💘💘💘என்னவனே....நீ எங்கு இரு...

By sujithavineesh

18.7K 426 117

❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்... More

என்னவன்-01
என்னவன் பகுதி -02
என்னவன் பகுதி-03
என்னவன் பகுதி-04
என்னவன் பகுதி-05
என்னவன் பகுதி-06
என்னவன் பகுதி-07
என்னவன் பகுதி-08
என்னவன் பகுதி-09
என்னவன் பகுதி-10
என்னவன் பகுதி -11
என்னவன் பகுதி -12
என்னவன் பகுதி -13
என்னவன் பகுதி -14
என்னவன் பகுதி -15
என்னவன் பகுதி -16
என்னவன் பகுதி -17
என்னவன் பகுதி-18
என்னவன் பகுதி-19
என்னவன் பகுதி -20
என்னவன் பகுதி -21
என்னவன் பகுதி -22
என்னவன் பகுதி -23
என்னவன் பகுதி -24
என்னவன் பகுதி -25
என்னவன் பகுதி -26
என்னவன் பகுதி -27
என்னவன் பகுதி -28
என்னவன் பகுதி _ 29
என்னவன் பகுதி-30
என்னவன் பகுதி-31
என்னவன் பகுதி-32
என்னவன் பகுதி-33
என்னவன் பகுதி -34
என்னவன் பகுதி-35
என்னவன் பகுதி-36
என்னவன் பகுதி-37
என்னவன் பகுதி-38
என்னவன் பகுதி-39
என்னவன் பகுதி-40
என்னவன் பகுதி-41
என்னவன் பகுதி _42
என்னவன் பகுதி-43
என்னவன் பகுதி -44
என்னவன் பகுதி -45
என்னவன் பகுதி -46
என்னவன் பகுதி -47
என்னவன் பகுதி -48
என்னவன் பகுதி-49
என்னவன் பகுதி -50
என்னவன் பகுதி -51
என்னவன் பகுதி -52
என்னவன் பகுதி -53
என்னவன் பகுதி _54
என்னவன் பகுதி -55
என்னவன் பகுதி -56
என்னவன் பகுதி-57

என்னவன் பகுதி -58

219 10 3
By sujithavineesh

என்னவன் பகுதி -58

நிஷாந்த் மற்றும் அச்சு வின் இரண்டாம் விருந்து முடிந்து வந்த அன்று தான் ஆதி பெங்களூர் செல்லும் விஷயமும்... நிஷாந்த்தின் மெயில் வந்த விஷயமும் கவியின் குடும்பத்தார்க்கு தெரிய வந்தது...

கவியோ சட்டென்று அதிர்ச்சியாக... நம்ம ஷாரிகாவுக்கோ குஷியோ குஷியாகி போனது...

அனைவர் முன்னிலையிலும் அதை ஆதியிடம் கேட்க... அவனும் ஆமா என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான்....

அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களும் மௌனமாக அரங்கேறி அனைவரும் செல்லவும் நேராக தன் அறைக்குள் வந்து ஆதியை அழைத்து அழுது புலம்ப...
ஒரு கட்டத்துக்கு மேல் அவளுடைய அழுகை அவனை வேதனைப்படுத்தவும் தான் செல்லவில்லை என்று சமாதானப்படுத்தினான்...

ஆனால் கவியோ அவனுடைய பதிலை கேட்டு சகிக்க முடியாமல் தன் வேதனையை அடக்கி அவனை பெங்களுர் செல்லுமாறு அனுமதித்தாள்...

அச்சுவின் எக்ஸாம் ஒவ்வொன்றாக நடக்க... நிஷாந்த் பைக்கில் கொண்டு விட்டு அழைத்து வந்து கொண்டிருந்தான்...

இதற்கிடையில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஷாரிகா தன் வேலையை அனைவர் முன்னிலையிலும் கவியை குத்தி நோகடிக்க... பதிலுக்கு சரியாக அச்சுவும் அவள் வாயை அடைத்தாள்...

ஒரு பக்கம் அண்ணன் அச்சு ஆதி போவதை பற்றியும் ஒரு பக்கம் குத்தி நோகடிக்கும் ஷாரிகாவை பற்றியும்
எண்ணி எண்ணி வேதனை கொண்டாள் கவி...

"ஆதியிடம் ஷாரிகா வை பற்றி சொல்லி விடலாம்"என்று ஒரு மனம் எண்ணினாலும் மறுபுறம் "ஊருக்கு போகும் நேரத்தில் வேண்டாம்"என்று மறு மனது கூறியது...

ஏதோ பெயருக்கு சாப்பிட்டு தூங்க முடியாமல் தவித்து போனவளுக்கு அன்றைய தினம் காலையிலே மனதில் உதித்தது"நாளை ஆதி செல்கிறான்.."என்றே...

ஆதியும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பேசிஅவளுக்கு ஆறுதல் அளித்தாலும் அவள் மனதில் இருக்கும் வலி அவனுக்கு தெரியாமல் இல்லை..

அன்றைய பொழுது அங்ஙனமே கடக்கும் தருவாயில் ..

ஆதியிடம் பேசி விட்டு இரவு உணவை முடித்து விட்டு தன் அறைக்குள் வந்த கவிக்கு தீடீரென்று ஆதியின் ஞாபகங்கள் ஒவ்வொன்றாக கண் முன்னே வர...

கண்ணீர் தன் வேலையை காட்டவும் அவசர அவசரமாக ஆதியை அழைத்தாள்...

ஆனால் போன் தன் ரிங்டோனை வெளியிட்டதே தவிர ஆதி எடுக்கவில்லை..

ஏதோ ஒரு வேகத்தில் கவி அச்சுவின் அறைக்குள் செல்ல...

அங்கே கவியை எதிர்பார்க்காத அச்சுவோ அதிர்ச்சியாகி நின்றாள்...

அவளின் கோலமும் அவளுடைய அழுது புலம்பிய முகமும் கண்டவள் அதற்கான காரணம் கேட்க...

தன் அண்ணை காண வேண்டி தான் என்று புரிந்து கொண்டாள்..

சட்டென்று கவியை அவள் அறைக்கு போக சொல்லியவள் நேராக சமையலறைக்கு சென்று சுமித்ரா விடம் தன்னுடைய ஒரு புத்தகம் தன் வீட்டில் இருக்கிறது என்றும் அதை எடுத்து வர கவியை அனுப்புமாறுஎன்ற வாயில் வந்த பொய்யை அவிழ்த்து விட...

அவரும் சரி என்று ஒப்பு கொள்ள...
இதை கவியிடம் சொல்லி ரெடியாக சொன்னாள்...

கவியும் சந்தோஷமாக ரெடியாக...
அடுத்தகட்ட நடவடிக்கையாக நிஷாந்த்திடம் போய் கேட்க...

"சரி"என்று பதில் கூறும் முன் கவி ரெடியாகி வரவும்...

அவனுடைய மிலிட்டரி மூளை ஏதோதோ யோசிக்க தொடங்கியிருந்தது...

பைக்கை ஸ்டார்ட் செய்து வெளியே வரவும்... ஏதேச்சையாக வெளியே வந்த ஷாரிகா அதை காண...

ஓடி வந்து கேட்கும் முன் பைக் கேட்டை தாண்டி விட்டது...

"பெரியம்மா... இந்த நேரத்தில அண்ணாவும் கவியும் எங்க போறாங்க.."என்று ஷாரிகா கேட்க..

"அதுவா... அச்சுவுக்கு நாளைக்கு நடக்க போற ஒரு எக்ஸாமோட புக் அவ வீட்டில இருக்காம்...அதை எடுக்க போறாங்க..."

சட்டென்று திக்கென்றானவள்"அதுக்கு ஏன் கவி போறா... அச்சு போக வேண்டியது தானே..."

"இல்லமா... கல்யாணமாகி அச்சுவுக்கு கொஞ்சம் நாள்ல ஆச்சு..இந்த நேரத்தில அவளை விட வேணாம்னு தான்...."என்று சொல்லி முடிக்க..

"அதுக்கு...அண்ணாவா மட்டும் அனுப்ப வேண்டியது தானே..."என்று விடாமல் பேச...

அருகில் நின்று கொண்டிருந்த அச்சுவுக்கோ கடுப்பாகி போனது...

"ஏன் ஷாரிகா கவி இப்போ போனது உனக்கு ஏதாவது பிரச்சினை உண்டா.. இல்ல நீ போய் எடுத்திட்டு வாற ஐடியா உண்டா..."என்று புள்ளி வைத்து கேட்க..

"ஏய்...இல்லையே...அவ போனதுக்கு எனக்கென்ன வந்திச்சு.."என்று சமாளித்தாள்...

"எங்க வீட்டில எந்த இடத்தில் என்னென்ன திங்ஸ் இருக்குன்னு கவிக்கு எல்லாமே அத்துப்படிமா ..சோ அதனால தான் அவளை எடுக்க சொல்லி அனுப்பி வச்சேன்..."என்று சுமித்ராவை பார்த்து சொல்ல...

"சரிமா...அவ எடுத்திட்டு வந்திரட்டும்..."என்று சொல்லி விட்டு உள்ளே போக...

அச்சுவோ ஷாரிகாவை அனல் பார்வையால் அவளை எரிக்கும் முன் ஒன்றும் அறியாதது போல் சுமித்ரா பின்னாடியே அவளும் ஓடியே போய் விட்டாள்...

நீண்டதொரு மூச்சு விட்டவள் "கடவுளே...இனி அங்கே போய் என்றெல்லாம் நடக்க போகுதோ... தெரியலையே... இந்த கவி மட்டும் நிஷாந்த் கிட்ட இப்போதைக்கு மாட்டாம இருந்தா சரி தான்..."என்று வேண்டி கொண்டே உள்ளே சென்றாள்...

ஆனால் அவள் நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று என்று அவளுக்கு எங்கே தெரிய போகிறது...

நிஷாந்தின் பின்னால் அமர்ந்து இருந்த கவிக்கு ஒரு புறம் சந்தோஷமும் மறு புறம் பயமாய் இருக்க... அவளது இதய துடிப்போ குதிரையின் வேகமெடுத்து துடித்து கொண்டிருந்தது...

தன் அண்ணனின் பின்னால் இருக்கிறோம் என்ற பயமே இல்லாமல்"ஆதி...ஆதி...ஆதி..." என்று அவள் மனது அரட்டி கொண்டே இருந்தது...

இரவு நேரமானதால் தெரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க.. மெதுவாக ஆதியின் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தினான் நிஷாந்த்...

"இறங்கு"என்று சொல்வதற்கு முன் சட்டென்று கீழிறங்கியவள் அவசர அவசரமாக கேட்டை திறந்தாள்...

சட்டென்று ஏதோ நினைவுக்கு வர.. திரும்பி பார்த்தாள் தன் அண்ணனை..

"நீ...போ... நான் வரேன்..."என்று சொல்ல...

"ம்ம்..."என்றவள் ஒரே ஓட்டமும் நடையுமாக விரைந்து வீட்டின் முன் நின்றாள்...

வீடோ பூட்டியிருக்க... காலிங் பெல்லை படபடவென்று அழுத்தி பிடிக்க...

நிஷாந்தும் பைக்கை நிறுத்தி அந்நேரம் அவளருகில் வந்து விட்டான்...

இதயமோ திக் திக் என்று அடித்து கொள்ள...

"பகவானே ஆதி வந்து கதவு திறக்கணும்... அவனை நான் பார்க்கணும்..."என்று வேண்டி கொண்டே நிற்க ..

சட்டென்று கதவு திறந்து கொண்டது...

பார்த்தால் ஆதியின் தாய் அம்பிகை..

இவர்கள் இருவரையும் பார்த்தவர்

"அட.. இந்நேரத்தில இரண்டு பேரும்... வாங்க... உள்ளே..வாங்க..
என்னாச்சு... அச்சு..."என்று ஏதோதோ எண்ணி அவசரமாய் கேட்கும் முன்...

"ஐயோ...இல்ல அத்தை..
அச்சு நல்லா தான் இருக்கா... நாளைக்கு எழுத போற எக்ஸாமோட புக் இங்கே மறந்து வச்சிட்டு வந்திட்டாளாம்...இப்போ தான் ஞாபகம் வந்திச்சாம்...அதனால அவளை இந்த நைட் தனியா விட அம்மாவுக்கு மனசில்லை... அதனால் தான் கவியை எடுத்திட்டு வர சொல்ல... நாங்க இரண்டு பேரும் இதோ..."என்று சொல்லி சிரிக்க...

*ப்பா... நான் ரொம்ப பயந்திட்டேன்.. நைட் இந்த நேரத்தில நீங்க இரண்டு பேரும் வந்தபோ... ஏதோதோ யோசிக்க தோணிருச்சு..."

"அதான் அத்தை நீங்க எதுவும் யோசிக்க கூடாதுன்னு தான் ஒரே மூச்சாக சொல்லி முடிச்சேன்..."

"இந்த அச்சுக்கு கல்யாணமாகியும் ஒரு பொறுப்பே இல்லை.. ஒரு புக்கை கூட ஒழுங்கா ஞாபகத்தில வச்சுக்காம...."

"விடுங்க அத்தை... அவ இன்னும் சின்ன குழந்தை தான்...போக போக அதுவா சரியாகும்..."என்று தன் மனைவியை விட்டு கொடுக்காமல் பேச...

அம்பிகாவுக்கோ மனசெல்லாம் நிறைந்து போனது... தாங்கள் தேடினால் கூட இப்படி ஒரு மருமகன் கிடைக்க மாட்டான் என்று தோன்றுகிறது...

ம்ம்... வாங்க...கவி உள்ளே வாம்மா"என்று அழைக்க..

அவளோ அங்கும் இங்குமாய் கண்களை சுழல விட்டு கொண்டிருந்தாள்...

இருவரும் வந்து சோஃபாவில் உட்கார

"இருங்க... சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வரேன்.
"

"ஐயோ... இல்ல அத்தை... இப்போ தான் சாப்பிட்டிட்டு வந்தோம்...கவி சீக்கிரம் போய் எடுத்திட்டு வா.."

"ம்ம்.."என்று எழுந்தவள்

"ம்மா...ஆ... என்று தொடங்கும் முன் சட்டென்று மறித்து அப்பா...எங்கே காணோம்..."

"இன்னும் வரலமா... கொஞ்சம் லேட் ஆகும்னு இப்போ தான் போன் பண்ணி சொன்னாங்க..."

"அப்போ தனியாவா இருக்கீங்க..."

"ம்ம்.."என்று சிரித்தவர் இனி தனியா இருந்து தானே ஆகணும்... அச்சுவும் இல்லை.. ஆதியும் நாளை கிளம்பிறான்... எல்லாம் பழகிக்க வேண்டியது தான்..."என்று போலியாய் சிரிக்க...

"ஆதி நாளை செல்கிறான்.."சுருக்கென்றானது கவிக்கு

"இப்போ என்ன சொல்ல வருகிறார்..ஆதி வீட்டில் இருக்கானா...இல்லையா..."என்று எண்ணி அங்கேயே நிற்க...

நிஷாந்த்"கவி... சீக்கிரம்...."என்று அவனோ அவசரப்படுத்த....

"அவ ரூம்ல சைட் செல்ஃப் ல தான் எல்லா புக்கும் அடுக்கிக் வச்சேன்.. பார்த்து எடுத்திடுவியா.." என்று அம்பிகா கேட்க

"எடுத்திடுறேன்மா.."என்றவள் மாடி படிக்கட்டுகளில் தாவி ஏறி ஓடினாள்..

நேராக ஆதியின் அறையில் முன் நிற்கவும்...கதவோ பூட்டி கிடந்தது...
அழைக்கலாமா என்று எண்ணும் முன் ஏதேச்சையாக திரும்பி பார்க்க...

நிஷாந்தோ படிக்கட்டுகளில் ஏறி வந்து கொண்டிருந்தான்...

சட்டென்று அச்சுவின் அறைக்குள் சென்றவள் சைட் செல்ஃப் பக்கம் சென்று புக்கை தேடுவது போல் நடித்து கொண்டிருந்தாள்...

"கடவுளே ... நான் இப்போ என்ன பண்ண போறேன்... அண்ணன் வேற வாறனே.."என்று பல்லை கடிக்க....

*என்ன...கவி கிடைச்சுடுச்சா..."என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான் நிஷாந்த்..

"ஆங்...அது..வந்து..
இல்ல அண்ணா... இன்னும் கிடைக்கல..."

"சரி.. நானும் தேடுறேன்... புக்கோட நைம் சொல்லு..."

"இல்லண்ணா... பரவாயில்லை நானே தேடி எடுத்திறேன்... நீ போய் உட்காரு..."

"இல்ல கவி இப்பவே ரொம்ப லேட் ஆயிருச்சு..எப்போ இனி நாம எடுத்திட்டு போய் எப்போ அச்சு படிக்கிறது...சோ... சீக்கிரம்... சொல்லு... புக் நைம் என்ன..."

"ஓஓ.. இவன் ஒருத்தன்..
பொண்டாட்டி தாசன்... நான் இருக்கிற நிலமை தெரியாம..."என்று மனதில் அவனை வசைய..

"சொல்லு..."

"ஆங்.. Pharma chemistry"

"ம்ம்..விலகு... நானும் தேடுறேன்
"என்று அவனும் ஒரு புறமாய் தேடினான்...

அவன் தேடும் இடத்தில் தான் அந்த புத்தகம் இருப்பது அவளுக்கு மேலும் கடுப்பாகி போக..

"அவ்வளவு தான்..
இனி அவ்வளவு தான்... எல்லாம் போச்சு..."என்று நினைத்தவளின்
கண்களில் ஏனோ நீர் நிறைந்தது..

சட்டென்று ஒரு புக்கை கையில் எடுத்து கொண்டவன்

"கவி...இதுவானு பாரு "என்று கேட்க ...

"இல்ல அண்ணா...இதோட பார்ட் தான் வேணும்..."என்று சட்டென்று சொல்லி விட்டாள்...

"ம்ம் சரி நான் பார்க்கிறேன்..."என்று நிஷாந்த் மேலும் தேட...

"ப்ச்ச் ...நானே உளறி தொலைச்சிட்டேனே..."என்று தன்னையே வசைந்தபடி மெதுவாக அறையின் வெளியே பார்க்க...

ஆதியின் அறை பூட்டியே தான் இருந்தது...

"ஒருவேளை வீட்டில் இல்லையோ.. எங்கேயாவது போயிருப்பானோ... ஃபோனை எடுக்காமல் இந்நேரத்தில எங்கே தான் போய் தொலைந்தான்... இண்ணைக்கு அவனை பார்க்க முடியாதா.... நான் ஏமாந்து போயிருவேனா...இவ்வளவு நேரம் நானும் அச்சுவும் சொன்ன பொய்யெல்லாம் வேஸ்ட்டா போயிருமா..."என்று ஒவ்வொருன்றாக எண்ண எண்ண..விழிநீர் துளிகள்...ஆறாக பெருக தயாராக...

"இதுவா பாரு கவி..."என்று கரெக்டா அச்சு சொன்ன புத்தகத்தை அவன் சரியாக எடுக்க..

"ஆங்..அது வந்து...வந்து... இதே போல் தான் இருக்கும்.. அண்ணா..

"ஓஓ.. அப்படியா.. இரு...நெட்ல அடிச்சு பார்க்கிறேன்..."
என்றவன் நெட்டில் அடித்து பார்க்கவும்...

"சரி தான் கவி.. இந்த புக் தான்.."என்று அவளிடம் நீட்ட...

கனத்த இதயத்தோடு வாங்கி கொண்டாள் கவி...

"சரி.. போகலாமா... கவி.."

"ம்ம்.."என்றதும் அவனது செல்போன் சிணுங்கியது..

எடுத்து பார்த்தவன் புதிய நம்பராக இருக்க....

அட்டன் செய்து காதில் பொருத்தி

"ஹலோ..."

"...."

"ஹலோ...கேட்குதா...யாரு..."

"...."

"ஹலோ நான் நிஷாந்த்...கேட்குதா... சொல்லுங்க...கேட்குதா..."

"...."

"இருங்க... இருங்க... ஒரு நிமிஷம்.. இங்கே டவர் பிராப்ளம் னு நினைக்கிறேன்... இருங்க... வெளியே வந்து பேசிறேன்..."என்றவன் அவசர அவசரமாக வெளியே சென்றான்...

கையில் கிடைத்த புத்தகத்தோடு வெளியே வந்தவள் ஆதியின் அறையை பார்க்க..

இன்னமும் அது பூட்டியே கிடக்க..
துக்கம் தொண்டையை அடைத்தது..

"எங்கடா போன நீ..."என்று இதயம் ஏனோ கெஞ்ச...

மேல் மாடி படிகளில் ஏனோ பார்வை போகவும்....

நெஞ்சின் வலி தாங்க முடியாமல்
நெஞ்சோடு சேர்த்து பிடித்த புத்தகங்களில் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து விழுந்தது...

இமைகளை இறுக்கி மூடி கண்ணீரை மாய்க்க எண்ணியவள் மெதுவாக திறக்கவும்....

மாடியின் கடைசி படியில் நின்று கொண்டிருந்தான்..

யாரு ...

நம்ம ஹீரோ தான்... ஆதி...

கவிக்கோ தன் கண்களையே நம்ப முடியவில்லை...

ஆதி யா ‌.. இது ஆதியா...எனக்கு மட்டும் தெரிகிறானோ ‌‌.‌..பிரம்மையா இது... இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தேன்.. என்று ஒவ்வொரு கேள்விகளும் மனதில் வேர் விடும் நேரத்தில்

"கவிஇஇஇஇ..."என்ற அழைப்பில் ஒரே எட்டில் ஓடி வந்தான் ஆதி...

"கவி.. கவி...நீ எங்க இங்கே.. இப்போ... இப்போ தான் உன்னை நினைச்சுக்கிட்டு மாடியில உட்கார்ந்திட்டேன்...
இந்த நேரத்தில போன் பண்ணினா நல்லா இருக்காது னு தான் அந்த நிலா வட்டத்தில உன் முகத்தை பார்த்து அப்படியே உட்கார்ந்திட்டேன்டி... ஆனால்... ஆனால் நீ..நீ... என் முன்னாடி..."என்று சொல்லும் போதே வார்த்தைகள் தழுதழுக்க...

இதுக்கு மேல் முடியாதது போல் அவளை நெஞ்சோடு அணைத்து கொள்ளவும்...

அது வரை ஆதி ஆதி என்று அரற்றி கொண்டிருந்தவள்..அவனை கண்ட பின்பு நிலை மறந்தவளாய் நிற்கவும்... அவனது அணைப்பு அவள் சுயநினைவிற்கு கொண்டு வந்தது...

"தன்னை போல் தான் அவனது மனமும்"என்று எண்ணவும் நெகிழ்ச்சியாக இருக்க...
தானும் அவனை இடையோடு அணைத்து கொண்டாள்....

"கவி... கவி..." என்று ஆதியும்

"ஆதி...ஆதி..." என்று கவியும்

அரற்றி ஆர்பாட்டம் செய்ய....

"எப்படிடி நான் உன்னை விட்டு மூன்று மாசம் காணாம இருக்க போறேன்...என்னால முடியும் னு தோணலடி...இப்போ நினைச்ச உடனே பேச முடியலேன்னு நினைக்கும் போதே அவ்வளவு கஷ்டமா இருந்திச்சு...அப்போ ஒரேயடியா காணாம...எப்படிடி..." என்று அவளை மேலும் இறுக்கமாய் அணைக்க...

*எனக்கும் தான்டா..."

"நான்... நான்... ஒன்று கேட்கவாடி...

"சொல்லுடா...."

*வேணா போகமா இருந்திடவா ...இங்கேயே...ஏதோ ஓர் வேலையை பார்த்திட்டு... உன் கண் முன்னாடி...."

"வேணாம்...வேணாம்டா... அப்படி எதுவும் செய்ய வேணாம்டா... வெறும் மூன்று மாசம் தானே..."என்று அவனை தட்டி ஆசுவாசப்படுத்த..

"மூன்று மாசம் தான்...ஆனா அதுக்கும் மேல ரொம்ப பயமா இருக்குடி....*என்று அவன் பாட்டுக்கு சொல்லி கொண்டே போக...

அதுவரை கேட்டு நின்றவள்..அவனை விலக்கி

"என்ன...பயமா... எதுக்குடா.... எதுக்கு பயம்..."

*இல்ல... இந்த மூன்று மாதத்தில என்ன வேணும்னாலும் நடக்கலாம்ல...நீ...நீ என்ன மறந்திரமாட்டல்லடி..
.வெறுத்திரமாட்டல்லடி...."என்று பழைய ஞாபகங்களை மனதில் வைத்து சிறு குழந்தை போல் அவன் கெஞ்ச....

"என்னடா சொல்ற.... நான் உன்னை மறக்கிறதா...எப்படிடா முடியும்.."

"இல்லடி...அது வந்து..."என்று அவன் ஏதோ சொல்ல வரும் முன்

"நான் உன் பொண்டாட்டி டா...நீ என் புருஷன்னு உனக்கு தெரியாதா...
உன்னை மறந்திட்டு போகவா இந்த நேரத்தில அச்சுகிட்ட போய் நின்று அழுது உன்னை பார்க்க பொய் சொல்லிட்டு வந்தேன்...

என் அண்ணன் கூட வாறான் னு தெரிஞ்சும் உன் முகத்தை ஒரு தடவை பார்க்க மாட்டேனானு தவிச்சிட்டு நின்னேன்...

சொல்லு...உன்னை மறந்திட்டும் வெறுத்திட்டும் போகவாடா

அப்புறம் ஏன்டா இப்படி எல்லாம் பேசிற..."என்று கேள்வி கணைகள் பல தொடுக்கவும்....

வாயடைத்து போனவன் கண்கள் குளமாக...

என்ன சொல்வது என்று தெரியாமல் "கவி....I love you di....I love you so much.... என்று கட்டி கொண்டவன்.. அவள் நெற்றியிலும் கன்னத்திலும் கண்களிலுமாய் முகம் முழுக்க முத்தம் கொடுக்க..

ஆனந்த கண்ணீரில் அதை அத்தனையும் வாங்கி கொண்டாள் கவி..

"இது போதும்டி...இது போதும்..எனக்கு இதுவே போதும்.."என்று அவள் முகத்தை தாங்கி பிடிக்க...

அவளும் அவனது நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டாள்...

"இப்போ சந்தோஷமா...*

"ரொம்ப ரொம்ப சந்தோஷம்டி...*

"இனி அழ மாட்டல்ல..."

"மாட்டேன்..."

"இனி இப்படி பீல் பண்ண மாட்டல்ல..."

"மாட்டேன்..*

"ம்ம்...இனி நான் போகலாமா..."

"ம்ம் ‌."

*நீ விட்டா தான்டா நான் போக முடியும்..."

"நீ விடாமல் வச்சுப்பேன்டி என் நெஞ்சில‌.."

*ம்ம் ‌...நாளை பத்திரமா போயிட்டு வா...

"ம்ம்...நீ வருவியாடி..."

"தெரியலடா... ஆனால் வர வேண்டாம் னு நினைக்கிறேன்..."

"ஏன்டி ‌.."

"வந்தா நானும் அழுது நீயும் அழுது... வேணாம்... சந்தோஷா போயிட்டு வாடா ‌..*

"ம்ம் சரி.."

*ம்ம்...போகவா... அண்ணா கீழே..*

"ம்ம்..*என்று சொல்லவும் ‌..

*இன்னும் எடுக்கலயா கவி ‌.."என்று அம்பிகா கீழே இருந்து கேட்க

சட்டென்று விலகியவர்கள்

*ஆங்...கிடைச்சிடுச்சு மா..."என்று பதில் கொடுத்தவள்..

"போயிட்டு வரேன்..."என்று அவனுக்கு சைகை வழியாக சொல்ல...

"ம்ம்..."என்று தலையசைத்து விடை கொடுத்தான் ஆதி....

மெதுவாக அவள் கையை விடுவித்தவன் கைகளில் முத்தம் கொடுத்து கண்களை சிமிட்ட..

சிரித்து கொண்டே நகர்ந்து படியிறங்கி வந்தாள் கவி...

நிஷாந்த்தோ எங்கிருந்தோ வந்தவனாய் அருகில் வந்தவன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டவன்

"போகலாமா கவி..."என்று கேட்க..

"ம்ம்.. போகலாம் அண்ணா .."என்று சந்தோஷ மிகுதியில் கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள்...

அப்புறம் என்ன..

இரண்டு பேரும் அம்பிகாவிடம் விடை பெற்றவர்கள் பைக்கில் ஏறிஇருக்க... கவி மட்டும் மாடியை பார்க்க...ஆதி கை அசைத்து விடை கொடுத்தான்...

பைக் கேட்டை தாண்டி வெளியே வந்தது...

கவிக்கோ.இதுவரை இருந்த இறுக்கம் ஏனோ வெகுவாக குறைந்திருக்க... தான் அவனுடன் இருந்த அற்புதமான நிமிடங்களை வழி நெடுக அசை போட்டுக் கொண்டே வர...

நிஷாந்த்தின் முகம் தான் ஏனோ ஒளி இழந்து காணப்பட்டது...

நேராக தன் வீட்டின் முன்னே பைக் நிற்கவும் ... அச்சு ஓடி வந்து கேட்டை திறந்தாள்...

பைக்கின் சத்தம் கேட்டு ஷாரிகாவும் வெளியே வர...
மெதுவாக பைக்கை விட்டு இறங்கினாள் கவி...

அவளருகில் வந்தாள்அச்சு..

"என்னடி.. ஆயிரம் வால்ட் பல்ப் போல மின்னிற...போன காரியம் சந்தோஷம் போல...."

"பார்த்தா தெரியலையாடி..."என்று கண்களை சிமிட்ட...

ஷாரிகாவுக்கோ இவர்களின் சிரிப்பை எரிச்சலை கிளப்ப...

"நீ எதுக்கு போன கவி.. அதான் அண்ணா போய் எடுத்திட்டு வந்திருவானே... அந்த புக்கை.. ஏன் அண்ணா நீ மட்டும் போக வேண்டியது தானே...கவிக்கும் நாளைக்கு உள்ள எக்ஸாம்க்கு படிக்க வேணாமா..."என்று கேட்க..

இவளின் பேச்சால் கடுப்பான இருவரும் முறைத்துபடி நிற்க..

கவியோ"எனக்கு நாளைக்கு எக்ஸாம் இல்லை ஷாரி... நான் போனால் தான் என்ன...என்றைக்கா இருந்தாலும் நான் அங்கே போக வேண்டியது தானே..."குத்து வச்சு பேச..

"என்ன..."என்று சட்டென்று நிஷாந்த் கேட்டே விட்டான்...

"ஆங்..அது வந்து... வந்து நைட்டானாலும் பகல்லா இருந்தாலும் அங்கே போறதுக்கு என்ன பயம்...அதை அதை தான் சொன்னேன் அண்ணா..."என்று வாயில் வந்த பொய்யை அவிழ்த்து விட...

அச்சுவோ யாருமறியா வண்ணம் ஒரு கிள்ளு ஒன்று வைத்து கொடுத்தாள்...

அப்போ தான் வெளியே வந்த சுமித்ரா"இங்கே என்ன எல்லாரும் வெளியே நிற்கிறீங்க...கவி புக் எடுத்திட்டியா..."

"ஆங்..எடுத்திட்டேன்மா...இதோ அச்சு.."என்று புக்கை கையில் கொடுக்க...

"சரி... உள்ளே வாங்க.. ரொம்ப நேரமாயிருச்சு..."

"ம்ம்.."என்றவர்கள் உள்ளே ஏறி வந்தார்கள்...

கவி நல்ல பிள்ளையாக தன் அறைக்குள் வரவும்... அச்சுவும் புக்கை சோபாவில் விட்டு விட்டு தன் அறைக்கு சென்றாள்..

நிஷாந்தும் தண்ணீர் குடிப்பதற்காக சமையலறையில் செல்லவும் ... ஷாரிகா மட்டும் ஏதோ யோசனையுடன் அங்கே நின்று கொண்டிருந்தாள்...

கொஞ்சம் நேரத்தில் அங்கே நிஷாந்த் வரவும் ஷாரிகா அங்கேயே நிற்பதை கண்டு கொண்டான்..

"ஷாரி... அங்கே என்ன பண்ற..."

"ஆங்.. இல்லண்ணா... சும்மா தான்...

"அப்புறம் என்ன.. உள்ளே வா...தூங்க வேணாமா..."

*ம்ம்.தூங்கணும்.."

*அப்புறம் என்ன யோசனை..."

"அது வந்து..."

"வந்து... சொல்லு ஷாரி.. என்ன..ஏதோ சொல்ல வாற மாதிரி இருக்கு..."

"ஆமா அண்ணா...ஆனா..."

"ஆனா...சொல்லு.. என்ன விஷயம்..."

"அது வந்து..."

"என்ன.. சித்தியை பார்க்கணும் போல இருக்கா... வீட்டுக்கு போகணுமா..."

"ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..."

"அப்புறம் உடம்பு ஏதாவது சரியில்லையா...*

"இல்லண்ணா..."

"அப்புறம்.. என்ன தான் விஷயம் சொல்லு..
சொன்னா தானே தெரியும்..."

"ம்ம்..என்னை பற்றி எதுவும் இல்லை அண்ணா ‌.."

"அப்புறம்.."

"அது வந்து...கவி....இஇஇ ‌.."என்று இழுக்க...

"என்ன.... கவியா...கவிக்கு என்ன.."

"இல்லண்ணா நான் சொல்றதை கேட்டு நீ ஷாக் ஆக கூடாது..."

"ஷாரி நீ சுற்றி வளைக்காம விஷயத்தை சொல்றியா..."என்று கட்டளையாக நிஷாந்த் கேட்க..

"எல்லாமே சொல்லிடலாமா..."என்று யோசித்தவள் நிதானமாக..

"அண்ணா அது வந்து..வந்து நம்ம கவி இருக்கால..."

"ம்ம்.."என்று அவன் முறைக்க ‌...

"ஆங் சொல்றேன் சொல்றேன்... நம்ம கவி ரொம்ப சின்ன குழந்தை அண்ணா.. அவளுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு தெரியாது அண்ணா...

"ஷாரி இப்போ என்ன சொல்ற.."

"இல்லண்ணா கொஞ்சம் நாளா கவி கவியா இல்லை அண்ணா...தனியா யார்கூடயோ பேசிற... அதுவும் மறைச்சு மறைச்சு... அடிக்கடி மாடிக்கு ஓடுற..தனியா சிரிக்கிறா... நம்ம ஏதாவது சொல்ல போனால் எரிஞ்சு எரிஞ்சு விழுறா..."அண்ணா..

"...."

"எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு அண்ணா... என் வாழ்க்கை மாதிரி அவளும் யாரையும் நம்பி ஏமாந்திர கூடாது அண்ணா.. அதான் அவளுக்கு புரியும் படி சொன்னாலும் அவ ஏத்துக்க மாட்டேங்கிற... அவளோட நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது அவ யாரையோ லவ்.
பண்றானு தோணுது... உனக்கு தெரியாதது எதுவும் இல்ல.. நீ அவகிட்ட பேசி புரிய வை அண்ணா... என்னை மாதிரி நிலமை கவிக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொண்ணுக்கும் வர கூடாது அண்ணா.."என்று சொல்லியவள் போலியாக ஒரு ஒரு சொட்டு கண்ணீரை சிந்தி வாயை பொத்தி விட்டு ஓடியே விட்டாள்...

நிஷாந்த் ஒரு நிமிடம் அப்படியே நின்றவன்... ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் அறை நோக்கி சென்றான்...

அறைக்குள் வந்த கவிக்கு சற்று முன் நடந்த அனைத்தும் ஒரு கனவு போல இருந்தது...

அடுக்கடுக்கான பொய்... அவசர அவசரமாக சென்றது... கண்ணீர் மழை... வானவில் மாதிரி ஆதியின் வரவு ‌.அவனின் காதலும் அக்கரையும்...என ஒவ்வொன்றாக கண் முன்னே வந்து கொண்டிருந்தது....

நாளை செல்கிறான் என்பதை தாண்டி அவனின் இதயம் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கும் போது மற்ற எதுவும் பெரிதாக தெரியவில்லை...

அவனை எண்ணி எண்ணி ஜன்னலில் தெரிந்த அந்த நிலாவில் ஆதியின் முகம் கண்டு நிறைவான மனநிலையில் கவி இருந்தாள்...

அவளுக்கு எங்கே தெரிய போகிறது... அவளது அறையின் அடுத்த அறையில் நடக்கவிருக்கும் பூகம்பம் எதுவும் தெரியாமல்...

எதை எதையோ பேசி விட்டு போன ஷாரிகா சென்றதும் ஏதோ எண்ணியவனாய் நேராக தன் அறைக்கு சென்றான் நிஷாந்த...

அச்சு தன் மொபைலில் ஏதோ நோண்டி கொண்டிருக்க...

அவளருகில் வந்தவன்..

"என்ன அச்சு... நாளைக்கு எக்ஸாம் நிறைய படிக்கணும் புக் வேற இல்லை.. உடனே எடுக்கணும் படிக்கணும்னு சொன்ன... இப்போ என்னடான்னா படிக்காமல் மொபைல் பார்த்திட்டு இருக்கிற ‌."

"ஆங்... படிக்கணும்... படிக்கணும்டா.." என்று மொபைலை கீழே வைத்து புத்தகங்களை கையில் எடுத்தாள்..

"ம்ம்... ஆமா கவி கொண்டு வந்த புக் எங்கே அச்சு...""

"ஆங்..."என்று அங்கும் இங்குமாய் தேட...

"இங்கே இருக்கு அச்சு... கீழே சோபாவில கிடந்திச்சு.."

"ஆங்... அது வந்து... வந்து..அதை தான் தேடிட்டு இருந்தேன்டா இவ்வளவு நேரம்..."என்று மழுப்ப..

"ஓஓ... கவி கொண்டு கையில் தந்த புக் கீழே சோபாவில கிடக்கு... நீ அதை இங்கே தேடுற ... சூப்பர் அச்சு..."

"இல்லடா ஏதோ ஓர் ஞாபகத்தில... நான்.. நான்..."

"ஆமாமா.. ரொம்ப முக்கியமான புக் குனு அவசரமா எடுத்திட்டு வர சொன்ன புக்கை சட்டுன்னு எங்கே வச்சோம் னு மறந்திருச்சில இல்ல அச்சு..."

"இல்லடா... அது வந்து... ஏன் இப்படி ஒரு மாதிரி குதர்க்கமாவே கேள்வி கேட்கிற..."

"ஓஓ...இது குதர்க்கமான கேள்வியா... சரி நேராகவே கேள்வி கேட்கிறேன்... சொல்லு என்று முதல் என்கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்ச அச்சு.."

சட்டென்று திக்கானவள்"என்னது பொய்யா.... என்ன சொல்றடா நிஷாந்த்..."

"சொல்லுடி... என்று முதல் என்கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சனு கேட்கிறேன்..."

"ஓஓ அந்த ஷாரிகா ஏதாவது சொல்லி தந்தாளா.. அவளுக்கு என்ன தான் பிரச்சினை... தேவையில்லாம எதுக்கு மற்றவங்க விஷயத்தில தலையிடுறா..."

"ஓஓ... இப்போ எதுக்கு ஷாரிகாவை இழுக்கிற..."

"அவ தானே இல்லாத்தது பொல்லாததையும் சொல்லி தந்தா... நீங்க இரண்டு பேரும் கீழே நின்னு பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன்..."

"ஓஓ இது வேற கவனிச்சியா.. இல்ல இதுக்கும் அவளுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...

"என்னடா இது இவன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறான்...ஷாரிகாவானு கேட்டதுக்கு அதுவும் இல்லேண்ணுல சொல்றான்.. அப்புறம் என்ன பொய்... பகவானே ‌.." என்று மனதில் மன்றாடியவள்...

கொஞ்சம் போலியான சிரிப்புடன்
*என்னடா இது... நான் எதுக்குடா உன்கிட்ட பொய் சொல்ல போறேன்... சொல்லு..."

"அப்படியா... நீ என்கிட்ட பொய் சொன்னதே இல்லையா...*

"இல்லடா..."

"திரும்ப திரும்ப பொய் சொல்லாதே அச்சு... எனக்கு நல்லாவே கோபம் வரும்..."

*இல்லடா நான் எந்த ஒரு பொய்யும் சொல்லல..."

"அப்படியா... நிஜம் தானே..."

"ஆமா.."

"உண்மை தானே.."

"ஆமா..."

"அப்போ கொஞ்சம் முன்னாடி முக்கியமான புக் எடுக்கணும் கவி கூட வருவா...இப்பவே வேணும்னு சொல்லி அம்மாவையும் என்னையும் ஏமாத்தி என்கூட அனுப்பி வச்சு உங்க அண்ணன் அதாவது ஆதியை பார்க்க கவியை அனுப்பி வைச்சது யாரு அச்சு..."என்று பொட்டில் அடித்தாற் போல் கேள்வி கேட்க...

இடி வந்து தலையில் விழுந்தது போல் சற்றும் அசைவின்றி அப்படியே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள் அச்சு...

தொடரும்...



Continue Reading

You'll Also Like

201K 5.3K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
16.9K 1.6K 41
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
52.3K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...