இதய சங்கிலி (முடிவுற்றது )

By NiranjanaNepol

95.5K 4.9K 515

Love story More

1 இதயத்துடிப்பு
2 இந்து குமாரி
3 விளம்பரம்
4 விபரம்
5 மாறிய திட்டம்
6 திருமணம்
7 அர்ஜுனின் வீட்டில் இந்து
8 அபாயமான அணுகுமுறை
9 அர்ஜுனின் செயல்
10 எதிர் வினை
11 திடீர் மாற்றம்
12 மாற்றம் தந்த மயக்கம்
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Last part

Part 52

1.8K 94 14
By NiranjanaNepol

பாகம் 52

எதிர் பார்த்தபடியே சங்கருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், மாஷாவால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தான் அர்ஜுன். அதன்படியும், மாஷாவின் மகளான ஹீனாவின் வாக்குமூலத்தின் படியும் சங்கருடைய தண்டனை காலம் வெகுவாய் குறைந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சென்று பார்த்து வந்தான் அர்ஜுன், இந்துவின் நச்சறிப்பினால். கிரியும் ஹீனாவும் கூட, அவரை சந்திப்பதை நிறுத்தவில்லை. ஆனால் எவ்வளவு கெஞ்சிக் கேட்ட போதிலும், இந்துவை மட்டும் சிறைச்சாலை பக்கம் வர அர்ஜுன் அனுமதிக்கவில்லை.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து

சிறைச்சாலைக்கு சென்று தன் தந்தையை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"அஜ்ஜு, அப்பா ஜெயிலுக்கு போய் ஒன்றரை வருஷம் ஆயிடுச்சு... நான் ஒரு தடவை கூட அவரை வந்து பார்க்கவே இல்ல. அவர் என்ன நினைக்கிறாரோ தெரியல"

ஒன்றும் கூறாமல் தனது டையை சரியாய் கழுத்தில் பொருத்தினான் அர்ஜுன்.

"என்னை மட்டும் ஏன் உங்க கூட கூட்டிக்கிட்டு போக மாட்டேங்கிறீங்க? அவர் என் மேல வருத்தப்பட மாட்டாரா? ஹீனாவும், கிரி அண்ணனும் கூட அவரைப் போய் பாக்குறாங்க... நான் மட்டும் தான் அவரை இன்னும் பார்க்கவே இல்லை"

"அவர் ஜெயில்ல இருக்காரு... பிக்னிக் ஸ்பாட்ல இல்ல... நீ போய் பாக்குறதுக்கு..."

"இருந்தா என்னங்க? எதுக்காக நீங்க என்னை அங்க வர விட மாட்டேங்கறீங்கன்னு எனக்கு புரியவே இல்ல"

"நீ அந்த மாதிரி இடத்துல அடி எடுத்து வைக்கிறது எனக்கு பிடிக்கல"

"அதான் ஏன்னு கேக்குறேன்"

"ஏன்னா அது கிரிமினல்ங்க இருக்கிற இடம்... உன்னை மாதிரி தூய்மையான மனசு உள்ளவங்க, அந்த இடத்தில வீசுற காத்தை கூட சுவாசிக்கக் கூடாது... புரிஞ்சுதா உனக்கு...?"

தனது கோட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அர்ஜுன்.

கண்ணிமைக்காமல் அப்படியே நின்றாள் இந்து. அர்ஜுன் மனதில் இப்படி எல்லாம் கூட நினைப்பான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவன் இன்னும் சங்கர் மீது கோபமாக இருப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

.....

கிரியும், ஹீனாவும், செய்ய வேண்டிய சட்ட சம்பிரதாயங்களை செய்துவிட்டு அர்ஜுனனுக்காக சிறை வாசலில் காத்திருந்தார்கள். அர்ஜுன் வந்து சேர்ந்தவுடன் உள்ளே சென்றார்கள். ஒன்றரை வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் மெலிந்து காணப்பட்டார் சங்கர். ஆனால், அவர் முகம் வெகு தெளிவாக இருந்தது. அவர் தன் மனைவி மகனுடன், சந்தோஷமாய் வாழ்ந்திருந்த பொழுது கற்கத் தவறிய விஷயங்களை, வாழ்க்கை அவருக்கு வெகுவாய் சிறைச்சாலையில் கற்றுக் கொடுத்துவிட்டு இருந்தது. தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் அவர் இழந்தார் என்பதை நன்றாய் உணர்ந்தார் சங்கர்.

அவர்கள் மூவரையும் பார்த்தவுடன் மெல்லிய புன்னகை அவர் முகத்தை ஆட்கொண்டது. அவர்களிடம் அவர் கேட்ட முதல் கேள்வி,

"இந்து எப்படி இருக்கா?" என்பது தான்

"நல்லா இருக்கா பா. உங்களைப் பார்க்க, எங்க கூட அவளும் வரேன்னு சொன்னா. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"பரவாயில்லப்பா... அவளை பார்த்துக்கோ"

சரி என்று தலை அசைத்தான் அர்ஜுன்.

"உங்களுடைய ட்ரிப் எப்படி இருந்தது?" என்றார் சங்கர்.

"பிரமாதமாக இருந்தது பா" என்றாள் ஹீனா.

அர்ஜுன் தன் கண்களை சுழற்ற, களுக்கு என்று சிரித்தான் கிரி. சென்ற முறை சங்கரை வந்து பார்த்து விட்டுச் சென்ற பின், அவர்கள் மிக நீண்ட சுற்றுலாவை முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அதை, இந்து வேண்டும் என்று கேட்டதால் அர்ஜுனால் மறுக்கவே முடியவில்லை. அது முழுக்க முழுக்க கோவில்கள் மட்டும் அடங்கிய சுற்றுலா. இந்து, கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தானும் அவளுடன்  வருவதாக அர்ஜுன் ஒப்புக் கொண்டு இருந்தான் அல்லவா? அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விட்டாள் இந்து. ஒரு வாரம் முழுக்க சக்தி பீடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அவள் வேண்டுகோளை வைத்தாள். தான் மட்டும் தனியே சென்று மாட்டிக்கொள்ள விரும்பாமல், தனது உயிர் நண்பனான கிரியையும் உள்ளே இழுத்து விட நினைத்தான் அர்ஜுன். அதனால், இந்துவிடம் ஹீனாவையும் அழைக்குமாறு கூற, அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டு விட்டாள் ஹீனா. அவர்களுடன் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது கிரிக்கு.

சிறிது நேரம் சங்கருடன் அளவளாவி விட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிந்தவுடன், சங்கரிடமிருந்து விடை பெற்று அவர்கள் கிளம்பினார்கள். அப்பொழுது அர்ஜுனுக்கு, வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு இந்து" என்றான்

"நான் வேலன் பேசுறேன் தம்பி "

"சொல்லுங்க "

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, தங்கச்சி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க."

"என்னது....? " என்று பதறினான் அர்ஜுன்.

"டாக்டருக்கு ஏற்கனவே ஃபோன் செஞ்சுட்டேன். அவங்க வந்துகிட்டு இருக்காங்க"

அழைப்பை துண்டித்து விட்டு தனது காரை நோக்கி ஓடினான் அர்ஜுன்.

"என்ன ஆச்சு அர்ஜுன்?" என்று அவனை பின் தொடர்ந்து வந்தான் கிரி.

விஷயத்தை அவனிடம் கூறியபடி, காரில் ஏறி அமர்ந்து, வண்டியை கிளப்பினான் அர்ஜுன். கிரியும் ஹீனாவும் அவனை வேறொரு காரில் பின்தொடர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த பொழுது இந்துவை பரிசோதித்து விட்டு வெளியே வந்தார் மருத்துவர் உமா.

"இந்துவுக்கு என்ன ஆச்சி டாக்டர்?" என்றான் அர்ஜுன்

"பயப்பட ஒன்னும் இல்ல. அவங்க நல்லா இருக்காங்க. நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு அழைச்சுக்கிட்டு வாங்க. செய்யவேண்டிய எல்லா செக்கப்பும் செஞ்சிடலாம்"

"என்ன செக்கப் டாக்டர்? " அவளின் இதயத்தில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

"இதெல்லாம் பிரக்னன்டாக இருக்கும் போது சாதாரணமா செய்ற செக் அப் தான்"

"ஆனா, அதை எதுக்கு..." அப்பொழுது தான் மருத்துவர் கூறியது அவனுக்கு புரிந்தது.

கிரியும் ஹீனாவும் கூட பரவசம் ஆனார்கள்.

"அண்ணி, பிரக்னண்டா இருக்காங்களா...?" என்று குதூகலித்தாள் ஹீனா.

ஆமாம் என்று தலையசைத்தார் டாக்டர்.

"தேங்க்யூ டாக்டர்" என்றாள் ஹீனா.

அர்ஜுனை நோக்கி புன்னகையுடன் திரும்பினான் கிரி. ஆனால் அவன் அங்கு இல்லை. அவன் எப்போதோ தனது அறையை நோக்கி பறந்து விட்டான். அப்பொழுது, அறையை விட்டு வெளியே வந்த இந்துவை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான்.

"நான் அப்பாவாக போறேன்" என்றான் சந்தோஷமாக.

இந்து ஆமாம் என்று தலையசைக்க, அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

"நீ என்னை ரொம்ப ஸ்பெஷலாகிட்ட"

"நீங்க எப்பவுமே ஸ்பெஷல் தான்"

"அது உன்னால தான்"

"பாக்கலாம்... உங்க பையன் வந்ததுக்கப்புறம் நீங்க இப்படி சொல்றீங்களான்னு பாக்கலாம் "

"பொண்ணு வந்ததுக்கப்புறம்..." என்று மாற்றி கூறினான் அர்ஜுன்.

பெருமூச்சு விட்டாள் இந்து.

"சரி... அப்படியே இருக்கட்டும். யாராயிருந்தாலும், பார்க்கலாம்"

"ஆமாம்... வரப் போறது  யாராயிருந்தாலும், நான் எப்பவும் என் ஒய்ஃபுக்கு ஸ்பெஷலா தான் இருப்பேன்... சரி தானே?"

"ரொம்ப சரி "

அவர்கள் பின்னால் இருந்து இருமல் சத்தம் கேட்டு திரும்பினார்கள். ஹீனா நின்றிருந்தாள். ஓடிச்சென்று இந்துவை அணைத்துக் கொண்டாள் ஹீனா.

"கங்கிராஜுலேஷன்ஸ் அண்ணி"

" தேங்க்யூ"

"கிரி எங்க? " என்றான் அர்ஜுன்

"அவர் என்னுடைய ட்ரெஸ் எல்லாம் கொண்டுவர வீட்டுக்குப் போய் இருக்காரு"

"உன்னுடைய ட்ரெஸைய்யா எதுக்கு?"

"ஏன்னா, நான் அண்ணி கூட இங்க இருந்து அவங்களை பாத்துக்க போறேன் "

"தேவையில்ல அவளை நான் பார்த்துக்கிறேன்"

"அண்ணா, பொம்பளைங்க செய்யுற வேலை எல்லாம் உங்களால செய்ய முடியாது"

"எக்ஸ்க்யூஸ் மீ... என் ஒய்ஃபுக்கு நான் எல்லாம் செய்வேன்..."

"சரி. நீங்க எல்லாம் செய்யுங்க. ஆனா, நான் இங்க தான் இருக்கப் போறேன். வேண்டாம்னு சொல்லாதீங்க"

"சொல்றத கேளு, நீ லிவிங் ரூம்ல தனியா தான் உட்கார்ந்து இருக்கணும்"

"பரவால்ல... இது என் ஹஸ்பண்ட் ஆர்டர்"

"இந்த கிரியை உதைச்சா என்ன...?" என்றான் அர்ஜுன்.

வாய் விட்டு சிரித்தாள் இந்து

......

அர்ஜுன் கூறியது போலவே, ஹீனா தனியாக இருந்து வெறுத்து போனாள்.  எதை செய்யவும் அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கூட வழங்கவே இல்லை அர்ஜுன். அர்ஜுனுக்கும் ஹீனாவிற்கும் இடையில் தவியாய் தவித்தான் கிரி. அலுவலகத்தையும் கவனித்துக் கொண்டு, சீதாராணி இல்லத்தில் இருந்த ஹீனாவுடனும் போனில் பேசிக்கொண்டு இருந்தான் கிரி. பாவம் ஹீனா, அவளும் எவ்வளவு நேரம் தான் டிவி பார்த்துக் கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், காலம் கழிக்க முடியும்? அதனால் கிரியை போனில் அழைத்து அவனுடன் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது. வேறு வழியின்றி, ஹீனாவுக்காக கிரியும் சீதாராணி இல்லத்திற்கு, தற்காலிகமாக குடிபெயர்ந்து விட்டான்.

....

ஒரு மைசூர் பாகை எடுத்து, வாயில் போட முயன்ற இந்துவை தடுத்தான் அர்ஜுன். சிணுங்கினாள் இந்து.

"ஏற்கனவே நீ நாலு கிலோ ஏறிட்ட... இன்னும் வெயிட் ஏறினா, டெலிவரி ரொம்ப கஷ்டமாயிடும்"

"போங்க... நீங்க எனக்கு, சாப்பாடு, இட்லி, தோசை கூட கொடுக்கறது இல்ல..." என்றாள் தன் தலையில் கை வைத்துக்கொண்டு

"அதெல்லாம் வெயிட் போடவைக்கும். இன்னும் ரெண்டு மாசம் தானே... அதுக்கப்புறம் வேண்டியதை சாப்பிட்டுக்கோ."

சரி என்று தலையசைத்தாள் இந்து சோகமாக. சிறிதளவு மைசூர் பாகை எடுத்து அவள் வாயில் வைத்தான் அர்ஜுன். அதை புன்னகையுடன் உண்டாள் இந்து. இந்துவிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து இருந்ததால், மிகவும் கவனத்துடன் இருந்தான் அர்ஜுன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் ஏற்கனவே கூறிவிட்டு இருந்தபடி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.  அர்ஜுன் எதிர்பார்க்காத வண்ணம், இந்து எதிர்பார்த்த வண்ணம், ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் இந்து. அது அர்ஜுனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்த போதிலும், அவன் இந்துவிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இந்துவைப் போலவே, அன்பான, தூய்மையான மனம் கொண்ட மகள் தனக்கு பிறக்க வேண்டும் என்று அவன் ஆர்வம் கொண்டிருந்தான். ஆண் குழந்தை என்றால், தன்னைப் போல முரட்டுத்தனமாக இருக்கும் என்று நினைத்தான் அர்ஜுன்.

இந்து, தங்கள் மகனுக்கு, அபிமன்யு என்று பெயரிட்டாள். நாட்கள் செல்ல செல்ல அபிமன்யுவின் முகம் அர்ஜுனை உரித்துக் கொண்டு வந்தது. அது அர்ஜுனை மேலும் கலவரப்படுத்தியது. சந்தேகமில்லாமல் அவன் தன்னைப் போலத் தான் இருப்பான் என்று தீர்க்கமாய் நம்பினான் அர்ஜுன்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு

அபிமன்யூவிடமிருந்து அர்ஜுன் விலகியே இருப்பது, தெள்ளத் தெளிவாய் புரிந்தது இந்துவிற்கு. அது ஏன் என்றும் அவளுக்கு புரிந்திருந்தது.

"ஏங்க, இங்க பாருங்களேன், அபி உங்களையே பார்த்துக்கிட்டிருக்கிறான்" என்றாள் இந்து.

கண்ணாடி முன்னால் நின்று தலை வாரிக் கொண்டிருந்த அர்ஜுன், திரும்பி அபியை பார்த்தான். வாயில் விரலை வைத்துகொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்த அபி, அர்ஜுன் தன்னை பார்த்தவுடன் புன்னகைத்தான்.

"பாத்தீங்களா.. உங்கள பாத்த உடனே எப்படி சிரிக்கிறான்னு..."

அபியின் கரங்களைப் பற்றிக் கொண்டு,

"ஓய் குட்டி அர்ஜுன், என்னை பாத்து சிரிக்க மாட்டியா...? உங்க அப்பா தான் உனக்கு வேணுமா?" என்று இந்து கேட்க, ஏதோ எல்லாம் புரிந்து விட்டது போல் அதற்கும் சிரித்தான் அபி.

"அஜ்ஜு..."

" சொல்லு "

"அடுப்புல பாலை வச்சிட்டு வந்ததை மறந்துட்டேன். கொஞ்சம் அபியை பாத்துக்கோங்களேன். நான் இப்ப வந்துடறேன்"

வேண்டுமென்றே அபியை அர்ஜுனிடம் விட்டு விட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினாள் இந்து.

சிறு நடை நடந்து மெல்ல அபியின் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன். தன்னுடைய நகல் போல் இருந்த தன் மகனை பார்த்தான் அர்ஜுன். அதே செதுக்கி வைத்த முகம், பேசும் கண்கள், வரைந்து வைத்தது போன்ற புருவங்கள், கருகருவென்ற தலைமுடி, அனைத்தும் அர்ஜுனை போலவே இருந்தது. ஒன்றே ஒன்று மட்டும் தான் இந்துவை நினைவூட்டியது... அபியின் கள்ளங்கபடமற்ற புன்னகை. அபி எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கிறான். அவன் அழுது அர்ஜுன் பார்த்ததே இல்லை. தூங்கி எழுந்தால் கூட, சிரித்துக்கொண்டே எழுவதை வழக்கமாக வைத்திருந்தான் அபி.

மெல்ல அபியின் குட்டி கரங்களை, தன் விரலால் தொட்டுப் பார்த்தான் அர்ஜுன். ஏதோ அதற்காகவே காத்திருந்தவனைப் போல, அர்ஜுனின் விரலை பற்றிக்கொண்டான் அபி. அவன் பிடியிலிருந்து தன் விரலை எடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை அர்ஜுனுக்கு. அர்ஜுனுடைய விரலை எடுத்து, பல்லில்லாத தன் வாயில் வைத்து கடித்தான் அபி. அது அர்ஜுனுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போலிருந்தது. அது அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அர்ஜுனின் விரலை வாயில் வைத்துக் கொண்டு, அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தான் அபி. தன் விரலை அர்ஜுன் எடுக்க முயன்ற பொழுது அவன் முகம் மாறியது.

"உனக்கு பசிக்குதா?" என்று முத்துக்களை உதிர்த்தான் அர்ஜுன்.

அவனுக்கு பதில் சொல்வதைப் போல்,

"ஊஊ..." என்று சத்தம் எழுப்பினான் அபி.

அர்ஜுனுக்கு மனம் கனத்துப் போனது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா. மெல்ல குனிந்து அபியின் நெற்றியில் முத்தமிட்டான் அர்ஜுன். தன் கை, கால்களை அசைத்து,  தன்னை தூக்கி கொள்ளுமாறு அர்ஜுனுக்கு குறிப்பால் உணர்த்தினான் அபி. மெல்ல அவனை தூக்கி கொண்டான் அர்ஜுன். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இந்து, புன்னகை புரிந்தாள். முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் வந்து அர்ஜுனின் பக்கத்தில் அமர்ந்தாள். அர்ஜுனின் கையிலிருந்து அபியை அவள் வாங்க முயன்ற போது, சினுங்கினான் அபி. ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள் இந்து. அர்ஜுனோ களுக்கென்று சிரித்தான்.

"என்கிட்ட வர மாட்டியா? உங்க அப்பா எல்லா நேரமும் வீட்ல இருக்க மாட்டாரு. அதை தெரிஞ்சுக்கோ" என்றாள்.

"என்னால எல்லா நேரமும் அவன் கூட இருக்க முடியாதுன்னு தான், நான் வீட்ல இருக்கும் போது, என்கிட்ட இருக்கணும்னு நினைக்கிறான்" என்று வரிந்து கட்டிக்கொண்டு தன் மகனுக்கு துணை வந்தான் அர்ஜுன்.

புன்னகையுடன் அபியின் முதுகை வருடிக் கொடுத்தாள் இந்து. அவனுடைய மென்மையான நெற்றியில் முத்தமிட்டு அவனை அணைத்துக் கொண்டான் அர்ஜுன்... அவனுக்கு, தான் ஒரு மிகச்சிறந்த தகப்பனாய் இருக்க வேண்டும் என்ற உறுதி மொழியை மனதில் கொண்டு.

தொடரும்...

குறிப்பு : அடுத்த அத்தியாயத்துடன் *இதய சங்கிலி* நிறைவு பெறுகிறது. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. 🙏🙏.

Continue Reading

You'll Also Like

14K 892 25
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
214K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
206K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
113K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...