டிங் டாங் காதல்

By Bookeluthaporen

14.7K 778 159

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்... More

டிங் டாங் - 1
டிங் டாங் - 2
டிங் டாங் - 3
டிங் டாங் - 4
டிங் டாங் - 5
டிங் டாங் - 7
டிங் டாங் - 8
டிங் டாங் - 9
டிங் டாங் - 10
டிங் டாங் - 11
டிங் டாங் - 12
டிங் டாங் - 13
டிங் டாங் - 14
டிங் டாங் - 15
டிங் டாங் - 16
டிங் டாங் - 17
டிங் டாங் - 18
டிங் டாங் - 19
டிங் டாங் - 20
டிங் டாங் - 21
டிங் டாங் - 22
டிங் டாங் - 23
டிங் டாங் - 24
டிங் டாங் - 25
எபிலாக்

டிங் டாங் - 6

477 26 2
By Bookeluthaporen

ஞாயிற்று கிழமை மதிய உணவை முடித்து உறங்க சென்ற பெற்றோரையும் பாட்டியையும் பிடித்து அமர வைத்து தன்னுடைய அறைக்குள் மகன் சென்று கால் மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. சேர்மதாய்க்கு உறக்கம் கண்ணை திறக்க விடாமல் வைத்தது வயோதிகத்தை காரணத்தால். 

"என்ன மகா எதுக்கு நம்மள இங்க இருக்க சொல்லிட்டு எங்கனயோ அவன் போய்ட்டான்" சுப்பிரமணி புரியாமல் மனைவியிடம் கேள்வி எழுப்பினார். 

"தெரியலைங்க... நீங்க இருங்க அவன் வர்றதுக்குள்ள நான் ரெண்டு பாத்திரத்தை கழுவி வச்சிட்டு வர்றேன்" இல்லத்தரசி கடமையை செவ்வனே செய்ய துவங்கினார். 

"ஆமா உன்ர பொண்டாட்டிக்கு சாமான் செட்டு, பாத்திரம் தொலக்குறது தான் எந்நேரமும் வேலை... இவளுக்கு உன்ன கட்டி வைக்காம சமையல்கட்ட கட்டி வச்சுபுற்றுக்கணும் சுப்பிரமணி... சொன்னாலும் கேட்கவும் மாட்டா... ஏத்தா மடார்ன்னு முடிச்சிட்டு வா... பேரபுள்ள வரமுன்ன" 

எப்பொழுது பார்த்தாலும் சமையலறை தான் மஹாலக்ஷ்மியின் வாசம். மூன்று வேளை வித விதமான உணவு, இடையில் மாலை ஆறு மணி போல் சிற்றுண்டி வேறு குடும்பத்தினரின் விருப்பத்தை பார்த்து செய்வார். அதனாலே தான் பொறுக்காமல் மாமியார் மருமகளை அழைத்தது. 

"சரிங்க அத்தை" உள்ளிருந்து வந்தது பதில். சோபாவிற்கு நேர் எதிரில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம், "சுபத்ரா உனக்கு என்னனு தெரியுமா?" மகளையும் விடாமல் ஆர்வமாய் கேட்டார் சுப்பிரமணி. 

கைபேசியிலிருந்து கண்ணை எடுத்து தந்தையை பார்த்தவள், "அப்பா எனக்கு அநேகமா அண்ணா பொய் சொல்றான்னு நெனக்கிறேன். மல்லாக்க படுத்து தூங்கிட்டு இருப்பான். மேல பாத்துட்டு வரட்டுமா?" 

உறுதியாய் இல்லை என்று தலையை அசைத்தார் சுப்பிரமணி, மகனை பற்றி நன்கு தெரியும் அவருக்கு, பொறுப்புணர்வு, நிதானம், எதையும் யோசித்து செய்யும் குணம் அதிகம் உடையவன்... இது போன்ற சிறு பிள்ளை போல் எல்லாம் விளையாட மாட்டான். 

"வருவான்" என்றவர் சோபாவில் தலையை சாய்த்து கண்ணை மூடி அமர, சிறிது நேரத்தில் தன்னுடைய லேப்டாப், ஒரு பை, மற்றும் இன்னொரு கையில் பல கோப்புகளை எடுத்து வந்து தந்தை முன் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தான். 

அன்னை இல்லை என்பதை உணர்ந்து சமயலறையில் எட்டி பார்த்து, "மா முக்கியமான விசியம்மா கொஞ்ச நேரம் வாங்களேன்" மகன் அழைக்க உடனே அனைத்தையும் வைத்துவிட்டு, சேலை முந்தானையில் கையை துடைத்து கணவன் அருகில் வந்தமர்த்தவர் பார்வை அவன் வைத்திருந்த அத்தனை பொருட்கள் மீதும் பட்டது. 

"கார்த்தி என்னப்பா ஏதாவது படிக்கச் போறியா?" சிரிப்புடன், "இல்ல மா. சொல்றேன்" என்றவன் அந்த கருப்பு சீட் கண்டைனர் திறந்து ஒரு பெரிய பேப்பரை எடுத்து குடும்பத்தினர் மீது விரித்து வைத்தான். 

அதை பார்த்ததுமே சுப்பிரமணிக்கு புரிந்தது, "என்ன தம்பி ஏதாவது பில்டிங் பிளான் மாதிரி இருக்கு" 

"ஆமா பா..." 

"யாரோட வீட்டு பிளான் தம்பி இது? இது எதுக்கு இங்க கொண்டு வந்துருக்க?" 

"வீட்டு பிளான் இல்ல பா. இது நம்ம ஹோட்டல்" 

"நீ புதுசா வேலை பாக்க போற கடையா சாமி?" சேர்மத்தாய் பேரனிடம் கேட்டார். 

"இல்ல பாட்டி, நான் யார் கிட்டயும் வேலை பாக்க போகல... நம்ம கடை இது" 

தந்தையை பார்த்து, "நான் சொந்தமா ஒரு ரிசார்ட் வித் ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் பா" 

சுப்பிரமணி இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை, வேலையை விட்டு வந்ததாக அவன் கூறியவுடன் தாய் தந்தையின் அருகே இருக்க விரும்பி திருநெல்வேலியில் ஏதாவது ஒரு கடையில் வேலைக்கு செல்வான் என்று எதிர் பார்த்தார். ஆனால் இவன் அப்படியே மொத்தமாக வேறு கதை கூறிக்கொண்டிருந்தான். 

தந்தையின் முகம் யோசனையில் இருக்க அன்னையை பார்த்தான்... நிர்மலமான முகம் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஒரு சந்தேகமும் இருந்தது, தொழிலில் சிறிதும் அனுபவம் இல்லாதவன் இவ்வளவு பெரிய முயற்சியில் இறங்குவதா என்று. 

"என் மேல நம்பிக்கை வைங்கமா" அன்னையின் மன ஓட்டத்தை புரிந்துக்கொண்டு பேசியவனின் கன்னம் தடவி புன்னகைத்தார் மஹாலக்ஷ்மி. யானை பலம் தந்தது அந்த ஒரு புன்னகை... 

தந்தை பக்கம் திரும்பி, "என்ன பா யோசனை? எதுவா இருந்தாலும் கேளுங்கபா" 

"எவ்ளோ தம்பி எஸ்டிமேட் போட்ருக்க?" - சுப்பிரமணி 

"மினிமம் ஒரு கோடி பா" - கார்த்திக் 

"எதுக்கு ராசா நல்லா வருமானம் வர்ற வேலைய விட்டுப்போட்டு இப்டி கடனோட சுத்திகிட்டு இருக்க பேசாம அங்கனயே மறுபடியும் போய்க்கோ யா" பேரன் எந்த வித சங்கடத்தையும் அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த வயதான பெண்மணி பேசினார். 

"இல்ல பாட்டி இது கண்டிப்பா நல்ல தொழில் தான். காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டே இருந்தா நிச்சயமா தொழில்ல முன்னேற்றம் இருந்துட்டே இருக்கும்" 

"சரி தான் தம்பி ஆனா இவ்ளோ பணம் கஷ்டம் இல்லையா? எங்க பண்ண போற? இடம் பாக்கணும்... எல்லாமே இருக்கே" 

"நான் எல்லாமே யோசிச்சிட்டேன் பா... குற்றாலம்ல வைக்கலாம்னு யோசிச்சேன். இங்க இருந்து இருவது நிமிஷம் தான். இடம் கூட பாத்தாச்சு. மெயின் பால்ஸ், டைகர் பால்ஸ் ரெண்டுக்கும் நடுல இந்த இடம் இருக்கு. மூணு ஏக்கர் நிலம். இடம் மட்டும் சில கோடி வரும் ஆனா இப்போதைக்கு அவ்ளோ அமௌன்ட் இல்ல அதுனால இடத்தை லீசுக்கு அஞ்சு வருஷம் எடுத்து நடத்தலாம்னு யோசிச்சேன்" தந்தையின் முகம் பல யோசனைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. 

"என்ன ப்பா?" என்றான் அவர் முகம் பார்த்தே, "நான் மட்டும் தனியா இவ்ளோ காசு போடல ப்பா. இன்னும் ரெண்டு பேர் பார்ட்னர்ஷிப் வச்சு தான் பண்றேன். என்னோட ரொம்ப நாள் ஆசை ப்பா இது" ஏகமாய் வந்த மகனின் குரல் அவர் முகத்தில் தெளிவை உருவாக்கியது. 

"காசுக்கு என்ன ப்பா பண்ண போற?" 

"இத்தன நாள் வர என்னோட சாளரில ஒரு ருபாய் நீங்க வாங்கல. அப்டியே தான் ப்பா இருக்கு. அதுவே பதினோரு லட்சம் மேல இருக்கு. இன்னும் ஒரு இருவது இருபத்தி அஞ்சு லட்சம் தான்... லோன் போடலாம்னு ஐடியால இருக்கேன்பா" 

"கூட பார்ட்னர்ஷிப் வக்கிர பசங்க நல்ல பசங்க தானா தம்பி?" 

"நம்பிக்கையானவங்க தான்ப்பா. அதுவும் இல்லாம அக்ரீமெண்ட், பாண்ட் எல்லாமே தெளிவா பண்ணிட்டு தான் வேலைய ஸ்டார்ட் பண்ண போறோம்" 

"குற்றாலம் சீசன் இருக்க டைம்ல தானே கார்த்தி கூட்டம் வரும்... மத்த நேரம் எல்லாம் சும்மா இருந்தா நல்லவா இருக்கும்?" - சுப்பிரமணி 

"அதையும் யோசிச்சிட்டோம் ப்பா... குற்றாலம்ல ஸ்டார்ட் பண்ற கடையோட அதே பேர்ல திருநெல்வேலில ஒரு ஹோட்டல் ஓபன் பண்ணி வருஷம் புல்லா அங்க பாக்க போறோம். சீசன் டைம்ல மட்டும் குற்றாலம்ல. அதுக்கும் தனியா ஒரு இருவது லட்சம் ரெனோவேஷன் அமௌன்ட் ஒதுக்க போறோம்" 

அனைத்திற்குமே தெளிவாக திட்டம் போட்டு வகுத்திருக்கும் மகனின் மனநிலை இதை விட்டு மாறப்போவதில்லை என்று புரிந்து மனைவியை சுப்பிரமணி பார்க்க, கணவர் கையில் கை வைத்து தன்னுடைய விருப்பத்தை மஹாலக்ஷ்மி தெரிவிக்க, சுப்ரமணி மகனுக்கு சிரிப்புடன் பச்சை கொடி நீட்டினார். 

"என்ன மருமகளே அப்டியே மகனே பாத்துட்டே இருந்தா போதுமா, பூஜ ரூம்ல இருக்க திருநீர் எடுத்துட்டு வா. புள்ளைய ஆசீர்வாதம் பண்ணிப்புடுவோம்" 

மாமியாரின் சொல்லில் தான் நினைவு வர வேகமாக எழுந்து சென்றவர் நூற்றி ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து இறைவனிடம் மகனுக்காக மட்டுமே வேண்டி திருநீறை எடுத்து வந்து சேர்மத்தாய் கையில் கொடுத்தார். 

"கிழக்கு பாத்து நில்லு ராசா" கார்த்திக் இன்முகமாய் அவர் கை காட்டிய திசையில் எழுந்து நின்று தன் நெற்றியை மறைத்திருந்த சிகையை வலது கை வைத்து பிடித்து நிற்க, மூன்று விரல்கள் நிறைய திருநீறை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டு, "ராஜா கனக்கா இருப்பயா நீ" 

அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் அடுத்து தாய் தந்தை இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி தான் யோசித்து வைத்திருக்கும் கட்டிடத்தின் விளக்கப்படத்தை மொத்த குடும்பத்திடமும் ஆசையாக காட்ட துவங்கினான். 

"மா நல்ல நாள் மட்டும் பாத்து சொல்றிங்களா? பூமி பூஜை போடணும். பசங்க என்ன பாத்துட்டு வர சொன்னானுக" 

"ம்ம்ம் பாத்து சொல்றேன் ப்பா" காலெண்டர் ஒன்றை எடுத்து பார்த்தவர் அடுத்த பதினைந்து நாட்களில் நாள் பார்த்து கூற நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து அந்த நாளையே குறித்துக்கொண்டனர். 

"ஆண்ட்டி" மஹாலக்ஷ்மி வாசலுக்கு செல்லும் முன் சுபத்ரா வாசலுக்கு சென்றிருந்தாள். 

"அடடே... உள்ள வா வைஷு" 

"ஹாய் சுபி... என்ன இந்நேரம் நீ தூங்கிட்டு இருந்துருப்பியே இன்னைக்கு அதிசயமா இன்னும் முழிச்சிருக்க? சரி அத விடு இன்னைக்கு நான் ஒரு சம்பவம் பண்ணேன்" 

வெளியே பேசிக்கொண்டிருந்த வைஷ்ணவியின் குரல் உள்ளிருந்த அத்தனை பேருக்கும் கேட்க கார்த்தியோ, 'இன்னைக்குமா' என்று தான் தோன்றியது. 

"என்னனு கேட்டா நீயே ஷாக் ஆகி மயக்கம் போட்டு ரெண்டு நாள் கழிச்சு தான் எந்திரிப்ப... இப்ப தான் மஹேஷு மயக்கம் போட்டு விழுந்துச்சு, தண்ணி தெளிச்சு ஒக்கார வச்சிட்டு வந்துருக்கேன். வாத்தி எல்லாம் நெஜுல கை வச்சிட்டாரு ஏனா நான் செஞ்ச விசியம் அப்டி. அட வந்த விசயத்த மறந்துட்டேன் பாரு... இந்தா நான் செஞ்சேன்" 

எப்பொழுது தான் பேசி முடிப்பாள் என்று காத்திருந்த சுபத்ரா சிரிப்புடன், "என்ன செஞ்ச?" ஆச்சிரியமாக கேட்டாள். 

"பிரியாணி..." திரு திரு என விழித்த சுபத்ராவை பார்த்து, "என்ன சுபி பாத்துட்டு இருக்க? சாப்டு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும்" சுபத்ராவின் கையை பிடித்து உள்ளே தள்ளி சென்றவள் அங்கு சுப்ரமணியனையும் கார்த்திகையும் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. உறங்கி இருப்பார்கள், மஹாலக்ஷ்மி, சுபத்ராவிடம் கொடுக்கலாம் என்று தான் வந்தது. 

"இப்ப தான் வைஷு சாப்பிட்டோம் அப்றம் சாப்புடுறேன்" தீர்க்கமாக மறுத்து இப்பொழுதே உண்ண வேண்டும் என்று கட்டளையோடு அவளை உண்ண வைத்தாள். 

"ம்ம்ம் நல்லா இருக்கு வைஷு. நிஜமா சொல்லு நீ தான் இத செஞ்சதா?" 

"தெரியும்... இந்த உலகம் என்ன நம்பாத்துன்னு தெரியுமே. வீட்டுல என் அண்ணன் மேல சத்தியம் பண்ணேன் இங்க யார் மேல பண்றது?" வைஷ்ணவி பேசுவதை கேட்டு சிரித்தபடியே சுப்பிரமணி தன்னுடைய அறைக்குள் செல்ல, தான் குடும்பத்திடம் காட்டிக்கொண்டிருந்த காகிதங்களை எடுத்துவைத்துக்கொண்டே கார்த்திக் ஓரக்கண்ணில் நோட்டம் விட்டான். 

"ஏய் என் அண்ணன் வேணாம்" பதறினாள் சுபத்ரா. 

"அங்க என் அண்ணனா இங்க மட்" சேர்மத்தாயை பார்த்து அவர் பக்கம் சென்றாள். 

"என்னடி பொம்பள புள்ள நீயி. இப்படியா ஒரு பெரிய மனுஷிய பேசிப்போடுவ? மாடு ஆடுன்னு" வயதான பெண்மணிக்கு பொய் கோவம் பூத்தது. 

"அட மட்-டு அது மாடு இல்ல மட். உன் பேர் என்ன?" 

"சேர்மத்தாய்" 

"ம்ம்ம்... அதுல இருக்க சேர் இங்கிலிஷ்ல மட். அத தானே சொன்னேன். இதுக்கு எதுக்கு இம்புட்டு கோவப்படுறியாம்?" 

"ஏன்யா அது ஒன்னு தப்பான வார்த்தை இல்லல?" பேரனிடம் அவர் கேட்க, 

"அதெல்லாம் ஒன்னும் இல்லன்றே நீ என்ன என்ன மதிக்காம வேற எங்கையோ கேக்குற?" மீண்டும் அவரிடம் சென்று வாதாடினாள், "சரி தலையை குனி நான் சத்தியம் பண்ணனும்" 

"என்றா இது வம்பா போச்சு. இவளுக்கு சத்தியம் பண்ண என்ற உசுர் தானா கெடச்சது... கேட் பக்கத்தால தான் இருக்கு நீ அப்படியே உன்ர வூட்ட பாத்து போடி" 

"ம்ம்ம் வைஷ்ணவிமா பிரியாணி நல்லா இருக்கு" மகாலட்சுமியும் பாராட்ட வைஷ்ணவிக்கு கால்கள் தரையில் இல்லை. 

"ஐயோ அருமையா இருக்குன்னு வேற சொல்லிபுட்டாக. இப்ப நான் யார் மேலனாவது சத்தியம் பண்ணியாகணுமேங்க..." சேர்மத்தாயை கிண்டல் செய்யவே அவரை போலே கொங்கு பாஷையில் பேசினாள் "ஏனுங்க அம்முனி இப்டிக்கா கொஞ்சம் தலையை காட்டுறிங்களா சூட் அண்ட் சைட்டா அடிச்சுப்போட்டு சத்தியம் பன்னோனுா" 

கார்த்திக் வாயில் ஒரு ஸ்பூன் வைத்து பிரியாணியை ஊட்டிவிட்டவள், "வேணா வைஷு எனக்கு உயிர் வாழணும்னு ஆசை இருக்கு" 

உதட்டை சுளித்து முகத்தை திருப்ப சிரிப்புடன் சகோதரன் பக்கம் திரும்பிய சுபத்ரா, "அண்ணா சொல்லு எப்படி இருக்கு பிரியாணி? நல்லா இருக்குல்ல?" 

வந்ததிலிருந்து கார்திக்க்கை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்த வைஷ்ணவி வீட்டை வேடிக்கை பார்ப்பது போல் அவனை பார்க்க, முகத்தை எந்த உணர்ச்சியும் இல்லாமல் வைத்து, "உப்பு கொஞ்சம் கம்மி, பிரியாணி பவுடர் அதிகம் ஆகிடுச்சு, கிராம்பு தாளிக்க இவ்ளோ போட கூடாது. பிரியாணி மெயின் ஐட்டம் மல்லி, புதினா தான். இதுல புதினா போடல சோ அந்த பிலேவர் வரல" வாயை பிளக்காத குறையாக ஆசிரியதுடன் முறைத்தாள். 

"பாத்தியாடி என்ர பேரன. அவன் சொன்னா எல்லாமே சரியா தான் இருக்கும். இதுக்கு தா மருவாதயா வாய மூடிப்போட்டு கெளம்போனு" 

சுய மரியாதை தலை தூக்க, "தோ பாரு மட்-டு உன் பேரன் சமையலுக்கு படிச்ச சமையல் காரருருரு... சமையல்ல எல்லாமே தெரியுது. நான் இப்ப தானே காத்துட்டு இருக்கேன். எனக்கு எப்டி தெரியும்?" 

"நீ வூடு கட்ட தான படிச்ச அப்ப வூடு கட்டூவியா?" விடாமல் சேர்மத்தாய் வைஷ்ணவியுடன் வாயாட அவர்களை கண்டுகொள்ளாமல் அன்னையிடம் கண் அசைவில் கூறி மாடிப்படி ஏறினான் பெரிய ஆலோசனையோடு.

வந்த நாள் முதல் வைஷ்ணவியை சந்திக்கும் பொழுதெல்லாம் கவனித்து தான் இருக்கிறான். அவள் குணமே இது தான். எவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் சேட்டைகள் செய்வது, துரு துரு என கால்கள் செல்லும் திசையில் எல்லாம் செல்பவள் எவருக்கும் அஞ்சுவதில்லை என்பது நேற்று தன்னிடம் பேசிய பொழுதே தெரிந்தது. 

அப்படி இருக்கும் பொழுது அந்த ஆணை ஒரு பெண்ணாய் அவள் கல்லூரி காலத்தில் பார்த்ததில் எந்த தவறும் இல்லை தானே? தான் கல்லூரி படிக்கும் பொழுது இதெல்லாம் செய்யாமலா இருந்தோம்? வயதின் செயல் அது. அவனும் அன்னதானம் நடக்கும் இடத்தில் தான் நண்பனிடம் கூறி விட பெற சென்றான். அப்பொழுது தானே யாரையோ பார்த்து அவள் வந்த வேகத்தில் திரும்பி சென்றது... 

அப்படி அவளுக்கு இப்பொழுதும் அவன் மேல் விருப்பம் இருந்தால் நிச்சயம் அவளே சென்று பேசியிருப்பாள், நிச்சயம் அவளை யாராலும் தடுத்திருக்க முடியாது. அதுப்படி பார்க்க இப்பொழுது தவறு சிறிதும் வைஷ்ணவி மேல் இல்லையே, அந்த ஆண் மீதல்லவா உள்ளது? நேற்று இரவு அவ்வளவு கடுமையாக பேசியிருக்க கூடாதோ? அறையில் சென்று கட்டிலில் சரிந்தவனுக்கு இதே சிந்தனை மட்டுமே மாலை வரை ஆட்கொண்டது. தூக்கமும் வராமல் போக எழுந்து மாடியில் குற்றால காற்றை சுவாசித்து கொண்டிருந்தவனுக்கு அந்த மெல்லிய குற்றால சாரல் இதமாய் மனதை வருடி சென்றது. 

நேரம் சென்றதே தெரியாமல் தரையில் அமர்த்திருந்தவனுக்கு வெளிச்சம் மெல்ல மெல்ல குறைந்த பிறகும் எழவே மனம் இல்லை. மஹாலக்ஷ்மி மாலை சிற்றுண்டியை அருந்த அழைத்தும் பிறகு பார்த்துக்கொள்வதாக கூறியவன் மொட்டை மாடியிலே தஞ்சம் கிடந்தான். 

"போனா போகுதுன்னு உனக்கு சாப்பாடு குடுத்தா என்னமோ ராஜாக்கு சமைச்சு போட்டவ மாதிரி இந்த குறை சொல்றவ? நேர்ல இல்லற தைரியமோ... ரெண்டு எட்டு தான்டி வந்து வாயில நாலு போடுவேன் பாத்துக்க" நிசப்தமான இரவின் அமைதியை கிழித்து ஒலித்தது பெண்ணின் காந்த குரல். 

"நான் எதுக்குடி அவனுக்காக பிரியாணி சமைக்கணும்? ரெண்டு கடலைமிட்டாய் கொண்டு போய் நீட்டுனா போச்சு. அவனுக்காகலாம் நான் சமைக்கால எனக்கு தோணுச்சு செஞ்சேன்" 

சத்தம் வராமல் சிரித்தான் கடலைமிட்டாயில். தன்னை பற்றி தான் பேச்சுகள் ஓடுகின்றது என்பதை அறிந்து காதுகளை கூர்மையாக்கினான். அந்த பக்கம் ஷெர்லின் ஏதோ கூற, 

"ஆமா புலம்ப தான் செய்வேன், வாழ்க்கைல ஒரு புள்ள முதல் தடவ சமயல்கட்டுக்குள்ள போய் பிரியாணி செஞ்சிருக்கேன் அதுக்கு கிராம்பு அதிகம், ஏலக்கா பத்தலை, முந்திரி வேகலன்னு குறை சொல்லிட்டு இருந்தா என்ன இது? 

அங்க நான் என்ன சமையல் போட்டிகா போனேன். புடிச்ச நல்லா இருக்குன்னு சொல்லணும், புடிக்கலனாலும் நல்லா இருக்குனு சொல்லணும். அது தான காலம் காலமா நம்ம ஊர் வழக்கம். புதுசா இந்தியாவை மாத்த வந்த பிரைம் மினிஸ்டர் மாதிரி கரெக்ஷன் சொல்லிட்டு என்ன பழக்கம் இது... அய்யனார்" 

இறுதியாக அவன் பெயரையும் அவனுக்கு காட்டிவிட்டாள். 'யார் சாமி இவ' இந்த வாக்கியம் தான் கார்த்திக் காதில் ஒழித்து சிரிப்பை தந்தது. 

"ஏண்டி இந்த வாய் பேசுறவ நேத்து எதுக்கு ராத்திரி முழுக்க நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம அவன் திட்டுனதுக்கு பொலம்பிட்டு இருந்த? இப்ப கேட்ருக்க வேண்டியது தான? ஊர்ல இல்லாததா நான் பண்ணிட்டேன்னு... சைட் அடிக்கிறது ஒரு குத்தமா?" 

"ம்ம்ம் மூஞ்சிய சண்டைக்கு போற காட்ஜில்லா மாதிரி வச்சிருந்தா எவன் பேசுவான்? அந்த ஐயனார் அங்க இருக்கது தெரிஞ்சிருந்தா நான் போயிருக்கவே மாட்டேன்... ஹ்ம்ம்" நிச்சயம் உதட்டை சுழித்திருப்பாள் என்று பார்க்காமலே கார்த்திக் புரிந்து சிரித்தான். 

"என்னடி என் அண்ணனை ரொம்ப தான் பேசுற? திருடன்னு சொல்லிட்டு இருக்க, அதுவும் அவன் ஊர் வம்பு புடிச்சவன். இந்நேரம் வாத்தி பையன் திருடன் திருடன்-னு ஊர் முழுக்க சொல்லிருப்பான். நாளைக்கே சுபிக்கு கல்யாணம் பேசுனா ஊர்ல விசாரிக்கிறப இந்த பேச்சும் அடி படுச்சுனா என்ன பண்றது... மனுஷன் அதையும் யோசிச்சு தான திட்டுருப்பாரு" 

"ம்ம்ம் கிழிச்சான் உங்க அண்ணன். அவனுக்கு அவன் தங்கச்சி கல்யாணம் எல்லாம் தெரியல... அவன் கல்யாணத்த பத்தி தான் கவலை.. என்கிட்டையே சொன்னான்னா பாரேன்" 

"நீ என்ன வேணா சொல்லிக்கோ வைஷு, நீ பரப்பிவிட்ட வதந்தியோட ரியாக்ஷன் நிச்சயம் இது இல்ல. அந்த மனுசனா பாத்தா பலி வாங்குற ஆள் மாதிரி தெரியல, நீ சமைச்ச சாப்பாடுக்கு எப்பயும் கமெண்ட் சொல்ற மாதிரி சொல்லிருப்பாரு. உன்ன மாதிரி அவர் இல்ல, பொறுப்பானவர்" 

"என்னடி நான் உன் பிரண்ட்டா இல்ல அந்த பேரிக்கா தலையன் உன் பிரண்ட்டா? பொறுப்பானவனாம்-ல பொறுப்பானவன்..." திரும்பி கார்த்திக்கின் அறையை பார்த்துக்கொண்டே, "பொறுப்பானவன் தான் மணி ஆறு தாண்டுனத்தையும் தெரியாம இன்னும் தூங்கிட்டு இருப்பானா... சரியான தத்தி பண்டாரம்" 

இதற்கும் மேல் இந்த பெண்ணை பேசவிட்டால் நிமிடத்திற்கு ஒரு பெயர் வைத்துவிடுவாள் என்று கீழிருந்து எழுந்து சுவரில் கை வைத்து வைஷ்ணவியை பார்த்து நின்றவன் புருவங்கள் ஏறி இறங்கியது. 

'அட சண்டாளா இவ்ளோ நேரம் பேசுனது எல்லாம் ஒட்டு கேட்டுருக்கியா? உனக்கு போய் ஒருத்தி உத்தமன் ரேஞ்-கு பேசுனாலேடா... அத்தனையும் கேட்டு விட்டானா? சும்மாவே சாமியாடுவான்... இப்ப நானே டிஸ்கோ லைட், குத்து சாங் எல்லாம் போட்டுவிட்டேனே... ரைட்டு அப்டியே பேசாமலே கோவமா போயிடுவோம்' 

"நான் வைக்கிறேன்" ஷெர்லினிடம் பதில் கூறி கார்த்திகை பார்த்து உதட்டை சுளித்தாள். அசராமல் அப்படியே நின்றவனின் உறுதி வைஷ்ணவியை பதம் பார்க்க திரும்பி அறைக்குள் செல்ல இருந்த பெண்ணை, "ராக்கெட்" ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது வைஷ்ணவியை அவன் பக்கம் திருப்ப. 

'என்ன' என்பதாய் அவனை பார்த்து புருவம் உயர்த்தியவளை பார்த்து, "வேலை பாக்க தெரியுமா?" நக்கலாய் வந்தது அவன் கேள்வி. 

"ஏன் தெரியும்னு சொன்னா, ரயில்வேல வேலை வாங்கி தந்துடுவீங்களோ?" துடுக்காக அவள் எழுப்பிய கேள்வி அவனுக்கு சிரிப்பை தான் தந்தது. 

"அசிஸ்டன்ட் சிவில் என்ஜினீயர் பொசிஷன். குற்றாலம் லொகேஷன்ல மந்த்லி மினிமம் பதினைஞ்சாயிரம் ரூபா சாளரி, மூணு வேகன்சி. பதினஞ்சு நாள்ல முடிவை சொல்லலாம்" 

மென் சிரிப்புடன் கூறியவன் அகன்று விரிந்திருந்த அவள் விழிகளை பார்த்தவாறே செல்லவிருந்தவனை, "என்ன இந்த திடீர் அக்கறை? திருடன் பட்டத்தை பலி வாங்குறதுக்கு எங்கையாவது கூட்டிட்டு போய் தள்ளி விடலாம்னு இருக்கீகளா?" சிறு புன்னகையுடன் கீழே இறங்கி படி நோக்கி சென்றவன் ஒரு நிமிடம் நின்று தன்னையே முறைத்து முறைத்து விழிகள் வெளியில் விழும் அளவிற்கு கண்களை உருட்டிய வைஷ்ணவியிடம், 

"பிரியாணி நல்லா இருந்துச்சு" சிரிப்புடன் விடைபெற்றவனை பார்த்து முறைத்து நின்ற அவள் விழிகள் உடனே மென்மையானது. 

நேற்று அவன் பேசியதற்கு இன்று இவன் பேசியதற்கு எத்தனை மாற்றங்கள்? தான் அவனை கண்டபடி பேசியதை கேட்டும் எப்படி இவன் இவ்வளவு பொறுமையாய் அதுவும் தன்னுடைய நிலையை அறிந்து தனக்கு ஒரு வேலையை வாங்கி கொடுக்கும் அளவு இவன் நல்லவனா? தினம் ஆசிரியத்தில் வைஷ்ணவியை ஆழ்த்துவதை தவறவிடுவதே இல்லை இந்த மனிதன்.



Hello... how is the chapter?

Comments please...

Continue Reading

You'll Also Like

156K 6K 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
18.7K 1.7K 44
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
159K 5K 30
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிற...
165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...