எனக்காகவே பிறந்தவள்

Autorstwa SindhuMohan

21.5K 635 242

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை Więcej

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 24

226 8 0
Autorstwa SindhuMohan

மீரா கையில் இருந்த பாக்கெட்டில் இருந்த சிப்சை எடுத்து வாயில் வைய்பதும், பாடலை ஒளிபரப்பிக் கொண்டு இருந்த தொலைக்காட்சியை ஒரு பார்வை பார்ப்பதும், கௌசிக் கை ஒரு பார்வை பார்ப்பதுமாக இருந்தாள்.

ஆனால் கௌஸிக்கோ அவளது செய்கைகளை கவனித்தான் இல்லை. அவனது லேப்டாப்பில் மூழ்கியுள்ளான் என்பது அவனது நெரிந்த புருவங்களில் உணர முடிந்தது...

கௌசிக், நான் உன்னிடம் என் மனதை சொல்லவே மாட்டேனா? விநாயகா ஏன் இப்படி பண்ற ? அவனை காதலித்து கொண்டு அதை வெளிப் படுத்தாமல் அவனுடன் நாட்பாய் பழகுவது எவ்வளவு கடினமாய் இருக்கு தெரியுமா? அவனிடன் என் காதலை சொல்லவும் பயமா இருக்கு.. நான் என்ன தான் செய்றது..? என்று மனதிற்குள் புலம்பியபடியே அவள் அமர்ந்திருக்க ,அதை கலைக்குமாறு அவளது தங்கை சிவ ரஞ்சனியிடம் இருந்து அழைப்பு வந்தது..

(சிவ ரஞ்சனி மற்றும் தன ரஞ்சனி இருவரும் மீராவின் சித்தப்பா வசந்தனின் மகள்கள்...முறையே ஒருத்தி கல்லூரி கடைசி வருட பரிட்சை எழுதியிருக்க, இரண்டாமவள் 11 வகுப்பு போகிறாள் )

கௌசிக்கிர்க்கு தான் பேசுவது வேலைக்கு தடையாய் இருக்கும் என்று தன் வீட்டுக்கு விரைந்து வந்தாள்..

சொல்லு சிவா... இந்நேரத்தில் கூப்பிட்டு இருக்கிறாய்?

அக்கா...

சொல்லு டி..

உன்னோட வீட்டுக்கு எதிர்க்க கௌசிக்குன்னு ஒருத்தர் இருக்கார்ல, அதான் மும்பை ல இருந்து வந்தவர், நல்ல பையன் என்று எல்லாம் சொன்னியே?

ஆ... ஆமா .. ஏன்? என்ற திணறலோடு மீரா வினாவ

உனக்கும் அவருக்கும் டும் டும் டும் பண்ணலாமா என்று பேசிட்டு இருக்காங்க...

சிவா சொன்ன சொற்கள் அவளது மூளையை ஸ்தம்பிக்க செய்தது.

அக்கா... ஹலோ...ஹலோ...

இ..இரு...இருக்கேன் சிவா...

லையன் கட்  ஆகிவிட்டது என்று நினைச்சேன்..

இப்படி ...யா...யார் சொன்னா உன்னிடம்?

அது லலிதா ஆன்டி அம்மாவிடம் உனக்கு அந்த கௌசிக் கை பார்க்க சொன்னாங்க...

சி..சித்தி என்ன சொன்னாங்க... ?

அப்பா வந்த பின்னர் கேட்டு சொல்றதா சொல்லிருக்காங்க...

அவள் சொல்ல சொல்ல மீரவிற்கு இறக்கை கட்டி பறப்பது போல இருக்க... இனம் புரியாத ஒரு உணர்வு உடம்பு முழுவதும் பரவியது... இதயம் சந்தோசத்தில் துள்ளிகுதிக்க... நிற்க முடியாது அங்கேயே கீழே அமர்ந்தாள்...

கடவுளே ...விநாயகா... பிளீஸ் பிளீஸ் ... சித்தப்பா சித்தி ஒத்துக்கணும்... பிளீஸ் பிளீஸ்...

அக்கா... இருக்கியா?

ஹ்ம்ம்... சொல்லு...

அந்த அண்ணா உன் க்ளோஸ் ப்ரெண்ட் தானே?

ஹ்ம்ம்...

ஒஹ்... அண்ணா இல்ல மாமா தானே?

அவள் அப்படி கேட்டவுடன் மீராவிர்க்கு முகம் சிவந்தது... மாமா...என்று தனக்குள்ளே சொல்லிப் பார்த்தாள்..

சரி அவங்க ஃபோட்டோ இருக்கா?

ஹ்ம்ம்... என்று தன்னை அறியாமல் சொன்னவள் ... பின்பு சுதாரித்து இல்லை என்றாள்..

பொய் சொல்லாத மீரா அக்கா.. நீயும் மாமா வும் ஃப்ரெண்ட்ஸ் என்று நீ தான் சொல்லி இருக்கிறாயே... ஃபோட்டோ கூடவா இல்லை...

அது...

நான் எல்லாம் அம்மாவிடம் போட்டு விடமாட்டேன்னு உனக்கே தெரியும்...

அப்படி இல்லை... இரு அனுப்பறேன்...

சூப்பர்... ஆனா தனா கேட்டா ஏதும் உளறி கொட்டாத... அப்படியே அம்மாட்ட கோர்த்து விற்றுவா! தெரியும் தானே?

ஹ்ம்ம்...

சரிக் கா  .. நான் வைய்க்கரேன்...

சரி டி..

என்று வைத்துவிட்டு கௌசிக் புகைப்படத்தை சிவா விற்கு அனுப்பினாள்

செம்மையா இருக்காரு மாமா...  சோ ஹாட் அண்ட் ஹேன்ட்சம் அக்கா..

அவரு எனக்கு பார்த்திருக்கவர் டி...

அடடே இப்பையே பொறாமையா? சரி சரி நீயே சைட் அடுச்சுக்கோ... எனக்கு என்று என்னோட ராஜ குமாரன் பிளைட் ல வருவான்...

கண்டிப்பா வருவான் என்று இவள் மனதார சொல்ல...

மை சுவீட்டி... உம்மா...  என்று கொஞ்சிவிட்டு...  சரிக்கா நீ கனவில் இரு... டாடா

Bye டி..

என்று வாட்சப் பை விட்டு வெளியே வந்தவள் கௌசிக் கின் புகைப்படத்தை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தாள்..

இவள் தனது சித்தி சித்தப்பா ஒத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் கௌசிக் ஒத்து கொள்வதை பற்றி கடவுளிடம் வேண்டாமல்  விட்டுவிட்டாள்.. அப்படி ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்.

திரும்ப கௌசிக் கின் அறைக்கு வந்தவள் ,அங்கே அவன் வேலையை முடித்து விட்டு தொலைக்காட்சியை பார்த்துகொண்டு இருந்தான்.

அவனது அருகில் சென்று அமர,

அவனோ அவளை திரும்பி கூட பார்க்காது நேஷனல் ஜியாகிரபியில் மூழ்கி இருந்தான்.

ஆனால் இவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஏதோ தோன்ற கௌசிக் திரும்பி பார்த்தான் , அவனது பார்வையை எதிர் பார்க்காதவள் பதறி தன் பார்வையை சட்டென்று தன் கையில் இருந்த ஃபோனில் பதித்தாள்... இருந்தாலும் அவளது இதயம் மட்டும் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தது.

அவளது செய்கையை கண்டவன் முகம் கனிந்தது..

அன்று தான் வெளிநாடு செல்ல போகிறேன் என்று சொன்னதில் இருந்து அவள் தன்னிடம் எதையோ சொல்ல வருவதும் ,ஆனால் அதை சொல்லாமல் தன்னையே அவள் வருத்திக் கொள்வதும் அவன் அறிந்து தான் இருந்தான் ... ஆனால் இப்பொழுதே அவள் மனதில் இருக்கும் எண்ணத்தை அழித்துவிட வேண்டும் ,இல்லையென்றால் பின்னாட்களில் அவளுக்கே சங்கடம் , என்று அவளை அந்த நிலையில் காணும் போது எல்லாம் நான் உன்னுடன் இருப்பேன் மீரா என்று கூறி அணைக்க தோன்றும் எண்ணத்தை கடினப்பட்டு அடக்கினான்.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து தன் மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தவள் ஒரு புகைப்படத்தை பார்க்க வேறு பேச்சை பேசுவதற்காக அதை கௌஸிக்கிடன் காண்பித்தாள்.

கௌசிக் இங்க பாரேன் , நம்ம போன மால்... ராகுல் அவங்க டிபார்ட்மெண்ட் எல்லாம் போயிருக்காங்க என்று தன் ஃபேஸ்புக் இல் வந்த ஒரு புகைப்படத்தை காண்பித்தாள்.

அதில் ராகுல் லை கண்டவுடன் கௌசிக் கின் முகம் கடினப்பட்டது...

அவன் கூட எல்லாம் ப்ரெண்ட் ஆ
இருக்கியா?

அவன் குரலில் தெரிந்த அதிருப்தியில் , இ..இல்லை கௌசி, எங்க ஆபீஸ் குரூப்ல வந்திருக்கு...

ம்ம்...

அவளும் அமைதியாகி விட... சிறிது நேரம் இடைவெளி விட்டவன், மீரா அந்த ராகுல் கூட எல்லாம் பழகரது உனக்கு நல்லது இல்லை... என்று விட்டு அங்கிருந்து அகன்றான்..

அவன் சமையல் அறைக்கு செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தவள்... ஏன் கௌசிக்கிர்க்கு ராகுல் லை பிடிக்கவில்லை... அவன் நல்லவன்னு பழகினால் தானே தெரியும் ... பழகாத ஒருத்தனை பற்றி எப்படி இப்படி சொல்லலாம்.. போ கௌசிக்... இந்த விஷயத்தில் உன்னை என்னால ஏத்துக்கவே முடியலை என்று மனதால் அவள் பேசினாள்.

ஆனால் அவள் அறியவில்லை கௌசிக் கைப் பற்றி.. அவனின் திறமையும், கணிப்பும் எவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை... அதை அவள் சீக்கிரமே உணர்ந்து கொள்ள ஒரு நாள் வரும் கூடிய சீக்கிரமே.

ஆனால் அன்று இவளது நிலை!?

.
.
.
.
.

தான்வி...

சொல்லுங்க பாட்டி...

அடுத்த வாரத்தில் உன்னோட பரீட்சை எல்லாம் முடியுது தானே ?

ஆமாம் பாட்டி

அப்போ உனக்கு பரீட்சை முடிஞ்சா அடுத்த நாளே கோயம்புத்தூர் கிளம்பலாம்... டிக்கெட் போட்டு விடு..

அதுக்குள்ளே வா

ஏன்? அதில் உனக்கு என்ன பிரட்சனை?

இல்ல பாட்டி, ஒரு வேளை கௌசிக் அண்ணா மறுபடியும் மனசு மாறலாம் இல்லையா?

கண்டிப்பா அப்படி நடக்காது.. அவனை சிறு வயதில் இருந்தே பார்த்திட்டு இருக்கேன்.

ம்ம்... ஆனா கண்டிப்பா நீங்க இப்படி பண்ண தான் போறீங்களா?

ஆமா... போய் முதலில் இருவர் மனதிலும் இருவர் மேலும் அன்பு இருக்கான்னு நேரில் தெரிஞ்சிட்டு அடுத்த வேலையை பார்க்கனும்... நீ மறக்காமல் டிக்கெட் போட்டு விடு.

ம்ம்... சரி பாட்டி.

நானும் கௌசிக்கிரக்கு சொல்லிவிடுகிறேன் என்று அவனை அழைத்து சொல்லிவிட்டார்.

என்ன நடக்குமோ!!!
.
.
.
.
.
சிவா ஃபோன் பண்ணி இவ்வளோ நாள் ஆச்சு... இன்னும் சித்தப்பா ஊர்ல இருந்து வரலை... அவரு வந்து எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி ... கடவுளே எவ்ளோ நாள் நான் காத்திருப்பது... கௌசிக் கிடம் என் மனதை சொல்லாமல் அடக்கி வைப்பதற்கு நான் படுகிறபாடு பத்தாது என்று என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு மனதை வாட்டுகிறது... தூக்கம் கூட வருவது இல்லை... பிளீஸ் சீக்கிரம் அவர்களை ஒத்துக்கொள்ள வைய்யேன் என்று கடவுளிடம் மன்றாடியபடி ஆபீஸில் கணிப்பொறி முன் அமர்ந்திருந்தாள்.

ஹாய் மீரா..

நிமிர்ந்தவள் ராகுல் லை பார்த்தவுடன் எழுந்து நின்றாள்..

ஹாய்...

என்னங்க ஒவ்வொரு தடவையும் நீங்க லஞ்ச் டைமில்  சோகமாகவே இருக்கீங்க?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை...

சொன்ன நான் ஏதேனும் ஹெல்ப் பண்ணவேன்.

இல்லைங்க ... அது எல்லாம் ஒன்னும் இல்லை... ஏதோ ஒரு யோசனை..

என்னவோ...

ம்ம்...

இன்னும் சாப்பிடவில்லை இல்லையா நீங்க?

ஆமா... இனி தான்... ம்ம்.. நீங்க ?

நான் என்ன? கண்ணை சிமிட்டி விளையாட்டாக அவன் கேட்க..

அவன் செயலில் உதடு கடித்து புன்னகையை அடக்கினாள்.

அது நீங்க சாப்ட்டாச்சா என்று கேட்டேன்..

ஓஹோ ... நானும் கூட யாருன்னு என்னை மறந்து விட்டீர்களோ என்று பயந்துவிட்டேன் .

இல்லை இல்லை...சாப்படறதுக்கு தான் கேட்டேன் .

அதானே ,மீரா என்னை எல்லாம் மறக்க மாட்டாங்க , அப்படி தானே ?

ம்ம்... என்று புன்னகைக்க

எதிர் பாரா விதமாக அவளது உதட்டருகில் அவன் கை விரல்களை  கொண்டு வந்தான் ,அதை உணர்ந்து அவனது செயலில் பதறி பின்னால் நகர்ந்தவள், அங்கிருந்த சேர் ரில் அப்படியே தடுக்கி கீழே விழுந்தாள்..

ஹேய் மீரா ...பார்த்து ...என்று அவன் தூக்கிவிட வர அவளே வேகமாக எழுந்து நின்றாள்..

I am sorry Meera... நான்.. அப்படி.. கண்ணடில பாருங்க  என்று அவன் முகம் சோகமாய் வைத்து சொல்ல... என்ன முகத்தில்? என்று முணுமுணுத்தபடியே  பர்ஸில் இருந்த கண்ணாடியில் முகத்தை பார்க்க அதில் கன்னத்தில் இருந்த பேனா கிறுக்கல் தெரிந்தது ..

(எல்லாம் நம்ம மீரா யோசிக்கிறேன் என்று கன்னத்தில் தட்டிய போதும் ஏற்பட்டது தான்)

அட அவன் அதை சொல்லிக் காமிக்க தான் தன் கையை கொண்டு வந்திருக்கிறான்... தான் தான் எப்பையும் போல ஓவர் ரியாக்ட் ஆகியிருக்கிறோம் என்பது புரிந்தது...

Sorry மீரா... நான் வாயில சொல்லி இருக்கணும்.. தெரியாமல்..

பரவலைங்க... நான் தான் உங்க கிட்ட sorry கேட்கணும் அப்படி நடந்து கிட்டதுக்கு..

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... நீங்க நடந்து கிட்டதில் எந்த தப்பும் இல்லை.. சோ டோண்ட் வொர்ரி.

அவனது புரிதல் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க மனமார நன்றி சொன்னாள்.

தேங்க்ஸ்...

சரி நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாருங்களேன்..

என்ன?

இன்னிக்கு என்னோட பர்த்டே..

ஓ.. ஹேப்பி பர்த்டே ராகுல் சார்...

வெறும் விஷ் மட்டும்தானா மீரா, கிப்ட் இல்லையா?

உங்க பர்த்டே இன்று என்று எனக்கு தெரியாது சார்.. நான் நாளைக்கு ...

ஹா ஹா... சும்மா கேட்டேன் மீரா.. பட்.. நீங்க இன்னிக்கு சாயந்திரம் எங்க வீட்ல நடக்கப் போற பார்ட்டில கலந்துகொள்ள வேண்டும்... அதுவே என்னோட கிப்ட் தான்..

பார்ட்டி... நான்... நான்... பார்ட்டி எல்லாம் போனது இல்லை சார் .

எனக்கு தெரியும் ... இது வீட்ல நடப்பது... ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான் இருப்பாங்க ... அதனால் நீங்க கண்டிப்பா வரீங்க... நான் யாருக்கும் சொல்லலை... உங்களுக்கு தான் ஸ்பெஷல் அழைப்பு... கண்டிப்பா வரணும் ...இது இந்த பர்த்டே பாயோட ஆசை...

ஆனா...நா...

நோ... எதும் சொல்லாதீங்க ...  என்னிடம் உங்க நம்பர் இருக்கு...அட்டிரஸ் உங்களுக்கு செண்ட் பண்றேன்... சோ, நீங்க வரீங்க... ஓகே யா... பை.. சாயங்காலம் சந்திப்போம்...

என்று அங்கிருந்து அவள் மறுக்கும் முன்பு சென்று விட்டான்..

இது என்னடா வம்பு... எனக்கு போக இஷ்டம் இல்லை... ஆனா இவளோ தூரம் கூப்பிட்டு இருக்கிராரே அவரே வந்து, அதும் நான் பண்ணியதை கூட மனதில் வைத்துக்கொள்ளாமல்... சரி போவோம் ,அதும் வீட்டுக்கு தானே.. என்ற முடிவோடு சாப்பிட சென்றாள்.

என்ன நடக்குமோ...

Next update la paarkalam friends...

Indha update eppadi irunthaathu nu comment pannunga... Apdiyae vote pannunga...

Silent readers neenga kooda vote pannalam... Illaina ethenum kutram kurai irunthaal sollunga ... Correct pannikaraen... Thank you dears.

Czytaj Dalej

To Też Polubisz

49.8K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
131K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
43.6K 4.9K 49
தன் பெற்றவர்கள் யாரென்றே தெரியாத நிலையில், தன் காயங்கள் எல்லாம் தானாக குணமடையும் அதீத ஆற்றல் கொண்ட, கதாநாயகன்... ஏதோ ஒரு காரணத்திற்காக கருணை இல்லத்தி...
248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.