ℝ𝕆𝕁𝔸🌹

By LEESAKCHERRY143

973 114 57

🌹 🌹 🌹 🌹 🌹🌹🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹🌹🌹... More

ரோஜா 🌹
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 8
பகுதி 9
பகுதி 10

பகுதி 7

71 12 6
By LEESAKCHERRY143

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 7

நாட்கள் வேகமாக உருண்டோடியது......

துர்வாவின் தாத்தா சொன்னதை போல அவர் நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தை வெற்றி கரமாக கடந்து இருந்தாள் ரோஜா.....

இந்த ஒரு வார காலத்தில் கனகாவும் ரோஜாவும் உடன் பிறவா சகோதரிகளாக மாறி இருந்தனர்.....

தினமும் துர்வாவின் தாத்தா கைபேசி வாயிலாக ரோஜாவை அழைத்து, குழந்தை திக்ஷிதாவிடம் பேச வைப்பதை முதல் கடமையாக உணர்ந்தார்....

சாமியிடம் போய் இருக்கும் தன் அம்மாவின் வருகையை ரோஜா உருவத்தில் காண வார இறுதி வரை காத்து இருந்த திக்ஷிதாவின் எதிர்பார்ப்புக்குக்கு ஆனந்தம் தரும் வகையில் சனி கிழமை அன்று காலை ஏழு மணி அளவில் ரோஜா துர்வாவின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தாள்....

ரோஜாவை பார்த்த துர்வாவின் தாத்தாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி பெறுகியது....

" வாமா வாமா ரோஜா...உள்ள வா " என்று சிரித்த முகத்துடன் தாத்தா ரோஜாவை வரவேற்க....

புன்னகை மலர்ந்த முகத்துடன்...வாசலில் தன் காலணியை கழட்டி விட்டப்படி உள்ளே நுழைந்தாள் ரோஜா...

" என்ன மா நீ.... சொல்லி இருந்தா நான் கார் அனுப்பி இருப்பேனே.. ஆமா எதுல வந்த நீ " என்று தாத்தா கேக்க....

" பஸ்ல தாத்தா " என்று சொன்ன ரோஜாவின் கண்கள் குழந்தை திக்ஷிதாவை காண ஏங்கி இருந்தது..

" பாப்பா இன்னும் தூங்கிகிட்டு தான் மா இருக்காள்... நீ வேணா போய் ரூம்ல அவளை பாரு " என்று தாத்தா சொல்ல...

" நான் எப்படி தாத்தா.... இல்ல வேணா... குழந்தை எழும் வரை நான் இங்கேயே இருக்கேன் " என்று ரோஜா சொன்னாள் ..

" அட ஏன் மா... ரூம்ல துர்வா இருப்பான்னு நினைக்கிரியா.... அவன் ஜாக்கிங்க போய் இருக்கான்... குழந்தை தனியா தான் தூங்குறாள் " என்று தாத்தா சொல்லி முடிக்கும் காட்டிலும் ரோஜாவின் கால்கள் குழந்தை திக்ஷிதாவை நோக்கி ஓடியது .

" குழந்தை மேல் இவளுக்கு இருக்குற அன்பும்..... இவ மேல குழந்தைக்கு இருக்குற நம்பிக்கையும் தான் இந்த வீட்டுல ரோஜா நிரந்தரமா இருக்க வழி வகுக்க போகிறது.. " என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தாத்தா தோட்டத்தில் சென்று அமர்ந்தார்....

துர்வாவின் அறைக்குள் நுழைந்த ரோஜா.....குழந்தை திக்ஷி ஆனந்தமாக உறங்கும் அழகை ரசித்து பார்த்து கொண்டு இருந்தவள் கண்களுக்கு துர்வாவின் கல்யாண புகைப்படம் சுவற்றில் ஒரு ஆணியின் பிடிமானத்தில் தொங்கி கொண்டு இருப்பதை கவனித்தவள்.. அந்த புகைப்படத்தின் அருகில் சென்று, தன் வலது கரங்களால் துர்வா மனைவியின் முகத்தை தொட்டு பார்த்தவள்...

" அன்பான கணவன்....
அழகான பிள்ளை.... பீச்.... என்ன இருந்து என்ன பிரேஜோனம்....உங்க கூட வாழ இவங்களுக்கு கொடுத்து வைக்கல போல " என்று தனக்குள் வருந்தியவள் மீண்டும் திக்ஷியின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள....

கண்களை மெல்ல திறந்து கனவில் தன் தாய் முகத்தை பார்த்து சிரிப்பது போல நிஜத்தில் ரோஜாவின் முகத்தை பார்த்து புன்னகையித்த திக்ஷி... சட்டென்று எழுந்து ரோஜாவின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டதும்.... ரோஜா குழந்தையின் கூந்தலை வருடி விட்டாள்...

பிள்ளையை அனுவனுவாக ரசித்தவள்...குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்த நேரம்.... ஜாக்கிங்க போன துர்வா அறைக்குள் நுழைந்தவன்... ரோஜாவை பார்த்ததும்...
முன் பின் தெரியாத நபரை பார்த்தது போல....அவளை கண்டு கொள்ளாமல் தன் துண்டை எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்...

" என்ன இது... ஏன் துர்கா நம்மை பார்த்து பார்க்காத மாதிரி போறாரு... ஒரு வேள நம்ம அவரோட பிள்ளையை வந்து பாக்குறது அவருக்கு பிடிக்கலையா " என்று தனக்குள் குழம்பியவள் துர்வாவின் அறையில் இருந்து வெளியே சென்ற கனம்.....

" அம்மா.... அம்மா எங்க போறீங்க " என்று மழலை குரலில் தன்னை அழைத்தப்படி ஓடி வந்த திக்ஷியை தன் மார்போடு அள்ளி எடுத்து கொஞ்சினாள் ரோஜா....

" என்ன மா ரோஜா... குழந்தை எழுந்துட்டாளா.... " என்று கேட்டு கொண்டே இவர்களை நோக்கி வந்தார் துர்வாவின் தாத்தா.....

" தாத்தா.... நான் குழந்தையை குளிப்பாட்டி அழைச்சிட்டு வரேன்.....பாப்பாவுக்கு வேற dress எங்க இருக்கு... " என்று ரோஜா கேட்டாள்....

" துர்வா துர்வா.... இங்க பாரு திக்ஷி எழுந்துட்டா....இங்க வா " என்று தாத்தா அழைத்ததும்..... தாத்தாவின் அறையில் இருந்த துர்வா கையில் செய்தி தாளுடன் இவர்களை நோக்கி வந்தான்...

" Good மார்னிங் பாப்பு..... எழுந்துட்டியா.... வா வா அப்பா உன்னை குளிக்க வைக்கிறேன் " என்று சொன்ன துர்வா குழந்தையை நோக்கி கைகளை நீட்ட...

" நான் அம்மாகிட்ட குளிச்சிப்பேன் " என்று மீண்டும் திக்ஷி ரோஜாவின் தோளில் தஞ்சம் புகுந்தாள்...

" பாப்பு அடம் பிடுக்க கூடாது....சீக்கிரம் வா குளிச்சிட்டு நம்ம ஈவினிங் கடைக்கு கிளம்பலாம் " என்று துர்வா மீண்டும் குழந்தையை நோக்கி கரங்களை நீட்டினான்...

" நான் அம்மாகூட தான் குளிப்பேன் " என்று குழந்தை அடம் பிடிக்க.... துர்வாவின் முகம் கோவமாக மாறியது....

" டேய் துர்வா என்னாச்சு உனக்கு.... அதான் ரோஜா வந்து இருக்காளே... விடேன் டா... அவளே பாப்பாவை குளிக்க வைக்கட்டும்.." என்று தாத்தா சொன்னதும்.... ரோஜா குழந்தையை கட்டி அணைத்துக்கொண்டு
நின்று இருந்தவள்...

" பாப்பா.... நீ இன்னைக்கு உன் அப்பாக்கிட்ட சமத்தா குளிச்சிட்டு வருவியாம்...அம்மா உன்னை நாளைக்கு குளிக்க வைப்பேணாம்... Ok வா.... " என்று சொன்ன ரோஜா, சிணுங்கும் குழந்தையை துர்வாவின் கைகளில் கொடுக்க... துர்வா ரோஜாவின் முகத்தை நேர்கொண்டு பாராமல் திக்ஷியை தன் வசம் வாங்கி கொண்டவன் குளியலறையை நோக்கி நாகர்ந்தான்....

" துர்வா பிள்ளையயை குளிக்க வச்சி அழைச்சிட்டு வருவான்... நீ வா மா நம்ம ஹால்ல இருப்போம் " என்று தாத்தா அழைக்க...துர்வாவின் இந்த செயல் ரோஜாவின் மனதில் ஏதோ ஒரு வலியை உண்டாக்கியது....

துர்வா சில நிமிடங்களில் குழந்தை திக்ஷியுடன் வெளியே வந்தான்.... ரோஜாவை பார்த்த குழந்தை ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டாள்...

" பாட்டி மா.... திக்ஷிக்கு டிபன் கொண்டு வாங்க.... " என்று சொன்ன துர்வா ரோஜா அமர்ந்து இருக்கும் இருக்கையின் எதிரில் அமர்ந்தவன் மீண்டும் மேசை மேல் இருந்த செய்தி தாளை கையில் எடுத்து வாசிக்க தொடங்கினான்...

" என்ன துர்வா... ரோஜா நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து நீ இவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல..... ஏன் என்ன ஆச்சு உனக்கு...?? " என்று தாத்தா கேக்க.... துர்வாவின் விளக்கத்துக்காக காத்து இருந்தாள் ரோஜா...

தன் கையில் இருந்த நாளிதழை மீண்டும் மேசை மேல் வைத்த துர்வா....

" என்ன பேச சொல்றிங்க தாத்தா... இவங்க எனக்கு யாரு.... நான் இவங்க கிட்ட பேச என்ன இருக்கு... " என்று துர்வா கேட்டதும், ரோஜாவின் கண்கள் தானாக கண்ணீர் சிந்தியது...

" என்ன மா ரோஜா... உங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது பிரெச்சனையா... ஏன் இவன் இப்படி பேசுறான் " என்று தாத்தா ரோஜாவிடம் கேள்வி எழுப்பினார்...

" ஹ்ம்... எங்களுக்குள்ள எந்த பிரெச்சனையும் இல்ல தாத்தா...." என்று சொன்ன ரோஜாவின் கண்களில் இருந்து துள்ளி குதித்த கண்ணீர் துளிகள் திக்ஷிதாவின் கைகளில் பட்டதும்...

" அம்மா ஏன் அழறீங்க.... அழாதீங்க அம்மா " என்று தன் பிஞ்சு விரல்களால் ரோஜாவின் கண்ணீரை துடைத்தாள் திக்ஷி பாப்பா...

துர்வா நேருக்கு நேர் ரோஜாவை பார்த்தவன்.... அவள் அருகில் சென்று தன் குழந்தையை தன் வசம் வாங்கிக்கொள்ள...
ரோஜா துர்வாவை ஒன்றும் புரியாமல் பார்த்தவள்...

" ஏன் துர்கா இப்படி பண்ணுறீங்க.... நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க குழந்தைகிட்ட பழகுறது உங்களுக்கு பிடிக்கலையா " என்று வார்த்தைகள் வாடிய நிலையில் ரோஜா கேட்கும் கேள்விக்கு துர்வாவின் பதில் மௌனமாக தான் இருந்தது...

துர்வா தன் குழந்தையை தூக்கி கொண்டு சாப்பாடு மேசைக்கு சென்றவன்...வேலையாட்கள் கொண்டு வந்து வைத்த உணவை திக்ஷிக்கு ஊட்டி விட்டான்...

" என்னாச்சு இவனுக்கு.... நீ இரு மா ரோஜா... நான் இதோ வரேன் " என்று சொன்ன தாத்தா.... துர்வாவின் அருகில் சென்றார்...

" தாத்தா நீங்களும் சீக்கிரமா சாப்பிட்டு மாத்திரை போடுங்க.... " என்று சொன்னவன்... தானும் இரண்டு தோசையை சாம்பாரில் முக்கி அழகாக சாப்பிட்டு எடுத்தான்...

" என்ன துர்வா இது... என்னாச்சு உனக்கு... ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற... நம்ம வீட்டை தேடி யார் வந்தாலும் முதல்ல அவங்கள தானே சாப்பிட சொல்லனும்...நீ என்ன ரோஜாக்கிட்ட பேசாம, அவளை சாப்பிட கூட அழைக்கமால், இப்படி நடந்துக்குற.." என்று தாத்தா துர்வாவிடம் கோவமாக கேள்வி கேக்க...

" சரி தாத்தா... நீங்க சாப்பிடுங்க... எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போய்ட்டு ஈவினிங் வரேன் " என்று சொன்ன துர்வா குழந்தை திக்ஷிதாவின் நெற்றியில் முத்தமிட்டவன், தன் அறைக்குள் சென்று தன் கார் சாவியை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியவனை பார்த்து மேலும் கலக்கம் கொண்டாள் ரோஜா....

" ரோஜா... அவனுக்கு பிஸ்னஸ்ல ஏதோ tencsion போல.... அதான் இப்படி....
நீ தப்பா எடுத்துக்காத... வா சாப்பிடலாம் " என்று தாத்தா அழைக்க....

" நான் சாப்பிட்டு தான் வந்தேன் தாத்தா.... நீங்க சாப்பிடுங்க...பாப்பு இங்க வா... " என்று ரோஜா குழந்தையை தன் வசம் அழைத்தவள், தன் கவலைகளை மறந்து குழந்தையிடம் விளையாட ஆரம்பித்தாள்...

துர்வாவின் நடவடிக்கையில் வருத்தம் கொண்ட தாத்தா... அதை ரோஜாவிடம் தெரிய படுத்தி கொள்ளாமல் அன்றைய பொழுதை இவர்களுடன் மகிழ்ச்சியாக கடந்து வந்தார்...

" தாத்தா... குழந்தை விளையாடின கலைப்புல நல்லா தூங்குறாள்... இப்போ நான் கிளம்புனா சரியா இருக்கும்.... நான் போய்ட்டு வரேன்.... குழந்தை எழுந்தா நீங்க எனக்கு வீடியோ call பண்ணுங்க... நான் பாப்புகிட்ட பேசுறேன் " என்று சொன்ன ரோஜா தன் கைப்பையை எடுத்து கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தாள்...

" இரு மா... இன்னும் கொஞ்ச நேரத்துல துர்வா வந்துடவான்... அவன் வந்ததும் உன்னை காருல அழைச்சிட்டு போய் விட சொல்றேன் " என்று தாத்தா சொன்னதும்... ரோஜா அவரை பார்த்து சிரித்தவள்...

" பரவாயில்ல தாத்தா.... நான் கடைக்கு போக வேண்டியது இருக்கு... அதனால பஸ்லயே போய்க்கிறேன் " என்று பொய் சொன்ன ரோஜா... துர்வா வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்..

"வானத்தின் திரைகள் மெல்ல மூடி.... மேகங்கள் புடை சூழ்ந்து... ஆதவணை மறைத்து... மஞ்சள் நிற ஒளியை வெளிப்படுத்திய மாலை நேரம் அழகினை ரசித்தப்படி ரோஜா பேருந்தில் ஏறி அமர்ந்தவள் வெகு விரைவாக கனகாவின் வீட்டை அடைந்தாள்"...

" என்ன ரோஜா குழந்தை நலமா...?? உன் சீனியர் துர்கா... இல்ல இல்ல துர்வா எப்படி இருக்காரு... அவரோட தாத்தா நலம் தானே..?? " என்று எப்போதும் போலவே பல கேள்விகளை அடுக்கிய கனகாவின் அருகில் வந்த ரோஜா...

" குழந்தை நலம் தான்....
தாத்தாவும் நலமே....
ஆனா...... " என்று தன் அடுத்த சொல்லுக்கு ரோஜா இடைவேளை கொடுத்தாள்...

" ஏன்.... உன் சீனியர் அப்போ நலமா இல்லையா.... " என்று கேலியாக கேட்டாள் கனகா....

" ம்.... என்னனு தெரியல.... துர்கா என் மேல கோவமா இருக்காரு போல.... " என்று சொன்ன ரோஜா சோர்வாக சோபாவில் அமர்ந்தாள்...

" ஏன்... என்னவாம் உன் சீனியர்க்கு...உன் மேல கோவப்படுற அளவுக்கு நீ என்ன பண்ண... " என்று கேட்டுக்கொண்டே தன் கையில் இருந்த காபி கப்பை ரோஜாவிடம் நீட்டிய கனகாவை பார்த்து ரோஜா தன் உதட்டை சுழித்து தன் தோள்களை தூக்கியவள்....

" ஹ்ம்.....துர்கா எப்பவும் இப்படி தான்... ஒரு முறை காலேஜ் லைப்ரரில நாங்க நோட்ஸ் எடுக்கும் போது... அங்க ஒரு பையன் வந்து என்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்து Love ப்ரொபோஸ் பண்ணான்.... அதை படிச்சி பார்த்துட்டு... நான் என் அப்பா பாக்குற மாப்பிளயை தான் கல்யாணம் பண்ணிப்பேன்... Sorry ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்... அந்த பையனும் அதற்கு பின்னாடி என்னை எந்த தொந்தரவும் பண்ணல.....ஆனா இந்த விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லலன்னு துர்கா என்கிட்ட ஒரு வாரம் பேசவே இல்ல... அப்புறமா  உங்க தம்பி... அதான் என் உயிர் தோழன் தான் சொன்னான்... துர்கா இந்த விஷயத்துக்காக தான் என்கூட பேசலன்னு.... ஏன் கனகா... நீ சொல்லு... இந்த சின்ன விஷயதுக்காக எல்லாம் யாராவது நமக்கூட பேசாம இருப்பாங்களா.... இதுல எங்காவது லாஜிக் இருக்கா.. " என்று ரோஜா கேக்க....கனகா தனக்குள் சிரித்தவள்...

" ரோஜா.... என் Guess சரியா இருந்தா.... உன் சீனியர் உன்னை காலேஜ் டைம்ல காதல் பண்ணிருக்காரு போல " என்று கனகா சொன்னதும்... தன் கையில் இருந்த காபி கப்பை மேசை மேல் வைத்த ரோஜா....

" என்ன சொல்ற கனகா.... காதலா...!!??
ஐயோ அதெல்லாம் இல்ல.... நீ சொல்றது எல்லாம் பெரிய வார்த்தை....நானும் அவரும் சேர்ந்தா போல முப்பது வார்த்தை கூட பேசிகிட்டது இல்ல... அப்படி இருக்கும் போது காதல் மோதல் எல்லாம் எங்க இருந்து வந்து இருக்கும் " என்று ரோஜா சொன்னவள் கனகாவின் காபி கப்போடு சேர்த்து தன் கோப்பையையும் எடுத்து க்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்....

" மேடம்....30 வார்த்தைகள் எல்லாம் வேணாம் மேடம்.... மூன்று எழுத்து போதும் அவர் மனசுல நீ இருக்கறதை அவர் உணர்ந்து இருக்க... " என்று கனகா மீண்டும் இந்த தலைப்பை தொடங்கியவள் வாயில், அருகில் இருந்த வெண்டைக்காயை நுழைத்த ரோஜா சமையல் அறையில் இருந்து மாடி படிக்கட்டை நோக்கி தன் பையோடு நடந்தாள் ...

" ம்.. ம்... நீ என்ன தான் என் வாய்க்குள்
பெண் விரலை வைத்தாலும்,நான் சொல்றது தான் உண்மை....
என்று வெண்டைக்காயை ருசித்தப்படி கனகா சொல்ல...

" அது என்ன பெண் விரல் " என்று ரோஜா கேட்டதும்...

" Ladies Finger மா....சரி நீ பேச்சை மாத்தாத.....உன் சீனியர் காலேஜ் டைம்ல உன்னை காதலிச்சு இருக்கிறார்... உனக்கு சந்தேகமா இருந்தா அவருக்கே போன் பண்ணி கேளு.... அவரு ஆமான்னு சொல்லுவாரு பாரு " என்று தன் வாயில் இருந்த வெண்டைக்காயை மென்னு விழுங்கிய கனகா சொல்லி முடிப்பதற்குள்....

" துர்கா அப்படி சொன்னா... இதோ இந்த பச்ச மிளகாயை இதே மாதிரி அவர் வாயில திணிப்பேன் " என்று சொன்ன ரோஜா... கனகாவின் வாயில் Green சில்லியை சொருகியவள் கண் இமைக்கும் நேரத்தில் மாடிக்கு ஓடி விட்டாள் ...

" ஐயோ காரம்... காரம்" என்று கத்தியப்படி பிரிட்ஜ் தண்ணியை எடுத்து மொடக்கு மொடக்கு என்று விழுங்கினாள் கனகா ...

மாடிக்கு சென்ற ரோஜா... தன் கைப்பயை மேசை மேல் வைத்தவள்... தன் கைபேசியில் துர்கா என்ற பெயர் இருக்கும் இடத்தை தொட்டதும்... அழைப்பு இணைக்கப்பட்டது....

" Hello யார் பேசுறது " என்று துர்வா கேட்டதும்.... ரோஜாவிற்கு கோவம் தலைக்கு ஏறியது....

" Hello யாருங்க பேசுறீங்க.... என்ன call பண்ணிட்டு அமைதியா இருக்கீங்க " என்று துர்வா கோவமாக பேசுவதை உணர்ந்தவள் சட்டென்று தன் இணைப்பை துண்டித்து போனை ஓரம் வைத்தாள்...

"என் நம்பர் துர்காக்கிட்ட இல்லன்னு நினைக்கிறேன்... அதான் நான் யாருன்னு கேக்குறாரு.... ஆனா நம்ம தான் திக்ஷி பாப்பா ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே அவருக்கு போன் பண்ணி பேசினோமே.... அப்புறம் ஏன் என் நம்பரை தெரியாதது போல நான் யாருன்னு கேக்குறாரு.." என்று தனக்குள் புலம்பியவளுக்கு ஆறுதலாக ரோஜாவின் கைபேசி இசை பாடியது....

போன் டிஸ்பிலேவில் துர்கா என்ற பெயரை பார்த்ததும் சட்டென்று பச்சை நிற குறியை தொட்டவள்....

" Hello " என்று பொறுமையாக சொன்னாள் ...

" யார் நீங்க... எனக்கு போன் பண்ணிட்டு எதுமே பேசாம லைனை cut பண்ணா என்ன அர்த்தம் " என்று கடுமையான குரலில் துர்வா கேட்டதும்...

" நான்.....
நான் ரோஜா பேசுறேன் "
என்று அவள் தன்னை மீண்டும் அறிமுகப்படுத்தி கொண்டாள்....

" ரோஜானா...??
வெள்ளை ரோஜாவா...?? இல்ல சிகப்பு ரோஜாவா...?? " என்று துர்வா கேட்ட கேள்வியில்... அப்பட்டமாக தெரிந்தது.. அவன் இவளிடம் அதிகப்படியான கோபத்துடன் இருக்கிறான் என்று...

" துர்கா...நான் தான் பேசுறேன்னு உங்களுக்கு தெரியும் தானே... ஏன் தெரிஞ்சிகிட்டே என் மேல இப்படி கோவமா இருக்குற மாதிரி பேசுறீங்க... நான் உங்க வீட்டுக்கு வந்து, உங்க மகக்கூட பழகுறது உங்களுக்கு சங்கடமா இருந்தா சொல்லிடுங்க... இனிமே நான் உங்க வீட்டுக்கு வரல... " என்று தன் அழுகையை அடக்கி கொண்டு ரோஜா சொன்னதும்...

" சரி... இனி நீ அங்க வராத " என்று சொன்ன துர்வா சட்டென்று தன் கைபேசி இணைப்பை துண்டித்தான் ..

இவள் மனதில் அவன் வார்த்தையால் ஏற்பட்ட வலியை... இவள் கண்களில் வழியும் கண்ணீர் துளிகள் வெளிப்படுத்திய நிமிடம்...

" அம்மா " என்று வாசலில் திக்ஷியின் குரல் கேட்டு ரோஜா கண்ணீருடன் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க்க....சற்றும் எதிர்பாராத தருணத்தில் திக்ஷி இவள் அறைக்குள் நுழைந்து கட்டிலின் மேல் ஏறி நின்றவள், ரோஜாவின் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் துடைத்தாள் ...

" இது தான் சாமியோட வீடா... நீங்க என்னை விட்டுட்டு இங்க தான் அடிக்கடி வரிங்களா " என்று திக்ஷி கேக்க...

" ஆமா ஆமா... இது தான் இறைவன் வாழும் இல்லம் " என்று தன் மோகனை நினைவில் கொண்டு சொன்ன கனகாவின் அருகில்.. கைகளை கட்டிக்கொண்டு துர்வா ரோஜாவை பார்த்து சிரித்த முகத்துடன் நின்று இருந்தான்.....

✍️[தன் காதலை சொல்லி தோல்வியுற்றவனை விட ...சொல்லாமல் தோல்வியுற்ற இதயத்துக்கு தான் வலி அதிகம்]...

Tbc
Pls give ur review and suggestions..
🅡︎🅞︎🅙︎🅐︎🌹🌹

Continue Reading

You'll Also Like

Luna By anya jayvyn

Teen Fiction

7.5M 328K 47
A bullied girl meets the popular new student. ***** "Still saying that you're perfectly okay?" Max whispers. I'm surprised to hear that his voice is...
1.4K 112 6
Ellarukume avanga life partner pathi oru dream irukum BT na dream la vandha en life partner ah theditu iruken 2 yrs ah ennoda dream la vara oru face...
8.7K 127 84
(completed)✔️ ✍️இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னால்தள்ளி, அவர்...
83.6K 3K 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக...