கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

By ZaRo_Faz

84.9K 2.6K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... More

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
49
50

44-குற்றமா என் காதல்

1.2K 46 3
By ZaRo_Faz

டயரியை மூடி வைத்த சக்தி வேகமாக பத்மாவிடம் சென்று "அப்போ அந்த ஷ்ருதி ஜயில்லயா?" என்று கேட்டாள்  யோசனையோடு "ஹம்" என்று மட்டுமே சொன்னாள் பத்மா

"ஏன் பத்மாம்மா ஷ்ருதி இவ்ளோ மோசமான ஆள் தானா....?" என்று கேட்டதும் கையிலிருந்த வேலையை விட்டு விட்டு சக்தியின் பக்கம் திரும்பி "நிஜமாகவே நான் அவ கூட இருக்கும் வரை அவ இப்படி பட்டவள்ன்வு எனக்கு தோன்றினதே இல்ல ம்மா நல்ல பொண்ணா தான்ம்மா இருந்தா... அவ தம்பிய ஏமாற்றினப்போல இருந்து அவ பற்றி கேள்வி பட்ட எதுவுமே சரியில்ல"

"ஹம் பாவம்ல சிவா.." என்று விட்டு பத்மாவை பார்க்கவும் "என்ன பன்றது தம்பிக்கு வந்த சோதனை அப்படி பட்டது.... நீயாவது தம்பிய நல்லா பார்த்துக்கோமா...." என்றாள் அவள் ஷோல்டரில் கைவைத்து

அதற்குள் கிச்சன் வரை வந்து நின்றான் சிவா.... பின்னாடியே தாராவும..... உடனே  "தாரா" என்று கூவலோடு சிவாவை தாண்டி கொண்டு தாராவின் கை பிடித்து கூட்டி சென்றாள்.

அறைக்குள் சென்றதுமே "அக்கா நான் ட்ரஸ் மாற்றிட்டு வர்றேன்க்கா...." என்று கூறி சக்தியை அனுப்பி வைக்கவும் திரும்ப கிச்சன் வந்தவள் பத்மாவிடம் "எல்லாம் ஆச்சாக்கா?" என்று கேட்டாள்

"ஆமாம்மா ஏன் பசிக்குதா?"

"இல்லக்கா சும்மா தான்" என்று விட்டு சிவாவின் அறைக்கு சென்று கதவை தட்டினாள் அவன் திறந்த கையோடு  "சாப்பாடு எடுக்கட்டுமாங்க?" என்று தான் கேட்டாள்.

அவள் கொஞ்சம் நர்வஸாக இருப்பதை நன்றாகவே அவதானித்து விட்ட சிவா "கறி கீழ சிந்தாம எடுத்து வை" என்று விட்டு கதவை மூடி கொள்ளவும் 'இது என்ன கறி கீழே சிந்த விட நான் என்ன சின்ன குழந்தையா... இல்ல வேலை செய்ய தெரியாதவள்ன்னு சொல்லாம சொல்றாரா...

நான் வீ்ட்டில் வேலை செய்கிறேன் தானே... அம்மாவை செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பவள் என்று நினைத்து விட்டார் போலும் 

கட்டினவளை நன்றாக அவதானித்தால் தானே தெரியும் அவள் வேலை செய்ய தெரிந்தவளா இல்லையா என்று....

இதற்கு அர்த்தம் கேட்க்க போயி 'பீ கன்ட்ரோல்' மேட்டர் போல் இன்னமும் குழப்பி கொள்ள வேண்டாமே என்று சக்தி சாப்பாட்டை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அனைத்தும் மேசைக்கு வந்த பின்பு  தாராவை கூட்டி வந்து சாப்பிட அமர்த்தினாள் சிவாவை அழைக்கு அறைக்கு செல்ல முதல் அடி எடுத்து வைக்கும் போதே "அய்யோ என்னம்மா இது இவ்ளோ நாள் வாழுற இது கூட தெரியாதா....?" என்று கேட்டதும் புரியாத பார்வையோடு திரும்பி "எது" என்று பார்வையாளே கேட்டாள்.

"நீ கூப்டீங்கன்னுல்லாம் தம்பி உடனே ஓடி வந்துற மாட்டார்ம்மா... அவர் நேரம் வரனும் அப்போ வருவார்" என்றாள் பத்மா....

பத்மா அப்படி சொல்லும் போது தான் சக்திக்கு புரிந்தது வீட்டிலும் இப்படி பல தடவை நடந்ததுண்டு

"தம்பி  வந்து சாப்டுங்க" என்று ஒரு பல தடவை தாய் சொல்லும் போது எல்லாம் "இன்னும் என் நேரம் வரலை அத்தை" என்பான் புன்னகைப்போடு அப்போது எல்லாம் பசி வரலைன்னு சொல்றான் என்று நினைத்து கொள்வார்கள் இப்போது புரிகின்றது பசித்தால் கூட நேரம் வந்தால் தான்  சாப்பிடுவார் என்று

"ஏன்க்கா எதாவது அர்ஜன்ட் வர்க் இருந்தா என்ன பன்வார்?"

"சாப்பாட்டுக்கு பின்னாடி தம்பி ஒரு பழம் சாப்டுவார் அத சாப்டுடு கம்முன்னு ஆயிறுவார்"
"சரி எப்போ அந்த நேரம்?"
என்று கேட்க்கும் போதே கதவு திறந்தான் அத்தோடு இருவரும் கப்சிப் தான்.

வேகமாக வந்து அமர்ந்தவன்  ஷோர்ட் அணிந்து டீசேர்ட்டில் நின்றான். பார்க்க அழகா கம்பீரமாக வயதுக்கு ஏற்றபடி இல்லாது இளமையாக....

அவன் அவ்விடம் வந்ததும் பத்மா உள்ளே சென்று விட்டாள் சக்தி அவனுக்கு தட்டில் பிரியாணி போட அருகில் சென்றதுமே "நோ தேங்ஸ் நீங்களும் உட்கார்ந்து சாப்டுங்க..." என்றான் திமிராக தான் ஆனால் கண்ணில் ஆசையோடு பார்த்திரூந்த சக்திக்கு அன்பாகவே தெரிந்தது உடனே அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

சக்தி தாராவுக்கு மட்டும் வேண்டியதை வைத்து கவனித்தாள்.... "சார் நீங்க இன்னைக்கு ப்ரீயா?" என்று கேட்டதும் தலையை மட்டும் ஆம் என்று ஆட்டினான் ஏன் என்று கேட்பது அவன் பழக்கமில்லை.....அதனால் சக்தியே தான் பேச வேண்டியதாகியது "படம் பார்க்க போலாமா சார்?" என்று கேட்டதும் தாராவின் முகமே சந்தோசத்தில் மலர்ந்ததூ அதை அவதானித்த சிவா "கண்டிப்பா" என்று விட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான்....

ஒரு மூன்று மணியளவில்  சக்தியை அறைக்கு அழைத்த... சிவா "இத பார் சக்தி நான் சென்னைல எங்கயும் என் தாரா வ  கூட்டி போறதில்ல....வெளியூர்ல அவள எங்க வேணா கூட்டி போவேன்.... பட் நீ அவ முன்னாடியே வந்து படம் பார்க்க போலாம்ன்னு கேட்டதும் அவ முகமே சந்தோசத்தில் மலர்ந்துச்சு அவ முகம் வாடிபோக கூடாதுன்னு தான் ஒத்துக்கிட்டேன்..... இது லாஸ்ட்டா இருக்கட்டும் இனி அவ முன்னாடி படம் பார்க்க போலாமா,பாக் போலாமா பீச் போலாமான்னு கேட்க்காத எனக்கு அவள இங்க எங்கயும் கூட்டி போக பிடிக்காது" என்று விட்டு அவள் பதில் பேசுவது கூட அவசியமற்றது என்று கதவை திறந்து "போ" என்றான்.

உச்சியில் கோவமடைந்த சக்தி கதவை மூடி விட்டு அவனருகே சென்றாள்.... அவள் நெருங்க நெருங்க புரியாத பார்வையோடு பின்னோக்கி நகர்ந்தவன் சட்டென்று இந்த விளையாட்டே வேண்டாம் என்பது போல் ச்ட்ரோங்காக நின்று விட சக்தியும் முன்னோக்கி வருவதை நிறுத்தி கொண்டு "நீங்க பேசினா போதும்ன்னு ஏன் நினைக்கிறீங்க.... முதல்ல அதற்கு பதில் சொல்லுங்க...?" என்றாள் கோவமாக...

ஆனால் கூலாகவும் நமுட்டு சிரிப்புடனும் "நான் பேசினா எனக்கு போதும் தானே.... எனக்கு பதில் பேசியே ஆகனும்ன்னு நிர்பந்திக்க முடியாதில்லயா..." என்றான் அவளை இன்னும் கடுப்படிக்க...

அதன்படி கடுப்படைந்த சக்தி "நான் பேச நினைச்சா கூட நீங்க பேச வேண்டாம் என்பது போல் போக சொன்னா அர்த்தம் என்ன?" அவளது அந்த கோவத்தை பார்க்க பார்க்க சிவாவுக்கு சிரிப்பு தான் வந்தது ஆனாலும் அடக்கியபடி "எனக்கு எப்படி தெரியும் நீ பேச நினைக்குறன்னு நீ என்ன வேலையா இருந்தியோ கூப்டு வெச்சி கழுத்தறுப்பானேன் அதான் என் பேச்சு முடிஞ்சதும் இனி எனக்கு பேச எதுவுமில்லன்னு போக சொன்னேன்"

தனக்குள் வந்த கோவத்தை அடக்கியபடி "இன்னைக்கு படம் பார்க்க போறீங்க நாளைக்கு பார்க் போவோம் நாளைக்கு மறு நாள் பீச்சும் போகனும்..... அதுவும் தாராவே வந்து பர்மிஷன் கேட்க்குற மாதிரி பன்னிறுவேன்...." என்றதும் நக்கலாக அவளை பார்த்து "ஏழு வருஷ ட்ரைனிங் அதுலாம் அவ வந்து கேட்க்க மாட்டா" என்றதும் இனியும் உங்களிடம் இப்படி பேசினால் நீங்க வழிக்கு வர மாட்டீங்க என்று

"நீங்க ஏன் சார் அந்த ஷ்ருதிக்கு பயந்துட்டு உங்க பொண்ண ஹவுஸ் அர்ரெஸ்ட் மாதிரி வளர்க்குறீங்க...... உங்க இருபது வயசுல நீங்க கண்மூடித்தனமாக ஒருதங்கள நம்பி தொலைச்சிட்டீங்க.... இப்போ அதோட விளைவுகள் உங்க பொண்ணு இப்டி வெளியே  போக விடாம ஒரு வகை ஜயில் வாழ்க்கை அனுபவிக்கிற மாதிரி ஆகிறுச்சி...." என்று பேசிக்கொண்டே இருந்தவளை வேகமாக நெருங்கி வந்து அவள்  இரு கைகளையும் நெருக்கி பிடித்து கர்ஜனையோடு "எப்டி?" என்று கேட்டான்....

வலியில் வாய்விட்டு "ஆஹ்" என்று சினுங்கியபடி அவன் பற்றியிருந்த கையை அசைத்தாள்...
ஆனால் கைகளை அவன் பிடியிலிருந்தும் அசைப்பானேன்....

இன்னும் வலிக்கட்டும் என்றோ, இல்லை நான் பிடித்தும் அவள் அசைக்கும் அளவு அவளிடம் பலம் இருப்பது பிடிக்காமலோ இன்னும் அழுத்தி பற்றி "எப்படி?" என்று கேட்டான் கர்ஜனையாக

"நீங்க கைய விடும் வரை உங்க கேள்விக்கு பதில் வராது" என்றாள் வலியை பொறுத்து கொண்டு கண்ணில் திமிரோடு

சக்தி அப்படி சொன்னதுமே கையை சட்டென்று விட்டான்.
சக்தி நின்ற இடத்தை விட்டும் பின்னாடி சென்று தான் தன்னை ஒரு நிலை படுத்தி கொண்டாள்.

வேகமாக அவளை தாண்டி சென்று அவள் மூடி விட்ட கதவை சாவியிட்டு லாக் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.

"மலேஷியா போனப்ப தானே டயரிய ரீட் பன்னேன் அங்க தான் ஷ்ருதி  பற்றி எழுதி இருந்திச்சி...." உடனே சட்டென்று எழுந்து அவளை  நெருங்கி "ஹேய் அப்பாகிட்ட இருக்குற டயரில நான் காதலிச்சது மட்டும் தான் எழுதினேன் ஏழு இயர்ஸ்க்கு அப்பறமாக  நடந்தது உனக்கு எப்டி தெரியும் அத சொல்லு?" என்றான் கோவமாக

"அது வந்து இன்னைக்கு தான் உங்க அடுத்த டயரிய வாசித்தேன்" என்றாள் நடுக்கமாக  பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்த சிவா "அடுத்தவங்க பர்ஸனல அவங்க பர்மிஷன் இல்லாம தெரிஞ்சிக்க வெட்கமாக இல்ல.....ச்சீ.... ஒருத்தன் டயரி எழுதுறதே யார்கிட்டயும் செயார் பன்னிக்க விரூம்பலேன்னா தான்.... அத போயி திருடி வாசிக்கிற.....ச்சீ படிச்சி பட்டம் பெற்றா மட்டும் பத்தாது  கத்துக்கனும் டீஸன்ஸ் கத்துக்கனும்" என்று கத்தி விட்டு கதவை திறந்து மறியாதையா போயிடு இல்லேன்னா அடிச்சே  கொன்னுறுவேன்"  என்று காதருகில் வந்து கர்ஜனையோடு சொன்னான்.

சக்தி எதுவும் பேசாது வேகமாக ஓடி சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்து கொண்டு கொஞ்சம்  நேரம் அழுது விட்டு உறங்கியும் போனாள்...

சிவா வேகமாக சென்று தன் டயரிகளை எடுத்து வந்து நெருப்பிலிட்டு எறித்தான் ஒரு நான்கு முப்பது மணியளவில் தாராவை அழைத்து  "படம் பார்க்க போனுமா ம்மா?" என்று கேட்டான் "இல்லப்பா வேண்டாம் அக்கா தூங்குறாங்க.... அவங்களுக்கு ஜொரம்" என்று விட்டு சோகமாக நிற்கவும் "ஜொரமா ஓஹ் காட் அக்காவ கூப்டு டாக்டர் கிட்ட போலாம்ன்னு" என்றதும் "இல்லப்பா அக்கா தூங்குறாங்க நான் போனப்ப சும்மா தொட்டு பார்த்தேன் அப்போ தான் தெரிஞ்சிது அவங்களுக்கு பீவர்ன்னு அவ எழுந்துக்கும் வரை தூங்கட்டும் டிஸ்டப் பன்ன வேண்டாம்ன்னு ப்தமாம்மா சொன்னாங்க" என்றதும் சிவாவும. சரி என்று விட்டான்.

இரவு ஏழு மணியளவில்  பத்மா சிவாவிடம் "தம்பி நீங்க இன்னைக்கு இங்க தான் இருப்பீங்களா?"

"இல்ல பத்மாம்மா சக்தி எழுந்துறிச்சா நான் போயிடுவேன்"

"ஓஹ் அப்டியா அப்போ நான் போகட்டுமா...." என்று கேட்க்கவும் "இந்த இரவுல நீங்க எங்கம்மா போக போறீங்க?"

"நாளைக்கு என் மக புதுவீடு  போறா அதான் என்ன கூட்டி போக வந்து இருக்காங்க" என்றதும் "ஓஹ் அப்டியா... சரி போயிட்டு வாங்க" என்று கூறி கையில் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

"தம்பி நாளைக்கு நைட் வர்றேன் பரவாயில்லயா?"
"அய்யோ ஒரு வீக் இருந்துட்டு வாங்கம்மா...." என்று கூறியதும் "ரொம்ப நன்றி தம்பி...அதோட அவங்களுக்கு பீவர்ன்னு நினைக்குறேன் தம்பி கொஞ்சம் கவனிச்சிறுங்க தாரா வேற தூங்கிட்டாங்க" என்று விட்டு சென்றாள்.

இரவு எட்டு மணியாகியும் வீட்டில் எந்த சத்தமும் இல்லாது போகவும் மெதுவாக சென்று அறையை எட்டி பார்த்தான் தாரா தூங்கி கொண்டு இருக்கவும் அடுத்த அறைக்கு சென்று பார்த்தான் சக்தி சுருண்ட படி உறங்கி இருந்தாள்

மெதுவாக அவளருகில் சென்று அமர்ந்தவன் அவள் நெற்றியை தொட்டு பார்த்தான் நெருப்பாய் கொதித்ததூ.... சட்டென்று கையை எடுத்து விட்டு "சக்தி" என்று அழைத்தான்.

அவன் அழைத்த சத்தத்திலோ எதிலோ சட்டென்று அடுத்த பக்கம் நோக்கி படுக்க திரும்பி விட்டாள்... அவள் மறு பக்க கன்னம் கண்டவன் தலையிலே கை வைத்து விட்டான் "ஓஹ் காட்" என்ற படி

அவனது நான்கு விரலச்சும் பதிந்து அவ்விடம் சிவந்தும் மற்ற இடமெல்லாம் மஞ்சலும் ஆகி இருந்தது ஒரு நொடி அவனுக்கே வலித்தது....

'என்ன காரியம் சிவா பன்னி இருக்க.... ஒரு பொண்ணுக்கு அடிச்சிறுக்க அதுவும் காய்ச்சல் வரும் அளுவு...இதே அச்சோடு இவளை வீட்டுக்கு கூட்டி சென்றாள் சரி வராது அத்தை என்னை வெறுத்தாளும் வெறுப்பார்கள்....'

இன்று இங்கே இருப்போம் என்று முடிவெடுத்தவன்...... அவளை மெதுவாக தொட்டு எழுப்பினான்.

முகசுழிப்போடு எழுந்து அமர்ந்த சக்தியிடம் "வா ஹாஸ்பிடல் போலாம் சக்தி" என்றான் தயக்கத்தோடு 

தயக்கத்தோடூ பேசயதை பார்க்க பிடித்திருந்த சக்தி "இல்ல பரவாயில்ல வேண்டாம்" என்று உறுதியாக மறுத்தாள்.

"இல்ல சக்தி நைட் ஆயிறுச்சி விடியும் வரை வைட் பன்ன முடியாதுல்ல இப்பவே" என்று ஏதோ சொல்ல வாய் எடுத்தவனது முகத்தை கோவமாக பார்த்தபடி "அதுலாம் பரவாயில்ல சார் வாழ வேண்டிய வயசுல பீவர் வந்து இறக்கும் அளவு நான் ஒன்னும் பாவம் பன்னிறல்ல" என்றாள் நச்சென்று

"ஒகே" என்று விட்டு எழுந்து கொண்டவனை நோக்கி "வாங்க வீட்டுக்கு போலாம்" என்றாள் கட்டிலில் இருந்து இறங்கியபடி உடனே சட்டென்று அமர்ந்த சிவா "இல்ல சக்தி நாளைக்கு போலாம் தாராவும் தூங்கிட்டா அதோட நீயும் தூங்கிட்டு இருந்ததால நாளைக்கே போலாம்ன்னு முடிவு பன்னேன்" என்றான் அவளை கேள்வியாக நோக்கி  சரிதான் என்று சக்தியும் "ஒகே" என்று விட்டு மீண்டும் கட்டிலில் சுருண்ட படி மொபைலை எடுத்து வீட்டுக்கு கால் செய்தாள்.

அவள் போன் பேச ஆரம்பித்தவுடன் அறையை விட்டு வெளியே சென்றவன்.....'ஒரு வேலை நான் அடித்தத வீட்ல சொல்லிறுவாளா?' என்ற நினைப்பு வரவும் அறைக்கு வெளியே உள்ள செயாரில் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான்.

இன்று வருவதில்லை இங்கயே தங்குவேன் என்று சொல்லி கொண்டு இருந்த சக்தி சிவா திரும்ப வந்து அமர்வதை கண்டு விடவும் தாயோடு பேசுவதை துண்டித்து விட்டு சகிதாவுக்கு மேஸேஜ் செய்தாள் உறங்கபோவதாக...

அதன் பின்பு காதில் மொபைலை வைத்தவள் "போட்டோ அனுப்பினேனே பார்த்தியாமா... எப்படி அடிச்சாரூன்னு...." என்று கேட்டதும் சிவா தலையில் கை வைத்து விட்டான் 'ஷிட் சொல்லிட்டாளா'

"ஆமாம்மா அவரோட முன்னாள்காதலி இவர ஏமாற்றிட்டார் போல அத நான் டயரி படிச்சி தெரிஞ்சிகிட்டேன்னு தான் அடிச்சாரு...
அவள அடிக்க துப்பில்ல என்கிட்ட வீராப்பு பன்றார்"

சிறு மவுனத்தின் பின்பு அவளே "ஆமாம்மா.... அவ ஏமாற்றினதோட..... இவரோட பொண்டாட்டிய கொலையும் பன்னிருக்கா..."

...........

"அத பற்றி தெரிஞ்சிக்கிட்டேன்னு கோவம்...."
......

"ஆமாம்மா  எனக்கு அப்பாவும் அடிச்சதில்ல...அண்ணாவும் அடிச்சதில்ல நீயே அடிச்சதில்ல இவர் யாரூமா எனக்கு அடிக்க

........

"புருஷனா... என்ன புருஷன்ம்மா.. இவரு... இது வரை என் கிட்ட அன்பா பேசினதுமில்ல... மனைவின்ற உரிமை தந்ததுமில்ல அடிக்க மட்டும் தான் நான் மனைவி அவர் கணவனா...

......

"சரி விடு நான் அப்பறமா பேசுறேன் அவர் மன்னிப்பு கேட்க்கும் வரை நான் இனி  பேசவே மாட்டேன்ம்மா"

.......

"அப்படி தான் பன்னுவேன் நீ சும்மா இரூ பாய்" என்று விட்டு துண்டித்தவள் எழுந்து மாடிக்கு சென்றாள்

அரை மணித்தியாளம் கழித்து மாடிக்கு வந்தான் சிவா.... கையில் ஒரு தட்டில் சன்ட்விச்சோடு  அதை சக்தியிடம் கொடுத்து "சாப்பிடு" என்றான்

"வேண்டாம் சார்" என்றாள் திமிராக
"சரி நான் மன்னிப்பு கேட்டா சாப்டுவியா?" என்று கேட்டான் அன்பான பார்வையோடு

சக்தி எதுவும் பேசவில்லை மவுனமாகவே நின்றாள்.... "ஒகே ஐ யம் சாரி டா" என்றான் அன்பாக அவன் 'சாரிடா' என்றது அவனூக்கு வெறும் வார்த்தையாகவே இருந்தாளூம் தனக்குள் குதித்தாள். அவனை அதற்கு மேல் கெஞ்ச வைக்காது சன்விட்ச்சை எடுத்தூ வாயில் வைத்து உண்ண ஆரம்பித்து விடவும் மென்மையாக புன்னகைத்த சிவா  "நான் யாரையும் இவ்ளோ
ஈஸியா  கை நீட்டி அடிச்சதே இல்ல தெரியுமா எனக்கே புரியலை உன்ன எப்டி அடிச்சேன்னு.."

"ஒகே ஒகே விடுங்க... "

"நீ மனசு எதுவும் வெச்சிக்காத சக்தி" என்றதும்
சரி என்று தலையாட்டினாள்...

"யேன் சிவா சார் உங்க கிட்ட ஒன்னு கேட்க்கட்டுமா...?"

"ஹம் கேளு"

"உங்க சுயநலத்துக்காக என்ன கல்யாணம் பன்னி உங்க விருப்பபடி தான் என்ன வெச்சி இருக்கீங்க உங்களுக்கு நிஜமாகவே நான் யாருன்ற தெளிவு  இருக்கா.... ?
இல்லேன்னா என் வாழ்க்கை இப்டி கேள்வியாகவே இருக்குமா... ?
எனக்கு புரியலை சார்....ஷ்ருதி ஏமாற்றின பின்பு நீங்க உங்களுக்காக தாரிணி அக்காவ சூஸ் பன்னிகிட்டீங்க எனக்கு தமிழ் துரோகம் பன்னதற்கு அப்பறமா.... எனக்கான வாழ்க்கைய கூட தேர்ந்தெடுக்க  டைம் தராம உங்க சுயநலத்துக்காக பிடிச்சிறுக்கு காதலிக்கிறேன்னு ஏமாற்றி கல்யாணம் பன்னிகிட்டீங்க....

இப்போ புரியுது அந்த கடத்தல் விவகாரம் வெளிய போகாம இருக்கனும், தாராவ நல்லா பார்த்துக்க நான் தான் சரின்னு.... உங்க சுயநலத்துக்காக என்ன காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாற்றினீங்கன்னு.... அதுலாம் பாஸ்ட் இப்போ என்னோட பியூசர்க்காக ஒரு முடிவு சொல்லுங்க..
ப்ளீஸ் எனக்கு  ஒன்னும் சன்னியாசம் இருக்க வேண்டிய அவசியம் இல்ல" என்றாள் முடிவை தெளிவாகவே

"என்ன சக்தி இப்டி கேட்க்குற... எனக்குள்ள அப்டி எந்த உணர்வுமே இல்ல.
சக்தி நான் இன்னுமே என் தாரிணியோட இழப்ப மீண்டு வரலைமா..." என்றான்

"பட் உண்மையாகவே வெளிப்படையாக சொல்றேன் எனக்கு உங்கள பிடிச்சிறுக்கு நான் உங்கள விரும்புறேன்....ப்ளீஸ் அக்காவ எப்படியாவது மறந்துட்டு என்கூட வாழுற வழிய பாருங்க.... இல்லேன்னா டிவோர்ஸ் கொடுங்க... நான் எனக்காக ஒருத்தர தேர்ந்தெடுக்கனும்" என்று கோவமாக கத்தி விட்டு மீதமுள்ள சன்ட்விச்சை அவன் கையிலே கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

அவளை காதலி்க்க சொல்லி மிரட்டுகின்றாள்
என் காதலி...


Continue Reading

You'll Also Like

80.2K 10.1K 52
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
217K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
137K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
431K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...