🌈என் தூரிகா நீயடா 🌈

By LEESAKCHERRY143

1.3K 129 59

Descrition படிச்சா defnition கிடைக்காது so stry உள்ள வந்து வாசித்து நேசியுங்கள் 💞 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 11

பாகம் 10

95 10 4
By LEESAKCHERRY143

🌈 என் தூரிகா நீயடா 🌈

part 10 ...

அன்று எதற்கு நீ வந்தாய். எதற்கு அதை படித்தாய், அப்படி அதில் என்ன படித்தாய்.. ஏன் என்னை விட்டு சென்றாய்... என பல பதில் இல்லா கேள்விகளை தன்னுள் கேட்டுக்கொள்ள....

பைத்தியமாடி நீ என  அவர் மனம் நினைத்தது...

அவள் அழுகை ,,அவள் சிரிப்பு ,,அவள் கோபம் அவள் வீம்பு ,,அவள் குறும்பு,, என்ன விட்டுப் போகாதன்னு ஒரு நாள் அவள் தன்னை கட்டிக்கொண்டு அழுத அந்த அருகாமை என மொத்தத்திற்கும் அவர் ஆண்மை ஏங்கியது.

அவளது வாசம் அவரை சுற்றியே இருப்பதாக உணர்ந்தார் கதிர் அது வெறும் பிரம்மை என நினைத்திருந்தவருக்கு அவளது குரல் கேட்டது.

கதிர்... என அவள் தன் பின்னால் நிற்பதை பார்த்ததும் பகல் பறந்தோடி மாலை வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்.

அவரால் தன் உள்ளிருந்த நினைவுகளை தாங்கி அப்போது அவள் முகத்தைப் பார்த்து எதுவும் பேச முடியவில்லை.

அவள் முகம் பார்க்காமல் சற்று தள்ளி அமர்ந்தார்.

எப்போ வந்தீங்க கதிர்...

இப்போதான் என தடுமாறினார்..

இங்க எவ்வளவு நாள் இருப்பீங்க என்றால்...

கிளம்பி இருக்கணும் உன்ன பாக்கணும்னு தான் இருந்தேன் என்றார் உண்மையை மறைக்காமல்.

அப்படியா... என்ற அவளிடம்,

ஆமா... நீ இங்க வருவன்னு தான் வெயிட் பண்ணேன் என்றார்.

கதிர்... நல்லவேளை... நான் இன்னைக்கு வர வேணாம்னு யோசிச்சேன் லைட்டா உடம்பு சரியில்லை என்றால்.

என்னாச்சு எப்போதும் அவள் இப்படி சொன்னால் அவரிடம் இருக்கும் பதற்றம் இல்லாமல்.

ஃபீவர் வர மாதிரி இருக்கு...

எதுவும் யோசிக்காமல் அவள் கழுத்தை தொட்டுப் பார்த்து நார்மலா தான் இருக்கு என்றார்.

அதைத்தொடர்ந்து பசிக்குது சாப்பிடுவோமா என அவள் கூறியதும்...

ம்ம்... போலாம்

பானி பூரி சாப்பிடுவோமா என்றால் முல்லை.

பசிக்கு மேடம் பானிபூரி தான் சாப்பிடுவீங்களோ என கேட்டு குரலை அப்படியே உள்வாங்கி விட...

அதைப் புரிந்த முல்லை அவர் அதில் தடுமாறத் தேவையில்லை என்பதை தெரிவிக்க,

ஏங்க pls போலாமா என்றால்...

கதிரின் கண்கள் அவள் கண்களை நேராக சந்தித்தது.

அவள் அதை எதிர் கொள்ள முடியாது குனிந்து கொண்டாள்.

wanna see your man... என்றார் கதிர்...

முழித்த அவளிடம்...

பாக்க முடியுமா? என்றார் கதிர்.

பாக்கலாம்... ங்க.. என்றால்

எப்போ?? என்றதுக்கு

நாளைக்கு மார்னிங் வரிங்களா... அவன் ஆபீஸ்க்கு போறதுக்கு முன்ன???

you stay together? என்றவருக்கு ஆம் என பதில் அளித்தால் சரி நாளைக்கு வரீங்களா என்றதும்,

sure! என எந்த உணர்வும் இன்றி கூறினார்...

but ... அவன ஏன் பாக்கணும்னு தோணுது??? என்றாள்..

என்னால சமாளிக்க முடியாத ஒருத்தியை வைத்து சமாளிக்கிறானே அதான் என்றார் தன்னுள் இருந்த கவலைகள் எல்லாம் புதைத்து.

என்ன??? என்ன முறைத்தாள்

இதுவெல்லாம் பொய் என அவள் கூறி அவரை தோளோடு அணைத்துக் கொண்டு முத்தமிட வேண்டும் என்ற உணர்வு அவரை இம்சித்தது.

தன்னை அவள் அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என,, என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என நினைத்த அவருக்கு அவளிடம் மொத்தமாய் காதலில் தான் விழுந்து கிடப்பதை அந்த நொடி உணர்த்தியது.

இருவரும் பேசிக்கொண்டே, தங்கள் வாகனத்தை அடைந்தனர்.

அவளிடம் தற்போதைய தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு காலை வருவதாக கூறி விடை பெற்று சென்றார்.

எப்போது விடியும் என காத்திருந்தது.. தன் முதல் வேலையாக அவள் தங்கி இருக்கும் பிளாட்டின் முன் அவர்.

முல்லையின் பேச்சுச் சத்தம் உள்ளே கேட்டுக் கொண்டிருந்தது.

உள்ளே சென்றார்.

அவரைப் பார்த்ததும் கிச்சனில் ஏதோ வேலையாய் இருந்தவள் ஓடிவந்து வரவேற்றாள்.

உக்காருங்க கதிர் வந்துடுறேன் என மீண்டும் கிச்சனுக்கு புகுந்து கொண்டாள்.

அந்த இடத்தை சுற்றிப் பார்த்தார்.. அழகா பராமரிக்கப்பட்டு ,,அங்கங்கே motivational quotes கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்திருந்தால் முல்லை.

அதை பார்த்துக்கொண்டே இருக்கும் பொழுது, டைனிங் டேபிள் கவனித்தார். இரண்டு கப்பில் இருந்த காப்பி சூடாக இருக்கிறது என்பதை நமக்கு தெரியப்படுத்தும் விதமாக ஆவியை பரப்பிக் கொண்டிருந்தது.

அவள் வெளிவந்து கதிர் இங்க வாங்க என டைனிங் டேபிளுக்கு வரச் சொல்லி, காபியை கொடுத்தாள் பின் அவளும் அவர் அருகில் அமர்ந்து கொள்ள அங்கே இருந்த காபியை எடுத்து பருகினாள்

நீங்க வரதா சொல்லி இருந்தேன்.. ஆனா ஏதோ வேலையா அவன் இன்னிக்கி சீக்கிரமா போயிட்டான். இங்க இல்ல என்றால்

ம்ம்... என்றார் கதிர்

அந்த காபி யாருக்கு அப்போ என்றார் எதார்த்தமாய்.

அது அது...எனக்குத்தான் என்றால் அவள் பதட்டமாய்

அதை கவனித்தவர் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்...

சரி எப்போ வருவாரு என்றார் கதிர்.

நாளைக்கு என்றால்

sure? என்றதும்

கண்டிப்பா... sorry உங்கள அலைய வைக்கிறேன் என்றால்.

that's not a problem... என்றார் கதிர்

நீ சாப்பிடல என்றதும் நான் ஆபீஸ்ல போயிட்டு தான் சாப்பிடுவேன்.

சரி.. அப்போ கிளம்புறேன் நாளைக்கு கண்டிப்பா இருப்பார் இல்ல என்றதும்

ம்ம்... என தலையசைத்தாள்.

அவர் அங்கிருந்து கிளம்பி மீண்டும் அந்தப் பார்க்கிலேயே சென்று அமர்ந்தார்.

முல்லையின் யோசனைகளில் மீண்டும் அவர் மூழ்க,

ஒரு குரல் கேட்டது. வயதானவர்.

அவர் திரும்பவே, தம்பி நேத்து இதே பார்க்ல உங்க கூட இருந்த பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சவங்களா? என்றார்.

ஆமா. சொல்லுங்க என்றார் கதிர் நிதானமாய்.

உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா என்றார் அவர்.

என்ன சொல்லப் போகிறார்.. என தெரியாது ஆனால் ஏதோ விவரம் இருக்கு என புரிந்தது. உக்காருங்க என தன் அருகில் இடத்தை கொடுத்தார்.

அந்தப் பொண்ணு டெய்லி இங்க வருவா. பாப்பேன்... என்று மேலே சொல்ல தயங்க,

சொல்லுங்க... என்றார் கதிர் அவரிடம் இருந்து விஷயத்தை வாங்கும் விதமாக.

இல்ல தம்பி காதுல எதையோ மாட்டிட்டு பேசிட்டே இருப்பா... என்றார் அவர்.

போன் பேசி இருப்பா என்றார் கதிர்.

அப்படித்தான் தம்பி நானும் நெனச்சேன். ஆனா ஒரு நாள் என் பேரன் அவ காதல மாட்டுறத பாத்துட்டு அக்கா இது ஆன்லையே இல்ல, ஆன் பண்ணுங்கன்னு சொன்னான்.

அவன் சொன்னதும் அவ பதட்டமா எந்திரிச்சு போயிட்டா அன்னைக்கு என்றதும்..

கதிர் குழப்பமாய் இல்லை என்பதை போல் தலையசைத்தார்.

அவ அவளுக்குள்ளையே அதாவது அவகிட்டயே பேசிக்கிறாளோனு எனக்கு தோணுச்சு... என அந்தப் பெரியவர் கூறியதும்

என்ன சொல்றீங்க என்றார் முன் இருந்த நிதானம் இல்லாதவராய்.

ஆமாங்க... அவ கூட யாரும் வந்தா இதை சொல்லலாமுன்னு நினைப்பேன். ஆனா யாருமே வர மாட்டாங்க. நேத்து உங்கள பார்த்தேன் ஆனா இது தேவையான யோசிச்சு விட்டுட்டேன். இன்னைக்கு திரும்ப உங்கள பார்த்ததும் எனக்கு மனசு கேட்கல... கொஞ்சம் என்னன்னு பாத்துக்கோங்க என கூறி சென்றார்.

கதிருக்கு எதுவும் புரியவில்லை. அவர் கூறியது பயத்தை ஏற்படுத்தியது. தனியா பேசுகிறாளா,,அதில் அவளுக்கு என்ன தேவை இருக்கிறது,, ஆனா இதுல எப்படி பொய்யும் கூற இந்த முதியவருக்கும் என்ன தேவை இருக்கிறது என குழம்பினார்.

குழப்பம் அடுத்த நாள்  அவள் வீடு செல்லும் வரை முடிந்த பாடில்லை.

உள்ளே சென்றதும், அவளை அவர் அழைக்கவில்லை. அங்கே அந்த மேஜையில் இரண்டு காபி கப்புகள் காப்பியுடன் இருந்தன.

நேற்றும் இப்படியே இருந்தது அவர் நினைவிற்கு வர

நேற்றும் அவன் முன்னரே சென்றுவிட்டான் எனக் கூறினாள். இந்த இரண்டாவது காபி யாருக்கு என கேட்டதில் நேற்று அவளிடத்தில் இருந்த தடுமாற்றம் அவர் நினைவிற்கு வந்தது.

அதோடு சேர்ந்து அந்த முதியவர் கூறியதும் நினைவில் வர.. முல்லையும் அவரை கண்டுகொண்டு முன் வந்தாள்.

எதையோ கேட்டால்... அவருக்கு அங்கே கவனம் இல்லை.

ம்ம்.. என எதுவும் தெரியாமலேயே தலையசைத்தார் பெரும்பாலும் ஆம் என்ற பதில் கொண்ட கேள்வியை கேட்டிருப்பாள் என நம்பி.

அவளை அடுத்து பேச விடாமல், காப்பி ஆறுது பாரு... சீக்கிரம் அவர வந்து குடிக்க சொல்லு என்றார் அவளை கூர்மையாக கவனித்து.

இன்று அவளிடம் பதட்டம் இல்லை... கதிர் இது உங்களுக்குத்தான் இந்தாங்க என எடுத்து தந்தாள்.

is he there?  என்றார் கதிர்.

கதிர் இனிக்கும் அவன் காலையிலேயே போயிட்டான். அவனுக்கு உங்கள பாக்குறதுல இன்ட்ரஸ்ட் இல்லன்னு நினைக்கிறேன்.indirect ah அப்படித்தான் பண்றான். he knows our story அதனால கூட இருக்கலாம் என்றால்.

அவள் பொய் பேசவில்லை என்பதை காட்ட மிக சாதாரணமாக தெளிவாக பேச வேண்டும் என மெனக்கெட்டு பேசுகிறாள் என்பதை மட்டும் அவர் புரிந்தார்.

அங்கு இருக்கும் பொய் என்னவாக இருக்கும் என யோசித்தார்.

that's ok. நீ எப்போ ஆபிஸ் போற என்றதும் இந்தா கிளம்பிட்டேன் என எழுந்தால் முல்லை.

அவள் வீட்டில் இருந்து வெளிவர அவரும் வெளிவந்தார்.

அந்த நாள் கதிருக்கு தூக்கம் இல்லை.

எதையோ முடிவெடுத்தவராய் அடுத்த நாள் காலை அவள் வீடு சென்றார்.

கதவு பூட்டி இருக்கவே அங்கு காத்திருந்தார் அவளிடம் சொல்லாமல், மறைவாக.

அவள் எதையோ வாங்க வெளிவந்த நேரத்தை பயன்படுத்தி அவளுக்கு தெரியாமல் வீட்டினில் நுழைந்து மறைந்து கொண்டார்.

அவர் மனம் படபடத்தது.. தான் செய்வது சரியா என ஒரு பக்கம் யோசித்தாலும், இதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதால் அதை பெரிதும் யோசிக்காமல் அவளை, அவளின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொருட்டு காத்திருந்தார்.

அவள் தனியாக பேசினாள் என  நினைத்தாலே கதிருக்கு மனம் எல்லாம் கலங்கியது இருந்தாலும் அப்படி எல்லாம் நடக்காது என நினைத்துக் கொண்டார்.

அவர் ஒரு அறையில் நுழைந்து கொள்ள ..அங்கிருந்து பார்த்தால் ஹாலில் நடப்பதை காண முடிந்தது. அவள் எப்படியும் கிச்சனில் வேலை செய்ய வேண்டும் அதனால் அறைக்கு வரமாட்டாள் என்ற தைரியத்தில் அங்கே மறைந்து கொண்டார்.

அவள் கையில் ஏதோ காய்கறிகளுடன் உள்ளே நுழைந்து கதவை பூட்டி கொண்டாள்.
வாங்கி வந்ததை மேலே வைத்து கிச்சனிற்குள் நுழைந்து கொள்ள அவள் சாதாரணமாய் தான் இருக்கிறாள் என கதிருக்கு சற்று ஆறுதல் தர.. ஆனாலும் அந்த எண்ணத்திற்கு வர இன்னும் நேரம் இருக்கிறது என அவர் உள் மனம் அவருக்கு உரைத்தது.

முல்லை கையில் இரண்டு காபி கப்களுடன் டைனிங் டேபிள் நோக்கி நடந்தால், கதிருக்கு தான் நெஞ்சம் படபடத்தது இருந்தும் அவளுக்கே, இரண்டும் இருக்கும் என தன்னைத்தானே சமாதானப்படுத்த முயற்சித்தார்.

இரண்டு கப்பையும் மேலே வைத்து அமர்ந்து கொண்டாள்

தன் நாற்காலியை தன் அருகில் இருக்கும் நாற்காலியின் திசை நோக்கி நகர்த்தி அமர்ந்து கொள்ள கதிருக்கு தான் அவரது நம்பிக்கை எல்லாம் சிதரத் தொடங்கியது.

அவர்.. அவளை விட்டு பார்வையை எடுக்காமல் அவள் செயல்களை உற்று நோக்கினார்

இரண்டு கப்புகளிலும் இருந்த காபியை அவளே எடுத்து குடித்துக் கொண்டு. எதிரில் ஒருவருடன் உரையாடுவது போலவே சிரித்தும் ஆர்வமாய் கேட்டும் பதில் அளித்தும் புன்னகைத்து கொண்டிருந்தாள்.

உண்மையில் அவள் வாழ்க்கையில் வேறு ஒருவர் இருந்திருந்தால் கூட ,அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற நிம்மதி மட்டுமாவது கதிருக்கு இருந்திருக்கும். வருடங்கள் பல கடந்து அவளைப் பார்க்க அவள் நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதை பார்த்ததும் வந்த சந்தோசம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போனது.

கதிருக்கு இப்பொழுது அவர் என்ன செய்ய வேண்டும் என்பது முற்றிலும் நினைவிழந்து இருந்தது .அவளை தேட முயற்சித்திருக்க வேண்டும் அவள் எனக்கு நீ வேணான்னு பைத்தியக்காரத்தனமாய் பேசியபோதே கன்னத்தில் அறைந்து அவளுக்கு நான் அவளை விட்டு எங்கேயும் போவதா இல்லை என புரிய வைத்திருக்க வேண்டும் என்று அவர் மனம் கலங்கியது

அவளின் நிலை அறிந்தால் தான் சரி செய்ய முடியும் என யோசித்து வெகு நேரம் கடத்தாமல் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு அவள் செய்கைகளை மீண்டும் கவனிக்க தொடங்கினார்

அவள் அங்கே அவளின் பேச்சுக்களையே தொடர்ந்து கொண்டிருந்தாள்...

என்ன பேசுகிறாள் என கேட்க முயன்றும் பயனில்லை. அவள் மிகவும் அமைதியாக பேசிக் கொண்டிருந்தாள். இவள் பேசுவதுமாய் எதிரில் இருப்பவர் கவனிப்பதுமாய் பின்பு அவர் பேசுவதுமாய் அதை இவள் கவனிப்பதுமாய் சிரிப்பு முறைப்பு என அங்கே கதிரின் கதறலையே அதிகரித்துக் கொண்டிருந்தாள்...

சற்று நேரம் சென்று கிச்சனிலிருந்து வெளிவந்து அவள் அலுவலகத்திற்கு புறப்பட

செல்லும் முன் வீட்டை நோக்கி திரும்பி கையேசைத்து சென்று வருவதாக பாவனை செய்து கிளம்பினாள்..

சற்று நேரம் பின் கதிர் வெளிவர அவளின் செய்கைகளை நினைவு வந்து கொண்டே இருந்தது .அவளை மனநல மருத்துவரிடம் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்தாலும், அவள் ஒப்புக் கொள்ள வேண்டும் .மாட்டாள் அவள் பிடிவாதத்தை அவர் அறிந்ததே என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார்

சட்டென்று அவரின் ஒரு பெண் தோழி நினைவு வர அவரை அழைத்தார்...

Hyy Nithi ... here kathir அவர் நினைப்பு முழுவதும் முல்லைவே சுற்றி இருந்தது

என்னடா... ஒரு மாதிரி இருக்க என்றார்

free ya இருக்கியா என்றார் கதிர்.

என்னடா இவ்வளவு காலையில் கால் பண்ணிட்டு ப்ரீயா என்கிற.. உங்க அளவுக்கு இல்ல நாளும் நாங்களும் பிஸியான டாக்டர் தான் டா என்று தன் நண்பனிடம் பேச்சை தொடர்ந்தார்...

சரி.. உன் வேலை எல்லாம் ஒரு half an hour  தள்ளிவை... உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் அதே நட்பின் உரிமையில்

சொல்லு கதிர் என்றால்...

தனியா ஒரு ஆள் பேசுவதற்கு என்னென்ன காரணம் இருக்கலாம் என்றார்

நிறைய இருக்கு.that depends டா என்றால்

நான் ஒரு கேச ஆ explain பண்றேன் .அது எதனால, எப்படி சரி பண்றதுன்னு தெரிஞ்சுக்கணும் என்றார்.

சரி சொல்லு என்றதும்..

அனைத்தையும் கூறி முடித்தார்..

அமைதியாக கேட்ட தோழி...so she got separated from her parents and started living alone... right? என்றார்

ம்ம்....

she has been going through any relationship stress? என கேட்க

அவரால் எதுவும் பேச முடியவில்லை.

கதிர் என அவள் அழைக்க..

அவ வீட்டை விட்டு வந்ததுக்கு அதுதான் காரணம் என்றார்.. அவரது வலியினை மறைத்து

okkk... இப்போ என்னால புரிஞ்சுக்க முடியுது..

well , Reality அவங்களுக்கு பொய்யாகும்போது அவங்களுக்கு வேணும்கிற உலகத்தை அவங்களை உருவாக்கி அதுல வாழ ஆரம்பிக்கிறது.. உண்மையா ஏமாற்றம் வரப்போ பொய்யான உலகத்துல அந்த ஏமாற்றத்தை ஈடுகெட்ட பாப்பாங்க கொஞ்ச நாள்ல அது பொய்யின்னு அவங்களே மறந்து போய் அதுவே நிஜம்னு வாழ ஆரம்பிச்சிடுவாங்க. நீ சொல்ற அந்த பொண்ணு இந்த பிரச்சினையில் தான் இருக்கும் ..ஆனா அத நம்ம நேர்ல பார்த்தா தான் எந்த அளவுக்குனு யோசிக்க முடியும் என்றால்.

nithi it's curable right என்றார் இப்பொழுது அவரது கண்ணீர் நீர் நிறைய...

why not... கண்டிப்பா முடியும். ஆனா.. அது அவங்க கையில தான் இருக்கு ,அந்த இமேஜினரி பர்சன விட உண்மையா இருக்க ஒரு ஆள் அவங்க வாழ்க்கைக்குள்ள வந்தா அவங்கள சந்தோஷமா மாத்திட்டா இது தானாவே சரியாகிவிடும் என முடித்தார்...

ம்ம் என்றார் கதிர் எதையோ உள்ளே யோசித்து...

சரி யாருடா அந்த பொண்ணு என அவள் கேட்க

சொல்றேன்... நான் அப்புறம் கால் பண்றேன் என அழைப்பை துண்டித்தார்

முல்லையை எதிர்பார்த்து காத்திருக்க நேரம் சிறிது சிறிதாக சென்றது

அவர் எதிர்பார்த்ததை போலவே அவள் வர மீண்டும் அதே அறையில் நுழைந்து கொண்டார்

முல்லை முகம் கழுவி வெளியே வர.. அவர் அப்போதுதான் வந்ததைப் போல் டைனிங் டேபிள் அமர்ந்திருந்தார் .அதைப் பார்த்தவள் திடிக்கிட

அவன் இருக்கானா என்றார்.

முல்லையிடம் பதற்றம் அதிகரித்தது.

இல்லன்னா சொன்னாலும் பிரச்சனை என அவள் யோசித்துக் கொண்டே இருக்க,

இல்லனாலும் வரட்டும். நான் wait பண்றேன் என்றார் கதிர்.

இருக்கான். குளிச்சிட்டு இருக்கான் என்றால் குழப்பமான குரலில்

மெதுவா வரட்டும் என கதிர் தன் ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தார் .முல்லை என்ன சொல்லி இன்று சமாளிப்பது என்று தெரியாமல் யோசிக்க...

கதிர்.. என்றால் அமைதியான குரலில்

இல்ல நான் அன்னைக்கே சொன்னேன் இல்ல அவனுக்கு உன்ன பாக்குறது இல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..

பரவால்ல  மா 2 mints. பேசிட்டு கிளம்புறேன்... Don't worry.. என்றார் கதிர்

இல்ல இந்த நேரத்துல நீங்க இங்க இருக்கற யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க இல்ல... என்றால் அமைதியாக

என்ன?? தப்பு அதான் உன் பாய் பிரண்டு இருக்கான்ல, அவன் இல்லாம நான் இருந்தா தானே தப்பு நினைப்பார்கள் என்றார் கதிர்

அவள் அவரைப் பார்க்க

அவளின் பயம் இப்போது அப்படியே அவளின் முகத்தில் தெரிந்தது

கூப்பிடு என்று சொல்கிறேன்ல என கதிர் அவளை நோக்கி வர

உங்களை ஏன் பாக்கணும், பார்க்க முடியாது அவனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் நீங்க போங்க என மீண்டும்

இப்பொழுது கதிரின் கோபங்கள் எல்லாம் உருமாறி அவளின் கன்னத்திலேயே பதிலாய் விழுந்திருந்தது

கண்ணீர் கண்ணத்தை  நினைக்க..

உங்களுக்கு என்ன உரிமை இருக்கு .என்னை இப்போ அடிக்க என்றால் கண்ணீர் தழும்பி

சரி டி எனக்கு உரிமை இல்லை ,உரிமை இருக்கிறவன வரச் சொல்லு என கதிர் கத்த

அவரின் கோபத்தை வழக்கம்போல் முல்லையால் கையாள முடியவில்லை. ஆனால் கதிருக்கு தற்போது முல்லையின் அழுகை எதுவும் செய்யவில்லை, அவளின் மாறுபட்ட சிந்தனைகளுக்கும் ,கிறுக்குத்தனங்களும் அவள் அழுகையை தாண்டி அவரை ஏதோ செய்தது.

யாரும் கேட்க மாட்டாங்கன்னு தானே இப்படி பண்றீங்க வெளிய போங்க.. எனக்கு தனியா இருக்கணும் என அவள் கத்த

போக முடியாதுடி என்றார் கதிரும் எரிச்சலாக

அவன் வந்தா என்ன ஆகும்னு தெரியாது, வெளியே போங்க என்றாள்.

இல்லாதவன பேச பேச கதிருக்கு அவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் என்ன ஆகும்னு நானும் தெரிந்து கொள்கிறேன். வர சொல்லு என கூறி கொண்டே முன்னோக்கி நகர்ந்தார்

கதிர் ..எனக் கூறி அங்கே நடப்பதும் புரியாமல் செய்வதும் அறியாமல் அவர் தன்னை நெருங்குவதை தவிர்க்க பின் சென்று கொண்டிருந்தாள்

அவள் பயந்து பின் சென்று கொண்டே இருந்த கணம் பின்னால் இருந்த சோபாவில் விழ

அதைப் பார்த்த கதிர் என்ன செய்வது என தெரியாமல் தன் எரிச்சலை பெருமூச்சு விட்டு காண்பித்தார்

அருகில் இருந்த சோபாவில் தானும் அமர்ந்து கொண்டு..சில மணித்துளிகள் சென்றன

கதிர் அவள் முகம் பார்த்து அவள் பக்கம் திருப்பி முல்ல என்ன பாரு என்றார்..

அவள் செய்யவில்லை

இருந்தும் அவள் கைப்பிடித்து, உன்னை ஒன்னு கேட்பேன் உண்மையை மட்டும் பேசுவியா என்றார்..

என்ன பாருன்னு சொன்னேன் என்றார்

இப்பொழுது பார்க்க

I love you...do you? என்றார்.. அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து

முல்லை இதை எதிர்பார்த்து இருக்க மாட்டாள் அதனால் இந்த கேள்வியை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

கதிருக்கு மேலும் மேலும் இல்லாத ஒருவரை கேட்டு அவளை இன்னும் துன்புறுத்த மனமில்லை. தன் படிவாதத்தை விட்டு தன்னை ஏற்றுக் கொண்டால் ..அவள் கற்பனைகள், அதனால் அவள் மனதில் உண்டான மனித நிழல் அனைத்தையும் அவரால் சரி செய்த விட முடியும் என முழுதும் நம்பினார் .அவளுக்கு மருந்து தன் காதல் மட்டுமே என கதிருக்கு தெரிந்திருந்தது

சொல்லுமா என்றார்..

முல்லை கண்ணில் நீர் வர

அதைத் துடைக்க அவர் முயல அவர் கைகளை தட்டி விட்டாள்

என்ன?? லவ் யூ இன்னொரு தடவை காயப்பட நான் விரும்பல

அவருக்குள் உண்டான கோபத்தை கட்டுப்படுத்தி if your answer is yes , i won't be leave you for my lifetime... என்றார்

வேணாம்னு சொல்றேன்ல என்றால் மீண்டும் பிடிவாதமாய்

அப்படியே அறைஞ்சேன்னு வை... என கை ஓங்கியவர் இருந்த கோபம் சற்றே கட்டுப்படுத்தி இரண்டொரு நொடி மௌனம் ஆனார்

மீண்டும் மீண்டும் முல்லையை அடிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை..

ஏண்டி புரிஞ்சுக்கவே மாட்ற.. என்ற அவர் வார்த்தைகளில் விரக்தியே வெளிப்பட்டது

என்ன புரிஞ்சுக்கல என்றால்

என்ன புரிஞ்சுகிட்ட நீ என்றார் கதிர்

என் கூட வந்த சரி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருந்தோம் அதுக்குள்ள ஏன் அங்க இருந்து ஓடிப்போன என்றார் மீண்டும் அவரே

அப்போதான் எனக்கு உண்மை தெரிஞ்சது என்றால்

அவருக்கு இந்த பதில் நிச்சயம் எரிச்சலை தந்திருக்கும் இருந்தும் ..இம்முறை அவள் என்னதான் மனதில் நினைத்து பிரிந்தால் என்ற காரணத்தை முழுதாய் அறிய வேண்டுமென தன் கோபத்தை கட்டுப்படுத்தி அவள் மனம் அறிய முயற்சித்தார்

அப்படி.. என்ன உண்மைய நீ தெரிஞ்சுகிட்ட என்றார்

சொல்லு எனக்கு தெரியணும். அப்படி நான் என்ன தப்பா நடந்துட்டேன் ஒரு நாள்ல என்றார்

தப்பா நடக்கல அதான் என் பிரச்சனை என்றால் தனக்கு இருந்த எரிச்சலை விடுத்து

புரியாமல் பார்த்தார் கதிர்

என்ன தள்ளியே தான் வச்சிருந்தீங்க.. என்ன லவ் பண்றதா எனக்கு ஒரு எண்ணத்தை கொடுக்கவே இல்ல என்றதும்

எனக்கு புரியல என்றார்

உங்களுக்கு என்ன புடிக்கவே இல்ல கதிர் என்றால் விரக்தியாக

புடிச்சிருக்கா இல்லையா னு நான் தானா மா சொல்லணும், அது எனக்கு தான் தெரியும் என்றார்

சிறிது இடைவெளி விட்டு.. எனக்கு உங்களோட டைரிய படிச்சதும் உங்கள புடிக்கல என்றால்

well... இப்போதுதான் நீ பாயிண்ட் உள்ளே வர்ற.. good ஏன் பிடிக்காம போச்சு அதையும் சொல்லிட்டா அட்லீஸ்ட் இதான் பிரச்சனை ஆவது தெரிஞ்சுப்பேன்

நான் உங்கள எப்படி பார்த்து இருக்கேன்னோ அப்படியே முரணா இருந்துச்சு அதுல என்றால்

I didn't get you.. அவள் கூற வருவதை கவனித்தார்

உங்கள பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும் எந்த பொண்ணு பார்த்தாலும் அதை கொஞ்சம் கூட கண்டுக்காம அதே நேரம் ரூடாகவும் இல்லாம எல்லாரும் கூடவும் பேசுவீங்க it's just made me to made fall for you.. எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் எனக்கு அதை எப்படி சொல்றதுன்னு கூட தெரியல நான் ஒரு ஒரு விஷயத்திலும் உங்களை அவ்வளவு admire பண்ணி இருக்கேன்

சரி இதுல பிரச்சனை எங்க ஆரம்பிச்சது ..என்னன்னு தான் எனக்கு இப்ப வர புரியல என்றார்

அவரே மேலும் அந்த டைரிய படிச்சதும். ஏன் நான் கெட்டவனா தெரிஞ்சுட்டேனா அப்பவும் இப்பவும் என் குவாலிட்டி எல்லாம் அப்படியே தானே இருக்கு என்றார்

இல்ல என்றால்..

என்ன இல்ல சொல்லு தெரிஞ்சுக்கிறேன் என்றார்

நீங்க அந்த பொண்ணு தேடி தேடி லவ் பண்ணி இருக்கீங்க

ஆமா.. எனக்கு அவளை புடிச்சுச்சு துரத்தி துரத்தி லவ் பன்னேன் ..இதுல உன் பிரச்சனை என்ன என்றார்

புரியாமல்

நீங்களே ப்ரொபோஸ் பண்ணீங்க 🥺என்றால்

ஆமாடி என்றார் கதிர் தாங்க முடியாமல்

முல்லை அழ

கதிர் அவளை சமாதானப்படுத்தவில்லை ..அவரையே ஒரு ஆள் சமாதானப்படுத்த தேவைப்பட்டது

அப்போ என்கிட்ட பண்ணல என்றால்

புரியுற மாதிரி பேசு என்றார் கதிர் கோபமாக

நான் தானே உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணேன் ,நான் தான் உங்க பதிலுக்காக காத்துட்டு இருந்தேன், நீங்க சரின்னு சொன்னதும் நான்தான் உங்களோட வீட்டுக்கும் உங்களை நம்பி வந்தேன் என கூறி அழ தொடங்கினாள்..

அவரிடம் சிறிது நேரம் அமைதி

நான் என் மனசுல இருக்கறதை சொன்னேன் .அதே நாள் அது உன் வீட்டிலயும் தெரியப்படுத்திட்ட.. உன்னை யாரு டி நான் கொடுத்த செயின் போட்டுட்டு போய் வீட்டில் மாட்டிக்கோ சொன்னது .உன்னை பீல் பண்ண வைக்க எனக்கு நீ எங்க டைம் கொடுத்தியா??? லவ்வ சொன்ன அடுத்த நாளே வீட்டில் தெரிஞ்சுட்டா கல்யாணம் தான் பண்ண முடியும்?? அதைத்தான் நான் செய்சேன்.. பிடிக்காத ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு போவன.. என் அப்பாகிட்ட இவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுவேனா ??ஏன் அப்போ என்னோட லவ் உனக்கு புரியலையா என்றார்

எங்க போனாலும் என் மனசு உன்ன மறக்கல ..என் கல்யாணத்தை பார்க்கணும்னு என் அப்பா ஆசைப்பட்டு அது முடியாமல் கடைசில அவரு இறந்தே போயிட்டாரு என கதிருக்கு லேசாக கண்ணீர் தழும்பி நின்றது

முல்லையும் பார்த்து கண்கலங்கினாள்.

தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு.. மீண்டும் அவரே ,அவர் உனக்கு சரியானவை இல்லைன்னு சொன்னார் என்று சொன்னே சரி.. அதுல என்ன தப்பு இருக்கு இல்ல தப்பாவே இருந்துட்டு போகட்டும் பெத்தவங்க அத கூட பேச மாட்டாங்களா என்றார் எரிச்சலாக

முல்லை அமைதியாக நிற்க

listen, எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு எதுக்கு என்ன விட்டுட்டு வந்த சரியான காரணம் சொல்லு என்றார்

மீண்டும் அமைதியாக இருக்க

சொல்லணும் சொல்றேன்ல என்று மிரட்டினார் கதிர்

அப்போ சொன்னா போ வீங்க இல்ல.. சரி சொல்றேன் கேளுங்க நான் படிச்ச கதிர் நீங்க டைரில எழுதின எல்லாத்தையும் தான் எல்லாமே தான் என அழுது கொண்டே🥺 நீங்கள் எழுதி இருந்தீங்க How could I meet her in bed னு.. நான் படிச்சேன் 🥺 How could I bring her child even I felt her as my child னு நீங்க எழுதி இருந்தீங்க.... I read it 😓 என்றால் முல்லை 💔

❣️❣️❣️

Continue Reading

You'll Also Like

16.3K 418 9
Cute episodes between a couple... 💑💕
4.5K 377 23
Love, what a beautiful magic. Too bad these girls don't have time for it 🤷‍♀️. Contains: -Modern Pattikaadu (Completed) -Worlds Away (Completed) -Ka...
14.8K 550 41
காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவ...
Luna By anya jayvyn

Teen Fiction

7.5M 329K 47
A bullied girl meets the popular new student. ***** "Still saying that you're perfectly okay?" Max whispers. I'm surprised to hear that his voice is...