என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
11 மிதிலாவின் மறுப்பு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

19 மோதிரம்

2K 103 17
By NiranjanaNepol

19 மோதிரம்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை

இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தாள் நர்மதா. அவளுடைய திருமண மோதிரத்தை காணவில்லை. அவள் தான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவள் ஆயிற்றே...! அவளுக்கு சென்டிமென்ட் விஷயத்தில் அதீத நம்பிக்கை உண்டு. எல்லோரும் மூலை முடுக்கெல்லாம் மும்முரமாய் தேடிகொண்டிருந்தனர்.

"எங்க வச்ச நர்மதா?" என்றார் பாட்டி.

"ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல, மத்த ஜூவெல்ஸ் கூட வச்சேன் பாட்டி. குளிச்சிட்டு வந்து பாத்த போது, ரிங் மட்டும் இல்ல" என்று அழுதாள்.

"அழாதே நர்மதா. தேடி கண்டுபிடிச்சிடலாம்" என்றார் புஷ்பா.

"அக்கா ப்ளீஸ் அழதீங்க" என்று கெஞ்சினான் ஸ்ரீராம்.

"இல்ல ராமு, அது என்னோட வெட்டிங் ரிங். ஏதோ தப்பா தோணுது. தினேஷ்க்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு" என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம். அவனது அக்காவும், அவளது செண்டிமெண்டும்...! அவளை, அவளது வார்த்தைகளை வைத்தே மடக்க நினைத்தான் ஸ்ரீராம்.

"அக்கா, நீங்க தானே சொல்லுவீங்க, நம்ம ஏதாவது ஒன்னை இழந்தா, அதைவிட பெட்டரான ஒன்னை நமக்கு கடவுள் குடுப்பார்னு...?"

"பெட்டரா? என்னோட வெட்டிங் ரிங்கை விட எது பெட்டாரா இருக்க முடியும்?"

"இந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல. உங்க கடவுளை நம்புங்க" என்றான் ஸ்ரீராம்.

"ராமு சொல்றது உண்மை தான் நர்மதா. சீக்கிரமாவே நீ தெரிஞ்சிக்குவ இதுக்கு என்ன காரணம்னு" என்று அவளை சமாதான படுத்த முயன்றார் புஷ்பா.

நர்மதாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றாலும், ஸ்ரீராமை வருத்தபட வைக்க அவள் விரும்பதாதால் சரி என்று தலையசைத்தாள்.

போதுமான அளவிற்கு நர்மதாவை அழ வைத்த பின், மோதிரத்தை அவளிடம் திருப்பித் தந்துவிடுவது என்று முடிவு செய்தாள் லயா. ஆம், அவள் தான் நர்மதாவிடமும், மற்றவர்களிடமும் நல்லெண்ணத்தை பெற, அதை நர்மதாவுக்கு தெரியாமல் திருடி வைத்திருந்தது. அவள் மோதிரத்தை திருப்பி தரும் போது, நர்மதா அவளை வானுயர புகழ போகிறாள்...! மனதார நன்றி தெரிவிக்க போகிறாள்...! அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்ப போகிறது, ஸ்ரீராமையும் சேர்த்து. தன் அக்காவின் சந்தோஷத்தை திரும்ப வரவழைத்ததற்காக ஸ்ரீராம் அவளுக்கு நன்றி கூறுவான். நிச்சயம் இந்த சம்பவம் அவனிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். அவனுடன் தனது நட்புறவை தொடர, இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது. இதற்கு பின் அவளை அவனால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால், இதன் பிறகு,  நிச்சயம் நர்மதா அவள் பக்கம் தான் இருப்பாள். தன் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தால் நர்மதாவால் பொறுக்க முடியாது. இவற்றையெல்லாம் எண்ணியபடி, தன் அறைக்குச் சென்றாள் லயா, மோதிரத்தை கொண்டுவர.

இதற்கிடையில்...

ஸ்ரீராமுடன் ஒரு முக்கியமான விஷயம் பேச, அவனுக்கு ஒரு மணி நேரமாக ஃபோன் செய்துகொண்டிருந்தான் குகன். ஸ்ரீராம் தனது கைபேசியை தன் அறையில் வைத்துவிட்டு, நர்மதாவுடன் இருந்ததால், குகனது அழைப்பை ஏற்கவில்லை. அதனால் லக்ஷ்மனுக்கு ஃபோன் செய்தான் குகன். குகனுக்கு விஷயத்தை கூறினான் லட்சுமன்.

"அக்கா காலையில இருந்து அழுதுக்கிட்டே இருக்காங்க குகா. அதனால எல்லாரும் வருத்தமா இருக்காங்க"

"ஏன்?"

"அக்காவோட வெட்டிங் ரிங்கை காணல"

"அட கடவுளே..." என்று பெருமுச்சிவிட்டான்.

"உனக்கு தெரியாதா, அக்கா எவ்வளவு செண்டிமெண்டல்னு?"

"தெரியும். அப்படின்னா, எஸ்ஆர்கே கிட்ட இப்போ பேசுறது நல்லதில்ல. அவனோட அக்கா அழும் போது அவனுக்கு வேற எதுவுமே பெருசா தெரியாது..." என்றான் குகன்.

"ஆமாம். ராமுவும் அப்செட்டா தான் இருக்கான்"

"அப்போ, நான் அவன்கிட்ட நாளைக்கு பேசிக்குறேன்"

"ஓகே"

சட்டென்று குகனின் மனதில் ஒரு பொறி தட்டியது.

"நர்மதாவை சரிகட்ட உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?" என்றான் குகன்.

"என்கிட்ட ஐடியா இருந்தா, நான் சும்மா இருப்பேன்னு நினைக்குறியா?" என்றான் லட்சுமணன்.

"நிச்சயமா இல்ல... நான் இதுக்கு ஒரு ஐடியா பண்ணறேன்"

"நீயா? ஜோக் பண்ணாதே... நான் சிரிக்குற மூட்ல இல்ல" என்றான் லட்சுமன்.

"சீக்கிரமே நீ சிரிக்க போற...! நீ மட்டும் இல்ல, நர்மதாவும் சிரிப்பாங்க. நடக்குதா இல்லையான்னு பாரு" என்று கூறிவிட்டு, அழைப்பை தூண்டிதான் குகன்.

*இவனுக்கு என்ன பைத்தியமா?* என்பதை போல முகத்தை சுளித்தான் லக்ஷ்மணன்.

ஆனால் குகன் பைத்தியமல்ல. அவனுக்கு தெரியும், எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்று. ஆனால் எல்லாருக்கும் அந்த தீர்வு கிடைத்துவிடாது என்பதும் அவனுக்கு தெரியும். அதனால், எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காணும் திறமை கொண்ட மிதிலாவுக்கு ஃபோன் செய்தான்.

"ஹாய் குகா"

"நீங்க ஃப்ரியா இருக்கீங்களா, மிதிலா?"

"ஃப்ரீயா இருக்கேன்னும் சொல்ல முடியாது. அதே நேரம் இல்லைனும் சொல்ல முடியாது..."

"ஏன் என்னை குழப்புறீங்க?"

"அக்கா வீட்டுக்கு போயிக்கிட்டிருக்கேன்..."

"அட கடவுளே... சரி விடுங்க..." என்ற அவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

"என்னாச்சி குகா?"

"பூவனத்தில் பெரிய பிரச்சனை போலிருக்கு..."

"என்ன பிரச்சனை?" என்றாள் பதட்டத்துடன்.

"லக்ஷ்மணன் சொன்னான், நர்மதா, அவங்களோட வெட்டிங் ரிங்கை தொலைச்சிட்டாங்களாம்."

"அவ்வளவு தானா? நான் எதோ பெரிய பிரச்சனையோன்னு பயந்துட்டேன்."

"பெரிய பிரச்சனை தான். எஸ்ஆர்கே என்னுடைய ஃபோனை எடுக்கவே இல்ல. அவன் எப்பவும் இப்படி இருந்ததில்லை. நர்மதா ரொம்ப சென்டிமென்ட் பாப்பாங்க. அவங்க காலையிலிருந்தே அழுதுகிட்டு இருக்கிறதா லட்சுமன் சொன்னான்"

நர்மதாவுக்காக வருத்தப்பட்டாள் மிதிலா. அவளுக்கு  நர்மதாவை பிடிக்கும். நர்மதா மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாள் அவள். ஸ்ரீராமை சந்தித்த பிறகு, நர்மதாவின் மீதிருந்த மரியாதை அவளுக்கு கூடிப் போனது. நர்மதா தன் தம்பியைப் போல் இல்லை அல்லவா...!

"நெஜமாவா? அவங்களை சமாதானப்படுத்த ஜூனியர் முயற்சி செய்யலையா?"

"பிசினஸ் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா அவன் எப்பவோ முடிச்சிருப்பான். சென்டிமென்ட்னு வந்தா நம்ம ஆளு ரொம்ப வீக். நர்மதாவை சமாதானப்படுத்த அவனுக்கு ஏதாவது ஒரு ஐடியா கிடைச்சிருந்தா, நான் ஃபோன் பண்ணப்போ எடுத்திருப்பான் இல்லையா...?"

"ஆமாம்" என்றாள் மெல்லிய குரலில்.

"பாவம் நர்மதா. ரொம்ப நல்லவங்க. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் ரொம்ப நம்புவாங்க. ஏன் தான் கடவுள் அவங்களை சோதிக்கிறாரோ... யாரையாவது அனுப்பி, கடவுள் அவங்க பிரச்சனையை தீர்க்க கூடாதா..."

ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள் மிதிலா. என்ன கூறுவதென்று அவளுக்குப் புரியவில்லை.

"எங்க அம்மா எப்பவும் சொல்லுவாங்க,  கடவுள் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு தெரிய வச்சா, அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு. இப்போ இதையெல்லாம் நான் உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியல" என்றான் குகன்.

தான் பூவனம் செல்ல வேண்டும் என்று குகன் நினைப்பதை புரிந்து கொள்ளாமல் இல்லை மிதிலா.

"இன்னைக்கு சண்டே... ஜூனியர் வீட்ல இருப்பாரு... இல்லனா, நான் அங்க போவேன்"

"அப்படின்னா இந்த விஷயத்தை உங்களால் தீக்க முடியும்னு நினைக்கிறீங்களா?"

"அது ரொம்ப ஈஸி. சென்டிமென்டான ஆளுங்களை ரொம்ப ஈஸியா கவுத்துடலாம். அதை நான் எங்க அம்மாகிட்டயும் அக்காகிட்டயும் நிறைய தடவை செஞ்சிருக்கேன்..."

"அப்படின்னா, ப்ளீஸ் பூவனம் போயி விஷயத்தை முடிக்க பாருங்களேன்..."

"இல்ல குகா..."

"நீங்க எஸ்ஆர்கே வை நெனச்சி பயப்படுறீங்களா?"

"இல்ல. நான் ஜூனியரை பார்த்து பயப்படல. அவர் என்ன நினைப்பாரோன்னு தான் பயப்படுறேன். என்னோட எண்ணத்தை அவர் தப்பா புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு. அவருக்குத் தான் மிடில்கிளாஸ் ஆளுங்களை பிடிக்காதே"

மிதிலாவுக்காக மட்டுமல்ல, ஸ்ரீராமுக்காகவும் வருத்தப்பட்டான் குகன். என்ன மோசமான சூழ்நிலை இது...?

"எஸ்ஆர்கே வை விடுங்க மிதிலா. நர்மதாவை பத்தி நெனச்சு பாருங்க. அவங்களை மாதிரி நல்லவங்களுக்கு நீங்க உதவலாம் இல்லையா...?"

பெருமூச்சு விட்டாள் மிதிலா.

"சரி, எங்க அக்கா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, நான் புவனம் போறேன்"

"நெஜமா போறீங்களா?

"என்னுடைய ஐடியா வேலை செய்யுமான்னு எனக்கு தெரியல. ஆனா, நர்மதா அக்காவுக்காக நிச்சயம் போறேன்"

"உங்களுக்கு நர்மதாவை பிடிக்குமா?"

"ஆமாம். அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்க தம்பியை மாதிரி இல்ல..." என்று கூறிவிட்டு  சிரித்தாள்.

அவனுக்கு நிம்மதியாக இருந்தது. மிதிலா எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க வல்லவள் என்று அவன் நம்பினான். அதே நேரம், அவள் கூறிய கடைசி வார்த்தைகள் அவனுக்கு உறுத்தலாய் இருந்தது. நர்மதா, ஸ்ரீராமை போல் இல்லை என்பதால் அவளுக்கு நர்மதாவை பிடிக்கிறது. அப்படி என்றால், அவளுக்கு ஸ்ரீராமை பிடிக்காது. அதை நினைத்து கவலைப் பட்டான் குகன்.

பூவனம்

தனது மணிபர்ஸ்ஸில் நர்மதாவின் மோதிரத்தை காணாமல் திடுக்கிட்டாள் லயா. தனது மணிபர்சில் இருந்த அனைத்தையும் கீழே கொட்டி தேடி பார்த்தாள். ஆனால் மோதிரம் இல்லை. அவளுக்கு குப் என்று வியர்த்தது. மோதிரம் எங்கே போனது? அதை தனது மணிபர்சில் வைத்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. அப்படி இருக்கும் பொழுது, அது எங்கே சென்றிருக்க முடியும்? தனது மணிபர்சால் தலையில் அடித்துக் கொண்டாள். எவ்வளவு அருமையான திட்டம்...! நர்மதாவை மடக்கிப் பிடிக்க, இதைவிட ஒரு அருமையான யோசனை அவளுக்கு நிச்சயம் கிட்டப் போவதில்லை. அந்த மோதிரத்தை நர்மதாவிடம் கொடுத்திருந்தால், அவள் லயாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பாள்...! இப்பொழுது அனைத்தும் வீணாகிவிட்டது. ஆனால் மோதிரம் எங்கே? அந்த மோதிரத்தை திருடியது அவள் தான் என்று நர்மதாவிற்கு தெரிந்து விட்டால் என்னாவது? பெயர் கூறமுடியாத பயம், அவள் மனதை ஆட்கொண்டது. நர்மதாவின் தற்போதைய நிலை என்னவென்பதை தெரிந்துகொள்ள, நர்மதாவின் அறைக்குச் சென்றாள் லயா. அங்கு யாரும் இல்லை. அவளை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான் ஸ்ரீராம். அனைவருடனும் சேர்ந்து இருந்தால், அவள் அழாமல் இருப்பாள் என்று நினைத்தான் ஸ்ரீராம்.

வரவேற்பறைக்கு வந்தாள் லயா. பேயறைந்தது போல் இருந்த அவள் முகத்தை பார்த்து, உள்ளூர புன்னகை புரிந்தார் சித்தி புஷ்பா. முதல் நாள், பாட்டியுடன் நர்மதா பேசிக்கொண்டிருந்ததை லயா ஒட்டு கேட்பதை பார்த்தார் புஷ்பா. அவர்கள் பேசிக்கொண்டிருந்தது என்ன என்பது பற்றி நர்மதாவிடம் விசாரித்து தெரிந்து கொண்டார் அவர். லயாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரால் அப்போது புரிந்துகொள்ள முடியாததால், அவள் மீது ஒரு கண் வைப்பது என்று முடிவு செய்தார். நர்மதாவின் அறையிலிருந்து லயா மோதிரத்தை திருடியதை பார்த்த பொழுது, அவளுடைய எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்து போனது புஷ்பாவிற்கு. அதனால், அவளுடைய தந்திரத்தை பின்பற்றி, அவளுடன் தானும் விளையாடுவது என்று முடிவு செய்தார். நர்மதாவுடைய மோதிரத்தை, மற்றவர்களுடன் சேர்ந்து, தானும் தேடுவது போல லயா பாசாங்கு செய்து கொண்டிருந்த போது, அவளுக்கு தெரியாமல் அவளுடைய மணிபர்ஸில் இருந்து அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டார் புஷ்பா. இப்பொழுது, அந்த மோதிரத்தை நர்மதாவிடம் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார் அவர்.

நர்மதாவிடம் மோதிரத்தை திருப்பி கொடுத்து விடுவதை பற்றி புஷ்பா  யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம், அழைப்பு மணியின் ஓசை கேட்டது. சுப்பு கதவை திறக்க, மனதை மயக்கும் புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள் மிதிலா.

புஷ்பாவிற்கு தெரியும் ஸ்ரீராமுக்கும் மிதிலாவிற்கும் இடையில், நல்லிணக்கம் இல்லை என்பது. ஆனால் மிதிலா நல்ல பெண். அவள் லட்சுமனுடன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே புஷ்பாவிற்கு அவளை தெரியும். அவளைப் பார்த்தவுடன், ஏற்கனவே நர்மதாவினால் வருத்தத்தில் இருக்கும் ஸ்ரீராம், கோபம் கொள்வான் என்று நினைத்து, பதட்டத்துடன் ஸ்ரீராமை ஏறிட்டார்.

உள்ளே வந்த மிதிலாவின் மீது ஸ்ரீராமின் பார்வையும் சென்றது. அவளை பார்த்தவுடன் அவனுக்கு ஆச்சரியமாய் போனது. அவன் வீட்டில் இருக்கும் பொழுது, அவள் அங்கு வர மாட்டாள் என்று அவன் நினைத்திருந்தான். முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் போது, தொலைபேசி உரையாடலில் அதை மிதிலாவே நர்மதாவிடம் கூறியதை அவன் கேட்டான் அல்லவா...?

அவளைப் பார்த்தவுடன், அவன் மனம் நிம்மதி அடைந்தது, அவள் அவனை ஏறெடுத்து பார்க்கா விட்டாலும் கூட...! அவன் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், தனது திறத்தினால் மிதிலா நர்மதாவை சமாதானப்படுத்தி விடுவாள் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அவள் தான் எப்போதும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவள் ஆயிற்றே...! மென்மையான புன்னகை அவன் முகத்தில் படர்ந்தது.

மிதிலாவின் மீது அவன் கோபம் கொள்வான் என்று எதிர்பார்த்திருந்த புஷ்பாவிற்கு அதை பார்த்து வியப்பு ஏற்பட்டது. சற்று நேரத்திற்கு முன்பு வரை தவிப்புடன் காணப்பட்ட அவன் முகம், அவளை பார்த்தவுடன் கனிவுற்றுவிட்டது. எதிர் எதிர் துருவங்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணினார் அவர். நர்மதாவிடம் மோதிரத்தை திருப்பி கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டு, அவர்கள் இருவரையும் கவனிப்பது என்று தீர்மானித்தார் புஷ்பா. இப்பொழுது இது தான் முக்கியம். நர்மதாவை பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் அவர்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...
198K 2.1K 15
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!
337K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
141K 4.8K 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம்...