ℝ𝕆𝕁𝔸🌹

By LEESAKCHERRY143

973 114 57

🌹 🌹 🌹 🌹 🌹🌹🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹🌹🌹... More

ரோஜா 🌹
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 10

பகுதி 9

118 10 9
By LEESAKCHERRY143

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 9

இரவு பத்து மணி அளவில் ரோஜா தன் மடியில் படுத்து இருக்கும் திக்ஷி பாப்பாவின் அழகை ரசித்தப்படி அமர்ந்து இருந்தாள்...

"இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இந்த குழந்தையை பார்த்துகிட்டு இருப்ப....உனக்கு தூக்கம் வரலையா"........
என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்டாள் கனகா....

"அதெல்லாம் வரல.....இந்த குழந்தை எவ்வளவு சமத்து பாத்திங்களா..... அடம் பிடிக்காம... இந்த வயசுலேயே பெரியவுங்கக்கிட்ட எல்லாம் மரியாதையா பேசி பழகுறாள்"...
என்று திக்ஷியின் செயல்களை நினைத்து ரோஜா மகிழ்ந்து கொண்டு இருந்தாள்...

"ரோஜா..... திக்ஷியின் அம்மா வளர்ப்பு அப்படி..... குழந்தையை அவ நல்லா பாத்துக்கிட்டாள் .... அன்று துர்வாவின் அண்ணனும் அண்ணியும் கோவிலுக்கு கிளம்பும் போது.... அவங்க தான் துர்வாவின் மனைவியையும் அவங்க கூட அழைச்சிட்டு போயிருக்காங்க.... ஆனா ஏதோ நல்ல நேரம்... குழந்தை துர்வா தாத்தாகிட்ட இருந்துகிட்டாள்...
பாவம்..அவங்க போன வண்டி தான் ACCIDENT ஆகி இப்போ மூன்று உசுரு அநியாயமா போயிடுது".... என்று கனகா கவலையாக சொன்னாள்....

"மரணம் நம்ம பக்கத்துல தான் கனகா இருக்கு...... முதல்ல நம்ம அதை தொடுவோமா.... இல்ல மரணம் நம்மை தொடுமா என்பது தான் வாழ்க்கையின் ரகசியம்"...என்று ரோஜா விரக்தியாக சொல்லி க்கொண்டு இருந்தாள்....

துர்வா வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டு கனகா கதவை திறந்தவள்....

"ஏன் டா... மணி என்னாகுது.... இவ்வளவு நேரமா நீ APPOINTMENT முடிக்க"... என்று கனகா துர்வாவை கடிந்து கொண்டாள்..

"SORRY கனகா..... போன இடத்துல LATE ஆகிடுதுங்க ......என்னால உங்க தூக்கம் வேற கெட்டு போச்சு போல..... சரி சரி நான் குழந்தையை தூக்கிகிட்டு கண் இமைக்கும் நேரத்துல பறந்து போயிடுறேன்....நீங்க கதவை LOCK பண்ணிக்கிட்டு தூங்குங்க"....
என்று சொல்லிக்கொண்டே துர்வா குழந்தை அருகில் வந்தான்....

"பாப்பா நல்லா தூங்கிகிட்டு இருக்காள் துர்கா.... அவ இன்னைக்கு இங்கேயே தூங்கட்டுமே.... நான் காலையில உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விடுறேனே".. என்று ரோஜா பாவமாக கேட்டாள்....

"ஐயோ.... குழந்தை இல்லாம என்னால நைட்டு தனியா தூங்க முடியாது ரோஸ்.... SORRY.... நான் திக்ஷியை தூக்கிகிட்டு கிளம்புறேன்"...
என்று துர்வா குழந்தையை தூக்க போனவன்... ரோஜாவின் முகம் வாடுவதை பார்த்தான்...

"சரி.... இப்போ என்ன திக்ஷி உன் கூட இன்னைக்கு இங்க தூங்கணும் அவ்வளவு தானே"..
என்று துர்வா கேட்டதும்.... மலர்ந்த முகத்துடன் "ம்"..... என்று தலையை ஆட்டினாள் ரோஜா....

"என் குழந்தை இன்னைக்கு உன்கூட இங்க தூங்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு"....
என்று தன் குரலை உயர்த்தி சொன்னான் துர்வா....

"என்னடா உன்னையும் இலவச இணைப்பா இங்க தூங்க சொல்லனுமா"...என்று கேட்டுக்கொண்டே துர்வா அருகில் வந்தாள்
கனகா...

"ஐயோ அதெல்லாம் இல்ல..... திக்ஷி இன்னைக்கு நைட்டு இங்க இருந்தா.... நீங்க ஊருக்கு போற ஒரு வாரம் ரோஸ் நம்ம வீட்டுல வந்து தங்கணும்.... இந்த டீல்க்கு ஓகேனா நான் திக்ஷியை இங்கேயே விட்டுட்டு போறேன்"... என்று தன் புருவத்தை உயர்த்தியப்படி சொன்னான் துர்வா....

"கேடி டா நீ.... பட் இந்த டீல் நல்லா தான் இருக்கு... என்ன ரோஜா...உனக்கு டீலா நோ டீலா"...என்று கனகா கிண்டலாக கேக்க...

ரோஜா குழந்தையை தூக்கி தன் மார்போடு அணைத்து கொண்டவள்...

"நான் நாளைக்கு ஒரு வாரத்துக்கு தேவையான things கூட பாப்பாவை அழைச்சிட்டு உங்க வீட்டுக்கு வரேன்... நீங்க இப்போ சாப்பிட்டுட்டு கிளம்புங்க".. என்றாள் சிரித்த முகத்துடன் ரோஜா...

"நீ வரேன் சொன்னதே எனக்கு ஹாப்பி தான்... தாத்தா எங்களுக்காக சாப்பிடாம வெயிட் பண்ணுவாரு... குழந்தையை பாத்துக்கோ.. நாளைக்கு காலையில பத்து மணிக்கு நானே வந்து உங்கள அழைச்சிட்டு போறேன்"...
என்றான் துர்வா....

"எப்படியோ ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வந்துட்டீங்க இல்ல... அப்பா எனக்கு இப்போ தான் நிம்மதி... இல்லைனா இவள இங்க தனியா விட்டுட்டு நான் ஊருல வயத்துல நெருப்பை காட்டிகிட்டு இருந்து இருப்பேன்".. என்று சொல்லிக்கொண்டே கனகா கையில் சாவியை எடுத்து கொண்டு வாசலை நோக்கி சென்றாள்...

"ரோஸ்... ரொம்ப thanks".. என்று சொன்ன துர்வா குழந்தை தலையை தடவி கொடுத்தான்...

"எதுக்காம் இந்த thanks"... என்று கேட்ட ரோஜா.. துர்வாவின் பதிலுக்காக காத்து இருந்தாள்.

"பச்ச மிளகாய் விஷயம் தெரிந்தும் நீ நம்ம வீட்டுக்கு வர சம்மதிச்ச பாரு.. அதுக்கு தான் இந்த thanks " என்றான் துர்வா....

"ஆனா துர்கா".... என்று தன் வார்த்தையை நீட்டினாள் ரோஜா...

"வெயிட் வெயிட் .... கண்டிப்பா இனி பச்ச மிளகாய் சம்மந்தமா நான் உன்கிட்ட எதையும் பேச மாட்டேன்... நீ தைரியமா என்னை நம்பி நம்ம வீட்டுக்கு வரலாம்".... என்று துர்வா சொன்னதும் வாய் விட்டு சிரித்தாள் ரோஜா...

"நீ சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்க ரோஸ்... good night... பாப்பாவை பாத்துக்கோ... காலையில மீட் பண்ணலாம்"...என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி சென்றவனின் முகம் மறையும் வரை கண் சிமிட்டாமல் குழந்தையை தன் மார்போடு அனைத்தபடி பார்த்து கொண்டு இருந்தாள் ரோஜா"....

துர்வா வீட்டுக்கு கிளம்பியதும், கனகா வாசல் கதவை தாழிட்டவள்.... விளக்குகளை அனைத்தைப்படி ரோஜாவிடம் வந்தாள் ...

"நீ வேணும்னா இன்னைக்கு நைட்டு என் ரூம்ல, என் கூட குழந்தையை வச்சிக்கிட்டு தூங்கலாமே".. என்று கனகா கேட்க...

"ஐயோ வேணா வேணா... உங்களுக்கும் மோகன் அண்ணாவுக்கும் நடுவில் நானும் என் மகளும் இடைஞ்சளா வர மாட்டோம்"...
என்று சிரித்து கொண்டே சொன்ன ரோஜா திக்ஷியை தூக்கி கொண்டு மாடியில் இருக்கும் தன் அறைக்குள் நுழைந்தாள்...

"என்ன...!!இவ குழந்தையா....?? அடேய் மோகனா... இங்க என்னடா நடக்குது....?? 🎶ஒண்ணுமே புரியல உலகத்துல🎶"... என்று பாடிக்கொண்டே தன் அறைக்குள் புகுந்து மோகனின் நினைவுகளை போர்வையாக பாவித்து, தலையணையை கட்டிக்கொண்டு கண்களை மூடினாள் கனகா...

ரோஜா குழந்தையை மாடியில் உள்ள தன் அறைக்கு தூக்கி சென்றவள்,குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து, துணைக்கு தலையணையை வைத்து தடுப்பு கொடுத்த பின் நைட்டியை மாற்றிக்கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வர.... மேசை மேல் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்தப்படி குழந்தை திக்ஷி நின்று இருந்தாள்...

"ஐ குட்டி பாப்பா... நீங்க தூங்காம அங்க என்ன பண்றீங்க"... என்று கேட்டுக்கொண்டே குழந்தையை அள்ளி அனைத்தாள் ரோஜா..

"நான் பாக்கும் போது அப்பா காணோம்... அதான் எந்திரிச்சேன்"... என்று குழந்தை மழலை குரலில் பேசியதும்,திக்ஷியை கட்டிலின் மீது கடத்திய ரோஜா... தானும் பிள்ளையின் அருகில் படுத்து கொண்டவள்...குழந்தையின் வலது கரங்களை பிடித்து பிஞ்சு விரலில் உள்ள ஓவிய ரேகையை ரசித்தாள் ...

"திக்ஷி குட்டிக்கு அம்மா பிடிக்குமா இல்ல அப்பா பிடிக்குமா".. என்று பலரும் கேட்கும் கேள்வியை  குழந்தையிடம் ரோஜாவும் கேட்டாள்...

குழந்தை தன் இடது கையில் உள்ள ஐந்து விரல்களையும் மூடி மூடி திறந்தப்படி...

"எனக்கு அப்பாவும் பிடிக்கும் உங்களையும் பிடிக்கும்"... என்று விளையாடி கொண்டே சொன்னதும், ரோஜா கண்களில் கண்ணீருடன் குழந்தையை தன் வசம் இறுக்கமாக கட்டிக்கொண்டவள்... பிள்ளையின் முகம் முழுவதும் முத்த மழை பொழிய தொடங்கினாள்...

ரோஜாவும் குழந்தையும் நீண்ட நேர பேச்சு வார்த்தைகள் நடத்திய கலைப்பில் இருவருமே ஒரு சேர உறங்க ஆரம்பித்தவர்களின் தூக்கத்தை கெடுத்தது ரோஜாவின் போனில் உள்ள அலாரம்....

அலாரம் சத்தத்தை கேட்டுட்டு சிணுங்கிய குழந்தையை தட்டி கொடுத்து மேலும் உறங்க வைத்த ரோஜா... குழந்தை தூங்கும் நேரத்தை பயன்படுத்தி கொண்டு சட்டென்று காக்கா குளியலை முடித்தவள், ஒரு சுடிதாரை அணிந்தப்படி தன் கூந்தலை பின்னி கொண்டு இருந்த சமயம்... குழந்தை தூக்கதில் இருந்து எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு..

"அம்மா chuuchuu வருது"... என்று சொன்னதும்.... பின்னிய கூந்தலை அள்ளி முடித்து கொண்டு வேகமாக ஓடி வந்த ரோஜா, குழந்தையை குளியல் அறைக்கு தூக்கி சென்றவள்.... பிள்ளைக்கு காலை கடன்களை முடிக்க வைத்து முகம் அலம்பிய பின் திக்ஷியை தூக்கிக்கொண்டு தன் cell போனுடன் கீழே இறங்கினாள்...

"என்ன... அம்மாவும் பொண்ணும் நல்ல தூக்கம் போல".... என்று கேட்டுக்கொண்டே கனகா மேசை அருகில் அமர்ந்து காபியை ருசித்தவள்.....

"இன்னும் ஒரு காபி and ஒரு ஹார்லிக்ஸ் பாஸ்".... என்று சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்த கனகாவின் கட்டளைக்கு அடிபணிந்து மூன்று கோப்பைகளுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான் துர்வா ..

"குட் மார்னிங்"...என்று சொல்லிக்கொண்டே சிரித்த முகத்துடன் வெளியே வந்த துர்வா மேசை மேல் தட்டை வைக்க....

"அப்பா".....என்று அழைத்தப்படி ரோஜாவின் தோளில் இருந்து திக்ஷி, துர்வாவின் தோளுக்கு தாவினாள்....

"பத்து மணிக்கு வரேன் சொல்லிட்டு இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க"....
என்று துர்வாவை கேள்வி கேட்டுக்கொண்டே ஹார்லிக்ஸ் நிறைந்து இருந்த கப்பை எடுத்து திக்ஷியிடம் நீட்டினாள் ரோஜா...

"பாப்பாவை பிரிந்து நேத்து நைட்டு எனக்கும் தாத்தாவுக்கும் தூக்கமே வரல.... அதான் விடியும் காட்டிலும் இங்க வந்துட்டேன்"... என்று சொன்ன துர்வாவின் இதழ்கள் திக்ஷியின் கன்னத்தில் பதிந்தது...

"சரி நான் காலையில டிபன் ரெடி பண்றேன்... நீ போய் உன் things எல்லாம் pack பண்ணிக்கோ ரோஜா "... என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த கனகாவை தடுத்தான் துர்வா...

"வேணாங்க கனகா... வீட்ல டிபன் ரெடியா இருக்கு... நாங்க தாத்தாகூட போய் சேர்ந்து சாப்பிடுறோம்... ரோஸ் நீ சீக்கிரமா உனக்கு தேவையான things மட்டும் எடுத்துக்கிட்டு வா... குழந்தையை நான் பாத்துக்குறேன்"..
என்று துர்வா சொன்னதும்... துர்வா தயார் செய்த காபியை பதற்றப்படாமல் குடித்தவள், காபி கப்புடன் சமையல் அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து சென்றாள் கனகா....

"ரோஜா...வீட்டோட இன்னொரு சாவி உங்கிட்டயே இருக்கட்டும்... ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து செடிக்கு தண்ணீர் ஊத்திடு....அப்புறம்"....என்று கனகாவின் வார்த்தை முடியும் முன்பு...

"அப்படியே மோகன் அண்ணாவின் படத்துக்கும் பூ போட்டுட்டு போறேன்"...என்று ரோஜா சொன்னதும்.... செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளிய கனகா...

"அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல... ஏன்னா, என் மோகன் என்கூட கேரளா வராரு"...என்று சொல்லிக்கொண்டே Hallக்கு சென்ற கனகாவின் காதலை கண்டு மெய் சிலிர்த்து போன ரோஜா... அங்கிருந்த பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்த பின்,தனக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை எடுத்து கொண்டு துர்வாவின் அருகில் வந்தவள்..

"நான் ரெடி போகலாமா"....என்று ரோஜா கேட்டாள் ...

"ம்.... கனகா நாங்க கிளம்புறோம்ங்க.... நாளைக்கு நீங்க எத்தனை மணிக்கு கேரளா கிளம்புறீங்க.... நான் வேணும்னா உங்களை ரயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணவா"...என்று தன் காலணிகளை போட்டுக்கொண்டே கேட்டான் துர்வா...

"இல்ல டா.... ஆபிஸ் cab வரும்... நான் அதுல போய்கிறேன்...ரோஜா நீ எனக்கு நேரம் இருந்தா நைட்டு call பண்ணி பேசலாம்... திக்ஷி பாப்பா... அத்தை உனக்கு கேரளால இருந்து விளையாட்டு எல்லாம் வாங்கி வரேன்... சரி ரோஜா நேரத்தோடு கிளம்புங்க... தாத்தா உங்களுக்காக காத்து இருப்பாரு"... என்று கனகா சொன்னதும்.... குழந்தையை ரோஜா தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவள் கனகாவிடம் கை அசைத்து டாட்டா சொன்னபடி வீட்டில் இருந்து வெளியேற....

துர்வா கையில் ரோஜாவின் பையை எடுத்து கொண்டு காரின் பின் கதவை திறந்து ரோஜாவை குழந்தையோடு அமரும் படி சொன்னதும்....

ரோஜா இன்று குழந்தை திக்ஷியின் அன்புக்கு அடிமையானவள் துர்வாவின் வீட்டுக்கு ஒரு வார காலம் தங்க வருவதை எதிர் பார்த்து துர்வாவின் தாத்தா வாசலில் நின்று இருந்தவர் இவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்...

"திக்ஷி குட்டி... தாத்தாவை விட்டுட்டு எங்க போன நீ".....
என்று கேட்டுக்கொண்டே குழந்தையை தன் வசம் வாங்கி கொண்ட துர்வாவின் தாத்தா இவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்...

"எப்படி இருக்கீங்க தாத்தா".... என்று ரோஜா கேட்க.......

"ரொம்ப சந்தோசமா இருக்கேன் மா.... வா... வந்து உக்காரு.... துர்வா நீ ரோஜா பையை கொண்டு போய் உன் ரூம்ல வச்சிட்டு சீக்கிரம் சாப்பிட வா".... என்று தாத்தா சொன்னதும்...

இவர்கள் அனைவரும் காலை உணவை சாப்பிட மேசையில் அமர்ந்தனர்...

"ரோஜா....உனக்கு என்ன டிபன் வேணுமோ நீயே எடுத்து வச்சிக்கோ மா.... இது உன்னோட வீடு... கூச்ச படக்கூடாது"....
என்று சொன்ன தாத்தா தன் தட்டில் உள்ள இட்லியை சாப்பிட.... திக்ஷிக்கு துர்வா தோசை ஊட்டிக்கொண்டு இருந்தவன்... சாப்பிடு ரோஸ்"... என்று சொல்லிக்கொண்டே தானும் சாப்பிட ஆரம்பித்தான் ...

"என்ன தாத்தா இது.... சட்னி சாம்பார்னு எதுலயும் காரமே இல்லையே... பாட்டிமா என்னாச்சு உங்களுக்கு,காரசாரம் இல்லாம சமைச்சி இருக்கீங்க".. என்று துர்வா முகத்தை சுழித்து கொண்டு கேட்டான்...

"பெரிய ஐயா தான் தம்பி எதுலயும்"....
என்று பாட்டிமா சொல்லும் முன்பு....

"நான் தான் துர்வா.... ரோஜா இங்க தங்க போற ஒரு வாரமும் சாப்பாட்டுல பச்சமிளகாய் போட வேணாம்னு சொன்னேன்"... என்று சொன்ன தாத்தா யாரையும் பார்க்காமல் மீண்டும் சாப்பிட தொடங்கியதும்... ரோஜா துர்வாவை பார்த்து முறைத்தாள் .....

"ஐயோ ரோஸ்.... நான் நேத்து கனகா வீட்ல நம்ம போட்ட டீல் பற்றி தாத்தாக்கிட்ட சொன்னேன்... அத தான் இவரு இப்படி உளறுறாரு".... என்று துர்வா பதற்றதுடன் சொன்னதும்... ரோஜா அவனை மேலும் முறைத்தப்படி சாப்பிட்டு முடித்தாள்....

"இன்னைக்கு நம்ம எங்காவது வெளிய போகலாமா துர்வா"... என்று தாத்தா கேட்டார்...

"எங்க போறது... நீங்களே சொல்லுங்க போயிட்டு வருவோம்.... நான் இன்னைக்கு Free தான்"... என்றான் துர்வா...

"ஏன் ரோஜா.. நீ சென்னையில சுற்றி பார்க்க ஆசை பட்ட இடம் எதாவது இருக்கா".. என்று தாத்தா கேக்க....

"சொன்னா சிரிக்க மாட்டிங்க இல்ல"...
என்று சொன்ன ரோஜாவின் வெட்க்கத்தை ரசித்தான் துர்வா....

"நான் சிரிக்கிற மாதிரி அப்படி என்னமா சொல்ல போற நீ".. என்று தாத்தா ஆர்வமாக கேட்டார்...

"தாத்தா....இவளுக்கு வண்டலூர் ஜூக்கு போய், அங்க தூங்கிகிட்டு இருக்குற மிருகங்களை எல்லாம் கத்தி எழுப்பி விடணும்ன்னு ஆசை"....
என்று.... என்றோ துர்வாவிடம் இவள் சொன்ன ஆசையை, இன்று அவன் தாத்தாவிடம் சொல்லும் அழகை ரோஜாவும் ரசித்தாள்....

"என்ன மா இது... இப்படியெல்லாம் கூடவா ஒரு ஆசை இருக்கும்"... என்று தாத்தா சிரித்து கொண்டார்....

"சரி நானே உங்கள வெளிய அழைச்சிட்டு போறேன்... போய் கிளம்புங்க... இன்னைக்கு நம்ம லஞ்ச் and டின்னர் வெளிய சாப்பிடலாம்"...
என்று துர்வா சொன்னவன் தன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்து கொண்டான்...

"ரோஜா... நீ இங்க இருக்க போற ஒரு வாரமும் துர்வாவோட ரூம் உனக்கும் திக்ஷிக்கும் மட்டும் தான்.... என் பேரன் என்கூட தங்கிப்பான்"..என்று தாத்தா சொன்னதும் .... ரோஜா குழந்தையை தூக்கி கொண்டு துர்வாவின் அறைக்குள் நுழைய.... அங்கே இவளுக்காக மேசையில் சில புத்தகங்கள் காத்து கொண்டு இருந்தது....

"அம்மா நம்ம எங்க போறோம்".... என்று கேள்வி கேட்ட குழந்தையை கீழே இறக்கி விட்டாள் ரோஜா...

"எனக்கும் தெரியல தங்கம்... உங்க அப்பா தான் நம்மள எங்கேயோ அழைச்சிட்டு போக போறாரு"...என்று ரோஜா குழந்தையிடம் பேச்சு கொடுக்க...

"கிளம்பியாச்சா... போகலாமா"... என்று அறையின் வாசலில் இருந்து துர்வாவின் குரல் கேட்டதும் ரோஜா குழந்தையை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்...

"தாத்தா.... நீங்க இவங்கள அழைச்சிட்டு போய் காருல உக்காருங்க... நான் எதுக்கும் திக்ஷி குட்டிக்கு இன்னொரு ட்ரெஸும் தண்ணியும் எடுத்துட்டு வரேன்"....
என்று துர்வா சொன்னவன் தன் அறைக்குள் நுழைந்தான்.....

காலை பதினோரு மணி அளவில்...ரோஜா, துர்வா, திக்ஷி பாப்பா, துர்வாவின் தாத்தா என்று அனைவரும் டிரைவருடன் ஊரை சுற்றி பார்க்க கிளம்பியவர்கள்....மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்ட பின்பு... கோவில்,அருங்காட்சியகம், கடற்கரை என்று சென்னையில் உள்ள சில இடங்களை சுற்றி பார்த்தவர்கள்... இரவு உணவையும் ஹோட்டலில் சாப்பிட்டப்படி அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கடந்து வந்தார்கள்...

இரவு பத்து மணி அளவில் இவர்கள் மீண்டும் வீடு திரும்ப.... இன்றைய தினத்தின் நிகழ்வுகளை நினைத்து கொண்டே... துர்வாவின் அறையில் குழந்தை திக்ஷியை கட்டி அணைத்து கொண்டு கண்கள் மூடினாள் ரோஜா....

ஒரு வார காலம்....துர்வாவின் வீட்டில் ரோஜா குழந்தை திக்ஷிக்காக தங்கியது அவளுக்கு வரமாக தோன்றியது....

குழந்தையின் கள்ளம் இல்லாத உள்ளத்துக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருந்தாள் ரோஜா....

துர்வாவின் தாத்தாவிற்கு தன்னுடைய பேரனின் கல்லூரி காலத்து காதலி தான் ரோஜா என்று தெரிந்த கணத்தில் இருந்தே, ரோஜாவிற்க்கும் துர்வாவிற்க்கும் மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் பசு மரத்து ஆணியை போல பதிந்து இருந்தது....

ரோஜாவின் வருகையால்....தன் மகளின் தாய் அன்பு தேடல் நின்று இருந்ததை எண்ணி துர்வாவும் மகிழ்ச்சி அடைந்தான்....

ஒரு வார காலம் குழந்தையுடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தார்கள்....

கனகா கேரளாவில் இருந்து வீடு திரும்பியதை அறிந்து கொண்ட ரோஜா... அன்றைய தினம் கனகாவின் வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தவள்...அங்கிருந்து கிளம்பும் முன்பு உறங்கி கொண்டு இருந்த பிள்ளையை பார்த்து மனம் வாடி போனாள்.....

"என்ன மா.... ஏன் சோகமா இருக்க.... குழந்தையை விட்டுட்டு போக மனமில்லையா"... என்று ரோஜாவின் கவலையை உணர்ந்து இருந்த தாத்தா ரோஜாவின் அருகில் வந்ததும்..... ரோஜா கண்கள் கலங்கியவள்...

"ஏன் தாத்தா... திக்ஷியை என்கூடவே வச்சிக்க நீங்க சம்மதிப்பீங்களா"..என்று ரோஜா மனதில் பட்டதை சட்டென்று கேட்டு விட்டாள்....

சத்தமாக சிரித்த தாத்தா....
"இதுல என்ன இருக்கு... பாப்பாவை நீ உன்கூடவே வச்சிக்கலாம்.... ஆனா இந்த பாப்பா உனக்கு வேணும்னா, இவளை பெற்ற தகப்பனையும் நீ உன்கூடவே அழைச்சிட்டு போகணும்...உனக்கு அதுக்கு சம்மதம்னா சொல்லு... இப்போவே குழந்தையை உன்கிட்ட தர நான் ஏற்பாடு பண்றேன்"... என்று தாத்தா சொன்ன வார்த்தையில் மறைந்து இருந்த கருத்தை புரிந்து கொண்ட ரோஜா பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தாள்....

"இங்க பாரு ரோஜா... நான் வெளிப்படையாவே கேக்குறேன்.... என் பேரனை நீ மறுமணம் பண்ணிக்கிறியா"... என்று அவர் கேட்டதும் ரோஜாவின் கண்களில் கண்ணீர் பெருக்கேடுத்தது....

"அழாத மா... என்னடா இந்த ஆளு... இவரோட பேத்தியை வளர்க்க.. நம்ம வாழ்க்கையை அடகு வைக்க சொல்லுறாருன்னு எல்லாம் யோசிக்காத.... நீயே சொல்லு.... என் பேரனும் நீயும் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறிங்க... இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சா... அது உங்களுக்கு மட்டும் இல்ல... குழந்தை திக்ஷிக்கும் நல்லது தானே"..... என்று அவர் மனதில் பட்டதை தாத்தா ரோஜாவிடம் தெளிவாக சொல்லி முடித்தவர்...

"சரி மா... நீ ஏதும் யோசிக்காத... நான் உன் அப்பாகிட்ட பேசுறேன்... நீ அவரோட போன் நம்பர் தந்துட்டு போ"....
என்று துர்வாவின் தாத்தா கேட்டதும் ரோஜா பயந்தவள்...

"ஐயோ வேணா தாத்தா... என் அப்பா என்னை ரொம்ப தப்பா நினைச்சிடுவாரு.... என்னடா இவ ஊருக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு, மறுமணம் அது இதுன்னு வந்து நிக்குறான்னு என்னை கேவலமா நினைச்சிட்டா அதோட நான் என் உசுரையே விட்டுடுவேன்... Pls தாத்தா இனிமே இந்த விஷயத்தை பற்றி பேசாதீங்க.... நான் இனி இந்த வீட்டுக்கு வரல.... குழந்தைகிட்ட உன் அம்மா மறுபடியும் சாமிகிட்ட போயிட்டாங்க... இனிமே வர மாட்டாங்கன்னு சொல்லிடுங்க..என்னை மன்னிச்சிடுங்க தாத்தா.... நான் போறேன்"....
என்று கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு...வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிய ரோஜாவின் பெயரை சொல்லி தாத்தா அழைக்க....

இங்கே நடந்த பேச்சு வார்த்தையை கேட்டப்படி கதவின் அருகில் நின்று இருந்த துர்வா தன் தாத்தாவை பார்த்து சிரித்து கொண்டே அவர் அருகில் வந்தவன்...

"எதுக்கு தாத்தா உங்களுக்கு இந்த வேலை....நான் நானா இருக்கும் போதே அவளுக்கு என் காதல் புரியல... இப்போ நான் திக்ஷியின் அப்பா.... இன்னொருவளின் புருஷன்.... இப்போ போய் அவ எப்படி என்னை கல்யாணம் பண்ணிப்பான்னு நீங்க நினைக்கிறீங்க"... என்று துர்வா அலட்டிகொள்ளாமல் தன் தாத்தாவை கேள்வி கேட்டான்...

"துர்வா.... நீ இன்னொருத்தியின் கணவனா இருந்து இருக்கலாம்.... ஏன் ரோஜாவும் இன்னொருவனின் மனைவியா இருந்து இருக்கலாம்... ஆனா இனிமே நீங்க ரெண்டு பேரும் தான் கணவன் மனைவியா வாழ போறீங்க.... நான் உங்களை வாழ வைப்பேன்"...
என்று சொன்ன தாத்தாவின் நம்பிக்கையை பார்த்து துர்வா சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்று குழந்தை பக்கத்தில் அமர்ந்து கொண்டான்....

துர்வா வீட்டில் இருந்து கிளம்பிய ரோஜா கனகாவின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று இறங்கியவள் வீட்டிற்குள் நுழைந்ததும் கனகாவை கட்டி அணைத்து அழ தொடங்கியவளை பார்த்து கனகா ஏதும் புரியாமல் குழம்பி போனவள்..

"என்ன ரோஜா....என்னாச்சு.... ஏன் அழற"..
என்று கனகா பதறியதும்....

"நான் இந்த ஊருக்கு வந்து இருக்க கூடாது... துர்காவை பார்த்து இருக்க கூடாது... அவரோட குழந்தைக்கிட்ட.. என் புத்திர சோகத்தை உணர்ந்து இருக்க கூடாது... எல்லாத்துக்கும் மேல.... கடந்த காலத்தில் துர்வா என் மீது கொண்ட காதலை நான் தெரிஞ்சி இருந்து இருக்கவே கூடாது"...என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசிய ரோஜா வேகமாக மாடிக்கு சென்றவள் தன் பையை எடுத்து கொண்டு கீழே இறங்கி வந்தாள் ..

"என்ன ரோஜா என்னாச்சு உனக்கு... ஏன் என்னென்னோமோ பேசுற... சரி இப்போ பையை எடுத்துக்கிட்டு எங்க கிளம்புற"..
என்று கனகா புரியாத மனநிலையில் ரோஜாவை கேள்வி கேட்டாள் ...

ரோஜாவின் பதிலை கனகா தெரிந்து கொள்வதற்கு முன்பாக கனகாவின் கைபேசி இசை பாடியது....

"இவன் ஏன் இப்போ போன் பண்ணுறான்".... என்று புலம்பிக்கொண்டே தன் கைபேசி அழைப்புக்கு பதில் தந்த கனகா...

"ஹலோ சொல்லுடா..... என்ன இந்த நேரத்துல".... என்று கனகா ரோஜாவின் நண்பனான தன் தம்பியிடம் பேசியவள்....

"என்னடா சொல்ற... ரோஜா அப்பாவுக்கா.... எப்போ.... ஐயையோ'.... என்று கனகா அலறினாள் ....

"என்ன கனகா... என் அப்பாவுக்கு என்னாச்சு"... என்று பயந்த மனநிலையோடு ரோஜா கனகாவின் கையில் இருந்த கைபேசியை தன் வசம் வாங்கியவள்....

"ஹலோ.... என்னடா.... அப்பாவுக்கு என்னாச்சு...??" என்று ரோஜா பயந்து கொண்டே கேட்டாள்

"ரோஜா.... அப்பா... அப்பாக்கு "....
என்று ரோஜாவின் உயிர் தோழன் சொல்ல வந்த விஷயங்கள் அவன் கண்ணீரால் கரைந்து போனது....

"என்னடா சொல்ற... அப்பாவுக்கு என்னாச்சு"... என்று அதிகம் பதறினாள் ரோஜா...

"ரோஜா நீ உடனே கிளம்பி வா.... உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்க்கு அழைச்சிட்டு வந்து இருக்கோம்"..என்று ரோஜாவின் நண்பன் சொன்னதை கேட்டு ஆடி போனாள் ரோஜா....

"நான்... நான் உடனே ஊருக்கு வரேன்... அப்பாவை பாத்துக்கோ"... என்று பதறிய ரோஜா... கனகாவின் வீட்டில் இருந்து கிளம்ப முடிவு செய்தவளை தடுத்தாள் கனகா...

"ரோஜா.. இப்போ எங்க போற நீ....இன்னைக்கு சனிக்கிழமை... உனக்கு ரயில் பஸ்ன்னு எங்கேயும் டிக்கெட் கிடைக்காது... நீ கொஞ்சம் பொறுமையா இரு... நம்ம ஊருக்கு போக நான் ஏற்பாடு பண்றேன்"... என்று கனகா சொன்னவள் தன் cell போனை எடுத்து கொண்டு அவள் அறைக்குள் சென்றாள்..

"அப்பா... நான் உங்கள தனியா விட்டுட்டு வந்து இருக்க கூடாது.... நான் ஒரு சுயநலவாதி... என் வாழ்கை வீனா போனதும்... என் தனிமையை போகிக்க உங்கள தனியா தவிக்க விட்டுட்டு நான் வந்தது பெரிய முட்டாள் தனம்"..
என்று தனக்குள் புலம்பினாள் ரோஜா....

ஒரு மணி நேரம் கடந்த நிலையில் கையில் பையுடன் வந்த கனகா...

"வா ரோஜா கார் வந்துடுது.... நானும் உன் கூட அப்பாவை பாக்க வரேன்"... என்று கனகா சொன்னதும்... ரோஜா கண்களை துடைத்து கொண்டு தன் காலணிகளை அணிந்தப்படி கனகாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தவள் கண் எதிரில் காருடன் நின்று இருந்தான் அவன் ...

✍️[நினைக்க...கூடவே கூடாது என்று உன்னை எண்ண மறுத்த என் இதயத்துக்கு.....
நித்தமும் கூடி தான் போகிறது உன்னை பற்றிய எண்ணம் மட்டுமே...]

Tbc
Pls give ur review and suggestions..
🅡︎🅞︎🅙︎🅐︎🌹

Continue Reading

You'll Also Like

2.5K 377 5
A short story based on Mullai's birthday.
14.5K 167 25
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும்...
20.5K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
46.4K 1K 20
பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️