என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

77 தந்தையும் மகளும்

1.8K 101 15
By NiranjanaNepol

77 தந்தையும் மகளும்

தரையில் படுத்துகொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் காமராஜ். அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது எல்லாம், தனது மகளை பற்றியும் மருமகனை பற்றிய எண்ணங்களே. அப்பொழுது அவர் இருந்த சிறைக் கதவின் இரும்புக் கம்பியை, லத்தியால் தட்டினார் ஒரு  போலீஸ்காரர். அவரைப் பார்த்து எழுந்து அமர்ந்தார் காமராஜ்.

"எழுந்து வெளியில வா. உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு." என்றார் அவர்.

"எனக்கு யாரையும் பார்க்க விரும்பமில்ல" என்றார் காமராஜ் விருப்பமில்லாமல்.

"நெஜமாத் தான் சொல்றியா?"

அவருக்கு பதில் அளிக்காமல் மீண்டும் தரையில் படுத்துக் கொண்டார் காமராஜ்.

"சரி, நீ அவரை பார்க்க விரும்பலன்னு நான் ஸ்ரீராம் கருணாகரன்கிட்ட சொல்லிடறேன்"

சுவற்றில் அடித்த பந்தை போல், துள்ளிக் குதித்து எழுந்து நின்றார் காமராஜ்.

"யாரு? என்னை பார்க்க யார் வந்திருக்கிறதா சொன்னீங்க?" என்றார் நம்பமுடியாமல்

"தொழிலதிபர் ஸ்ரீராம் கருணாகரன். எதுக்காக அவர் உன்னை பார்க்க வந்திருக்கிறார்னு தெரியல" என்று கூறியபடி அவர் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது,

"சார், என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போங்க..."

"அதானே பார்த்தேன்... பணக்காரனை பார்க்க மாட்டேன்னு யாராவது சொல்லுவாங்களா?" என்று எகத்தாளமாய் கூறியபடி சிறைக் கதவை திறந்து விட்டார் அந்தப் போலீஸ்காரர்.

அவரை பின் தொடர்ந்து வந்தார் காமராஜ். ஸ்ரீராம் தனக்காக *விசாரணை* அறையில் காத்திருந்ததை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க கூடிய, ஆனால் வெளியில் இருப்பவர்களை உள்ளே இருப்பவர் பார்க்க முடியாத, காவலர்கள் மட்டுமே பயன்படுத்த கூடிய விசேஷ அறை அது.

"வணக்கம் மாப்பிள்ளை" என்றார் தன் கரங்களை கூப்பி காமராஜ்.

"எதுக்காக இப்படியெல்லாம் செஞ்சிங்க?" என்று நேரடி கேள்வி கேட்டான் ஸ்ரீராம்.

"நீங்க எதை பத்தி பேசறீங்க மாப்பிள்ளை?"

"எதுக்காக வேலாயுதத்தை கொன்னிங்க?"

அவன் முகத்தை பார்க்காமல் தலைகுனிந்து நின்றார் காமராஜ்.

"நீங்க எதுக்கு அவரை கொன்னிங்கனு நான் சொல்லட்டுமா?" என்ற ஸ்ரீராமை வியப்புடன் தலை நிமிர்ந்து பார்த்தார் காமராஜ்.

"நீங்க மிதிலாவை ஃபாலோ பண்ணி எங்க ஃபார்ம் ஹவுஸ்க்கு வந்தீங்க. அங்க, யாரோ எங்களைக் கொல்ல முயற்சி பண்ணதை பார்த்தீங்க. விஷயத்தை முழுசா தெரிஞ்சிக்க,  அந்த ஆளை பின்தொடர்ந்து அவனுடைய இடத்துக்கு போனீங்க. நீங்க அதை, அவனுடைய கார் டிக்கியில் ஒளிஞ்சிருந்து செஞ்சிருக்கலாம்."

தனக்குள் எழுந்த ஆச்சரிய பாவத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை காமராஜால்.

"அவன் எங்களை கொல்றதுக்காக வேலாயுதம் அனுப்புன ஆளுன்னு அவன்கிட்ட இருந்து நீங்க தெரிஞ்சுகிட்டிங்க. அவனை கொன்னுட்டு வந்து, மிதிலாவுக்கு வாங்கின நகையை என்கிட்ட கொடுத்தீங்க. அதுக்கப்புறம் பிக்பாக்கெட் அடிச்ச மாதிரி நாடகமாடி, ஜெயிலுக்கு வந்து, இது எல்லாத்துக்கும் காரணமான *மாஸ்டர் மைண்ட்* வேலாயுதத்தை கொன்னுட்டீங்க." என்று கூறி முடித்தான் ஸ்ரீராம்.

"இவ்வளவு புத்திசாலியான மாப்பிள்ளை எனக்கு கிடைச்சதை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறேன்" என்று அவனை ஒளிவுமறைவின்றி பாராட்டினார் காமராஜ்.

ஒன்றும் கூறாமல் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான் ஸ்ரீராம்.

"ஆமாம். நான் தான் அவனை கொன்னேன். அவன் இந்த உலகத்துல இருக்கக் கூடாது"

"அதை முடிவு பண்ண நீங்க யாரு? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?"

"உங்களையும் என் மகளையும் கொல்ல அவன் யாரு? அவனுக்கு மட்டும் உரிமை இருக்கா? என்றார் கோபமாய்.

"நீங்க கல்ப்ரிட்டை போலீசில் ஒப்படைச்சி இருக்கலாமே... அவங்க   வேலாயுதம் விஷயத்தை கவனிச்சிருப்பாங்க இல்லையா?"

"உங்களை கொல்ல அவன் ஒரே ஒரு ஆளை மட்டும் தான் அனுப்பினான்னு என்ன நிச்சயம்? வேற யாராவது, வேற எங்கேயாவது பதுங்கி இருக்கலாம் இல்லையா? என் பொண்ணோட வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்ல. அவ சந்தோஷமா இருக்கணும்... அவ புருஷனோடவும், குழந்தைகளோடவும். இந்த திட்டத்துக்கு பின்னாடி இருக்கிற மெயின் கல்பிரிட் செத்தா தான் இந்த கதை முடிவுக்கு வரும். அதனால தான் அவனை கொன்னேன்"

"ஆனா உங்க வாழ்க்கையை நீங்க கெடுத்துக்கிட்டீங்களே..."

"எனக்கு வாழ்க்கையா? யாருக்கும் பிரயோஜனம் இல்லாம நான் வாழ்ந்து தான் என்ன செய்யப் போறேன்? இப்போ என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிடுச்சு இல்லையா...? இப்போ என் மகளோட வாழ்க்கையை காப்பாதிட்டேன்னு திருப்தியோட சந்தோஷமா நான் சாவேன்... என்னை நம்பி வந்த என் பொண்டாட்டியை தான் நான் காப்பாத்தல..." என்ற போது அவர் தொண்டையை அடைத்தது.

அவருக்காக பரிதாப்பபட்டான் ஸ்ரீராம். தன்னை நிரூபித்துக் காட்ட, யாரும் கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய செயலை செய்திருக்கிறார் ஒரு தந்தை.

"உங்களால முடிஞ்சா எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க. என் பொண்ணுகிட்ட சொல்லுங்க, அவளுடன் மன்னிப்புக்காக நான் கடைசி மூச்சு வரை காத்திருப்பேன்னு சொல்லுங்க"

"நீங்க அவ்வளவு நாளெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்ல. அவ இங்க தான் இருக்கா" என்று என் கரத்தை நுழைவு வாயிலின் பக்கம் நீட்டினான் ஸ்ரீராம்.

அந்த திசையில் காமராஜ் பார்க்க, அங்கு கண்ணீர் சிந்தியபடி நின்றிருந்தாள் மிதிலா. தன்னை நோக்கி மெல்ல அடியெடுத்து வந்த மிதிலாவை, நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு நின்றார் காமராஜ். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நடப்பது உண்மை தான் என்பதை நம்ப முடியவில்லை. மிதிலா அவரருகில் வந்த போது, அவள் முன் மண்டியிட்டு இருகரம் கூப்பினார் காமராஜ். அதைக் கண்ட ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தான். ஆனால் மிதிலாவும் அவர் முன் முழங்காலிட்டு, அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

"என்னை மன்னிச்சுடு டா... உனக்கு ஒரு நல்ல அப்பாவா இருக்க நான் தவறிட்டேன்..."

"இல்லப்பா... நீங்க ரொம்ப நல்ல அப்பான்னு நிரூபிச்சிட்டிங்க" என்று அவர் கரங்களை தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அப்பாவும், மகளும் சேர்ந்து விட்டதை பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஸ்ரீராம். சூழ்நிலை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததை உணர்ந்தான் அவன். அதை லேசானதாய் மாற்றவும் நினைத்தான்.

"எனக்கு இது போதும் டா. நான் சந்தோஷமா சாவேன்" என்றார் காமராஜ்.

"இல்லப்பா, அவர் உங்களுக்காக ஒரு நல்ல வக்கீலை ஏற்பாடு பண்ணி இருக்கார்"

"இல்லம்மா, அதெல்லாம் தேவையில்ல. ஸ்ரீராம் கருணாகரனுடைய மாமனார் ஒரு கொலைகாரன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். அது அவருடைய மரியாதையைக் குறைக்கும். அது நடக்க வேண்டாம்"

"அது ஒரு பிரச்சினையே இல்ல" என்றான் ஸ்ரீராம்.

"நிச்சயமா ஒரு பிரச்சனை தான். நீங்க சமுதாயத்தில் ரொம்ப பெரிய அந்தஸ்தில் இருக்கிறவர். தயவுசெய்து எனக்கு வக்கீல் எல்லாம் ஏற்பாடு பண்ணாதீங்க. தயவுசெய்து இதை அப்படியே விட்டுடுங்க"

"அப்படின்னா, நீங்க மிதிலாவுக்கு கொடுக்க சொன்ன நகையை நான் கொடுக்க மாட்டேன்" என்று அவரை பிளாக்மெயில் செய்தான் ஸ்ரீராம்.

"ப்ளீஸ் மாப்பிள்ளை..." என்றார் கெஞ்சலாக.

"என்ன நகை?" என்றாள் மிதிலா.

"அது, அவர் பத்து வருஷம் ஜெயிலில் சம்பாதிச்ச பணத்தில் வாங்கினது. அதை உன்கிட்ட குடுக்க சொல்லி என்கிட்ட கொடுத்தார்"

"இது எப்ப நடந்தது?"

"நேத்து நம்ம ஆஃபீஸ் பார்க்கிங் லாட்டில்"

"ஓ..."

"இப்ப சொல்லுங்க, ஒத்துக்க போறீங்களா இல்லையா?" என்றான் ஸ்ரீராம்.

"மா... எந்த வக்கீலும் வேணாம்னு மாப்பிள்ளைகிட்ட நீ சொல்லு மா"

"நான் சொன்னா அவர் கேட்க மாட்டார் பா" மிதிலா கூற,

"ஓ, அப்படியா? அவ சொல்றத நம்பாதீங்க மாமா. கல்யாணத்துக்கு முன்னாடியே அவ சொல்றதை எல்லாம் நான் கேட்க ஆரம்பிச்சுட்டேன்" என்றான் ஸ்ரீராம்.

காமராஜ் வாய்விட்டு சிரித்தார்.

"ஒத்துக்கோங்க பா, ப்ளீஸ்" என்றாள் மிதிலா.

"நீ ப்ளீஸ் எல்லாம் சொல்ல வேண்டாம் மிதிலா. நீ கேட்டாலே அவர் ஒத்துக்குவார்" என்று சிரித்தான் ஸ்ரீராம்.

"அப்பா, ப்ளீஸ்..."

"உங்களால என்னை காப்பாத்த முடியாது டா. நான் ஜெயில்ல வச்சு கொலை பண்ணிருக்கேன். விஷயம் எவ்வளவு சீரியசானதுன்னு புரிஞ்சுக்கங்க."

"ஆனா, தண்டனையை நம்மால குறைக்க முடியும்" என்றான் ஸ்ரீராம்.

என்ன கூறுவதென்று தெரியாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றார் காமராஜ்.

"மிச்சிருக்கிற காலத்தை, உங்க மகளோடையும் பேரப்பிள்ளைகள் கூடவும் செலவழிக்கணும்னு உங்களுக்கு விருப்பம் இல்லையா?" என்றான் ஸ்ரீராம்.

ஆமாம் என்று மெல்ல தலையசைத்தார் காமராஜ்.

"எங்க கூட கோவாப்ரெட் பண்ணுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்" என்றான் ஸ்ரீராம்.

"நீங்க இந்த கேஸ்ல நேரடியா இன்வால்வ் ஆகாம இருந்தா நான் இதுக்கு ஒத்துக்கறேன்" என்றார் காமராஜ்.

"சரி... என்னோட லாயர் உங்ககிட்ட பேசுவார்"

சரி என்று தலையசைத்தார் காமராஜ். ஸ்ரீராமும் மிதிலாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

அப்பொழுது தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, காமராஜ் கொடுத்த நகை பெட்டியை எடுத்து அவரிடம் கொடுத்தான் ஸ்ரீராம். அந்த டப்பாவை திறந்து அதில் இருந்த தங்கச்சங்கிலியை மிதிலாவிடம் நீட்டினார் காமராஜ். மறுப்பு கூறாமல் அதை வாங்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள் மிதிலா.  அவள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை விட, காமராஜின் முகம் சந்தோஷத்தில் மின்னியது.

"நீ நல்லா இருக்கணும் மா" என்று வாழ்த்தினார்.

அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இருவரும் அலுவலகம் திரும்பினார்கள். வரும் வழி முழுக்க அமைதி காத்தாள் மிதிலா. அவள் மனதில் ஏராளமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. வெகு குறுகிய காலத்தில், அவள் வாழ்க்கையில், நிறைய விஷயங்கள் நடந்தேறி விட்டன. லயாவின் முட்டாள்தனமான நடவடிக்கை... ஸ்ரீராமின் காதல் ஒப்புகை... அவர்கள் தாம்பத்திய வாழ்வின் தொடக்கம்... அவர்களின் பண்ணை வீட்டு தாக்குதல்... வேலாயுதத்தின் மரணம்... அதை செய்தது அவளுடைய தந்தை என்னும் உண்மை...

அவர்கள் அலுவலகம் வந்தடைந்தார்கள். தன் அறைக்கு சென்ற ஸ்ரீராமை பின்தொடர்ந்தாள் மிதிலா. அவள் கதவை சாத்தி தாழிட்டும் சத்தம் கேட்ட ஸ்ரீராம், திரும்பி அவளை கவனித்தான். அவன் எதுவும் கேட்கும் முன், அவனை அணைத்துக் கொண்டு, அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தாள் மிதிலா.

"தேங்க்யூ சோ மச், ஸ்ரீ"

உணர்ச்சிப் பிழம்பாய் காட்சியளித்த மிதிலாவை அவன் கரங்கள் அனிச்சையாய் சுற்றி வளைத்துக் கொண்டன.

"எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்"

"நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டியதில்ல. ஒரு ஹஸ்பென்டா என் கடமையைத் தான் நான் செஞ்சேன். உன்னை கட்டி வச்சிருக்கிற எல்லா பிரச்சனையில இருந்தும் உன்னை ஃப்ரீ பண்ணனும்னு நெனச்சேன்."

தலையை நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்த்தபடி,

"என்னோட அப்பா, தான் ஒரு நல்ல அப்பான்னு நிரூபிச்சிருக்கலாம். ஆனா, அவர் ஒரு நல்ல புருஷன் இல்ல. பெரும்பாலான புருஷங்க அவங்களுடைய கடமையை செய்றது இல்ல. நீங்க ஒரு விதிவிலக்கு. நான் எவ்வளவு நிம்மதியா இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?"

"எனக்கு தெரியும்... நீயும் கூட ஒரு விதிவிலக்கு தான்... யாருக்கும் கிடைக்காத ஒரு தனிப்பிறவி..." என்று சிரித்தான் ஸ்ரீராம்.

"ஆமாம். விசித்திரமான பிறவியும் கூட... உங்களை மாதிரியே" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

"அப்படியா? விசித்திரமான மனுஷன், என்ன வேணா, எங்க வேணா, எப்ப வேணா, எதையும் செய்வான் தெரியுமா?" என்றான் இரட்டை அர்த்தத்தில்.

ஆனால் அவன் எதிர்பார்க்காத விதமாக,

"கதவு சாத்தி தான் இருக்கு... விசித்திரமான வேலை செய்யலாம்" என்றாள் அவன் மீது சாய்ந்து கொண்டு.

"மிதிலா, விஷயத்தோட சீரியஸ்னஸ் தெரியாம விளையாடாத... நீ லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போனா, என்ன நடந்ததுன்னு வெளியில இருக்கிறவங்க ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க... ஜாக்கிரதை" என்று கண்ணடித்தான்.

"நான் லிப்ஸ்டிக் இல்லாம போனா தானே? இந்த லிப்ஸ்டிக்கை உங்களால ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா, அது கிஸ் ப்ரூஃப்... என்னோட ஹஸ்பண்ட் கிஃப்டா கொடுத்தது" என்று அவன் கண்ணத்தை கிள்ளினாள்.

"ஹேய்... இது, அது தானா?" என்றான் உற்சாகமாக, தனது இடது கட்டை விரலால் அவள் உதட்டை தடவியவாறு.

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"இது நிச்சயமா அழியாதா?" என்றான் ஆர்வமாக.

"எனக்கு எப்படி தெரியும்? இந்த லிப்ஸ்டிக்கோட நான் இன்னும் கிஸ் பண்ண படலையே..."

"லிப்ஸ்டிக் இல்லாம மீட்டிங் அட்டென்ட் பண்ணா உனக்கு பரவாயில்லையா?"

அலுவலகத்தில் காதல் காட்சிகளை அரங்கேற்ற வேண்டாம் என்று ஸ்ரீராம் நினைப்பது அவளுக்குப் புரிந்தது. ஒருவேளை அதுவே வழக்கமாகி விடலாம் இல்லையா... அதனால் தான், உதவாக்கரை கேள்விகளை கேட்டு,  நேரத்தைக் கடத்தி கொண்டு இருக்கிறான். ஆனால் மிதிலா வேறு மனநிலையில் இருந்தாள். அவள் ஒரு திட்டத்தோடு வந்திருப்பதாக தோன்றியது.

"இன்னைக்கு நீங்க ரொம்ப பேசுறீங்க"

ஸ்ரீராம் எதுவும் கூறுவதற்கு முன், அவன் உதட்டில் தன் இதழ் பதித்தாள். அவள் இதழ் மட்டும் தான் பதித்தாள்... மீதிக்கதையை ஸ்ரீராம் பார்த்துக் கொண்டான். மனமொத்த முத்தத்தை பகிர்ந்து கொண்ட பின், அவன் நெஞ்சில் சாய்ந்து, அவன் இடையை சுற்றி வளைத்துக்கொண்டாள் மிதிலா.

கூறியே ஆகவேண்டும், கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக், பரீட்சையில் தேறி விட்டது.

"மிதிலா..."

"ம்ம்ம்?" என்றாள் கண்ணைத் திறக்காமல்.

"லிப்ஸ்டிக் அழியல"என்றான் ஸ்ரீராம் முறுவலுடன்.

"எனக்கு தெரியும்" என்றாள் சாதாரணமாய்.

"உனக்கு எப்படி தெரியும்?"

"நீங்க அதை கொடுத்து அனுப்பின அதே நாள், நான் அதை டெஸ்ட் பண்ணிட்டேன்"

"எப்படி?" என்றான் அவளைத் தன் நெஞ்சில் இருந்து பின்னால் இழுத்து.

"இப்படி..." என்று தன் நாக்கால் அதை அழித்து காட்டினாள்.

"அடிப்பாவி..." என்று மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு சிரித்தான் ஸ்ரீராம்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

337K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
422K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...
122K 4.9K 54
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.