டிங் டாங் காதல்

By Bookeluthaporen

17K 812 168

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 6
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 10
டிங் டாங் - 11
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 15
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 23
டிங் டாங் - 24
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 9

515 28 9
By Bookeluthaporen


உணவை முடித்து மொட்டை மாடியில் தன்னுடைய அறைக்கு அருகில் இருந்த துணியை காய வைக்க வேண்டி வைஷ்ணவியின் அன்னையின் வேண்டுதலின் பெயரில் போடப்பட்டிருந்த ஷெட்டில் அடம் பிடித்து ஒரு மூங்கில் நாற்காலியில் அமர்ந்து தீவிரமான யோசனையில் இருந்தாள். 

கூடவே இரண்டு முறை கீழே சென்று இரவு உணவை முடித்து கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்த கார்த்தி வேறு அவளது யோசனையை பலப்படுத்திவிட்டிருந்தான். கைபேசியில் மணியை பார்த்தாள்... இரவு பத்து முப்பதை தாண்டி இருந்தது. 

"தூங்கிருப்பாளோ" யோசித்தவள் உதட்டை சுளித்து, "எந்திரிக்கட்டும்" அழைத்துவிட்டாள் ஷெர்லின் எண்ணிற்கு. 

இரண்டு ரிங்கிலே அழைப்பை ஷெர்லின் ஏற்ற உடன், "உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்" 

வைஷ்ணவி ராகம் இழுக்க அந்த பக்கம், "என் நண்பன் போட்ட சோறு உப்பு கரிக்கும் பாரு... நட்பை கூட தேர்வு செய்வதில் தவறினேன்..." 

பல்லை கடித்து எச பட்டு பாடிய ஷெர்லின் எரிச்சல் இங்கு வைஷ்ணவிக்கு தெரிந்தாலும் காரியமே கண்ணாய் , "ஏன் ஏகாம்பரம் இந்த எதுத்த வீட்டு கார்த்திக் பத்தி நீ என்ன நினைக்கிற?" 

"இப்ப தானே தெரியுது மாட்டுக்காரன் பட்டு பாடுறது மாட்ட சிரிக்க வைக்க இல்ல, மாட்டோட பால கறக்க-னு"

"ஆம்பள மாட்டுக்கு பால் கறக்க மாட்டாங்களே ஏகாம்பரம்" - வைஷ்ணவி 

"அதுக்கு காளை மாடுன்னு பேர் இருக்கு இன்சு. இது கூட தெரியாம சில ஜீவன்கள் பி.ஈ டிகிரி வாங்கி கட்டடம் கட்ட போய்டுச்சுக" - ஷெர்லின் 

"மனுசங்க மனச படிக்க தெரிஞ்சவங்க, உலகத்தை படிக்க மறந்துர்ரது தப்பா தான் இருக்கு பாரேன்... சரி ஆம்பள மாடு மேட்டர்க்கு வா நீ" பொறுமை இல்லை வைஷ்ணவிக்கு. 

"ம்ம்ம் உனக்கு கொஞ்சம் கூட செட் ஆகாத அப்பாவி பையன்" 

நெஞ்சை பிடித்து, "யோவ் ஏட்டு மனச செதச்சிடயா மனச செதச்சிட்ட" போலியாக நடித்தாள். 

"ஊரே இத தான் இன்சு சொல்லும்" 

"ஊரு ஆயிரம் சொல்லும் ஏட்டு ஆனா அந்த பையன் மனசுல நான் இருந்தா?" கேள்வி எழுப்பி கையை காற்றில் நிறுத்தி வைத்தாள் வைஷ்ணவி. 

"ஷூட்டிங் வந்த தனுஷ் கூட போட்டோ எடுத்து அவருக்கு என் மேல ஒரு இது இருக்குன்னு சொன்ன உன் பேச்சை எல்லாம் நம்ப நான் ஒன்னும் பிதாமகன் விக்ரம் இல்லங்க இன்ஸ்பெக்டர் அய்யா" 

"தெரியும்டி நீ என்ன நம்ப மாட்ட-னு ஆனா சொல்றேன் கேளு. இன்னைக்கு அவர் எனக்கு டீ வாங்கி தந்து, பஸ்ல வர்றேன்னு தெரிஞ்சு சைட்ல இருந்து செங்கோட்டை வர நான் வர்ற பஸ்க்கு முன்னாடியே, அடிக்கடி பஸ் பின்னாடி தான் வருதான்னு பாத்துட்டே வந்தார்" - வைஷ்ணவி 

"எதேச்சையா நடந்துருக்கும் ஒடனே நீ ஒரு கதையே கட்டிடு" - ஷெர்லின் 

"நான் பஸ் ஸ்டாப்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன்னு வாசல்லயே நின்னு நான் பத்திரமா வந்துட்டேன்னு செக் பண்ணிட்டு தான் உள்ள போனான். அப்ப இது லவ் தானே ஜெஸ்ஸி?" எஸ்.டி.ஆர் போல் பேசியவளை எதை வைத்து அடிக்கலாம் என்று யோசித்தாள். 

"வேற ஏதாவது வேலையா வந்துருப்பார் உன்ன பாத்தது பயந்துட்டு உள்ள போயிருப்பார்" 

"என்ன கமிட் ஆகவே விட மாட்டியா நீ?" பாவமாய் கேட்டாள் வைஷ்ணவி. 

"லவ் பண்றதுக்கு இருக்குற எந்த சிம்டஸ்சும் உன்கிட்ட இல்லடி" புரியவைக்க நிதானமாய் பேசினாள் தோழி, 

"கண்டிப்பா நீ மாடு மாதிரி சாப்புடுவ, கும்பகர்ணன் மாதிரி தூங்குவ, சுத்தி இருக்குற எல்லாம் அந்த பையனா தெரியணும், உனக்கு தெரியுதா? சாத்தியமா இருக்காது. இப்ப சொல்றேன் கேளு லவ் பண்ற தகுதி கூட உனக்கு வரல. பாவம்டி அவரை விற்று" 

"ஷெரூ பாப்பா... நீ படம் பாத்து ரொம்ப கெட்டு போயிட்ட. திங்கிறது தூங்குறது மட்டும் லவ் அறிகுறி இல்லடி. எந்நேரமும் எப்ப அவன் நம்ம கண் முன்னாடி வந்து நிப்பான்னு யோசிக்க வைக்கும். இந்நேரம் அவன் என்ன செஞ்சிட்டு இருப்பான், நாம அவனை நினைச்சிட்டு இருக்குற மாதிரி அவனும் நம்மள ஒரு தடவையாவது நினைச்சு பாப்பானான்னு ஒரு ஆசை வரும் பாரேன் அது வெறும் ஒரு அட்ராக்க்ஷன்-னு விட முடியல" என்றவளுக்கு முகத்தில் தானாய் ஒரு சிரிப்பு. 

"இல்ல இந்நேரம் அவனுக்கு லவ்-னு ஒரு பொண்ணு இருந்து அவ கூட தன்னோட எதிர்காலத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பானோ-னு நினைக்கிறப வந்தது பாரேன் ஒரு வலி..." தலையை ஆட்டி அந்த எண்ணத்தை தூர வைத்தாள். 

"நான் சைட் அடிச்ச அந்த பசங்கள மாதிரி கார்த்திக் இல்ல..." 

தீர்க்கமாக பேசியவள் தோழியை பதிலுக்காக காத்திருக்க, "எப்ப இருந்து இந்த எண்ணம் எல்லாம்?" சில நாட்களாகவே தோழியை நடவடிக்கையை கணித்தவள் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டாள். 

"இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான்" அலட்சியமாய் வைஷ்ணவி. 

"அடிங்க நாயே... செருப்பாலேயே அடிப்பேன். எழவு வீட்டுல இருக்கேன்-னு அமைதியா இருக்கேன் அசிங்கமா பேச வச்சிடாத. போன வை" 

இணைப்பு துண்டிக்க பட்டிருக்க மீண்டும் ஒய்யாரமாக ஊஞ்சலை காலை உதைத்து ஆட துவங்கியவளை இப்பொழுது தானே அழைத்தாள் ஷெர்லின். 

வெற்றி சிரிப்போடு அழைப்பை காதில் வைத்தவள் எதுவும் பேசாதிருக்க, "ஹீரோ மாதிரி எல்லாம் அவர் இருக்க மாட்டாரு" கடினமாக பேசினாள் ஷெர்லின். 

"பரவால்ல எதுத்த வீட்டு பையனோட தலையை கோத்திட்டே அவன் கண்ண ரசிச்சிட்டே இருந்துடுவேன்" - வைஷ்ணவி 

"உனக்கு சமையலே தெரியாது, அவர் சமையல் மாஸ்டர்" - ஷெர்லின் 

"ஊருக்கே சோறு ஆக்கி போடுறவர் எனக்கும் ரெண்டு கை பிடி போட மாட்டாரா என்ன?" - வைஷ்ணவி 

"அவர் அமைதியானவர்" - ஷெர்லின் 

"அவருக்கும் சேத்து நான் பேசிக்கிறேன்" - வைஷ்ணவி 

"அவருக்கும் உனக்கும் ரெண்டு அடி ஹெயிட் வித்யாசம் இருக்கும்" - ஷெர்லின் 

"ஹீல்ஸ் போட்டுக்கலாம்" - வைஷ்ணவி 

நர நர என பற்களை கடித்தாள் ஷெர்லின், என்ன கேட்டாலும் அதற்கு ஒரு பதில் வைத்து பேசுகிறாள் இவள் என்று. 

"அவரு நல்லவருடி... நீ ஒரு மொள்ளமாரி, முடிச்சவக்கி" 

"தப்பில்லையே தோழி... ரெண்டுபேரும் நல்ல பிள்ளையா இருந்தா எப்படி கொழந்த பொறக்கும்? நா..." 

"ஐயோ ஐயோ முட்டு சந்துல நின்னு புளியங்கா திருடுனதெல்லாம் காதல் வசனம் பேசுதே... இத கேக்க யாருமே இல்லையா யேசப்பா..." 

இணைப்பு துண்டிக்கப்பட்ட சத்தம் வந்தது அதோடு அடுத்து குறுந்செய்தி வந்த சத்தமும். 

'என்னமோ பண்ணி நாசமா போ. போ' வந்த செய்தியை பார்த்து சிரித்துக்கொண்டாள் வைஷ்ணவி. 

அப்பொழுது தன்னுடைய அறையை விட்டு வெளியில் வந்த கார்த்தி தன்னுடைய கைபேசியில் எவரிடமோ பேசுவதை பார்த்து, "இப்டி என்கிட்டே வந்து சிக்கிட்டியேடா கார்த்திக். ஹ்ம்ம் மஹாலக்ஷ்மி பெத்த பிள்ளை பாவம் தான் போல" அந்த அப்பாவி ஜீவனுக்காக பரிதாபப்பட மட்டுமே அவளால் முடிந்தது. 

அவனை அப்படியே தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்து ஷெர்லின் எண்ணிற்கு அனுப்பிவிட்டாள். உடனே அதை பார்த்த ஷெர்லின் தனக்கு எதிரில் ஐஸ்பாக்ஸில் வைத்திருந்த தன்னுடைய ஆச்சியின் உடலை புகைப்படமாக எடுத்து அனுப்ப. 

"ஆத்தி இவ மூஞ்சிய மாதிரியே இருக்கே" என ஓரமாக வைத்துவிட்டாள். 

அவன் அறைக்கு செல்லும் வரை அவனையே அமர்ந்து பார்த்தவள், கார்த்தி உள்ளே சென்று விளக்கை அணைத்ததும் தான் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.

மறுநாள் காலை ஷெர்லின் வைஷ்ணவிக்கு அழைத்து வண்டியின் சாவி அவளுடைய வீட்டில் ஒரு பூந்தொட்டியின் அடியில் வைத்திருப்பதாக கூற, அன்னையிடம் வந்து, "அவ பதட்டத்துல சாவிய வீட்டுக்குள்ள வச்சிட்டு போய்ட்டா போலமா" பொய்யுரைத்து வேலைக்கு பேருந்தில் சென்று சேர்ந்தாள். 

மதிய உணவிற்கு மேல் தான் கார்த்தி வர, அவனோடு அவனுடைய தாய் தந்தை இருவரும் வந்திருந்தனர். வைஷ்ணவியை பார்த்ததும் மஹாலக்ஷ்மி அவளிடம் வர, 

"ம்மா சைட் ஒருதடவை பாத்துட்டு வந்து வைஷ்ணவிகிட்ட பேசுங்க மா" என்கவும் அவரும் மகனுடன் சென்று ஒவ்வொரு இடமாக சுற்றி பார்கலானார். 

முதலில் அவன் கூறியதை வைத்து பார்க்கும் பொழுதே அந்த இடம் நிச்சயம் பிரமாண்டமாக இருக்கும் என்று கணித்தவருக்கு இந்த அளவு பெரிய இடமாக இருக்கும் என்று தோன்றவில்லை. 

"தம்பி எல்லாம் நல்லபடியா தானபா நடக்கும்?" மகிழ்ச்சியை தாண்டி அன்னைக்கு பயம் வெளி வந்தது. 

அன்னை தோளில் கை போட்டவன், "நடத்தி காட்டுறேன்மா. பயப்புடாதிங்க" தனயனின் தைரியம் அவர் முகத்தை சற்று தெளிந்தது. 

"ஏன்டி இப்டி எல்லாம் பேசுற... பிள்ளைக்கு உறுதுணையா இருக்க பழகு" என்ற சுப்பிரமணி மகனிடம், "எந்த தொழில் பண்ணாலும் நேர்மை தான் தம்பி முக்கியம். அத மட்டும் என்னைக்கும் மறந்துடாத" தந்தையாய் தன்னுடைய கடமையை அவர் செவ்வனே செய்தார். 

"மாட்டேன் பா... உங்களுக்கு ஏதாவது மாத்தணும்னு தோணுதா?" 

"இல்ல கார்த்தி. இத பத்தி எல்லாம் அப்பாக்கு பெருசா தெரியாது. வெளிய போற வர உங்களுக்கு தெரியாதா. நீ பாத்து செய் பா" - சுப்பிரமணி 

"ஹலோ சார்" வெளியில் சென்றிருந்த சுந்தர் வந்ததும் கார்த்தியின் பெற்றோரை கண்டுகொண்டு அவர்களிடம் வந்து பேசினான். 

"பா இன்ஜினீயர்" கார்த்தி அறிமுகம் செய்தான். 

"பூமி பூஜை போட்ட அன்னைக்கு வந்துருந்தா அன்னைக்கே தெரிஞ்சிருக்கும் சார்" 

அவனிடம் சிரிப்புடன், "சார் எல்லாம் வேணாம் அங்கிள். சுந்தர்-னு கூப்புடுங்க. அன்னைக்கு ஒரு சைட் இன்னாகுரேஷன் இருந்தது அதான் வர முடியல" 

"தம்பி சொன்னான் பா" தலையசைத்து சுந்தர் கார்த்தியின் அன்னையிடமும் அறிமுகம் ஆகிவிட, ஆண்கள் மூவரும் பேச்சில் மும்முரமாகினர். அமைதியாக அவர்களிடமிருந்து விலகி வந்த மஹாலக்ஷ்மி வைஷ்ணவி இருக்குமிடம் சென்றார். 

"வாங்க ஆண்ட்டி... கட்டடம் எல்லாம் புடிச்சிருக்கா?" 

"எனக்கு என்ன வைஷு தெரியும்? எல்லாம் கட்டம் கட்டமா இருக்கு" அவரின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவள், 

"எனக்கே அப்டி தான் தோணுது ஆனா இருங்க த்ரீ டி வியூல காட்டுறேன்" மடிக்கணினியை அவர் பக்கம் திரும்பியவள் சுந்தர் கொடுத்திருந்த கேட் CAD சாப்ட்வேர் திறந்து மொத்தத்தையும் தெளிவாக அவருக்கு விளக்கி கூறினாள். கை கொண்டு அதை வருடியவாறு முகத்தில் அத்தனை நிறைவு. 

"என்கிட்டே அவன் இத காட்டவே இல்ல... இருக்கட்டும் கவனிச்சுக்குறேன்" செல்ல கோவம் அவருக்கு மகன் மேல். 

"இது அவர்கிட்ட இல்ல ஆண்ட்டி" என்றவள், "என்ன கோவம் வருது. உங்க மகன் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுவாரா என்ன?" 

பாவம் வைஷ்ணவி போட்டு வாங்குவதை உணரவில்லை அவர், "அவனை பத்தி எனக்கு எல்லாமே தெரியும் மா. வயசு பசங்க எல்லாத்தையும் வீட்டுல மறைப்பாங்க. ஆனா இந்த பையன் எல்லாத்தையும் தயங்கி தயங்கிய என்கிட்டே சொல்லிடுவான்" 

"நம்புற மாதிரி சொல்லுங்க ஆண்ட்டி. யாராவது இந்த காலத்துல அப்டி இருப்பாங்களா?" 

மஹாலக்ஷ்மி அருகே குனிந்தவள்," அதுவும் உங்க பையன் லவ் பண்ணுவாரோன்னு எனக்கு டவுட். நைட் மாடில யார்கிட்டையோ ரொம்ப நேரம் குசுகுசுன்னு பேசுறாரு" 

"நேத்து பேசுனதையா சொல்ற?" - மஹாலக்ஷ்மி 

"ஆமா ஒரு பதினோரு மணி இருக்கும்" - வைஷ்ணவி 

"அது ஒரு பிரச்சனை மா... என்னோட அண்ணன் பொண்ணு தெறியுமா?" இல்லை என்றாள் வைஷ்ணவி. 

"நம்ம செங்கோட்டைல தான்டா அவங்க இருக்காங்க. அண்ணனுக்கு மூட்டு வலி கொஞ்சம் இருக்கு. அதான் கேரளால ரெண்டு மாசமா ஏதோ சிகிச்சைக்கு போயிருக்காங்க. வீட்டுக்கு வர்றதில்லை, அதான் உனக்கு தெரியல போல.. 

என் அண்ணன் பொண்ணு அஸ்வினி பெங்களூருல வேலை பாத்துட்டு இருக்கா. நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா என்னமோ வேலைக்கு போகவே மாட்டேன்னு நிக்கிறா. காலேஜ் படிக்கிறப்பவே கேம்பஸ்ல ஏதோ பெரிய கம்பெனில வேலை கெடச்சு வற்புறுத்தி அனுப்பி வச்சாங்க. இப்போ என் அண்ணன் பொண்ணு வீட்டுக்கு வருவேன்னு ஒரே அழுகை. 

கார்த்தினா அவளுக்கு பிரியம் கலந்த மரியாதை. அவன் என்ன சொன்னாலும் கேப்பா. என்னைக்கும் இல்லாம நேத்து ரொம்ப அழுகை. இவனும் பேசி பாத்தான். முடியல. அது தான் கெளம்பி வர சொல்லியாச்சு. அண்ணனும் நாளைக்கு வீட்டுக்கு வர போறாங்க" 

"ஓஓ..." அது என்ன இவன் மேல் பிரியம் என்று வைஷ்ணவி யோசிக்க, 

"உங்களுக்கு உங்க அண்ணன் மகளை மருமகளா வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற எண்ணம் இருக்கா ஆண்ட்டி?" பயத்தோடு தான் கேட்டாள் வைஷ்ணவி. 

"எனக்கில்லை, ஆனா அஸ்வினிக்கு கார்த்தி மேல எப்பவுமே ஒரு கண்ணு இருக்கும். அவன் இருந்தா இவளும் அந்த இடத்துல கண்டிப்பா இருப்பா" 

"அப்ப உங்க பையன் சரி சொன்னா நீங்களும் சரி சொல்லிடுவீங்களா?" 

"ம்ம்ம் அவனுக்கு புடிச்சா அடுத்து பேச நாம யாரு? அண்ணன் மகளை வீட்டுக்கு மருமகளாக்குனா எனக்கும் சொந்தம் விட்டு போகாம இருக்கும்" 

பூரித்தவரின் முகத்தை பார்த்து முறைத்த வைஷ்ணவி அவருக்கு அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து, "அப்டிலாம் உங்க பையன விட்டு குடுக்க முடியாதுங்க" சண்டைக்கு வந்தவளை அதிர்ச்சியாக பார்த்தவர், 

"வைஷ்ணவி..." என்று இழுக்க, 

"மிஸ்சஸ் வைஷ்ணவி கார்த்திக் நான் ஆகணும்" ஆணித்தரமாக நிறுத்தினாள் உரிமையாக, "ம்ம்ம்?" அவருக்கு திக்கும் புரியவில்லை திசையில் புரியவில்லை, தலை சுற்றுவது போல் இருந்தது. 

புரியாமல் பேசுபவள் போலும் இல்லை, நிதானமாக உறுதியாக இருக்கிறாள். ஆனால் இதெல்லாம் என்ன? சரி வருமா? தன்னுடைய மகனின் மனதில் என்ன இருக்கிறது? நிச்சயம் இதுவரை இவரின் மேலும் காதல் வந்தது இல்லை. வைஷ்ணவியை பற்றி கூட சில முறை சுபத்ரா பேசிய பொழுதெல்லாம் அவளின் சேட்டைகளை கேட்டு சிரிப்பான். 

அவ்வளவே அவனிடம் இருந்து வரும் வினை. இப்பொழுது வரை தன்னையனின் மனதில் இவள் வரவில்லை. அதே சமயம் பிடிக்காமலும் இல்லை. ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் எந்த நிலையிலும் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டான், அந்த அளவிற்கு பிடிவாதம் அவனிடம் எப்பொழுதும் இருக்கும். 

தனக்கு வைஷ்ணவியை பிடிக்குமா என்று கேட்டால், பதில் இல்லை. நல்ல பெண். நல்ல குணமுடையவள். வாயாடி. வீட்டிற்கு மருமகளாக வந்தால் வீடே கலகலப்பாக தான் இருக்கும். 

ஏன் வெளியே வைஷ்ணவி பேசுவதை கேட்டு உள்ளே சுப்பிரமணி கூட பல முறை சிரித்தது உண்டு. ஆனால் தன்னுடைய மாமியார் சேர்மத்தாய் பற்றி எண்ணும் பொழுது தான் சற்று பயமாக உள்ளது. இவர் பேச்சை கேட்டு கணவரும் கூட மனம் மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. அது மட்டும் இல்லாது தன்னுடைய அண்ணி கூட ஒரு முறை அஸ்வினியை கார்த்திக்கு மறைமுகமாய் கேட்டது உண்டு. 

சொந்தத்தை விட்டு வெளியில் சென்றால் அதுவும் பெரிய ப்ரளயமாகுமா என்ற பயம் மனதை உருள வைத்தது. இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் இரு குடும்பமும் ஒரே பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே. 

"என்ன?? என்ன என்ன பிரச்சனை வரும்னு யோசிச்சு வச்சிட்டீங்களா?" வைஷ்ணவியை பார்த்து முழித்தவர், 

"என்ன கிண்டல் தானே வைஷுமா பண்ற?" ஆமாம் என்று சொல்லிவிட மாட்டாளா என்ற பரிதவிப்பு அவர் கண்ணில். 

"கற்பூரம் போங்க" அவள் சொல்லில் மலர்ந்த முகம் அவள் அடுத்த முறைப்பில் மீண்டும் சுணங்கியது. 

"உங்களுக்கு என்ன புடிக்கலயா?" அவர் முகவாட்டம் இன்னும் அப்படியே தான் இருந்தது, "எனக்கு இத எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியல. உங்க பையன் மேல இந்த மாதிரி எண்ணம் இப்போ தான் வந்தது. ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க ஆண்ட்டி"

"இப்போ தான் வந்ததுனா?" - மஹாலக்ஷ்மி 

"நேத்து..." சற்று தயக்கமாக தான் இருந்தது அவளுக்கும். 

"ஒரு நாள்ல உன்னோட வாழ்க்கையவே முடிவு பண்ணிடுச்சா மா இந்த காதல்?" அவசரத்தில் எடுத்த முடிவாக இருந்துவிட கூடாதென்பது அவரது எண்ணம். 

"ஒரே மணி நேரத்துல அரேஞ்ட் மேரேஜ் என்னோட வாழ்க்கைய முடிவு பண்றப்ப, என்னோட காதல் முடிவு பண்றதுல தப்பு இல்லையே ஆண்ட்டி?" 

"அவன்கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சிருக்குனு யோசிச்சு அவசர படுறனு உனக்கு தோனலயா?" 

சிரித்தாள் பெண், "ஒண்ணுனு யார் ஆண்ட்டி சொன்னது? மூணு சொல்றேன்... யாருன்னே தெரியாத எனக்கு வந்த ஒரே நாள்ல வேலை தேவைப்படுதுன்னு தெரிஞ்சு, நான் மட்டும் தனியா போக மாட்டேன்னு புரிஞ்சு ஷெர்லின்க்கும் வேலை வாங்கி குடுத்து இங்க நிக்க வச்சிருக்கார். இப்டி என்ன பத்தி எதுவுமே தெரியாதபயே இவ்ளோ பண்றவர் என்ன பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா தானே ஆண்ட்டி பாத்துக்குவார்?" என்றவள், 

"தன்னை நம்பி வந்த பொண்ணு தனியா இருக்கேன்னு கூட இருந்து வீடு வர பத்தரமா போய்ட்டேனான்னு கன்பார்ம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போறார். பாக்க கொஞ்சம் நல்லா, அக்கறையா, பொறுப்பா இருந்தா யாருக்கு தான் பிடிக்காது? 

எல்லாதுக்கும் மேல ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கை துணைகிட்ட முதல எதிர்பாக்குறது கண்ணியம். ஒரு நாள் என்கிட்டே தப்பான பார்வையோ, அளவுக்கு மீறிய பேச்சோ இருந்ததில்லை. புடிச்சுப்போச்சு ஆண்ட்டி உங்க பையன. மொத்தமா புடிச்சிடுச்சு. ஒரு மாசத்துல இவ்ளோ நல்ல விசியம் கண்ணனுக்கு தெரிஞ்சு... தெரியாம இன்னும் அவருக்குள்ள எவ்ளோ இருக்கோ..." 

மகாலட்சுமிக்கு மனம் பூரித்து போனது மகனை பற்றி செவிகளால் கேள்வியுற்று. தாயாய் இறுமாப்பு கொண்டது மனம். சந்தோச ரேகைகள் அவர் முகத்தில், காரணம் ஒரு புறம் மகன் என்றால், இவளின் உறுதியான தெளிவான முடிவில் சாந்தமான தன்னுடைய மகனுக்கு இவ்வாறான பெண்ணை தானே தேடினார். 

அண்ணன் மகள் நல்லவள் தான், ஆனால் தன்னுடைய மகனுக்கு அஸ்வினி பொருந்த மாட்டாள், மகனை போலவே பிடிவாதம் அதிகம் என்ற எண்ணம் தான் கணவனிடம் அது பற்றி பேச விடாமல் வைத்தது. "

அவன் ரொம்ப பிடிவாதக்காரன் வைஷ்ணவி" 

"நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் ஆண்ட்டி. எனக்கு கோவமே வராது, உங்க பையனுக்கு கோவம் வராது, வந்தா ஜாஸ்தியா இருக்கும். பொறுமையா ஹாண்டில் பண்ணிக்குவேன்" 

வைஷ்ணவியை பார்த்த உடனே பிடித்திருந்தவருக்கு, அவளுடைய இந்த பக்குவமான பேச்சும் கூட பிடித்து தான் போனது. இருந்தாலும் மொத்த குடும்பத்திடமும் சம்மதம் வாங்கிய பிறகு தானே அவளுக்கு வாக்கு தர முடியும்? 

"எனக்கு பிரச்சனை இல்லை வைஷு மா... அத்தை தான் பேரனுக்கு வர பொண்டாட்டி பத்தி நெறையா சொல்லுவாங்க" என்று இழுக்க அவரின் நிலையம் வைஷ்ணவிக்கு புரிந்தது. 

"அந்த கெளவிய நான் கவனிச்சுக்குறேன் ஆண்ட்டி. நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க" 

"இது எடுத்தோம் கவுத்தோம்ன்னு எடுக்குற முடிவில்ல வைஷ்ணவி மா... ரெண்டு குடும்பம் ஒக்காந்து பேசி யோசிச்சு பண்ண வேண்டியது" 

"அரேஞ்ட் மேரேஜ் மாதிரி பேசுங்க உங்க வீட்டுல" தவிப்பாய் கேட்டாள். 

அவரோ மௌனமாய் இருக்க, "என்ன புடிக்கலயா ஆண்ட்டி?" வாட்டத்துடன் கேட்டவள் கன்னத்தை பற்றியவர், "உனக்கென்னடா குறை? உன்ன கல்யாணம் பண்ணிக்க என் பையன் குடுத்து வச்சிருக்கணும்" பூவாய் மலர்ந்து போனது பெண்ணின் முகம். 

"அதே நேரம் என்னால உனக்கு வாக்கு தர முடியாது வைஷ்ணவி. வீட்டுல பொறுமையா பேசி பாக்குறேன்" என்கவும் தலையை ஆட்டி வைத்தாள். 

அதன் பிறகு பெரிய அமைதி அங்கு இருக்க வைஷ்ணவியால் அவரிடம் சகஜமாக பேச முடியவில்லை, "வெக்கமே இல்லாம இப்டி கேக்குறேன்னு யோசிக்கிறீங்களா ஆண்ட்டி?" 

"கொஞ்சம் லைட்டா" அவள் முகத்தை பார்த்து அவர் சிரித்துவிட, 

"சிரிங்க சிரிங்க, கல்யாணம் மட்டும் ஆகட்டும் மருமக கொடுமைனா என்னனு காட்டுறேன்" சிரிப்போடு சாபமிட்டவளை பார்த்து மேலும் சிரித்தார் மஹாலக்ஷ்மி. 

ஆண்கள் பேசி முடித்ததும் கணவனுடன் மஹாலக்ஷ்மி கிளம்பிவிட, கார்த்தியும் சென்று மாலை வருவதாக கூறி புறப்பட்டான். 

comments kedaikuma?

Continue Reading

You'll Also Like

33.9K 2.3K 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
80.4K 5.5K 71
Thanimiyai tholiyakkiya oruthi.. avali tholiyakum oruthan..(ithil entha natpu vetri adayum?)
107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
239K 6.1K 149
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...