என்னை ஏதோ செய்து விட்டாள்...

Oleh NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... Lebih Banyak

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

36 மிதிலாவுக்கு பிடிக்கும்

2K 104 10
Oleh NiranjanaNepol

36 மிதிலாவுக்கு பிடிக்கும்

ஆனந்த குடில்

தனது பாஸிடம் பேச முடியவில்லை என்ற ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள் மிதிலா. வீட்டிற்கு வந்தவுடன் அவளது சோர்வெல்லாம் காற்றில் பறந்து போனது, ஒன்பது மாத கர்ப்பிணியான அவளது அக்கா பிருந்தாவை அங்கு பார்த்த போது. ஓடிச்சென்று பிருந்தாவை அணைத்துக்கொண்டாள் மிதிலா.

"மெதுவா..." என்று அலறினார் சாந்தா.

"என்னக்கா, சொல்லாம வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கீங்க...!"

"இதுக்கே இப்படின்னா, இன்னும் கூட சர்ப்ரைஸ் இருக்கு..." என்று அவளை பார்த்து கண்ணடித்தாள் பிருந்தா.

"இன்னும் என்ன சர்ப்ரைஸ்? சொல்லுக்கா..."

"அவ நம்ம கூட தான் தங்க போறா" என்றார் சாந்தா.

"நிஜமாவா?" என்று சந்தோஷமாய் குதித்தாள் மிதிலா.

ஆமாம் என்று தலையசைத்தான் பிருந்தாவின் கணவன் சதீஷ்.

"நம்ம அம்மா சாப்பாடு சாப்பிடணும் அப்படிங்கிற என்னோட ஆசையை எங்க வீட்டுக்காரர் புரிஞ்சுகிட்டாரு. அதனால, என்னை கொஞ்ச நாள்  இங்கே இருக்க சொல்லி கூட்டிகிட்டு வந்தாரு" என்ற பிருந்தாவின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.

"சோ ஸ்வீட் ஆஃப் யூ மாமா" என்றாள் மிதிலா.

அவளிடம் ஒரு இனிப்பு டப்பாவை நீட்டினான் சதீஷ்.

"நீங்க ஸ்வீட்டானவர்ன்னு சொன்னேன். அதுக்காக உடனே ஸ்வீட் கொடுத்துட்டிங்களா...?"

"அதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு" என்றாள் பிருந்தா.

"ஏதாவது ஸ்பெஷலா?" என்று கேட்டபடி அந்த இனிப்பு டப்பாவை வாங்கி கொண்டாள் மிதிலா.

"அவருக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. சம்பளம் டபுள் ஆயிடுச்சு..." என்றாள் பிருந்தா சந்தோஷமாக.

தன் கையில் இருந்த இனிப்பு டப்பாவை கீழே வைத்துவிட்டு, தன் கைகளை கட்டிக்கொண்டாள் மிதிலா.

"இது சீட்டிங்... இதை நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கு ட்ரீட் வேணும்" என்றாள்.

"இந்த பிரமோஷன் பர்மனென்ட் ஆச்சினா, நிச்சயமா நான் உனக்கு ட்ரீட் கொடுக்கிறேன்" என்றான் சதிஷ்.

"என்ன சொல்றீங்க நீங்க? இன்னும் உங்க பிரமோஷன் பர்மனென்ட் ஆகலையா?" என்றாள் முகத்தை சுருக்கி.

இல்லை என்று தலையசைத்தான் சதீஷ்.

"அதுக்கு முன்னாடியே ஸ்வீட் கொடுத்திட்டிங்களா?"

"பர்மனென்ட் ஆயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

"ஆல் த பெஸ்ட்" என்றாள் மிதிலா.

அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. இன்னும் நிச்சயமாகாத ஒரு விஷயத்தை, இதற்குள்ளாக ஏன் சதீஷ் கொண்டாட வேண்டும்? அவ்வளவு என்ன அவசரம்? அதை ஏனோ சாதாரணமாக விட்டுவிட முடியவில்லை அவளால். தனது அறைக்குச் சென்று, முகம், கை, கால் கழுவி விட்டு வெளியே வந்தாள். வரவேற்பறையில் சதீஷ் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான்.

"அக்கா எங்க, மாமா?" என்றாள் மிதிலா.

"அத்தையோட கிச்சன்ல இருக்கா"

மிதிலாவும் சமையல் அறைக்கு செல்ல எத்தனித்த போது, அவளை நிறுத்தினான் சதீஷ்.

"ஒரு நிமிஷம் மிதிலா"

"சொல்லுங்க மாமா"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"சொல்லுங்க"

"என்னோட ப்ரமோஷன் பத்தி"

"உங்க பிரமோஷன் பத்தியா?" என்றாள் குழப்பத்துடன்.

"அது உன் கையில தான் இருக்கு மிதிலா"

"என்ன சொல்றீங்க? நான் என்ன செய்ய முடியும்?"

"நீ எதுவும் செய்ய மாட்ட... ஆனா, நிச்சயமா எஸ்ஆர்கே செய்வாரு..."

அதைக் கேட்டு மிதிலா திகிலடைந்தாள்.

"அவர் தான் எனக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்காரு. அது நிலைக்கிறதும், நிலைக்காம போறதும் உன் கையில தான் இருக்கு."

"அவருக்கும் உங்க பிரமோஷனுக்கும் என்ன சம்பந்தம்?"

"இப்போ, அவரும் எங்க கம்பெனியோட ஒரு டைரக்டர். எங்க கம்பெனியோட 40% ஷேர்ஷை அவர் வாங்கிட்டாரு.  அந்த ஷேர்ஸ்ஸோட மதிப்பு, 32 கோடி."

அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மிதிலா. சதீஷ் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. ஸ்ரீராம் கருணாகரன் தனது பலத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

"அது மட்டுமில்ல, அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ சொன்னா, உன்னோட அக்காவை இங்கயிருந்து என்னால கூட்டிக்கிட்டு போக முடியாது..."

"என்ன பேசுறீங்க நீங்க?" அதிர்ந்தாள் மிதிலா.

"எனக்கு கல்யாண வயசுல ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. பிருந்தாவை இங்கிருந்து நான் அழைச்சுக்கிட்டு போனா, எனக்கு வேலை போயிடும்"

"இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல, மாமா..."

"நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன், மிதிலா. எஸ்ஆர்கேவை எதிர்த்து நிற்கிற சக்தி எனக்கு இல்ல. அவர் கூடவே இருக்கிற உன்னை விட, அவருடைய பலத்தைப் பத்தி வேற யாருக்கு தெரியும்? அவர் முன்னாடி யாராவது தைரியமா நிக்க முடியுமா? நான் என் மனைவியை ரொம்ப நேசிக்கிறேன். அது உனக்கும் தெரியும். ஆனா இப்போ, என்னால எதுவுமே செய்ய முடியாது. என்னை தப்பா நினைச்சுக்காத மிதிலா. உன்னோட ஒரே ஒரு பதில், நம்ம எல்லாரையும் சந்தோஷமா வைக்கும். உன்னோட அக்காவும் குழந்தையும் என்னோட சந்தோஷமா, இப்போ இருக்குறதை விட வசதியா இருப்பாங்க. நானும், என் தங்கச்சிக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். இது எல்லாமே உன் கையில தான் இருக்கு. நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். அதே மாதிரி, நீயும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. உன்னுடைய முடிவு, எல்லாத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும். நமக்கு எது நல்லதுன்னு யோசிச்சி முடிவு செய் மிதிலா" என்றான் வருத்தத்துடன்.

பல்லைக் கடித்துக் கொண்டு தலை  குனிந்தாள் மிதிலா.

"இந்த விஷயத்துக்கு அப்பாற்பட்டு, உன்னுடைய மாமாவா, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்பறேன். நம்ம கற்பனைகூட செஞ்சி பார்க்க முடியாத விஷயத்தை தான் இப்போ எஸ்ஆர்கே செய்றாரு. ஆனா அவர் செயலுக்கான காரணத்தை நம்ம ஒதுக்கித் தள்ளிட முடியாது"

அவனை திகைப்புடன் பார்த்தாள் மிதிலா.

"தேவையில்லாத விஷயத்துக்காக இவ்வளவு பணம் செலவு செய்ய மாட்டாரு எஸ்ஆர்கே. இப்போ அவர் வாங்கி இருக்கிற, எங்க கம்பெனியோட ஷேர்ஸ், அவர் கம்பெனிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதது. இதுவரைக்கும், எஸ்ஆர்கே ஃபேஷன் ஃபீல்டை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினது  இல்ல. இப்போ, அதை அவர் செய்யறாரு... உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு..."

ஸ்ரீராம் கருணாகரனின் செயலை, முதல் முறையாக பார்க்கும் சதீஷ், மிதிலாவிற்கு அவனைப் பற்றி விளக்கிக் கூறிக் கொண்டிருக்கிறான்...! என்ன ஒரு வேடிக்கை...! ஸ்ரீராமை பற்றி மிதிலாவுக்கா தெரியாது? அவனை முதல் முறையாக பார்க்கும் சதீஷுக்கே அவனைப் பற்றி இவ்வளவு தெரிகிறது என்றால்... அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது முதல் கொண்டு, அவனை அக்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்து வைத்திருக்கும் மிதிலாவுக்கு எவ்வளவு தெரிந்திருக்கும்?

"என்னை மன்னிச்சிடு மிதிலா. உன்னை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன். எனக்கு ஒரு விஷயம் புரியல... அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை? சென்னையில இருக்கிற மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் அவர். அவர்கிட்ட என்ன இல்ல? அழகு, அந்தஸ்து, படிப்பு, அள்ள அள்ள குறையாத பணம், தொட்டது எல்லாத்தையும் ஜெயிச்சு காட்டும் திறமை, இதை விட வேற என்ன வேணும்? அவர் கொஞ்சம் ரூட் தான். அதுக்கு அப்பாற்பட்டு, அவரை குற்றம் சொல்ற அளவுக்கு அவர்கிட்ட எந்த கெட்ட குணமும் இல்ல. யோசிச்சு பாரு மிதிலா"

மென்று முழுங்கினாள் மிதிலா. தன்னுடைய பிரச்சனையே வேறு என்பதை அவள் எப்படி கூறுவாள்? இயலாமையுடன் நின்றிருந்த மிதிலாவை யோசிக்கவிட்டுச் சென்றான் சதீஷ். இப்படி ஒரு ஆட்டத்தை தன்னிடம் ஸ்ரீராம் ஆடுவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிதிலா.

அவளுக்கு தெரியும், ஸ்ரீராம் கருணாகரன் தோல்வியை விரும்பாதவன். அவனை மணந்து கொள்ள முடியாது என்று அவள் கூறியது, அவனை பொருத்தவரை நிச்சயம் படுதோல்வி தான். அந்தத் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்காக இவ்வளவு பணத்தை ஒருவன் செலவழிப்பானா? ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? இந்த விஷயத்தின் தீவிரம் மிதிலா எதிர்பார்க்காதது. தன் வாழ்க்கையை பற்றிய உண்மையை கூறாமல் எப்படி அவள், அவனை மணந்து கொள்ள முடியும்? திருமணத்திற்கு பிறகு அவன் அதைப் பற்றி தெரிந்து கொண்டால் என்னவாகும்? இது நடக்கக் கூடாது. இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். அவனிடம் பேசுவது தான் இதற்கு ஒரே வழி. நாளை, அவன் அவளிடம் பேசாமல் தப்பிக்க முடியாது. அவள் கூறுவதை அவன் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

படுக்கையில் விழுந்த அவளுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. ஸ்ரீராமை எதிர்த்து நிற்பது என்பது சாதாரண விஷயமல்ல. தான் இறங்கிய விஷயத்தில் வெற்றியடையும் வரை அவன் ஓய மாட்டான். அது எல்லோருக்குமே தெரியும். மிதிலாவின் தலை, வெடித்துவிடும் போலிருந்தது. அவளுடைய அம்மா, எதற்காக அவளிடமிருந்து சத்தியத்தை பெற்றுக்கொண்டார்? தான் ஒரு கொலைகாரனின் மகள் என்பது அவனுக்கு தெரிந்தால், அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்? இந்த சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் கவுரவத்தை அது நிச்சயம் பாதிக்கும். அவனிடம் எப்படி உண்மையை கூறுவது? ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்தாக வேண்டும்.

பூவனம்

இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தான் லக்ஷ்மன். யார் பக்கம் நிற்பது என்று அவனுக்கு புரியவில்லை. ஒருபக்கம், அவனுடைய அண்ணன்... மறுபுறம், அவனுடைய உயிர்த் தோழி...! தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான். யாரிடமாவது மனது விட்டுப் பேசினால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு. அதனால் ஊர்மிளாவுக்கு ஃபோன் செய்தான்.

"ஹாய் ஊரி..."

"என்ன ஆச்சு உனக்கு? குரல் கம்முது?"

"மனசு சரியில்ல..."

"என்ன ஆச்சி?"

"நான் சொன்னா நீ நம்ப மாட்ட"

"நீ முதல்ல விஷயத்தை சொல்லு"

"ஸ்ரீராம் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறான்"

"நெஜமாவா சொல்ற...? என்னால இதை நம்பவே முடியல. மிதிலா, அவளுக்கு பிடிச்சவரையே கல்யாணம் பண்ணிக்க போறாளா? இதுல நீ கஷ்டப்பட என்ன இருக்கு?" என்றாள்.

"இரு... நீ என்ன சொன்ன? மிதிலாவுக்கு ராமுவை பிடிக்குமா?"

"ஆமாம்..."

"இது சுத்தப் பேத்தல்... அவளுடைய டேஸ்ட் என்னன்னு உனக்கு தெரியாதா? ராமு அவள் டைப் இல்ல. அவளுக்கு அவனை பிடிக்காது"

"யார் சொன்னது?" என்ற ஊர்மிளாவின் கேள்வி, லட்சுமன் முகத்தை சுருக்கியது.

"எனக்கு தெரியும். நானே பார்த்திருக்கேன்..." என்றான் லட்சுமணன்.

"அவளுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்னு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..."

"எதை வச்சு சொல்றே?"

"என்கிட்ட பத்து நிமிஷம் பேசினா, அஞ்சு நிமிஷம் அவரைப் பத்தி தானே பேசுறா..."

அதைக் கேட்டு வாயடைத்துப் போனான் லட்சுமன். அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை அவனுக்கு.

"அவரை அவளுக்கு பிடிக்கும். அவரோட டேலண்ட், ஸ்கில், எல்லாம் பிடிக்கும்... அவ இந்த அளவுக்கு, யாரையும் அப்ரிஷியேட் பண்ணி நான் பார்த்ததே இல்ல"

"ஒருவேளை, அவளுக்கு அவனை ப்ரொஃபஷனலா பிடிச்சிருக்கலாம் இல்லையா...?"

"அப்படின்னா அவளுக்கு தர்மராஜ் சாரை பிடிக்காதா? அவர் மிதிலாவை சொந்த மகள் மாதிரி பாத்துக்கிட்டவரு. ஆனா அவரைப் பத்தி அவ இப்படி பேசி நான் பார்த்ததில்லை... அவ்வளவு ஏன், அவளோட அப்பாவை பத்தி கூட அவள் இவ்வளவு பேசினதில்லை..."

"அப்படின்னா மிதிலா ராமுவை விரும்புறான்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லல... ஆனா, அவ நிச்சயம் அவரை வெறுக்கல... நீ அவளைப் பத்தி கவலைப்படாத"

"அப்படியா சொல்ற?"

"ஆமாம்... எப்பவுமே எதிரெதிர் திசைகள் தான் அதிகமா கவர்ந்திழுக்கும்... உங்க அண்ணன் அதிகமா பேச மாட்டார்னு மிதிலா  என்கிட்ட சொல்லி இருக்கா. ஆனா, அவர் மிதிலாகிட்டயும் அப்படித்தான் இருக்காருன்னு நான் நினைக்கல."

"மிதிலாவுக்கு ராமுவை பிடிக்கும்னு என்னால நம்ப முடியல. ஏன்னா, அவன் அவளை நேரடியா இன்சல்ட் பண்ணியிருக்கான்"

"மத்தவங்ககிட்ட இருக்கிற குறையை பூதக்கண்ணாடி வைச்சி பார்க்கிற பழக்கம் மிதிலாவுக்கு கிடையாது. கெட்டதை ஒதுக்கி தள்ளிட்டு, நல்லதை மட்டும் பார்க்கிறவ அவ. அவர்கிட்ட இருக்கிற நல்ல குணங்கள் அவளுக்கு பிடிக்கும்"

"ஆனா, அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளே..."

"அவளைப் பத்தி நமக்குத் தெரியாதா? கிடைக்கிற சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்திகிற பொண்ணு இல்ல அவ. அவருடைய அந்தஸ்தைப் பார்த்து அவ பயப்படலாம்..."

"எனக்கு குழப்பமா இருக்கு"

"நீ அதை விடு. மிதிலா பாத்துக்குவா. உன்னை விட அவ நல்லாவே முடிவெடுப்பா. இன்னொரு விஷயத்தை நீ யோசிச்சு பாரு. நம்ம மூணு பேரும் எப்பவும் ஒன்னாவே இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்...?"

பெருமூச்சுவிட்டான் லட்சுமன்.

"அதே நேரம், உங்க அண்ணனை விட ஒரு நல்ல புருஷன் அவளுக்கு கிடைப்பான்னு உன்னால சொல்ல முடியுமா?"

அமைதியாய் இருந்தான் லட்சுமன். அதை எப்படி அவனால் கூற முடியும்?

"முடியாதுல்ல? அப்படின்னா, அவளை உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சொல்லு. உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணு. மிதிலா நிச்சயம் ஒத்துக்குவா.  ப்ளீஸ் ப்ளீஸ்..."

"நான் யோசிக்கிறேன்"

அழைப்பைத் துண்டித்து விட்டு ஊர்மிளா கூறியதைப் பற்றி யோசித்தான் லக்ஷ்மன்.

மறுநாள்

அலுவலகத்திற்குள் செல்லாமல், பார்க்கிங் லாட்டில், ஸ்ரீராமுக்காக காத்திருந்தாள் மிதிலா. இந்த முறை அவளை ஏமாற்றவில்லை ஸ்ரீராம். அல்லது, அவன் அவளை எதிர்பார்த்திருக்கலாம்...!

அவளைப் பார்த்து, புன்முறுவலுடன் காரை விட்டு இறங்கினான் ஸ்ரீராம்.

"ஹாய்" என்றான்.

"உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்"

அவன் தனது கை கடிகாரத்தை பார்க்க, பத்தாக பத்து நிமிடம் இருந்தது.

"சொல்லுங்க" என்று தன் கைகளை கட்டிக்கொண்டு, காரின் மீது சாய்ந்து கொண்டான்.

"நீங்க இந்த மாதிரி செய்யக்கூடாது"

"எந்த மாதிரி?"

"எதுக்காக எங்க மாமாவை பிளாக்மெயில் பண்ணீங்க?"

"பிளாக்மெயிலா? நீங்க என்ன சொல்றீங்க?" என்றான் அவனுக்கு ஒன்றும் தெரியாததைப் போல.

"நீங்க எப்படி அவரை வேலையை விட்டு தூக்குவேன்னு சொல்லலாம்?"

"அவர் உங்ககிட்ட விஷயத்தை முழுசா சொல்லலைன்னு நினைக்கிறேன். நீங்க ஒரு ஆப்டிமிஸ்டிக்... எல்லா விஷயத்துலயும் நல்லதை மட்டும் பார்க்கிறவங்க. நான் அவருக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்கேன்... இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கேன்... நீங்க ஏன் அதை யோசிக்கல? உங்க மாமாவுக்கு ஹெல்ப் பண்ணதுக்காகவும், உங்க அக்காவுடைய வாழ்க்கையை வசதியா மாத்தினதுக்காகவும், நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன்... நீங்க என்னை ஏமாத்திட்டீங்க, மிதிலா..." என்றான் பொய்யான சலிப்புடன்.

"ஆனா, நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது..."

"சரி, அப்படின்னா என்னை குறை சொல்லாதீங்க... ஏன்னா, முழுக்க முழுக்க நீங்க தான் உங்க அக்காவுடைய சந்தோஷத்தை பறிக்க போறீங்க..."

"எதுக்காக இப்படி எல்லாம் செய்யுறீங்க? என்னுடைய பிரச்சனை உங்களுக்கு புரியல" என்ற அவளது  வேதனை குரல் அவனையும் வேதனைப்படுத்தியது.

அவளுக்கு எதிர் புறம் திரும்பி நின்றான். அவளது கடந்த காலம், அவளது கண்முன் வந்து போனதை அவனால் உணர முடிந்தது.

"எனக்கு எதை பத்தியும் கவலை இல்ல.  நீங்க சொல்ல போற எந்த சாக்கையும் கேட்க நான் தயாரா இல்ல. எனக்கு நீங்க வேணும். அவ்வளவு தான் "

"நீங்க எப்படி என்னை கட்டாயப்படுத்த முடியும்?"

"நான் உங்களை கட்டாயப்படுத்தல. உங்களுக்கு ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கேன். எது வேணும்னு முடிவு பண்ற சுதந்திரம் உங்களுக்கு இருக்கு"

வேதனை பெருமூச்சுவிட்டாள் மிதிலா.

"தயவுசெய்து எங்க அக்கா வாழ்க்கையை கெடுத்துடாதீங்க"

அவளை நோக்கி திரும்பியவன்,

"நீங்க முடியாதுன்னு சொன்னா மட்டும் தான் ( என்பதை அழுத்தி) உங்க அக்கா வாழ்க்கை கெட்டுப் போகும். விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோங்க, மிதிலா"

"நான் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவ..."

 அவள் பேச்சை துண்டித்து,

"நீங்க யாரு... எங்கிருந்து வந்தீங்க... எங்க இருக்கீங்க... அதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்கங்க. நீங்க மிஸஸ் ஸ்ரீராம் ஆனதுக்கு பிறகு, மத்த எல்லாமே காணாம போயிடும்"

"ஆனா, என்னோட மறுபக்கம் உங்களுக்கு தெரியாது..."

தனது கையை காட்டி அவள் பேச்சை தடுத்தான்.

"நம்ம கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சுக்கிறேன்"

"அது நீங்க நினைக்கிற மாதிரி இல்லன்னா என்ன செய்வீங்க?"

"நான் எதுவுமே நினைக்கல. அதனால எதுவும் என்னை பாதிக்காது. அது எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். நான் அதை ஏத்துக்குவேன்"

"இப்படி கட்டாயப்படுத்தி ஏற்படுத்திகிட்ட உறவு, நல்லபடியா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"நமக்கு அதைப் பத்தி பேச, வாழ்நாள் முழுக்க டைம் இருக்கு. ஏன் அவசரப்படுறீங்க?"

அதை கேட்டு திகைத்துப் போனாள் மிதிலா. அவன் ஒரு முடிவோடு தான் இருக்கிறான்.

"ஒருவேளை, கல்யாணத்துக்கு அப்புறம், நான் உங்களை என் புருஷனா ஏத்துக்கலனா என்ன செய்வீங்க?" என்று அவனை மிரட்டி பார்த்தாள் மிதிலா. ஆனால் அவள் மிரட்டுவது யாரை? ஸ்ரீராமையா? சுலபமாய் அவள் வாயை மூடினான் ஸ்ரீராம்.

"அது என்னோட பிரச்சனை. நீங்க ஏன் அதைப் பத்தி கவலைப்படுகிறீங்க?" என்றான், என்னவோ, மிதிலாவுக்கு அதில் சம்பந்தமே இல்லாததைப் போல...

"மணி, பத்து ஆச்சு.  வேலையை பாருங்க..." என்று கூறியபடி புன்னகையுடன் நடந்து சென்றான் ஸ்ரீராம்... மிதிலாவை தவிப்புடன் விட்டு...!

தொடரும்...

Lanjutkan Membaca

Kamu Akan Menyukai Ini

10.7K 1.1K 30
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
129K 6K 25
சொல்லாத அவன் காதல் உணர்வாளா அவள்..
112K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...
25.4K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...