கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

ZaRo_Faz

79.7K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... Еще

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
50

49

1.6K 42 6
ZaRo_Faz

அடுத்த நாள் காலையில் இட்லி செய்து கொடுத்தாள் சக்தி சாப்பிட்டு விட்டு "நல்லா இருக்குமா" என்றான் சிவா...

சக்திக்கு நிஜமாகவே அவனது அந்த நல்லா இருக்குமா என்ற வார்த்தை புதிதாக இருந்தது சக்தி நம்பாமல் அவனை ஒரு மாதிரி பார்த்து வைக்கவும் அருகில் வந்து "உன்ன லவ் பன்லாம்ன்னு இருக்கேன் உனக்கு ப்ராப்ளம்லாம் இலல்யே....?" என்று கேட்டு விட்டு புன்னகைப்போடு அவளையே பார்த்தான்.

அந்த நொடி சிறகுகள் இருந்தாள் சக்தி வானில் தான் பறந்து இருப்பாள். அப்படி ஒரு குதூகலம் அவளுக்குள் ஆனால் அதை வெளிக்காட்டாது "புரியலை" என்றாள்.

உடனே அவளது கன்னத்தை கிள்ளி விட்டவன் "வயசாகிறுச்சுல்ல எனக்கு சரியா ப்ரபோஸ் கூட பன்ன வரலன்னா பார்" என்று விட்டு அவளது பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக வெளியேறி சென்று விட்டான்.

"என்னங்க" என்று கத்தி கத்தி அவன் பின்னாடியே சென்றாளும் அவளுக்கு எந்த ரெஸ்பொன்ஸும் இன்றி ஆபிஸுக்கு சென்று விட்டான்.

"ம்மா பாட்டி இன்னைக்கு வருவாங்கல்ல நான் ஸ்கூல் போகாம இருக்கட்டுமா" என்று தாரா சிந்து வீட்டில் வைத்தே கூறி விட்டதால் அவள் பாடசாலை போகவில்லை

சிவா சென்றதில் இருந்து கையும் ஓடாது காலும் ஓடாது சிலையென அமர்ந்திருந்தாள் சக்தி  தாரா "விளையாடா வாங்கம்மா" என்று அழைத்தும் செல்லவில்லை....

பதினொரு மணிக்கு எல்லாம் அம்மா அக்கா மற்றும் மாமா வந்து விடவும் தாராவுக்கு உலகே மறந்து தான் போனது.

சக்தி சமைக்கவென்று தயாராகும் போதே "இன்னைக்கு வீட்ல இருந்து சாப்பாடு அனுப்புவாங்க சக்தி நீ சமைக்க வேண்டாம்" என்று விட்டார் அஷ்வின்

"சரி மாமா" என்றதும் "அங்க எல்லாருமே உன்ன கேட்டாங்க" என்றான்

"அச்சோ அப்டியா.... ஆமா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா மாமா"

"ஆமாம்மா... சரி நான் ஹாஸ்பிடல் போறேன் இன்னைக்கு ஏதோ மீடிங்ன்னு சார் மைல் பன்னி இருந்தார் நேரத்துக்கு போகலைன்னா சங்கு தான்" என்றதும்

புன்னகைத்து விட்டு "நீங்க டயர்ட்ன்னா ரெஸ்ட் எடுங்க நான் பேசிக்கிறேன் மாமா"

"இல்லம்மா அதுலாம் வேண்டாம்" என்று விட்டு அஷ்வின் சென்று விட்டான்.
மதியம் ஒன்றரைக்கு சாப்பாட்டோடு ஆபீஸூக்கே சென்றாள் சக்தி

அவளை கண்டதும் புன்முறுவலோடு வரவேற்றவன்  "எதுக்கு சாப்பாடுலாம் எடுத்துட்டு வந்த இங்க எல்லாமே இருக்குல்ல"

"உங்களை பார்க்கனும்ன்னு தோன்றிச்சி அதான் வந்தேன்"

"ஒகே நான் சாப்டும் வரை ஒன்னு பன்னு" என்று விட்டு லெப்பை அவள் பக்கம் திருப்பி வைத்து விட்டு "இதுல  டுவன்டி டிஸைன்ஸ் இருக்கு எதாவது பைவ் டிஸைன்ஸ் ஸிலக்ட் பன்னு..."
என்றான்

அந்த போட்டோவை கவனிக்க ஆரம்பித்தவள் "தாரா பர்த்டேய் டெகரேஷனுக்கா" என்று கேட்டாள்

"ஹம்"

"இதோ இந்த ஐந்துமே எனக்கு பிடிச்சிறுக்கு" என்று கூறி அவன் பக்கம் லெப்பை திருப்பி வி்ட்டாள். அவைகளை நன்றாக பார்த்தவன் "இதுலாம் நான் சகிதாவோட மைல்க்கு அனுப்பிட்டேன். அத தாராகிட்ட காமிச்சி பைனல் பன்ன சொல்லு இப்பவே அர்ஜன்ட்" என்றதும்
சக்தி அக்காவுக்கு கால் செய்து விடயத்தை சொல்லி இருபது நிமிடத்தில்  தாரா சிலக்ட் செய்து அனுப்பியும் இருந்தாள்.

அதற்குள் சிவா சாப்பிட்டு முடிந்து இருந்தான்.
"தாரா தான் பைனல் சிலக்ட் பன்றான்னா எதற்காக என் கிட்டயும் கேட்டீங்க....?"

"ஹம் கண்டிப்பா டெகரேடரோட மெனுல ஐம்பது டிஸைன்ஸ் இருந்தது அதுல டுவன்டி எனக்கு பிடிச்சிது அதுல ஐந்து உனக்கு பிடிச்சிறுக்கு அதுல ஒன்னு தாராவுக்கும் பிடிச்சாச்சி..... ஸோ பார்டி டைம்ல நம்ம மூன்று பேர்ல யாருக்கும் டிஸபொய்ன்மன்ட் இருக்காதுல்ல அதான்" என்று விட்டு "சரி இன்னும் ஒரு நாள் தான் டைம் இருக்கு  நீ போயி தாராகூட பர்சஸ் பன்னு அவளுக்கு பிடிச்ச ட்ரஸா வாங்கி குடு..... " என்று விட்டு அவளை அனுப்பி வைத்தான்.

பல கடைகள் ஏறி இறங்கிய பின்பு தாரா மூன்று உடைகளை தேர்வு செய்து வி்ட்டு "ம்மா இதுல எது எனக்கு நல்லம்"என்று கேட்க்கவும் சக்தி அவளுக்கு பிடித்ததை காட்டினாள் அதையே வாங்கியும் கொண்டாள்.

அன்று இரவு சிவா என்றும் போல் லெப்டப்புடன் கிடப்பதை விட்டு விட்டு டீவி பார்க்க என்று வந்து ஸோபாவில் அமர்ந்தான். என்றும் போல் கால்களை நீட்டி அமர்ந்திருந்த அஷ்வின் சிவா வந்து உட்கார்ந்து விடவும் சட்டென்று எழும்பி நின்று விட்டான்.

"அய்யோ உட்காருங்க அஷ்வின்" என்று கூறி அவனை உட்கார வைத்தான். தாரா தினமும் அஷ்வினோடு சேரந்து கொண்டு டீவியில் எதையாவது பார்ப்பாள் அன்று அப்பாகாரனும் வந்து விட தாராவுக்கு ஒரே குஷி தான். இரு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு டீவி பார்த்திருந்த தாராவின் கண்களில் பெருமிதம் நன்றாகவே தெரிந்தது.

தாயின் அறையில் பெண்கள் மூவரூம் அமர்ந்து இருந்தனர்.  சக்தி மெதுவாக சரத்தை பற்றி பேசலானாள். "அம்மா அண்ணா இப்போ வந்து நாங்க வேண்டும்ன்னா நீ சேர்த்துபியாமா?" என்று கேட்டு வைத்தாள் பயத்தோடு

அவளை முறைத்து பார்த்தாள் தேவகி, சகிதா சிரித்த முகமாக "தமிழ் வந்து நான் பன்னது தப்பு என்ன மன்னிச்சி சேர்த்துக்கோன்னா நீ பழசை மறந்து சேர்த்துபியா... சக்தி?" என்று கேட்டு விடவும் சக்தி கடுப்படைந்து விட்டாள்.

"க்கா நீ கொஞ்சம் சும்மா இரு்ககியாக்கா... ப்ளீஸ் தமிழ நான் பெற்று எடுக்கலை... அதோட இது அம்மாவுக்கான கேள்வி அவங்க மனசு திறந்து பதில் சொல்ல விடு.... எனக்கு அண்ணாவ பிடிக்காது அதுக்காக எங்க கருத்த வைத்து அம்மாவ இன்ப்லூவன்ஸ் பன்றது தப்பு" என்று விட்டு  தாயை நோக்கி "ம்மா என்னயும் அக்காவயும்  விட்று உனக்கு அண்ணாவ சேர்த்துக்க தோன்றிச்சா இல்லயா இத சொல்லு" என்று கேட்டதும் ஒரு நொடி யோசித்து விட்டு "இதற்கு மேல அவன் எதற்குன்னு தான் தோன்றுது சக்தி.... அப்பா பன்ன தப்பால அம்மா சிதைஞ்சி இருப்பான்னு பார்க்க வரலை நடுத்தெருல எதுவுமே இல்லாம நின்னப்ப பார்க்க வரலை வயசுக்கு வந்த தங்கச்சி கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு கேள்வியாக இருந்தப்ப வரலை இப்போ எதற்கும்மா அவன்...."

"ஹம் யு ஆர் கரெக்ட்ம்மா...." என்று விட்டு சகிதாவை பார்த்து "க்கா சாரிக்கா" என்றாள் உடனே "விடு மா என் மேல தான் தப்பு எல்லாமே எனக்கு தான் தெரியும், தெரியனும் என்ற நினைப்புல மூக்க நுழைச்சிட்டேன்...." என்று விட்டு "ஆமா நாளை மறு நாள் தாராவுக்கு பர்த்டேவுல எதாச்சும் எரேன்ஜ் பன்றீங்களா...?"

"ஆமாக்கா தமிழ் நாட்டுல மட்டும் வர்க் பன்ற எல்லா எம்ப்லோயிஸுக்கும் டின்னர் எரேன்ஜ் பன்னி இருக்கோம் அதோட  மாமா மலேஷியாவுல இருந்து வர்றார்...."

"ஓஹ் தட்ஸ் ரியலி நைஸ்ல  மாமாவ பார்க்க எனக்குமே ஆர்வம் தான். ஆமா அவங்க தங்கச்சி ஒருத்தி இருக்கால்ல அவ கூட சார் இன்னுமே பேசறதில்லயா...?"

"இல்லக்கா அதான் நான் சொல்ல வந்தேன் எப்டி சொல்றதுன்னு தெரியாமா இருந்தேன் எக்சுவலி சிந்து கல்யாணம் பன்னி இருக்குறது நம்ம சரத் அண்ணாவ தான்" என்றது தான் தாமதம் சகிதா கொதித்து எழுந்து விட்டாள்.  தேவகியின் முகமும் சிலை போன்று தான் ஆகி போனது.

"ஆமாக்கா அன்னைக்கு சாருக்கு அண்ணாவோட போட்டோஸ்  காமிச்சேன் அப்போ தான் எனக்கே தெரிஞ்சது அதோட நாங்க நேற்று அவங்க வீ்ட்டுக்கே போனோம் அண்ணா பக்கத்துல நின்னு பேசினார் பட் அவருககு என்ன ஞாபகம் இல்ல... அதனால நான் யார்ன்னே தெரியாமா தான் இருந்தார்."

"இப்போ பார்டிக்கு அவங்க வருவாங்க போல... ஸோ" என்று பேச்சின்றி தவிக்கும் போதே "நாங்க தாரா பார்டிக்கு வரலை சக்தி" என்று விட்டு எழுந்தே சென்று விட்டாள் தேவகி....

"ம்மா" என்று கத்தி கொண்டே இரு மகளும் தாயின் பின்னாடி சென்றனர் "நிஜமாகவே எனக்கு அவன் வேண்டாம் சக்தி பார்டிக்கு நாங்க வரலை அதோட இனியும் எந்த உறவோடயும் அவன்  இந்த வீட்டுக்கு வரவே கூடாது.... அவன் வர நீ காரணம்ன்னா நீயும் உன் புருஷன் வீட்டுக்கு போயிறு" என்று முடிவாக சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று கதவை மூடி விட்டார்.

இரவு உறங்கும் போது சிவாவிடம் இதை பற்றி சொன்னாள். அதற்கு சிவா எந்த பதிலும் சொல்லாது இருந்து விட்டு காலையில் கிச்சன் வரை சென்று தேவகியிடம் "என்னத்தை இது உங்களுக்கு விருப்பமில்லைன்னா நான் நாளைக்கு  அவங்கள இன்வைட் பன்னவே மாட்டேன்ல.... அதற்கு போயி நீங்க வரலைன்னு சொல்றதுலாம் டூ மச் ஒகே.... இந்த வீட்ல எல்லாரும் தாரா கூட இருக்கனும் அதற்கு தடையா எதுவும் நடக்காது...." என்று விட்டு சென்று விட்டார்.

மதியம் சமைக்கும் போது "சக்தி மாப்பிளை கிட்ட சொல்லிறு அவங்க வர்றதுல எனக்கு ஆட்சேபனை இல்லேன்னு" என்றதும் சகிதா அதிர்ச்சியாக நேக்கினாள் சக்தியும் தான்

"ஏன்ம்மா மனசு மாறுர அளவு என்னாச்சி?" என்று சக்தி தான் கேட்டாள்.
"பின்ன என்ன மா.... எவ்ளோ பெரிய குடும்பம் எவ்ளோ பெரிய பணக்காரர், அதோட எங்களுக்கு எவ்ளோ உதவி பன்னி இருக்கார் இருந்தும் 'என் தயவுல வாழ்ற' கூட்டம்ன்னு மட்டமாக நினைக்காம கிச்சன் வரை வந்து "என்னத்தை இது உங்களுக்கு விருப்பமில்லைன்னா நான் நாளைக்கு  அவங்கள இன்வைட் பன்னவே மாட்டேன்ல.... அதற்கு போயி நீங்க வரலைன்னு சொல்றதுலாம் டூ மச் ஒகே.... இந்த வீட்ல எல்லாரும் தாரா கூட இருக்கனும் அதற்கு தடையா எதுவும் நடக்காது...." ன்னு தம்பி சொல்லிட்டு போகுதுன்னா நானும் இறங்கி போனா தப்பில்லன்னு தோன்றுது...ம்மா..."

"ம்மா அவர் அத்தைன்னா நீ மாப்பிளைன்னுமா அது என்ன தம்பி கம்பின்னு" என்று சக்தி கேட்டதும் சிரித்து விட்டு "மாப்பிளை விருப்ப படி நடக்கட்டும்" என்று விட்டார்.

"சரிம்மா, " என்று விட்டு "க்கா  மாமா வீட்ல எல்லாருக்கும் பார்டிக்கு இன்வைட் பன்ன ஈவினிங் போயிட்டு வந்துறலாம் என்ன?" என்று கேட்டதும் சகிதா சரி என்று தலையாட்டினாள்.

கொஞ்சம் நேரம் கழித்து சக்தி தாயின் அறைக்கு போன போது தேவகி கலங்கிய விழியோடு அமர்ந்து இருந்தாள். உடனே தாயின் காலடியில் அமர்ந்து கொண்டு "ம்மா உனக்கு பிடிக்கலைன்னா சிந்து குடும்பம் வேண்டாம்மா... நீ அவருக்காக ஒன்னும் அட்ஜஸ்ட் பன்ன தேவலைமா"  என்று விட்டு தாயின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

"இல்ல சக்தி நான் அதற்காக அழுகல அவங்க வரட்டும்... மாப்பிளை பேச சொன்னா நான் பேசவும் தயங்க மாட்டேன் யேன்னா மாப்பிளை மேல எனக்கு அவ்ளோ அன்பு..... உங்கப்பா எங்களை எந்த குறையுமே இல்லாம வைத்தாளும் ஒரு நாள் அவர்  பன்ன வேலையில மொத்தமாக இழந்துட்டு நடு் தெருவுல நின்னோம்.
சகிதா தான் தற்காலிகமாகவாவது என்ன  எப்டியோ பார்த்துக்கிட்டா..ஆனாலும் எனக்கு சந்தோசமே இல்ல.... யேன்னா அவ நாய் மாதிரி உழைச்சி உழைச்சி இருந்தா அவ சம்பாதிப்புல கடனடைக்கவும் முடியாம  வீட்ட மீட்கவும் முடியாம வயிறார சாப்பிடவும் இல்லாம உடுத்துக்க நல்ல துணி கூட இல்லாம இருந்தோம் அத விட முக்கியமா அவ கல்யாணமே நின்னு போச்சி.... அவ அத பற்றி யோசிக்காம உழைச்சா... பட் எல்லாமே மாறிச்சி....அதற்கு காரணம் மாப்பிளை தான்.... வீடு கைக்கு வந்துச்சு அத சகிதாவுக்கே குடுத்தும் விட்டுடார்... கடனும் முடிஞ்சாச்சி.... சகிதா கல்யாணத்துக்கு ஐம்பது சவரன் நகையும் தந்தார்.... எனக்குன்னு நீ அங்க இருக்கும் போதே நல்ல பட்டு சேலையா பார்த்து பன்னிரண்டு கொடுத்தார்.... கழுத்துல மாலை போட்டுக்க கொடுத்தார்....   எங்க வீ்ட்ல பொண் எடுக்க வெட்கப்பட்ட மாமா வீ்ட்டு குடும்பமே.... அஷ்வினோட மனைவி வர்றான்னா எதோ பெரிய எம்பீ  வர்ற மாதிரி ரகளை பன்றாங்க இது எல்லாமே மாப்பிளையால தான் அந்தஸ்துல இவ்ளோ உயர்ந்து நிக்க காரணமே
அந்த புள்ள தான் அது விருப்பபடி நடக்கட்டும்மா  இனி நான் சொல்ல எதுவுமே இல்ல"  என்றதும் தாயை கட்டி கொண்ட சக்தி "ம்மா அவங்க தங்கச்சி புருஷனாகவே அவரு இருக்கட்டும் நம்ம அண்ணாவாக இனி நமக்கு தேவையே இல்லம்மா" என்று விட்டு தாயை பார்க்கவும் சரி என்று தலையசைத்தாள் தேவகி...

ண்கள் தான் சுமைதாங்கி  என்ற கருத்தை பொய்யாக்குவாள் ஆணையும் சேர்த்து சுமக்கும் பெண் -ஸஹ்ரா நஸீர்

Продолжить чтение

Вам также понравится

இரத்த ரேகை துகிரன்

Детектив / Триллер

28.8K 1.4K 17
JK POLICE STORY -1 'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி . படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவ...
94.5K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
10.6K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...