காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

37.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
Mood boards!

43

374 18 9
By Madhu_dr_cool

"ஸ்வெட்டர் மட்டும் போதுமா.. இல்ல மப்ளரும் வேணுமா? நான் ஜீன்ஸ் பேண்ட் எடுத்துட்டு வரேன்.. அது குளுர் தாங்கும்ல? அப்பாகிட்ட டிக்கெட் இருக்கு; எங்க கைல தரமாட்டேங்கறார்.. தொலைச்சிடுவோமாம். அப்படியே அவர் மட்டும் எல்லா பொருளையும் பாதுகாப்பா வெச்சிருக்கற மாதிரித் தான்! போன வாரம் ஈ.பி. பில்லை எங்கேயோ வெச்சிட்டு அம்மாவை தாளிச்சிட்டு இருந்தார்.."

மூன்று வாரங்கள் கடந்தது தெரியாமல் கடந்துவிட, தனுஷின் இடைவிடா இரவு ஒலிபரப்பை ஸ்பீக்கர்ஃபோன் வழி கேட்டவாறே தனது அஸைன்மெண்ட் பேப்பர்களை சீர்ப்படுத்திக் கொண்டிருந்தாள் தாரா.

"தாரா ஆஷோ, தேர் ஹோ காயே தோ கீ காபீ?"
வெளியே இந்திராணியின் குரல் கேட்க, இலகுவாக தாராவும் குரல்கொடுத்தாள்.

"ஹா அமி ஆஸ்ச்சி! ஏக் முகொர்தோ! பாயேர் ஷாதே கதோ போல்ச்சி!"

தனுஷ் கைபேசியிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான்.
"அடே! வாரே வா! மூணு மாசத்துல முழு பெங்காலியா மாறிப் போயிட்டியே தாரா!? தூர்தர்ஷன் பாக்குற மாதிரி இருக்கு, நீ பேசறதை பாக்க! ஆமா, இப்ப என்ன கேட்டாங்க.. நீ என்ன சொன்ன?"

"லேட்டாச்சே, இன்னும் சாப்பிடலையான்னு கேட்டாங்க.. தம்பியோட பேசிட்டிருக்கேன், வரேன்னு நான் சொன்னேன்."

"நீ பேசற ஸ்டைல பாத்தா ஏதோ உலக அரசியல் பேசற மாதிரி இருந்தது.. ஆனா கடைசியில சோறு விஷயம்தான் பேசறீங்க. எந்த லேங்வேஜா இருந்தா என்ன, நமக்கு சோறு தானே முக்கியம்!?"

தாரா சிரிக்க, அதற்குள் தனுஷின் பின்னணியில் கதவு தட்டப்படும் சத்தமும், தேவியின், 'அப்பா வந்தாச்சு' என்ற பதற்றக் குரலும் கேட்க, தனுஷ் அவசரமாக அழைப்பை வைத்துவிட, தாரா பெருமூச்சு விட்டாள்.

'இது மட்டும் இன்னும் மாறல..'

"தாரா.. ஆமி க்ளாந்த்தோ! த்ரூதோ ஆஷோ."

"ஆஸ்ச்சி, ஆஸ்ச்சி.."

வேகமாக உணவுக்கூடத்துக்கு வந்தபோது, படியிறங்கி வந்த ஆதித்தின் மீது கொஞ்சம் இடிக்க நேரிட்டது.

"ஹேய்.. பாத்து!"

"ஓய்.. நீங்கதான் என்மேல இடிச்சீங்க! விறுவிறுன்னு படியிறங்கி வரப்போ, கீழ யாரும் வர்றாங்களான்னு பாக்கணும்!"

"ஆஹான்.. மேடம்மும் அரக்க பரக்க டின்னருக்காக ஓடி வரும்போது, எதிர்ல யாராச்சும் வர்றாங்களான்னு பாக்கணும்."

அவனுக்குப் பழிப்புக் காட்டிவிட்டு அவள் மேசைக்குச் செல்ல, சிரித்தபடி அவனும் பின்தொடர்ந்தான்.

"சண்டே தனுஷ் வர்றான்ல? எல்லாம் ரெடி பண்ணியாச்சா? அங்க ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?"

"இல்ல, ரெடி தான். டிக்கெட்டை மட்டும் அப்பாவே வெச்சுட்டு தர மாட்டேங்கறாராம்.. அதான் பொலம்பிட்டு இருந்தான். போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு அவன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சீன் போடலாம்னு நினைச்சிருப்பான்.. அதுல எங்கப்பா மண்ணள்ளிப் போட்டுட்டார்!"

"கூப் பாலோ." (சுத்தம்!)

"ஹானா? அமார் பாப் கூப் மோஹான்."
(இல்ல? எங்கப்பா எவ்ளோ நல்லவரு!)

இருவரும் சிரிக்க, இந்திராணி அந்த சாக்கில் இருவருடைய தட்டிலும் நான்கு அடைகளை சேர்த்துவிட, தாரா சிணுங்கினாள்.

"அக்கா! இத்தனையையும் எப்படி சாப்பிடறது? வயிறுமுட்ட சாப்ட்டு தூங்கிட்டா நாளைக்கு எக்ஸாமுக்கு யார் படிக்கறது?"

"ப்ச், கடைசி எக்ஸாம் தானே? போனாப் போகுது. எப்படி மெலிஞ்சுட்ட தெரியுமா நீ? ஒழுங்கா சாப்பிடு! சுப்சாப் காவோ!"

"அஷாத்தோ! எனக்கு ரெண்டு போதும்."

அவள் இரண்டை எடுத்து ஆதித்தின்புறம் கொண்டு செல்ல, அவன் ஒற்றைப் புருவம் தூக்கி விளையாட்டாக எச்சரிக்க, சரியென வேறொரு தட்டில் வைத்துவிட்டாள் அவற்றை.

இந்திராணி திரும்ப வந்து தட்டைப் பார்த்துவிட்டு முறைக்க, அவளோ தோளைக் குலுக்கினாள்.

"வரவர ஓவர் விளையாட்டா போச்சு ஒனக்கு! தோமார் மா ஆஸ்ச்சே னா? தாக்கே போல்போ!"

"சொல்லிக்கோங்க! எங்கம்மாவுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!"

"பசிச்சா அவளே சாப்பிடுவா, விடுங்க" என ஆதித் பஞ்சாயத்தை முடித்துவைக்க, அன்றைய பொழுதும் இனிதே கழிந்தது.

*****

கல்லூரியில் கடைசி பரீட்சை எழுதிக்கொண்டிருக்கையில் தன்மீது கூழாங்கல் ஒன்று வந்து விழ, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"ஹாய்" என்றான் மனு.

தாராவின் பேனா நழுவியது.

"இங்க என்ன பண்ற!?" கிசுகிசுக் குரலில் அவள் பதற, அவனோ சிரித்தான்.

"எழுதினது போதும். எழுந்து வா!"

"அஷாத்தோ. ஆமி நா ஆஸ்ச்சி."

"கடின் ஹாபேன் னா. வருவியா மாட்டியா நீ?"

"நான்--"

"சைலன்ஸ் ப்ளீஸ்!! யூ கேன் டேக் இட் அவுட்சைட்."

மேற்பார்வையாளர் சத்தமிடவும் அவள் பதறி எழுந்தாள்.
"நோ ஸார், ஐ--"

"அவுட் ப்ளீஸ்."

பெருமூச்சுடன் பரீட்சைத் தாளை தந்துவிட்டு அவள் வெளியேறினாள் தொங்கிய முகத்துடன்.

"சந்தோஷமா?"

"இன்னும் இல்ல, வா."

அவளது கையைப் பிடித்துத் தன் வேகத்திற்கு அவன் இழுக்க, மற்ற வகுப்பறை ஜன்னல்கள் தோறும் கண்கள் அவர்களை மொய்க்க, முகத்தை மூட முயன்று தோற்றுப்போய் அவள் தோல்வியோடு தலையை ஆட்டினாள்.

"என் காலேஜே வேடிக்கை பாக்குது. என் மானம் போகுது.."

"உனக்கு அவங்க யாரையாவது பர்சனலா தெரியுமா? இல்லைல்ல? பின்ன அவங்க என்ன நினைச்சா உனக்கென்ன? சில்!"

பார்க் பெஞ்ச்சில் தன்னை அமரவைத்து, அருகில் அமர்ந்தவனை முறைத்தாள் அவள்.

"சரி.. ஏன் இந்த அவசரம்!? இன்னும் அரைமணி நேரத்துல பெல் அடிச்சிருப்பாங்க. அதுக்குள்ள--"

"பாக்கணும் போல இருந்தது."

"அதான், ஏன்?"

"லண்டன் போறேன். அவுட்டோர் ஷூட்."

இப்போது கொஞ்சம் அமைதியானாள் அவள். முகத்தில் லேசான ஆச்சரியமும், பிரிவாற்றாமையும்.
"அம்மாகிட்ட, தம்பிகிட்ட அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன்.."

"கேட்டதா சொல்லு."

"எப்ப கிளம்பற, நாளைக்கா?"

"நாலரைக்கு. அதாவது, இன்னும் டூ ஹவர்ஸ்."

"வாட்?? அப்போ ஏர்ப்போர்ட் போகாம இங்க என்ன பண்ற மனு? த்ரூதோ ஜாவ்!"

புன்னகையுடன் அவள் கன்னத்தைத் தொட்டான் அவன். "இந்த மூஞ்சியை மறுபடி பாக்க மூணு மாசம் ஆகும். அதான், ஞாபகத்துக்கு ஒருமுறை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்," என கன்னம் கிள்ளினான். "வெய்ட் பண்ண நேரமில்ல.. அதான் க்ளாஸ்ரூம்ல இருந்து உன்னை கடத்திட்டு வந்தேன்."

"பரவால்ல. ஜாக்கிரதையா போயிட்டு வா மனு. வேலை நல்லபடியா முடியட்டும். நேரம் கிடைக்கும்போது கால் பண்ணு மனு. மறக்காம ஒரு மெசேஜ் மட்டுமாவது பண்ணு."

"ம்ம்.. பைபை. ஐ வில் மிஸ் யூ ஸோ மச் தாரா."
அவனது கார் வந்ததும் கிளம்ப எழுந்தான்.

"மனு?"

"ம்ம்?"

"டேக் கேர்."

பதிலென ஒரு கண்சிமிட்டலைத் தந்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டான் அவன்.

கார் கிளம்பும்போது அவள் கையசைக்க, கண்கள் தாமாகக் கலங்க, அவன் நாடகத்தனமாக இருகைகளாலும் காற்றில் முத்தங்கள் கொடுக்கவும் பட்டென சிரித்துவிட்டாள் அவள். கண்மறையும்வரை கையசைத்து விடைகொடுத்துவிட்டு, கனத்த மனதுடன் எழுந்து நடந்தாள் அவள்.

*********

"ஆதித் கண்ணா.. நான் பாட்டி பேசறேன்டா. எப்படி இருக்க கண்ணா? தாரா எப்படி இருக்கா?"

"நான் நல்லா இருக்கேன். தாராவும் நல்லா இருக்கா. அவளுக்கு செமஸ்டர்ஸ் முடிஞ்சு லீவ் ஆரம்பிக்குது. அடுத்த மாசத்துல இருந்து அவ ஃபைனல் இயர். அவங்க அம்மாவும் தம்பியும் சண்டே வர்றாங்க. குறைஞ்சது ஒரு மாசமாவது தங்குவாங்க."

"ம்ம், சீனிவாசன் சொன்னாருடா. நான் அவரையும் போயிட்டு வரத்தான் சொன்னேன்.. ஏனோ வேணாம்னுட்டார்"

அவன் சிரித்தான்.
"பர்வதம் மில்ஸ் அவர் இல்லாம என்ன ஆகும்? ஒரு மாசமென்ன, ஒரு நாள் அவர் இல்லைன்னாலும் காட்டன் மில்லே பஞ்சு பஞ்சா பறந்துடும்ல?"

"மாமனார்டா உனக்கு! நக்கல் பண்ணாத."

அவன் கசப்பாக உதட்டை சுழித்தான். தாராவின் தந்தை என்பதற்காக அவரை விட்டுவிட முடிவெடுத்து, "ஓகே, ஸாரி.." என்றான் மெல்லமாக; அதிருப்தியாக.

"சரி, ஹெல்மிங்டன் டீல் என்ன ஆச்சு? ஏதோ ப்ராப்ளம்னு நியூஸ் வந்ததே?"

"இல்ல பாட்டி.. டீல் நமக்கு தான். என்கிட்ட அந்த கம்பெனி மேனேஜரே ஃபோன்ல பேசினார். அவங்க ஜி.எம்க்கு உடம்பு சரியில்லையாம்.. அதனால தான் டிலே ஆகுதுன்னு சொன்னார்."

"கண்ணா, ஒருதரம் நீயே போயி ஜி.எம்மை நேர்ல பார்த்து, நலம் விசாரிச்சுட்டு வந்துடு."

"ஏன் பாட்டி? அதான் டீல் க்ளோஸ் ஆக--"

"இது பிஸினஸ் இல்ல ஆதித். மனிதாபிமானம். சக உழைப்பாளிக்கான நேசம். டேவிட் மார்ட்டின் ரொம்ப ரொம்ப சிறந்த நிர்வாகி. அவருக்கு உடல்நிலை சரியில்லாம போனது தொழில் துறைக்கே துரதிர்ஷ்டம். ஒரு பங்குதாரரா நம்ம அன்பை காட்டணும். போயிட்டு வா."

"எஸ் மேம்."

பாட்டி எதிர்முனையில் சிரிக்க, ஆதித்தும் புன்னகையுடன் அழைப்பை வைத்தான். ராஜீவ் அவனைக் குறுகுறுவெனப் பார்த்தான்.

"என்ன பாக்குற?"

"தாராவோட மேஜிக்கை பாக்கறேன். அவளோட பழகி, உங்களுக்கு ஹ்யூமர் எல்லாம் வருதே.."

"ப்ச்.. என் ஹ்யூமர் சென்ஸை கவனிக்கறதை விட்டுட்டு, ஹ்யூமன் ரிசோர்ஸ் மீட்டிங் என்ன ஆச்சுன்னு சொல்லு."

"மார்க்கெட்டிங் டீம்ல ஆள் பத்தலை. ஒரு ஹையரிங் இன்டர்வியூ ஏற்பாடு பண்றதுக்கு உங்க அப்ரூவல் வேணும்."

"ப்ரபோசல் அனுப்பியிருக்காங்களா? நான் பாக்கறேன்."

"அதைவிடுங்க.. தாராவுக்கு எப்ப ப்ரபோஸ் பண்ணப் போறீங்க?"

ராஜீவ் இலகுவாக வினவ, ஆதித் திகைப்பாகப் பார்த்தான்.

********************

ஹாய் மக்களே...

ஆமை, நத்தை, ஸ்லாத்.. இந்த லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கங்க. இன்னும் எத்தனை மாசம் ஆகப் போகுதோ என் கதையை எழுதி முடிக்க!

ஜூலை மாதம் பட்டமளிப்பு விழா. அது முடிந்ததும் கொஞ்சம் ப்ரீ ஆகி விடுவேன். வீட்டில் கறாராக சொல்லிவிட்டேன், குறைந்தது ஆறு மாதமாவது விடுமுறை எடுத்து, குறைவைத்த கதைகளை எல்லாம் எழுதி முடித்த பின்னர்தான் அடுத்த வேலை என்று. எனவே விரைவில் சந்திப்போம்.

அனைவருக்கும் எனது அன்பு.

மது.



Continue Reading

You'll Also Like

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
18.8K 1.7K 44
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
53.5K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...