டிங் டாங் காதல்

By Bookeluthaporen

17K 812 168

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 6
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 9
டிங் டாங் - 10
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 15
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 23
டிங் டாங் - 24
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 11

453 31 3
By Bookeluthaporen


மகனின் செய்தியை கேட்டு விறுவிறுவென கணவன் முன் வந்து நின்றார் விழிகளில் பரிதவிப்புடன். பின்னாலே வற்றிய சிரிப்போடு வந்த மகனை பார்த்ததும் மனைவியின் கலகத்திற்கு காரணம் புரிந்து. 

"என்னடா சொன்ன உங்கம்மாட்ட?" முறைத்தார் சுப்பிரமணி. 

மனைவி என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதிகம் பேசாதவர் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னிடம் கலங்கிய விழிகளுடன் வந்து நின்றால் எதிரில் எவர் நின்றாலும் மனைவி பற்றி மட்டுமே யோசித்து விடும் அவர் எண்ணம். 

அது அன்னையாக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி. தன்னை மட்டுமே உலகமாய் வந்து நிற்பவரை சிறிதும் கலங்கடிக்க கூடாதென்று அவர் எண்ணம். இப்பொழுது மகனை விட்டுவிடுவாரா என்ன?

"இந்த ஒர்க் முடியவும் ஆறு மாசம் ஆகும் ப்பா. கொஞ்ச நாள் மட்டும் ஒர்க் பண்ண எந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. அதான் பாரின் போகலாம்னு யோசிச்சேன்" 

"என்ன கார்த்தி பேசுற? உன்ன விட்டுட்டு நாங்க இருந்ததே இல்ல ப்பா. ஆறு மாசம் கண் மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிடும். இதுக்காக நீ ஆறு மாசம் எங்கையாவது போய் கஷ்டப்படணுமா?" 

இதுவரை அவனை பார்க்காமல் ஒரு மாதம் கூட மஹாலக்ஷ்மி தாக்கு பிடித்ததில்லை. ஆறு மாதம் வெளிநாடு சென்றால் மொத்தமும் அவனை பார்க்க முடியாதே என்ற வருத்தத்தில் தான் கணவனிடம் வந்து நின்றார். 

"புரியுது மா ஆனா ஆறே ஆறு மாசம் தான் மா. வேகமா வந்துடுவேன்" 

"ஏன்யா... இந்த கெழவியே எப்போ எப்போ-னு இருக்கேன். இதுல நீரும் கெளம்பிட்டா என்ற நிலைமையை பத்தி யோசிச்சுப்போட்டு முடிவெடுக்க வேண்டாமா?" கண்ணீரை வடித்துக்கொண்டே பேரனிடம் கேள்விகேட்டார் சேர்மத்தாய். 

"என்ன பட்டி இது... இப்டி எல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு ஆயிசு கெட்டி. ஏன் கவலை பட்டு ஒடம்ப கெடுக்குரிக?" 

வருத்தமாய் கார்த்திக் வினவ, "என்ன தம்பி இது திடீர்னு முடிவு? பெத்தவுக என்ன யோசிக்கிறாங்க, இது சரியா வருமா... என்ன ஏது-னு ஒரு வார்த்தை கூட கேக்காம நீயா பேசுற" மகன் மீது கோவத்தை காட்டினார் சுப்பிரமணி. 

"கேக்கலாம்னு தான் ப்பா நெனச்சேன். ஆனா போனா நல்லா இருக்கும். கைக்கு கொஞ்சம் காசு பாத்த மாதிரியும் இருக்கும்" 

"ஓ அப்ப அந்த ஊர்ல ஆறு மாசத்துக்கு வேலை தருவங்களா என்ன?" தன் பங்கிற்கு சகோதரி சகோதரனுக்கு உதவினாள். 

மகள் வார்த்தையை கேட்டு சுப்பிரமணி மகனை கேள்வியாய் பார்க்க, "இது ஒரு ஈவென்ட் ஒர்க் ப்பா. நாலு மாசம் பெரிய புட் பால் ஒர்க்க்கு வர்ற ஆளுங்களுக்கு குக் பண்றது. மிச்சம் ரெண்டு மாசம் ஒரு கிரெடிட் மாதிரி செவென் ஸ்டார் ஹோட்டல்ல ஸ்பெஷல் ட்ரைனிங். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் செஃப் சொன்னாங்க. தமிழ்நாடுல இருந்து மூணு பேர் தான் செலக்ட் ஆகிருக்கோம். பெரிய ஆபர்ச்சுனிட்டி ப்பா" சொல்ல வேண்டியது ஆகியது, இனி தாங்களே ஒரு முடிவை கூறுங்கள் என்று நின்றான். 

"தாராளமா போகலாம் கார்த்தி. ஆனா நீ போறேன்னு சொல்றது இந்த நேரத்துல சரியில்ல. உன் பொறுப்புல மொத்த கட்டடத்தொட வேலைய வச்சிட்டு இப்டி போறேன்னு சொல்றது சுத்தமா என் மனசுக்கு ஒப்பல தம்பி" 

"இந்த வேலை இல்லனா அவன் போகணுமா?" மகன் செல்வதை ஸ்ரீகரிக்க இயலாதவராய் அன்னை கணவனிடம் வாதாடினார். 

"ம்மா இது என்ன மா பிடிவாதம்?" - கார்த்தி 

"யாருக்கு ப்பா பிடிவாதம் உனக்கா இல்ல எனக்கா? என்ன அங்க போனா மாசம் ஒரு லட்சம் சம்பளம் வருமா? சென்னை போ. அதே சம்பளம் அங்கையும் உன் திறமைக்கு வரும்" என்ன சொல்லி அன்னைக்கு புரிய வைக்க என்று தெரியவில்லை. 

"நான் வர்றேன்னு சொல்லிட்டேன் ம்மா. இனி மாட்டேன்னு சொல்ல முடியாது. இங்க இருக்குற வேலைய என் ப்ரன்ட்ஸ் வந்து பாத்துக்குறேன்னு சொல்லிருக்காங்க. ஆறே மாசம் தான்" தந்தையிடம் திரும்பி, 

"புரிஞ்சுக்கோங்க ப்பா. எனக்கு புடிச்சத நான் செய்யணும்னு ஆசைப்படுறேன்" 

இனி இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதை மகம் பேசும் பொழுதே அவன் கண்களை பார்த்து புரிந்துகொண்ட பெற்றோர் எதுவும் பேசாது விலகிட அனைவரின் முகத்தை முகத்தை பார்த்து அவர்கள் கோவத்தில் இருப்பதாய் அறிந்து மன நிம்மதி இல்லாமல் மாடி ஏறி போனவன் கண்கள் தப்பாமல் எதிர் வீட்டு மாடியில் விழுந்தது. 

எப்பொழுதும் எரியும் விடிவெள்ளியை போன்ற வெண்மை நிற விளக்கு சரியாக அவள் அறையின் வாசலில் விழ, இவன் வரவிற்காகவே காத்திருந்தது போல் இவன் முகத்தை பார்த்ததும் அந்த விளக்கை விட பிரகாசமாய் மாறியது அந்த சின்ன வதனத்தில் தோன்றிய சிரிப்பு. 'ஹாய்...' மெதுவாக அவள் வாய் அசைய வைஷ்ணவியின் கைகளோ காற்றில் வேகமாக அசைந்தாடியது. 

என்ன கூறுவதென்று தெரியாமல் அவளை சுத்தமாய் நிராகரித்து அறைக்குள் சென்று அடைந்துகொண்டவனை வாடிய முகத்துடன் பார்த்த வைஷ்ணவி அப்படியே அமர்ந்திருக்க மீண்டும் கதவை திறந்து அவளுக்கு காட்சியளித்தான் அவளவன். 

சுற்றி எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன் அவளை பார்க்க அவன் தன்னிடம் தான் பேசவந்துள்ளதை யூகித்தவள் வீட்டு முனையில் ஆர்வமாக நின்றாள் அவன் முகன் பார்த்து. 

"சொல்லுங்க கார்த்திக்... சொல்லுங்க" என்க, 

"வேணாம் வைஷ்ணவி" 

"உங்களுக்கு நான் இன்னும் எதுவுமே குடுக்கலையே கார்த்திக் அதுக்குள்ள வேணாம் சொல்றிங்க?" வைஷ்ணவியின் இரட்டை அர்த்தத்தை கேட்டவன் முகம் கோவத்தில் சிவந்தது. 

எரிச்சலில் இடது கை பெருவிரல் கொண்டு நெற்றியை நீவியவன், "என்ன வைஷ்ணவி இது புரியாம பேசுறீங்க?" 

"அட என்ன கார்த்திக் நீங்க தான் எதுவும் புரியாம பேசுறீங்க... புரியலைனாலும் சரி பரவால்ல புரிய வைக்க வேண்டிய மாதிரி நான் புரிய வைக்கிறேன்" கண் சிமிட்டி சிரித்தவள் மீது எல்லை கடந்து கோவம் சென்றது ஆணுக்கு. 

"நீங்க பொண்ணு தானங்க? ஏன் இப்டி எல்லாம் பேசுறீங்க அசிங்கமா பேசுறீங்க? ச்சை கேக்கவே புடிக்கல. இதுல உங்ககூட லைப் லாங்... யோசிக்கவே முடியல. இதோட இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கி எரிஞ்சிடுங்க"

அவளிடம் மொத்த கோபத்தையும் காட்டாமல் தன்னறைக்குள் சென்று அடைந்தவன் என்னனெலாம் வைஷ்ணவியை விட்டு தள்ளி இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்ய துடித்தது. முதலில் அவன் அழைத்தது அவனுடைய செஃப் சுந்தராஜனுக்கு தான். 

"சொல்லு கார்த்தி" சற்று உரக்க கழகத்தில் தான் இருந்தது அவர் குரல். 

"சவூதி போற ஆபர்ச்சுனிடி இன்னும் ஓபன்ல தான் இருக்கா சார்?" ஏற்கனவே அவனுடைய திறமையில் அவன் பக்கம் ஈர்க்கப்பட்டவருக்கு எப்படியேனும் அவனை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தூண்டிவிட வேண்டும் என்று தான் அவனிடம் பலமுறை பேசினார். 

இப்பொழுது இவனே வரும் பொழுது விடுவாரா என்ன? உறக்கம் போனது அவருக்கு, "ம்ம்ம் எஸ் கார்த்தி" 

"நான் போறேன் சார்... ஆனா வீட்டுல ஆறு மாசம்-னு சொல்லிருக்கேன். ரெண்டு மாசம் ஒர்க், ரெண்டு மாசம் ட்ரைனிங்-னு தெரியாது" 

"ஏன் ஏதாவது பிரச்சனையா. வீட்டை விட்டு வரவே மாட்டேன்னு சொல்லுவ. என்ன வீட்டை விட்டு அம்மா தொரத்திட்டங்களா?" சிரித்தார் அந்த பெரிய மனிதர். 

"இல்ல சார். இங்க ஒர்க் எதுவும் பெருசா இல்ல. அதன் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்னு தான் போறேன். லாஸ்ட் டூ மந்த்ஸ் கஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இங்க இந்தியா வந்து உங்க சென்னை ஹோட்டல்ல ஒர்க் பண்ண நெனச்சேன். உங்களுக்கு ஓகே ஆனா மட்டும்" என்றான். 

"எனக்கு பிரச்சனை இல்ல கார்த்தி. நீ தாராளமா வரலாம். நான் விசா ஏற்பாடு பண்ண சொல்றேன்" 

"தேங்க்ஸ் சார்" நிம்மதி பெருமூச்சோடு கைபேசியை கட்டிலில் போட்டவன் காற்றுக்காக ஜன்னலை திறந்து விட்ட பொழுது எதிர்வீட்டு மாடியில் பதிய மெல்லிய இசையின் சத்தம். வைஷ்ணவி தான் ஊஞ்சலில் அமர்ந்து சோக பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டிருந்தாள். அஞ்சாதே படத்தின் பாடல். 

சித்தாளு பொண்ண
நெனச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க
பாரு பொலம்புறாரு

நூறு மில்லிய
அடிச்சா போதையில்லையே
நூறை தாண்டுனா நடக்க
பாதையில்லையே

'டேய் கார்த்தி சவூதி போற... நச்சு பிகர் ஒன்னு கரெக்ட் பண்ணி இச்சு குடுத்து இந்த ராங்கிய அள்ளுவிட வக்கிர' 

தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டவன் கண்கள் காரணமே இல்லாமல் அவளிடம் மீண்டும் சென்றது. பாடல் சோகமாக இருந்ததே தவிர அந்த முகத்தில் சோகமில்லை. 

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி

சட்டென பாட்டை நிறுத்தி கைபேசியை காதில் வைத்து எழுந்தவள் கார்த்தியின் அறையை நோக்கி வர, இவன் மின்விளக்கை அணைத்துவிட்டான்.

சந்தேகமாய் ஜன்னல் உள்ளே எட்டிப்பார்த்தவள் அவன் இல்லை என்று பார்த்து உதட்டை சுளித்து தன்னுடைய அடிமைக்கு அழைத்தாள். 

அழைப்பை ஏற்ற ஷெர்லின் குரலில் ஆர்வமே இல்லாமல், "சொல்லி தொலையும்" என்றாள். 

வைஷ்ணவியோ கனவு சிரிப்போடு, "நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் சொல்லு பாப்போம்?" அங்கும் இங்கும் நடந்துகொண்டே அவன் வீட்டு மாடியை பார்த்து அவனையே ரசிப்பது போல் இருந்தது அவள் கண்கள். 

"திருட்டு பூனை திருட போற மாதிரி எதுத்த வீட்டை குறுகுறு-னு பாத்துட்டு இருப்ப" 

'எப்படி கண்டு புடிச்சா... வீட்டுக்கு எதுவும் வந்துருக்காளா?' எட்டி கீழே பார்த்தாள், எவரும் இல்லை. 

"எப்டி பேபிமா கண்டுபுடிச்ச?" 

"நீ விடுற ஜொள்ளுல தான் என் போன் நனஞ்சே போச்சே" - ஷெர்லின் 

வைஷ்ணவி அமைதியாக இருக்க, "என்ன? என்ன கேக்கணும்?" 

"இந்த சமயல எப்டி கரெக்ட் பண்றது-னு சொல்றா மச்சான்" கதறிய தோழியின் பரிதவிப்பில் ஷெர்லின் சிரிப்பு அடக்க முடியாமல் சத்தமாக இந்த பக்கமும் எதிரொலித்தது. 

"ஏய் நாயரே செல்போன்ல செருப்பால அடிக்க முடியாதுன்னு தானே இப்டி சிரிக்கிற?" 

"கமல் டயலாக் பேசுனா ஒடனே கமல் மாதிரி உன்னால ரொமான்ஸ் பண்ண முடியுமா?" எள்ளலாக ஷெர்லின். 

"ஏன் முடியாது. இன்னைக்கு கோவிலுக்கு, நைட் டிபன், சைட் டூ வீடு வண்டில வந்து சமையலுக்கு மேரேஜ் ப்ரப்போஸல் கூட பண்ணிட்டேன். கமல் கூட இவ்ளோ ஸ்பீடா இருக்க மாட்டாரு" 

"எல்லாத்தையும் ஒரே நாள்ல பண்ணிட்டியா? அடியே காஜூ..." சத்தியமாக ஷெர்லினின் மூளை அவள் கூறுவதை ஏற்க மறுத்தது, அவ்வளவு ஆச்சிரியம். 

"அப்டி எல்லாம் பேசாத பேபிமா. இது காஜூ இல்ல. அதையும் மீறிய புனிதமான காதல்" 

"நல்லவேளை கோண்டா மவன் மாதிரி ஒரேடியா பாஞ்சு வைக்கல" பெருமூச்சூடு தலையை ஆட்டி வைத்தாள் ஷெர்லின். நினைக்கவே அவளுக்கு பதறியது. 

"வழிய சொல்லு பேபிமா" 

"சேர முடியாத உறவுல தான் பாசம் அதிகம் இருக்குமாம் வைஷு..." 

சோகமாய் பேசிய தோழியின் நடிப்பை கண்டவள், "அதான் உனக்கும் என் அண்ணனுக்கும் செட் ஆவல போல" 

"இதுக்காகவே உன் அண்ணனை கரெக்ட் பண்ணி... உன் கையாலேயே அவன் கட்டுற தாலில மூணாவது முடிச்சு போட வைக்கிறேன்" - ஷெர்லின் 

"நீ அவனை கரெக்ட் பண்றதுக்குள்ள அவன் வேற பொண்ண இழுத்துட்டு ஓட போறான். பேச்ச மாத்துன செருப்பாலேயே அடிப்பேன். ஒழுங்கா இந்த சமயல உசார் பண்ண கிளீன் மேப் ஒன்னு போட்டு குடு. நீ எனக்கு ஹெல்ப் பண்ணா நானும் உனக்கு பண்ணுவேன் என் கூட பொறந்த தடிமாட கரெக்ட் பண்ண" 

ஒரு நிமிடம் தீவிரமாக யோசித்த ஷெர்லின், "கார்த்திக் அண்ணாகிட்ட நீ என்ன என்ன நோட் பண்ணிருக்க சொல்லு" உடனே குதூகலம் பிறந்தது ஷெர்லின் கேள்வியில் வைஷ்ணவிக்கு. 

"கண்ணு முழி கருப்பு ஆனா பார்வை என்னைக்கும் தப்பா இருந்ததில்ல. ஷார்ப் நோஸ் இருந்தா நல்லா இருந்திருக்கும் ஆனா இவருக்கு கொஞ்சம் சப்ப மூக்கு தான். மான்லி லிப்ஸ்... பொண்ணுங்களுக்கு இருக்குற மாதிரி அதே ரெட்டிஷ்னஸ். லிப்ஸ்க்கு டிப்ஸ் வேணும்னா தாராளமா அங்க கேக்கலாம்" 

வைஷ்ணவி கூறுவதை எல்லாம் மெத்தையில் படுத்து அமைதியாக கேட்டவன் தன்னுடைய இதழ்களை நா கொண்டு ஈரப்படுத்தி முடித்த பொழுது தான் அவள் தன்னை ரசித்ததை எந்த கோவமும் காட்டாமல் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தான். 

'கார்த்தி வேணாம்டா... வேணாம்' தனக்குள்ளேயே சொல்லி வைக்க மட்டும் தான் முடிந்தது. 

"அந்த கை. இத நான் சொல்லியே ஆகணும். அவ்ளோ மான்லி தெறியுமா? இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி கூட நான் பேசுறத கேக்க புடிக்காம எரிச்சலோடு லெப்ட் ஹாண்ட் மிடில் பிங்கர் வச்சு நெத்தில தேச்சார் பாரு... பாஹ்... அந்த பிளாக் ஸ்ட்ராப் வாட்ச். பிரவுன் கலர் ஸ்ட்ராப் போட்ருந்தா இன்னும் நல்லா இருக்கும். பரவால்ல அது கூட அழகு தான். அப்றம் வண்டி ஓட்டுறப்ப அந்த முடி பண்ற சேட்டையை எல்லாம்..." 

"இதோட நீ நிறுத்தல அப்றம் பாலா படம் வசனம் எல்லாத்தையும் நான் அவுத்து விடுற மாதிரி இருக்கும்" 

"இல்ல நான் சொல்லுவேன்" தோழியின் எச்சரிக்கை எல்லாம் வீணாக தான் போனது, "ஆரம்பத்துல கலர் தான் இடிச்சது ஆனா இப்போ அதுவும் ஓகே. எனக்கு பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் கலரா தெரிவேன்ல?" இவள் பேசியதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டான் கார்த்தி. 

"ஏட்டி நான் அவருக்கு புடிச்சது புடிக்காதது கேட்டா நீ என்னடி அவரை அங்குலம் அங்குலமா அளந்து வச்சிருக்க? மிடில் பிங்கர் காட்டிருக்கார் பேபிமா... அது அசிங்கமாச்சே" 

"தப்பு தப்பா பேசாத ஷெரூ... தப்பு தப்பு வாயில போட்டுக்கோ" 

இரட்டை அர்த்தத்தில் பேசும் வைஷ்ணவியின் பதிலில் கடுப்பானவள், "இதுக்கு தான் என்ன பெத்த ஜீவன் அன்னைக்கே சொல்லுச்சு இவ சவகாசம் எல்லாம் நமக்கு வேணாம்னு. கேட்டேனா நான்? நீ காட்டுன அந்த இலந்தைப்பழம் ரெண்டுக்கு ஆசைப்பட்டு இன்னைக்கு வாழ்க்கையவே தொலைச்சிட்டு நிக்கிறேன்" 

"நீ தொலைச்ச அந்த வாழ்க்கையை என் அண்ணன் உனக்கு தருவான் தோழியே" கால் வலிக்க சென்று மறுபடியும் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டாள்.

"ஆஹ் கிளிப்பான். உன் அண்ணன் உனக்கும் மேல கேடி. ஊமை கேடி. அவனை விடு, அமைதியான அந்த குடும்பத்துல உன்ன முதல மருமகளா ஏத்துக்கணும்ல?" 

"அதெல்லாம் பேசியாச்சு" பெருமையாய் இருந்தது வைஷ்ணவிக்கு. 

"பாப்பா... சுபிய வளச்சு போட்டா போதுமா? அவ அந்த வீட்டுல டம்மி பீஸ்" 

"நான் மெயின் பிச்சர என் பக்கம் இழுத்து ஆறு மணி நேரம் ஆச்சுடி என் டொமேட்டோ" எத்தனை ஆச்சிரியம் தான் வைப்பாள் இவள்? 

அந்த பக்கம் கார்த்திக் இவள் பேசுவதை கேட்டு... 'இதெல்லாம் என்ன பழக்கம்' தன்னையே திட்டி கட்டிலில் குப்புற படுத்து உறங்க ஆயத்தமானான். 

"யாரு?" - ஷெர்லின் 

"வேற யாரு... என் மாமியார் தான்" வெற்றி புன்னகை சத்தமாய் இருளை கிழித்து ஒலித்தது. 

"ஏன் அப்டியே மொத ராத்திரிக்கு டேட்டயும் குறிச்சிட்டு வந்துருக்கலாமே" 

தோழியின் நக்கலில் பல்லை காட்டியவள், "ஹிஹி... அதெல்லாம் அப்றம் பாக்கலாம்" சமாளித்தாள். 

"அவங்களுக்கும் குட்டி டம்மி தான். மெயின் பீஸ் அவங்க அப்பா தான்" - ஷெர்லின் 

"யார் சொன்னா? அந்த வீட்டோட சைலன்ட் கிங் அவங்க அம்மா தான். இன்னைக்கு சைட்ல கார்த்திக் அம்மா என்கிட்டே பேசிட்டு இருந்தாங்க. பத்தே பத்து நிமிஷம் தான். ஆனா அவர் பொண்டாட்டிய நிமிசத்துக்கு ரெண்டு தடவ பாக்குறார். அவ்ளோ பிரியம் அவங்க மேல. இதுல அவங்க சொல்லி அவர் கேக்காமலா போயிடுவார்?" 

"மெயின் வில்லி தாய் கெழவி இருக்கு" - ஷெர்லின் 

"ஒரு ஒலக்கையும் ஒரு டப்பா வெத்தலையும் வாங்கி குடுத்தா முடிஞ்சது" 

"உன் குடும்பம் இருக்கே..." 

"வாத்தி தான் உண்மையான டம்மி பீஸ். மஹேஷு ஏற்கனவே என்ன தொரத்தி விட நேரம் தேடிட்டு இருக்கு இதுல..." 

இரண்டாவது லைனில் ஏதோ ஒரு கால் வர காதிலிருந்து எடுத்து பார்த்த வைஷ்ணவி தோழியிடம், "என் மாமியார் லைன்ல வர்றாங்க"  

டாட்டா கூட கூறாமல் இணைப்பை துண்டித்த தோழியை கிடைத்த வார்த்தைகள் எல்லாம் வைத்து சரமாரியாக திட்டு வைத்தாள் ஷெர்லின். 

"சொல்லுங்க த்தை" 

அவள் உரிமை அழைப்பில் சிரித்தவர், "ஆண்ட்டி அத்தை ஆகிடுச்சா?" 

"ஆமா ஆண்ட்டி அந்நியமா இருக்கே..." 

"சரி தான்... ஆனா என் மகன் பெரிய பிரச்சனை ஒன்னு இழுத்து வச்சிருக்கான்டா" அவரது குரலே அவ்வளவு வருத்தத்தை சுமந்து வந்தது. 

"நான் உங்ககிட்ட பேசுனது தெரிஞ்சிடுச்சா அவருக்கு?" 

"அது தெரிஞ்சிருந்தா கூட பிரச்னை இல்ல வைஷ்ணவிமா. இவன் ஆறு மாசம் வெளிநாடு போறேன்னு அடம் பிடிக்கிறான்" 

வைஷ்ணவிகோ தான் பேசியதால் தான் இந்த முடிவோ என்ற சந்தேகம் வர, "உங்க வீட்டுல சுவர் ஏறி குதிச்சு உன் பையன் கழுத்துல கத்திய வச்சா கீழ உங்களுக்கு கேக்காதே?" 

Continue Reading

You'll Also Like

48.9K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
117K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...