளைப்பாறினான்.

வானிலை சீராக இருந்தாலும், இருவரது மூச்சு காற்றின் உபயத்தால், அவர்களைச் சுற்றி மட்டும் சரியில்லாத சீத்தோஷம் தான்.

"எனக்காக யோசிக்கிறியா பட்டாம்பூச்சி?" கணவனது கேள்வியில் ஆரோஹி பேச்சற்று நிற்க, அவன் இதழ்களில் திருப்தி புன்னகை.

"கல்யாணத்தை பத்தி என்னென்னமோ எல்லாம் யோசிச்சு பயந்தேன், ஆனா இப்போ சந்தோசமா இருக்கு ஆரூ."

"ஏன்?" அவனது கேள்வி அவள் நாவிலிருந்து வந்தது.

இதழ் பிரியாமல் கண்ணாலே சிரித்தான், "அதை உன்கிட்ட தான் கேக்கணும்." என்ற அஸ்வின், இன்னும் சற்று குனிந்து அவளது நாசியோடு நாசியை இரண்டு முறை உரசினான்.

அந்த இரு நொடி தீண்டலே ஆரோஹியின் மூச்சைப் பலப்படுத்த, தன்னுடைய சேட்டையைக் கைவிட்டு கண்களை மூடிக்கொண்டான். இமை சிமிட்டாது உரியவனின் அன்பை, கண்களாலே கொள்ளளவு கொள்ளாதவரை உறிஞ்சியவள் விழிகளைத் தாண்டி, வெளியேறிய நீரினை அவன் அறியாத வண்ணம் துடைத்து விட்டாள் வேகமாக.

"கிரிக்கெட்டரே... யாராவது பாத்துட போறாங்க..." பூ மலரும் ஓசையில் கேட்ட அவள் குரலில் விழி திறந்து சிரித்தான்.

இதோ... இந்த சிரிப்பிற்கு தான் அவள் மொத்தமாய் அடிமையாவது.

ஒரே நொடியில் மிதிவண்டியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன், தானும் இறங்கி அவளோடு அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தி, சில நொடிகளில் வருவதாக கூறி வீட்டிற்குள் ஓடினான்.

சில நொடிகள் முன்பு கிடைத்த நெருக்கம், அது தந்த கிறக்கத்தில் இருந்து விடுபட்ட ஏமாற்றத்தில், வாடிய மனதினை சம்மட்டியை வைத்து அடித்து உடைக்க ஆவேசம் அதிகமாய் எழுந்தது ஆரோஹிக்கு.

இது எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அவனிடம் மயங்கி, கிறங்கி அஸ்வினின் ஆரோஹியாய் மாறுவது ஆரோஹிக்கு பிடிக்கவில்லை.

தனக்குள்ளே கட்டுப்பாடு விதித்து பேசினாலும், அவன் அருகில் வந்து இரு வார்த்தை மென்மையாய் பேசினால் போதும், வேதாள மனது மீண்டும் பறந்துவிடுகிறது.

சென்ற வேகத்தில் வந்தவன் வேகம், அவளைக் காக்க வைக்க கூடாதென்பதில் முனைப்பாய் இருந்தது.

ஓடியே சென்று ஓடியே வந்தான் போல... மூச்சு வாங்க அவள் அருகில் வந்து அமர்ந்தான், "நான் எங்க போய்ட போறேன், மெதுவா வந்திருக்கலாம்ல நாராயணா?"

அனிச்சையாக அவளது கரங்கள் அவனது முதுகை நீவிவிட்டது. அஸ்வினுக்கு சிரிப்பாய் தான் இருந்தது. தன்னை தேற்றும் மனைவியின் கையில், அவள் கேட்ட பரிசுகளையும் பதக்கங்களையும் ஒப்படைத்தான். அத்தனையும் அவன் போட்டியில் வாங்கியிருந்த பதக்கங்கள்.

அதனைப் பார்த்தவளுக்கு மகிழ்ச்சில் கை, கால் ஓடவில்லை. அவன் பரிசு பெற்றதைப் பார்க்கும் அளவிற்கு அவளுக்கு பொறுமை இருந்ததில்லை. அவன் விளையாடுவதை மட்டும் பார்த்துவிட்டு நிறுத்திவிடுவாள்.

இப்பொழுது அவள் மொத்த கைகளையும் நிறைத்து நிற்கும் பரிசுகள் அனைத்தையும் பார்த்தவளுக்கு, ஏதோ அவளே வாங்கியது போல் அத்தனை பூரிப்பு. ஒவ்வொன்றாய் காட்டி அதற்கான விளக்கம், பின்கதைகள் என அஸ்வினின் வார்த்தைகளும் நீண்டுகொண்டே சென்றது.

"உங்களுக்கு புடிச்ச மாதிரி அதிகமா ரெட் கலர் மெடல்ஸ் இருக்கு கிரிக்கெட்டரே, நோட் பண்ணிங்களா?"

'இல்லை' என தலையை ஆட்டியவன் சிறு வியப்போடு, "எனக்கு ரெட் புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன் தெரியாது? எனக்கு, உங்களை பத்தி அதிகமாவே தெரியுமே..." பெருமை அதிகமிருந்தது மனைவியின் குரலில்.

"சரி, வேற என்ன புடிக்கும்? சொல்லு கேப்போம்..."

"ரொம்ப தெரியாது, கவனிச்ச வரை சொல்றேன்." ஊஞ்சலில் மொத்தமாய் அஸ்வின் பக்கம் திரும்பி அமர்ந்தாள் வாகாக.

"ரெட் கலர் புடிக்கும், ஆனா கார்னு வந்துட்டா ப்ளாக் தான் ப்ரீஃபர் பண்ணுவீங்க. டெய்லி சித்துகிட்ட பேசுடுவிங்க, அதே மாதிரி மேட்ச் போக முன்னாடி, கண்டிப்பா அத்தைக்கிட்ட பேசாம போக மாட்டீங்க. வெளிய சாப்பிட புடிக்காது, அதிகம் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவீங்க.

ஒர்க்அவுட் பண்ண சொன்னா நாள் எல்லாம் பண்ணிட்டே கூட இருப்பிங்க. கண்டிப்பா ரெண்டு மணி நேரம் பண்ணிடுவீங்க. சாக்லேட்ஸ் ரொம்ப புடிக்கும், நூடுல்ஸ் பிரியர், நீங்க இருக்க இடம் எப்பவும் சுத்தமா இருக்கணும் சரியான நீட் ஃப்ரீக்"

அதனைக் கூறும் பொழுது ஆரோஹியின் முகம் போன போக்கைப் பார்த்து அஸ்வின் சிரித்தான். "உனக்கு சுத்தம் இல்லனா நான் நீட் ஃப்ரீக் ஆகிடுவேனா? சரி வேற?" என்றான் இன்னும் கேட்கும் ஆவலுடன்.

"மழைக்காலத்துல வர்ற கார்ப்பரேஷன் தண்ணி மாதிரி, அடிக்கடி கோவம் மூக்குக்கு மேல வரும்." வாய் விட்டு சத்தமாக சிரித்துவிட்டான்.

அவனது அந்த சிரிப்பில் கடுப்பானவள், "முக்கியமா ரொமான்ஸ்ல புலி..." என கேலி செய்ய, அதற்கும் அவனிடம் அட்டகாசமான சிரிப்புதான். நல்லவேளை அதோடு விட்டானே என்கிற நிம்மதி ஆரோஹிக்கு. இல்லையெனில் நிரூபிக்கவா என செயலில் இறங்கிவிட்டால் அவள் பாடு அவ்வளவு தானே?!

"சிரிக்கிறீங்க? நானாச்சும் உங்களை இவ்ளோ கவனிச்சிருக்கேன், நீங்க பறந்துட்டே இருக்குறதுல என்னை பத்தி ஒன்னும் தெரிஞ்சிருக்க மாட்டீங்க..."

"யார் சொன்னா? உன்னோட சாப்பாட்டு ஹாபிட்ஸ் எனக்கு அத்துப்படி." என்றான் ரோசம் வந்த கணவனாக அஸ்வின் வேகத்தோடு.

"அது எல்லாம் கணக்குல வராது."

"ஓ..." என்றான். தாடியை சொரிந்து இரு நொடி யோசித்தான், "சரி, கணக்குல வர்ற போல சொல்லவா?" சொல்லேன் என்றது அவள் சவால் விடும் பார்வை.

"என் பொண்டாட்டி சரியான கும்பகர்ணி. தூக்கம்னா உனக்கு அப்படி ஒரு பிரியம். அப்புறம் நீ ஒரு சரியான கஞ்சம்..."

"நான் கஞ்சம் எல்லாம் இல்ல..." உண்மையை ஒத்துக்கொள்ள முடியாத காரணத்தால் குரலைத் தாழ்த்தி தான் பேசினாள்.

"இதுல தப்பு இல்லையே ஆரூ... அதுக்கு கூட உன்கிட்ட காரணம் இருக்கே. அந்த பணத்தை உனக்காக இல்லாம, உன்னை சுத்தி இருக்கவங்க கஷ்டப்படுற நேரம் தானே நீ யூஸ் பண்ற?"

இதெல்லாம் எப்படி கண்டுகொண்டான் என அவள் விழி விரித்துப் பார்க்க, அவளிடம் பேசாதே என தலையை அசைத்து மேலும் அவளைப் பற்றி, தான் அறிந்தவற்றை உடைத்தான்.

"சாப்பாடு தான் உன்னோட பிரியமா இருந்தாலும், அதை விட உனக்கு நெருக்கமானவங்க என்ன கேட்டாலும் செய்ற குணம், உன் உயிரையே குடுக்க சொன்னாலும் செய்வ."

இதனைக் கூறிய அஸ்வின் முகத்தில் அத்தனை பெருமை, கர்வம். அதே நேரம் தானும் அந்த வட்டத்தினுள் வந்துவிட்ட மகிழ்ச்சி அவன் இதயத்தினில்.

ஆரோஹிக்கு வார்த்தைக்கு பஞ்சமானது. அவன் விருப்பு, வெறுப்பை தான் பார்த்து அதனைப் பெருமையாக கூறினால், இவனோ அவளது குணத்தைப் படித்து அதன் மூலம் அவளை மீண்டும் ஒரு முறை வென்றான். விளையாட்டில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சதமடிக்கும் இவனை வீழ்த்த, அவள் சிரமப்பட்டு தான் ஆக வேண்டும் போல்.

"இன்னொரு முக்கியமான விஷயம் விட்டுட்டேன். உனக்கு பாய் ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இல்ல. அதுக்கெல்லாம் சேர்த்து மேடம் அதிகமா சைட் அடிப்ப..."

"ஐயோ! இது என்ன அப்பட்டமான பொய்யா இருக்கே..." பேசியவளுக்கே நா கூசதான் செய்தது. ஆனாலும் பேச வேண்டி இருந்தது.

"இரும்மா, இதுக்கே இப்டி பதறுற? லேட்டஸ்ட் அப்டேட் ஒன்னு இருக்கே, அதையும் கேட்டுக்கோ." ஆரோஹி வேகமாக எழப் பார்க்க, பிடித்து இழுத்து அமர வைத்தான்.

"நீங்க ஏதாவது ஒளறிட்டு இருந்தா அதையும் நான் கேட்கணுமா? போங்க..."

"நான் சொல்றேன்..." அவளை விட அவனிடம் அதிக பிடிவாதம். அவனிடம் தான் அவனுக்கு சாதகமான தகவல் ஒன்று உள்ளதே.

காதுகளை கைகள் கொண்டு பொத்தியவள் கையை, வலுக்கட்டாயமாக பிரித்து சிறை செய்தான்.

"உன்னோட புது க்ரஷ் பேர் அஸ்வின் நாராயண், சரி தான?" கண்களை இறுக்கமாக மூடியிருந்தவளின் கண்மணிகள் தவிப்பு, அஸ்வினை மேலும் குதூகலமாக்கி அவ்விடத்தையே சிரிப்பில் அதிர வைத்தது.

"நாராயணா போதும்... நிறுத்த போறிங்களா, இல்லையா?" கெஞ்சலோடு அவனைப் பார்த்து அவள் கேட்க கேட்க, சீண்டியே மனைவியை ஓட வைத்தான் அவள் நாராயணா.

***

Continue Reading

You'll Also Like

471K 12.6K 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று...
71.4K 2.7K 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and...
58.9K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
2.7K 339 10
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...