கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

By ZaRo_Faz

79.4K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... More

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
49

50

2.8K 74 57
By ZaRo_Faz

தாராவின் பர்த்டே பார்ட்டிக்கு சிந்து குடும்பம் வந்து இருந்தது ஆனால் யாருமே சரத்துடன் பேசவில்லை... சரத்தும் தேவகியின் பின்னாடியும் முன்னாடியும் என்று சுற்றி சுற்றி தான் இருந்தான். ஆனால் தேவகி வீம்போடு அவனுக்கு எந்த ரெஸ்பொன்ஸும் செய்யாது இருந்து விட்டாள்.

சகிதாவை பற்றி சொல்லவும் வேண்டாம் அவள் பின்னாடி கூட வர வைத்து கொள்ளாது அலட்சியம் செய்து விட்டாள். சக்தியோ "சரத்" என்று ஒருமையில் தான் பேசினாள்.

பங்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக தான் நடந்தது. குறையே அற்ற ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.... கிருஷ்ணா வந்து இறங்கின அந்த நொடியிலிருந்து அவரை வாய் மூடி நிற்கவே யாரும் இடம் கொடுக்கவில்லை அத்தனை பிஸி மனிதர்..... திருவும் வந்து இருந்தார். அவர் க்ரிஷ்ணாவை விட்டு நகரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் ஐந்தாறு வருடம் முன்னாடி இறந்து விட்டதாக சொன்ன க்ருஷ்ணா திரும்பி வந்து நின்றார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் தெரியும் எவ்வளவு உணர்வு பூர்வமானது என்று

சிந்து தான் தந்தையை கட்டி கொண்டு அவரை விடாது அழுது தள்ளினாள்.

"நீ தான் என்ன விட்டு போயிட்டியே அப்பறம் நான் இருந்தா கூட நீ எங்க கூட இல்லயே ..." என்று மகளை திட்டாமல் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டு "நீ உயிரோட இல்லன்னு கேள்விப்பட்டப்ப எவ்ளோ அழுதேன் தெரியுமா..... கூட இல்லைன்னா கூட நீ நல்லா இருக்கனும்ப்பா" என்று விட்டு க்ருஷ்ணாவை நெற்றியில் முத்தமிட்டாள்.

"சரி சும்மா தான் சொன்னேன் வீட்ல போயி பேசிக்கலாம்" என்று விட்டு மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தார்.

பங்ஷன் முடிந்து அனைவரும் செல்லும் போதே சகிதா அஷ்வினுடன் சென்று விட்டாள். ஆனால் சிவா தேவகியிடம் "அத்தை நேராக எங்க வீட்டுக்கு போலாம் நாளைக்கு லஞ்சுக்கு அப்பறமாக நான் வீட்ல கூட்டி போயி விட்டுட்றேன்" என்று கூறி அவனது வீட்டுக்கு கூட்டி சென்றான்.

சிவா, அஷ்வின் சகிதாவையும் காலையில் அழைத்து "லஞ்ச்க்கு இங்க வந்துறுங்க" என்று விட்டான். அதன் படி அவர்களும் வந்து விடவும் வீடே நிறைந் து இருந்து.... சிந்து இரவே பசங்களுடன் சிவா வீட்டில் இருந்து விட்டாள். "அப்பாவுடன் இருக்கனும்" என்ற காரணத்தை சொல்லி சரத்தோ 'மனசு சரியில்லை' என்று வீட்டுக்கு சென்று விட்டான். காலையுடனே ப்ரெக்பஸ்டுக்காக வந்தும் விட்டான் சரத்...

அடுத்த நாள் ப்ரெக் பஸ்ட் டைம் க்ரிஷ்ணா சரத் சிந்து அவளது பசங்க சிவா சக்தி தாரா தேவகி என்று அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

அப்போது க்ரிஷ்ணா தேவகியிடம் "உங்க பேமிளி பற்றி சொல்ல முடியுமாமா?" என்று கேட்டதும் தேவகி சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு பேசலானாள்.

"நான் மதுரை பக்கம் இப்போ இங்க இரு்ககேன்" என்று விட்டு வாயில் உணவை போடும் போது "இது எனக்கு தெரியும் எனக்கு கொஞ்சம் விரிவாக சொல்லுங்க" என்றார் க்ருஷ்ணா. சரி தான் என்று தேவகியும் சொல்ல ஆரம்பித்தாள்.

"நான் மதுரைல பிறந்தவ அப்பா அந்த டைம்ல அந்த ஊருக்கே பெரிய நாட்டாமை அதோட அம்மா டீச்சர்.... தியாகுராசான்னா ஊருக்கே தெரியும் அப்பா அவ்ளோ மரியாதையான மனிதர்
நான் படிக்க சென்னை வந்தப்ப சிதம்பரம் அப்டின்றவர காதலிச்சிட்டேன். வீட்ல பாதிபேருக்கு விருப்பமில்லே இருந்தும் கல்யாணம் ஆச்சி அதற்கு அப்பறமாக நான் சென்னைல தான்."

"உங்க வீட்ல ஏன் சம்மதிக்கலை?" என்று கேட்டதும்
"என் கணவர் அந்த காலத்துலயே பணக்கார குடும்பம் தான்....ஆனாலும் அவங்க வேற சாதிகாரர்"

"ஓஹ் அப்பறம்?"

"அப்பறம் சகிதா பிறந்தா அதுக்கு அப்பறம் கொஞ்சம் லேட்டா சக்தி பிறந்தா..." என்றதும் சரத்தின் முகமே சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

"ஓஹ் இப்போ உங்க கணவர் எங்க?" என்று கேட்டதும் தேவகி தலைகுனிந்து விட்டாள். சிவா தான் "ப்பா அவங்க டிவோர்ஸீ ப்ளீஸ் அத விடுங்க" என்றதும் சரி என்று தலையாட்டிய க்ருஷ்ணா....கொஞ்சம் நேரம் கழித்து "தேவகி அம்மா... நீங்க தலைகுனிந்து நிற்க எந்த அவசியமும் இல்ல தப்பு பன்னது அவங்க தானே... நீங்க தைரியமா இருக்கனும் இதற்கு எல்லாம் தலைகுனிவாங்களா.... இரண்டு பெண்பிள்ளைகளை பெற்று படிக்க வைத்து... நல்ல இடத்துல கல்யாணம் பன்னி கொடுத்து இருக்கீங்கன்னா நீங்க எவ்ளோ நிமிர்வாக இருக்கனும் தெரியுமா" என்று கேட்டதும் தான் சக்திக்கு மூச்சே விட முடிந்தது.

மாமா அம்மாவை காயப்படும் விதமாக பேசி விட்டால் நான் வாய் மூடி இருக்க மாட்டேன். அவ்வாறு நான் ஏதும் பேசினால் சிந்துவும் சரி சிவாவும் சரி என்னை சும்மா விட்டிருக்க மாட்டார்கள் என பயந்து கொண்டு இருந்த சக்திக்கோ மாமா அம்மாவை பெருமிதப்படுத்திய பின்பு தான் தாயை தலைநிமிர்ந்து பார்க்கவே முடிந்தது.

உடனே சிவாவும் "அப்கோர்ஸ்ப்பா அத்தை வெரி க்ரேட் அதோட அவங்களுக்கு ஆண் பிள்ளை இல்லைன்னு என்னயும் அஷ்வினயும் நல்ல அன்பா பார்த்துப்பாங்க.... எனக்கு சக்திய விட அத்தையத்தான் அந்த வீட்ல பிடிக்கும்" என்றான் சிரித்த முகமாக... சிவாவை முறைத்து பார்த்த சக்தியை நோட்டமிட்ட க்ருஷ்ணா " என்ன சக்தி நீர் வேண்டுமா? கருகிய வாசம் அடிக்குது" என்று கேட்டு வைக்கவும் தான் சிவாவே சக்தியை கவனித்தான்.

"அய்யோ இதற்கு போயி கோவமா உங்க அம்மாவ தானே பிடிக்கும்ன்னு சொன்னேன் உன் நண்பிய அல்லவே" அதற்கு சக்தி எதுவும் பேசாது நின்று விடவும் சிவாவே "அத்தை உங்களுக்கு மகன் இருக்குன்னு சக்தி சொல்லிச்சே அவருக்கு என்னாச்சி?" என்று கேட்டதும் சரத் தாயை சட்டென்று பார்த்தான்.

"அவன் இறந்துட்டார் ப்பா" என்று விட்டு எழுந்து சென்று விட்டார் தேவகி. சரத்தின் கண்கள் கலங்கியதை நோட்டமிட்ட சிந்து அறைக்கு சென்ற போது கேட்டாள்.

சரத் உண்மையை சொன்னதும் "அய்யோ என்னங்க இது அத்தைக்கு கோவம் அவ்ளோ தான். நடுவுல வந்த மருமகனுக்கே இவ்ளோ அன்புன்னா உங்க மேல அன்பு இல்லாம எல்லாம் போகாது கொஞ்சம் தண்டிக்குறாங்க அவ்ளோ தான்.... உங்க தேவைக்காக நீங்க அநாதைன்னு பொய் சொல்லி
வேற இருக்கீங்க எனக்கே கோவம் தான் அவங்களுக்கு கோவம் வர தானே வேண்டும்" என்று சொல்ல சொல்ல கேட்காது அழுதே விட்டான். "இல்ல சிந்து அம்மா எனக்கு மகன் பிறக்கலைன்னா கூட பரவாயில்ல இப்டி செத்து போயிட்டேன்னு சொல்றது தான் கவலை" என்றான் தலையை கீழே போட்டபடி

"என்னங்க முட்டாள்தனமான பேச்சு எனக்கு மகனே பிறக்கலைன்னா தான் ரொம்ப வெறுப்புன்னு அர்த்தம் இது கொஞ்சம் காலத்துக்கு தான்" என்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டு "என்ன எதற்காகவுமே நீ வெறுத்துறாத ... நிறைய தப்பு பன்னி தலைகுனிந்து வாழ்றது எல்லாமே உன் மேல வந்த காதலாலதான் நீயும் வெறுத்துட்டா நான் நிஜமாகவே செத்து போயிறுவேன்"

"என்னங்க இது நீங்க சுயநலவாதியாக இருந்தாளும் தப்பே பன்னாலும் இத்தனை நாள்ல நீங்க என்கிட்ட எந்த பொய்யும் சொன்னதில்ல எந்த தப்பும் பன்னலை அதோட எந்த சுயநலமும் பன்னலை ஸோ எனக்கு தெரிஞ்சி என் லைப்ல நீங்க கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்கனும் என்றதுதான் உண்மை அண்ணாவ,உங்க குடும்பத்த எல்லாம் நீங்க நம்ப வைக்கனும் இப்போ அப்டி இல்லன்னு
அதற்கு முதல்ல நீங்க கொஞ்சம் மாறனும் உங்க சுயநலத்த விட்டு தொலைங்க
அத்தை அண்ணா எல்லாம் காலப்போக்குல ஏற்றுப்பாங்க அதோட அத்தை மனசு நோகும் படி சக்தி,சகிதா மனசு நோகும் படியோ நடந்துற வேண்டாம். பிகோஸ் எனக்கு இதற்கு மேலயும் அண்ணாவ விட்டு கொடுக்க முடியாது... உங்களுக்காகவாவே இருந்தாளும்" என்று விட்டு க்ருஷ்ணாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள். லஞ்ச் நேரம் பார்த்து சகிதா, அஷ்வின் என எலலோரும் வந்து விட வீடே கலகலவென்று தான் மாறி போனது.... பத்மா சமையல் வேலை செய்வதால் யாரும் கிச்சன் போக தேவை ஏற்படவில்லை வாசலிலே அமர்ந்து இருந்தார்கள்.

சிவாவுக்கு கால் ஒன்று வரவும் அவன் எழுந்து அறைக்கு சென்றான் இருபது நிமிடங்கள் தாண்டியும் வராது போகவும் சக்தி அறைக்கு சென்றாள்.

சிவா மொபைலை நாடியில் ஒட்டி வைத்து தலையை ஆட்டி ஆட்டி யோசனையில் அமர்ந்து இருந்தான்.

"உள்ள வரலாமா?" என்று கேட்டு வைத்தாள் சக்தி. அதுவும் எந்த யோசனையும் இன்றி நிலத்தையே பார்த்த படி அமர்ந்திருந்தான்.

இது சரிப்பட்டு வராது என்று அனுமதி கேட்காமலே உள்ளே சென்று அவனருகில் அமர்ந்து அவன் ஷோல்டரை தொட்டு "என்னங்க என்ன ஆச்சு அங்க எல்லாருமே சந்தோசமா பேசிட்டு இருக்கும் போது இப்டி எழுந்து போயிட்டீங்க"

"அய்யோ எதுவுமில்லம்மா.... நீ போ நான் வர்றேன்"

"அதுலாம் வேண்டாம் போறதுன்னா இரண்டு பேரும் போலாம். இல்லேன்னா இங்கயே உட்காரலாம்" என்று சொல்லிவிடவும் அவள் கைகளை மெதுவாக பற்றி "அது ஒன்னுமில்ல சக்தி ஷ்ருதி இன்னைக்கு காலைல தான் தற்கொலை பன்னிக்கிட்டவாம் ஜயில்லயே.... " என்று விட்டு மனைவியின் முகத்தை பார்த்தான்.

சக்திக்கு ஷாக் தான் இருந்தும் வெளிக்காட்டாது "ஸோ நீங்க கவலை படுறீங்களா...." என்று கேட்டு வைக்கவும் "இல்லடா.... அவ வெளிய வரனும் அப்போ நான் அசைக்க முடியாத இடத்துல ஹேப்பியாக இருக்கனும் அத பார்த்து அவ கதறனும்ன்னு நினைச்சிறுந்தேன். பட் இப்போ அவ இறந்துட்டான்னதும் ஒரு மாதிரி ஆகிறுச்சி...பழி வாங்குறேன்னு கோவத்துல ரொம்ப இறங்கி போயிட்டேனோ ன்னு தோனுது"

அவன் கைகளுக்குள் இருந்து தன் கையை எடுத்து அவனது கைக்கு மேல் வைத்து "நீங்க தப்பு பன்னலைங்க அவ தான் காதலிச்சா அவ தான் உங்கள ஏமாற்றினா , அவ தான் தாரிணி அக்காவோட பழகினா அவ தான் அக்காவ கொன்னுட்டா அவ தான் தற்கொலையும் பன்னிக்கிட்டா நீங்க கேஸ் போட்டீங்க சட்டம் தான் அவள தண்டிச்சது.... இதுல நீங்க தப்பு பன்னது எந்த இடம்ன்னு எனக்கு ஐடியாவே இல்ல அதோட அவள விடுங்க" என்றாள் அவனை நிம்மதிபடுத்தும் விதமாக "ஹம் நீ தான் சக்தி எப்பவும் நான் தப்பு பன்னா தைரியமா சண்டையும் போடுவ தப்பு பன்னேன்னு குற்ற உணர்வுல நின்னா ஆறூதலும் தர்ற.... யூ ஆர் அமேஸிங்" என்றான் புன்னகைப்போடு

"அட போங்க.... " என்று விட்டு எழுந்து அவனையும் கூட்டி கொண்டு வாசலுக்கே வந்து அமர்ந்தாள். "சக்தி வாட்டர் ப்ளீஸ்" என்று சிவா கேட்டு வைக்கவும் "இதோ" என்று விட்டு கிச்சன் சென்றாள்.

பத்மா தனியாக சமையல் வேலை செய்து கொண்டு இருந்தாள். "அக்கா ஹெல்ப் வேண்டுமாக்கா...."

"அய்யோ வேண்டாம் தாயி" என்று விடவும் நீர் எடுத்து சென்று சிவாவுக்கு கொடுத்து விட்டு கிச்சனுக்கு சென்று கொஞ்சம் ஹெல்ப் செய்தாள்.

"நீ நல்லா இருக்கனும்மா இந்த குடும்பம் இந்த வீடு எல்லாம் இப்டி மாறாதான்னு நான் ஏங்காத நாள் இல்ல. கிட்ட தட்ட ஆறு வருஷமா என்ன தவிற இந்த வீட்ல யாருமே இல்ல. தாரா பாப்பா கூட தம்பி கட்டின புது வீட்ல தான் இருப்பா போய் பார்த்துட்டு வந்துறுவேன். ஆனால் இந்த வீடு எப்பவும் அமைதியா அநாதை மாதிரி தான் இருந்தது தாரிணி அம்மாவுக்கு அப்பறம்"

" இப்போ திரும்ப நான் சமைச்சி போடனும் நீங்க எல்லாரும் வயிறார சாப்டனும் அத பார்த்துட்டே கண் மூடிறனும்மா...திரும்ப இந்த குடும்பம் சிதைஞ்சிற கூடாது. அது உன் கையில தான் இருக்கு" என்று அவள் கையை பற்றியதும் "அதுலாம் ஒன்னும் ஆகாதுமா நான் பார்த்துக்குறேன்" என்று விட்டு வேலையை முடித்து கொண்டு வாசலுக்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

மாலையுடனே சிந்து சரத் மற்றும் பசங்க அவர்களது வீ்டு சென்று விட்டனர்.
சகிதா அஷ்வின் மற்றும் தேவகி அவர்கள் வீடு சென்று விடவும் வீட்டில் க்ருஷ்ணா,சிவா,சக்தி மற்றும் தாரா தான் இருந்தனர்.

இரவு தாராவை உறங்க வைத்து விட்டு "சக்தி உன்கிட்ட பேசனும்" என்று கூறவும் இருவரும் மாடிக்கு சென்றனர் "உனக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரியும் பட் ஏஜ் கெப் கொஞ்சம் அதிகமாக இருக்கும்ல உனக்கு பிரச்சிணை எதுவும் இல்லயா..." என்று சிவா கேட்டு வைக்கவும் எந்த பதிலும் சொல்லாது வானத்தை பார்த்து இருந்தவள் "என் வயசு பையனா தான் நான் காதலிச்சேன் கடைஷில என்னாச்சி.... துரோகம் தானே பன்னிட்டு போனான்.... எங்கம்மா சின்ன கேப்ல உள்ளவர தான் காதலிச்சாங்க அவரும் துரோகம் தானே பன்டு போனார்....ஸோ என்ன பொறுத்த மட்டுல" என்று எதையோ சொல்ல போனவளை தடுத்து "ஸோ என்ன பொறுத்தமட்டுல ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர் அப்டி தானே...." என்று கேட்டதும் ஆம் என்று தலையாட்டி விட்டு அவனது கையை எடுத்து தன் தலை மீது வைத்து கொண்ட சக்தி "தவறான பிஸினஸ் எதுவுமே பன்ன மாட்டேன்னு சத்தியம் பன்னி கொடுங்க ப்ளீஸ்" என்று கூறி அவன் கண்களையே பார்த்திருந்தாள். சிவாவும் கொஞ்சம் அமைதியாக நிற்கவும் "ஷ்ருதி, தாரிணி அக்கான்னு உங்க பாஸ்ட்ல இமோஷனலாக இருந்த யாருமே இன்னைக்கு இல்லேன்னா அப்போ பன்ன தவறுகளையும் விட்டுறலாமேங்க..."

"ப்ளீஸுங்க தப்பு பன்னா நமக்கு அது கண்டிப்பா திரும்ப நடக்குமுங்க உதாரணத்துக்கு ஷ்ருதிய வெச்சிகுங்க அவ எந்த ட்ரங் யூஸ் பன்னி ஒரு குடும்பத்த சிதைச்சாலோ அதே ட்ரங்ஸ்ஸால அவ குடும்பம் அவ வாழ்க்கை எல்லாம் சிதைஞ்சி போகலையா.....அதான்ங்க வாழ்க்கை நல்லது பன்னா நல்லது நடக்கும் கெட்டது பன்னா கெட்டது நடக்கும். அதோட இப்போ திரும்ப சிந்து அவ பசங்க மாமா அதோட நம்ம தாரான்னு உங்களால பாதிக்கப்பட்ட யாராவது இவங்க யாராயாவது எதாவது பன்னா கூட நீங்க பலவீனம் ஆயிறுவீங்க தயவு பன்னி தப்பு எதுவும் பன்னாதீங்க..."

அவள் பேச பேச பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன். "சரி எதுவும் பன்னலை" என்று விட்டு அவள் தலை மேல் இருந்த கையை எடுத்து மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு

"யூ ஆர் கரெக்ட் என்னால இதற்கு மேல யாரையும் இழக்குற சக்தியும் இல்ல அதோட பிஸினஸ் பன்னும் போது ஒரு சில சுயநலமான முடிவுகள் தான் எடுத்து ஆகனும் அதை தவிர்த்து நான் தவறான பிஸினஸ் பன்ன மாட்டேன் ஐ ப்ராமிஸ் யூ"

"இதுலாம் விடும் போது கொஞ்சம் நஷ்டங்கள் வர தான் செய்யும் அதற்காக திரும்ப" என்று ஆரம்பித்தவளிடம் "ச்சீ ச்சீ இந்த சிவா பவருக்காக தான் பிஸினஸ் பன்னானே ஒழிய கேவலம் பணத்துக்காக இல்ல சக்தி நான் பிறக்கும் போதுல இருந்து எங்கம்மா இறக்கும் வரை கிட்டதட்ட டென் இயர்ஸ் நான் மிடுல் க்லாஸ் தானே சக்தி..... எனக்கு பணம் தேவைன்னு இந்த பிஸினஸ்லாம் பன்னலை யேன்னா என் வாழ்க்கைக்கு ஒரு இரண்டு பிஸினஸ் பன்னப்பவே போதுமான பணம் கிடைச்சாச்சி..... எனக்கு தேவைபட்டது பவர் தமிழ் நாட்டுல நான் இல்லாத இடமே இல்லைன்ற ஒரு பவருக்காக தான் எல்லா பிஸினஸும் பன்னிட்டு இருந்தேன். அதோட" என்று விட்டு "என் ப்ரஸனல் லைப்ல யாருக்கும் நடக்க கூடாத பல விஷயங்கள் நடந்தாச்சு அதுலாம் யோசிக்க கூட நேரம் இருக்க கூடாதுன்னு என்ன நானே பிஸி ஆகிகிட்டேன். இனி அந்த பிஸி எனக்கு நல்லதில்ல எனக்கு குடும்பம் இருக்குல்ல"என்று விட்டு சக்தியின் தலையை தடவி விட்டான்.

"ஹம்" என்று விட்டு அவனது மார்பில் சாயந்து கொண்டாள் சக்தி..
ஒரு கையால் அவளை பற்றியபடியும் மறுகையை இடுப்பில் குத்திய படியும் நின்றவன் "யூ நோ எனக்கு கவிதை எழுத தெரியும் உனக்காக ஒரு லைன் சொல்லட்டுமா...." என்று கேட்க்கவும் அவள் தலையாட்டினாள்.

நீ அற்ற என் இறந்த காலம்
உன்னோடான என் நிகழ் காலம்
உனக்காக மட்டும் இனி என் எதிர்காலம்-சிவா
என்று கூறி விட்டு அவளை கேள்வியாக நோக்கினான். சக்தி புன்னகைத்த படி சுப்பர் என்று செய்கை செய்து விட்டு

நீ பேசு பேச்செல்லாம் என் காதில் கவிதையாய் மலர்வது தான் காதலா.... -சக்தி
அவளும் ஓர் கவிதையை சொன்னதும்
சிவா ஆச்சர்யமாக பார்த்த படி "ஐ இம்ப்ரஸ்ட்" என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

யாரோடு வாழ விரும்புவோம் என்பது வாழ்க்கையல்ல......
யாரோடு வாழ்ந்து முடித்தோம் என்பதும் வாழ்க்கையல்ல....
நம் மரணிக்கும் போது நம்மை மடிசாய வைக்க ஒருத்தி இருப்பின் அவள் தான் நம் வாழ்க்கை.....-ஸஹ்ரா நஸீர்

____சுபம்____

Continue Reading

You'll Also Like

364K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
9.1K 305 160
Any one can send messages through this privately .... send your feedbacks... you can even scold ... Visit part - 1 then follow the link ...
184K 8.6K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...