காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

40.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Mood boards!

17

809 49 17
By Madhu_dr_cool

அரைமணி நேரத்தில் வாட்சன் ஸ்ட்ரீட்டில் திரும்பி ஒரு புராதன செங்கல்சுவர் காம்ப்பவுண்ட்டை நெருங்கி, அங்கிருந்த இரும்பு கேட்டின் முன்பு நின்றது கார். தாரா கண்களை மூடித்திறந்து ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தாள் வெளியே. அங்கே கண்ட காட்சியில் அப்படியே மெச்சிப்போய் மெய்மறந்துவிட்டாள் அவள்.

ஏதோ பழைய படங்களில் வரும் இங்கிலாந்துத் துரைமார்களின் வீடுபோல இருந்தது அந்த இல்லம். ஆயிரம் மழைகள் பார்த்துப் பாசிப்பச்சை படர்ந்திருந்த சுவர்கள். அகன்ற சாளரங்கள், மரஜன்னல்கள், அவற்றில் படர்ந்திருந்த க்ரோட்டன் கொடிகள். முன்பக்கம் சிறிய புல்வெளி, நடுவே சின்னதாய் நீரூற்று. வாசற்கதவை அடைய நான்கு மார்பிள் படிகள். வாசலின் இருபுறமும் தடிமனான தூண்கள், சற்றே சரிவான தலைவாயில், அதுவும் நாள்பட்ட நிறத்தில். பழமையில் ஊறியிருந்த தோற்றம் என்றாலும், அதில் கம்பீரமும் அழகும் நிறையவே தெரிந்தன. சுற்றிலும் இருந்த கான்க்ரீட் பெட்டி வீடுகளைப் பார்த்தபோது, இது கலையென்றே தோன்றியது. தாராவின் விழிகளிலும் பிரசன்னம் மின்னியது.

காவலாளி வந்து கேட்டைத் திறந்துவிட்டு சல்யூட் அடிக்க, ஆதித் அளவாகத் தலையை அசைத்து அங்கீகரிக்க, கார் முன்னேறிச் சென்றது உள்ளே. ஓட்டுநர் இறங்கி ஆதிக்குக் கதவைத் திறந்துவிட்டுவிட்டு, தாராவின் பக்கம் வர, அதற்குள் அவளே கதவைத் திறந்து இறங்கினாள்.
"பரவால்ல, தேங்க்ஸ்.."

ஓட்டுநர் புன்னகைத்தார்.

அவர் பெட்டிகளை எடுக்கவேண்டி வண்டியின் பின்பக்கம் செல்ல, ஆதித் படியேறி வீட்டினுள் செல்ல, தாரா ஒருகணம் எங்கே செல்லவெனத் தடுமாறி, பின் ஆதியையே பின்தொடர முடிவெடுத்துப் படிக்கட்டுகளில் விரைந்து ஏறினாள்.
வீட்டினுள் நுழைந்தபோது, உயர்ந்த மேற்கூரையை தலைநிமிர்த்திப் பார்த்து வியந்தவாறே உள்ளே நடந்தாள் தாரா. கூடத்தின் அச்சுறுத்தும் பிரம்மாண்டத்தின்முன், தான் மிகவும் குறுகிப்போனதுபோல் உணர்ந்தாள் அவள். அங்காங்கே உயரத்தில் இருந்த ஜன்னல்களையும், கூரையிலிருந்து தொங்கிய சாண்ட்லியர் விளக்கையும் பார்த்துக்கொண்டே அவள் மெல்ல நடந்து வர, ஆதித்தின் வரவறிந்து வீட்டிலிருந்த பணிப்பெண் ஒருவர் பணிவாக வந்துநின்றார். ஆதித் அவரைக்கண்டு தலையசைக்க, அவரைத் பார்த்துத் தயக்கமாகப் புன்னகைத்தாள் தாரா.

அவன் அப்பெண்மணியிடம் பெங்காலியில் ஏதோ கூற, அவர் ஆச்சரியமாகப் பார்த்தார் அவளை. தாரா புரியாத புன்னகையோடே நின்றாள். சற்றே மூத்த பெண்மணியான அவர் வந்து அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு வாஞ்சையாக ஏதோ பேச, மொழி புரியாவிடினும் அவர் பாசம் புரிந்தது அவளுக்கு. அவளும் இனிமையாகத் தலையசைத்து "தேங்க்ஸ்" என்று சிரித்தாள்.
"எனக்கு பெங்காலி புரியல... ஆனாலும் தேங்க்ஸ்."

அப்பெண் தன்னைத்தானே சுட்டிக்காட்டி, "அமார் நாம் இந்திராணி" என்றார் ஒவ்வொரு வார்த்தையாக. அவரது பெயரைத்தான் சொல்கிறார் என்பது புரிந்து, "நான் தாரா" என்றாள் அவளும்.

அதற்குள் தாஸ் அவளது உடைமைகளோடு வந்துவிட, அவரை ஏறிட்ட ஆதித், "கெஸ்ட் ரூம்" எனக் கைகாட்ட, தாராவும் அதைத்தொடர்ந்து விழிகளை செலுத்தினாள். வலதுபுறம் இருந்த காரிடாரில் சென்று முதல் கதவைத் திறந்தார் தாஸ். ஆதித் அறையை நோக்கி நடக்க, தாராவும் அதையே செய்தாள்.

"வீட்ல இருக்கற பெரிய ரூம்கள்ல அதுவும் ஒண்ணு. அங்க தங்கிக்கலாம் நீ. எதாவது வேணும்னா, இப்ப பேசினாங்களே இந்திராணி, அவங்கள்ட்ட கேட்கலாம். சமையல் செய்வாங்க, வீட்டுல பொதுவான வேலை எதாவது இருந்தாலும் செய்வாங்க. ஹவுஸ் கீப்பர் மாதிரி. உனக்கும் அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க."

"ம்ம்.."

வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் உம்கொட்டினாள் அவளும்.

அறையினுள் எட்டிப்பார்த்தபோது, நெடிதுயர்ந்த ஜன்னல்களும், அதில் நீலம், பச்சை, மஞ்சள் என வண்ணமிட்ட கண்ணாடிகளும், அதன்வழியே தெரிந்த தோட்டமும் அரைநொடியில் தாராவைக் கட்டிப்போட்டன. குழந்தைபோலக் குதூகலித்து, அறையினுள் சென்று ஜன்னலைத் திறந்து தலையைக் கம்பிகளில் அழுத்தி வெளியே பார்த்தாள் அவள்.

ஆசைதீர வெளிச்சம் வாங்கிவிட்டு அவள் திருப்தியாகத் திரும்பிட, கட்டிலருகில் அவள் பெட்டியை வைத்துவிட்டு தாஸ் சென்றுவிட, அறையினுள் இருந்த அலமாரியையும் குளியலறைக் கதவையும் திறந்து மூடி சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித். பின் அவளிடம் திரும்பி, தன் சட்டைப்பையிலிருந்து சில அட்டைகளை எடுத்து ஒவ்வொன்றாக நீட்டினான்.

"இது என்னோட கார்ட். என்னோட ஃபோன் நம்பர்ஸ் இதுல இருக்கும். இது என்னோட க்ரெடிட் கார்ட்; மாசம் இருபது லட்சம் வரை யூஸ் பண்ணலாம். இது ஹவுஸ் கார்ட்; ட்ரைவர், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், இவங்க நம்பரெல்லாம் இருக்கு. இது எமர்ஜென்சி கார்ட்; அசிஸ்டன்ட் கமிஷனர், எஸ்.பி, இன்ஸ்பெக்டர் நம்பர்ஸ் எல்லாம் இருக்கு."

சீட்டுக்கட்டுப் போல அவன் கார்டுகளை நீட்ட, அவற்றை கவனமாக வாங்கிக்கொண்டாள் அவள்.

அவள் ஏதும் கேட்குமுன், "வேறெதும் இல்லைல்ல? எனக்கு அவசரமா ஆபிஸ் வரைக்கும் போகணும். நைட் எப்ப வருவேன்னு தெரியாது. இந்திராணி கிட்ட கேட்டா டிபன் தருவாங்க." என்றுவிட்டு அவன் வெளியேற, கையிலிருந்த அட்டைகளையும் கண்மறைந்து செல்கிறவனையும் மாறிமாறிப் பார்த்தவாறு எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றாள் அவள்.

பின் சுதாரித்தவள், தன் பையைத் திறந்து உடைமைகளை அலமாரியில் அடுக்கத் தொடங்கினாள். மத்தியஸ்தர் குடும்பமென்பதால் அளவான எண்ணிக்கையிலான ஆடைகளும், சிற்சில பர்சனல் சாதனங்களும் மட்டுமே இப்போது அவளது சொத்து. அவற்றை அடுக்குவதொன்றும் பெரிய வேலையாக இருக்கவில்லை. பத்து நிமிடத்தில் அதை முடித்தவள், கட்டிலில் அமர்ந்து, கைபேசியில் அம்மாவுக்கு அழைத்தாள்.

ஒரு ரிங் கூட முழுதாகப் போகுமுன் எடுத்துவிட்டார் தேவி.
"தாரா..!" குரல் தழுதழுக்க அவர் கூப்பிட, தாராவிற்கும் கண்கள் கலங்கின.

"அம்மா.. நான் இங்க வீட்டுக்கு வந்துட்டேன். வீடு அழகா இருக்கு. இந்த இடம் பேரு சந்தோஷ்பூராம். நீங்க என்ன பண்றீங்க? தன்னு எங்கே?"

"இதோ, தன்னு இங்கதான் இருக்கான்.. தர்றேன் இரு.. டே.. தாராடா போன்ல! வா சீக்கரம்!"

அரைக்கண இடைவெளிக்குப் பிறகு தன்னுவின் குரல் மூச்சின்றி ஒலித்தது.
"தாரா? தாரா! கொல்கத்தாவுக்கு போயிட்டியா? எப்படி இருக்கு ஊரு?? நம்ம ஆதவன் படத்துல பாத்தோமே..  அதே மாதிரி இருக்கா??"

அவளும் குறையாத உற்சாகத்துடன், "தன்னு!! அப்படியேதான் இருக்கு!! நான் ஹௌரா பிரிட்ஜை பாத்தேன் தெரியுமா?? உனக்கு ஃபோட்டோ அனுப்புறேன்! அப்புறம் ஃப்ளைட்ல கூட ஆதவன் படம்தான் பாத்தேன்! அங்க சிப்ஸ், ஜூஸ் எல்லாம் குடுத்தாங்க தெரியுமா?" என்றாள் உரக்க.

"அம்மா! கேட்டிங்களா, தாரா ஹௌரா ப்ரிட்ஜெல்லாம் பாத்தாளாம்!! ஏரேப்ளேன்ல ஏறி ஜூஸ் குடிச்சாளாம்!!"

தேவியும் அதிசயித்துப் போய் அவளிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க, அனைத்திற்குமே பூரிப்புக் குறையாமல் பதிலளித்தாள் தாராவும். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பேசிய பின்னர், "சரிடி, உங்கப்பா வர்ற நேரமாச்சு, நான் வைக்கறேன்.. தினமும் கூப்பிடும்மா, உடம்பைப் பாத்துக்க, தண்ணியை காய்ச்சியே குடி, சாமி கும்பிடு தினமும். மாப்பிள்ளைய கேட்டதா சொல்லு.. வைச்சுறட்டா?" என்று அழைப்பை வைத்தார்.

கைபேசியை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, தாராவை வெறுமை சூழ்ந்துகொண்டது. ஏனோ கொஞ்சம் சோகமாகவும் இருந்தது. அமைதி பிடிக்காமல் எழுந்து முன்னறைக்கு வந்தாள் அவள்.

கூடத்திலிருந்து தெற்காக நடந்தபோது, உள்ளே மற்றொரு வரவேற்பறையும், அங்கே பிரதானமாக மாடிக்குச் செல்லும் அகன்ற படிக்கட்டுகளும் இருந்ததைப் பார்த்தாள்.
அறையின் இடப்பக்கம் சத்தம் கேட்க, அதைநோக்கிச் சென்றவள் இந்திராணி சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டாள். அவர் கட்டியிருந்த வங்காளத்துப் புடவை தென்னிந்திய பாணியில் இல்லாமல் வித்தியாசமான வடிவில் இருந்ததைக் கவனித்தாள்.

அவள் வந்ததைப் பார்த்ததும், மரியாதையுடன் எழுந்து, "ஆஸுன், ஆமி க்கி கொர்போ? ஆப்னி க்கீ சான்?" என அவர் அடுக்கடுக்காக வினவ, தாரா விழித்தாள். சைகையால் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டு, சந்தேகமாக "பானி?" என்றாள் அவள்.

புரிந்ததாகத் தலையசைத்துவிட்டு, அங்கிருந்த ஆர்.ஓ எனப்படும் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்திலிருந்து ஒரு சில்வர் டம்ளரில் தண்ணீர் பிடித்துத் தந்தார்.

சிறுவாணித் தண்ணீரின் சுவை இல்லாவிடினும், ஒருவித இனிதான சுவையோடுதான் இருந்தது நீர்.

"தேங்க்ஸ்.."

மீண்டும் வெளியே வந்தவள், சமையலறைக்கு அருகிலேயே உணவருந்தும் இடமும் இருப்பதைப் பார்த்தாள். தரைமுதல் கூரைவரை நெடிய கண்ணாடியாலான சுவர் தோட்டத்தைப் பார்த்தவண்ணம் இருக்க, அதனருகிலேயே உணவுமேசையும் போடப்பட்டிருந்தது. உள்ளறைக்கு வலதுபுறம் பழைய சாமான்கள் இருந்த சில அறைகளும், அலுவலக காகிதங்கள் குவிந்திருந்த அறைகளும் இருந்ததைப் பார்த்தாள் அவள்.

மாடியில் என்ன இருக்கிறதெனப் பார்க்க நினைத்து, அவள் படியேறினாள் மெதுவாக. அங்கிருந்த அறைகள் மிகவும் விசாலமாகவும், சகல வசதிகளுடனும் இருப்பதைப் பார்த்துக்கொண்டே நடந்தவள், ஒரு பெரிய கதவைப் பார்த்ததும் நின்றாள். அதுதான் ஆதித்தின் அறை என ஊகித்தவள், கதவை அரை அங்குலம் மட்டும் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். கருநிறத்தில் விரிப்புகள் விரிக்கப்பட்ட ஒரு கிங் சைஸ் கட்டிலும், அதனெதிரில் எழுபத்தி இரண்டு இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் தொலைக்காட்சியும் இருக்க, ஒருபக்க சுவர் முழுவதும் அலமாரிக் கதவுகளாக இருந்தன. மறுபுறம் அவளது அறையைப் போலவே வண்ணக்கண்ணாடிகள் பதித்த ஜன்னலொன்றும் இருக்கக் கண்டாள் அவள்.

கதவை மூடிவிட்டுக் கீழிறங்கி வந்து, பின்வாசல் வழியே தோட்டத்துக்கு இறங்கினாள். கற்றாழைச் செடிகள் சுவரோரமாய் நிறையப் படர்ந்திருக்க, பன்னீர் ரோஜாக்களும் நிறைய இருந்தன அங்கே. செங்கல் பதித்த ஒற்றையடிப் பாதை தோட்டத்தினூடே செல்ல, சில எலுமிச்சை மரங்களும், மூங்கில் குருத்துக்களும் கூட அங்கே இருந்தன. சுற்றி நடந்து முன்பகுதிக்கு வந்தபோது, க்ரோட்டன்ஸ் எனப்படும் கொடிகள் கல்தூண்களைச் சுற்றி அழகாய்ப் பிணைந்து வளர்ந்திருந்திருந்தன. காம்ப்பவுண்ட் சுவரில் மஞ்சள் மலர்கள் பூக்கும் சில கொடிகள் இருந்தன. கேட் அருகே அமர்ந்திருந்த காவலாளி இவளைக் கண்டதும் எழுந்து வணக்கம் வைக்க, அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.

மீண்டும் வீட்டினுள் வந்து, வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். இந்திராணி சமையலறையிலிருந்து வெளியே வந்து, அவளைப் பார்த்து, "ராத்தான் காபார் க்கீ சான்? கி காபார் தொய்ரி கார்தே பாரி?" என ஏதோ கேட்க, தாரா தேமே என விழித்தாள்.

"எனக்குப் புரியலையே..?" தலையை சரித்து மன்னிப்பாக அவள் கேட்டாள்.

"நைட் என்ன டிபன் செய்யணும்னு கேக்கறாங்க" என வாசலில் ஒரு குரல் வர, இருவரும் அத்திசையில் திரும்பினர்.

அவளது வயதொத்த ஆடவன் ஒருவன், கைகட்டி அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தான் வாசலில்.

*****

Hi all! என் இனிய வாசகப் பெருமக்களே!😅🥰😊

நலம், நலமறிய ஆவல். புதுவருடத்திற்கு சற்றே தாமதமாக வாழ்த்துக்கள்😅😄

இன்னும் 'உயிர்வரை தேடிச்சென்று' கதையை முடிக்காமல் இந்தக் கதையைத் தொடர்வது எனக்கே கஷ்டமா தான் இருக்கு.. ஆனா அதை எழுதத் தேவையான திட்டமிடல் நேரமும், எழுத்துக் கோர்வையும் சுட்டுப்போட்டாலும் கிடைக்கறதில்ல இப்போவெல்லாம். அதான், தெரிஞ்ச கான்செப்ட்டை எழுதினா, தெரியாத கான்செப்ட் கொஞ்சம் சுலபமாகும் என்கிற (நப்)ஆசையோடு, இதை எழுதுகிறேன். நீண்ட நாள் காணாமல் போனதாலோ என்னவோ, வாசகர்களும் காணமப் போயிட்டாங்க. ஸோ, இதை வாசிக்கும் வாசகர்கள் கொஞ்சம் தங்கள் நண்பர்களுக்கும் கதையை அறிமுகம் செய்தால் மகிழ்வேன். கதைக்கு எந்தமாதிரி கமெண்ட்ஸ் வந்தாலும் பரவால்ல... கமெண்டுகள் வந்தா மட்டும் போதும்!

அனைவருக்கும் எனது அன்பு.

மது.

Continue Reading

You'll Also Like

36.4K 2.4K 51
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
72.4K 4.3K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
120K 4.9K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
14.3K 680 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...