🌈என் தூரிகா நீயடா 🌈

By LEESAKCHERRY143

1.3K 129 59

Descrition படிச்சா defnition கிடைக்காது so stry உள்ள வந்து வாசித்து நேசியுங்கள் 💞 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11

பாகம் 6

79 8 4
By LEESAKCHERRY143

🌈என் தூரிகா நீயடா🌈

part 6....

முல்லை யாரும் பார்க்கும் முன், பாதுகாப்பாக தன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள் என அவர் பார்க்க...அவளும் வாசலில் இருந்து அவர் கொடுத்த பரிசை ஒரு கையில் வைத்து, மறு கையில் அவரைப் பார்த்து கையசைக்க பதிலுக்கு கைகாட்டி அவளிடம் இருந்து விடை பெற்றார்.

அவரைப் போல் யாரும் காயம் தரவும் முடியாது.. காதலை தரவும் முடியாது என்று எண்ணி தன் முகத்தில் கொட்டி கிடக்கும் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என யாரும் கேட்டு விடக் கூடாது என்று அதை மறைக்க.. பின் அந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவராமல் தவித்த அவளுக்கு அவர் கொடுத்த பரிசை மறைத்து வைக்க தோன்றாமல் போனது ..அது தன் அண்ணனின் கண்ணில் பட

அது என்ன பேப்பர் சுத்தி இருக்கு முல்லை,, எடு என்றதும் பதறியவள்...

பின் அவளது அப்பா... டேய் அவ birthday ku frnds gift ah இருக்கும் விடுடா... என்று தன் அப்பா அவளை விவரம் அறியாமல் காப்பாற்ற...

யார் கொடுத்தா டி என்று அவளது அண்ணனின் குரல் ஒலித்துக் கொண்டே நெருங்கி வர.. வந்த உயிரை மீண்டும் காப்பாற்ற தன் அப்பா காப்பாற்றி தர வருவாரா என்று முழித்துக் கொண்டிருந்தாள்...

குறிப்பிட்டு ஒரு பெயரை சொன்னால் ஆபத்து என நினைத்து எல்லாரும் சேர்ந்து  தந்தாங்க
டா என்றாள்...

சரி வா பிரி... அப்படி என்ன உன் பிரண்ட்ஸ் என்னை விட பெஸ்ட் கிப்ட் தந்து இருக்காங்கன்னு பார்ப்போம் ..என்று ஆர்வமாய் அவளது அண்ணன் பரிசினை பெற முயல. முல்லைக்கு அவர் அதில் என்ன வைத்து இருக்கிறாரோ என்று யோசித்து தலையே சுத்தியது...

செல்லோ டேப்பை இழுக்க கஷ்டப்படுவது போல் நடித்துக் கொண்டு.. டேய் இதை எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அப்புறமா எடுத்துக்கிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், அது அவளின் அண்ணன் கைக்கு மாறி இருந்தது.

பதறியவள் யோசிக்கும் முன்பு அவளது அண்ணன் அதை வெளியே எடுத்திருந்தார் ..வெள்ளை நிறத்தில் அழகிய பூக்களுடன் மிக அழகாக ஒரு சுடிதார் மெளறியது.. முல்லைக்கு வெள்ளை நிறம் என்பது பேவரைட் என்று அவருக்கு தெரியும் .அதனாலேயே அந்த நிறத்தில் வண்ண பூக்களோடு கொள்ளை கொள்ளும் அழகோடு பார்ப்பதற்கு அந்த டிரஸ் அவ்வளவு அழகாக இருந்தது. எல்லாம் அவளுக்கு பிடித்ததாக இருந்தாலும் முல்லைக்கு சற்று ஏமாற்றம் தான்.. அவள் அவர் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒன்று இருக்குமோ என நினைத்திருந்தால்.

அவளது நினைவை மாற்ற ஒலித்தது அண்ணனின் குரல்... ஹே முல்ல
சூப்பர் டி ..இந்த டிரஸ் 👗இந்த  மாடல் டிரஸ் நான் உனக்கு எத்தனை நாளா தேடுறேன்.. பாரு உன்னோட பிரண்டு மூலமா தான் உனக்கு பிடிச்சது கிடைக்கும்னு இருக்கு என்று கூறிக்கொண்டு அவள் கையில் அந்த உடையை திணித்துவிட்டு சென்றிருந்தனர்.

முல்லை வீட்டிற்கு வந்து விட்டதால்.. அவளின் வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி கதிருடன் ஏதும் பெரிதாய் பேசிட முடியவில்லை. அவள் பிறந்தநாள் மூலமாக அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல பதில் வரும் என்று காத்திருந்தாள்.. ஆனால் அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. இவர்களது உறவு ஒரு ரயில் பயண சினேகம் போல் முடிந்து விடுமோ என்றெல்லாம் இப்போது அதிகமாக முல்லைக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது .இந்த நான்கு வருடத்தில் அவள் எவ்வளவு குழம்பி இருந்தாலும் கதிர் அவளை தெளிவுபடுத்தி விடுவார் ..சில நேரங்களில் இருவரும் ஒரு வாரம் வரை கூட பேசாமல் இருந்தது உண்டு. ஆனாலும் அது அவர்களுக்கு பிரிவை தந்ததே இல்லை மாறாக ஒவ்வொன்றிலும் ஏதோ ஓர் புரிதலே முல்லைக்கு கிடைத்திருந்தது .ஆனால் இப்போது ஏதோ ஒன்றை அவள் முழுவதுமாக இழந்து விடப் போவதாய் மட்டுமே முல்லைக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

இரண்டு நாள் கடந்து விட கதிரிடமிருந்து மெசேஜ் வந்தது..

கதிர்📱

வீசா confirm ஆயிருச்சுடா...NXT month foreign கிளம்பனும் என்று அனுப்பி இருந்தார்...

அந்த மெசேஜை பார்த்தவுடன் அடுத்த நொடியே கால் செய்ய... அவளது அழைப்புகள் எல்லாம் தவறிய அழைப்பாய் மட்டுமே அவளது போனில் save ஆனது. இந்த நான்கு வருடத்தில்.. இதேபோன்.. அவ்வளவு சந்தோஷத்தையும் ,அன்பையும் ,ஆச்சரியத்தையும் அள்ளிக் கொடுத்திருந்தது இதே போன் தான்..முல்லையோ இதுவரை யாரிடமும் காட்டாத வெறுப்பை அந்த ஃபோனின் மீது காட்டி.. இன்று தூக்கித் தூர எறிந்து இருந்தால் .மனிதர்களின் மனமே இதுதானே ஒரு நொடியில் எதையும் மாற்றி விடும்.

மன விரிசலில் இருந்து விடுபட சற்று விலகி நில்லுங்கள்.. இளைப்பாரி முடித்தவுடன் இணைந்து கொள்ளலாம் .அவ்வாறே அவளும் இரவுக்குள் இளைப்பாற.. விடிந்த காலைப் பொழுது இதற்கு மேல் காத்திருப்பது அர்த்தமல்ல என்று  முடிவு எடுத்தவள். கதிர் தன்னைகாண அவரது வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்தாள்.

முல்லையின்.. வருகையை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. தான் அவளை எப்படி இன்று  சமாளிக்க போவது என்ற எண்ணத்தை மனதினில் ஓட விட்டு கொண்டே அவளை நோக்கி வாசலுக்கு சென்றார்.

உள்ள வா.. என்ற போது கதிரின் குரல் எப்போதும் இருக்கும் தெளிவும் ,கம்பீரமும் இல்லாமல் இருக்க ..அதைப்பற்றி எதுவும் கேளாமல் முல்லை அவளாகவே உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள். அவள் காலனியை விட்டுச் சென்ற விதமோ.. அவளும் தெளிவான மனநிலையில் இல்லை என்பதை கதிருக்கு உணர்த்தியது. அவரும் பின் தொடர்ந்து உள்ளே வர.. கதிரின் அப்பா கிச்சனிலிருந்து வெளியே வந்தார். முல்லையை பற்றி கதிர் அவர் அப்பாவிடம் முன்பே சொல்லி இருக்கிறார் தான். ஆகையால் அவள் ஹலில் அமர்ந்திருப்பதை பார்த்து.. என்ன முல்லை எப்படி இருக்க மா என்றார்

கதிரின் அப்பா இருப்பதையே எதிர்பார்க்காதவள் ..அவர் தன்னை பார்த்த முதல் தினமே தன் பெயரை சொல்லி தெரிந்தவர் போல் அழைத்தது, என இரண்டு எதிர்பாராத விஷயங்கள்.. தன்னை நோக்கி விழ அவள் பதில் சொல்ல சற்று நேரமே பிடித்தது...

கதிரின் அப்பா அதை அறிந்தவராய்.. எப்படி உன்னை தெரியும் என்று பார்க்கிறயா? எல்லாம் கதிர் சொல்லித்தான் என்றதும் அப்படி என்ன சொல்லி இருக்காரு என அவள் கேட்க.. frnd nu சொன்னான் என கதிரின் அப்பா கூறியதும். முல்லையின் பார்வை கதிரின் மேல் இருந்தது ..அதற்கு பிடி கொடுக்காமல் அவர் சாப்பிடலாமா  பா என்றார்..

ம்ம்... நீயும் வாம்மா சாப்பிடுவோம் என்று கூற..

இல்லப்பா... இப்பதான் சாப்பிட்டேன்.. நீங்க சாப்பிட்டு வாங்க என்றதும். இருவரும் சென்று சாப்பிட்டு முடிக்க.. கதிர் அப்பா ,சரிப்பா நீ உன் frnd கூட பேசிட்டு வா என்று கூறி அவரின் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

கதிர் ,முல்லையின் அருகில் போய் அமர்ந்து கொள்ள.. கதிர்  இப்பொழுது அவளின் பக்கம் இருந்த நாற்காலியை இழுத்து அவள் முகம் பார்த்து அமர்ந்தார்..

சரி பேசுவோமா என்றார்...

அவள் பெரிதும் கவனத்துடன் அவரை சரி என்பதைப்போல் பார்க்க..

to make an answer to your proposal I completely respect it...

என்றவாறு அவள் கையை பற்றினார்.

முல்ல... நீ எனக்கு அவ்ளோ ஸ்பெஷல்  undoubtedly !!!அடுத்து I promise you. ..to be your good friend till my last breath... as your life partner?? கண்டிப்பா என்னால சொல்ல முடியல. முல்லை உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. என் இஷ்டத்துக்கு நான் இருந்து பழகிட்டேன். என்னோட ex_ realtionship பத்தி தெரியும் உனக்கு just தெரியும் அவ்வளவுதான். அதுல இருந்து வெளியே வந்து இருக்கேன் நானு தெரியுமா?? அவ என்னோட இல்லைன்னு ..ரொம்ப நாள் பைத்தியமா இருந்தேன். என்ன விட்டுட்டு போனவளை நான் ஏன் நினைக்கணும்னு புரியவே ஒரு வருஷம் ஓடிடுச்சு.. ஓகே லீவ் இட் ஆள்....

let's imagine ..we are entering into a relationship okay... கொஞ்ச நாள் அடுத்து, உன்னால உன் family எதிர்த்து வர முடியுமா... உன்னால என் கூட இருக்க ரெண்டு மணி நேரத்துல ரெண்டு நிமிஷம் பயமில்லாமல் இருக்க முடியுமா?? இல்ல நான் வந்து பேசுறேன் நா... நீ உன்னோட Frnd nu கூட introduce பண்ண புரிஞ்சுக்காதவங்க கிட்ட.. இப்படின்னு சொன்னா பரவால்ல பொண்ணு ஆசைப்பட்டா.. இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைனு சொல்லி ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறியா???

விரக்தியான சிரிப்பை சிரித்து.. இன்னொரு ஏமாற்றத்தை தாங்கிர சக்தி எனக்கு இல்லம்மா என்றார்.

முல்லையின் இடம் ஏதும் பதில் இல்லை. சரி என்ற வாரே.. தலையசைத்து தன் கைகளை அவரிடம் இருந்து விடுவித்தால்..

ஓகே ங்க புரியுது என்று அவள் கூற.. கதிருக்கு தான் அதிகமாக வலித்தது. எப்போதும் அவளை சிரிக்க வைத்தே பார்த்துவிட்டு.. இந்த தருணத்தை அவளுக்கு கொடுத்தது நினைத்து அவர் மனம் அவரையே வெறுத்தது..

முல்லை அவரிடத்தில்.. ஏங்க என் கூட எப்போதும் போல பேசுவீங்க இல்ல ??என அவள் கேட்க.. உன்கிட்ட பேசாம என்னால நினைச்சாலும் இருக்க முடியாது டா என்றதும்.. சிறிது நேரத்திற்கு பின் மணியைப் பார்க்க ..முல்லைக்கு சற்றே இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது .நேரமாகிவிட்டதென வீட்டிற்கு செல்ல பறந்தால்.. அவள் ஐந்தே நிமிடத்தில் விடை பெற்று வாசல் வந்ததும் .அப்பாட்ட சொல்லிருங்க என்றால்

கதிர் சொல்கிறேன் என்றதும் ..சரி bye என்றவாறு கிளம்பினாள்..

பார்த்துப் போ.. text me when you reach home என்ற அவரது வார்த்தைகளை நடந்து கொண்டே காதில் வாங்கி தலையாட்டினாள்.

அவள் வீட்டை அடைந்ததும் ..தனிமையுடன் தன்னை ஒப்படைக்க தான் துவண்டு போகும் நேரம் அதைத் தவிர வேறொன்றும் துணை இருந்திருப்பதில்லை.. அவர் வந்து அவளுக்கும் தனிமைக்கும் உண்டான உரையாடல்களை தவிர்க்கச் செய்திருந்தார் ..இருந்தும் அவர் மீது இன்று எந்த கோபமும் வரவில்லை மாறாக அவரை விட்டுச் சென்ற அந்தப் பெண்ணாக கடவுள் தன்னை படைக்கவில்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது. இனி அவர் வெளிநாடு செல்லும் முன்பு ஒருமுறை சந்திப்பதாக கதிர் உறுதி அளித்திருந்தார்.

என்ன விட்டுப் போகிறீர்கள்ல hate you என்று வாய்விட்டு சொல்லி அழத் தொடங்கி இருந்தால்.. அதை அவர் பார்த்திருந்தால் போகாமல் கூட இருந்திருப்பார்...

அங்கே.‌. அவர் தன் தந்தை குரல் கேட்டு உள்ளே செல்கிறார்...

என்னப்பா அந்த பொண்ணு கிளம்பியாச்சா என்று கேட்க.. இப்போதான் பா அனுப்பிட்டு வரேன் என்றார். அவரது வார்த்தைகளிலே அவர் இயல்பாக இல்லை என்பது புரிந்தது..

என்ன விஷயமா வந்திருந்தா என்றார்..

சும்மா தான் பா பாத்துட்டு போகலாம்னு என்று கூறிவிட்டு நகர முயன்ற அவரை கதிர் நில்லு என்றார்.

தன் அப்பாவின் குரலே உணர்த்தியது.‌ அவர் ஏதோ அறிந்திருக்கக் கூடும் என்று. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வெறும் நட்பு மட்டும்தான் இருக்குதா பா என்றார்.

அப்பா ஏன் இப்படி கேக்குறீங்க எனக்கூறி தான் இயல்பாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்ட அவரிடம்..

நான் நீங்க பேசுனத கேட்டுகிட்டு தான் இருந்தேன் பா எனக் கூறியதும். இனி நடிக்க முடியாது என்று தன் அப்பாவிடம் தன் செயற்கை சிரிப்பை காட்டும் இயந்திரமாக இல்லாமல் உண்மையான முகத்தை காண்பிக்கும் தைரியத்தை தனக்குள் வரவழைத்தார்.

அப்பா எனக்கூறி அவர் அமைதியாய் நிற்க..

உனக்கு அந்த பொண்ணு நெஜமாவே கல்யாணம் செஞ்சுக்க இஷ்டம் இல்லையா என கேட்க...

அப்பா அவள் ஏதோ சொல்லுறான்னு விடுங்க.. அவ சின்ன பொண்ணு என்றார் நழுவலாய் ‌‌.‌‌.என்னை பார்த்து சொல்லு உனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லைன்னு என கேட்டதும் தலையை தரை பார்த்து அவர் கவிழ்க்க என்ன பார்த்து சொல்லுப்பா என்று அவர் அதட்டின் தோணியில் கேட்க..

இரண்டு ஒரு நிமிடங்கள் கழித்து ரொம்ப ஆசைதான் பா எனக்கு, என் கூடவே அவள வச்சுக்கணும்னு என்றார் அவள் பெரிதும் எதிர்பார்த்த பதிலை...

அப்புறம் நீ ஏன் அங்க அப்படி சொன்ன என்ற எதிர்பார்ப்பு மிகுந்த கேள்வியை அவரும் வைக்க..

but நான்  அவகிட்ட சொன்னது எதுவும் பொய்யும் இல்லையேப்பா என்றார்..

கண்கலங்கி நின்ற கதிரை எதிர் கொள்ள முடியவில்லை என்ற போதும் அவரிடம் பேச வேண்டும் என்பதால் சற்று நேரம் அங்கு அமைதியாய் இருந்தது...

கதிரை அழைத்துச் சென்று அருகில் உள்ள சோபாவில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டார்.. இப்போ என்ன முடிவு எடுக்கப் போற பா என்றார். அதான் சொல்லிட்டேன்லப்பா அது சரியா வராது.. that won't happen பா...
அவள எனக்கு நல்லா தெரிஞ்சதால மட்டும்தான் சொல்லுறேன்.. ரெண்டு மணி நேரம் கூட என்னோட பயமில்லாமல் இருக்க மாட்டா அவளோட வீட்ட நெனச்சு பயப்படுறதை என்னால பாக்க முடியாது பா.. என்னால் தேவையில்லாத கஷ்டம் that she has to face வேணாம் என்றார் தெளிவாக...

அது சரிப்பா ரெண்டு வருஷம் நீ பாரின் போயிட்டு வந்த அப்புறமா ஏதும் அந்த பொண்ணு கிட்ட கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம்னு நினைச்சு வச்சிருக்கியா ஏதும்.. ஏன் கேட்கிறேன் என்றால் நீ அப்படி நினைச்சா வச்சிருந்தா நீ வர்றதுக்குள்ள அவ ஸ்டேட்டஸ்  கூட மாறிப் போய் இருக்கலாம் என்றார்.

எதுவும் பதில் சொல்லாது . அவர் தலைக்கவந்து மட்டுமே நிற்க அவர் அப்பா அங்கு இருந்து நகர்ந்துவிட..

தானும் தனிமையைத் தேடி அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார். ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்க இந்த நிலைமையில் அவர் மனம் எப்போதும் அவளிடம் தான் பேசத் தோன்றும் ஆனால் இன்று அன்னிலையும் மாறிவிட.. நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் என்பதை உறுதி அளித்திடும் போல அவளது அழைப்பு வந்தது..

எந்த சிந்தனையும் இன்றி அதை அட்டென்ட் செய்தவர்...

கதிர் நான் வீட்டுக்கு வந்துட்டேன் ங்க என்றாள்..

சரிடா என்றார்.. எதுவும் பேச இயலாத வரை..

கதிர் ஆர் யூ ஓகே என்றால் அவரின் குரல் மாற்றத்தால்...

ஓகேடா நீ பாரு நான் அப்புறம் பேசுறேன் என்று அழைப்பை கூறி துண்டித்தார்...

அவர் வேண்டுமென்றே தன்னிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டார்.. என்ற நினைப்பு வர அழுகையும் அதோடு சேர்ந்து தானாக வந்தது..

விடிந்தது.. அவர்களுக்கு ஒவ்வொரு விடியலும் தான் தூரச் செல்லப் போகும் பயணம் நெருங்குவதையே நினைவாய் சேமிக்க தொடங்கி இருந்தது‌. மணி ஏழு எப்போதும் போல் எழுந்தவள் அவரது மெசேஜை திறந்து பார்க்க...

நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன் டா இன்னும் 10 days la leaving India.. can we meet up once before that என்று வந்திருந்தது.

எங்கே எப்போது பார்க்கலாம்னு முடிவு எடுத்தபின் அவர்களது நாளை தொடங்கியிருந்தனர்...

அவர்கள் கூறிய நாள் வர முல்லை கதிருக்கு கால் செய்தாள்...

சொல்லுமா என்றார்...

கதிர் இன்னைக்கு meet பண்றோமில்ல என்றாள் சந்தேகமாக..

ஏன் உனக்கு ஏதும் பிரச்சனையா அதுல... அவர் குரலில் சற்று கோபம் வெளிப்பட

இல்ல இல்ல கேட்டேன் என்றால் சமாதானமாக

சரி.. எப்போ வருவ என்றதும் கிளம்பிட்டேன் வந்துருவேன். ஆனா எங்க மீட் பண்றேன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே???

come home எனக் கூறியதும் அழைப்பை துண்டித்தார்...

சரியாக அரைமணியில் அவள் அங்கே போக...

hi 👋 என்றவாறு முல்லையை உள்ளே அழைத்து.. ஹாய் சொன்னா ஹலோ சொல்லணும் னு தெரியாதா உனக்கு என்று அவளிடம் வம்பு இழுக்க ஆரம்பித்தார்...

லேசான சிரிப்பு மட்டுமே அவளிடம் இருந்தது.எனக்கு உள்ளே அவ்வளவு கவலை வருத்தம் இருக்கு ..இங்க இவர் எவ்வளவு நார்மலாக இருக்கார் .இவருக்கு எதுவுமே தோணல போல என்ற சோகமே அவள் பதில் ஏதும் பேசாத இதற்கு காரணமாக இருந்தது..

ஏன் இப்படி இவர் எதுவும் நடக்காதது போல இருக்கிறார் என்ற நினைப்பு உள்ளே அவளை ரணப்படுத்தினாலும் வெளியே ஏதும் பேசாமல் முறைத்தாள்...

என்ன மேடம் இன்னிக்கு இவ்வளவு கோபம் என்றார்...

முகம் திருப்பி ஏன் என்பது உங்களுக்கு தெரியாதா என்பதைப் போல் அவரின் கண்களை கூர்மையாக பார்க்க...

சரி ..நீ கூல் ஆகுற மாதிரி ஏதாவது செய்வோமா... என்ற அவருக்கு எந்த பதிலும் அவளிடத்தில் இல்லை...

முகத்தை திருப்பிக் கொண்டாள் .அந்த நிமிடத்தை பயன்படுத்தி.. தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து தான் அவளுக்காக வாங்கியதை கையில் எடுத்தார்..

அவள் எதையும் எதிர்பார்க்காமல் திரும்ப.. அவர் கையில் அழகாய் மின்னியது ஒரு செயின்.. ஆச்சரியத்துடன் அவள் பார்க்க slim chain with small pendant as  baby wish என்ற கதிரை அப்போது அவளால் நேராக பார்க்க முடியவில்லை.

பெரிதும் கோபமாக இருக்கும் அவளிடம்.. அவர் செய்யும் ஒரு செயல் அக்கோபத்தை முற்றிலும் கொன்று விடுவது மட்டும் இல்லாமல் அவர் மீது வசீகரத்தையும் கொண்டு வந்து விடுகிறது .ஏன் இப்படி என்னால் சிறிது நேரம் கூட இவர் மீது கோபமாக இருக்க முடியவில்லை என்று தன் மீது அவளுக்கு கோபம் வந்திருக்க...

புடிச்சிருக்கா என்று அவர் குரல் அவளை நிகழ் காலத்திற்கு அழைத்து வர..

தலையசைத்தாள்..

அதன் மூலமே அவள் சமாதானம் ஆகிவிட்டதை அறிந்தவர்.. அதை அவள் கையில் கொடுத்து இந்தா போட்டுக்கோ எனக் கூற...

கையில் வாங்கிப் பார்த்தவள் கதிர் இது Gold ah என கண்விறிய கேட்டாள்...

ஏதும் பேசாது கதிர் மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்க்க...

கதிர் யூனிக் ஸ்மார்ட் என்றால்..

மீண்டும் அந்தப் புன்னகையை மட்டுமே தர...

முல்லையின் கையில் இருந்த செயின் அவள் கழுத்தில் இடம் பெற்றதை பார்த்தார்...

முல்லை... ஒன்னு பண்ணுவோமா என்றார்...

என்ன என்ற அவளின் பார்வைக்கு பதிலாய்...‌ you like this chain??? என்றார்...

ரொம்ப.. ஆனா என்னால இதை வீட்டுக்கு கொண்டு போக முடியாதே என்றாள்..

அப்போ அடகு வைத்து விடலாம் என்றார்...

முல்லை திடுக்கிட்டு முழிக்க...

அவளிடம்.. அத இன்னிக்கு போகிறவரை போட்டுக்கோ .அடுத்த வேலையா அதை வச்சு பணம் வாங்கிப்போம் ,பணத்த நான் வச்சுபேன்.. அப்பறம் உனக்கு அது வேணும்னா நீயே சம்பாதிச்சு...ஒரு வருஷமோ இல்ல ரெண்டு வருஷமோ அதை மீட்டுக்கோ என்றார்...

இதுக்கு எதுக்கு நான் இத கொடுத்தேன் என்று பாக்குறியா?? ரெண்டு வருஷம் கழிச்சு நான் திரும்ப உன்னை பாக்குறப்போ உன் கழுத்துல இது இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் என்ற பதிலையும் அவரை கூற..

அவர் கூறுவதைப் போல் நடக்க வேண்டும் என்றால் தான் வேலைக்கு போக வேண்டும்.. ஆனால் இது சாத்தியமில்லை அவளது வீட்டில் இப்போதே அவளுக்கு கல்யாணம் பற்றிய பேச்சை ஆரம்பித்து விட்டனர்.. இது நடக்கவே நடக்காது என்று அவள் மனம் குழம்ப...

மேலும் அடுத்த இரண்டு வருடத்தில் தனக்கு திருமணம் ஆகிவிடும் அப்படியானால் கதிரை இன்று சந்திப்பதே இறுதியா?? என்ற பயம் அவளை முழுவதும் வந்து ஒட்டிக்கொண்டது அடுத்த நொடியே செயினில் கை வைத்துக் கொண்டே இல்ல நான் இதை தரமாட்டேன் என்றால் கண்ணில் நீருடன்...

முல்ல... that's for your goodness you have to be a independent.. யாரையும் எதிர்பார்க்காம நீ வேலைக்கு போகணும் இப்படி சொன்னா அதை திரும்ப வாங்கிக்கணும்னு நினைச்சு நீ ஏதாவது பண்ணா... I won't be happy. அதுதான் வேணும் எனக்கு understand da என்றார்...

அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை....

தரமாட்டேன் என அதன் மீது குழந்தையாய் கை வைத்து அழுது கொண்டிருந்த முல்லையை அவரால் இப்போது எதிர்கொள்ள முடியவில்லை...

சரி அழுகாத இங்க பாரு என்றார்...

முல்லையின் நினைப்பெல்லாம் இன்று விட்டால் இனி இவர் யாரோ ஒருவராகி விடுவார் என்பதில் மட்டுமே மூழ்கி இருந்தது...

முல்ல...‌ listen... சரி நீ அதை தர வேணாம்.. at least  என ஏதோ சொல்ல வருவதற்குள்..

இல்ல இல்ல... நான் உங்கள எங்கேயும் போக விட மாட்டேன் என கூறிக் கொண்டே சற்றும் எதிர்பாராத விதமாய் இறுக்கமாக அவரை கட்டிக் கொண்டாள்.

❣️❣️❣️

Continue Reading

You'll Also Like

22.7K 806 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, ந...
7.6K 1.3K 33
சண்டை + சண்டை +சண்டை=💞 KM💞
12K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story