நேசமே சுவாசமாய்

Von kanidev86

17.1K 770 237

நேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு ச... Mehr

நேசமே சுவாசமாய்
நேசமே சுவாசமாய்
நேசமே சுவாசமாய் - 3
நேசமே சுவாசமாய் - 4
நேசமே சுவாசமாய் - 5
நேசமே சுவாசமாய் - 6
நேசமே சுவாசமாய் - 7
நேசமே சுவாசமாய் - 8
நேசமே சுவாசமாய் - 10
நேசமே சுவாசமாய் - 9
நேசமே சுவாசமாய் - 11
நேசமே சுவாசமாய் - 12
நேசமே சுவாசமாய் - 13
நேசமே சுவாசமாய் - 14
நேசமே சுவாசமாய் - 15
நேசத்தின் சுவாசமாய் - 17
நேசமே சுவாசமாய் - 18
நேசமே சுவாசமாய் - 19
நேசமே சுவாசமாய் - 20
நேசமே சுவாசமாய் - 21
நேசமே சுவாசமாய் - 22
நேசமே சுவாசமாய் - 23
நேசமே சுவாசமாய் - 24
நேசமே சுவாசமாய் - 25
நேசமே சுவாசமாய் - 26
நேசமை சுவாசமாய் - 27
நேசமே சுவாசமாய் - 28
நேசமே சுவாசமாய் - 29
நேசமே சுவாசமாய் - 30
நேசமே சுவாசமாய் - 31
நேசமே சுவாசமாய் - 32
நேசமே சுவாசமாய் - 33
நேசமே சுவாசமாய்- 34
நேசமே சுவாசமாய் - 35
நேசமே சுவாசமாய் - 36
நேசமே சுவாசமாய் - 37
நேசமே சுவாசமாய் - 38
நேசமே சுவாசமாய் - 39
நேசமே சுவாசமாய் - 40
நேசமே சுவாசமாய் - 41
நேசமே சுவாசமாய் - 42
நேசமே சுவாசமாய் - 43
நேசமே சுவாசமாய் - 44
நேசமே சுவாசமாய் - 45
நேசமே சுவாசமாய் - 46
நேசமே சுவாசமாய் - 47
நேசமே சுவாசமாய் - 48
author note

நேசமே சுவாசமாய் - 16

244 16 5
Von kanidev86

மிதாவின் முதல் முத்தம்

பகுதி - 16

மதுமிதா தன் தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கையில்.. ஒருவன் மட்டும் தனியாக , யாரும் அவனோடு இல்லாமல்.. தனித்து வந்தவனின் கரத்தில்.. புத்தங்களும் இருக்க.. " ஆளு அழகா இருக்கான்.. யாரு இவன்.. " என்று முணுமுணுப்பாய் கேட்டாலும் தோழிகளுக்கு கேட்கும் படியே.. சத்தமாக பேசி இருந்தாள் மதுமிதா .

" யாரா..? இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருந்தோமே.. அவன் தான் அது..", என்றாள் உடன் இருந்த தோழி..

" ம்.. பார்க்க ஆள் நல்லா தான் இருக்கான்.. எந்த டிபார்ட்மெண்ட்.. " என்று அவன் மீதே பார்வையை அகற்றாதவளாய்..

" கம்ப்யூட்டர் பா.." என்ற ஆதிராவிடம்

"ம்..ம்..", என்று முனங்க

அவளுடைய.. சிந்தனையை கலைக்கும் விதமாய்.." ஹேய் அதைவிடு மிதா.. இன்னைக்கு உனக்கு எத்தனை கலெக்ஷன் இருக்கு அது சொல்லு.." என்று தன் பற்கள் அனைத்தையும் காண்பித்தவளாய் மற்றொருவள் .

" ஹா.. ஹா.. இப்பவே அஞ்சு வந்தாச்சு.. காலேஜ் முடிவதற்குள் இன்னும் எத்தனை பேருன்னு தெரியல.." என்றாள் மிதா..

தோழிகள் என்று சுற்றினாலும் பொறாமையோடு இருப்பவர்களும் உண்டு. அதேபோல் , மதுமிதாவின் தோழி என்ற பெயரில் உள்ள தீபன்யா , உடல் முழுவதும் வஞ்சத்தை அவள் மீது வைத்திருந்தாலும்.. இனிமையாக பேசுவது போல் குத்திக் காண்பிப்பாள்.. இல்லையேல் சீண்டுவாள் .இது எதுவும் அறியாத மிதாவும்.. உண்மையான நட்போடு பழக.. தீபன்யாவின் பேச்சுக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பாள்.. சீண்டுவது போல் இருந்தாலோ.. விட்டுக் கொடுக்கவே மாட்டாள் .

அதனால் அவளுடைய பலகீனம் அறிந்த தீபன்யா இடம் பார்த்து அடித்தாள்.

" மிதா மொத்த காலேஜும் , உன் அழகை ரசிக்காலாம்.. பாராட்டலாம்.. எத்தனை லெட்டர் வேணாலும் உனக்கே வரலாம்.. ஆனால், எங்கே அதோ போறானே அவன் கிட்ட இருந்து மட்டும் உன்ட்ட 'ஐ லவ் யூன்னு..' சொல்ல வச்சுட்ட.. அப்போ ஒத்துக்குறேன்..' யூ ஆர் வேல்யூபில் ஃபார் தோஸ் லெட்டர்ஸ்ன்னு.." என்று நக்கலாக கூறி அவளை கிளப்பி விட்டாள்.

"என்ன தீபூ பேசுற.. இப்ப எதுக்காக தேவை இல்லாம அவ கிட்ட பேசுற.. மிதாவா யாரையும் தேடி போறது இல்லை.. அவளை தேடி வந்து குடுக்குற பசங்கட்ட வாங்கினாலும் , நாசுக்கா நோ சொல்லி அனுப்புறா.. அவங்க குடுத்ததை.. நம்ம படுச்சு டைம் பாஸ் பண்ணி என்ஜாய் பண்றோம் அவ்வளவுதான்.. இதுவரைக்கும் அவங்க யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம இருக்கா.. இது என்ன புதுசா தேவை இல்லாம கிளப்பிவிடுற.. இவனுங்க லெட்டர் கொடுத்தா தான்.. அவ அழகுன்னு தெரியுமா.. கண்ணு இருக்க எல்லாருக்கும் தெரியும்.. உனக்கு.. அவ அழகுல எப்பவும் பொறாமை அதுக்கு இப்படியா சீண்டுவ.." என்று உண்மையான நட்போடு பழகிய ஆதிரா.. தீபன்யாவை சாடினாள் .

" இங்க பாருங்க மிதா.. நீ ஊருக்கு போன.. மறுநாளே வந்து ஜாயின் பண்ணினான் . இதுவரைக்கும் யாரோடையும் பேசினது இல்லை.. பொண்ணுங்க பக்கம் நிமிர்ந்தும் பார்த்தது இல்ல.. ரொம்ப சைலட்ன்னு நினைக்கிறேன்.. ஸ்காலர் ஷிப்ல ஜாயின் ஆனதா கேள்வி.. நல்லா படிக்கிற பையன்.. நீ தேவை இல்லாம அவ.. உன்னை கிளப்பி விடுறான்னு போய்.. எக்கு தப்பா பண்ணிட்டு இருக்காத.. ", என்று கண்டிப்பையும் விடுக்க மறக்கவில்லை..

மனிதனின் மனம் என்று நல்லதே உடனே கேட்டிருக்கிறது.. சாத்தானுக்கே முதலிடம்.. அதுவும் இவ்வளவு நாட்களாக கர்வமாக நினைத்திருந்த அழகை பற்றி விமர்சித்திருக்க.. செய்யாதே என்று சொல்வதை மட்டுமே செய்து பழகியவள்.. சும்மா விடுவாளா.. உடனே நிதினை அவளது காலடியில் வீழ்த்திவிடும் வேகம்..

இதுவரை தோன்றாத நினைப்பு.. அது எப்படி , என்னை நிமிர்ந்து பாராமல் கடந்து செல்லாம்.. என்ற ஆணவமும் தலைத்தூக்க.. அது அவள் பேசில் தெளிவாய் தெரிந்தது.

மிதா தீபூவிடம்.. " நீ வேணா பாரு.. அவனை இந்த காலேஜ் விட்டு போறதுக்குள்ள.. ஐ லவ் யூன்னு சொல்ல வச்சு.. என்னை சுத்த வைக்கலை.. நான் மிதா இல்லை.." என்றாள்.

" பெட்.. நான் சொல்றேன் மொத்த காலேஜ் பசங்க உன் பின்னாடி வந்தாலும்.. அவன் வர மாட்டான்.. பார்க்கலாமா.. பெட்.. " என்றாள் வக்கிரமாக..

" பெட்.. சரி அப்படி நான் செஞ்சுட்டா.." என்று புருவத்தை மேல் ஏற்றி அழகாய் கேட்டிட.. அதுவும் அவளது அழகை வெளிப்படுத்த.. ' ச்சை..' என்று சினத்தோடு.. குரலில் வெளியிடாதவளாய்..

" நீ செய்.. அப்ப பாத்துக்கலாம்.." என்று அலட்சியமாக சிலுப்ப.. அதுவே மிதாவின் மூளையை மழுங்கடித்தது..

அதன் பிறகு.. அவளுடைய முழுக் கவனமும் நிதினாகி போனான் . இந்த ஒரு வாரத்திற்குள்.. அவன் செல்லும் இடங்கள்.. பார்க்கும் வேலை.. பழகும் விதம் .. நண்பர்கள் என்று அக்குவேர் ஆணிவேராக அறிந்து வைத்திருக்க.. அத்தோடு.. அவனுடைய மென்மையான குணத்தையும் புரிந்து கொண்டவளாய்.. மறு விடியலில் இருந்து தன் ஆட்டத்தை நிகழ்த்த முடிவெடுத்திருந்தாள் .

அடுத்த நாள் காலையிலேயே.. அழகு ஓவியமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு.. கல்லூரிக்கு கிளம்பி இருந்தவளை.. ஒருமுறை அங்கிருக்கும்.. பெண் பேராசிரியர் வரை நிமிர்ந்து பார்க்க தூண்டியது..

" விஷ் யூ ஹேப்பி பர்த் டே.." என்று தோழிகள் வகுப்பறையின் வாயிலிலேயே வாழ்த்து பாட.. அவளது சந்தோஷத்தில் மேலும் அழகு மெறுகு ஏறியிருந்தது.

அந்த புகைச்சலை அடக்க முடியாமல் தீபூ.. மீண்டும் நிதினை நினைவுப்படுத்த.. உள்ளுக்குள் கனன்றாலும்.. தன் செயலை தீவரப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து.. தயங்காமல் அவனுடைய வகுப்பறைக்குள் நுழைந்தாள் .

விண்ணில் இருந்து இறங்கி வந்த பேரழகியாக அவள் இருக்க.. பார்த்த நொடி முதல் பசங்களுக்கு.. பனிகட்டியில் இருக்கும் நினைவில் குளுகுளு என்று இருந்தார்கள்.. சிலர் வெளிப்படையாக ரசிக்க.. சிலரோ.. பார்த்தும் பார்க்காமலும்.. அவன் ஒருவனை தவிர.. நிதின் நெடு நெடுவென இருப்பதால் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தான் . அவனைத் தேடி பார்வை அலைய.. அருகில் இருந்தவனோ ,

" டேய்.. நிதின்.. நிமிர்ந்து பாருடா.. நான் சொல்லுவேன்ல காலேஜ் குயின்.. வந்திருக்குடா.. பாரு.. ", என்று சுரண்டிக் கொண்டிருந்தான் அஷ்ரஃப்..

இந்த ஒரு மாதத்தில் நிதினுடைய நட்பு அவனிடத்தில் மட்டுமே.. அவனோடு இருப்பவர்களிடம் புன்னகையோடு நின்றுவிடுபவன்.. விடுதியில் ஒரே அறை என்பதாலோ.. அவனிடம் மட்டும் நன்கு பேசுபவனாய் இருந்தான் . நிதின் பேசினானோ இல்லையோ.. மச்சான் என்று கல்லூரி வாலிபர்களுக்கே உரிய நெருக்கத்தை பசக்கென்று காண்பித்து அவனோடு ஒட்டிக் கொண்டான் .

அஷ்ரஃப் வாயில் இருந்து தினமும் வரும் பெயர் மிதா.. காலேஜ் குயின்.. இன்னைக்கு என்னை பாத்தா மச்சி.. சிரிச்சாடா.. என்பது போலவே இருக்கும். இதுவரை வராதவள் இன்று வந்திருக்க.. அனைவரின் பார்வையும்.. அவளிடம் நிலைத்திருக்க.. " ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. இன்னைக்கு என்னோட பிறந்தநாள்.. ஸோ.. மார்னிங் அன்ட் ஈவனிங் பேரேக் செலவு என்னோடது.. எல்லோருக்கும்.. பாய்.. " என்று அவன் நிமிர்ந்து பார்த்ததும் வெளியேறிவிட்டாள் .

ஏதோ ஒரு மூலையில்.. ஏமாற்றம் பரவியது போல் இருந்தது.. அனைவரும் அவளை பார்த்த பிறகும் சரி.. அவனுடைய நண்பன் சுரண்டிய பிறகும் சரி.. அவன் பார்வை எழுதிக் கொண்டிருந்த ஏட்டிலும்.. பக்கம் பக்கமா திரும்பிக் கொண்டிருந்த புத்தகத்திலுமே இருக்க.. அதில் கோபம் கிளர்ந்தெழவே செய்தது அவளுக்கு .. உடனே அவன் சட்டையை பிடித்திழுத்து.. அவளை பார்க்க வைத்துவிடும் வேகம்.. அதற்காகவே.. அவள் பேசினாள்.. அவள் அங்கு வந்ததும் அவனது பார்வையும் அவளிடத்தில் பதியும் அப்பொழுது தெனாவட்டாக.. அழைக்கலாம் என்ற நினைப்பில் இருந்தவளை , அவன் செயல் பொய்யாக்கி இருந்தது .

அவள் பேசும் வரை என்ன சொல்கிறாள் என்பதில் மட்டுமே கவனித்தவன்.. அதன் பிறகு.. அவள் வெளியேறுவதற்குள்ளாகவே.. குனிந்து தன் வேலையை தொடங்கிவிட்டான் .

அவள் சொல்லியதற்காகவே.. கேண்டினில் பலர் இருக்க.. அதையும் நிதின் தவிர்த்துவிட்டான் . " டேய்.. மிதா இன்னைக்கு உன்னையே பார்த்து பேசுனா டா.. நீ என்னன்னா.. நிமிர்ந்தே பார்க்கலை.. வாடா.. கேண்டின்ல இருப்பா.. கன்ஃபார் பண்ணீடலாம்.." என்று தொண தொணத்தவனிடம்..

" அஷ்.. எனக்கு அவங்க யாருன்னே தெரியாது.. அப்புறம் எப்படி அவங்க குடுக்குற ட்ரீட்டை எடுத்துக்க முடியும்.. வேணும்னா.. பர்த்டே விஷ் நான் சொன்னேன்னு நீயே சொல்லீடு.." என்று தன் வேலை முடிந்ததாக.. மீண்டும் கரத்தில் இருந்த புத்தகத்திற்குள் புகுந்துக் கொள்ள..

" அவனவன்.. அவ நம்மல பாக்க மாட்டாளா ஏங்கீட்டு இருந்தா.. நீ இப்படி பேசீட்டு இருக்க.. போடா டேய்.. உன் கூட பழகுனதுக்கு வச்சு செய்ற டா.. " என்று பிதற்ற..

இவை அனைத்தும் கண் கொத்திப் பாம்பாய் சுற்றிக் கொண்டிருக்கும் தீபன்யாவின் காதுகளில் விழ துள்ளி குதித்தாள்.

அடுத்த நிமிடமே ஏகத்தாளமாக , மிதாவிடம் சொல்லவும்.. ஏற்கனவே , வாடி இருந்தவள்.. தீபூவின் கேலியும் சேர்ந்து.. கோபத்தால் சிவந்திருந்தது எவ்வளவோ ஆதிரா தடுத்தும் கேட்காதவளாய் நிதினை தேடி சென்று விட்டாள்.

அவனுடைய வகுப்பறையிலோ.. நிதினை தவிர.. யாரும் மற்று இருக்க மிகவும் வசதியாகி போனது.

" ஹாய்.. நிதின்.." என்று மிக நெருக்கமாக நின்று அழைத்த அழைப்பில் நிமிர்ந்தவன்.. மிதா இருக்கவே.. 'என்ன ' என்பது போல் பார்த்தாலும்.. வாய் திறக்கவில்லை..

அலை அலையான கேசம்.. மொழு மொழுவென தாடி மீசைகளற்ற முகம்.. சாந்தம் வழியும் கண்களாய் இருந்த போதும்.. கேள்வியாய் ஏற்றிட்டிருந்த விழிகள்.. வலுவான கரங்கள் இரண்டும் முன்னிருந்த பலகையில் இருக்க.. அவனுடைய நிறத்தை எடுத்துக் காட்டும் விதமாக அணிந்திருந்த அடர் நீல சட்டை என்று அவனை வீழத்த வந்தவள்.. கொஞ்சம் கொஞ்சமாக.. அவனிடத்தில் தன்னை அறியாமலேயே வீழ்ந்துக் கொண்டிருந்தாள் .

பதிலற்று சிலை போலவே நிற்கவும்.. மெதுவாக எரிச்சல் படர்ந்தாலும்..  அசையாமல் தயக்கமே சிறிதுமின்றி.. அவனை பார்வையால் நெருக்கமாக நின்று அளவிட்டுக் கொண்டிருந்த செயலால்.. அவனே திகைக்க நேர்ந்திருந்தது .

ஒருக்கட்டத்தில் , யாரும் வந்துவிட்டுவார்களோ என்று தோன்றவும்.. அவளது முகத்திற்கு நேராக சொடுக்கிட்டவன்.. " வாட்.. என்ன வேணும்.." என்றான் .

" பர்த் டே விஷ்ஷஸ்.. " என்றாள் மயக்கம் தெளியாமலேயே..

" வா.ட்.." என்று அதிர்ந்தாலும்.. "நான் ஏன் சொல்லனும்.. ' என்று வெளி வரத் துடித்த வார்த்தைகளை முழுங்கியவனாக..

" விஷ் யூ ஹேப்பி பர்த் டே.." என்றான் .

அழகாய் பளீரென சிரித்தவள்.. " நீ ஏன் கேண்டீன் வரலை.." என்றதும்.. அவள் நீ என்று விழித்ததை விரும்பாதவனாய்.. அதேசமயம்,தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் .. "தேங்க்ஸ்.. பட் .. ம்ச்சு.." என்று ஒரு தோள் குழுக்களோடு நிறுத்திவிட..

" பரவால்லை.. அங்க ட்ரீட்டுக்கு போகலேனா.. என்ன.. நான் இங்கேயே உங்களுக்கு தரேன்.." என்றதும்.. இரு புருவங்களை சுழித்து வெளிப்படுத்த.. துளி யோசனையுமின்றி.. அவனது கன்னத்தில் இதழ் பதித்து ,

" ஐ லவ் யூ.." என்று அவனுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியேறிவிட்டாள் .

நிதின் நிலையோ, மிகவும் மோசமானதாக இருந்தது . எதையும் நினைத்திருக்காதவன் முன் அவளது பிரசன்னமே.. ஆச்சரியம் என்றால்.. இது அவன் எதிரே பார்க்காதது.. முதலில் திகைத்து.. பின் அதிர்ந்து.. "எவ்வளவு தைரியம்.." என்று பொங்கி எழுந்த நிலையில் ஒவ்வொரு ஒருவராய் மாணவர்கள் வகுப்பிற்குள் வரவும்.. அப்படியே அமர்ந்துவிட்டான்.

நண்பனின் முகம் பார்த்த பிறகே , எங்கே அவளது இதழ் பூச்சு தன் கன்னத்தில் ஒட்டிக் கொண்டு காட்டிக் கொடுத்து விடுமோ.. என்ற அச்சம் பிறக்க. அழுத்தமாக.. தன் கைகளால் துடைத்தான்.. அவளது இதழில் இருந்த மென்மையை உணர்த்திடாமல் இருக்கவும்.. வேகமாக தலையை உதறி.. படிப்பிற்குள் தலையை புதைத்து.. அதில் ஆழ்ந்து வெற்றியும் கண்டுவிட்டான் .

Weiterlesen

Das wird dir gefallen

2.6M 149K 43
"Stop trying to act like my fiancée because I don't give a damn about you!" His words echoed through the room breaking my remaining hopes - Alizeh (...
690K 40K 35
|ROSES AND CIGARETTES Book-I| She was someone who likes to be in her shell and He was someone who likes to break all the shells. °•°•°•°•° "Junoon ba...
3.8M 114K 116
Dr. River Johnson didn't know the consequences of sleeping with the Capo of the Sicilian Mafia. She didn't even remember his name or face. But then t...
2.9M 186K 89
What will happen when an innocent girl gets trapped in the clutches of a devil mafia? This is the story of Rishabh and Anokhi. Anokhi's life is as...