என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

27 பரிசு

2.1K 104 14
By NiranjanaNepol

27 பரிசு

பூவனம்

பரத்தையும், லட்சுமணனையும், வாயைப் பிளந்துகொண்டு நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களது குடும்பத்தினர். ஸ்ரீராம் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறான் என்றால், யாரால் தான் நம்ப முடியும்? வழக்கமாய் பார்ட்டியை பற்றி பேசுபவர்களை திட்டுவது ஸ்ரீராமின் வழக்கம். அவர்களுடைய ராமு, இப்போதெல்லாம்  ராமுவாகவே இல்லை...!

இதற்கு மறைமுகமான ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் என்று எண்ணினாள் நர்மதா.

"அண்ணன், வேலாயுதத்துடைய வீழ்ச்சியை கொண்டாட போறாரு"  என்றான் பரத் சந்தோஷமாக.

"ஆமாம்... வேலாயுதம், நம்ம கம்பெனி ஸ்டாஃபுக்கு லஞ்சம் கொடுத்து டெண்டரை எடுக்க நினைச்சார். அவங்க ரெண்டு பேரையுமே அரெஸ்ட்  பண்ணியாச்சு" என்றான் லக்ஷ்மன்.

"நிஜமாவா?" என்றாள் நர்மதா ஆவலுடன்.

"ஆமாம் கா. மிதிலா தான் அவங்களை கையும் களவுமா பிடிச்சா..."

"மிதிலாவா?" அனைவரும் ஒரே நேரத்தில் அவளது பெயரை கேள்வியாய் எழுப்பினார்கள்.

"ஆமாம்" என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் லக்ஷ்மன் பெருமையுடன்.

"லக்கி, அவங்களை பிடிச்சது மிதிலா... நீ இல்ல..." என்று அவனை கிண்டல் செய்தான் பரத்.

"அதனால என்ன? அவ என்னோட ஃப்ரெண்ட். அவளுடைய எல்லா வெற்றியையும் நான் சந்தோஷமா கொண்டாடுவேன். அவளுடைய எல்லா கஷ்டத்துலயும் அவளுக்கு பக்கத் துணையா இருப்பேன்..." என்றான் லக்ஷ்மன் நல்ல நண்பனாக.

அப்பொழுது, ஸ்ரீராம் உள்ளே வருவதை அவர்கள் கவனித்தார்கள். ஒரு கையில், தனது மடிக்கணினியின் பையையும், மற்றொரு கையில் தனது கோட்டையும் ஏந்தியபடி வந்தான் ஸ்ரீராம். வரவேற்பறை அமைதியானது.

"நாங்க கேள்விப்பட்டது உண்மையா ராமு?" என்றாள் நர்மதா.

"நீங்க என்ன கேள்விபட்டீங்க?" என்றான் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல்.

"நீ பார்ட்டி கொடுக்க போறியாமே"

ஆமாம் என்று தலையசைத்த போதும், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"நான் ஒன்னும் கணவு காணலையே...? என்னங்க, என்னை கொஞ்சம் கிள்ளுங்க" என்று தன் கையை தினேஷிடம் நீட்டினாள் நர்மதா.

தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"இது சாதாரண வெற்றி இல்லக்கா"

"எங்களுக்கு தெரியும் ராமு..." என்றான் தினேஷ்.

"அதுக்காக தான் இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணியிருக்கேன்" என்று கூறி விட்டு தன் அறைக்கு செல்ல முயன்றான்.

"ஆனா, ராமு, வேலாயுதம் உன்னுடைய பிசினஸ் எதிரி மட்டும் இல்ல. நம்ம குடும்பத்தோட சம்பந்தபட்டவர். அப்படி இருக்கும் போது, உன்னோட வெற்றியை எதுக்காக உன்னுடைய கம்பெனி ஆளுங்க கூட மட்டும் கொண்டாடுற? எங்களை அந்த பார்ட்டிக்கு கூப்பிட மாட்டியா? நாங்களும் வேலாயுதம் மாட்டிகிட்டததால சந்தோஷமா தான் இருக்கோம்..." என்றார் புஷ்பா.

வாயடைத்துப் போனான் ஸ்ரீராம். எஸ்ஆர் ஃபேஷன்ஸ்ஸின் பார்ட்டியில் இவர்களா? ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். ஸ்ரீராம் தங்களையும் பார்ட்டிக்கு அழைப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

மறுநாள், எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

மிகப்பெரிய ஃபேஷன் ஷோ நடக்கும் மேடையை போல இருந்தது எஸ்ஆர் ஃபேஷன்ஸ் அலுவலகம். அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்கள், விளம்பரத்தில் வரும் மாடல்களை போல், கண்ணைப் பறிக்கும் ஆடையில் உலா வந்தார்கள்... ஒருத்தியை தவிர, யாருக்காக ஸ்ரீராம் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தானோ, அந்த ஒருத்தியை தவிர, மிதிலா...! அவள் எப்பொழுதும் வருவதைப் போல், இயல்பாய் காட்டன் சுடிதாரில் வந்திருந்தாள். அவள் அப்படி விருப்பமின்றி இருந்ததை பார்த்து ஸ்ரீராமுக்கு வேதனையாய் இருந்தது.

அவர்கள் கைப்பற்றிய அந்த டெண்டர் சம்பந்தமான வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் மிதிலா. அதற்கான முதல் வேலையாய் குகனிடம் அதைப் பற்றி பேச நினைத்தாள். தனது அறையிலிருந்து அவள் வெளியே வந்த போது, பரத்தின் பிஏ ஜீவாவின் மீது மோதிக் கொள்ள போனவள், தடுமாறி கையிலிருந்த கோப்பை தவறவிட்டாள்.

"ஐ அம் சாரி, ஜீவா" என்றாள்.

"பரவாயில்லைங்க மிதிலா"

மிதிலா தவறவிட்ட கோப்பை எடுத்து அவளிடம் கொடுத்தான்,

"தேங்க்யூ சோ மச்" என்றபடி.

"எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?"

"உங்களால தானே எனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு"

"என்னாலயா?"  என்றாள் மிதிலா புரியாமல்.

"ஆமாம். உங்களை, எஸ்ஆர்கே தனக்கு வேணும்னு கேட்டதால தானே, நான் பரத் சாருக்கு பிஏவானேன்... எனக்கு இந்த வேலை கிடைச்சது..."

"ஓ..." என்று புன்னகைத்தாள்.

"முதல் நாளே உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, நீங்க எப்பவும் ஹைகிளாஸ் ஆளுங்க கூடவே இருக்கீங்க..."

அதைக் கேட்டு அதிசயமாய் புருவம் உயர்த்தினாள் மிதிலா.

"அதனால உங்ககிட்ட வந்து பேசவே எனக்கு தயக்கமா இருந்தது. என்னை மாதிரி சாதாரண ஆளுங்ககிட்ட நீங்க பேசுவீங்களோ, மாட்டிங்களோன்னு நெனச்சேன்..."

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல"

"நெஜமாவா?"

"நெஜமா தான்"

"ஃப்ரெண்ட்ஸ்???" என்று தன் கையை நீட்டினான்.

"ஃப்ரெண்ட்ஸ்..." என்று அவன் கையைப் பற்றி குலுக்கினாள் மிதிலா.

"ஓகே ஜீவா, நான் போகணும். வேலை இருக்கு" அங்கிருந்து சென்றாள்.

அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் ஜீவா. அங்கிருந்து செல்ல அவன் திரும்பிய போது, அவன் முகத்தில் இருந்த புன்னகை, வடிந்து போனது. தன் கண்களால் நெருப்பை உமிழிந்தவாறு அவனை பார்த்து முறைத்து நின்றான் ஸ்ரீராம்.

"நீ இங்க ஃப்ரெண்டு பிடிக்கத் தான் உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேனா?" என்றான் காட்டமாக.

"இல்ல சார்" என்று மென்று முழுங்கினான் ஜீவா.

"இது ஆஃபீஸ்... பார்க் இல்ல"

தலைகுனிந்தான் ஜீவா.

"ஒர்க்கிங் ஹவர்ஸ்ல வேலை செய்யாம எங்க சுத்திக்கிட்டு இருக்க?"

"பரத் சார் வர சொன்னாரு"

"அப்போ, அதை செய்"

"எஸ் சார்" அங்கிருந்து அவன் செல்ல நினைத்தபோது,

"இங்க பாரு, தேவையில்லாத விஷயங்கள்ல டைமை வீணாக்குறதை நான் பார்த்தா, உன்னை வேலையை விட்டு தூக்க தயங்கமாட்டேன்... புரிஞ்சுதா?"

"எஸ் சார்" என்று கூறிவிட்டு பரத்தின் அறையை நோக்கி ஓடினான் ஜீவா.

எதற்காக எல்லோரும் மிதிலாவிடமே வழிந்துகொண்டு நிற்கிறார்களோ என்று எரிச்சல் அடைந்தான் ஸ்ரீராம்.
......

"ஹாய், குகா" என்றாள் மிதிலா.

"நான் உங்க மேல ரொம்ப வருத்தத்துல இருக்கேன், மிதிலா" என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு குகன்.

"ஏன்? நான் என்ன செஞ்சேன்?"

"இது தான் நம்ம கம்பெனியோட முதல் பார்ட்டி. அந்த பார்ட்டிக்கு முழு காரணம் நீங்க தான். நீங்க எப்படி வந்திருக்கீங்கன்னு பாருங்க. இப்படியா சிம்பிளா பார்ட்டிக்கு வருவாங்க...? இந்த பார்ட்டியை எல்லாரும் சந்தோஷமா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க, உங்க ஒருத்தரை தவிர..."

"நான் என்ஜாய் பண்ணலைன்னு யார் சொன்னது? வேலை செய்யும் போது வேலை செய்யணும். பார்ட்டி கொண்டாடும் போது பார்ட்டி கொண்டாடணும். அது தான் என்னோட பாலிசி"

"அப்படின்னா?"

"இப்போ நான் டியூட்டியில் இருக்கேன். அதனால வழக்கமா போடுற டிரசை போட்டிருக்கேன். பார்ட்டிக்கு வரும் போது, அதுக்கு தகுந்த மாதிரி  மாறிடுவேன்"

"அப்படியா? அப்படின்னா சூப்பர்..."

"ஆக்சுவலா, ஸாரி எனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது..."

"பார்ட்டிக்கு ஸாரியா கட்ட போறீங்க?"

"ஆமாம்..."

"ஆனா, இது ஒரு ஃபேஷன் கம்பெனியோட பார்ட்டி"

"அதனால என்ன? எல்லாரும் போடுறதையே நானும் ஏன் போடணும்?"

"நியாயமான கேள்வி"

"எனக்கு பிடிச்சதை நான் போட்டுக்குவேன்... மத்தவங்களுக்கு பிடிச்சதை அவங்க போட்டுக்கட்டும்..."

"நீங்க ஒரு தனிப்பிறவி" என்று சிரித்தான் குகன்.

"ரொம்ப தேங்க்ஸ் என்று மிதிலாவும் சிரித்தாள்.

மாலை

பார்ட்டிக்காக வைக்கப்பட்டிருந்த பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை பார்த்து, முகம் சுளித்தான் ஸ்ரீராம். மிதிலாவின் விருப்பப்படி, சாக்லேட் கேக்கை வாங்கியிருப்பான் குகன் என்று நினைத்திருந்தான் அவன். குகனை அழைத்தான்.

"எதுக்காக பிளாக் ஃபாரஸ்ட் கேக் வாங்கின? நீ மிதிலாகிட்ட கேட்கலையா?"

"இது மிதிலாவுடைய சாய்ஸ் தான்"

"ஆனா, அவங்களுக்கு சாக்லேட் கேக் தானே பிடிக்கும்...?"

"அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?"

"ஒரு தடவை, லக்ஷ்மன் அதைப் பத்தி பேசிகிட்டு இருந்தான்"

"ஓஹோ... அவங்க தான் எல்லாரும் விரும்புற காமனான ஃப்ளேவரை வாங்க சொன்னாங்க. ஏன்னா, சாக்லேட் கேக் எல்லாருக்கும் பிடிக்காதுல்ல"

அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தான் ஸ்ரீராம். மிதிலா, தனக்கு பிடித்ததை கூறுவாள் என்று தான் அவளிடம் கேட்க சொன்னான் ஸ்ரீராம். இப்படி அவள் மாற்றி கூறுவாள் என்று தெரிந்திருந்தால், அவனே என்ன வாங்குவது என்று கூறியிருப்பான். உண்மையிலேயே, இந்தப் பெண்ணை வழிக்கு கொண்டு வருவது பிரம்ம பிரயத்தனமாக இருக்கும் என்று தோன்றியது ஸ்ரீராமுக்கு.

அப்பொழுது, ஸ்ரீராமுக்கு நர்மதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. வழக்கம் போல் கால தாமதம் செய்யாமல் அந்த அழைப்பை ஏற்றான் ஸ்ரீராம்.

"சொல்லுங்க கா"

"நான் உன் மேல வருத்தத்துல இருக்கேன்"

"ஏன் கா?"

"நான் இல்லாம நீ பார்ட்டி கொண்டாடுற இல்ல...?"

"இது கம்பெனி பார்ட்டி கா..."

"அதனால என்ன? எங்களை கூப்பிட்டா, உன்னை யார் கேள்வி கேட்க போறது?"

"என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா, எனக்குன்னு சில சட்டதிட்டங்கள் இருக்கு"

"நீயும் உன் சட்டமும்... சரி போகட்டும், இன்னைக்காவது முகத்தை கடுகடுன்னு வச்சுக்காம கொஞ்சம் சிரி. உன்னுடைய முதல் பார்ட்டியை, சிரிச்ச முகமா கொண்டாடு"

"முயற்சி பண்றேன்"

அழைப்பை துண்டித்துவிட்டு தலையை உயர்த்திய ஸ்ரீராம், அடர் இளம் சிவப்பு நிற டிசைனர் புடவை உடுத்தி முற்றிலும் வித்தியாசமாய் வந்த மிதிலாவை பார்த்து பேச்சிழந்து நின்றான்.

அந்த *அடர் இளம் சிவப்பு* நிறத்தை தவிர, அவனை சுற்றி இருந்த மற்ற அனைத்தும் கருப்பாய் போனது. அவனது வாழ்நாளில் பெண்ணையே பார்க்காதவனை போல, அவளை தலை முதல் பாதம் வரை அதிசயமாய் பார்த்து நின்றான். ஸ்ரீராம் பார்க்கும் ஒரே பெண் அவள் தான் என்பது வேறு விஷயம்...!

அவளுக்கு புடவை எவ்வளவு பாந்தமாய் இருந்தது என்று புகழ்ந்து கொண்டிருந்தாள் சௌமியா.

ஸ்ரீராமிடம் வந்த குகன், அவன் எங்கோ தொலைந்து போய் நின்றிருந்ததை கவனித்தான். அவன் கண்கள் நிலைத்து நின்ற திசையை நோக்கி திரும்பியவனுக்கு காரணம் புரிந்து போனது. ஸ்ரீராமின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப இருமினான். குகனைப் பார்த்த ஸ்ரீராம், தன்னை சுதாகரித்துக் கொண்டான்.

"எல்லாம் ரெடியா?" என்றான் ஸ்ரீராம்.

"ரெடி" என்று தன் கையில் இருந்த காகித பையை காட்டினான் குகன்.

சரி என்று திருப்தியுடன் தலையசைத்தான் ஸ்ரீராம்.

"ஆரம்பிக்கலாமா?" என்றான் குகன்.

சரி என்று மறுபடியும் தலையசைத்தான் ஸ்ரீராம். அவனது கண்கள் மீண்டும், மீண்டும் மிதிலாவை வட்டமிட்டு கொண்டிருந்ததை கவனித்தான் குகன்.

"வாவ்..." என்றான் குகன், மிதிலாவை பார்த்தபடி வேண்டுமென்றே.

"என்ன?" என்றான் ஸ்ரீராம்

"நம்ம மிதிலாவா அது? எவ்வளவு அழகா இருக்காங்க...! இரு... இப்ப வரேன்..."

"நீ எங்க போற?"

"அவங்க எவ்வளவு அழகா இருக்காங்கன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாமா?" என்று மிதிலாவை நோக்கி ஓடினான், ஸ்ரீராமின் பதிலுக்கு காத்திராமல்.

குகனைப் பார்த்து புன்னகைத்தாள் மிதிலா.

"நீங்க எனக்கு இப்படி ஹார்ட் அட்டாக் கொடுப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல... என்னை கொன்னுட்டீங்க..." என்றான் தன் இதயத்தை அழுத்திப் பிடித்தபடி.

மயக்கும் புன்னகையை அவன் மீது வீசினாள் மிதிலா. அது, ஸ்ரீராமை தலை முதல் கால் வரை பற்றி ஏரிய வைத்தது. இந்த புத்தி கெட்டவனின் அலப்பறையை நிறுத்த, அவன் சீக்கிரம் பார்ட்டியை ஆரம்பித்தாக வேண்டும்.

அனைவரது கவனமும், கேக் வைக்கப்பட்டிருந்த மேஜையின் அருகில் சென்று நின்ற ஸ்ரீராமின் பக்கம் திரும்பியது. சரளமான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினான் ஸ்ரீராம்.

"இந்த விருந்து உபசார விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது, நமது நிறுவனத்தின் மிக முக்கியமான வெற்றி கொண்டாட்டம். தனது முழு ஈடுபாட்டை கொடுத்து இந்த வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார் எனது பிஏ. அவருக்கு உரிய மரியாதையை வழங்க நான் விரும்புகிறேன்"

மிதிலா மட்டுமல்ல, ஒட்டுமொத்த எஸ்ஆர் ஃபேஷன்ஸ் குழுமமே திகைத்து நின்றது, ஸ்ரீராம் வெளிப்படையாய் ஒருவரை புகழ்வதை பார்த்து.

"மிதிலா... வந்து இந்த கேக்கை கட் பண்ணுங்க" அது நேரடி உத்தரவு தான் என்றாலும், உத்தரவைப் போல் தெரியாமல் மென்மையாய் கூறினான் ஸ்ரீராம்.

தயங்கியபடி நின்றிருந்தாள் மிதிலா. ஸ்ரீராமை பார்த்துக் கொண்டிருந்த குகன், அவனது பார்வை மிதிலாவின் மீது நிலை குத்தி இருந்ததை கவனித்தான். வேறு வழியின்றி, அவன் கூறியதை மிதிலா செய்து தான் ஆகவேண்டும். ஏனென்றால், மற்றவர்களின் முன்னிலையில் அவள் நிச்சயம் அவனை மறுதலிக்க மாட்டாள் அல்லவா...! ஆனால், ஸ்ரீராமே எதிர்பாராத வண்ணம், லக்ஷ்மணன் அவன் உதவிக்கு வந்தான்.

"கமான் மிதிலா... டூ இட்..." என்று அவன் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த, மற்றவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்ய துவங்கினார்கள். அது ஸ்ரீராமின் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது.

ஸ்ரீராமை நோக்கி நடந்தாள் மிதிலா. கேக்கை வெட்டச்சொல்லி, அவன் கத்தியை அவளை நோக்கி நீட்ட, சங்கடத்துடன் அந்த கேக்கை வெட்டினாள். ஒரு சிறிய கேக்கு துண்டை, அவள் ஸ்ரீராமிடம் கொடுக்க, அதை வாங்கி தன் வாயில் போட்டுக் கொண்டான் ஸ்ரீராம் புன்னகையுடன். சற்றே குனிந்து, ஒரு சிறிய துண்டை எடுத்த ஸ்ரீராம், அதை மிதிலாவின் வாயருகில் கொண்டு செல்வதற்கு முன், அவனது எண்ணத்தை புரிந்து கொண்ட மிதிலா, அவன் கையிலிருந்து அதை பெற்றுக் கொண்டாள், ஸ்ரீராமுக்கு ஏமாற்றத்தை அளித்து.

அவன் குகனை பார்க்க, தன் கையில் இருந்த காகித பையை ஸ்ரீராமிடம் கொடுத்தான் குகன். அந்தப் பையில் இருந்து, பளபளப்பான காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு டப்பாவை வெளியில் எடுத்தான் ஸ்ரீராம்.

"இந்த சின்ன கிஃப்ட், உங்களுக்காக..." என்று மிதிலாவிடம் அதை நீட்டினான்.

அது மிதிலாவை  சங்கடத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இதை, ஸ்ரீராம் வேண்டும் என்றே செய்கிறான் என்று புரிந்து போனது மிதிலாவுக்கு. முந்தைய நாள், அவனிடமிருந்து எந்த ஒரு பரிசுப் பொருளையும் பெற விருப்பம் இல்லை என்று அவள் மறுத்தளித்தாள். அதனால் இன்று, அனைவரது முன்னிலையிலும் அதை வழங்கினால், அதை அவள் மறுக்க முடியாது என்று புரிந்து வைத்துகொண்டு இப்போது அளிக்கிறான்.

மிதிலாவின் நிலை இப்படி இருக்க, தனது தோழிக்கு கிடைத்த மரியாதையினால் பெற்ற சந்தோஷத்தில் திளைத்தான் லட்சுமணன். மீண்டும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தான். வேறு வழியின்றி அதை ஸ்ரீராமிடமிருந்து பெற்றுக்கொண்டாள் மிதிலா.

"தேங்க்யூ சார்"

"பிளஷர் இஸ் மைன்..." என்று மர்ம புன்னகை பூத்தான் ஸ்ரீராம்.

பஃபெட் முறையில் உணவு வழங்கப்பட்டது. அவரவர்களுக்கு தேவையான உணவை வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொண்டார்கள். லக்ஷ்மன், பரத், குகனுடன் வழக்கம் போல சேர்ந்து கொண்டாள் மிதிலா. ஸ்ரீராமோ தனியாக அமர்ந்துகொண்டு, புடவையில் ஜொலித்துக் கொண்டிருந்த, தனது உள்ளம் கவர்ந்த பெண்ணை ஆற அமர ரசித்துக் கொண்டிருந்தான். மிதிலா, ஒருமுறை கூட ஸ்ரீராம் இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. அது ஸ்ரீராமை விட குகனுக்கு அதிக கவலையைத் தந்தது. ஸ்ரீராம், மிதிலாவிடம் காதலில் விழுந்துவிட்டான் என்பதில் குகனுக்கு துளியும் சந்தேகமில்லை. அதே நேரம் மிதிலாவுக்கு ஸ்ரீராமின் மீது துளியும் விருப்பம் இல்லை என்பதும் அவனுக்கு உறுதியானது.

ஒவ்வொருவராய் அலுவலகத்தை விட்டு கிளம்பத் துவங்கினார்கள் மிதிலாவும் தனது அறைக்குச் சென்று தனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றாள்.

ஸ்ரீராம் மிகவும் திருப்தி அடைந்தான். அவன் நினைத்தது போலவே எல்லாம் நல்லபடியாய் நடந்துவிட்டது என்று நினைத்தபடி தனது அறைக்கு சென்றவனின் முகம் மாறிப் போனது, அவன் மிதிலாவுக்கு கொடுத்த பரிசை அவனது மேசையின் மீது பார்த்த போது. அதன் அடியில் ஒரு துண்டு சீட்டும் வைக்கபட்டிருந்தது .

"மன்னிக்கவும். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நன்றி!" என்று அதில் எழுதபட்டிருந்தது.

அந்தக் காகிதத்தை கசக்கி, கோபமாய் விட்டெறிந்தான் ஸ்ரீராம்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

90.4K 2.7K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
188K 5K 126
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
250K 9.5K 44
சொல்ல முடியாத காதல்கதை...
112K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...