என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.4K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

23 ராஜகுமாரன்

2K 103 20
By NiranjanaNepol

23 ராஜகுமாரன்

மிதிலாவுக்கு ஃபோன் செய்தாள் நர்மதா. அந்த அழைப்பை உடனடியாக ஏற்றாள் மிதிலா.

"ஹாய் அக்கா, எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன். கோவிலுக்கு வந்திருக்கோம் புது மோதிரத்தோட"

"ரொம்ப சந்தோஷம் கா. கோயிலுக்கு போயிருக்கிங்க. அப்படியே ரொம்ப விரும்புற ஏதாவது ஒன்னை வேண்டிக்கிட்டு வாங்க..."

"நிச்சயமா, மிதிலா..."

"பைனாப்பிள் கேசரி சூப்பர்"

"அடக்கடவுளே, லக்ஷ்மன் அதை உங்களுக்கு கொண்டுவந்து கொடுப்பான்னு தெரிஞ்சிருந்தா, நான் இன்னும் கொஞ்சம் கொடுத்து அனுப்பி இருப்பேனே..."

"இல்லக்கா. அதுவே போதும். அதுக்கே உங்க தம்பிகிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன்..." என்று சிரித்தாள்.

"ஆனா, அவன் தானே அதை உங்களுக்கு கொண்டு வந்தான்...?"

"இல்ல, இல்ல, நான் லக்கியை பத்தி பேசல..."

"அப்போ, நீங்க வேற யாரை பத்தி பேசுறீங்க? "

"வேற யாரு...? ஜூனியரை பத்தி தான்"

"உங்களை ராமுவா திட்டினான்?"

"அவரே தான்..."

"சில சமயம், அவனை புரிஞ்சுக்கவே முடியிறதில்ல"

"எப்பவும் தான்..." என்று அவள் முணுமுணுத்தது நர்மதாவின் காதில் விழுந்தது.

"சரிங்க கா. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன். கொஞ்சம் வேலை இருக்கு"

"ஆமாம்... உங்க சிடுமூஞ்சி பாஸை பத்தி தான் எனக்கு தெரியுமே, நீங்க வேலையை பாருங்க" என்றாள் நர்மதா.

அழைப்பை துண்டித்தாள் மிதிலா. நர்மதாவும் அழைப்பை துண்டித்தாள் தான், ஆனால், அவளது எண்ணம், மிதிலா கூறிய வார்த்தைகளில் இருந்து துண்டிக்கப்பட வில்லை. எப்பொழுதும், அவளுடைய தம்பி அடுத்தவர்களுடைய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவது கிடையாது. நேற்று கூட, பரத் மிதிலாவுக்கு ஜாங்கிரியை ஊட்டிவிட முயன்ற போது, அதை அவன் கையிலிருந்து பிடுங்கி விட்டான் இல்லையா ராமு...!

அதே எண்ணத்துடன் பூஜையை மேற்கொண்டாள் நர்மதா.  ஏற்கனவே பாட்டியிடம் பேசி வைத்ததிருந்தது போல், ஸ்ரீராமின் நலனுக்காகவும் மிக பெரிய பூஜை செய்தாள் நர்மதா. அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான் தினேஷ்.

மிதிலா கூறிய வார்த்தைகளை எண்ணி கொண்டு,

"சீக்கிரமே, தன் தம்பிக்கு, ஒரு நல்ல பெண் கிடைத்து, அவனுக்கு திருமணம் நடக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள் நர்மதா.
.........

வரவேற்பறையில் அமர்ந்திருந்த வரவேற்பாளர் பெண்ணை நோக்கி சென்றாள் மிதிலா, அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக.

"ஹாய், ஐ அம் மிதிலா..." என்றாள் தன் கரத்தை அவளை நோக்கி நீட்டியபடி.

"ஐ அம் சௌமியா" கை குலுக்கினாள்.

"நீங்க உங்க மேரேஜ்காக லீவில் போய் இருக்கிறதா சொன்னாங்க. கங்கிராஜுலேஷன்ஸ்" என்றாள் மிதிலா

"தேங்க்யூ மேடம்"

"மிதிலா மட்டும் போதும்"

"சரிங்க மிதிலா... கங்கிராஜுலேஷன்ஸ். நீங்க தான் எஸ்ஆர்கேவுடைய முதல் பிஏ"

"தேங்க்யூ"

"நீங்க எங்கிருந்து வரீங்க?"

"வில்லிவாக்கம்..."

"அப்படியா நான் ரெட்டை ஏறி"

"ஓ... நம்ம ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா தான் இருக்கோம்"

"என்கிட்ட டூவீலர் இருக்கு. நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஆபீசுக்கு வரலாம்"

சில நொடி யோசித்த மிதிலா,

"சரி... நீங்க பெட்ரோல் அலவன்ஸ் ஷேர் பண்ணிக்கிறதா இருந்தா..."

"அடக் கடவுளே" என்று சிரித்தாள் சௌமியா.

"சரிங்க சௌமியா நான் கிளம்புறேன்"

"சரிங்க மிதிலா..."

அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் மிதிலா. அவளுக்கு சௌமியாவை பிடித்திருந்தது. அவள் மாலினியை போல் இல்லை.

பூவனம்

கோவிலில் பூஜையை முடித்து விட்டு வந்து, தனது அறையில் பாட்டியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் நர்மதா. அப்பொழுது புன்னகைத்தபடி அந்த அறைக்குள் நுழைந்தாள் லயா. நர்மதாவும் அவளைப் பார்த்து பளிச்சென்று சிரித்தாள். அமைதியாய் நர்மதாவை கவனித்துக் கொண்டிருந்தார் பாட்டி.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா லயா?"

"படிக்க ஏதாவது புக்ஸ் கிடைக்குமா?"

"என்ன புக்?"

"போரடிக்குது கா. அதான் படிக்க ஏதாவது புக்ஸ் கிடைக்குமான்னு கேட்டேன். ஏதாவது புக்ஸ் இருக்கா கா?"

"இல்லையே..."

"ஸ்டடி ரூம்ல நிறைய புக்ஸ் பார்த்தேனே..."

"அதெல்லாம் உனக்கு பிடிக்குமான்னு எனக்கு தெரியல... எக்கனாமிக்ஸ், பிசினஸ் சம்பந்தமான புக்ஸ் தான் அங்க இருக்கு"

"அப்படின்னா, அது எல்லாம் ஸ்ரீராமுடைய புக்ஸ் தானே?"

"ஆமாம்..."

"நான் அவரை மாதிரி புத்திசாலியும் இல்ல, எனக்கு அவ்வளவு பொறுமையும் இல்ல."

"லக்ஷ்மன்கிட்ட கேட்டு பாரு அவன்கிட்ட இருக்கலாம்"

"சரிங்க கா" அங்கிருந்து செல்ல எத்தனிந்தவள் சற்று நின்றாள்.

"எனக்கு நீங்க அக்காவா இருந்திருக்கலாம்" என்றாள்.

"ஏன்? "

"நீங்க, உங்க தம்பி மேல வச்சிருக்கிற அன்பையும், அக்கறையையும் பாக்கும் போது, எனக்கு அப்படித் தோணுது"

நர்மதா ஏதும் கூறுவதற்கு முன்,

"உங்களுக்கு தெரியுமா, பிரியா எப்பயுமே என்கிட்ட சண்டை தான் போடுவா. நீங்க உங்க தம்பிக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிறா மாதிரி, அவ என்னைக்குமே நெனச்சது இல்ல. தன்னுடைய லாபத்தை மட்டும் தான் அவ பாப்பா. அதனால தான், உங்களை மாதிரி ஒரு அக்கா எனக்கு இருக்கணும்னு எனக்கு ஏக்கமா இருக்கு"

நர்மதாவின் முகம் மாறியது.

"இன்னைக்கு காலையில, நீங்க செஞ்சிருந்த பைனாப்பிள் கேசரி ரொம்ப பிரமாதமா இருந்தது" என்றாள்.

லேசாய் புன்னகைத்தாள் நர்மதா. லயா அந்த இடத்திலிருந்து கிளம்பி சென்றாள். அவள் நினைத்தாள், நர்மதாவின் மனதில் தான் நிரந்தரமாய் ஒரு இடத்தை பிடித்து விட்டதாக. ஆனால்...

"எனக்கு இந்த பொண்ண பிடிக்கல" என்றார் பாட்டி.

ஆமாம் என்று தலையசைத்தாள் நர்மதா.

"உனக்குமா?"

"ஆமாம்... அவ என்னை புகழ்ந்து பேசணும்னு,  பிரியாவை விட்டு கொடுத்தது எனக்கு சுத்தமா பிடிக்கல."

"ஆமாம். பிரியா நம்ம வீட்டு மருமக. தன்னைப் பத்தி நல்ல எண்ணத்தை ஏற்படுத்தணும்னு, பிரியாவுடைய பெயரை கெடுத்துட்டா இவ. அவ ஒரு சுயநலவாதி"

நர்மதாவின் முகம் வாடிப்போனது.

"இன்னைக்கு பிரியாவை விட்டுக் கொடுத்தவ, நாளைக்கு என்ன வேணாலும் செய்யலாம்..." என்றார் பாட்டி.

அப்போது அவர்கள்,

"நான் சொல்லல?" என்று புஷ்பா கூறுவதைக் கேட்டார்கள்.

"நீ சொன்னது நூறு சதவீதம் உண்மை" என்றார் பாட்டி.

"எனக்கு தெரியும், அவ பிரியாவை மாதிரி நல்ல பொண்ணு இல்ல. அதனால தான், நான் அவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்னு சொன்னேன்" என்றார் புஷ்பா.

"நான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். அவ ராமுவை மடக்க, நம்ம நர்மதாவை குறி வச்சிருக்கா" என்றார் பாட்டி.

பாட்டியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நர்மதா.

"அதனால தான், ராமுவுடைய கல்யாண விஷயத்தில் நர்மதாவை தலையிட வேண்டாம்னு நான் தடுத்தேன். எனக்கு தான் தெரியுமே நம்ம நர்மதாவை பத்தி" என்றார் புஷ்பா.

முகத்தை சுளுக் என்று வைத்துக் கொண்டாள் நர்மதா.

"இப்ப சொல்லு நர்மதா, தன்னுடைய சுயநலத்துக்காக, தன்னோட அக்காவுடைய இமேஜை டேமேஜ் பண்ண பொண்ணு, நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருவான்னு நீ நினைக்கிறாயா?"

இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள் நர்மதா.

"நாளைக்கு நமக்கும் இதே கதி தான்... இல்லன்னு சொல்லுவியா?"

மாட்டேன் என்று சோகமாய் தலையசைத்தாள் நர்மதா.

"வருத்தப்படாத. அவளைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சிடுச்சுன்னு சந்தோஷப்படு"

ஆமாம் என்று தலையசைத்தாள் நர்மதா.

"பாட்டி, உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்" என்றாள் நர்மதா.

பாட்டியும், புஷ்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நம்ம ராமு, மிதிலாகிட்ட பழகுற விதத்தில் வித்தியாசம் காட்டுகிற மாதிரி எனக்கு தெரியுது"

பெருமூச்சு விட்டார் புஷ்பா.

"இப்பவாவது நீ அதை கவனிச்சியே..."

"அப்படின்னா நீங்க அதை முன்னாடியே கவனிச்சீங்களா?"

"எங்களைப் பத்தி நீ என்ன நெனச்ச?"

ஸ்ரீராமுக்கும் மிதிலாவுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றி நர்மதாவின் கூறினார் புஷ்பா.

"நிஜமாத் தான் சொல்றீங்களா? அவங்க பாய்ஃபிரெண்டை பத்தி நம்ம ராமு கேட்டானா?"

ஆமாம் என்று தலையசைத்தார் புஷ்பா.

"கடவுளே.. மிதிலாவுக்கு சுத்தமா விருப்பமே இல்லை போலயிருக்கே... அவங்களுக்கு சுயமரியாதை அதிகம். அவங்ககிட்ட சண்டை போட்டு, தாறுமாறா பேசி, தன்னுடைய பெயரை இவனே கெடுத்துக்கிட்டான்." என்றாள் நர்மதா கவலையாக.

"நீ விடு. ராமு பார்த்துக்குவான்"

"இல்ல சித்தி, அவனுக்கு பொம்பள பசங்ககிட்ட எப்படி பேசணும்னே தெரியாது. நிச்சயமா சொதப்பிடுவான்"

"நீ சொல்றது சரி தான். ஆனா, நம்ம அதுல செய்றதுக்கு ஒன்னுமில்ல. ராமுவுக்கு, ஏதாவது வேணும்னா, அது வேணும் தான்..."

ஸ்ரீராமுக்கு மிதிலாவின் மீது ஏற்பட்டிருந்த ஆர்வத்தையும், மிதிலாவுக்கு ஸ்ரீராம் மீது ஆர்வம் இல்லாததையும் எண்ணி வருத்தப்பட்டாள் நர்மதா.

"நாளைக்கு கூடாரவல்லி... நம்ம கோயிலுக்கு போறோம் தானே...?" என்றார் புஷ்பா.

"அதுல என்ன சந்தேகம் சித்தி? வருஷா வருஷம் நான் விரதம் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா?"

ஆம் என்று தலையசைத்தார் புஷ்பா.

மறுநாள்

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

தேநீர் இடைவேளை

லக்ஷ்மணனும், பரத்தும், குகனுடன் அமர்ந்து, காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்தாள் மிதிலா.

"வாங்க மிதிலா , காப்பி சாப்பிடுங்க" என்றான் பரத்.

அவர்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் மிதிலா.

"இல்ல பரா... நான் இன்னைக்கு விரதம்"

"நீ எப்போதிலிருந்து விரதம் எல்லாம் இருக்க ஆரம்பிச்ச?" என்றான் லட்சுமணன்.

"இன்னைல இருந்து தான்" என்றாள் மிதிலா சிரித்தபடி.

"நீ ஒரு டயாபட்டிக். அது ஞாபகம் இருக்கா?" என்றான் லட்சுமணன்.

"நல்லா ஞாபகம் இருக்கு. நானும் கூட என்னால விரதம் இருக்க முடியாதுன்னு தான் இவ்வளவு நாளா நெனச்சுக்கிட்டு இருந்தேன். சமீபத்துல தான், ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருக்க முடியும்னு தெரிஞ்சிக்கிடேன்" என்றாள்.

அவள் இடிந்து விழ இருந்த பங்களாவில் மாட்டிக் கொண்டு, ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்ததை பற்றிப் பேசுகிறாள் என்று குகனுக்கு மட்டும் புரிந்தது.

"அப்படின்னா நீ இன்னைக்கு எதுவுமே சாப்பிட மாட்டியா?"

"மாட்டேன்... பூஜை முடிச்சிட்டு தான் தண்ணியே குடிப்பேன்"

"ஐயோ பாவம்" என்றான் லக்ஷ்மன் ஒரு பிஸ்கட்டை கடித்தபடி.

"உண்மையை சொல்லுங்க மிதிலா, உங்க அம்மா தானே உங்களை விரதமிருக்க சொல்லி, இன்னைக்கு சாப்பாடு கொடுக்காம விட்டாங்க?" என்று அவளை கிண்டலடித்தான் குகன்.

"உண்மையை சொல்லணும்னா நான் விரதம் இருக்கிறதே அம்மாவுக்கு பிடிக்கல. எனக்கு தான் இருக்கணும்னு தோணுச்சு"

"அப்படி எதுக்கு விரதம் இருக்கணும்னு உனக்கு தோணுச்சு? ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான காரணம் இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றான் லக்ஷ்மன்.

"காரணம் இருக்கு. ஆனா, அது இன்ட்ரஸ்டிங்கா இருக்குமான்னு எனக்கு தெரியல" என்றாள்

"அது என்னன்னு எங்ககிட்ட சொல்ல மாட்டியா?" என்றான் சோகமாக லக்ஷ்மன்.

"சொல்லிடுங்க மிதிலா, இல்லன்னா, சோகத்துல பத்து பூரி தான் சாப்பிடுவான் லட்சுமன்" என்றான் கிண்டலாக குகன்.

"சொல்லுங்க மிதிலா" என்று பரத்தும் கேட்க,

"சரி சொல்றேன். ஆனா, நீங்க யாரும் என்னை கிண்டல் பண்ண கூடாது"

"இல்ல இல்ல இல்ல" என்றார்கள் மூவரும்.

"ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஹஸ்பன்டுடைய பார்ட் ரொம்ப அழகானது. மனைவி அமைவது மட்டும் இறைவன் கொடுத்த வரம் இல்ல... கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். அதனால தான், நல்ல புருஷனை கொடுக்கச் சொல்லி  கடவுளை நைஸ் பண்ணலாமுன்னு விரதம் இருக்கேன்" என்று அவள் சிரிக்க, மூவரும் சிரித்தார்கள்.

"என்னை மாதிரி ஒரு நல்லவன் உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள்" என்றான் லக்ஷ்மன் கடவுளைப் போல் நின்று போஸ் கொடுத்து.

"உன்னை மாதிரி ஒருத்தன் கிடைச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றாள் மிதிலா.

அவர்கள் அனைவரும் கேன்டீனில் இருப்பதைப் பார்த்து, அங்கு வந்த ஸ்ரீராமின் காதில் விழுந்த அந்த வார்த்தைகள், அவனது முகத்தை சுருக்கியது. அப்படி அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வந்தான் அவன்.

இந்த முறை அவனது கவனத்தை கவர்ந்தான் லட்சுமன்.

"மிதிலா, சின்ன வயசுல ஃபேரி டைல்ஸ் கதைகள் படிக்கும் போது, உன்னை கல்யாணம் பண்ணிக்க போற ராஜகுமாரன், குதிரையில் வரணும்னு நீ ஆசைப்பட்டதா உங்க அம்மா சொன்னாங்க. இப்பவும் உனக்கு அந்த ஆசை இருக்கா?" என்றான் கிண்டலாக.

என்ன ஆசை இது? இப்படி கூட யாராவது நடக்காதவற்றை எல்லாம் ஆசை படுவார்களா? என்று நினைத்தான் ஸ்ரீராம்.

"உண்மையா மிதிலா? நீங்க அப்படி எல்லாம் கூட ஆசைப்பட்டு இருக்கீங்களா?" என்றான் குகன் நம்ப முடியாமல்.

ஆமாம் என்று சிரித்தாள் மிதிலா.

"அப்படின்னா எஸ்ஆர்கே க்கு மட்டும் தான் அந்த சான்ஸ் இருக்கு. ஏன்னா, அவனுக்கு மட்டும் தான் ஹார்ஸ் ரைடிங் தெரியும்" என்று குகன் சிரிக்க, மற்றவர்களும் சிரித்தார்கள்.

ஆனால் மிதிலாவின் முகம் மாறிப்போனது. அவள் உதிர்த்த வார்த்தைகள் ஸ்ரீராமை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

"அவரை என் ராஜகுமாரன் கூட கம்பேர் பண்ணாதீங்க. அவர் நிச்சயம் என்னோட ராஜகுமாரன் ஆகவே முடியாது"

"ஏன் மிதிலா?" என்றான் சோகமாக குகன்.

"ஸ்நேகமா சிரிக்க கூட தெரியாத ஒருத்தர் என்னுடைய ராஜகுமாரனா இருக்க முடியாது. என்னுடைய ராஜகுமாரன், தன்னுடைய பலத்தை, தன்னைவிட பலவீனமானவங்க கிட்ட காட்டி, அவங்களை தாழ்வா நடத்த மாட்டான்"

"ஆனா மிதிலா, அண்ணன் அவ்வளவு மோசமானவர் இல்ல" என்றான் பரத்.

"இருக்கட்டும்... அது பெருசா எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது" என்றாள் தன் கரங்களை கூப்பியபடி.

ஸ்ரீராமுக்கு கோபம் கொப்பளித்தது. மிதிலா நேரடியாக அவனை மறுதலித்து இருக்கிறாள். அதே கோபத்துடன் அங்கிருந்து சென்றான் ஸ்ரீராம்.

"நீங்க கோவிலுக்கு போக போறதில்லையா?" என்றான் குகன்

"நிச்சயம் போவேன்"

"அப்படின்னா பர்மிஷன் கேட்க போறீங்களா?"

"வாய்ப்பே இல்ல... மறுபடியும் என்னுடைய அக்ரிமெண்டை பத்தி பேச ஆரம்பிச்சிடுவார் ஜூனியர். ஆஃபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் போவேன்"

"அக்காவும் மாமாவும் கூட போவாங்க." என்றான் லட்சுமணன்.

"பிரியாவும் என்னை வர சொல்லியிருக்கா"  என்றான் பரத்.

"ஓ... " சில நொடி நிறுத்தியவள்,

"டெண்டர் ரிசல்ட் எப்போ?" என்றாள்

"நாளைக்கு... ஹோட்டல் கூல் ஃபயர்ல"

"நீங்க போவீங்களா குகா?"

"அதை எஸ்ஆர்கே தான் முடிவு செய்வான். நீங்க தான் அவனோட போவீங்கன்னு நினைக்கிறேன்"

"ஏன்? "

"டெண்டர் ஏலத்தை நீங்க பாக்கணும்னு அவன் நினைக்கலாம்"

"நிஜமாவா? எனக்கும் கூட பாக்கணும்னு ஆசையா தான் இருக்கு" என்றாள் மிதிலா.

"நான் வேணும்னா அவன்கிட்ட சொல்லட்டுமா?"

"வேண்டாம். அவரே முடிவு பண்ணட்டும்."

"சரி"

அவர்கள் அந்த டெண்டர் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஏன் இருக்காது...? அவர்களுக்கு தெரியாதா, அந்த டெண்டர் ஸ்ரீராமுக்கு எவ்வளவு முக்கியமானது என்று...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

100K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom
112K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...
23.6K 717 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
7.4K 584 9
Now available on Amazon Kindle கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்ல...