டிங் டாங் காதல்

By Bookeluthaporen

14.7K 778 159

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 6
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 9
டிங் டாங் - 10
டிங் டாங் - 11
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 15
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 24
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 23

544 30 5
By Bookeluthaporen


முகத்தில் சில ஈர துளிகள் பட சட்டென கண் விழித்தவன் கண்ணை கசக்கியபடி சுற்றி பார்த்த பொழுது, ஈரத் தலையுடன் கண்ணாடி முன்பு நின்று நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்ட மனைவி தான் அழகாய் காட்சியளித்தாள். கடந்த ஆறு மாத காலமாக இந்த காட்சிக்காக பல நாள் கார்த்தியின் மனம் ஏங்கியதுண்டு. 

"எந்திரிச்சிட்டீங்களா?" ஆமாம் என்றவன் பல் துலக்கி வந்த பொழுது, 

"உள்ளே சீயக்காய் வச்சிருக்கேன், சும்மா அத சாஸ்திரத்துக்கு தலைல வச்சிட்டு ஷாம்பு போட்டுக்கோங்க" என குளியலறையினுள் இருந்த தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டே கூறினாள். 

புரியவில்லை என முழித்தவனிடம் மீண்டும், "இல்லங்க சீயக்காய் போட்டு தான் குளிக்கணுமாம் இன்னைக்கு, அதான் உங்களுக்கு அதுல குளிக்க கஷ்டமா இருக்கும்ல நீங்க கொஞ்சம் மட்டும் தலைக்கு தடவிட்டு..." 

தன்னுடைய கையை கொண்டு அவள் வாயை அடைந்தவன், "குட் மார்னிங் பொண்டாட்டி" என்றபடியே குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து, "புடவை கட்டலயா?" என கேள்வி எழுப்பினான் சோகமாக. 

"இல்ல நீங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள மாத்திடுவேன்" சரியென கார்த்தி சென்று குளித்து வர, வைஷ்ணவி வயலட் நிற பட்டுடுத்தி கைகளில் தங்க வளையங்கள் ஆட, தன்னுடைய நீண்ட கூந்தலை இன்னும் உலர்த்தும் பணியிலிருந்தாள் வைஷ்ணவி. 

முகத்தில் என்றும் இருப்பதை விட இன்று பொலிவு அதிகமிருந்தது, அதை மேலும் அழகாக்க, நெற்றி வகுடில் செந்நிறமாய் குடும்பம் அவளை தன்னவள் என கார்த்திக்கு நினைவூட்ட உள்ளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி கார்த்திக்கு. 

தன்னை அதிகம் நேசிக்கும் பெண், அதிகம் நம்பும் பெண் மனைவியாய் கிடைக்க எந்த ஆணுக்கு தான் கர்வம் எழாமல் இருக்கும்? "வைஷ்ணவி" என கட்டிலின் நுனியில் அமர்த்தவாக்கில் கார்த்தி அழைக்கவும், 

ஈர துண்டை கட்டிலில் போட்டு அவன் முகம் பார்த்தாள். அவள் போட்ட துண்டை எடுத்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் விரித்துவிட்டு, "தலையை துவட்டி விடுறியா?" 

குழந்தை போல் கேட்டவனிடம் சிரிப்போடு வந்தவள் வேறு ஒரு புது துண்டை எடுத்து மின்விசிறியின் வேகத்தை இன்னும் அதிகரித்து அவனை நெருங்கி நின்று கார்த்தியின் தலையை உலர்த்தும் பணியில் இறங்கினாள். 

அவள் துவட்டுவதில் கண்களை மூடி இருந்தவன் நேரத்தை பார்க்க கண்ணை திறந்த பொழுது மனைவியின் பளிச்சென மின்னும் இடை கண்ணில் பட, அதை கவனிப்பதே தன்னுடைய தலையாய கடமை என எண்ணி புடவை தலைப்பை விளக்கி அவள் இடையோடு வளைத்து மனைவியின் நெஞ்சில் சாய்ந்துகொண்டான். 

பெண்மையின் அங்கங்களில் முகம் புதைக்க்க, கார்த்தியின் கைகளோ அவள் இடையில் கூச்சமூட்டிக்கொண்டிருந்தது. 

"கார்த்திக்..." வெட்கத்தில் சிவந்த மனையாட்டி அவனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவன் முகத்தை பிடித்து தன்னை விட்டு விளக்கி வைத்து, "அம்மா கீழ வர சொன்னாங்க" நெளிந்தாள் அவனுடைய நெருக்கத்தில். 

"நீ கார்த்திக் சொல்றது எவ்ளோ கிக்க்கா இருக்கு தெரியுமா? மணி ஏழு தானே வைஷ்ணவி ஆகுது... இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வரும்னு சொல்லேன்" 

நின்றிருந்தவளை தன்னுடைய மடிக்கு இடம் மாற்றி கழுத்தில் முகத்தை புதைத்தான், "வாசமா இருக்க டா" கிரக்கமான அவன் குரல் அவளையும் கிறுக்காக்கியது. 

தொல்லை தரும் அவன் தாடியோடு சேர்ந்து அவன் மீசையும், இதழ்களும் வைஷ்ணவியை தன் வசம் இழக்க செய்ய, அவன் இதழ்களோ அவள் கழுத்தில் மொத்தமாய் கோலம் போட்டு, மெல்ல முகத்திற்கு பயணித்து இதழ்களில் வந்து நின்றது. 

தன்னுடைய சீண்டலில் உடல் எல்லாம் சிவந்து மூச்சு வாங்க தன் கைவளைவில் இருக்கும் மனைவியை ரசித்த கார்த்தி, "ஒரே ஒரு லிப்லாக் குடு வைஷ்ணவி" என்றான் வேண்டுதலாக. 

வெட்கத்தோடு தலையை மாட்டேன் என ஆட்டியவள் அவன் மார்பில் கை வைத்து, "சொந்தகாரங்க எல்லாம் வர ஆரமிச்சிடுவாங்க ப்ளீஸ் வாங்க ப்பா போகலாம்" பேச்சை மாற்றிட மனைவி இதழ்களை சுருக்கி கெஞ்ச, அது அவன் முடிவை இன்னும் உறுதியாக்கியது. 

"முடியவே முடியாது. முத்தம் குடு விடுறேன்" டீல் பேசியவன் நாடியை பிடித்து, 

"என் கடலைமிட்டாய்ல, சமையல் மாஸ்டர்ல, என் சிடுமூஞ்சில" என கெஞ்சினாள். 

அவள் கையை தட்டிவிட்டு சிரித்தவன், "டேய் வைஷ்ணவி நீ என்ன கெஞ்சல, திட்டுற தெரியுதா?" 

"ம்ம்ம் எதுவோ ப்ளீஸ் விடுங்க" எவ்வளவு விலக பார்த்தாலும் அவன் பிடி அதை போலவே இறுகவும் செய்தது. 

"கண்டிப்பா மாட்டேன், என்கிட்டே ப்ரபோஸ் பண்ண அடுத்த நாளே டபுள் மீனிங்ல பேசுன பொண்ணு தானே நீ? இப்போ எங்க போச்சு உன் தைரியம் எல்லாம்?" 

அவளோ வெட்கத்தை கட்டுப்படுத்தி, "ம்ம்ம் அது... அது காக்க தூக்கிட்டு பொய்டுச்சு" என்கவும் சத்தமாக சிரித்த கார்த்தி, 

"நீ என்ன பண்ணுவியோ தெரியாது, எனக்கு இப்போ நீயா ஒரு முத்தம் குடுக்கணும். இல்லனா நைட் ஆனாலும் உன்ன விட மாட்டேன்" என்றான் உறுதியாக. 

"கார்த்திக்..." சிணுங்களோடே, "அப்றம் அத்தைக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்" அவனை மிரட்டினாள். 

"உன் மாமனாருக்கு நீ கால் பண்ணி சொன்னாலும், நான் அசர மாட்டேன்" - அவன் 

"நீங்க கொடும படுத்துறீங்கன்னு சொல்லுவேன்" - அவள் 

"முத்தம் கேக்குறதெல்லாம் கொடுமையா ப்பா-னு கேப்பேன்" என்றான் கள்ள சிரிப்போடு. 

அவன் பேச்சில் அதிர்ந்தவள் அவன் வாயிலேயே இரண்டு போடு போட்டு, "என்ன உங்களுக்கு சேட்டை அதிகமாகிடுச்சு, இப்டி எல்லாம் பேச மாட்டீங்களே. என்னோட அப்பாவி கார்த்திக் எங்க போனார்?" கோவமாக அவனிடம் முறையிட்டாள். 

"பொண்டாட்டிகிட்ட இனிமேல் நல்லவன் வரவே மாட்டான்..." என கூறி சிரிக்க, அவன் மீசையை பிடித்து வைஷ்ணவி ஆட்ட அவள் கையை பிடித்து கடித்து வைத்தான், 

"பேசி பேசியே டைம் வேஸ்ட் பண்ணாத டா. லேட்டா ஆக ஆக உனக்கு தான் சேதாரம் அதிகமாவும்" எனவும் சில நொடி யோசித்தவள், "சரி அப்போ நீங்க கண்ண மூடிக்கோங்க நான் குடுக்குறேன்" 

அவனும் சரி என்று கண்ணை மூட, கணவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய கையை வைத்து அவன் கண்ணை மூடியவள், சில நொடிகள் தைரியத்தை வரவழைத்து அவனோடு நெருங்கி பட்டும் படாமலும் அவன் இதழ்கள் மேல் மெல்லிய ஒத்தடம் கொடுத்தவள் உடனே விலக எத்தனித்த நேரம், 

அவள் நோக்கம் புரிந்தவன் அவள் தாடையை பற்றி அந்த ரோஜா இதழ்களை வன்மையாய் சிறை செய்தவன் தன்னுடைய ஆசை தீர மனைவியை இம்சித்தே அவள் மூச்சிற்கு கடினப்படுவதை பார்த்தே விட்டான். 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தவள், அவன் சிரிப்பில் வெட்கப்பட்டு அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு வெட்கத்தை மறைத்தாள், "நீங்க ரொம்ப சேட்டை பண்ணுறீங்க" மகிழ்ச்சியோடு குற்றப்பத்திரிகை வாசித்தவள் இவள் ஒருத்தியாக தான் இருக்கும். 

தானே அவன் அணைப்பிலிருந்து வெளி வந்து உடையை சரி செய்த பிறகு, சிகப்பு நிற சட்டை, பட்டு வேஷ்டி கட்டி தயாரான கணவனை பார்த்ததும் முதல் நாள் அவனை பார்த்த நினைவு தான் வைஷ்ணவிக்கு. 

முக மலர்ச்சியோடு கீழே இருவரும் வர, வைஷ்ணவி அன்னையோடு வம்பு இழுக்க சென்றிட, காலை உணவை பார்வையிட சென்றுவிட்டான் கார்த்தி. 

காலை, மதியம் இரண்டு நேரமும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தலைமுழுகு உணவு இருவீட்டாரின் சார்பில் தயாரிக்க மொத்த ஏற்பாடும் கார்த்தியின் வீட்டில் இருக்கும் காலியிடத்தில் தான் நடந்தது. 

ஏற்கனவே தந்தை, மாமனார், சித்தார்த் என அனைவரும் அங்கிருக்க, தானும் சென்ற கார்த்தி உணவினை ருசி பார்த்து திருத்தங்கள் கூற, "விடு தம்பி ஒரு நாள் ரெஸ்ட் எடு" என்றார் சுப்பிரமணி. 

"இருக்கட்டும் ப்பா... நம்ம வீடு கல்யாணத்த பத்தி பேசுறாங்களோ இல்லையோ, நம்ம சாப்பாட பத்தி எல்லாரும் பேசணும், வயிறு நிறைஞ்சா மனசு நிறைஞ்சு ஆசீர்வாதம் பண்ணுவாங்க" என்றவனிடம் அதற்கு மேலும் எதுவும் பேச இயலாமல் போனது தந்தைக்கு. 

வைஷ்ணவியின் தந்தைக்கோ இதை விட பொறுப்பான மருமகனை தானே தேடியிருந்தாலும் கிடைத்திருக்காது என தான் தோன்றியது. மொத்தமாக குடும்பமே சந்தோஷத்தில் மிதந்தது. 

வேலைகள் அனைத்தையும் முடித்து சிறிது இளைப்பாற தந்தை, மாமனாரை கார்த்தி அனுப்பி வைக்க, சித்தார்த் கார்த்தியுடன் இருப்பதாக கூறிவிட்டான். 

பொதுவான பேச்சுகளுக்கு இடையே, "ஏன் மச்சான் யாரையாவது லவ் பண்றிங்களா?" திடீரென கார்த்தி கேட்டதும் சித்தார்த் முகம் அதிர்ச்சியடைந்து. 

"அப்டி... அப்டிலாம் இல்லங்க மாப்பிள்ளை" சமாளிப்பது கார்த்திக்கு தெளிவாக தெரிந்தது.

"ஓ சரிங்க மச்சான். உங்க வீட்டுல லவ் மேரேஜ்க்கு பிரச்சனை இல்ல அதுனால பயப்புடாதிங்க அப்டி எதுவும் லவ் இருந்தா. மீறி பிரச்சனை வந்தா நான் இருக்கேன்" மாப்பிள்ளையின் ஆறுதலில் சிரித்தவன் சரி என்னும் வகையில் தலையை ஆட்டி வைத்தான். அடுத்த சில நிமிடங்களில் பந்தி வேலை துவங்கியது. 

கார்த்தி வீட்டின் மாடியிலே பந்தி வேலை துவங்க, மொத்த குடும்பமும் நிற்க நேரமில்லாமல் சுழன்றது. காலை சிலர் மட்டுமே வர, மதியம் தான் அவர்கள் எதிர் பார்த்த மக்கள் அனைவரும் வந்தனர். மஹாலக்ஷ்மியின் அண்ணி முறையில் ஒருவர், "சாப்பாடு ருசி பயங்கரம் மாப்பிள்ளை" என அவனிடம் பாராட்ட, அவர் அருகில் நின்றிருந்த மஹாலக்ஷ்மியின் அண்ணன், "பின்ன மாப்பிள்ளை கை வச்சு ஏதாவது சரியில்லாம போயிருக்கா" என மருமகனை பாராட்ட வெறுமனே சிரித்துவைத்தான் கார்த்தி. 

ஆனால் மஹாலக்ஷ்மியின் அண்ணி தான் திருமணம் நிச்சயம் ஆன தினத்திலிருந்து சற்று கோபமாக சுற்றி வந்தார். அவர் மகளுக்கு அதை விட கோவம் கார்த்தி மேல். அதையும் பெரிதுபடுத்தாமல் மரியாதையாகவே கார்த்தியும் வைஷ்ணவியும் கவனிக்க, மகாலட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கை திருப்தியாக இருந்தது. 

தன்னுடைய விசேஷம், புடவை அணிந்து இருந்தவள், எதையும் யோசிக்காமல் பந்தி பரிமாறும் பொழுது உடன் நின்று, மஹேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும் பரிமாற விடாமல் தள்ளி நிறுத்தியது என அங்கிருந்த சொந்தங்கள் அனைவரும் கார்த்தியின் மனைவி தங்கம் என பாராட்டுடன் வாழ்த்தி தான் சென்றனர். 

இதற்கிடையில் ஷெர்லின் வேறு வைஷ்ணவியிடம், "நேத்து என்ன நடந்துச்சு" என சுற்றி சுற்றி கேள்வி கேட்க அவள் கையில் ஒரு வாலியை திணித்து வேலை கொடுத்து அமைதியாக்கிவிட்டாள். 

ஷெர்லினுக்கும் பொழுது போகாமலிருக்க அமைதியாக வேலையை செய்தாள். 

பந்தி முடிந்த நேரம், அங்கு வந்த சுந்தர் அவசரமாக கார்த்தியிடம், "கங்கிராட்ஸ் கார்த்தி, கங்கிராட்ஸ் வைஷ்ணவி" 

திருமணத்திற்கு வராததற்கு மன்னிப்பை கேட்டு அவன் கழுத்தில் ஒரு சங்கிலியை போட, "ஐயோ சார் இது என்ன? நீங்க வந்ததே சந்தோசம் இந்த கிப்ட் எல்லாம் தேவையா?" என சிரிப்போடு கேட்க, 

"உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்க" 

சுந்தரின் வார்த்தையை இடையிட்டு, "நீங்க எப்போ உண்மை பேசிருக்கீங்க இப்போ பேச?" வந்து நின்றாள் ஷெர்லின் தெனாவெட்டாக. 

சுந்தர் எதுவும் தவறாக எண்ணிக்கொள்வானோ என்ற பயத்தில் கார்த்தி அவளிடம், "ஏன் ம்மா?" என்றான் பாவமாக. 

ஆனால் சுந்தர் அதை எதுவும் கண்டுகொள்ளவில்லை, "நீங்க எப்போ எனக்கு உங்க ப்ராஜெக்ட்ட கைல குடுத்தீங்களோ அந்த நாள்ல இருந்து எனக்கு புது புது ப்ராஜெக்ட்ஸ் வந்துட்டே இருக்கு. நீங்க என்னோட லக்கி ச்சார்ம் கார்த்தி" என்றான். 

கார்த்தியோ சிரிப்போடு, "வாயடச்சிட்டீங்க..." என்று, "அம்மா அப்பாவ கூட்டிட்டு வர சொன்னேன்ல" எனவும், 

"வந்துட்டாங்க கார்த்தி, கீழ உங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டு இருக்காங்க. அவங்க இன்னைக்கு நான்-வெஜ் சாப்புட மாட்டாங்க. கீழ தான் வெஜ் சாப்பாடுன்னு சாப்புட ஒக்கார வச்சிட்டு தான் வந்தேன்" 

"அப்ப நாங்க போய் பாத்துட்டு வர்றோம்" என வைஷ்ணவி கார்த்தியின் கை பிடிக்க அவளிடம், "யாரும் இல்ல வைஷ்ணவி ம்மா. அவர் சாப்பிட்டதும் போகலாம்" என்றான். 

"ஷெர்லின் சார்க்கு பரிமாறு நாங்க வந்தர்றோம்" என கார்த்தியை முறைத்து கீழே இழுத்து சென்றாள். படிகளில் இறங்குபவளின் கை பிடித்து நிறுத்தியவன், "என்ன இது?" என்றான் அவளிடம். 

"இன்ஜினீயர்கு ஷெர்லின் மேல ஒரு இது..." - வைஷ்ணவி 

"எது?" - கார்த்தி 

"இண்ட்ர்ஸ்ட். ரொம்ப நாளாவே. அதான் பேசட்டும்னு விட்டேன். நீங்க எதையுமே புரிஞ்சுக்காதிங்க என் மக்கு புருஷரே" திட்டிவிட்டு அவன் மறு வார்த்தை பேசும் முன் கீழே ஓடிவிட்டாள். அதற்கு மேல் கார்த்தியின் அங்கு நிற்கவில்லை. 

மேலே ஷெர்லின் ஒரு இலையை எடுத்து டேபிள் மேல் போட்டு ஒரு சிறு வாட்டர் கேன் ஒன்றையும் வைத்து முட்டை ஒரு கையிலும் ஸ்வீட் ஒரு கையிலும் வைத்து நின்றாள் அவனை முறைத்துக்கொண்டு. 

அவனோ அவள் பார்வையை எளிதாக சந்தித்து, "ம்ம்ம்" என்றான் இலையை கண்களாலே காட்டி. "பாத்தா தண்ணி தானா தெளிச்சுக்குமா? தண்ணிய தெளிங்க என்ஜினீயர் சார்" 

அவளது கட்டளையை நிறைவேற்றாமல், "ஏன் நீ பண்ண மாட்டியா?" 

அவளோ, "சாப்பாடு வேணும்னா நீங்களே பண்ணுங்க, வேணாம்னா படி அந்த பக்கம்" என நகர்ந்தவளின் கையை எட்டி பிடித்து, "வை" என்றான் எப்பொழுதும் இருக்கும் அதே சலனமற்ற பார்வையோடு. 

அவன் கையை உதறியவள் முறைப்போடு நிற்க, சுந்தர் இலை மேல் தண்ணீர் தெளித்து விட்டான். 

"விட்ட ஊட்டி விட சொல்லுவீங்க போல" என புகாரிட்டு அவன் இலையில் முட்டை, சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம் வைக்க கீழிருந்து சூடாக ஆட்டு பிரியாணி கொண்டு வந்தான் சித்தார்த். 

"கல்யாணத்துல உங்கள மாப்பிள்ளை எதிர்பார்த்தார் சார்" என்றவன் பார்த்து பார்த்து கறியாக எடுத்து வைத்தான். 

"முக்கியமான வேலை இருந்துச்சு சித்தார்த், அவாய்ட் பண்ண முடியல அதான் இப்போ குடும்பத்தோட வந்துட்டேன், எல்லாரும் மன்னிச்சிடுங்க" வீட்டில் இருந்த ஒருவர் விடாமல் அவனை இதே கேள்வி கேட்டுவைக்க, சிரித்துவிட்டான் சுந்தர். 

"சரி சார், நல்லா சாப்புடுங்க. கூச்சப்படாம கேட்டு வாங்கிக்கோங்க" என சித்தார்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வைஷ்ணவி அழைத்து சகோதரனுக்கு வேலை கொடுத்துவிட, மீண்டும் சுந்தரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஷெர்லினிடம் வந்தது. 

"சித்தார்த் தான?" என்றான் சம்மந்தமே இல்லாமல் ஷெர்லினிடம். 

"ஆஹ்?" புரியாமல் ஷெர்லின் விழிக்க,

"இவன தான சைட் அடிப்ப?" கேள்வி ஷெர்லினிடம் இருந்தாலும் காரியமே கண்ணாய் உணவையும் உள்ளே தள்ளிக்கொண்டே தான் இருந்தான். 

இவனுக்கு எப்படி தெரிந்தது என வியந்தவள், "ஆமா" என்றாள் உண்மையை மறைக்காமல். 

"ம்ம்ம்" என்னும் விதமாய் தலையை அசைத்தவன், "பிரியாணி வை" என்றான் முகத்தை உர்ரென வைத்து. அவனின் முகத்தை ஆராய்ச்சியோடு பார்த்தவள் அவனுக்கு உணவை வைத்தாள். 

"பீஸ் போடு" என்றான். 

கோவமாய் அவன் முகத்தை பார்த்தவள், "நான் என்ன உங்க அடிமையா? இப்டி ஆர்டர் பண்றீங்க" அவன் முன்பே அந்த பெரிய கிண்ணத்தை வைத்தாள், "வேணும்னா நீங்களே வச்சுக்கோங்க" 

பார்வையாலே எரித்தவள் கீழே இறங்க சென்ற நேரம், "இன்னொரு தடவ அவனை இப்டி வச்ச கண்ணு வாங்காம பாக்குறத பாத்தேன், என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" அவள் செய்ய மாட்டேன் என்று சொன்னதை தானே கையில் எடுத்து பிரியாணியை பரிமாறிக்கொண்டான். 

அவன் குரலில் இருந்த கடுமையை புரிந்து சிறு பயத்தோடு அவனை பார்த்தவள் வரவழைத்த கோபத்தோடு, "நான் யாரை வேணாலும் பாப்பேன் அத கேக்க நீங்க யாரு?" 

அவனோ அமைதியாக, "நான் கேக்காம வேற யாரு கேப்பாங்க?" தானே எழுந்து சென்று வெள்ளை சாதத்தை எடுத்து பரிமாறிக்கொண்டு, அதற்கு ரசத்தை ஊற்றி கோழிக்கறி எங்குள்ளது என தேடினான். 

"சிக்கன் 65 ஸ்மெல் வருது, ஆனா நீ எனக்கு அத வக்கவே இல்ல" அவன் கேள்வியில் பேச்சற்று நின்றவளை சிக்கன் 65 எங்கு புத்தியில் ஏறியிருக்கும்? சுந்தர் தேடுவதை பார்த்தவள் தன்னிச்சையாக அவனுக்கு உதவ சென்றது. 

அவள் வேண்டுமென்றே மூடி வைத்திருந்த சிக்கன் 65 துண்டுகளை எடுத்து அவன் இலையில் வைத்தாள். வேலை நாட்களில் பல முறை அவன் சிக்கன் 65 விரும்பி கேட்டு வாங்கி உண்பதை பார்த்துளாள், அதனாலேயே இன்று மறைத்தும் வைத்தது. அவளை பார்த்து உளூரை நகைத்தவன், விட்ட உணவை தொடர்ந்தான். 

ஷெர்லினுக்கோ கோவமும், ஏக்கமும் கலந்து மாறி மாறி மனதில் நின்று ஆடியது. 

"அது எப்படி நான் யாரை பாக்கணும் பாக்க கூடாதுன்னு நீங்க சொல்றிங்க? ஏன் நீங்க அந்த சித்தாள் பொண்ண சைட் அடிக்கலன்னு சொல்லுங்க பாப்போம்? நானும் தான் பாக்குறேனே அவளுக்கு மட்டும் ஏதோ கவர்ல வாங்கி வாங்கி குடுக்குறது, அது மட்டுமா? அன்னைக்கு ஒரு நாள் லீவுன்னு சொல்லி ஒரு பொண்ணு கூட ரெஸ்டாரண்ட்ல ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்திங்க. பஸ்ல போறப்ப நான் தான் பாத்தேனே. இவரு எல்லாம் பண்ணுவாராம் ஆனா நாங்க பண்ணா மட்டும் அது தப்பாம்" 

நீண்ட பட்டியலை வாசித்தாள் ஷெர்லின். 

நிதானமாக தண்ணீரை எடுத்து அருந்தியவன் மீண்டும் எழுந்து மோரை ஊற்றி மீண்டும் நிதானமாக, "பார்வதி சின்ன பொண்ணு" 

"அது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அவ காலேஜ் லீவு இருக்கறப்ப வந்து வேலை பாக்குறா அந்த பொண்ணு மனச ஏதாவது பேசி க..." 

"லூசு மாதிரி பேச கூடாது, அவளுக்கு புக்ஸ் வாங்கி தந்தேன்" 

இதை எதிர் பார்க்காத ஷெர்லின் ஒரு நிமிடம் திகைத்தவள், "அப்போ அந்த ரெஸ்டாரண்ட் பொண்ணு?" 

"என்னோட கிளைன்ட்" என்றவன் திருப்பிதியாக உணவை முடித்து இலையை மூடி, "அப்போ நீ என்ன வாட்ச் பண்ணிட்டே இருக்க?"

எழுந்து சென்று கையை கழுவியவன் ஷெர்லின் அருகில் வந்து, "என்னோட வண்டிய இடிச்சது நியாபகம் இருக்கா?" 

அவள் பேசாமல் இருக்கவும், "அதுக்கு காசு எப்ப தருவ?" சம்மந்தமே இல்லாமல் கேள்வி வந்தது அவனிடமிருந்து. 

"காசு... காசு இல்ல" அதை மறந்துவிட்டான் என்று நினைத்திருந்தாலே, கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு வைஷ்ணவிக்கு தங்க நகை ஒன்றை வாங்கி குடுத்துவிட்டாள் திருமண பரிசாக. 

அவளை நெருங்கி வந்தவன் சுற்றம் எதுவும் பார்க்கவில்லை, "எனக்கு காசு வேணாம்" 

குனிந்து அவள் முகத்தினருகில், "பொண்டாட்டி வேணும்" அவன் நெருக்கத்தை மூச்சு முட்ட நின்று அனுபவித்தவளுக்கு உடல் சிலிர்த்தது, அவனின் தனிப்பட்ட வாசனை, எந்நேரமும் உணர்ச்சிகளை மறைக்கும் முகம் இன்று குறும்போடும் கண்களில் காதலோடும் மின்னியது. 

"நான் புரோக்கர் இல்ல என்ஜினீயர் சார்" அவனுக்கு நிகரான குறும்பு அவள் கண்களிலும். 

அவனோ மெல்லிய சிரிப்பை இதழில் படரவிட்டு அவள் துப்பட்டாவை எடுத்து கையின் ஈரத்தை துடைத்தவன், "எதுக்கு யாரோ ஒருத்தர் என்ன கல்யாணம் பண்ணி என் பணத்தை எல்லாம் எடுத்துட்டு போகணும்? போலீஸ் பொண்ணு நீ வந்து பாத்துக்குவியா ஷெர்லின் பேபி?" 

அவள் காதுகளில் கிசுகிசுத்தவன் சற்று விலகி அவளை பார்க்க, ஷெர்லின் உடல் அவனின் கட்டுப்பாட்டில் சென்றது போல் தன்னை அறியாமலே தலையை ஆட்டியது. 

ஷெர்லின் பேச்சு ஒரு விதமாக இருந்தாலும் அவள் குணம் எல்லாம் எவரையும் எந்த வகையிலும் புண்படுத்தாது, அமைதியாகவே எந்நேரமும் இருக்கும் தன்னுடைய குணத்திற்கு இவள் தான் மனைவியாக வர வேண்டும் என்று ஆவலுடன் பேசிய சில நாட்களிலே முடிவெடுத்துவிட்டான் சுந்தர். 

நாள் செல்ல செல்ல அவள் தன்னை அடிக்கடி முறைப்போடு பார்த்தாலும் அதில் இருந்த ஆர்வத்தை பார்த்தவனுக்கு அவள் மனமும் மெல்ல புரிந்தது. இன்று அவள் மூலமே அதை உறுதிசெய்த பிறகு எல்லையற்ற மகிழ்ச்சி, தாய் தந்தையிடம் இவ்விடயத்தை கூறி கையேடு அவள் தந்தையிடம் பேச தான் அழைத்துவந்தது. 

மகிழ்ச்சியில் மனம் துள்ள, தன்னுடைய நெருக்கத்தினால் சிவந்த முகத்துடன் நின்றவள் கன்னத்திற்கு ஒரு முத்தத்தை பரிசளித்தவன், "உன் வீட்டுக்கு தான் போறேன். அம்மா உன்ன பாக்கணும் சொன்னாங்க" என்றான். அவளோ அவன் முத்திலிருந்து வெளி வராமல், "ஹா?" என்றாள் கேள்வியாக. 

"அம்மா உன்ன பாக்கணும், கீழ போகலாமா?" 

இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமலிருக்க, "ஷாக்க கம்மி பண்ணிட்டு, அருவா தூக்குற பொண்ணா வந்து உன் மாமியாரை பாரு... என்ன?" 

மென்னகையோடு அவள் கன்னம் தட்டி அவள் கையேடு கை கோர்த்து அந்த கையில் ஒரு முத்தம் கொடுத்து அவளுக்கான சில நிமிட நேரத்தையும் தந்து நிறைவான மனதோடு கீழே சென்றான். 

How is the chapter?

Comments please...

Continue Reading

You'll Also Like

156K 6K 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
13.3K 836 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
2.2K 176 20
Here is my second story Oru Kutty love story Love...... Love na Ypavume sweet ah pesitu Ypo paru love dialogue ah pesitu irukukavangaluku than v...