சில்லென்ற தீயே...! ( முடிந்தத...

Por NiranjanaNepol

80.1K 5K 656

வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்... Mais

1 பிடிச்சிருக்கு
2 விதியின் விளையாட்டு
3 ஏற்றுக்கொண்ட தோல்வி
4 என்ன வாழ்க்கை இது?
5 டூத் ப்ரஷ் பெண்
6 அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
7 உண்மை
8 எதார்த்தம்
9 மறுமணம்
10 பேச்சு வார்த்தை
11 நட்பு என்னும் முகமூடி
12 வருங்கால கணவன்
13 நட்பு...
14 திருமண வேலைகள்
15 மலராலான வெடிகுண்டு
16 ஷிவானியின் மர்மம் என்ன?
17 சர்வாதிகாரி
18 அவருக்கு பிடிக்குமா?
19 மும்பை செல்லும் திட்டம்
20 செஸ் சாம்பியன்
21 ஷிவானியின் காதல்
22 சந்தோஷ வானில்
23 கோப வெடிப்பு
24 உணர்வுகள்
25 எனக்காக...
26 மறந்த கதை
27 உண்மை
28 முடிவு
29 சதுரங்கம்
30 மடிக்கப்பட்ட காகிதம்
31 உன்னை மட்டுமே
32 மக்கு...?
33 சகஜ நிலை
34 (மரு)மகன்
35 எச்சரிக்கை
36 எப்போதும் உன்னுடன்...
37 பிறந்தநாள் விருந்து
38 தேர்ந்த ஆட்டம்
39 *பெட்* தேவையில்லை
40 பாவம் கடிகாரம்
42 இவன் வேற மாதிரி
43 திடீர் அறிவுரை
44 அலுவலகத்தில் ஹரிணி
45 சித்து & சித்தார்த்
46 அனுவின் வருகை
47 சித்தார்த்தின் கேள்வி
48 மண்ணுளி பாம்பு
49 ஹரிணியின் மன ஓட்டம்
50 நம்பிக்கை
51 உறவின் முக்கியத்துவம்
52 சுற்றுலா தளம்
53 யார் அழகானவன்?
54 இறுதிப் பகுதி

41 உடைந்த கட்டில்

1.3K 85 7
Por NiranjanaNepol

41 உடைந்த கட்டில்

இறுதியில், சித்தார்த்தும் ஹரிணியும் ஒன்றானார்கள் இதயத்தாலும், எண்ணத்தாலும், உடலாலும்...! ஒருவருகாகவே மற்றொருவர் என்று படைக்கப்பட்ட அவர்கள் இருவரும், இடையில் வந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ஒன்றிணைந்து ஆகிவிட்டது. அவர்கள் எதிர்கொண்டது எல்லாம் வெறும் சாதாரண தடைக்கற்கள் அல்ல. ஹரிணியை அடையலாம் என்று சித்தார்த் கண்ட கனவு மொத்தமாய் தவிடுபொடி ஆகி இருந்தது. ஆனால், வாழ்க்கை எப்பொழுதும் எதிர்பாராத பல திருப்பங்களை நம் வாழ்க்கையில் நுழைத்து, நம்மை திக்குமுக்காடச் செய்யும் வல்லமை படைத்தது. அது எப்பொழுதும் நல்லவர்களை கைவிட்டதில்லை என்பது மகத்தான உண்மை.

கட்டிலை விட்டு கீழே இறங்க முயன்ற ஹரிணியை மீண்டும் இழுத்துக் கொண்டான் சித்தார்த்.

"என்னங்க, என்னை விடுங்க"

"நான் என்னை எப்படி கூப்பிட சொன்னேன்?" என்றான் அவள் கீழுதட்டை பற்றிக்கொண்டு.

"சித்..."

"இன்னொரு தடவை அதை மறந்தா, உதை படுவ"

"உதட்டை விடுங்க"

"என்னை எப்படி கூப்பிடனும்?"

"சித்..."

"குட்..."

"போதும் விடுங்க"

"எங்க அவ்வளவு அவசரமா போற?"

"அம்மா கீழ இருக்காங்க...  நம்ம கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ரூம்ல இருக்கோம்"

"நான் ரெண்டு *பெட்டில்* ஜெயிச்சு இருக்கேன் மறந்துடாத"

"அதனால?"

"எனக்கு வேண்டியதை எப்ப வேணும்னாலும் கேட்பேன்"

"இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"

"ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்"

"என்ன்னன்னது...????" அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் ஹரிணி.

"வாயை மூடு" அவள் வாயில் தட்டினான்.

"நீங்க வெட்கம் இல்லாதவர்"

"இருந்துட்டுப் போறேன்"

"இது ரொம்ப சங்கடமான விஷயம். என்னால முடியாது"

"முடிஞ்சு தான் ஆகணும்"

"சரி நம்மளோட பெட் என்ன?"

"நான் என்ன கேட்டாலும், அதை செய்யனும்"

"மறுபடியும் தெளிவா சொல்லுங்க"

"என்னோட சேர்ந்து குளிக்கனும்"

ஒரு நோட்டை எடுத்து அதில் அவன் கூறியதை எழுதினாள்.

"என்ன இது?"

"அக்ரிமெண்ட். இதுல கையெழுத்துப் போடுங்க"

"ஓகே" அதில் கையொப்பம் இட்டான் சித்தார்த்.

"நல்ல வேலை"

"ஏன்?"

"அதுல எழுதி இருக்கிறதைப் படிங்க"

"நீ என் கூட சேர்ந்து குளிக்கனும்"

"அப்படி தானே?"

"அப்படித் தான்... அதனால?"

"எப்போன்னு நீங்க சொல்லல. அதனால எப்போ எனக்கு தோணுதோ அப்போ வச்சுக்கலாம்"

"இது சுத்த ஏமாத்து வேலை"

"அப்படித் தான் வச்சுக்கோங்களேன்"

"நான் இன்னொரு பெட்லயும் ஜெயிச்சு இருக்கேன் அதை மறந்துடாத"

அங்கிருந்து அவள் குளியலறையை நோக்கி ஓட முயன்றாள். ஆனால், சித்தார்த் என்னும் மிகப் பெரிய தடையை தாண்டி, அதை அவளால் செய்ய முடியவில்லை. சித்தார்த் அவளைத் துரத்த, கட்டிலின் மீது ஏறி ஓடினாள் ஹரிணி. அவளை பிடிக்க கட்டிலின் மீது பாய்ந்தான் சித்தார்த். அவர்கள் எதிர்பாராத விதமாய் அந்த கட்டிலின் கால் உடைந்து போனது. இருவரும் கட்டிலின் மீது விழுந்தார்கள். ஹரிணி திகைப்புக்கு  உள்ளானாள். சித்தார்த்தோ விழுந்து விழுந்து சிரித்தான்.

"இது எல்லாம் உங்களால தான்"

 சிரிப்பை தொடர்ந்தான் சித்தார்த்.

"எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க?"

"உன்கூட சேர்ந்து நான் இப்படி கட்டிலை உடைப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல"

"அய்யோ, அம்மா நம்மளை பத்தி என்ன நினைக்க போறாங்களோ?" பதற்றத்துடன் நகம் கடித்தாள் ஹரிணி.

அவளுடைய எண்ணம், சித்தார்த்தை மேலும் சிரிக்க செய்தது. அவனை ஓங்கி ஒரு அடி போட்டு,

"சிரிக்கிறதை நிறுத்துங்க" என்றாள் .

"என் கூட சேர்ந்து குளிக்க மாட்டேன்னு சொன்ன. அது ரொம்ப சங்கடமா இருக்கும்னு சொன்ன. இப்போ என்ன பண்ண போற? இதை சொல்லி சொல்லி, உன்னை  எங்க அம்மா கிண்டல் பண்ண போறாங்க"

"என்ன்னனனது?"

"பின்ன என்ன? அவங்க உன்னை சும்மா விடுவாங்களா?"

"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு"

"என்ன பிளான்?"

"சாயங்காலம் அம்மா கோவிலுக்கு போகும் போது, இந்த கட்டிலை நம்ம மாத்திடலாம்"

"வெரி ஸ்மார்ட்"

நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ஹரிணி. அவள் கட்டிலை விட்டு இறங்க முற்பட்ட போது,

"வாயேன் இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து குளிக்கலாம்..."

அங்கிருந்த பூ ஜாடியை கையில் எடுத்து, அவனை அடிக்க ஓங்கி,

"உங்களை நான் கொன்னுடுவேன்..." என்றாள்.

உடைந்த கட்டிலில் விழுந்து சிரித்தான் சித்தார்த். குளியலறையை நோக்கி ஓடினாள் ஹரிணி.

அவளுடன் சற்று விளையாடி பார்க்க நினைத்தான் சித்தார்த். இப்படி ஒரு அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட அவன் தயாராக இல்லை. தேவயானிக்கு போன் செய்தான், கதவின் தாழ்ப்பாளை திறந்தபடி.

"மா..."

"சொல்லு சித்து..."

"ஹரிணிக்கு லேசா ஜுரம் அடிக்கிது"

"என்ன்னனது???? கொஞ்சம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கூட செஸ் விளையாடினப்போ நல்லா தானே இருந்தா?" என்றார் பதற்றத்துடன்.

"எனக்கும் ஒன்னும் புரியல மா"

"சரி இரு. நான் டேப்லட் கொண்டு வரேன்"

"சரி"

அவன் அழைப்பை துண்டித்தான். அதேநேரம், குளியலறையை விட்டு வெளியே வந்தாள் ஹரிணி. குளிக்கச் செல்லும் போது மாற்றுடை எடுத்து செல்லாததால், *ரோப்* பை அணிந்து கொண்டு வந்தாள் ஹரிணி. பரபரவென குளியலறைக்குச் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான் சித்தார்த்.

ஹரிணிக்கு மாத்திரை கொண்டு வந்த தேவயானி, கதவை தள்ளிக்கொண்டு பரபரப்புடன் உள்ளே நுழைந்தார். ஹரிணி *ரோப்* அணிந்து,  தலையை துவட்டிக் கொண்டு இருந்ததை பார்த்து திகைத்து நின்றார். அவளுக்கு ஜுரம் என்று கூறினானே சித்தார்த்...? பிறகு அவள் ஏன் தலைக்கு குளித்தாள்? தேவயானியை பார்த்த ஹரிணியும் சிலை போல் நின்றாள். தேவயானி உடைந்த கட்டில் பார்த்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டி கொண்டாள்.

"ஹரிணி உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையா?"

"நான் நல்லா தானே மா இருக்கேன்...?"

"உனக்கு ஜுரம்ன்னு சித்து சொன்னானே..."

அதைக் கேட்ட ஹரிணியின் கண்கள் அகல விரிந்தது. அப்போது, உடைந்த கட்டிலின் மீது தேவயானியின் பார்வை சென்றது. அவர் ஹரிணியை நோக்கி தன் தலையை மெல்ல திருப்பினார். ஹரிணி கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். என்ன நடந்திருக்க கூடும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தேவயானி ஒன்றும் மக்கு அல்லவே...!

"ஹரிரிரிணிணிணி..." என்றார்.

"*சித்* தான் உடைச்சாரு" உளறிக் கொட்டினாள்.

"*சித்*...? அப்படியா கதை?"

நாக்கைக் கடித்துக்கொண்டாள் ஹரிணி.

"அவர் தான் உடைச்சாரு"

"ஓஹோ..." என்றார் கிண்டலாக.

"அவர் தான் மா என்னை துரத்திக்கிட்டு வந்தார்"

அப்பொழுது குளியலறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த்.

"அவ தான் மா என்னை ஏமாத்தினா... அதனால தான் நான் அவளை துரத்தினேன்" என்றான் சித்தார்த்.

"அவர் பொய் சொல்றாரு "

"மா... உங்களுக்கே தெரியும், நான் தானே கேமில் ஜெயிச்சு, பெட்டிலும் ஜெயிச்சேன்?"

ஆமாம் என்று தலையசைத்தார் தேவயானி.

"அப்படின்னா நான் சொல்றதை அவ கேட்கனும் இல்ல? ஆனா அவ கேக்கல"

"அதனால கட்டிலை உடைச்சிட்டியா?" என்றார் புருவத்தை உயர்த்தியபடி.

"ரெண்டு பேரும் சேர்ந்து தான் உடைச்சோம்"

"பொய் சொல்லாதீங்க... நீங்க தானே பாய்ஞ்சிங்க?"

"பாய்ஞ்சானா?" என்றார் தேவயானி சிரிப்பை அடக்கியவாறு.

"கட்டில் மேல மா..."

"நான் உன் மேலன்னு சொல்லலையே..."

கைவிரல்களை மடக்கிக் கொண்டு சித்தார்த்தை பார்த்து முறைத்தாள் ஹரிணி. தன் கைகளை கட்டிக் கொண்டு சிரித்தார் தேவயானி.

"இந்த மாத்திரையால எந்த பிரயோஜனமும் இல்ல போல இருக்கே" என்றார் அவர் கொண்டு வந்திருந்த மாத்திரையை பார்த்தபடி.

"அப்படியா மா நினைக்கிறீங்க?" என்றான் சித்தார்த்.

"அம்மா, போதும் கிண்டல் செய்றதை நிறுத்துங்க. இவர் வேணுமின்னே உங்களுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்காரு. இவர் இவ்வளவு மோசமானவரா இருப்பார்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றாள் கோபமாக.

"சரி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. இந்த உடைஞ்ச கட்டிலை என்கிட்டயிருந்து மறைச்சிட முடியும்னு நீ நினைக்கிறாயா?"

"அவகிட்ட ஒரு *மாஸ்டர்* பிளான் இருக்கு மா"

"மாஸ்டர் பிளானா...?"

"நீங்க கோவிலுக்கு போகும் போது, உங்களுக்கு தெரியாம  அதை மாத்திடலாம்னு சொன்னா"

"ஓஹோ..."

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் ஹரினி.

"நீ ஒண்ணு செய் ஹரிணி, அடுத்த தடவை ஏதாவது பிளான் பண்றதுக்கு முன்னாடி, என்கிட்ட ஐடியா கேளு. இவனை நம்பாதே" என்றார் தேவயானி.

 "குட் அட்வைஸ்" வாய்விட்டு சிரித்தான் சித்தார்த்.

"இரண்டு பேரும் சேர்ந்து கட்டிலை எல்லாம் உடைச்சிருக்கீங்க... ரொம்ப பசியா இருப்பீங்க. வந்து சாப்பிடுங்க" சிரிப்பை அடக்கியபடி, கட்டிலைப் பார்த்துக் கொண்டு கூறிவிட்டு சென்றார் தேவயானி.

சித்தார்த்தின் இடுப்பைப் பிடித்து கிள்ளினாள் ஹரிணி.

"என்ன காரியம் செஞ்சிங்க? உங்கள மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல" மேலும் ஒரு அடி போட்டாள்.

"வாழ்க்கையில நிறைய திருப்பங்கள் வரும். அதுல இதுவும் ஒன்னு" என்றான்.

மீண்டும் ஹரிணி அவனை அடிப்பதற்கு முன், அங்கிருந்து ஓடிச் சென்றான் சித்தார்த்.

கதவருகில் நின்று கொண்டு,

"வெளிய வர்றதுக்கு முன்னாடி உன்னுடைய ரோபை சேஞ்ச் பண்ண மறக்காத" என்றான் கிண்டலாக.

அப்பொழுது தான் தான் இன்னும் உடை மாற்றாமல் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தாள் ஹரிணி.

"அடக்கடவுளே... அம்மா முன்னாடி நான் இப்படியேவா நின்னுகிட்டு இருந்தேன்?"

"இப்படியே தான் நின்னுகிட்டு இருந்த..." கதவை சாத்தி விட்டு ஓடிப்போனான் சித்தார்த்.

தலையில் அடித்துக் கொண்டு, காலால் தரையை உதைத்தாள் ஹரிணி. அப்பொழுது அவளுடைய பார்வை அந்த உடைந்த கட்டிலின் முனையில் விழுந்தது. முகத்தை சுளித்தபடி அதை நோக்கி நகர்ந்தாள்.  மெத்தைக்கு அடியில் ஒரு காகிதம்  தென்பட்டது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள் ஹரிணி. அது ஷிவானியால் எழுதபட்ட கடிதம்.

தொடரும்...

Continuar a ler

Também vai Gostar

132K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
213K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
23.9K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
1.5K 227 7
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...