என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

61 அவன் தான் ஸ்ரீராம்

2.2K 105 12
By NiranjanaNepol

61 அவன் தான் ஸ்ரீராம்

மாலை / ஆனந்த குடில்

"உள்ள வாங்க மாப்பிள்ளை" என்று வாசலில் வந்து நின்ற ஸ்ரீராமை வரவேற்றார் மிதிலாவின் அப்பா ஆனந்தன்.

தன் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தான் ஸ்ரீராம். சமையலறையில் சாந்தாவுடன் பேசிக் கொண்டிருந்த மிதிலா, அவர் கூறியதைக் கேட்டு வெளியே ஓடிவந்தாள். உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான் ஸ்ரீராம்.

"மிதிலா, சாந்தாவை காபி கொண்டுவர சொல்லு" என்றார் ஆனந்தன்.

சரி என்று தலையசைத்துவிட்டு உள்ளே சென்ற மிதிலா, அவள் கூறும் முன்பே பாலைக் காய்ச்ச சாந்தா தொடங்கிவிட்டிருந்ததை கவனித்தாள். ஆனந்தன் கூறியது அவர் காதிலும் விழுந்தது.

"அம்மா, அவர் சக்கரை ரொம்ப குறைச்சலா தான் சேர்த்துக்குவார்" கூறினாள் மிதிலா.

"சரி "

அரை தேக்கரண்டி சர்க்கரை கலந்த காபியை மிதிலாவிடம் கொடுத்தார் சாந்தா. அதைக் கொண்டு வந்து ஸ்ரீராமிடம் கொடுத்தாள் மிதிலா.

"நீங்க இன்னைக்கு லீவுல இருக்கீங்க போலருக்கு" என்றார் ஆனந்தன்

"இல்ல... நான் ஆஃபீசுக்கு தான் போயிட்டு வரேன். ஒரு முக்கியமான டீல் இன்னைக்கு சைன் ஆச்சு" என்று அவருக்கு பதிலளித்தான் ஸ்ரீராம்.

தன் விழிகளை விரித்து ஆச்சரியமாய் அவனை பார்த்தாள் மிதிலா. அதை கவனித்தான் ஸ்ரீராம்.

மிதிலாவின் மாமியார் வீட்டாரிடம் கொடுக்க சொல்லி சில இனிப்பு வகைகளை கொடுத்தார் சாந்தா. அதை பெற்றுக்கொண்டு ஸ்ரீராமுடன் அங்கிருந்து கிளம்பினாள் மிதிலா.

 அவர்களது கார், பூவனம் நோக்கி புறப்பட்டது.

"ஸ்டீஃபன் காண்ட்ராக்ட்டை இன்னிக்கு சைன் பண்ணிங்களா?" என்று கேள்வி எழுப்பினாள் மிதிலா.

"ஆமாம்" என்று பதிலளித்தான் சாலையில் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த ஸ்ரீராம்.

"இன்னைக்கு ஸ்டீஃபன் வர்ற விஷயத்தை நீங்க ஏன் என்கிட்ட சொல்லல?"

"சொன்னா, நானும் ஆஃபீஸ்க்கு வரேன்னு நீ சொல்லுவ... அதனால தான் சொல்லல"

"இதுக்காகத் தான் ஸ்டீஃபன் ஃபைலை பத்தி நேத்து ராத்திரி என்கிட்டே கேட்டீங்களா?"

"ஆமாம். நான் அதை உன்னோட கியூபிகல்ல இருந்து எடுத்துக்கிட்டேன்"

"நீங்க அதை செய்யலாம்... நீங்க தான் பாஸ் ஆச்சே..." என்றாள் வெளியில் பார்த்தபடி.

"உங்க அம்மா, அப்பா ஏதோ பூஜை எல்லாம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதை கேன்சல் பண்ணிட்டு நீ வந்தா அவங்க வருத்தப்படுவாங்க. அதனால தான் உன்கிட்ட நான் சொல்லல"

"ஆனா, நான் தான் அந்த டீலை டீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"இதுக்கு அப்புறமும் நீ தான் அந்த டீலை டீல் பண்ண போற" என்றான் கியரை மாற்றிய படி.

பெருமூச்சுவிட்டாள் மிதிலா.

"நாளைக்கு நம்ம ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான கான்ஃபரன்ஸ் இருக்கு"

"ஓ..."

"நம்மளுடைய எல்லா கிளையன்ட்ஸும் அதில் கலந்துக்க போறாங்க"

"ம்ம்ம்"

அவர்கள் பூவனம் வந்தடைந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்த போது, வழக்கம் போல் கைத்தடியின் உதவியுடன் நடக்க முயன்று கொண்டிருந்தாள் லயா. அவள் ஸ்ரீராமை பார்த்து புன்னகைக்க, அவன் லேசாய் தலையசைத்துவிட்டு மிதிலாவுடன் நடந்தான். வழக்கம் போலவே மிதிலா அதை பற்றி கவலைப்படவில்லை, அவள் ஸ்ரீராமை பார்த்து *மட்டும்* சிரித்த போதும் கூட...

மிதிலா முகம் கழுவிக்கொண்டு வரும் வரை காத்திருந்தான் ஸ்ரீராம்.

"மிதிலா ஒரு நிமிஷம்"

"சொல்லுங்க "

தனது மடிக்கணினியின் பையிலிருந்து ஒரு கோப்பை வெளியில் எடுத்தான்.

"இது ஸ்டீஃபனோட புது காண்ட்ராக்ட் ஃபைல். படிச்சு பாரு"

அவனிடமிருந்து அதை பெற்றுக் கொண்டு சரி என்று தலையசைத்தாள். அவள் அதை உடனடியாக படித்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தான் ஸ்ரீராம். ஆனால் அதை அவள் தன் கை பையில் வைத்துக் கொண்டாள்.

"அதை இப்போ படிக்க போறது இல்லையா?

"நாளைக்கு ஆஃபீஸ்ல படிச்சுகிறேன்"

"இப்போ ஏதாவது வேலை இருக்கா?"

"இல்ல"

"அப்போ, இப்ப படிக்கிறதுல என்ன பிரச்சனை?"

"நான், ப்ரொஃபஷனலையும், பர்சனலையும் கலந்து பார்க்கிறது இல்ல" என்று ஸ்ரீராம் பேசுவது போல அடித்தொண்டையில் பேசினாள் மிதிலா.

ஒரு நொடி திகைத்து நின்ற ஸ்ரீராம், வாய்விட்டு சிரித்தான்.

......

இரவு உணவை சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு வந்த ஸ்ரீராம், ஏதோ யோசித்து மிதிலாவை அழைத்தான்.

"மிதிலா... "

"ஆங்...?"

"எஸ்ஆர்கே வுக்கு பிஏவா இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல, தெரியுமா?" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

"அப்படித் தான் சொல்றாங்க" என்றாள் கிண்டலாக.

"அவன்கிட்ட நல்ல பெயர் எடுக்கணும்னா நீ பர்சனலையும், ப்ரொஃபஷனலையும் கலந்து தான் ஆகணும்"

"அப்படியா?"

"ஆமாம், அவன் ரொம்ப ஸ்ட்ரிக்டாமே"

"என்ன பண்ணுவாரு?" என்றாள் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு.

"அவனால என்ன வேணா செய்ய முடியும்"

"ஏதாவது செய்யட்டும்..." என்றாள் அசட்டையாக.

அது ஸ்ரீராமின் முகத்தில் இருந்த புன்னகையை விரிவடையச் செய்தது.

"ஒரு விஷயம்" என்றாள்.

"என்ன?"

"எஸ்ஆர்கேவுக்கு பிஏவா இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்லன்னு எனக்கு தெரியும். அதே நேரம், எஸ்ஆர்கேவோட பிஏ பொசிஷனுக்கு போறதும் அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல. அது அவருக்கும் தெரியும்" என்றாள்.

புன்னகையுடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள் மிதிலா. எதற்கும் அசராத அவளைப் பார்த்து சிரித்தபடி நின்றான் ஸ்ரீராம். இவள் தனக்கு கொஞ்சமும் சளைத்தவள் அல்ல என்று எண்ணியபடி கட்டிலின் மறுபக்கம் படுத்துக்கொண்டான் ஸ்ரீராம்.

மறுநாள்

ஸ்ரீராமும், மிதிலாவும் எஸ்ஆர் ஃபேஷன்ஸ் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். வரவேற்பில் இருந்த சௌமியாவை பார்த்தவுடன் நின்றாள் மிதிலா.

"குட் மார்னிங் மேடம்" என்ற சௌமியாவை தோளில் ஒரு அடி போட்டாள் மிதிலா.

"கொன்னுடுவேன்..."

"நீங்க இப்ப எங்க பாஸ் ஆச்சே" என்றாள் சௌமியா.

"இப்படியெல்லாம் பேசிகிட்டு இருந்த, உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்" என்றாள் மிதிலா மிரட்டலாக.

"நீ கொஞ்சம் கூட மாறல" என்றாள் சௌமியா.

"நான் ஏன் மாறனும்?"

"எல்லாரும் மாறிடுறாங்க"

"நான் மிதிலா... அதை ஞாபகம் வச்சுக்கோ" என்றபடி உள்ளே சென்ற மிதிலாவை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சௌமியா.

ஸ்ரீராம் தன்னிடம் கொடுத்த ஸ்டீஃபனின் கோப்பை படிக்கத் துவங்கினாள் மிதிலா. அப்பொழுது அங்கு வந்த குகன்,

"மிதிலா மேடம்... " என்று ஏதோ கூற துவங்க,

தன் அருகில் இருந்த பேப்பர் வெயிட்டை கையில் எடுத்துக் கொண்டு, அதை உருட்டியவாறு

"என்னை என்ன சொல்லி கூப்பிட்டீங்க?" என்றாள்.

"அது வந்து..." என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டா, உங்க மண்டையை உடைச்சிடுவேன்"

"சரிங்க மேட..." தன் வாயை கையால் பொத்திக் கொண்டான்

"என்ன விஷயம் சொல்லுங்க"

"நம்ம ஆஃபீஸ்ல இன்னைக்கு ஒரு கான்ஃபரன்ஸ் இருக்கு"

"தெரியும். அவர் சொன்னாரு"

"அவரா? யார் அந்த அவரு?" என்றான் கிண்டலாக.

அவனைப் பார்த்து முறைத்தாள் மிதிலா.

"சரி முறைக்காதீங்க. சீக்கிரம் ரெடியாகுங்க. இல்லனா அவரு என்னை திட்டுவாரு" என்றான் சிரித்தபடி.

"நீங்க போங்க. நான் அவரு வர்றதுக்கு முன்னாடி வந்துடுவேன்." என்று கூறி களுக்கென்று சிரித்தாள் மிதிலா.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கினார்கள். திருமதி சக்கரவர்த்தியும் தனது கணவனுடன் வந்தாள். சில நிமிடங்களில் அந்த கூடம் நிரம்பியது. அப்போது, அங்கிருந்த அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து, புயலென உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம். மிதிலா எதிர்பார்த்திராத வகையில், அவளை அங்கு வந்திருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"என் மனைவி திருமதி மிதிலா ஸ்ரீராமை உங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்"

அந்த அறிமுக உரையை எதிர்பார்க்காத மிதிலா திடுக்கிட்டாள்.

"வெல்கம் மிதிலா..." என்றான் அவளை பார்த்து புன்னகைத்தபடி.

அங்கிருந்த அனைவரும், கரகோஷம் எழுப்பி மிதிலாவை வரவேற்றார்கள்.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நின்று, கரம் கூப்பி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டாள் மிதிலா.

கான்ஃபரன்ஸை தொடங்கினான் ஸ்ரீராம். ஒன்றரை மணி நேரம் கழித்து கான்ஃபரன்ஸ் முடிவுற்றது. ஒவ்வொருவராய் கலைந்து செல்லத் துவங்கினார்கள்.
 
குகன் எதிர்பார்த்தபடியே, திருமதி சக்கரவர்த்தி மட்டும் அங்கேயே நின்றிருந்தாள். அவனுக்கு தெரியும், அவள் எதற்காக காத்திருக்கிறாள் என்று. கான்ஃபரன்ஸ் அறையை விட்டு வெளியே சென்ற மிதிலாவை நோக்கி ஓடி சென்று, அவளை வழிமறித்தான் குகன். திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தாள் மிதிலா. அவள் எதுவும் கேட்கும் முன், தன் உதட்டின் மீது விரலை வைத்து அவளை கத்த வேண்டாம் என்று சைகை செய்தான் குகன்.

"என்ன?" என்றாள் ரகசியமாக மிதிலா.

அந்த மிகப்பெரிய கூடத்தின் வாசலுக்கு வருமாறு அவளுக்கு சைகை செய்தான் குகன். குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த  அந்தக் கூட்டத்திற்கு இரண்டு கதவுகள் இருந்தன. ஒரு கதவைக் கடந்து அடுத்த கதவுக்குள் நுழைய வேண்டும். இரண்டு கதவுகளுக்கும் இடையே நாலடி இடைவெளி இருந்தது. அதனால், அவர்கள் அங்கு இருப்பது, வெளியில் இருப்பவர்களுக்கும் தெரியாது, உள்ளே இருப்பவர்களுக்கும் தெரியாது.

உள் கதவை லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு, மிதிலாவை, உள்ளே நடப்பதை கவனிக்குமாறு சைகை செய்தான் குகன். அவள் மெல்ல உள்ளே எட்டி பார்த்தாள். குகன் எதிர்பார்த்தது போலவே அங்கு நடந்தது. வழக்கம் போலவே ஸ்ரீராமை வழிமறித்து நின்றாள் திருமதி சக்கரவர்த்தி. அவளைப் பார்த்தவுடன் எரிச்சலில் பல்லைக் கடித்தான் ஸ்ரீராம். இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு கலவரம் தெரிந்தது ஸ்ரீராமின் முகத்தில். அவன் அடிக்கடி நுழைவு வாயிலை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது நடந்து கொண்டிருப்பதை, மிதிலா பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தான் அவன்.

"ஹாய் ராமி... உன்னை ஸ்மெல் பண்ற சான்ஸ் எனக்கு இப்போ கிடைக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் வெட்கமில்லாமல்.

தான் அணிந்திருந்த துப்பட்டாவை இறுக்கமாய் பற்றினாள் மிதிலா. என்ன பேசுகிறாள் இந்தப் பெண்? அன்றும் கூட இதைப் பற்றித் தான் அவள் ஸ்ரீராமிடம் பேசினாளா? என்ன பெண் இவள்? அவளுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அதற்கு ஸ்ரீராம் என்ன பதில் கூறப் போகிறான்? ஸ்ரீராம் கூறப் போகும் பதிலைக் கேட்க தயாரானாள் மிதிலா, பயத்துடன்.

"நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன்..." என்று ஸ்ரீராம் ஏதோ கூற போக, அவனைத் தடுத்தாள் திருமதி சக்கரவர்த்தி.

"ஆமாம்... உன்னுடைய வெர்ஜினிடி உனக்கு ரொம்ப முக்கியம்னு சொன்ன. தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் உன் கூட கழிக்க போற அந்த ஒருத்தர்கிட்ட தான் அதை நீ இழப்பேன்னு சொன்ன... இப்போ தான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே... உன் கூட காலம் பூரா வாழ போற அந்த ஒருத்தருக்கு தான் அதை நீ கிஃப்டா கொடுத்திருப்பியே... இப்போ எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமே..." என்றாள் வெகு வெளிப்படையாக.

"என்னுடைய வெர்ஜினிடி எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி என்னுடைய வைஃபும் எனக்கு முக்கியம். அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்... அதே மாதிரி தான் நானும் அவளுக்கு. அப்படின்னா, என்னை ஸ்மெல்  பண்ற உரிமை அவளுக்கு மட்டும் தான் இருக்கு. அவ எப்படி இருக்கணும்னு நான் நினைக்கிறேனோ, அதே மாதிரி தான் நானும் இருப்பேன். இத்தனை நாளா, உங்க புருஷனுக்காக தான் நான் உங்களை பொறுத்துக்கிட்டு போனேன். ஏன்னா, அவரை கஷ்டப் படுத்த வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, இப்போ அதை செய்ய நான் தயங்க மாட்டேன். ஏன்னா, என்னோட வைஃப், எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப முக்கியம்..." அதை அவன் அமைதியாகவும் கூறவில்லை கடுமையாகவும் கூறவில்லை.

"ராமி..."

"நான் சொன்னா சொன்னதை செய்வேன். எல்லாருக்கும் உங்களைப் பத்தியும் தெரியும், என்னை பத்தியும் தெரியும். உங்களுடைய தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுற நிலைமைக்கு என்னை ஆளாகாதீங்க" என்று எச்சரித்தான் ஸ்ரீராம்.

அந்த இடத்தைவிட்டு நகரத் தொடங்கினாள் திருமதி சக்கரவர்த்தி கோபத்துடனும், ஏமாற்றத்துடனும்.
மிதிலாவை அங்கிருந்து அவசரமாய் இழுத்துச் சென்றான் குகன், அவள் தங்களைப் பார்த்து விடுவதற்கு முன்.

குகனின் அறையில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மிதிலா. அவள் அமைதியாய் இருந்தாள் என்பதற்காக அவளது மனமும் அமைதியாக இருந்தது என்று கூறுவதற்கில்லை. அவள் இப்போது எப்படிப்பட்ட உணர்வில் இருக்கிறாள் என்று நமக்குப் புரியவில்லை. தன் கரங்களால் முகத்தை மூடிக்கொண்டாள். அவளது மனம் கனப்பது போலிருந்தது அவளுக்கு. ஸ்ரீராம் ஏற்கனவே தன்னை நிரூபிக்க முயன்றவன் தான்... ஆனால், இது தான் முதல் முறை, அவன் நேரடியாய் ஒரு பெண்ணை தவிர்ப்பதை அவள் பார்ப்பது.

குகன் வந்து அவள் அருகில் அமர்ந்தவுடன், அவள் முகத்தில் இருந்த கரங்கள் தானாய் கீழே இறங்கின. பெயர் கூற முடியாத முகபாவத்துடன் அவனை பார்த்தாள் மிதிலா.

"எஸ்ஆர்கே உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு  சொன்னப்போ, எல்லாரும் அதை எதிர்த்தாங்க. ஆனா, நான் மட்டும் நீங்க அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். ஏன்னா, அவன் உறவுமுறையை எந்த அளவுக்கு மதிக்கிறவன்னு எனக்கு தெரியும். அதனால தான், உங்களை அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் அவன் பக்கம் நின்னேன். சந்தோஷமா இருக்க வேண்டிய வயசுல, அவன் அப்படி இருக்க முடியாம போச்சு. இனிமேலாவது அவன் சந்தோஷமா இருக்கணும். உங்களை தவிர வேற யாருமே அவனுக்கு பெஸ்ட் பார்ட்னரா இருக்க முடியாது. அதே மாதிரி தான் உங்களுக்கு அவனும்..."

"ஆனா அவரைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் மெல்லிய குரலில்.

"நீங்க இந்த கேள்வியை கேட்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. ஏன்னா, எஸ்ஆர்கே எப்பவுமே தன்னுடைய உணர்வுகளை வெளியில காட்டிக்கிறதே இல்ல. ஆனா அதே நேரம், தன்னோட நிலைப்பாட்டை உறுதியா வெளிப்படுத்தவும் அவன் தயங்கியதில்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் செஞ்ச மாதிரி... நான் அதை ஒரு நாள் நேர்ல பார்த்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு கான்ஃபரன்ஸ் நடந்தது. அப்போ..."

{ இந்தியாவின் மிகப் பெரிய வியாபாரிகள் ஒன்று கூடிய மிகப் பெரிய கான்ஃபரன்ஸ் அது. ஸ்ரீராமுக்கு முன்னதாகவே அங்கு சென்று விட்ட குகன், அவனுக்காக காத்திருந்தான். ஸ்ரீராம் வந்துவிட்டதை பார்த்து அவனை நோக்கி சென்ற குகன், திருமதி சக்கரவர்த்தி அவனை தடுத்து நிறுத்துவதை பார்த்து, அவனும் நின்றான். அந்த பெண்மணியின் கணவர் எஸ்ஆர் ஃபேஷன்சுடன் மிகப் பெரிய வியாபார ஒப்பந்தங்களை வைத்திருந்தார். அவர் மீது, தான் கொண்டிருந்த மரியாதை நிமித்தமாக, அவருடைய ஒழுக்கம் கெட்ட மனைவியை பொறுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் ஸ்ரீராம். சுற்றி இருப்பவர் யார் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மேலே விழுந்து பேச தயங்கமாட்டாள் அவள்.

"ஹாய் ராமி" என்று வழக்கம் போல் வழிந்தாள் அவள்.

"ஹலோ" என்றான் ஸ்ரீராம் திடமாய்.

"இன்னைக்கு ராத்திரி டின்னர்க்கு போகலாமா?"

"எனக்கு வேற வேலை இருக்கு"

"எத்தனை நாளைக்குத் தான் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லிக்கிட்டே இருப்பே?"

அங்கிருந்து செல்ல ஸ்ரீராம் நினைத்த போது, அவனது கோட் பாக்கட்டை பற்றி நிறுத்தினாள் அவள். கோபத்துடன் அவளைப் பார்த்தான் ஸ்ரீராம்.

"நேரடியா கேட்கிறேன்... எனக்கு நீ வேணும்... நல்லவனா இருந்து அப்படி என்ன சாதிக்க போற?"

தன் கோட்டை பற்றியிருந்த அவள் கரத்தை விடுவித்தான் ஸ்ரீராம்.

"நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்கு தெரியாது. ஆனா என்னோட வெர்ஜினிடி எனக்கு ரொம்ப முக்கியம். தன்னுடைய வாழ்நாளை மொத்தமா என் கூட கழிக்க போற அந்த ஒருத்தர்கிட்ட தான் அதை நான் இழப்பேன்"

திருமதி சக்கரவர்த்தியை விட அதிகமாய் ஆச்சரியப்பட்டது குகன் தான். ஸ்ரீராம் இன்னும் கன்னித்தன்மையோடு இருப்பது திருமதி சக்கரவர்த்திக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஆனால் குகனுக்கு, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாத ஸ்ரீராம், தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி பேசியது ஆச்சரியமளித்தது. திருமதி சக்கரவர்த்தியை தவிர்க்க வேண்டும் என்று அவன் அதை கூறியதாக தோன்றவில்லை. தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணைக்கு தான் எந்த அளவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் என்பதை அது காட்டியது.

அந்த இடத்தை விட்டு நகர்ந்த ஸ்ரீராமை பின்தொடர்ந்தான் குகன். அதற்குப் பிறகு, அன்று முழுவதும், ஸ்ரீராம், திருமதி சக்கரவர்த்தியை ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை.}

"அன்னைக்கு தான் நான் அவனைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அவன் எந்த அளவுக்கு தன்னுடைய மனைவியை மதிக்க போறான்னு புரிஞ்சிக்கிட்டேன்."

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் மிதிலா.

"அவன் என்ன கேட்கணும்னு நினைக்கிறானோ அதை மட்டும் தான் கேட்பான். ஆனா, நீங்க பேசுன எல்லாத்தையும் கேட்டான். நீங்க அவனை எதிர்த்து பேசினதை கேட்டான், நீங்க சண்டை போட்டதை கேட்டான், அதெல்லாம் அவன் எப்பவும் செஞ்சதே இல்ல. அது தான் மிதிலா உங்களுக்கு இருக்கிற முக்கியத்துவம். போற வழி எப்படிப்பட்டதா இருந்தாலும், போய் சேர்ற இடம் கோவிலா இருக்கணும்னு சொல்லுவாங்க. நீங்க வந்து சேர்ந்திருக்கிற இடம் அப்படிப்பட்டது தான். நீங்க அதை புரிஞ்சுக்கணும் மிதிலா"

"அவரைப் பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும் குகா..." என்றாள் அவனை உறுதியான பார்வை பார்த்து.

அதைக்கேட்டு பிரமித்துப் போனான் குகன். மிதிலாவுக்கு ஏற்கனவே தெரியுமா? எப்படி?

தொடரும்...

Continue Reading

You'll Also Like

188K 5K 126
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
10.3K 1K 29
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
353K 11.1K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
156K 6K 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal