என்னை ஏதோ செய்து விட்டாள்...

By NiranjanaNepol

184K 8.5K 1.1K

அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் க... More

முன்னுரை
1 நேர்காணல்
2 முதல் சந்திப்பு
3 எதிர்பாராதது
4 தான் என்ற அகங்காரம்
5 நேர்மறை எண்ணம்
6 மிதிலாவின் வருகை
7 முதல் பணி
8 இரண்டாம் சவால்
9 எதிர்பாராத தீர்வு
10 ஆத்ம உணர்வு
12 பொறி
13 உள்ளுணர்வு
14 ரசிகை
15 குறி...
16 மிதிலாவின் அணுகுமுறை
17 தொழிலதிபர்கள் கூட்டம்
18 சுழும் திட்டங்கள்
19 மோதிரம்
20 தீர்வு
21 உரிமை...?
22 டீல்
23 ராஜகுமாரன்
24 எதிரி உரைத்த பொய்
25 மிக பெரிய டீல்
26 கொண்டாட்டம்
27 பரிசு
28 எதிர்பாராதது
29 ஸ்ரீராமின் விருப்பம்
30 மிதிலாவின் எதிர்செயல்
31 என்ன உண்மை?
32 கல்லுக்குள் ஈரம்
33 தகிக்கும் கடந்த காலம்
34 சத்தியம்
35 மேலும் இரண்டு புள்ளிகள்...
36 மிதிலாவுக்கு பிடிக்கும்
37 அணுகுமுறை
38 அக்கறை
39 உடன்படிக்கை
40 கைப்பேசி அழைப்பு
41 அதிரடி முடிவு
42 யாராலும் முடியாதது
43 வளைகாப்பு
44 இன்ப அதிர்ச்சி...
45 அன்புச் சங்கிலி...
46 விவாதம்
47 நிச்சயதார்த்தம்
48 பிரியாவின் திட்டம்
49 கறை நல்லது...?
50 விசித்திர உணர்வு
51நெருப்பு
52 தனிந்த நெருப்பு
53 முதலிரவு
54 புனித பந்தம்
55 கடினமல்ல...
56 வலையல்கள்
57 அக்கறை
58 மனமுவந்த மன்னிப்பா?
59 மிதிலாவின் மறு பக்கம்
60 குகனின் திட்டம்
61 அவன் தான் ஸ்ரீராம்
62 மிதிலாவின் அதிரடி...
63 சூழ்ச்சி பொறி
64 அடி மேல் அடி
65 காதல் ஒப்புகை
66 நான் குடிக்கவில்லை
67 முடிந்த கதை...?
68 மிதிலாவின் அப்பா
69 பாரம் இறங்கியது
70 அந்த ஒருத்தி...
71 தாக்குதல்
72 மிதிலாவின் முடிவு
73 வீட்டிலிருந்து வேலை
74 ஏன்?
75 செய்தி
76 கொலையாளி
77 தந்தையும் மகளும்
78 யார் பணம்?
79 வெளிநாட்டு நிகழ்ச்சி
80 இறுதி பகுதி

11 மிதிலாவின் மறுப்பு

2.2K 105 9
By NiranjanaNepol

11 மிதிலாவின் மறுப்பு

தனது கையிலிருந்த காகிதத்தை, தாங்க முடியாத கோபத்துடன் சுக்குநூறாய் கிழித்து எறிந்தாள் மாலினி. அவளைப் பொறுத்தவரை அது காகிதம் அல்ல... மிதிலா. இன்று காலை வரை, யார் வேண்டுமானாலும் ஸ்ரீராமின் அறைக்குள் ஸ்ரீராமின் அனுமதியே கூட இல்லாமல் நுழைந்து விட முடிந்தது. இன்று திடீரென்று அவனுக்கு என்ன ஆனது? எதற்காக அவனுடைய அறைக்குள் நுழைய அனைவரும் அவளுடைய அனுமதியை பெற வேண்டும்? இது அவளுக்கு ஸ்ரீராமிடம் இருந்து கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது என்ன புது சட்டம்? மாலினிக்கு ஸ்ரீராமை பற்றி நன்றாகவே தெரியும். அவனுடைய கடைக்கண் பார்வைக்காக தவமாய் தவம் கிடந்தவள் ஆயிற்றே அவள்... இன்று வரை அதை அவளால் சாதிக்க முடியவில்லையே... ஒரு பெண்ணை தன் அருகில் இருத்திக் கொள்வது என்பது ஸ்ரீராம் ஸ்டைல் அல்ல. ஒருவேளை, ஸ்ரீராம் விழுந்து விட்டானோ? அதை மாலினியால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதற்கு அவள் ஏதாவது செய்தாக வேண்டும்... வெகு சீக்கிரம்... ஸ்ரீராம் முழுவதுமாய் அவள் கையில் இருந்து நழுவி செல்லும் முன்...!

ஸ்ரீராமின் அறை

ஸ்ரீராம் கூறியவற்றை எழுதிக்கொண்டு, எழுந்து நின்றாள் மிதிலா. அப்பொழுது, ஸ்ரீராமின் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தன் உத்தரவை அவள் எந்த அளவிற்கு பின்பற்றுகிறாள் என்று பார்க்க நினைத்தான் ஸ்ரீராம். கதவருகே சென்று, சிறிதளவு மட்டுமே திறந்து, வந்திருப்பது யார் என்று கவனித்தாள் மிதிலா. அங்கு பரத் நின்றுகொண்டிருந்தான். ஸ்ரீராமை நோக்கி தன் பார்வையை திருப்பினாள் மிதிலா.

"பரத் சார் வந்திருக்காரு. காரணம் இல்லாம ஏஎம்டி உங்களை பார்க்க வரமாட்டார்ன்னு நினைக்கிறேன், சார்" என்றாள் கதவை முழுதாய் திறக்காமல்.

அவள் என்ன கூறுகிறாள் என்று  புரியாமல் முகம் சுளித்தான் பரத். ஆம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"யூ கேன் கம் இன், சார்" என்று, பரத் உள்ளே நுழைய இடம் கொடுத்து, அங்கிருந்து சென்றாள் மிதிலா.

பரத்தின் முகபாவத்தை பார்த்து உள்ளூர நகைத்தான் ஸ்ரீராம்.

"அவங்க என்ன சொல்றாங்க, அண்ணா?" என்றான் பரத்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே அதை தெரிஞ்சுக்குவ. என்ன விஷயம் சொல்லு"

"லயாவை பிக்கப் பண்ண, நான் ஏர்போர்ட் போகணும்..."

"அதுக்கு?" என்றான் ஆர்வமில்லாமல்.

"உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தேன்"

ஒன்றும் சொல்லாமல், தலையசைத்தான் ஸ்ரீராம்.

"தேங்க்ஸ் அண்ணா"

அவன் அறையை விட்டு வெளியே வந்தான் பரத்.

.......

ப்யூனை அழைத்து, அவரிடம் சுற்றறிக்கையை வழங்கினாள் மிதிலா.

"இதை எல்லா ஸ்டாஃப்கிட்டயும் கொடுத்து படிக்க சொல்லிட்டு, கையெழுத்து வாங்குங்க"

"சரிங்க, மேடம்"

மிதிலா கூறியபடி அனைவரிடமும் கையெழுத்தை பெறத் தொடங்கினார் ப்யூன். அது ஸ்ரீராமின் உத்தரவு என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்து, ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் வாயை பிளந்தார்கள். ப்யூனை நிறுத்தி, அவர் கொண்டு வந்த சுற்றறிக்கையை வாங்கிப் பார்த்தான் பரத். அவனும் திகைப்படைந்தான். இதைப் பற்றி தான் ஸ்ரீராம் கூறினானா? அப்படி என்றால், தன்னை ஸ்ரீராமின் அரைக்குள் விடுவதை பற்றி தான் மிதிலா கூறினாளா? இங்கு என்ன தான் நடக்கிறது? தலையை பிய்த்துக் கொண்டான் பரத்.

........

மிதிலாவை பற்றி நினைத்தபடி, லோடை எதிர்பார்த்து  நுழைவாயிலில் காத்திருந்தான் குகன். ஸ்ரீராமின் முகத்தில் புன்னகையை வரவழைத்த அந்த பெண்ணை பற்றி...! இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்காமல் தான் அவள் அந்தச் செடிகளை அவன் அறையில் வைத்தாள். குகனுக்கும், ஸ்ரீராமுக்கு இடையிலான மிக நீண்ட நட்பு காலத்தில், இன்று போல் என்றுமே மனது விட்டு ஸ்ரீராம் பேசியதில்லை. அதை சாத்தியமாக்கி இருக்கிறாளே மிதிலா... பலனை எதிர்பார்க்காமல் செய்யும் கடமை நிச்சயம் நல்ல பலனை தான் தரும். அதற்கு, இன்று நடந்த நிகழ்ச்சி தான் உதாரணம். மிகவும் சந்தோஷமாக இருந்தது குகனுக்கு. பொருட்கள் வந்துவிட்டதா என்று பார்க்க, அங்கு வந்த மிதிலாவை பார்த்து சினேகமாய் புன்னகைத்தான் குகன்.

"இன்னும் லோடு வரலையா?"

"அதுக்காகத் தான் காத்திருக்கேன். பை த வே கங்கிராஜுலேஷன்ஸ்"

"எதுக்கு?"

"யாராலயும் சாதிக்க முடியாத ரொம்ப பெரிய விஷயத்தை நீங்க செஞ்சிட்டிங்க"

"என்ன சொல்றீங்க?"

"நீங்க, எஸ்ஆர்கே ரூம்ல, செடி வச்சதை பத்தி சொல்கிறேன்"

"அது என்னோட டியூட்டி"

"அது எஸ்ஆர்கே வை சந்தோஷப்படுத்தியிருக்கு. நீங்க வேணா பாருங்க, ரொம்ப சீக்கிரமே, அவனுக்கு நெருக்கமானவங்கள்ல ஒருத்தரா நீங்க மாற போறீங்க"

"அது நடக்காது" என்றாள் சிறிதும் யோசிக்காமல்.

"ஆனா, ஏன்?"

"அவர் என்னோட பாஸ். நான் அவருடைய பிஏ. அவ்வளவு தான். அதுக்கு மேல அங்க நெருக்கத்துக்கு இடமில்ல"

"நீங்க  செஞ்சது உங்க கடமையா இருக்கலாம், ஆனா, எஸ்ஆர்கே வை பொருத்தவரை..."

அவன் பேசுவதை இடைமறித்தாள்.

"அவரைப் பொருத்தவரை எதுவா வேணாலும் இருக்கட்டும். அவருக்கு நெருக்கமானவளா இருக்கிறதுல எனக்கு விருப்பமில்ல"

"ஏன் மிதிலா?" என்றான் ஏமாற்றத்துடன்.

"மத்தவங்களை, அவங்க ஸ்டேட்டஸ்ஸை வச்சி நடத்துற ஒருத்தர், அவங்களை இன்சல்ட் பண்ண தயங்காத ஒருத்தர் எனக்கு நெருக்கமானவரா இருக்க முடியாது"

அதைக்கேட்டு அதிர்ந்தான் குகன்.

"நான் அவரை குறை சொல்லல. எல்லாரும் நம்மள மாதிரியே இருக்கணும்னு நம்ம எதிர்பார்க்க முடியாது. நான் அவருக்கு நெருக்கமானவளா இருக்கவும் விரும்பல, அவரை விமர்சிக்கவும் விரும்பல. அவர் என்னுடைய பாஸ். என்னுடைய கடமையை நான் செய்வேன். அவர் கூட நெருங்கி பழக நான் விரும்பல" என்றாள் சர்வ சாதாரணமாக.

குகனுக்கு வருத்தமாய் இருந்தது. அவள் சாதாரணமாகத் தான் பேசினாள் என்றாலும், அவள் குரலில் இருந்த அதிருப்தியை அவனால் உணர முடிந்தது. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே அவனுக்குப் புரியவில்லை. ஏனென்றால், அவள் கூறியது எதுவும் தவறில்லையே. அதே நேரம், லோடும் வந்து விடவே அதை கவனிக்கத் துவங்கினான் குகன்.

அவர்கள் பேசியதை வேறு ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாது. அதைக் கேட்டுக் கொண்டிருந்தது, அந்த கம்பெனியின் ஊழியர்களால் சிசிடிவி கேமரா என்று அழைக்கப்படும் நமது ஸ்ரீராம் தான்.

அதைக் கேட்டு அவன் ரத்தம் கொதித்தது என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அவள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும், அவன் கன்னத்தில் விழுந்த கண்ணுக்குத் தெரியாத அறை. அவனுடன் நெருங்கி பழக, தான் விரும்பவில்லை என்று மிதிலா கூறியது போல கூற, இதுவரை ஒருவர் துணிந்ததில்லை. அவனை சந்தித்து பேச, மாதக் கணக்காய் காத்திருக்கும் பிரபலங்கள் ஏராளம். இவளுக்கு எவ்வளவு தைரியம்...! ஆனால், இது தைரியம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல... அதற்கு அப்பாற்பட்டது...!

ஒரு விதத்தில் ஸ்ரீராமுக்கு சந்தோஷம் கூடத் தான். அவனால் செய்ய முடியாது என்று ஒருவர் கூறியதை செய்துகாட்ட அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது அல்லவா...! சவால்கள் அவனுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. சவால்கள் தான் வாழ்க்கையை கிளர்ச்சியுடனும், சிலிர்ப்புடனும் வைக்கிறது. அது தான் அவனுடைய கருத்து. மிதிலா வித்தியாசமானவள் என்பதில் அவனுக்கு சிறிதும் ஐயமில்லை. ஆனால், அவளுடைய அதீத தைரியமும், மனதில் பட்டதை பேசத் தயங்காத நேர்மையும், அவனை அசைத்து பார்த்தது. இப்படிப்பட்ட நேர்படப் பேசும் துணிவை அவன் எவரிடமும் கண்டதில்லை. தன்னுடைய நட்பை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு துணிச்சலை அவன் சந்தித்ததில்லை. ஆனால், அவன் ஸ்ரீராம் கருணாகரன். விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுவானா என்ன? தன்னிடம் அவளை எப்படி நிறுத்திக் கொள்வது என்று அவனுக்கு தெரியாதா?

விறுவிறுவென தன் அறைக்கு நடந்தவன், குகனுக்கு ஃபோன் செய்தான்.

"மிஸ் ஆனந்த் நம்பரை எனக்கு டெக்ஸ்ட் பண்ணு"

தனக்கு வெகு அருகில், தொட்டுவிடும் தூரத்தில் நின்றிருந்த மிதிலாவை பார்த்தான் குகன்.

"அவங்க இங்க தான் இருக்காங்க. நான் ஃபோனை கொடுக்கட்டுமா?"

"நான் ஒவ்வொரு தடவை ஃபோன் பண்ணும் போதும், உன்னுடைய ஃபோனை தூக்கிக்கிட்டு ஓடுவியா? சொன்னத செய்" என்று அழைப்பை துண்டித்தான்.

மிஸ் ஆனந்தின் நம்பரை அவனுக்கு புன்னகையுடன் அனுப்பி வைத்தான் குகன். குகனின் குறுஞ்செய்தியை தாங்கி வந்து சப்தமிட்டது ஸ்ரீராமின் கைபேசி. அவன் மிதிலாவுக்கு உடனடியாய் ஃபோன் செய்தான். தனது கைப்பேசி திரையில் ஒளிர்ந்த புதிய என்னை பார்த்து முகம் சுளித்தபடி எடுத்து பேசினாள் மிதிலா.

"ஹலோ"

"கம் டு மை கேபின்"

"யார் பேசுறீங்க?"

"ஸ்ரீராம் கருணாகரன்"

"எஸ் சார்" அழைப்பை துண்டித்து விட்டு, அவனுடைய அறையை நோக்கி நடந்தாள், ஸ்ரீராமின் கைபேசி எண்ணை பாஸ் என்ற பெயரில் சேமித்த படி.

கதவைத் தட்டிய அவளுக்கு, உடனடியான

"கெட் இன்" கிடைத்தது ஸ்ரீராமிடமிருந்து.

"எஸ் சார்?"

அவளுக்கு முன்னால் ஒரு கோப்பை வைத்தான் ஸ்ரீராம்.

"இது நம்மளுடைய முந்தைய ஃபேஷன் ஷோவுக்கான ஃபைல். இதுல அதைப் பத்தின *ஏ டு இசட்* டீடைல்ஸ் இருக்கு. இதில இருக்கிற எல்லா செக்ஷன்ஸையும் தெளிவா படிங்க. நீங்க என்ன புரிஞ்சுகிட்டிங்கன்னு எனக்கு சொல்லுங்க. உங்களுக்கு புரியலைன்னா என்னை கேளுங்க. நம்மளுடைய அடுத்த ஷோவுக்கு முன்னாடி, நீங்க ப்ரிப்பார்டா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"ஓகே சார்"

அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,

"நான் சொன்னதை நீங்க புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன்"

"சார்...?"

"நீங்க புரிஞ்சுக்கிட்டதை என்கிட்ட சொல்ல சொன்னேன்"

"எனக்கு புரிஞ்சது, சார்"

"அப்போ எங்க போறீங்க? என்ன புரிஞ்சதுன்னு சொல்ல, ஒவ்வொரு தடவையும் என்னோட கேபினுக்கு வந்துகிட்டு இருக்க போறீங்களா?"

ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"டேக் யுவர் சீட் அண்ட் ரீட் இட்"

கண்ணாடி ஜன்னலின் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அந்த கோப்பை திறந்தாள் மிதிலா. அதில் மொத்தம் பதினாறு பாகங்கள் இருந்தன. அதிலிருந்த விளக்கங்களையும் விஷயங்களையும் புகைப்படத்துடன் பார்த்து பிரமித்து போனாள் மிதிலா. எஸ் ஆர் ஃபேஷன்ஸ்ஸின் ரம்ப் ஷோவை பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால், அதற்குப் பின்னால் எப்படிபட்ட பிரம்மாண்டமான உழைப்பு இருக்கும் என்பதை இன்று தான் அவள் தெரிந்து கொண்டாள். அவள் கையிலிருந்த கோப்பு அதை அவளுக்கு பிட்டு பிட்டு வைத்தது.

தேனீர் இடைவேளை வந்தது. மிதிலாவுக்கு கைப்பேசி அழைப்பும் வந்தது. அவள் அதை எடுத்து பேசுகிறாளா இல்லையா என்பதை ஓரக்கண்ணால் பார்த்தான் ஸ்ரீராம். அவள் பேசினாள்.

"சொல்லுங்க குகா"

"....."

"பாஸ் கேபின்ல இருக்கேன்"

"...."

"ஆமாம், பிஸி தான்"

"....."

அவள் புன்னகைத்தாள்.

"டோன்ட் ஒர்ரி... நாளைக்கு நிச்சயம் காபி போட்டு தரேன்"

என்று அவள் கூறியதைக் கேட்டு முகம் சுளித்தான் ஸ்ரீராம். கேன்டீனுக்கு ஃபோன் செய்து சர்க்கரை இல்லாத காபி கொண்டுவரும் படி உத்தரவிட்டான். கேன்டீனில் பணிபுரியும் பெண், இரண்டு கோப்பை காபியுடன் வந்தார். ஒரு கோப்பையை ஸ்ரீராமிடம் கொடுத்தார். மற்றொரு கோப்பையை மிதிலாவிடம் கொடுக்குமாறு சைகை செய்தான். அந்தப் பெண், காபிக் கோப்பையை மிதிலாவிடம் கொடுக்க, அவள் ஸ்ரீராமை நோக்கி திரும்பினாள். தன் கையில் இருந்த காபியை பருகியபடி, அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். கேண்டின் பெண்ணை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, காபியை பெற்றுக் கொண்டாள் மிதிலா. அதை குடித்த உடன் அவள் முகம் மாறிப் போனது.

"சக்கரை வச்சிருக்கீங்களா?" என்றாள்.

ஆம் என்று தலையசைத்துவிட்டு, அரை தேக்கரண்டி சர்க்கரையை அவளது காபியில் கலந்தாள் அந்தப் பெண்.

"இன்னும் கொஞ்சம் போடுங்க" என்றாள் மிதிலா.

மேலும் அரை தேக்கரண்டி சர்க்கரையை கலந்தாள் அந்தப் பெண். அந்த காபியை சுவைத்து குடித்தாள் மிதிலா. மென்னகை புரிந்தான் ஸ்ரீராம், ஒரு தேக்கரண்டி சர்க்கரை அவளது முக பாவத்தை தலைகீழாய் மாற்றி விட்டது என்று நினைத்தபடி. காலி கோப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார் கேன்டீன் பெண்.

"ஒரு டயாபட்டிக்கா இருந்துகிட்டு, சர்க்கரை சாப்பிடுறது நல்லதில்ல" என்றான் ஸ்ரீராம்.

பதிலுக்கு அவள் ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பணியை தொடர்ந்தாள் மிதிலா.

ஒவ்வொரு பிரிவிலும் தான் புரிந்து கொண்டது என்ன என்பதை ஸ்ரீராமிடம் விளக்கிக் கூறினாள் மிதிலா. அதைப் பற்றி சில கேள்விகளை கேட்டு, அவள் அதை ஆழ்ந்து புரிந்துகொள்ள உதவினான் ஸ்ரீராம்.

உணவு இடைவேளை

"போய் சாப்பிட்டுட்டு வாங்க" என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு அந்த கோப்பை அடுக்க துவங்கினாள். அப்பொழுது அவள் கைபேசிக்கு மீண்டும் அழைப்பு வந்தது. பேசியது, மீண்டும் குகனே தான். தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"வரேன் குகா... இன்னும் ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன்... இல்ல... இன்னும் முடியல..."

அழைப்பை துண்டித்து விட்டு, அந்த கோப்பை ஸ்ரீராமின் மேஜையின் மீது வைத்து விட்டு, அங்கிருந்து சென்றாள் மிதிலா.

அவனுடன் நெருக்கமாய் இருக்க விரும்பவில்லை என்று கூறிய அவள், அவனுக்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்து உணவருந்துவதை, தனது அறையின் கண்ணாடி சுவரின் வழியாய் பார்த்தான் ஸ்ரீராம். அவர்கள் உணவருந்த மட்டும் செய்யவில்லை, பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். ஒரு டப்பாவில் இருந்த உணவை மற்ற மூவரும் பகிர்ந்து உண்டார்கள். அது மிதிலாவுடையை டப்பாவாகத் தான் இருக்க வேண்டும். இப்படி சிரிக்கும் அளவிற்கு, அப்படி என்ன தான் இவர்கள் பேசுவார்கள்? இவர்களுக்கு பேசுவதற்கு விஷயம் எங்கிருந்து தான் கிடைக்குமோ... என்று எண்ணியபடி மீண்டும் தன் நாற்காலிக்கு வந்து அமர்ந்தான்.

உணவு இடைவேளைக்கு பிறகும், ஸ்ரீராமின் அறையில் தன் பணியைத் தொடர்ந்தாள் மிதிலா... இல்லை... ஸ்ரீராம் அவளை தன்னுடன் இருக்க வைத்துகொண்டான் என்று தான் கூற வேண்டும். எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும், ஏழு மணிக்கு மேல் மிதிலாவிற்கே எரிச்சல் ஏற்படத் தான் செய்தது. அவளை வீட்டிற்கு அனுப்பும் எண்ணமே இல்லை போலிருக்கிறது ஸ்ரீராமுக்கு. ஆனால், அவள் அதைப் பற்றி எதுவும் கேட்க முடியாது. 24*6 பணிபுரிய வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆயிற்றே. அப்பொழுது ஸ்ரீராமுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் அதை ஏற்று பேசினான்.

"சொல்லுங்க சுவாமிநாதன்... வீட்டு வேலை எப்படி போய்கிட்டு இருக்கு?"

"எஸ்ஆர்கே, நீங்க வாங்கின பில்டிங்கோட நிலைமை, ரொம்ப மோசமா இருக்கு. அது எந்த நேரத்திலும் இடிஞ்சி விழுந்துடலாம்"

"என்ன சொல்றீங்க நீங்க?" என்று அதிர்ந்தான்.

"அந்த பில்டிங்கை உங்களுக்கு வித்தவன் ஒரு ஃபிராடு. சேல் டாக்குமெண்ட்ல மென்ஷன் பண்ணியிருக்கிற மாதிரி அதனுடைய பவுண்டேஷன் உறுதியா இல்ல. ரொம்ப மட்டமான ரேஷியோல சிமெண்ட்டையும் மண்ணையும் அவங்க கலந்திருக்காங்க போலயிருக்கு. அது தெரியாம, நம்ம மேல ஒரு ஃபிளோர் வேற கட்டிட்டோம். அந்த பில்டிங் அதை நிச்சயம் தாங்காது"

"அந்த பில்டர் எங்க இருக்கான்னு எனக்கு தெரிஞ்சாகணும்" என்றான் பல்லை கடித்தபடி

"சாரி, எஸ்ஆர்கே அவன் சென்னையிலேயே இல்ல"

"ஒர்க்கர்ஸ் யாரும் அந்த பில்டிங்ல இருக்க வேண்டாம்னு சொல்லுங்க. பில்டிங்கை நேரில் பார்த்து, என்ன செய்யணும்னு முடிவெடுக்க, நாளைக்கு நான் யாரையாவது அனுப்புறேன். எல்லாரையும் அங்கயிருந்து போக சொல்லுங்க"

"ஓகே "

ஆத்திரத்துடன் அழைப்பை துண்டித்தவன், மிதிலா தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தான்.

"யூ கேன் கோ" என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு அவன் அறையைவிட்டு வெளியே வந்தாள் மிதிலா.

ஸ்ரீராமுக்கு ஏமாற்றமாய் போனது. அந்த கட்டிடத்தை அவனுடைய அக்கா நர்மதாவிற்கு திருமண நாள் பரிசாக அளிக்க அவன் நினைத்திருந்தான். ஏனென்றால் அந்த கட்டிடம் இருந்த இடம், ஒரு காலத்தில் அவனுடைய அப்பாவிற்கு சொந்தமாய் இருந்தது. அதிலிருந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி, நவீன முறையில் மேம்படுத்தி, நர்மதாவை திக்குமுக்காட செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கிட்டத்தட்ட வேலை அனைத்தும் முடியும் தருவாயில் இப்படி ஒரு செய்தியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த விஷயத்தை, அவனே நேரில் சென்று, முடிக்க வேண்டும் என்று தான் அவனுக்கும் விருப்பம். ஆனால், நாளை அவனுடைய பெற்றோரின் நினைவு நாள். நாளை அவன் எங்கே இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது. ஏன், அவன் எங்கு செல்லப் போகிறான் என்று அவனுக்கே கூட தெரியாது. நாளை முழுவதும், மறைந்துவிட்ட தனது பெற்றோரின் நினைவுடன் தான் அவனுடைய நாள் செல்லும்... ஒவ்வொரு வருடமும் அப்படித் தான்...!

தொடரும்....

Continue Reading

You'll Also Like

198K 2.1K 15
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!
108K 4.7K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
353K 11.1K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
25.4K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...