காதலின் சங்கீதமே!!! (முழு தொக...

By bhagiyalakshmi

27K 1.2K 448

உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும் More

சங்கீதம் 🎼 1 🎼
சங்கீதம்🎼 2🎼
சங்கீதம்🎼3🎼
சங்கீதம்🎼4🎼
சங்கீதம்🎼5🎼
சங்கீதம்🎼6🎼
சங்கீதம் 🎼7🎼
சங்கீதம்🎼 8🎼
சங்கீதம்🎼9🎼
சங்கீதம் 10
சங்கீதம் 🎼11🎼
சங்கீதம் 12
சங்கீதம்🎼13🎼
சங்கீதம் 🎼14🎼
சங்கீதம்🎼15🎼
மக்களே
hi friends
சங்கீதம் 17
சங்கீதம்18
சங்கீதம் 19
சங்கீதம் 20
சங்கீதம்21
சங்கீதம்22
சங்கீதம்23
சங்கீதம்24
சங்கீதம்25
சங்கீதம்26
சங்கீதம்27
சங்கீதம் 28
சங்கீதம்29
சங்கீதம்30
சங்கீதம்31
சங்கீதம்32
சங்கீதம்33
சங்கீதம்34
சங்கீதம் 35
சங்கீதம் 36
சங்கீதம் 37
சங்கீதம் 38
சங்கீதம் 39
சங்கீதம் 40
சங்கீதம் 41
சங்கீதம் 42
சங்கீதம் 43
சங்கீதம் 44
சங்கீதம் 45(இறுதி அத்தியாயம்)
சங்கீதம் 🌹46 எபிலாக்...

சங்கீதம்🎼16🎼

491 25 12
By bhagiyalakshmi

"அந்த பொறுக்கிய நாய  தூக்கி போட்டு மிதிக்காம, சும்மா வந்துருக்கா... நீ கொடுக்குற அடியில மூஞ்சி முகரை பேந்து இருக்க வேண்டாமா?"  என்று கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான் முத்து.

அங்கிருந்த கல் பெஞ்சில் படுத்து தலைக்கு கை கொடுத்து ஆகாயத்தை பார்த்திருந்த சர்வேஷ்வரனுக்கு கோவம், இயலாமை, வருத்தம் என அனைத்தும் அவன் முகத்தில் பிரதிபலிக்க "டேய் உன்னைத்தான் கேக்குறேன்... அவ போடான்னு சொல்லிட்டு போன பிறகு ஏன்டா அவளையே நினைச்சி வருத்தப்படுற?  உன்னை யாருன்னு அவளுக்கு தெரிய வர்றப்போ இது நடக்கும்னு உனக்கு  தெரியும் தானே!! அப்புறம் ஏன் இப்படி அப்சட்டா இருக்க?" என்று நண்பனை தேற்றிக் கொண்டும் பைரவியை வறுத்துக் கொண்டும் இருந்தான் முத்து.

அவன் சொன்ன எந்த சொற்களும் சர்வேஷ்வரனின் செவிலிகளில் விழுந்தது போல்  தெரியவில்லை இன்னும் வானையே வெறிக்க "டேய் இங்க ஒருத்தன் காட்டு கத்து கத்துறேன் கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்றியாடா?" என்று அவனின் கைகளில் பட்டென தட்டினான் முத்து.

அதில் சிந்தனை கலைந்த சர்வேஷ் "இப்ப என்னடா என்னடா உன் பிரச்சினை" என்றான் சலிப்பாக

"டேய் உனக்காக தான்டா இவ்வளவு நேரம் பேசுறேன். எனக்கு என்ன பிரச்சனைன்னு கேக்குற…" என்று மறுகேள்வி கேட்க

"உனக்கு என்னடா இப்போ அவனை ஏன் தூக்கி போட்டு மிதிக்கலன்னு வருத்தமா இருக்கா?" என்று எழுந்து அமர்ந்தவன் "ஏற்கனவே அவன் செஞ்ச தப்புக்கு பைரவி அவனை அடிச்சிட்டா... இதுல நானும் போய் அடிச்சா விஷயம் பிரின்ஸி வரையும் போகும் யார் என்னன்னு கேள்வி வரும் என் பேர் அடிபடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இதுல பைரவிய சம்மந்தபடுத்த எனக்கு விருப்பம் இல்ல" என்றான் தெளிந்த குரலில்.

"அவளுக்காக இவ்வளவு யோசிக்கிற உன்னை பத்தி அவ கொஞ்சம் கூட யோசிக்கலையே டா" என்றான் சற்றே ஆதங்கமாக.

"எப்பவும் நம்ம சைடே பாக்கதடா எதிராளி பக்கமும் பாக்கனும்...  நான் பொறந்திலிருந்து என் அப்பாவை பாக்குறேன்… அவரோட வார்த்தைகள் எந்த அளவுக்கு அவளுக்கு  ரணத்தை கொடுத்திருந்தா என் அப்பா பெயர் தெரிஞ்சவுடனையே என்னை தூக்கி எரிஞ்சிட்டு போய் இருப்பா!?"  என்றான் வருத்தமாக.

மூச்சை உள் இழுத்து காற்றை ஊதி வெளியேற்றிய முத்து "சரி... சரி... இப்போ என்ன பண்ண போற?" என்று அவன் அருகில் அமர்ந்தான்.

"தெரியல மாப்ள இந்த விஷயத்துக்கு அப்புறம் மனோஜ் சும்மா இருப்பான்னு எனக்கு தோணலை... எப்பவும் பைரவிக்கு நிழலா இருக்கனும்னு மட்டும் தான் தோணுது" என்றவன் குரலில் தீவிரம் கூடியிருந்தது.

….

"சே… எப்படி ஏமாத்தி இருக்கான்… இவனை போய் நல்லவன்னு நினைச்சேனே!!" என்று தனது அறைக்குள் வந்து புத்தகத்தை வைத்தவள் சர்வேஷை கருவிக் கொண்டிருந்தாள்.

'இனி அவன் மூஞ்சிலக் கூட முழிக்கக் கூடாது" என்று தீர்மானித்துக் கொண்டாள். விஷ்வநாதனை ஒரிரண்டு முறை பார்த்திருக்ககறாள். அவர் கண்களில் தெரியும் அலட்சியமும் கீழான பார்வையும் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. தாரணியின் திருமண விஷயத்தில் அதை கண்கூடாகவே பார்த்தவள் ஆயிற்றே! அதனாலையே அவரை சுத்தமாக பிடிக்காமல் போயிற்று உனக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என்ற எண்ணத்தில் இருந்தாள்.

"ஏய் காபிய கூட குடிக்காம இங்க என்னடி செய்ற? பிரெஷ் ஆகிட்டு வா காபிய தறேன்" என்று துளசி கூறியதோ "அக்கா இந்தா கா... அப்பா உனக்கு இந்த பேனா அனுப்பி இருக்கார்" என்று அர்ஜூன் குதுகளித்து கூறியதையோ அவள் கவனிக்கவில்லை 'அந்த பொறுக்கியை அடிச்சதோட விட்டே வந்து இருக்கக் கூடாது கம்பளைன்ட் பண்ணி இருக்கனும் இனி ஏதாவது தப்பா பேசட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு…' என்று மனோஜை திட்டி தீர்த்தவளின் எண்ணம் மறுபடி சுழற்சி முறையில் சர்வேஷ்வரனிடம் தாவியது…

கிட்டதட்ட ஒருவாரம் கடந்திருந்தது இந்நிகழ்வின் பின் சர்வேஷ் பைரவியை அவளறியாமல் பின் தொடர்ந்தான். மனோஜின் செய்கைகளையும் அவ்வப்போது கண்காணித்து வந்தான். அடிப்பட பாம்பு அமைதியாய் இருக்காது என்பது அவ்வளவு உண்மையோ அதே போல  பைரவிடம் அடியை வாங்கிய மனோஜூம் பழியுணர்ச்சியுடன் இருந்தான் என்பதும்.

நடந்த சில கசப்பான சம்பவங்களை மறந்தவளாக நண்பர்களுடன் கலகலத்தபடி வளைய வந்தாள் பைரவி. வழக்கம் போல ஒரு நாள் கல்லூரி முடிந்து வகுப்பில் சில மாணவர்களே  எஞ்சி இருந்தனர்.

பையூ… என்று ஜீவி சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் "ஜீவி…..  கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு சும்மா இருக்கறதனா இரு இல்ல இப்பவே கிளம்பிடு டிஸ்டர்ப் பண்ணாத" என்று சிடுசிடுத்தவள் கடைசி பக்கத்தை எழுதிக் கொண்டிருந்தாள்.

"அம்மா தாயே உன்னை தனியா விடுறது முடியவே முடியாது. எப்போ எந்த பக்கம் சண்டைய வருமோன்னு பயமா இருக்கு முதல்ல நீ எழுது…   எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை இருந்து உன்னை கூட்டிட்டு போறேன்" என்று புலம்பியவள்  மறுபடி அவள் அருகினில் அமர்ந்தாள்.

ஜீவிதா கூறிய விதத்தில் சன்னமாக சிரித்துக் கொண்டே தன் பணியை தொடர்ந்தாள் பைரவி. அதற்குள் வகுப்பில் இருந்த சில மாணவர்களும் சென்று விட எழுதி முடித்தவள் தனது புத்தகத்தை பையில் திணித்து எடுக்கும் நேரம் போகிற அவசரத்தில் ஒருத்தி அவள் பையை தட்டி விட்டு "சாரி பைரவி சாரி" என்று சிதறிய நோட்டுகளை எடுக்க உதவி செய்துவிட்டே சென்றாள்.

"மூஞ்சி... கண்ணு என்ன புரணியிலையா வச்சி இருக்கா? எப்படி இடிச்சி இருக்கா பாரு" என்று ஜீவிதா திட்ட "விடு ஜீவி தெரிஞ்சா செய்தா... ஏதோ தெரியாம பட்டுடுச்சி அதை ஏன் பெருசாக்குற?" என்று அவளை சமாதானம் செய்தபடி பார்க்கிங் வரை வந்தார்கள். 

"பையூ கீ யை கொடு நான் எடுக்கிறேன்" என்றாள் ஜீவி

"இரு ஜீவி  தறேன்" என்று பேகினுள் கையை விட்டு சாவியை எடுக்க முயன்ற பைரவிக்கு அது கிடைக்காமல் போக பதட்டத்துடன் பேகினுல் தேடினாள்.

"என்னடி பேகை ஆராய்ச்சி செய்ற சாவி எங்க?"

"தெரியல ஜீவி சாவி இதுல இல்ல"

"வேற எங்கயாவது விட்டுட்டியா...இல்ல வேற சைட் ஜீப்ல வைச்சி இருக்கியா" என்றாள் ஜீவி.

"இதுலான் வைச்சேன்…  இப்போ காணும்" என்று தேடியபடியே கூறினாள் பைரவி.

"சரி விடு... பதறாத சைக்கிள் பூட்டை உடைச்சிடலாமா?" என்று கல்லை தேடினாள் ஜீவிதா.

"ஹேய் இரு இரு அவசரப்படாத கிளாஸ் உள்ளே பேக் விழுந்ததுல அங்க தான் இருக்கும்...  நான் போய் எடுத்துட்டு வறேன்" என்று கிளம்பினாள்.

"ஏய் இரு நானும் வறேன்…"  என்று ஜீவி பைரவியுடன் நடக்க

"நீ எதுக்கு வர ஜீவி… கிளாஸ்ல தான் விழுந்து இருக்கும்... இரு நான் போய் எடுத்துட்டு வறேன்... இந்தா பேக் இங்கேயே இரு" என்று ஜீவிதாவை அங்கேயே இருக்க வைத்து விட்டு வகுப்புக்கு சென்றாள் பைரவி.

இவள் வகுப்பை நோக்கி செல்வதையும் ஜீவிதா பார்க்கிங்கில் நிற்பதையும்  மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் கவனித்து விட்டான்.

முதலில் ஒன்றும் தோன்றாமல் விளையாடிக் கொண்டிருந்தவன்  பின் என்ன தோன்றியதோ பந்தை முத்துவிடம் வீசி விட்டு அவளை நோக்கி சென்றான்.

இங்க ஏன் நிக்குற நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பலையா என்று ஜீவிதாவிடம் விசாரிக்க அவள் சாவி தொலைந்த கதையை கூறினாள்.

"நீயும் அவ கூட போக வேண்டியதுதானே?... ஏன் அவளை தனியா அனுப்பின? எத்தனை முறை வார்ன் பண்ணி இருந்தேன் உங்க கூட்டத்துக் கிட்ட" என்று அவளிடம் கத்தியவன் பைரவியை நோக்கி நடந்தான்.

"இவ சொன்ன கேட்டா தானே  அவ பண்றதுக்கு என்னை ஏன் இவன் திட்டுறான்"  என்று முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள் ஜீவிதா.

கீழே பார்வையை பதிந்தபடி சாவியை தேடிக்கொண்டே வந்தவளின் முன் வந்து நின்றான் சர்வேஷ்.

அவனை கண்டதும் முறைத்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடற
"பைரவி" என்று அவளை அழைத்தான்.

"என்ன வேணும் எதுக்கு என் முன்னாடி வந்து சீன் கிரியேட் பண்ற உன்னை பாக்க கூட பிடிக்கல என்றவள் அவனை தாண்டி செல்ல  முயன்றதும் சட்டென அவள் கையை பற்றிய சர்வேஷ் கொஞ்சம் பேசுறதை கேட்டுட்டு போ பைரவி" என்றான் அமுத்தமாக அவனது பிடியும் அழுத்தமான குரலும் இதுநாள் வரை அவள் காணாதது.

"முதல்ல கையை எடு பொறுக்கி மாதிரி நடந்துக்குற" என்று அவன் கரங்களை தட்டி விட்டவள் என்ன என்றாள் அலட்சியமாக

"சரி நான் பொறுக்கியாவே இருக்குறேன்.. நீயா போய் ஆபத்துல விழாதன்னு சொல்லத்தான் வந்தேன்… நீ திட்டிட்டதும் சரி பையூன்னு போறதுக்கு அவன் சர்வேஷ் இல்லல!? மனோஜ் உன்னை எப்போ பழி வாங்கலாம்னு காத்துக்கிட்டு கிடக்குறான் இதுபோல தனியா எங்கேயும் மாட்டிக்காத இரு கூட நானும் வர்றேன்". என்றான்.

"இது காலேஜ் இங்க யாரும் என்னை எதுவும் பண்ண முடியாது… தேவையில்லாம உன் அக்கரைய என்கிட்ட காட்டாதே.. அதுக்கு எனக்கு பிரெண்ட்ஸ் இருக்காங்க... என் பேரண்ட்ஸ் இருக்காங்க" என்றாள் அலட்சியமாக

"சொல்றதை கேளு பையூ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்… அந்த மனோஜ்"  என்று ஆரம்பிக்கும் முன்னமே

"ஸ்டாபிட்  ஸ்டாபிட் சர்வேஷ்… ஹோ… நீ நல்லவன் அவன் கெட்டவனா என் பார்வையில நீங்க ரெண்டுபேருமே ஒரே மாதிரியா தான் தெரியிரிங்க... அவன் அவனோட குணத்தை மறைச்சான்னா நீ உன்னோட அடையாளத்தை மறைச்சி இருக்க... என் ஆழ்மனசுல இருந்து உன்னை வெறுக்குறேன்... மறுபடி உன்னை பாக்கவே கூடாதுன்ற அளவுக்கு உன்னை எனக்கு பிடிக்கல இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ண உன் மேல கம்பளைன்ட் கொடுத்துடுவேன் மைன்டிட்"  என்றாள் வெறுப்பாக,

தான் காதலித்த பெண் வாயிலிருந்து இப்படியான வார்த்தைகள் எந்த காதலனுக்கும் கிடைத்திருக்காது… தன்னை ஆழ் மனதிலிருந்து வெறுப்பவளிடம் அவன் பேச்சு செல்லுபடியாகது போனது. 
அவளை தடுக்கும் வழி தெரியாது நின்றிருந்த சர்வேஷினை  கடந்து  பைரவி சென்றிட "ஷிட் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டுறாளே" என்ற கடுப்பில் தரையில் இருந்த கல்லை கலால் எத்தினான்.

அவர்கள் பேசுவதை கேட்ட முத்துவிற்கு கோவம் வர "டேய் மச்சான்  இதுக்கு மேலயும் மானம் விட்டு அவ பின்னாடி அலையனுமா? வாடா அதான் பாத்துக்குறேன் சொல்லிட்டாங்கல ஜான்சி ராணி பாத்துக்கட்டும்." என்று  அவனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான்.

நேராக வகுப்பிற்குள் சென்றவள் பேக் விழுந்த இடத்தில் சாவியை துழவ "வெல்கம் பைரவி" என்ற குரலில் தலையை உயர்த்தினாள் பைரவி.

ஒற்றை விரலில் சாவியை சுழற்றிய படி நின்றிருந்த மனோஜை கண்டவளுக்கு அதிர்வாய் இருந்தது… "ஹே…  உனக்கு எப்படி டா என் சாவி கிடைச்சிது சாவிய கொடுடா" என்று கோவமாக அவன் கைகளில் இருந்த சாவியை பறிக்க முயன்றாள்.

"சட்டுன்னு உன் கையில சாவிய கொடுக்கவா இவ்வளவு தூரம் உன்னை  வரவைச்சேன்" என்றான் அவளை அங்குளம் அங்குளமாக ரசித்தபடி

"இது காலேஜ் டா முண்டம் உன் ஆட்டமெல்லாம் இங்க வைச்சிக்காத ஒரு கம்பளைன்ட் போதும் டா நீ இங்கிருந்து வெளியே போய்டுவ... இந்த சாவி இல்லன்னா என்னால வண்டிய எடுக்க முடியாத? என்ன பயம் காட்டுறியா?"  என்று அவனை மிரட்டியவள் திரும்பி வெளியே செல்ல முயன்றாள்.

அவளுக்கு முன்னே சென்று  கதவை மூடியவன் "அதுக்குள்ள எங்க போற பைரவி... உன் ஆசை என்ன நான் காலேஜ் விட்டு வெளியே போகனும்... என் ஆசை இந்த காலேஜே உன்னையும் என்னையும தப்பா பாக்கனும்... அவ்வளவு தான்... நம்ம ரெண்டு பேரோட ஆசையும் இப்போ நிறைவேறிடும்" என்று சோம்பல் முறித்தவன் அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்.

"டேய் பொறுக்கி விடுடா நாயே சீ விடு டா" என்று அவனை அறைந்து கீழே தள்ளி விட்டு அறை கதவை திறக்க முயன்றதும்,

"என்னடி சும்மா சும்மா கை நீளுது என்று அவள் கைகளை பின் பக்கம் வளைத்தவன் இன்னும் யாரும் வெளியே வந்து இருக்க மாட்டாங்க பிரின்ஸி ஸ்டாப்ஸ்னு கூப்பிட போனவனுங்க வேலையை சரியா செய்யட்டும் டி அதுக்குள்ள நானும் சில வேலைய பாக்கனுமில்ல?" என்று அவள் கன்னத்தில் தன் கன்னம் வைக்க இழைக்க அறுவறுப்பிள் கத்தியவள் அவனிடமிருந்து திமுறி அவன் கையை கடித்தாள்.

அவன் பிடி தளர்ந்து ஆ... என வலியில் கத்தியவன் அவள் கன்னத்தில் பளார் என்று அறைய அவன் அறைந்த வேகத்தில் பைரவியின் தலை டெஸ்கில் பட்டு ரத்தம் கசித்தது.

"அச்சோ.. பார் எவ்வளவு ரத்தம் உன்னை பூப்போல ஹெண்டில் பண்ணலாம்னு பார்த்தா இப்படி அடிக்க வைக்கிறியே டி" என்று அவளருகில் செல்ல கதவு படீர் என்று திறக்க கோவமாக நின்றிருந்த சர்வேஷ் மனோஜை ஆவேசமா புரட்டிட வலி தாளமுடியாமல்  சர்வேஷினை தள்ளி விட்டவன்  "வேணா சர்வேஷ் ரொம்ப நாளாவே வீணா நீ என் வழில கிராஸ் பண்ற" என்றான் எச்சரிப்பது போல்

"பண்ணா  என்னட பண்ணுவ? என்ன பண்ணுவ?" என்று மீண்டும் கேட்டு கேட்டு மனோஜினை அடிக்கும் சமயம் சாவி தேட சென்றவள் வெகு நேரம் ஆகியும் இன்னும் வரவில்லையே என்று ஜீவிதா பைரவியை தேடிக் கொண்டு அங்கே வந்தாள்.

அவன் கைகளை தடுத்த மனோஜ் "அவ என்ன நீ கட்டிக்க போறவாளா? அவளை தொட்டா உனக்கு ஏண்டா இவ்வளவு கோவம் வருது? அவ பின்னாடியே சுத்தி அவள கரெட் பண்ண பாக்குறியா?" என்றவன் சர்வேஷின் கண் எதிரே அவளை அணைக்க முற்பட்டான்.

அவனை தள்ளி விட்ட சர்வேஷ் கண்களில் தெரிந்த கனல் அவனுடைய கோபத்தை உரைக்க காலால் அவன் கரங்களை மிதித்தவன் "ஆமாடா ஆமா அவளை கட்டிக்க போறாவன் தான்டா... அவ என் பொண்டாட்டி தான்டா..

அவளை இனிமே நீ திரும்பிக் கூட பாக்க கூடாது... அப்படி பார்த்த அன்னைக்கு என் கையால தான்டா உனக்கு கடைசி நாள்" என்று சொல்லி  சொல்லியே அடித்தவன் பைரவியை திரும்பி பார்க்க அவனிட்ட சப்தத்தில் சிலையாய் நின்றிருத்தவள் ஜீவிதாவின் உலுக்கலில் சுயம் பெற்றாள்.

ஜிவிதா சீக்கிரம் அவளை அழைச்சிட்டு இங்கிருந்து வெளியே போ இவன் ஏதோ பிளான் பண்ணி இருக்கான் சீக்கிரம் போ என்று கட்டளையிட நொடியும் தாமதிக்காமல் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தவள் அவளை உடனே அழைத்துக் கொண்டு சென்றாள்.

பிரின்ஸிப்பால் ஸ்டாப்ஸ் என்று அழைக்க சென்றவர்களது உபயத்தால் அங்கு கூட்டம் வர கூட்டத்துடன் கூட்டமாக கலந்தவர்கள் மெல்ல நழுவியபடி வெளியே சென்றிருந்தனர்.

வந்த பிரின்சிபால் "இது என்ன காலேஜா இல்ல ரவுடி பசங்க இருக்க இடமா?" என்று கண்டிக்க

"சார்" என்று வாயை திறந்த மனோஜை சர்வேஷ் மேலும் அடிக்க அதில் கோவமான பிரின்ஸிப்பல் "சே… நீங்கலெல்லாம் படிக்கவே லாயிக்கு இல்லை" என்று இருவரையும் திட்டியவர்  சர்வேஷை 2 மாதமும் காலமும் மனோஜை  1 மாத காலமும்  இடைநீக்கம் செய்திருந்தனர்.

…..

மருத்துவமனையில் இருந்த பைரவிக்கு மெல்ல விழிப்பு தட்ட கண்களை  திறந்தவளுக்கு நெற்றியில் வலி சுரீர் என்றிட ஆ என்ற சத்ததுடன் நெற்றியை விரலால் தொட்டாள்.

"பையூ பையூமா" என்று  பைரவியின் கைகளை பற்றிக்கொண்ட துளசிக்கு மகளை பார்க்கையில் கண்கள் கலங்கியது.

மா… என்று அழைத்தவள் எதிரே தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பெரும் தவிப்புடன் நிற்பது தெரிய கண்களில் ஒரு பயம் தெரிந்தது.

"ஒன்னுமில்லடா உனக்கு ஒன்னுமில்ல  நீ நல்லா இருக்க" என்று துளசி அவளை தைரியப்படுத்த "பயப்படாத டா அவனை அடிச்சி முஞ்சி முகரை எல்லாம் உடைச்சாச்சி இனி நீ இருக்குற திசை பக்கம் கூட தலைய வைச்சி படுக்க மாட்டான்" என்று அரவிந்த் பைரவியின் கரங்களை பற்றினான். .

"இதை இப்படியே விடக்கூடாது பா அவனை உள்ள தள்ளனும் நம்ம வீட்டு பொண்ணுகிட்டயே வாலாட்டி இருக்கான் எவ்வளவு பெரிய பொறுக்கியா இருப்பான்?" என்று சசீதரன் தந்தையிடம் கூறிட

"இல்ல மாமா எந்த கம்பிளைண்டும் வேணாம். என் பொண்ணு என் பொண்ணாவே திரும்ப எனக்கு கிடைச்சி இருக்கா…. அதுவே போதும்…  நாங்க திரும்ப சென்னைக்கே போறோம். எனக்கு இந்த ஊரை பார்த்தாலே பயமா இருக்கு மாமா…  அவ வாழ வேண்டிய பொண்ணு ஏதோ அந்த பையன் நல்லாவன இருக்க போயி என் பொண்ணை காப்பத்தி கொடுத்து இருக்கான். உயிர் முக்கியம் தான் மாமா ஆனா மானம் உயிரை விட முக்கியம் இல்லையா?" என்று விடாப்பிடியாக நின்றவர் அடுத்த வாரமே டிசியை வாங்கிக்கொண்டு சென்னை கிளம்பி இருந்தனர். சம்பவம் நடந்த அன்றுதான் பைரவி சர்வேஷினை கடைசியாக பார்த்து. அதன் பிறகு முன்று வருடங்கள் கழித்து தான் பார்த்தாள்.

Continue Reading

You'll Also Like

200K 5.3K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
186K 9.7K 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை...
19.1K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
27K 1.2K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்