டிங் டாங் காதல்

By Bookeluthaporen

14.7K 778 159

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 6
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 9
டிங் டாங் - 10
டிங் டாங் - 11
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 23
டிங் டாங் - 24
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 15

417 31 4
By Bookeluthaporen




நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்

என்றும் அதிரடியாக துவங்கும் அவன் காலை இன்று அவன் மனதை வருடம் இளையராஜாவின் இசையில் நீந்த இதமான மன நிலையோடு தான் கண்களை திறந்தான். தலையை திருப்பி வைஷ்ணவி அறையை ஜன்னல் வழியாக கண்டான்.

வழக்கம் போல ஒலியின் வீரியம் குறையவில்லை, அந்த மொத்த தெருவுக்கும் கேட்கும்படி தான் இருந்தது ஆனால் மெல்லிய இசையும், யேசுதாஸ், சித்ரா இருவரின் குரலில் குயில்களின் ராகமாகவே ஒலித்தது.

வா வா
அன்பே அன்பே

காதல் நெஞ்சே
நெஞ்சே

வைஷ்ணவி இரவு உடையில் அடங்காமல் பரந்த கூந்தலை கொண்டையிட்டு மாடியை குச்சி விளக்கமாறை வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.

"அந்த செடிக்கு பின்னாடி இருக்குறதெலாம் நல்லா தூத்துவிடு. என்ன வேலை செஞ்சாலும் உன் கூட ஒரு ஆள் இருந்ததே இருக்கணுமா?"

காலையிலே அன்னையின் அழகிய சொற்களை கேட்டுக்கொண்டே வேலை செய்திருந்த வைஷ்ணவி முகத்தில் எப்பொழுதும் இருக்கும் எரிச்சல் இல்லை.

அன்னை சொல்லியவை யாவையும் முகம் சுளிக்காமல் செவ்வனே செய்பவளாய் பார்த்து மஹேஸ்வரிக்கே அதிகாரம் தூள் பறந்தது. வேலை செய்தவள் தலையை தூக்கி அன்னையை சில நொடிகள் கண் சிமிட்டாமல் பார்த்தாள்.

"ஏன் மா இன்னைக்கு நீ அழகா இருக்கியே" மகளின் கேள்வியில் செய்த வேலை கூட அப்படியே நின்றது மஹேஸ்வரிக்கு.

வைஷ்ணவியோ மேலும், "நீ மட்டும் இல்ல மா... நம்ம வீடு செடி, நம்ம ஊரு மலை எல்லாமே இப்போ எல்லாம் எனக்கு அழகா தெரியாதே ம்மா" கண்களை மூடி புருவத்தை தேய்த்தவன் இதழ்களில் இருந்த விரிந்த புன்னகையே அவள் எதை கூற வருகிறாள் என்று புரிந்துவிட்டது.

'என்ன டிசைனோ இந்த பொண்ணு' குழப்பத்துடன் கேட்டவன் அதரங்களில் இன்னும் இதழ் மறையா புன்னகை.

நாளை இரவு சென்னை கிளம்ப வேண்டும் அவன்.

நேற்றே சுந்தரை பார்த்து அவன் பொறுப்பில் கட்டிடத்தை மொத்தமாய் ஒப்படைத்து பல நிமிடங்கள் பேசி தான் வந்தான். இன்றும் நாளையும் குடும்பத்தினருடன் இருக்க திட்டமிட்டு அத்தனை வேலைகளையும் நேற்றே முடித்துவிட்டான். தினம் ஒரு பாட்டு வைஷ்ணவியின் எழுதப்படாத விதி.

இன்னும் வெளியில் பாட்டின் ஓசை கேட்க அந்த பாடலை காதில் வாங்கியபடியே குளியலறை சென்றவன் தன்னுடைய கடமை அனைத்தையும் முடித்து வெளியில் வந்த பொழுது வைஷ்ணவி வீடு மாடி நிசப்தத்தை அமைதியோடு இருந்தது.

கீழே இறங்கி வந்தவன் இலகுவான த்ரீ பை போர்த் பாண்ட் அணிந்து வெள்ளை நிற பனியன் மட்டும் அணிந்திருந்தான். நேராக சமையலறை சென்று அன்னைக்கு உதவ போக, அவர் மகளை சமையலறை பக்கமே விடவில்லை. அவனுக்கு பிடித்த உணவு வகைகளை பார்த்து பார்த்து சமைத்து வைத்தார்.

சகோதரி சுபத்ராவுக்கு கூட பொறாமையாக தான் இருந்தது, "இதுக்காக ஆவது நானும் ஒரு ஆறு மாசம் பாரின் போகணும் ம்மா" என்றாள்.

"இப்போ கூட ஒன்னுமில்ல வர்றியா டா என் கூட?"

சகோதரன் பாசமாய் கேட்க உடனே அன்னை முந்திக்கொண்டார், "போ ப்பா நீ போறதும் இல்லாம என் பேச்சு துணைக்கு இருக்க இந்த புள்ளையையும் கூட்டிட்டு போக போறியா?"

"இந்த கதை தானே வேணாம்ங்கிறது... நான் இருந்தாலும் வைஷ்ணவி ஷெர்லின் வந்துட்டா என்ன மறந்துடுறது, இதுல நான் இருந்தா என்ன இல்லனா என்ன? நல்ல வேலை வைஷ்ணவி உங்க மருமகளா இல்ல"

சுபத்ராவின் புலம்பலை கேட்டு கார்த்திக்கு எக்கு தப்பாக புரையேற உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே மஹாலக்ஷ்மி அவன் தலையை தட்டிவிட்டு தண்ணீரை அவன் கையில் கொடுத்தார்.

"மெதுவா சாப்புடு ப்பா. பாரு கண்ணே கலங்கிடுச்சு"

அவன் முதுகை தடவினார், "அங்க போய் நல்ல சத்தானதா சாப்புடனும் ப்பா..."

"ஆமாங்க ராசா நல்ல பழமா சாப்புடனும்ங்க சொல்லிட்டேன்" முதிய பெண்மணி தன்னுடைய பங்கிற்கு அறிவுரை கூறினார்.

"ஆமா இவுக மைசூரு மஹாராணி... இவுக சொன்னதை அப்புடியே கேட்டுடனுமாகும்?" கையில் ஒரு கிண்ணத்தோடு உள்ளே வந்த வைஷ்ணவி மாமியாரிடம் அதை கொடுத்து, சேர்மத்தாய் அருகே அமர்ந்துகொண்டாள்.

"என்ன சத்தாகிறதுக்கே உன் ஆத்தா உன்ன வளத்து போட்ருக்காஹலா?" அவள் முகத்தை பார்த்து முறைத்தார் விளையாட்டாக.

"அப்டின்னு தான் வச்சுக்கோயேன் மட்..." மாமியார் பக்கம் திரும்பி, "சரி த்தை... சாப்பிட்டு பாத்து சொல்லுங்க நானே செஞ்சேன்" மஹாலக்ஷ்மி அந்த கிண்ணத்தை திறந்து பார்த்தார். ரசமலாய்... பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ மேலே தாராளமாய் தூவி பாலில் ஊறி பார்க்கவே சுவைக்க தூண்டியது.

"அழகா இருக்கு வைஷ்ணவி ம்மா... கார்த்திக்கு ரசமலாய் ரொம்ப புடிக்கும்" உடனே மகனுக்கு சென்று ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டை வைத்து தன்னுடைய அத்தைக்கும் ஒன்றை கொடுத்து மீதம் இருந்ததில் மகளும் தானும் உண்டனர். கார்த்தி இட்லியை அமைதியாக சாப்பிட இன்னும் இனிப்பை எடுக்கவில்லை.

"வைஷு நெஜமாவே நீ தான் செஞ்சியா?" - சுபத்ரா

"கடைல வாங்கிருப்பா" - சேர்மத்தாய்

"ஆமா என்ன கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்ததே நீங்க தானே. சரியா தான் சொல்றிக"

வைஷ்ணவியின் பதிலில் சிரித்த சுபத்ரா, "நல்லா இருக்கு வைஷு ஆனா என்ன ஸ்வீட் தான் கம்மியா இருக்கு" எங்க மஹேஸ்வரியும் ஆமாம் என்று தலையை ஆடினார்.

"இன்னும் ரெண்டு ஸ்பூன் ஜீனி போட்ருந்தா சரியா இருந்துருக்கும்டா... ஏன் கார்த்தி?" மகனை உன்ன வைக்க அவனையும் இழுத்தார் அன்னை.

அமைதியாக ஒன்றை எடுத்து உண்டவன் அடுத்த ஒன்றையும் பொறுமையாக பாலில் சிந்தியிருந்த நட்ஸ் அனைத்தையும் ரசமலாய் மீது எடுத்து வைத்து காத்திருக்க இங்கு வைஷ்ணவிக்கு தான் பொறுமை காற்றில் பறந்தது. விட்டால் சென்று அவனுக்கு ஊட்டியே விட்ருப்பாள்.

மஹேஸ்வரி கூட அதே தான் கூறினார் ஆனால் அவன் வாயால் நல்லதோ கேட்டதோ அவனிடமிருந்து கேட்க ஆசை வைஷ்ணவிக்கு.

"நல்லா இருக்கு ம்மா..." என்றவன், "இந்த ஸ்வீட் தான் சரியா வரும். திகட்டாம இன்னும் ரெண்டு மூணு கூட சாப்பிடலாம்" கார்த்தியின் பார்வை தப்பி தவறி கூட வைஷ்ணவி பக்கம் செல்லவில்லை.

அன்னையை பார்த்தே பதில் கூறியவன் மீதம் இருந்த ஒன்றையும் எடுத்து ருசித்து உண்ண வைஷ்ணவியால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனத்தினுள்ளே அடக்கி வைத்து அவனையே கண் சிமிட்டாமல் உள் வாங்கிக்கொண்டிருந்தாள்.

"என்ற பேரன் உன்ர மனசு கஷ்டப்பட்டு போக கூடாதுன்னு அப்டி சொல்லி போட்ருப்பான்... உடனே ரொம்ப சந்தோச பட்டுக்கவேண்டாம்"

வைஷ்ணவியை பார்த்து முதியவர் சொல்ல, "அன்னைக்கு பிரியாணிக்கு குறை சொன்னப்ப மட்டும் உன்ர பேரன் சொன்னது சரியா இருந்ததோ" இவளும் விடாமல் வம்பு வளர்க்க துவங்கினாள்.

"இன்னைக்கு அவன் ஊருக்கு போற சந்தோஷத்துல அப்டி சொல்லிட்டான்" - சேர்மத்தாய்.

"இவ்ளோ பேசுறியே இத எப்படி செய்றதுன்னு சொல்லு பாப்போம்" - வைஷ்ணவி

"என்னத்த பெருசா செஞ்சிட போறிங்க மைதா மாவை விட்ட வேற என்ன தெரிஞ்சிடும் உங்களுக்கு" அழுத்துக்கொண்ட தன்னுடைய பாட்டியின் பேச்சில் வாய் விட்டு சத்தமாய் சிரித்தனர் அனைவரும் வைஷ்ணவியை தவிர.

"கெழவி நீ எல்லாம் என்ன குறை சொல்றதுக்கே லாய்க்கி இல்லாத ஆளு. ஸ்வீட் சாப்பிடாம, நாடகத்தை பாத்துட்டே வெத்தலையை போட்டோமான்னு இரு சொல்லிட்டேன்" கடுப்புடன் வைஷ்ணவி அவர் கையிலிருந்த கிண்ணத்தை பிடிங்கினாள்.

"மருமவளே... உண்மைய நான் கண்டு புடிச்சதும் பேச்ச மாத்துறா" மருமகளிடம் அவர் குறைபாட வைஷ்ணவி எழுந்து சமையலறை முன்னே இருந்த திட்டில் கிண்ணத்தை வைத்து,

"த்தை எனக்கு வர்ற கோவத்துக்கு உங்க மாமியார் கழுத்துல இருக்க செயின திருடிட்டு ஓடிடுவேன் சொல்லி வச்சுக்கோங்க. நா வர்றேன்" மாமியாரிடம் பார்வையை தன்னவனுக்கு மாற்றி வெளியில் சென்றுவிட்டாள்.

"பாத்தியா பாத்தியா அப்பயும் என் சங்கிலி மேல கண்ணு போடுறா"

மீண்டும் சேர்மத்தாய் வைஷ்ணவியை குறை சொல்ல கார்த்திக்கு தான் வந்ததிலிருந்து செல்லும் வரை வைஷ்ணவி தன் மேல் விடாமல் செலுத்தும் பார்வையில் மூச்சே முட்டியது.

அவளை நெருங்க விடவும் மனம் இல்லை, தள்ளி வைக்கவும் மனம் இல்லாமல் குழப்பத்தில் உழன்றது ஆணின் மனம். தன்னுடைய அறைக்கு சென்றவன் தேவையான பொருட்களை எல்லாம் தன்னுடைய பையினுள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த நேரம் மஹாலக்ஷ்மி அவனுடைய அறைக்கு வந்து அவனிடம் டிபன் பாக்ஸ் ஒன்றை கொடுத்தார்.

"எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா ப்பா?"

"இல்ல மா இன்னும் ஷூ, சாக்ஸ் எல்லாம் வைக்கணும்" என்றவன் கையிலிருந்த டிபன் பாக்ஸை திறந்து பார்த்தான்.

"என்ன மா நீங்களும் ரசமலாய் செஞ்சீங்களா?"

"இல்ல கார்த்தி வைஷ்ணவி தான் நீ நல்லா இருக்குனு சொன்னன்னு இன்னும் கொஞ்சம் குடுத்துட்டு போனா"

வைஷ்ணவியை பற்றிய நல்ல எண்ணங்களை அவனுள் விதைக்க மஹாலக்ஷ்மி செய்யவில்லை, மகன் விரும்பி உண்பதை பார்த்து அவரே செய்ய வேண்டும் என்று எண்ணியது தான் அதற்குள் வைஷ்ணவி வந்து கொடுத்து செல்ல அதை எடுத்துக்கொண்டு மகனுக்கு உடன் உதவி செய்ய வந்துவிட்டார் மேலே.

மெத்தைக்கு அருகில் இருந்த இருவர் அமரும் சோபா இருக்க அதில் அமர்ந்தவன் கண்கள் அன்னை தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து ஜன்னல் வழியாக வைஷ்ணவியின் வீட்டு மாடியை பார்த்தான். வைஷ்ணவி அறை கதவு மூடியிருந்தது.

"ஆதார் எல்லாம் தேவையா கார்த்தி?"

அன்னையை பார்த்தவன், "ஆமா ம்மா மறந்துட்டேன். எடுத்து வைக்கணும்"

எழுந்து சென்று எடுத்து அன்னை கையில் கொடுத்து, "என்னோட வால்ட்ல வச்சிடுங்க ம்மா" என்று மீண்டும் ஜன்னல் அருகே நின்றான், இந்த முறை கண்கள் மொத்த வீட்டையும் அளந்த சமயம் வீட்டின் வாயிலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

"பிரஷ், பேஸ்ட், சோப்பு எல்லாம் எடுத்தாச்சா ப்பா?"

"ம்ம் வச்சிட்டேன் ம்மா" அன்னைக்கு பதில் தந்துகொண்டே ரசமலாயை உண்டான்.

அனைவரும் கூறுவது போல் இனிப்பு குறைவு தான், அதன் வடிவம் கூட அவனுக்கு சரியாக தோன்றவில்லை, ஆனால் அவள் கண்கள் அவனது வார்த்தைகளுக்கு ஆசையோடு காத்திருப்பதை பார்த்ததும் வார்த்தைகள் மொத்தமும் அவளுக்காக பேசியதை அவனால் கூட தடுக்க முடியவில்லை.

காலை கொடுத்ததை விட இப்பொழுது உண்ணும் பொழுது இனிப்பின் அளவு கூடி சரியாக இருந்தது, நட்ஸ் கூட அவனுக்காக அதிகம் போட்டிருப்பாள் போலும்.

ஆனால் கார்த்திக்கு பெரிய கேள்வி, எதற்காக இந்த பெண் தன்னை இவ்வளவு ஆசையாக பார்க்கிறாள்? எப்படி அவளுக்கு தன் மீது இப்படி ஒரு பிரியம் வந்தது? அவளுக்காக இதுவரை தான் எதுவும் செய்ததில்லையே...

அவனை மொத்தமாக குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த பெண்ணோ தனக்கு முன்னே அமர்ந்திருந்த அவளுடைய நாய்க்கு கையிலிருந்த ஒரு பிஸ்கட்டை போட போனவள் அதற்கு போக்கு காட்டி தன்னுடைய வாய்க்குள் போட்டுகொண்டாள். அந்த நாயோ பவ்யமாக அவள் முன் மண்டியிட்டு நாக்கை தொங்கப்போட்டு எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்து அமைத்திருந்தது.

மீண்டும் அதே மாதிரி நாய்க்கு பிஸ்கட்டை போடுவது போல் சென்று தன்னுடைய வாய்க்கு போட்டவள் காலியாக இருந்த கவரை நாயிடம் போட அது வைஷ்ணவியை பார்த்து குலைக்க துவங்கியது.

ஆனால் அவளோ அதற்கெல்லாம் அசராமல் அமைதியாக அடுத்த பாக்கெட்டை பிரித்தாள். கார்த்திக்கு சிரிப்பு வந்துவிட மீதம் இருந்த இரண்டு இனிப்பை உண்டு அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு அன்னையிடம் சென்றுவிட்டான்.

வந்தது கார்த்தி சவூதி செல்லும் நாளும். தன்னுடைய மொத்த பொருட்களையும் கீழே சென்று காரில் வைக்க அவனுடைய தந்தை அவனுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்.

மஹாலக்ஷ்மி மகனுக்கு கை பக்குவமாய் சில பொருட்களை எடுத்துக்கொடுக்க அனைத்தையும் சிரிப்போடு வாங்கி அடுக்கினான் வாகனத்தினுள்.

"போதும் ம்மா... அவன் எவ்ளோ தான் கொண்டு போவான்? ஆறு மாசம் தான. அவனுக்கு வேணும்கிறத அவனே சமைச்சு ப்ரஸ்ஸா சாப்பிடுவானா நீ குடுக்குறத சாப்புடுவானா?"

சுப்பிரமணி மனைவியை குற்றம் சொல்ல, "அம்மா செஞ்சது தான் ப்பா பர்ஸ்ட்" அன்னையை விட்டு கொடுக்காமல் பேசும் மகனை பார்த்து எப்பொழுதும் போலே பூரித்து போனார் மஹாலக்ஷ்மி.

இதை எல்லாம் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவியின் அருகில் நின்ற ஷெர்லின், "பேசாம டிக்கில ஒளிஞ்சுக்குறியா?" கேட்டாள் தீவிரமாக.

தோழியை பார்த்து சிரித்த வைஷ்ணவி, "அது எப்படிங்க பாப்பா இவ்ளோ கேவலமான ஐடியா எல்லாம் உங்களுக்கே வருது?"

"கொஞ்ச நேரம் முன்னாடி சவூதிக்கு டிக்கெட் புக் பண்ணி தர சொன்ன உங்ககிட்ட இருந்து தான் பீப்பா வந்துச்சு" - ஷெர்லின்

"ஏதோ சமையல் கூட போகணும்ங்கிற ஒரு ஆசைல சொல்லிட்டேன் பாப்பா" அசடு வழிந்தாள் வைஷ்ணவி

"ம்ம்ம். சரி பேசுவியா அவர்கிட்ட?" - ஷெர்லின்

"அதெல்லாம் டெய்லி நைட்ல இருந்து விடிய விடிய ஒரே சாட்டிங் தான்" - வைஷ்ணவி

"விடிய விடியவா? நைட் நான் மெசேஜ் பண்ணப்ப ஆப்லைன் காமிச்சதே மாப்பிள்ளை"

குழப்பமாய் ஷெர்லின் கேட்க, "மெசேஜா? கனவுல பேசுவேன் மாமா" இதை சொல்லும் பொழுதும் வைஷ்ணவிக்கு முகத்தில் பெருமை தான்.

"டெய்லி ஒவ்வொரு இடத்துக்கு போவோம்... ஒவ்வொரு நாட்டுக்கெல்லாம் போயிருக்கோம். ஹனிமூன்க்கு பாளி-கு போகலாம்னு பேசி வச்சிருக்கோம்"

வெட்கப்படும் தோழியை பார்த்து எரிச்சலடைந்த ஷெர்லின், "ஏய் ஏய்... விஷத்தை கூட தாடி எனக்கு... ஆனா இந்த வெட்கம் மட்டும் பட்டு தொலையாத. ஆகாத கல்யாணத்துக்கு ஹனிமூன் ஒரு கேடு. சரி அவர்கிட்ட பேசுனியா?"

"என்ன பேசணும்?" - வைஷ்ணவி

"ஆறு மாசம் உன் ஆள பாக்க போறதில்லடி மனசு ஆறுதலுக்கு ரெண்டு வார்த்தை கூட பேசலையா?" எரிச்சலடைந்தாள் ஷெர்லின்.

"அதான் கண்ணாலேயே ஆறு மாசத்துக்கு சேத்து பாத்துட்டேனே" கண்கள் ஆசையாக கீழே நின்றவனை வருடியது.

"நீ இப்டியே காதல் வசனம் பேசிட்டு இரு, அவரு ஏதாவது ஒரு வெள்ள கார புள்ளைய கூட்டிட்டு வந்து நிக்க போறாரு. அப்றம் அம்மானாலும் வராது ஆத்தானாலும் வராது" - ஷெர்லின்

"ரெண்டும் ஒன்னு தான்டி. அங்க பாரு" கார்த்தியை காட்டினாள். அவன் தந்தை ஏதோ கூற அமைதியாக கையை பின்னால் கட்டி தலையை தலையை ஆட்டி நின்றான்.

"பாத்தியா என் ஆள... அப்பா சொல்றதுக்கெலாம் தலையை தலையை ஆட்டிட்டு இருக்கான். இந்த பையன் பெத்தவங்க பேச்ச கேக்குற ஆளு. அவர் பின்னாடி லூசு மாதிரி சுத்துற என்கிட்டயே ஒரு லைன் முழுசா பேசுனதில்ல. தெரியாத ஊர்ல, மொழி புரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி, உசார் பண்ற அளவு என் ஆள் உஷாரான ஆள் இல்ல... தோ தோ அங்க பாரு"

முகம் கொள்ளா புன்னகையுடன், "பாத்தியா அந்த முடிக்குள்ள கைய விட்டு தலையை சீவுறப்ப எவ்ளோ அழகா இருக்கார்ல.. ச்ச லக்கி பிங்கர்ஸ்" சுவற்றில் கை வலிக்காமல் ஒரு மெல்லிய அடியை வைத்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தாள்.

"ஏன் தோழி எங்க கல்யாணத்துக்கு என்ன கிப்ட் தருவ?" - வைஷ்ணவி

"ரெண்டு பண்ணி வாங்கி தர்றேன். ஜோடியா சேந்து மேயுங்க" - ஷெர்லின்

"அடடே... வெள்ள பண்ணி வாங்கி குடுடி" கேவலமான ஒரு வேண்டுகோளை வைத்த தோழியை என்ன கூறுவதென்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டாள்.

கீழே நேரம் ஆனதும் பாட்டி, சகோதரியிடம் விடைபெறுவதாக கூறிய கார்த்தி அன்னையிடம் வரும் பொழுது அவர் கண்ணில் இருந்த கண்ணீரை பார்த்தவன், "ம்மா.." என செல்ல சிணுங்கலோடு அன்னையை அனைத்தவன், "ஆறு மாசம் நிமிசத்துல ஓடிடும்"

அழுகையோடு தலையை ஆடியவர் முகத்தை பார்த்து, "சிரிச்சிட்டே வழி அனுப்பி வைங்க ம்மா"

கண்ணீரை துடைத்து சிரித்தவாறு, "ஆறு மாசத்துக்கு முன்னாடியே வேலை முடிஞ்சாலும் வந்துடனும் சொல்லிட்டேன்" சரி என தலையை ஆட்டி உறுதி தந்தான்.

"அப்றம் கார்த்தி வைஷ்ணவி அன்னைக்கு விளையாட்டுக்கு சென்ட் கேட்டுச்சு. முடிஞ்சா வாங்கிட்டு வா"

"சரி மா... என் அம்மா கேட்டு நான் நோ சொல்லுவேனா?" கண்கள் சாதாரணமாக பார்ப்பது போல் வைஷ்ணவி வீட்டு மாடியை பார்த்தான். வைஷ்ணவி.

"கார்த்தி கெளம்பலாமா?" தந்தை கை கடிகாரத்தை பார்த்து மகளை அழைத்தார்.

"ப்பா ஒரு நிமிஷம் சார்ஜ்ர் மறந்துட்டேன்" என்றவன் வேகமாக படிகளில் ஏறும் பொழுதே அவளை பார்த்துக்கொண்டே ஏற, "என்னமோ நடக்காதே... மர்மமா இருக்குதே" பாடலை முணுமுணுத்தவாறே சூசகமாக அங்கிருந்து நழுவினாள் ஷெர்லின்.

அறைக்குள் சென்றவன் உடனே வெளியில் வந்து ச்சார் ஒன்றை எடுத்து போட்டு அறையின் மேல் இருந்த ஸ்லாபில் மின்விளக்கோடு சேர்த்து ஒரு புதிய WindChime ஒன்றை கட்டிவிட்டு வைஷ்ணவியை பார்த்தான்.

ஏற்கனவே தன்னை பார்த்துக்கொண்டே படிகளில் ஏறியவனின் விழிகளில் இருந்து மீள முடியாமல் தவித்தவளுக்கு அவனின் இதழ்கடையோராம் தெரிந்த சிரிப்பில் சொக்கி தான் போனாள் பெண். நாற்காலியை அறைக்குள் போட்டு வந்தவன் நின்று வைஷ்ணவியை பார்த்து சிரிப்பை காட்டாமல் தலையை அசைக்க, மௌனமாய் வைஷ்ணவியின் தலையும் ஆடியது.

ஒரு அடி படியில் கால் வைத்த கார்த்தியை நிறுத்தியது அவள் வார்த்தை, "கார்த்திக்..." அவள் அழைப்பில் அவன் பார்க்க, "ஆல் தி பெஸ்ட்" என்றாள்.

மென்னகையோடு தலையை ஆட்டி அவள் வாழ்த்தை ஏற்றவன் இறங்கி கீழே சென்றுவிட்டான். அடுத்த பத்து நிமிடத்தில் அவன் வாகனம் அந்த தெருவை விட்டு கண்ணில் இருந்து மறைந்த பின்னர் தான் வைஷ்ணவிக்கு அவன் அந்த மணியை மாட்டியதன் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் தவித்து போனாள்.

Continue Reading

You'll Also Like

25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
42.3K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
95.3K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...