அழற்கதிரின் முகிலவள்

By Kathiripoo

6.4K 1K 788

காலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ... More

அறிமுகம்
முகவுரை
முகில் - 01
முகில் - 02
முகில் - 03
முகில் - 04
முகில் - 05
முகில் - 06
முகில் - 08
கதை மாந்தர்கள் உறவுமுறை
முகில் - 09
முகில் - 10
முகில் - 11
முகில் - 12
முகில் - 13
முகில் - 14
முகில் - 15

முகில் -07

319 59 33
By Kathiripoo

பாண்டியன் காலையில் கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் , லட்சுமி அவருக்கு இரண்டாவது காபியை ஆற்றியபடியே கொண்டு வந்து தர, வாங்கப்போனவரை தடுத்தது அவரது அலைபேசியின் அழைப்பொலி.

அதனை கையிலிடுத்தவர், கேட்ட செய்தி அத்துணை உவப்பாய் இல்லை "எப்போடா....எங்க சேர்த்திருக்க.. சரி இரு இதோ... இதோ வரேன் " என பதட்டமானார்

"யாருங்க, என்ன ஆச்சு" என லட்சுமியும் கவலை கொள்ள

'வேலுதான்.. சந்திராக்கு முடியலையாம், மலர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கானாம்.. " என்றபடி தோளில் துண்டை போட்டு கொண்டே நடக்க

"நானும் வரவா " என லட்சமி பின் சென்றார்.

"இல்ல நான் போய்ட்டு போன் பண்றேன், பிள்ளைங்க எங்க இருக்கோ. சாப்பாட்டை ரெடி பண்ணு " என மனைவிக்கு உத்தரவிட்டு அண்ணனின் மருமகளை பார்க்க சென்றார்.

கண்ணன் பிறக்கும் வரை அண்ணனும் தம்பியும் தோட்டத்தையும் பண்ணையையும் மட்டுமே பார்த்துக்கொண்டு பண்ணை வீட்டிலியே தான் இருந்தனர் இரு குடும்பமும். குழந்தைகள் வளர வளர, இடப் பற்றாக்குறை பெரிதாய் தெரிந்ததில் முதலில் சங்கரன்தான் பழைய வீட்டை தாண்டி தோட்டத்திற்குள் சற்று மேடான இடத்தில் கொஞ்சம் வசதியாக வீட்டை கட்டினார் .

எனக்கு உனக்கு என்ற பிரிவினை இல்லாமல் குழந்தைகளுக்காக என இருந்தால் எல்லாருக்கும் அதில் சந்தோசமே. பெண்ணின் மேலிருந்த அன்பில் ராசாத்தி இல்லம் என்று பெயரிட்டு, கிரக பிரவேசம் முடித்திருக்க, அனைவர்க்கும் அத்துணை சந்தோஷமும் திருப்தியும். பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் ஓடி ஆடி அசந்து விட, பெரியவர் அத்துணை பெரும் அலுப்பில் தூங்கி கொண்டிருந்த அதிகாலையில் , புது வீட்டை சுற்றி இருந்த குப்பையை கூட சென்ற சங்கரனின் மனைவி அங்கே பாம்பு தீண்டி இறந்துபோனார்.

தாள முடியா துக்கத்தில் மொத்த குடும்பமும் ஆட்டம் காண புது வீட்டிற்கு சாதாரணமாய் போக கூட அனைவருக்கும் மனமில்லை.

வாழ வேண்டிய வயதில் பறிகொடுத்த மருமகளும் தனித்து நின்ற மகனும் நெஞ்சை அழுத்த, தன்னை சமாளித்துக்கொண்டு அன்றுமுதல் கதிரின் பாட்டி விசாலத்தின் முழு நேரமும், கவனிப்பும் தாயில்லா குழந்தைகளான வேலாயுதத்திற்கும் ராசாதிக்கும் தான். வீட்டின் ஒற்றை மகளென செல்ல பிள்ளையென்ன வளர்ந்தவளுக்கு படிப்பு என்பது சுத்தமாக மண்டையில் ஏறவில்லை, ஒன்பதில் இருமுறை கோட்டடிக்க படித்தது போதுமென வீட்டில் நிறுத்தி வைத்தார் சங்கரன்.

தங்கையை போலவே அண்ணனும், பள்ளி படிப்பை தத்தி தத்தி நீந்தி வந்தான். சபாவும் வேலனும் சிறுவயது தோழர்களாக ஒரே வயதில் ஒரே வகுப்பில் இருக்க, அவன் கல்லூரிக்கு சென்ற வருடம் இவன் கலப்பை பிடித்துக்கொண்டு வயலுக்கு போனான்.

சங்கரனுக்கு அதில் பெரிய வருத்தம் என்றாலும் வராததை தடிகொண்டா வரவைக்க முடியும் என வெள்ளாம்மையை பழகி விட்டார் மகனுக்கும்.

வயது மூப்பின் காரணமாக விசாலம் அடிக்கடி படுத்துக்கொள்ளவே தன் காலத்திற்கு பின் அவர்களை கவனிக்க எப்படியும் ஒரு பெண் வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பத்திரண்டே வயதில் வேலாயுதத்திற்கு தூரத்து சொந்தத்திலில் இருந்து சந்திராவை கட்டி வந்தார்..

சந்திரா வந்தபின்தான் புதிய வீட்டில் முழுதாய் குடி ஏறினார் சங்கரன் குடும்பம். அதே வருடம் பாண்டியன் கடையையும் வீட்டையும் கட்டிக்கொண்டு ஊருக்குள் வந்துவிட, இரு குடும்பத்திற்கும் பொதுவாய் இருந்தது பண்ணை மட்டுமே.

மணமான ஜோரில் இளைய ஜோடி இருக்க, வீட்டில் நடக்கும் மாற்றங்களை பெரியவர்களும் கவனிக்க தவறினர். இந்த சூழ்நிலையில் சொந்தம் விட்டுவிட வேண்டாமென அன்னபூரணி, ராசாத்தியை அவரது மகனுக்கு பெண் கேட்டு வந்திருந்தார்.

பதின்ம வயதில் கண்டிக்க ஆள் இல்லா கன்றாய் கவலையின்றி சுற்றிய ராசாத்தி காலப்போக்கில் துடுக்குத்தனமும் எதற்கும் எதிர்த்து பேசியே அனைவரையும் அவளை கண்டுக்காத வண்ணம் தள்ளி நிறுத்திருந்தாள். அதனாலேயே அவளது மாற்றமும் காதலும் குடும்பத்திற்கு அறியாமல் போனது. அது தெரிய வந்த பொழுது வெகுவாய் காலம் கடந்து அதற்கான விலையை மொத்த குடும்பமும் தரவேண்டியிருந்தது.

பாண்டியன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த பொழுது வேலாயுதம் , கையில் பிளாஸ்கோடு காபி வாங்கிக்கொண்டு வெளியே இருந்து வந்தான்.

"எப்படி இருக்கா இப்போ ?" என்றபடி அவனுடன் நடக்க அங்கே அறையில் துவண்ட துண்டாய் உறங்கி கொண்டிருந்தாள் சந்திரா

பார்த்தவுடன் கண் கலங்கிவிட, வேலாயுதம் தான் "அவளுக்கு ஒண்ணுமில்ல சித்தப்பா, எப்பவும் போல பிரஷர் தான். அவளே தேவயில்லாம உடம்ப கெடுத்து வச்சுக்கிட்டா. ப்ச்ச் சரி ஆயிடுவா. நீங்க கலங்காதிங்க" என தேற்றினான்

அவள் உறங்கட்டும் என வெளியே வந்தவுடன் " உண்மையா என்ன தான் பிரச்சனை வேலா, 32 வயசுல பிரசர் ஏறி ஆஸ்பத்திரில வந்து படுக்கற வரைக்கும் என்ன கவலை அவளுக்கு?"

"எல்லாம் தேவை இல்லாத கற்பனைதான் சித்தப்பா, ரெண்டு பொண்ணுபிள்ளை இருக்கு, அதுக்கு எல்லாம் சரியா பண்ணனும், வயசான அப்புறம் நாம என்ன செய்யப்போறோம்னு தினம் புலம்பி புலம்பி இப்டி இழுத்து வச்சிருக்கா, நீங்க விடுங்க நான் பார்த்துகிறேன்" என்றவன் பெருமூச்சுடன் மனைவியின் புலம்பல் இரண்டு மாதமாக அதிகரித்திரிருப்பதை சொல்லாமல் விட்டிருந்தான்

பாண்டியனுக்கும் அவளது கவலை அர்த்த மில்லாததாய் தோன்ற மீண்டும் அதையே பேசாமல் "ஹ்ம்ம் பிள்ளைங்க எங்க இருக்காங்கடா? " என

"வீட்டுலதான்ப்பா , வர்றப்பவே அவ அம்மாக்கு போன் பண்ணிட்டு தான் வந்தேன். இந்நேரம் வந்திருப்பாங்க." என்றவாரே அவருடன் வாசல் வரை வந்திருந்தான்

"சாப்பிட்டியா நீ " என அவர் அவனை கேட்க அவனது முகத்தில் ஒரு கசந்த முறுவல்

லட்சுமியை அழைத்துக்கொண்டு மதியஉணவு எடுத்து வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினார் பாண்டியனும்.

வீடு வந்தவர்,கையோடு வேலன் சந்திராவின் குழந்தைகளுக்கு உணவை கொண்டுபோய் கொடுத்துவிட்டு அவள் அம்மாவிற்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர், மீண்டும் லட்சுமி யும் கூட்டிக்கொண்டு போய் மருத்துவமனையில் விட்டு வந்தார்.

கதிருக்கு விஷயம் லட்சுமி மூலம் சொல்ல பட்டிருக்க பாண்டியன் கடைக்கு திரும்ப வரும்வரை அவன் கடையை பார்த்துக்கொண்டு அவருக்காக காத்திருந்தான். இன்னும் அப்பாவும் மகனும் நேராக பேசிக்கொள்வதில்லை, குமரேசன் அருகேயிருக்க அவரிடம் சொல்லவது போல்

"பண்ணை கணக்குல எவ்ளோ இருக்குனு பார்க்கணும் குமரு, சந்திராக்கு மனசில என்ன குழம்பம்னு தெரியல, நம்ம வீடு மருமக அவளை அப்பிடி ஆஸ்பத்திரில பார்க்க மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு.

பிள்ளைங்க பேருல ஏதாவது செய்யணும் , பத்து பன்னெண்டு வயசு பிள்ளைங்களை வச்சிட்டு என்ன கவலை படுறானு புரியல எனக்கும். கொஞ்சம் டெபாசிட் பண்ணி வச்சிட்டா நல்லது எல்லாத்துக்கும்." என்றார் பொதுவாய்

அவர் சொன்னதில் கதிரும் குமரேசனும் யோசனையாக பார்த்துக்கொண்டனர். பண்ணை பொதுவாய் இருக்க கதிரும் தனக்காக ஒரு தனி தொழில் யோசித்தததும் கூட அதனை கொண்டே.

தேவைக்கு பணம் இருக்கிறது, ஆனால் அவனுக்கு வேண்டியது பெயர்.. அவனது அடையாளம். ஏற்கனவே அவன் தனக்கென்று ஒரு அடையாளத்தை கொண்டிருந்தாதான், அது எதோ முகம் தெரியா முகவரி என தோன்றியதால் அதனை விடுத்து இங்கே வந்ததும் இப்போது செய்து கொண்டிருப்பதும். வேண்டாம் என்று எடுத்து உதறிவிட்டு வந்தது சரியென அவனும் அவனை சேர்ந்தவர்களும் உணரும் இந்த நிமிட தேவையாக இருக்க அடையாளம் அதை உணர வைக்கும் வேகம் இருந்தது அவனிடம்.

நாம் இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும் என்பார்களே அது போல் வாழ நினைப்பவன் தான் கதிரும். பணம் சேர்ப்பது மட்டும் அவன் எண்ணமில்லை, ஆனால் அவனது முயற்சிக்கு பணம் தேவை என்பதை அவனறிவான்.

அவர்களது சேமிப்பும், வங்கி கடனும் தான் முதல் என்றாலும், ஆரம்ப கட்ட முயற்சிக்கு இன்னும் பணம் தயாராக இல்லாமல் பண்ணையின் கணக்கில் இருந்து ஒரு பகுதியை உபயோகித்து கொள்ள பாண்டியன் முன்பு வேலாயுதத்திடம் சில நாட்கள் முன்பு தான் கேட்டிருந்தான் கதிரும், அதற்காக அவனையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பதை பற்றி மற்றவர்களுடனும் அந்த வார இறுதியில் பேசுவதாய் அவன் நினைத்திருக்க அப்பாவின் பேச்சு அவனது யோசனையை தடை செய்தது.

பாண்டியனுக்கும் அவனது மனம் புரிந்தது, அடைக்காக்க வேண்டிய காலம், அடைக்கலம் கொடுக்க வேண்டிய காலம், ஆறுதலாய் இருக்க வேண்டிய காலம் தட்டி கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் தள்ளி நிற்கவேண்டிய நேரம் என்று அனைத்தையும் சரியாக செய்தால் தான் பெற்றவர்களின் அன்பு அன்பாகத் தெரியும் குழந்தைகளுக்கு. காலங்களும் நேரங்களும் தாமதமானாலும், தவறி போனாலும் அக்கறை கூட அடக்குமுறையாக தோன்றலாம். அந்த இடத்தில் தான் நிறைய பெற்றவர்கள், குழந்தைகளின் நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள்.

இப்படியாக அங்கே பல சிந்தனை ஓட, பாண்டியன் "ரெண்டு நாலு போகட்டும் குமரு, கணக்கு பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாம். இப்போவே எல்லாம் மண்டைல போட்டு குழப்பிக்க வேண்டாம்னு சொல்லு, இடத்துக்கு பத்திரம் ரெடி பண்ணுறப்போ நம்ம வக்கீலையும் கூட்டிட்டு போக சொல்லு" என்றவாறே கடை வேலையை பார்க்க சென்றார் பாண்டியன்.

அப்பாவின் சொல்லில் மறுப்பில்லாமல், கதிரும் "குமாஸ்தா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் மாமா, நீங்களும் கூட வந்துடுங்க அவுங்க ஆபீஸ்க்கு " என்றபடி தன் பைக்கை கிளப்பிக்கொண்டு போனான்

கதிர் பஸ்ஸ்டாண்டை ஒட்டி இருந்த வக்கீல் ஆஃபீசின் வாசலில் தான் வண்டியில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான், கையில் போனை நோண்டியபடி, வெயிலின் தாக்கம் வெகுவாய் இருக்க அறைக்குள் இருந்த புழுக்கத்திற்கு, வெளியில் வீசிய வெப்ப காற்றே பரவாயில்லை என்பதாய் கண்களை சுழற்றியபடி இருக்க அங்கே வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கிய ராசாத்தி இரு கைகளிலும் கனமான பையை தூக்கியபடி இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் அவளுடன் பேசுவதில்லை, ஆனாலும் சிறியவர்கள் பேசினால் அதை தடுப்பதும் இல்லை. வழிந்த வேர்வையை புடவை முந்தியில் துடைத்தபடி அவள் நடந்து வர கனத்த மனதுடன் தமக்கையை பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கி செல்ல முயல.

அவளது பின்புறமிருந்து வேகமாய் வந்த பச்சை தாவணி அவளது கையிலிருந்த சுமையை வாங்கிக்கொண்டு

"இம்புட்டு வெயிட்ட தூக்கிட்டு இந்நேரம் எங்க போயிட்டு வர மதினி" என்று அன்பாய் கடிந்து கொண்டது.

முல்லையை பார்த்தவள் சிரித்தபடி "காலேஜ்ல இருந்து வரியா?" என்றுவிட்டு அவளது கைய பிடித்து நடந்து வர, பக்கத்தில் இருந்த சிறு நிழலில் நின்று ராசாத்தியை நிற்கவைத்து அவளிடமிருந்து தண்ணீரால் முகம் கழுவ சொல்லி, மீதியை குடிக்கவைத்த முல்லை.

"மாசமாயிருக்குறபோ எதுக்கு நீ தனியா வர, உன் மாமியாரை கூட்டிட்டு வரவேண்டியதுதானே?" என கோபப்பட

"பெரியவன் வீட்டுல இருக்கான்ல அவனை தனியா விட்டுட்டு எப்படி வர. பேங்க் போற வேலை இருந்துச்சு. இல்லைனா அத்தை என்ன வெளியில விட மாட்டாங்க" என மாமியாருக்கு வக்காலத்து வாங்கினால் அவளும்

அக்காவிடம் வந்த முல்லையை பார்த்தவன், நகராமல் நின்ற இடத்திலிந்து அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கே தாண்டி செல்லும் நடைபாதை மனிதர்களுக்கும் வண்டிகளுக்கும் மத்தியில் கதிரை இரு பெண்களும் பார்க்கவில்லை என்றாலும் அவன் கண்ணுக்கு இருவரும் பேசியபடி நடந்துவந்தது தெரிந்தது.

கூடவே சபாவின் நினைவும் வந்தது, சபாவிற்கு ராசாத்தி இருக்கும் திசையே ஆகாது. கதிரும் அவனுடன் இருந்தால் அக்காவை வெளியில் பார்த்தால் கூட நிற்காமல் கடந்துவிடுவான். உடனே 'இவ இன்னும் அவனுக்கு பிடிக்காததே செய்ஞ்சுட்டு இருக்கா போல' என்னும் எண்ணம் எழ, அவர்கள் நெருங்கியது தெரிய தானாய் அக்காவை கூப்பிட்டான்

"கதிரு" என முகம் மலர ராசாத்தி அவன் பக்கத்தில் வர முல்லை சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டாள்.

"எப்படி இருக்க அக்கா, குட்டி பையன் எப்படி இருக்கான்?" என்றபடி கதிர் அவள் கைகளை பிடித்துக்கொள்ள

"நல்ல இருக்கோம், நீ என்ன இங்க நிக்குற " என அவள் பார்வை அவன் பின்னிருந்த வக்கீல் அலுவலகத்தின் பெயர் பலகையை கண்டு மீண்டது

கதிர் "பிளாண்டுக்கு இடம் பாக்குற வேலையா வக்கீலை பார்க்கவந்தேன்", எங்க அவள் முகம் தெளிந்தது

"நானும் கேள்வி பட்டேன், எல்லாம் பார்த்து பண்ணு" என்றவள் வேற என்ன பேச என்பதாய் மௌனித்திருக்க

"நீயும் உடம்ப பார்த்துக்கோ, ஏதும் வேணும்னா கூப்பிடு. யோசிக்காத"என்பதற்குள் இருவருக்கும் கண்ணில் நீர் கோர்த்தது

"சரி சரி" என அவளது தோளை தட்டி கொடுத்தவன் போகும் ஆட்டோவை மறித்து நிப்பாட்ட ராசாத்தி வேண்டாம் என மறுத்தாலும் கேட்காமல்

"இருக்கட்டும் வெயில் எப்படி அடிக்குது பாரு", என அவளை ஏற சொல்ல ராசாத்தி, முல்லை கையை பற்றிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி கொண்டாள். இருவரும் ஏறியவுடன் ஓட்டுனரிடம் பணத்தை கொடுத்து இரு வீட்டிற்க்கும் வழி சொன்னான் ஓட்டுனரிடம்

முல்லையும் எதுவும் சொல்ல முடியாமல் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்ட அடுத்த நிமிடத்தில் ராசாத்தி கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள் முல்லை "ஆஆ, ஏண்டி கிள்ளுற" என ராசாத்தி அலறினாள்

"உன் தம்பி உனக்கு வண்டி பிடிச்சா, ஏன் என்னையும் சேர்த்து இழுத்துட்டு வர்ற நீ, ச்சே அவர் என்னை என்ன நினைப்பாரு" என பொரிந்தாள்

"என்ன நினைப்பான், நீ என்கூட தானே வந்த. அதெல்லாம் பார்த்திருப்பான் உனக்கும் சேர்த்துதான் வண்டி சொன்னான்"

"யாரு உன் தம்பியா நல்லா பார்த்திருப்பாரே, நீ என் கைய பிடிச்சிட்டு ஏறவும் தான் என் வீட்டுக்கும் அட்ரஸ் சொன்னாரு, உன் பாசமலர் பார்த்தவுடனே உன் பைய போட்டுட்டு நான் அப்டியே கழண்டிருக்குனும் " என முல்லை நொடித்து கொள்ள

இசைவாய் சாய்த்து உட்கார்ந்து கொண்டு ராசாத்தி "சரியாய் சொல்லு நான் இப்போ உன்ன கூட கூட்டிட்டு வந்ததுக்கு கோவ படுறியா இல்லை என் தம்பி பார்க்கலைனு கோவ படுறியா?" என பொறுமையாக கேட்க

முல்லை அவளை எரித்துவிடுவது பார்த்தவள், வாயை மூடுமாறு சைகை செய்து கொண்டு வெளியே பார்த்து உட்கார்ட்ந்து கொள்ள, ராசாத்தி ஒரு சிரிப்புடன் இருக்கையில் சாய்ந்தாள்.

******************மீண்டும் ஓளிரும் ********************* 

Continue Reading

You'll Also Like

425K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
146K 5.9K 49
உறவுகளின் உன்னதம்
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
178K 4.5K 25
Completed.. Thanks for ur support.. friends..😊😊