டிங் டாங் காதல்

By Bookeluthaporen

14.7K 777 159

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 6
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 9
டிங் டாங் - 10
டிங் டாங் - 11
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 15
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 23
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 24

521 28 7
By Bookeluthaporen




வைஷ்ணவி - கார்த்தி திருமணம் முடிந்து இன்றோடு ஐந்து மாத காலம் முடிந்தது. இருவரும் குற்றாலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறியிருந்தனர்.

திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் இருவரையும் இங்கு அழைத்துவந்து பால் காய்ச்சி அவர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கிவிட்டார் வைஷ்ணவி தந்தை. கார்த்தி எவ்வளவோ மறுத்தும், தந்தையானவர் கேட்டபாடில்லை. நினைத்ததை செய்து முடித்தே நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார்.

வைஷ்ணவி, கார்த்திக்கு அந்த வீடு சொர்கமானது அந்த ஐந்து மாதத்தில். கீழ் வீட்டில் வயதான தம்பதி இருக்க, மேல் மாடியில் சிறிய அளவான வரவேற்பறை, ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு சமையலறை இருக்க, அந்த வீட்டின் அளவை விட பெரிதாக மாடி மொத்தமும் காலியாக இருந்தது.

மனைவி ஆசைப்பட்டு கேட்க, இரண்டுபேர் அமரக்கூடிய வகையில் ஊஞ்சல் ஒன்றை வாங்கி போட்டு அதை சுற்றி திரைசீலை போலே ஷெட் ஒன்றையும் போட்டுவிட்டான்.

அங்கு அமர்ந்தபடியே தூரத்தில் சிறு ஓடை போல் தெரிந்த குற்றால அருவியை தினம் பார்த்து ரசிக்கும் வைஷ்ணவிக்கு தான் மகிழ்ச்சியில் மொத்தமும் மறந்து போகும். பல நாட்கள் கணவனையும் மறந்து இயற்கையோடு ஒன்றிவிடுவாள் பாட்டை போட்டுவிட்டு.

ரிசார்ட் வியாபாரம் நன்றாக செல்ல, ஸ்விக்கி, ஸ்ஜோமோட்டோ என வியாபாரம் நன்றாக சூடு பிடித்தது. குடும்பமாக வந்து தங்க ஸ்விம்மிங் பூல், சிறுவர்கள் பூங்கா என குடும்பமாக அதிகம் வந்து செல்ல துவங்கினர்.

பொழுது போகாத நேரம் கார்த்தியின் ரிசார்ட் சென்று அங்கு சமயலறைக்குள் சென்று அங்கிருப்பவர்களை கேலி செய்து கிண்டல் செய்து, சமையல் கத்து தருமாறு தொந்தரவு செய்து என ஒரு போரையே உருவாக்கிவிடுவாள்.

கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் வெளியில் இருக்கும் கார்த்தி, கூட்டம் அதிகம் வந்தால் கிச்சனுள் சென்றுவிடுவான். அதனால் அவளும் கார்த்தி அங்கு இல்லாத நேரம் தான் அங்கிருக்கும் கார்த்தியின் ஜூனியர்களை தொந்தரவு செய்வாள்.

அவர்களும், "அதான் சீனியர் வீட்டுல இருக்கறப்ப கேக்க வேண்டியது தான க்கா? ஏன் இப்டி எங்க உயிரை வாங்குறீங்க?"

அவளோ, "உங்க சீனியர்க்கு உங்க அளவுக்கு சமைக்க தெரியாதுடா..." என ஒரு கட்டி ஐஸை வைத்துவிடுவாள்.

"சரி உனக்கு நான் செஞ்சு குடுக்குறேன், ப்ளீஸ் கத்திய ஒழுங்கா புடி கை வெட்டிக்கும்... க்கா க்கா க்கா பாத்து க்கா" அவர்களை போல் வேகமாக கை வெட்டுகிறேன் என்னும் பெயரில் கோணல் மணலாக கத்தியை பிடிக்க கதறினான் அவன்.

"ஏன்டா காக்கா மாதிரி கத்திட்டு இருக்க... பட்டர்" என்றாள்.

"யாரை பாத்து வென்னைனு சொல்ற?" சண்டைக்கு நின்றான் சின்னவன்.

"டேய் பட்டர் எடு-னு சொன்னேன்" சமாளித்தவள், "என்னடா இந்த ஸ்டவ் விசித்திரமா இருக்கு, எப்படி பத்த வைக்க?" என ஆராய அதற்குள் கார்த்தியிடம் விசியம் சென்று அவளை கை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான்.

"போர் அடிக்கிதுன்னு தான வந்த? சும்மா வேடிக்கை பாத்துட்டு போகாம இது என்ன பசங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு?" கடிந்தான் கணவன்.

"இல்லங்க இன்னைக்கு நைட் என்ன பண்றதுன்னு தெரியல, அதான் இங்கையே சமைச்சிட்டு போய்ட்டா வேலை மிச்சம்ல?"

அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன், "என் மக்கு, என்கிட்ட சொன்னா நான் செஞ்சிட மாட்டேன்? ஆமா அங்க என்னமோ சொன்னியே என் சமையலை பத்தி"

மாட்டிக்கொண்டதில் முழித்தவள், "என் புருஷன் சமையல் பக்கத்துல கூட நீ வர முடியாது-னு சொன்னேன், உங்களுக்கு தப்பா கேட்டருக்குமோ?"

அவளை ஆராய்ச்சியாய் முறைத்தவன், "வா உன்ன வீட்டுல விட்டுட்டு வர்றேன்" மனைவி கை பிடித்து கார்த்தி பார்க்கிங் நோக்கி அழைத்து சென்றான்.

இல்லம் வந்ததும் வீட்டின் வெளியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன், "ஒரு டீ போட்டு தர்றியா டா?" எனவும் சரி என போட்டு எடுத்து வந்தவளை தன் மடி மீதி அமர்த்தி அவளோடு கதைகள் பல பேசி முடிக்கவும்,

"நாளைக்கு ஊருக்கு போகலாமா?"

கணவன் மார்பின் மீது வைஷ்ணவி சாய்ந்திருக்க அவனோ அப்பொழுது கைபேசிக்கு வந்த ஏதோ ஒரு குறுந்செய்தியை பார்த்தபடி இருக்க கைபேசியை பிடிங்கி மீண்டும், "நாளைக்கு ஊருக்கு போகணும்" செய்தியை கூறினாள்.

"ஏன் நாளைக்கு?"

"இன்னும் ஒரு வாரத்துல ஷெர்லின் கல்யாணம் இருக்கு சமயலு" சட்டையினுள் இருந்த அவன் மெல்லிய தங்க சங்கிலியை எடுத்து விளையாட துவங்கியது அவள் கைகள்.

ஷெர்லினிடம் காதலை கூறி அந்த நாளே அவள் தந்தையிடம் சென்று தன்னுடைய விருப்பத்தை கூறி திருமணத்திற்கு அனுமதி வேண்டி நின்றான் சுந்தர் அன்னை தந்தையை அருகில் வைத்து. இருமானதாய் தத்தளித்த ஜேம்ஸ் அமைதியை புரிந்து அமைதியாய் அவருக்கேற்ற சில இடைவெளியைவிட்டு.

மூன்று மாதங்கள் மகளின் முகத்தை பார்த்து யோசித்துக்கொண்டே இருந்தார் ஜேம்ஸ், பிறகு தந்தையின் முடிவில் விட்ட மகளின் உள் மனதை மனைவியின் மூலம் தெரிந்து மக்களுக்காகவே முழு மனதாய் திருமணத்திற்கு சம்மதம் கூறி, இதோ இன்னும் ஒரு வாரம் மட்டுமே ஷெர்லின் திருமணத்திற்கு இருப்பது.

"ரெண்டு நாள் முன்னாடி போகலாமேடா..." அவள் நாடியில் ஒட்டியிருந்த டீ நுரையை துடைத்தவன் கெஞ்சலாக மனைவியிடம் வினவினான்.

"ரெண்டு நாள் முன்னாடி போய் என்ன பண்றது கார்த்திக்? அவளுக்கு மேக்அப், ஹேர்ஸ்டைல் எல்லாம் பாக்கணும்ல?"

"அப்போ என்ன யார் பாப்பாங்க?" அலைபாய்ந்து தன்னவளின் மொத்த சிந்தனையையும் தன்னிடம் வந்து நிறுத்தவைதான் கார்த்தி.

"நீங்க டெய்லி அங்க வந்துடுங்களேன்..." அவனின் தவிப்பை உணர்ந்தவள் கண்கள் சுருக்கி அவனிடம் கெஞ்சினாள்.

வைஷ்ணவியை லேசாக முறைத்த கார்த்தியோ, "எல்லாத்துக்கும் பதில் வச்சிட்டு போகணும்னு ஒரு முடிவோட தான் இருக்கியா?" வைஷ்ணவி காதுகளோடு தன்னுடைய மூக்கை உரசி அவன் வினவியது அவளை அவன் வசம் வீழ செய்தது.

"போகணும் கார்த்திக்..." திணறியது அவள் வார்த்தைகள், "ஷெர்லின் வெயிட் பண்ணுவா"

மனைவியின் கன்னம் தாங்கியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து, "சரி நாளைக்கு காலைல வெள்ளன போகலாம், நைட் நான் பதினோரு மணி மேல தான் வருவேன், நீ படுத்து தூங்கு" என மனைவிக்கு செல்லும் பொழுது, "வீட்டை பூட்டிக்கோ டா. நான் சாவி எடுத்துக்குறேன்" என ஆயிரம் அறிவுரைகள் சொல்லி சென்றான்.

மாலை மணி ஐந்தை ஒட்டி இருந்த நேரம், கடைக்கு அதிகம் மக்கள் வராமல் இருந்தனர். இரவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடும் முக்கால்வாசி நடந்திருக்க இப்பொழுது மாலை சிற்றுண்டி வேலை தான் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த நேரம் கார்த்தியின் பாட்டியிடம் அவனுக்கு அழைப்பு வர, வெளியில் வந்தவன், "பாட்டி சொல்லுங்க, நல்லா இருக்கீங்களா?" என்றான் ஆசையாக.

வாரம் ஒருமுறையேனும் பேரனை பார்த்துவிட வேண்டும் சேர்மதாய்க்கு, இல்லையெனில் அவருக்கு பித்து பிடித்தார் போல் இருக்கும்.

"ராசா நான் கேப்பேன், மனசுல இருக்கத மறைக்காம பேசிபோடனும் இந்த கெழவிகிட்ட" தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் காட்டமாய் ஆணை தான் பிறந்தது.

"சொல்றேன் பாட்டி" என்றான்.

"கல்யாணத்துக்கு முன்னாடி நீயும் உன்ர பொஞ்சாதியும் பழகிருக்கிங்களா?"

திடுக்கிட்டது அவன் இதயம், "ஏன் இந்த கேள்வி?" தயக்கமாய் கேட்டான் பெயவரிடம்.

"என்ற கேள்விக்கு பதில் கேள்வி போட்டா எனக்கு புடிக்காது பேராண்டி"

"பழக்கம் இருக்கு, ஆனா அது நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் இல்ல" என்றான் உண்மையாக.

"அப்போ உன் பொஞ்சாதி தான் இதுக்கெல்லாம் காரணமா?"

"எத கேக்குறீங்க எனக்கு புரியல பாட்டி" - கார்த்தி

"தெரியாத மாதிரி நடிக்காத கார்த்தி, வீட்டுல பெரியமனுஷினு நான் இருந்து என்ன பிரயோஜனம், ஆளாளுக்கு உங்க விருப்பப்படி தானே நடந்துருக்கு, அதுலயும் உன்ர பொஞ்சாதி ராஜ்ஜியம் தான்... வீட்டுக்குள்ள வாரத்துக்கு முன்னாடியே உன்ர அப்பனையும் சேத்துல சதி பண்ணிருக்கா" கார்த்திக்கு தலையே வலித்தது அவர் பேச்சில்.

"என்ன பேசுறீங்க நீங்க? தெளிவா சொன்னா தான தெரியும்?" கோவத்தோடு பேசியவனின் குரலும் சற்று உயர்ந்தது.

சற்று தன்னை நிதானித்தவர், "கல்யாணத்துக்கு முன்னாடியே வைஷ்ணவி உன்ன விரும்பிருக்கா, அது உன் அப்பா, அம்மா எல்லாருக்கும் தெரியும், என்ன பெரிய மனுசியா அவ? வெக்கமே இல்லாம இது என்ன அசிங்கம்? ஒரு பொம்பள புள்ள தானே போய் அசிங்கம் இல்லாம ஒரு வீட்டோட படியேறி பையன எனக்கு கல்யாணம் பண்ணி தாங்கனு கேக்குறது?

இதுல அறிவே இல்லாம உன்ர அப்பன் சரின்னு தலையை ஆட்டிபோட்ருக்கான். இல்ல அப்டி என்ன ஒரு பொட்ட புள்ளைக்கு கல்யாணம் பண்ணிக்க அவசரம்ன்னு கேக்குறேன்? பண்ணதே திருட்டு கல்யாணம், இதுல அவளோட அப்பன் என் பேதிக்கு அவன் மகன தர மாட்டேன்னு சொல்லிட்டான்"

கண்களை மூடி தன்னை நிதானித்தவன், "போதும், ஆயிரம் தான் இருந்தாலும் அவ இப்போ என்னோட பொண்டாட்டி. அம்மாகிட்ட போன் குடுங்க"

கார்த்தியின் கடுமையான குரலில் அமைதியாய் மருமகளிடம் கைபேசியை ஒப்படைத்த சேர்மத்தாய்க்கு மனக்குமுறலை பேரனிடம் கொட்டிய பிறகு தான் நிம்மதியானது போல் அறைக்குள் சென்றுவிட்டார்.

கணவரை பயத்தோடு பார்த்த மஹாலக்ஷ்மி மகனிடம், "கார்த்தி..." என்றார் தயக்கத்தோடு.

"ஒளிவு மறைவு இல்லாம எனக்கு எல்லாத்தையும் ஒன்னுவிடாம சொல்லுங்க"

அழுத்தமான அவன் குரலில் பயந்தவர் கணவனை பார்க்க சொல் என்னும் விதமாக அவர் தலையை அசைக்க, "உன்கிட்ட வைஷ்ணவி லவ் பன்றேன்னு சொன்ன அடுத்த நாளே என்கிட்ட உன்ன கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா... எனக்கும் சரியா இருந்துச்சு அதான் நானும்... நானும் சரி சொன்னேன். அப்றம் உன்னோட அப்பாகும் தெரிஞ்சு, உன்னோட ஹோட்டல்ல இருந்த பிரச்சனைல அவருக்கும் வைஷ்ணவியோட தெளிவு புடிச்சு முழு மனசோட சரின்னு சொல்லிட்டார்" என நிறுத்தினார் மஹாலக்ஷ்மி. மகனிடம் பெருத்த அமைதி.

பிறகு அவனே, "நீங்களா தானே ம்மா அவளை எனக்கு பொண்ணு பாத்தா சொன்னிங்க?" கேள்வி எழுப்பினான் சந்தேகமாய்.

"வைஷ்ணவி தான் கார்த்தி இத உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னா"

"ஓ..." என்றவன், "அவளோட அம்மா அப்பாக்கு விசியம் தெரியுமா?"

"உனக்கும் பாட்டிக்கும் மட்டும் தான் தெரியாது"

மொத்த உண்மையையும் சொல்லிவிட இனி அவர்கள் திருமணத்தை பற்றி எந்தவொரு மறைவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் மஹாலக்ஷ்மி சொன்னது, ஆனால் கார்த்திக்கு வைஷ்ணவி தன்னை கண் மூடியே இத்தனை நாட்கள் வைத்தது போல் ஒரு ஏமாற்றம்.

"ஏன் மா இந்த பொய் எல்லாம்?"

அவனின் குரலின் இறுக்கம் அன்னையை அச்சுறுத்தியது, "நல்ல பொண்ணு கார்த்தி வைஷ்ணவி, அவளோட விருப்பம் தெரிஞ்சு நீ ஒதுங்கி போகவும் உண்மை எல்லாம் சொன்னாலும் வேணாம் சொல்லவன்னு ஒரு பயத்துல தான் மறைச்சோம் தம்பி"

மனைவி பேசிக்கொண்டிருந்த கைபேசியை வாங்கிய சுப்பிரமணி, "என்ன கார்த்தி கல்யாணம் முடிஞ்சதும் இத்தனை கேள்வி கேக்குற? ஆயிரம் பொய் சொல்லி நடந்தாலும் நடந்தது கல்யாணம் தானே? உங்களுக்குள்ள எந்த ஒளிவும் இருக்க கூடாதுனு தான் உன் அம்மாவை எல்லாத்தையும் சொல்ல சொன்னேன்.

உன் பாட்டி பேசுனதெல்லாம் மனசுல போட்டு உங்களுக்குள்ள சண்டை வந்துட கூடாது சொல்லிட்டேன். பாட்டி அந்த காலத்து மனுசி. காதல் கல்யாணம் எல்லாம் தப்பா இருக்கலாம், ஆனா நீ நாகரிகம் தெரிஞ்சவன் தான? புரிஞ்சு நடந்துக்கோ" கார்த்தி மனது கோவத்தில் தீ பற்றியிருக்க தந்தையின் பேச்சையும் மறுக்க முடியவில்லை, அமைதியாய் இருந்தான்.

"என்ன தம்பி புரியுதா?"

"சரி ப்பா. நான் வக்கிறேன்" என கைபேசியை அனைத்து வெளியில் ஈடுபட்டவனால் அரை மணி நேரம் கூட தாக்குப்புடிக்கவில்லை.

காரணமே இல்லாமல் மனைவி மீது கோவம் வந்தது. அவளிடம் இப்பொழுதே பேசியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தன்னுடைய நண்பனிடம் கூறிவிட்டு இல்லத்திற்கு விரைந்தான்.

மணி ஐந்தரையை கூட தாண்டாமல் இருக்க மாலை நேர சிற்றுண்டி செய்யும் நேரம் வைஷ்ணவிக்கு. கணவன் ஹோட்டலில் வந்து ஏதேனும் உண்ண ஆசை எழுந்தால் எவரிடமேனும் ஒரு செய்முறையை கேட்டு வந்து இல்லத்தில் செய்து உண்பது அவள் பழக்கமாகி போனது.

இன்றும் அதே போல் மங்களூர் பஜ்ஜி செய்வதில் மும்முரமாய் இருக்க, சுபத்ரா அழைத்திருந்தாள் அண்ணிக்கு. தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்றிருந்த சுபத்ராவிற்கு வீட்டில் சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் இருக்க, எப்பொழுதும் வைஷ்ணவிக்கு அழைக்கும் பொழுது மாடிக்கு சென்று வருவது போல் இன்றும் அழைத்திருந்தாள் வீடியோ மூலம்.

அழைப்பை ஏற்றதும் இரண்டு பொரித்த பஜ்ஜி துண்டுகளை வைஷ்ணவி காட்டினாள் முகம் கொள்ளா புன்னகையுடன், "அண்ணி பாக்கவே அழகா குட்டியா இருக்கே, என்ன இது?"

"மங்களூர் பஜ்ஜி.. கெளம்பி வா சுபி"

"நான் ஏன் வரணும் அதான் நீங்களே வர போறிங்களே ஆமா எப்போ வரீங்க?"

"உன் அண்ணன் நாளைக்கு கூட்டிட்டு வரேன்னு சொன்னார், அநேகமா 7 மணிக்குள்ள வந்துடுவோம்"

"சூப்பர் சூப்பர் அண்ணி" அந்த நேரம் கதவு திறந்திருப்பதை பார்த்து உள்ளே வந்த கார்த்தியின் காதுகளில் சகோதரியின் பேச்சு சத்தம் கேட்க அவள் பேசி முடிக்கட்டும் என அமைதியாக அமர்ந்துவிட்டான், மனதின் கோவத்தை ஒதுக்கி வைத்து மென்மையாய் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் தான்.

"அப்றம் என்ன சொல்லுங்க நாத்தனாரே விசியம் இல்லாம கால் வராதே"

சோகமாய் சிரித்த சுபத்ரா, "ஏன் அண்ணி உங்க அண்ணன பத்தி என்கிட்ட பேசிட்டே இருந்திங்க?" கார்த்தியின் காதுகள் கூர்மையானது தங்கையின் கேள்வியில்.

"அவனை நீ லவ் பண்ண தான்" சட்டென கூறி வைஷ்ணவி சிரிக்க, சுபத்ரா முகம் வாட, வெளியில் அமர்ந்திருந்த கார்த்திக்கோ சென்ற கோவம் எல்லாம் மீண்டும் வந்தது.

"அண்ணி..." அவன் தங்கை சோகத்திலும் முகம் சிவந்தாள்.

"ஒர்க் அவுட் ஆச்சு போலயே என் வார்த்தை ஜாலம் எல்லாம்..." வைஷ்ணவி பெருமையாய் பேச செய்த வேலையை கூட நிறுத்தினாள்.

"அதிகமாவே... ஆனா அவர் தான் என்ன திரும்பி கூட பாக்க மாட்டிக்கிறாரே, எப்படி செட் ஆகும் எல்லாம்?"

சுபத்ராவின் கேள்வியில் அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாய் கார்த்தி எழுந்து சென்று மனைவி கையிலிருந்த கைபேசியை வாங்கி, "கட் பண்ணு சுபத்ரா"

சகோதரன் முகத்தில் இருந்த கோவத்தை பார்த்த சுபத்ரா மறு வார்த்தை பேசவில்லை, வைஷ்ணவியிடம் பேசுபவை அனைத்தையும் கேட்டுவிட்டானோ என்ற பயத்தில் அடங்கிப்போனாள்.

இங்கு தன் முன்னாள் கண்கள் சிவக்க, இறுகிய முகத்துடன் நின்ற கணவனை முதல் முறை இப்படிப்பட்டவொரு கோவத்தோடு பார்க்க உள்ளுக்குள் பயம் எல்லையில்லாமல் பிறந்தது வைஷ்ணவிக்கு.

"உன்ன மாதிரியே என் தங்கச்சிக்கு கேடு கட்ட புத்தி வர வக்கிரியா?"

நம்பமுடியவில்லை வைஷ்ணவியால், எப்பேர்ப்பட்ட வார்த்தை அதுவும் தன்னை பார்த்து கேட்டுவிட்டான் என்ற கலக்கம் அவளிடம், "என்ன... என்ன பேசுறீங்க நீங்க?"

அவளை தாண்டி சுட சுட கொதிக்கும் எண்ணெய் சட்டியை அனைத்தவன், "நமக்கு எப்படி கல்யாணம் ஆச்சு?"

அவள் வியப்பிலிருந்து வாயை திறக்கும் வரை, கண்களாலே மனைவியை எரித்தவனும் எதுவும் பேசவில்லை, "அத்தை தான் வந்து பொண்ணு கேட்டாங்க" ஒருவாறு பொய்யுரைத்துவிட்டாள்.

கார்த்தியின் முகம் கோவத்திலிருந்து இளக்காரமாக மாறியது, "என்ன ஒரு கேவலமான பொய் வைஷ்ணவி"

அவனின் இந்த பரிமாணம் வைஷ்ணவியின் மனதிற்கு சிறிதும் ஒப்பவில்லை, "நீங்க பேசுறது எனக்கு புடிக்கல கார்த்திக்..." கண்ணெல்லாம் சிவந்தது கரைபுரண்டோடும் கண்ணீரால்.

"அத பத்தி எனக்கு கவலை இல்ல, நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சு?" மீண்டும் அங்கேயே வந்து நின்றான் கோவக்காரன்.

உண்மை தெரிந்துவிட்டது போல் என புரிந்துகொண்டு கண்ணீரை துடைத்தவள், "நானே உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன் கார்த்திக்..."

"பேசாத" அவளை தடுத்தான், "பாட்டி கால் பண்ணி அசிங்கமா கேக்குறாங்க என்ன... இதுல என் தங்கச்சியவும் உன்ன மாதிரியே வெக்கமில்லாதவளா மாத்த ட்ரைனிங் வேற"

கார்த்திக்கு திருமணத்திற்கு முன்பு என்ன தான் வைஷ்ணவி மேல் சிறு அன்பு இருந்தாலும் காதலிக்கலாம் வா என்று வைஷ்ணவி எவ்வளவு வீம்பு செய்திருந்தாலும் மாட்டேன் என்று தான் கூறியிருப்பான்.

வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டும் என்று இருந்தவனுக்கு இது ஏதோ சற்று கோவம் வர தான் செய்தது, அதே சமயம் ஆயிரம் இருந்தாலும் இந்த ஆறு மாதத்தில் மனைவியோடு திகட்ட திகட்ட வாழ்ந்தவனுக்கு இந்த வாழ்க்கையை கொடுத்ததற்கு இறைவனிடம் பல முறை நன்றி கூறியிருக்கிறான்.

ஆனால் இன்று தன்னுடைய பாட்டி தன்னுடைய மனைவியை பற்றி பேசவும் மொத்த கோவமும் அவள் மேல் பாய்ந்தது, அதோடு வேறு பெண்ணை விரும்பும் அவள் அண்ணனை காதலிக்க தன்னுடைய சகோதரியின் மனதையும் மாற்றியிருக்கிறாள் என்று தெரிந்த பின்னர் சகோதரனான கொதித்து வார்த்தையை விட்டான்.

கண்களை மூடி அவன் பேசுவதை பொறுத்த வைஷ்ணவியின் வேதனை முகம் கூட அவன் வார்த்தைகளுக்கு வேலி போடவில்லை.

"இல்ல தெரியாம தான் கேக்குறேன், நீ பொம்பள புள்ள தான? இப்படியா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க, கல்யாணம் பண்ணி வைங்கன்னு வீடு வீடா வந்து நிப்ப?"

தன்னையே அறியாமல் அவன் வார்த்தைகளால் பலமாய் அடி வாங்கியவள் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்த்தது, "நான் வந்து நின்னது உங்க வீட்டுல மட்டும் தான், ஊர்ல இருக்க அத்தனை வீட்டுலையும் இல்ல" கனல் கக்கும் விழிகளோடு நின்ற வைஷ்ணவி தன்னுடைய செயலை நினைத்து சிறிதும் வருத்தம்கொள்ளவில்லை.

தான் பேசிய வார்த்தை தான் அவளை இந்த செயலை செய்ய வைத்தது என்பதை கூட அவனுடைய ஆண் கர்வம் கவனிக்க விடவில்லை, "அஞ்சே நிமிஷம் தான் நீ கெளம்பி நிக்கணும்"

அவன் உத்தரவை சிறிதும் எதிர் பார்க்காதவள் ஏக்கமான கோவத்தோடு அவனை கடந்து சென்று முன்பே தயார் நிலையிலிருந்த தன்னுடைய பையை எடுத்து அவனை பார்க்காமல் வீட்டை விட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தவள் மனம் மொத்தமும் வலித்தது.

முயன்று அழுகையை அடக்கியவள் முன்பு பாதையை மறித்து கோவமான முகத்தோடு வண்டியில் வந்து நின்றான் கார்த்தி. எந்நேரமும் கண்களில் இருந்து வந்த கண்ணீரை எவருக்கும் காட்டி காட்சி பொருளாக விரும்பாமல் அமைதியாக அவனுடன் வைஷ்ணவி அமர, எப்பொழுதும் வண்டியில் ஏறியதும் அவளுக்கான ஹெல்மெட்டை கொடுக்கவில்லை அவன்.

சில நொடிகள் பயணத்தில் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி அவள் மனதை உடைக்க, அழுகையோடு அவன் இடையை ஒரு கையால் கட்டி அவன் முதுகில் முகத்தை சாய்ந்து கண்ணீர் சிந்தினாள் பெண். அவள் அழுவதை எளிதாக புரிந்து கொண்டாலும், தன்னுடைய இடையோடு உரிமையாய் சுற்றியிருந்த மனைவியின் கையை விலக்கிவிட்டான் இன்னும் கோவமாக இருந்த கார்த்தி.

கணவனது விலகளில் நொந்தவள் அதன் பிறகு அவனிடம் பயணம் முழுதும் பேசவே இல்லை, அதே நேரம் காற்றில் மறைந்த கண்ணீரையும் கண்டுகொள்ளவில்லை. அந்த அரை மணி நேர பயணத்தை போன்ற ஒரு கொடுமையான பயணத்தை இதுவரை அனுபவித்ததில்லை பெண்.

இல்லம் வந்ததும் அவனுடைய இல்லத்திற்குள் செல்லவிருந்தவளிடம், "உன் வீட்டுக்கு போ" என்றான் எங்கோ பார்த்தபடி.

முட்டி வந்த அழுகையை கட்டுப்படுத்தி, "நீங்க வரலையா?" என்றாள்.

"ஏன் ஒரு தடவ குடும்பமா மொட்டை அடிச்சது பத்தலயா? இப்ப என் தங்கச்சிய சாக்கா வச்சு காது குத்தவும் ரெடி ஆகிட்டீங்களா?" வார்த்தைகளால் அவளை வதம் செய்து மீண்டும் குற்றாலத்தை நோக்கி சென்றான் மனைவியின் மனதை சுக்குநூறாக வதைத்து.



Epdi iruku?

Comment please...

Innum 1 chapter dhaan iruku story mudiya...

Continue Reading

You'll Also Like

22.9K 896 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
2.5K 59 3
A cute, short, sweet love story. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 Can you believe it if I say this entire story was written overnight... in jus...
62.3K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
284K 9K 38
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.