காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

37.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
39
40
41
42
43
Mood boards!

38

575 35 18
By Madhu_dr_cool

"போகவேணாம்னு சொல்லுங்க... ப்ளீஸ்..."

தனது கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியவளை செய்வதறியாது பார்த்தான் ஆதித்.

ஏற்கனவே மனதோடு கிளத்தல் செய்து தாராவிடமிருந்து விலகியே இருக்க முடிவெடுத்து விட்டவனுக்கு, அதை செயல்படுத்து சந்தர்ப்பம் மட்டும் கிடைப்பதில்லை.

நாசூக்காக அவளைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தியவன், "தாரா.. எல்லாருக்கும் அவங்கவங்க வேலைகள் இருக்கு. அதைப் பார்க்க அவங்க போய்த்தானே ஆகணும். எத்தனை நாள் நம்ம கூடவே இருப்பாங்க அவங்க?" என நிதர்சனம் பேச முயன்றான். அவளோ எதையும் காதில் கொள்ளாமல் விசும்பியவண்ணமே பர்வதத்திடம் சென்று அவர் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவளையும் ஆதித்தையும் பார்த்தவர், "ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க, அதுமட்டும் போதும் எங்களுக்கு. பெரிவங்களுக்கு, ஒரு வயசுக்கு மேல சொத்து சொகமெல்லாம் தேவைப்படாது; அவங்க பிள்ளைங்க நல்லா இருக்கறாங்கன்ற நினைப்பு மட்டும் போதும். அந்த சந்தோஷத்தை மட்டும் எங்களுக்குக் குடுங்க போதும்" என்றார்.

ஆதித் மறைபொருள் புரிந்து இறுக்கமாக நிற்க, தாரா வெறுமே தலையாட்டினாள்.

*****

மாலை ஐந்து மணிக்கு மாதவனையும் உஷாவையும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தின் போர்டிங் கேட்டில் பிரியாவிடை தந்து கண்ணீர்மல்கக் கையசைத்து வழியனுப்பிய பின்னர், பர்வதம்மாளுக்கும் கோயமுத்தூர் விமானத்தில் பயணச்சீட்டுப் பெற்று அனுப்பி வைத்தபோது, கிட்டத்தட்ட மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தாள் தாரா.

பர்வதம்மாளை அனுப்ப வேண்டிய கேட் அருகே வந்தபோது, மூச்சுவிடாமல், "அம்மாவை கேட்டதா சொல்லுங்க.. தன்னுவுக்கு ஸ்வீட்டை குடுத்துடுங்க.. தன்னுவை நல்லா படிக்க சொல்லுங்க.. தன்னுவுக்கு லீவு இருந்தா அவனை அடுத்தமுறை கூட்டிட்டு வாங்க.. தன்னுவையும் அம்மாவையும் பார்த்துக்கங்க.." என்றெல்லாம் அழுகையினூடே சொல்லிக்கொண்டு வர, அவரும் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டார் தலையசைத்து.

"கண்டிப்பா செய்றேன் தங்கம்மா... நீயும் உடம்பைப் பாத்துக்க. நல்லா படி, நல்லா இரு. பாட்டிக்கு வாரம் ஒருதரமாச்சும் ஃபோன் பண்ணிடு.. வரட்டா? கண்ணைத் துடைச்சுட்டு சிரி பாக்கலாம்..."

கண்ணீரும் புன்னகையும் கலந்த கலவையாய் அவள் சிரமத்துடன் விடைகொடுக்க, ஆதித்தையும் தாராவையும் சேர்த்து நிற்கவைத்து நெட்டியெடுத்து திருஷ்டி கழித்துவிட்டுத் திருப்தியான சிரிப்புடன் அவர் சென்று மறைந்தார் உள்ளே.

"கோயமுத்தூர்ல இருந்து கிளம்பும்போது இவ்ளோ அழலையே?"

அவளை அழைத்துச்சென்று விமான நிலையத்தின் உள்ளேயே ஒரு காபி லவுஞ்ச்சில் அமர வைத்து, ஆசுவாசப் படுத்துவதாக மெல்லப் பேச்சுக்கொடுத்தான் ஆதித்.

"ம்ம்.. அப்போ எப்படியாச்சும் வீட்டிலிருந்து தப்பிச்சா போதும்னு இருந்துச்சு. கோபமும் கொஞ்சம் இருந்தது அம்மாப்பா மேல. ஆனா இப்ப, என் லைஃப்லயே சந்தோஷமான நாட்கள்... அன்பையும் பாசத்தையும் தவிர எதுவுமில்லாத மனுஷங்க. அம்மா மாதிரி பாத்துக்கற அத்தை.. அப்பாவை விட ஆயிரம் மடங்கு அக்கறையுள்ள மாமா.. அப்பறம் பாட்டி, அவங்க எல்லாத்துக்கும் மேல! எப்படி அழாம இருப்பேன்?"

"புரியுது.. ஆனா நீ அழுதுட்டே இருந்தா ஊருக்குப் போகாம திரும்பி வந்துடவா போறாங்க?"

தாரா உச்சுக்கொட்டினாள்.
"அழுகை என்னோட எமோஷனல் ரெஸ்பான்ஸ். தானா நடக்குறது. அவங்களை manipulate பண்றதுக்காக செய்யலை நான்."

ஆதித் கொஞ்சம் வியந்தாலும், சலனம் காட்டாமல் தலையாட்டினான். "ஓ.."

"ஹ்ம்"

"சரி, ஹவுஸ்கீப்பர் இந்திராணியும் இந்த வீக்கெண்டுக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டாங்களே, தெரியுமா?"

தாராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன இருமடங்காய். "என்னது??"

"உங்கிட்ட சொன்னதா சொன்னாங்களே? சொல்லலையா?"

மீண்டும் அழுகையில் உதடுகள் துடிக்க, அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். அவனுக்கு ஏனோ பரிதாபமாக இருந்தது அவளைக் காண.

"அவங்க ஊரு இங்கிருந்து இருநூறு கிலோமீட்டர். தினமும் போக முடியாதுன்னு இங்க தங்குவாங்க. மாசம் ஒருதரம் ரெண்டு, மூணு நாள் ஊருக்குப் போயிடுவாங்க."

தாராவிடமிருந்து ஈரமாக ஒரு 'ஹ்ம்' வந்தது.

"நைட் டின்னர் சமைச்சு வெச்சிட்டு கிளம்பிடுவாங்க. ரெண்டுநாள் நான் என் ஆபிஸ் கேண்ட்டீன்ல சாப்பிடுவேன். உனக்கு... என்ன... ராஜீவை வேணா சாப்பாடு கொண்டுவர--"

"எனக்கு சமைக்கத் தெரியும்."

மறுபடியும் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் அவன். "ஓ.."

அப்போது சட்டென, "ஆதித் நிவேதன்!? வாட் எ சர்ப்பரைஸ்!!" என்றொரு கீச்சுக் குரல் அருகே கேட்க,  திரும்பிப் பார்த்தான்.

தாராவும் எங்கேயோ கேட்ட குரலென சந்தேகத்துடன் நிமிர்ந்து பார்த்துத் திகைத்தாள்.

குளிர் கண்ணாடியும், காற்றாட விரித்து விட்ட கூந்தலும், கருப்பு நிறத்தில் சட்டையும் கால்சட்டையும் அணிந்து அவர்களை நோக்கித் தனது ஹீல்ஸ் பாதணிகள் சத்தமிட படபடவென நடந்துவந்தாள் மோனல்.

ஆதித் மரியாதை கருதி எழ, அவளோ ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். தாரா முகமாற்றம் காட்டாமல் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஹாய் ஆதித்! எங்கே இந்தப் பக்கம்?"

"பர்ஸனல் வேலை"

"ஓ.. நான் மும்பை போயிட்டு இப்பதான் திரும்பி வர்றேன்.. ஒரு மாடலிங் ப்ராஜெக்ட்."

"ஹ்ம்.."

தாராவைக் கண்டுகொள்ளாமல் மோனல் ஆதித்துடன் நெருங்கி நின்று ஏதேதோ பேச, அவன் அசவுகரியமாக நின்றான். தாராவிடம் திரும்பி அவளை அறிமுகம் செய்ய முயன்றான்.

"தாரா, இது--"

"மோனல் கபாடியா. தெரியும். பார்ட்டில பார்த்தேன்."

"ஓ.. குட். இவங்க அப்பா நம்ம கம்பெனி இன்வெஸ்டர். வேண்டப்பட்டவர்."

"ம்ம், ஹலோ மோனல்."

அவளோ தாராவை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஆதித்திடம், "அப்றம், டிவோர்ஸ் எப்போ?" என்றாள் இலகுவாக.

தாராவும் ஆதித்தும் ஒருபோலவே அதிர்ந்தனர். ஆதித்திற்குக் குழப்பமும் கோபமும் மேலோங்க, தாராவின் விழிகளோ நீர்திரண்டு சிவந்தன.

"ஓ.. சீக்கிரமா கேட்டுட்டனோ? இல்ல, சீக்ரெட்டா வெச்சிருந்தீங்களா?"

இன்னும் பேச்சின்றி நின்றனர் இருவருமே. ஆதித் தான் முதலில் மீண்டு, "வாட் ஆர் யூ டாக்கிங்?" என்றான் சத்தமாக.

"அட, என்ன நிவேதன்!? தெரியாத மாதிரி கேட்கறீங்க? அதான் பார்ட்டி அப்பவே எல்லாருமே பார்த்தோமே? உங்களுக்கு இன்டரெஸ்ட் இல்லாம நடந்த மேரேஜ் தானே இது? அன்னல்மெண்ட்டோ டிவோர்ஸோ அப்ளை பண்றதுக்கு ரெடி பண்ணிட்டு இருந்ததா பார்ட்டில பேசிக்கிட்டாங்களே?"

தாரா பேச்சின்றி எழுந்து வெளியே நடந்தாள் அதிவேகத்தில்.

ஆதித் அதிர்ச்சி மாறாமல் நின்றான். நீண்ட மூச்சுக்களை இழுத்து விட்டுத் தன்னை சற்றே சமன்படுத்திக்கொண்டு, "மோனல், தயவுசெய்து என் பர்சனல் வாழ்க்கையை பத்தி gossip பண்ணாதீங்க இனிமேல். I find it offensive" என்று கூறிவிட்டுத் தாராவைத் தேடி நடந்தான்.

***

'அவள் சொன்னது முற்றிலும் உண்மை தான். என்றாவது ஓர் நாள் நிகழப்போகும் நிதர்சனம் அதுதான். நாளை நான் யாரோ அவன் யாரோ. பின் எதற்காகக் கோபம்? ஏன் பயங்கள்? ஏன் கண்ணீர்?'

பதில் தெரியாத கேள்விகளால் மூச்சுமுட்டி அமர்ந்திருந்தாள் தாரா, காருக்குள்.

தாஸ் அவளைக் கரிசனமாகப் பார்த்துவிட்டு, "என்னாச்சு தாராம்மா? சார் எங்கே?" என வினவிவிட்டு, அவளிடம் பதில்வராமல் போனதில் சோர்ந்து ஆதித்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். பெரியவர்களைப் பிரிந்து வந்ததால் தான் அவள் கன்றிப்போய் அமர்ந்திருப்பதாக அவராக நினைத்துக்கொண்டார்.

பத்து நிமிடம் கழித்து ஆதித் வந்தபோது எதுவும் பேசாமல் கார் புறப்பட்டது. தாரா அவன்புறம் திரும்பாமல் ஜன்னலில் வேடிக்கை பார்த்தாள்.

வீட்டிற்கு வந்தபோது, ஒருபொட்டு சத்தமின்றி வீடே வெறிச்சோடி இருக்க, தாரா அயர்ச்சியாக அடிவைத்துத் தன்னறைக்குச் சென்றாள், அவனைத் திரும்பியும் பாராமல். ஆதித் அவளை அழைக்கவந்து, பின் மனதை மாற்றிக்கொண்டு அமைதியானான்.

'என்று இருந்தாலும் அவள் வழியில் அவள் வாழ்க்கையைப் பார்த்துப் போகப் போகின்றவள் தானே? இடையில் கொஞ்ச நாளில் இதெல்லாம் தேவைதானா?'
நாமெடுத்த முடிவு என்ன? அவளுக்கு நல்லதொரு நண்பனாக இருந்து, சொந்தக் காலில் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழும்வரை உதவ வேண்டும் என்பதுதானே? தானாக விலகிப்போனால் அவள் மனது புண்படுமென்று தயங்கினோம்.. இப்போது அவளே உண்மைகளைப் புரிந்து நம்மிடம் தூரம் கொள்கிறாள். அப்படியே இருக்கட்டும். கொஞ்ச நாள்தானே?'

இத்துணை நாள் சேர்த்த சின்னச் சின்ன சந்தோஷங்கள் எல்லாம் எங்கோ கரைந்ததுபோல இருந்தது. வாழ்வு மீண்டும் வெறுமைக்குத் திரும்பிவிடுமோ என்றொரு சின்ன அச்சம் வந்தாலும், வீட்டில் அவள் வளைய வரும்வரை வீட்டின் ஒளி மங்காது என்றும் மனதே சொன்னது.

விதிப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்றான் அவன்.

***

கிட்டத்தட்ட பதினோரு மணிவரை மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தவன், பின் சோர்வாகக் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தான் உறங்கச்செல்ல. தன்னறைக்குச் செல்லுமுன் கீழே ஏதோ அரவம் கேட்க, சட்டென விழிப்பானான் அவன்.

தாராவால் பத்து மணிக்குமேல் விழித்திருக்கவே முடியாது எப்போதும் என்று நன்கறிவான் அவன். எனவே யாரோ புதிதாக வீட்டினுள் வந்துவிட்டனரோ என யோசித்து, சத்தமெழுப்பாமல் கீழிறங்கி வந்தான் அவன், முறுக்கிய கைகளுடன்.

அங்கோ தலையில் கைவைத்தபடி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தாள் தாரா.

குழப்பமாக அவளைப் பார்த்தவன், மெதுவாக அருகில் சென்றான்.

"தாரா..?"

விருட்டென பயந்து திரும்பினாள் அவள். கண்களில் கலவரம்.

"தூக்கம் வரலியா?"

இல்லையெனத் தலையசைத்தாள் அவள்.

"ஏன்?"

கைகளைப் பிசைந்தாள் தலையைக் குனிந்தபடி.

தனியாக உறங்குவதற்குப் பயம். எனவேதான் இந்திராணியை அழைத்துத் தன்னுடன் துணையாக இருக்கும்படி அறையில் படுக்கக் கேட்டாள். இந்த வாரம் முழுக்க- அவள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்- ஆதித்தின் அறையில் பாதுக்காப்பாக உணர்ந்தாள். இன்று திடீரென மீண்டும் தனியாக இருக்கச்சொன்னதும் பயந்துபோனாள் அவள். அதிலும் வீடே நிசப்தமாக இருக்க, பொட்டுத் தூக்கம் வரவில்லை அவளுக்கு.

அவனிடம் இதையெல்லாம் பேசப் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவன் செலவில் உண்டு உறங்கி, அவன் பணத்தில் படித்து, அவனையே அண்டிப் பிழைப்பது நினைவில் வந்து வேதனைப்படுத்த, மீண்டும் மீண்டும் அவனிடமே சென்று நிற்பது தன்மானக்குறைவாகத் தோன்றியது இப்போது.

அவனுக்குமே அவளிடம் பேச ஏதுமில்லை போலும், "நாளைக்கு எனக்கு மீட்டிங் இருக்கு. சீக்கிரம் போயிடுவேன். தேடவேண்டாம்," என்றுவிட்டுப் படியேறிச் சென்றுவிட்டான்.

இருவரிடையே உருவான இடைவெளி மட்டும் வீட்டை நிறைத்து ஆங்காரமாகச் சிரித்தது.

***

🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

Conflicts. Miscommunications. Distance.

இதோ வில்லன் வந்தாச்சுல்ல? (வில்லி மோனல் கிடையாது. வில்லன் இவர்களின் புரிதலின்மை மட்டும்தான்.)

எல்லாருக்கும் மீண்டும் ஹாய்!

ப்ராக்டிகல்ஸ் இன்னும் முடியாத போதும் கூட உங்களுக்காக வந்து ஒரு அத்தியாயம் எழுதின ஆத்தருக்காக, எக்ஸாம் ஈஸியா நடக்கணும், வைவா தெரிஞ்ச கொஸ்டீன் மட்டும் கேட்கணும்னு வாழ்த்துங்க!
வரட்டா!?

மது.



Continue Reading

You'll Also Like

111K 3K 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்...
17.8K 1.6K 42
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
93.3K 7.8K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.