காதல்கொள்ள வாராயோ...

De Madhu_dr_cool

37.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. Mais

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
36
37
38
39
40
41
42
43
Mood boards!

35

566 32 26
De Madhu_dr_cool

அலுவலகம் திறக்க ஒருமணிநேரம் இருக்கும்போதே தன்னறைக்கு வந்தமர்ந்து நெடிய பெருமூச்சொன்றை விட்ட ஆதித்தை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தான் ராஜீவ்.

"பர்வதம்மாவோட ஆதிக்கம் அப்டியே உங்க முகத்துலயே தெரியுதே பாஸ்! விட்டா உங்க கூடவே ஆபிசுக்கும் வந்திருப்பாங்க போலவே?"

"ஹ்ம். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க."

தமாஷாகப் பேசவந்த ராஜீவ் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்.

"பாஸ்.. ஜோக்கடிக்கறீங்களா? அதை ஏன் சீரியஸான முகத்தோட சொல்றீங்க?"

"ஏன்னா நான் ஜோக் அடிக்கல. பாட்டி, மாம், டாட், எல்லாருமே வந்துகிட்டிருக்காங்க பேக்டரியைப் பார்க்க."

"ஓ மை காட்!"

"போய் கொஞ்சம் ப்ரொடக்சன் யூனிட்டைப் பாரு. எதாவது இடைஞ்சல் இருந்தா அதைக் கவனி. பாட்டி வந்து பார்க்கறப்ப என் மானத்தை வாங்காம காப்பாத்து ராஜீவ்."

"எஸ் பாஸ்!"

அவன் அவசரமாக வெளியேற, ஆதித் பாட்டிக்குக் காட்டுவதற்காகத் தரவுகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினான்.

***

"எனக்கு ரொம்ப திருப்திடா கண்ணா.."

"தேங்க்ஸ் பாட்டி, கம்பெனி உண்மைலயே நல்லா நடக்குது."

"கம்பெனியை யாரு சொன்னா!? தாராக்குட்டி இங்கே சந்தோஷமா இருக்கா. அதுவே எனக்குப் போதும்!"

ஆதித் ஆயாசமாகக் கண்களைச் சுழற்றினான். சுமார் மூன்று மணிநேரங்கள் ஆலையைச் சுற்றிக்காட்டிய பின்னர் பர்வதம்மாவிடம் கிடைத்த நன்மொழி இதுதான் எனும்போது, மேற்கொண்டு பேசத் திராணியில்லை அவனுக்கு.

அலுவலக அறையில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்து சில மேலாளர்களுடன் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் சென்று அவர்களுடன் இணைய, தரவுகளை மூடிவிட்டு எழுந்தார் மாதவன்.

"அக்கவுண்ட்ஸ் எல்லாம் பர்ஃபெக்டா இருக்கு ஆதித். யுவர் செக்ரெட்டரி இஸ் எ க்ரேட் கைய்."

"தேங்க்ஸ் சார்" எனப் புன்னகைத்தான் ராஜீவ்.

"ஸோ, உன் செக்ரட்டரியை இன்னிக்கு ஒருநாள் நான் கடன்வாங்கிக்கறேன். உங்கம்மாவுக்கு ஷாப்பிங் போகணும். எனக்கும் சில முக்கியமான இடங்களுக்குப் போகணும்"

ராஜீவை ஆதித் திரும்பிப்பார்த்துக் கண்களால் வினவ, அவனும் சம்மதித்தான்.

அவர்கள் கிளம்ப, பாட்டி சிறிதுநேரம் மேலாளர்களிடம் பேசிவிட்டுத் திரும்பிவந்தார்.

சுவரிலிருந்த கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஆதித்திடம் திரும்பினார் அவர்.

"சாப்பாட்டு நேரம் ஆச்சுல்ல? தாராவுக்கும் காலேஜ் முடிஞ்சிருக்கும் இந்நேரம்.. அவ எப்படி வருவா வீட்டுக்கு?"

"ட்ரைவர் பிக்கப் பண்ணிக்குவார் அவளை. நீங்க வாங்க, உங்களை வீட்ல ட்ராப் பண்றேன் நான்."

"ஏன்? வந்த எனக்கு வழி தெரியாதா திரும்பிப் போக? நான் போயிக்குவேன், நீ போய் தாராவை கூட்டிட்டு வீட்டுக்கு வா, போ கண்ணா!"

மறுத்துக்கூற வாயெடுத்தாலும், உள்ளூர சற்றே ஆர்வமாகத்தான் இருந்தது, தாராவைக் கல்லூரியில் காண. எனவே தலையசைத்துவிட்டு தாஸுடன் அவனும் கிளம்பினான்.

**

"நேத்து இங்கதான் வெய்ட் பண்ணிட்டிருந்தாங்க.. காலைலயும் இங்கதான் சார் இறக்கி விட்டேன்.."

தாராவை அங்குமிங்கும் தேடியவாறு ஆதித்திடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஓட்டுநர் தாஸ்.

பத்து நிமிடத்திற்குப் பின்னர் வேறொரு கார் வந்து சாலையில் எதிர்ப்புறம் நிற்க, தாரா அதிலிருந்து இறங்கிக் கையசைக்க, ஆதித் அதைக் கவனித்துவிட்டு வியப்பானான்.

அதற்குள் தாராவும் அவனைப் பார்த்துவிட, தாழ்ந்த பார்வையுடன் அவனைநோக்கி நடந்துவந்தாள் அவள்.

"அ.. அது.. யாருன்னா.."

"சேச்சே.. வேணாம்.. எங்கிட்ட எந்த விளக்கமும் தரவேணாம். உன் சுதந்திரத்துல தலையிட எனக்கு உரிமை கிடையாது. ஜஸ்ட் பீ கேர்ஃபுல். என்ன செஞ்சாலும் கவனமா இரு, அதுபோதும்."

தாராவிற்கு ஏனோ அவனது அணுகல் பிடித்திருந்தது. வெளிச்சமாகப் புன்னகைத்தவள், "ஒரு ஃப்ரெண்ட். அவ்ளோதான். ரொம்ப நல்ல டைப். வாய்ப்புக் கிடைச்சா உங்களுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்றேன்" என்றிட, அவனும் தலையசைத்தான் மென்மையாக.

"என்ன, இன்னிக்கு நீங்களும் காலேஜுக்கு வந்திருக்கீங்க?"

"பாட்டியோட ஆர்டர்!"

தாரா கலகலவெனச் சிரித்தபடியே காரின் பின்சீட்டில் ஏறிக்கொண்டாள்.

வீட்டை அடைந்தபோது பர்வதம்மாள் கூடத்தில் அமர்ந்து காத்திருக்க, ஓடிச்சென்று அவரிடம் அமர்ந்துகொண்டாள் தாரா.

"பாட்டிம்மா.. சாப்பிட்டீங்களா? அத்தையும் மாமாவும் எங்கே?"

"இப்ப வந்துருவாங்கடா கண்ணா, மாது இப்பதான் ஃபோன் பண்ணான். சரி அவங்க வந்துடட்டும்னு நான் காத்திருக்கேன். உனக்குப் பசிச்சதுன்னா நீ வேணா--"

"சேச்சே.. பசிக்கல பாட்டி, அவங்க வந்ததுமே சாப்பிட்டுக்கலாம். நான் வெய்ட் பண்றேன்"

அவர் ஆதித்தைத் திரும்பிப் பார்த்தார்.
"என்ன ஆதித், உன் டைம் வேஸ்ட் ஆகுதா? நீ கம்பெனிக்குப் போகணுமா?"

பாட்டியைப் பொய்யாக முறைத்தவன் எதிரிலிருந்து நாற்காலியில் அமர்ந்தான்.

"அவ்ளோ workaholic ஒண்ணும் கிடையாது நான். உங்களுக்காக, மம்மி டாடிக்காக, வெய்ட் பண்றதுல எனக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது பாட்டி!"

அரைமணியில் மாதவனும் உஷாவும் வந்துவிட்டபிறகு மதிய உணவு இனிமையாக முடிய, உள்ளறையில் உஷா தான் வாங்கிவந்த துணிமணிகளைப் பிரித்து தாராவிடமும் பர்வதத்திடமும் காட்டிக்கொண்டிருந்தார்.

"அட, இந்தப் புடவை செம்ம அழகா இருக்கு அத்தை! உங்களுக்கு சூப்பரா சூட் ஆகும்! அந்த கம்மல் செட் கூட ரொம்ப அழகா இருக்கு! ஹேண்ட்பேக் மூணுமே வேற லெவல்!!"

"போதும்டா தாரா! நான் சும்மா கைக்கு அகப்பட்டதை எடுத்தேன், அவ்ளோதான்.."
மறைத்த பெருமிதத்துடன் புன்னகைத்தார் உஷா. பர்வதம் சிரிப்புடன், "உன் மருமகளுக்கு ஒண்ணும் வாங்கலியா?" என்க, "வாங்காம வருவேனா அத்தை?" என்றபடி இன்னொரு பெரிய பையை எடுத்துத் தாராவிடம் நீட்டினார் அவர்.

"உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதுடா, அதான்.. பார்த்ததை எடுத்தேன்.. நல்லா இருக்கா பாரு"

"அச்சோ.. என்னத்தை இதெல்லாம்..?"

"என் தாராக்குட்டிக்கு வாங்காம வேற யாருக்கு நான் வாங்கித்தரப் போறேன்? ஒரு பொண்ணு இருந்தா அவளை எப்படியெல்லாம் சிங்காரிச்சு பார்த்திருப்பேன்... எனக்கு இனி எல்லாமே நீதான்! பிரிச்சுப் பாரும்மா!"

தன் அன்னை தேவிக்கு நிகராகத் தன்மீது பாசத்தைப் பொழியும் உஷாவைப் பனித்த கண்களுடன் பார்த்தவள், சட்டென எழுந்து அவரைக் கட்டிக்கொண்டு விசும்ப, உஷாவும் பர்வதமும் திகைத்துப் போயினர்.

"அட, என்னம்மா இது சின்னக் குழந்தையாட்டம்..?"

உள்ளிருந்து வந்த மாதவனும் ஆதித்தும் திகைப்பாகப் பார்க்க, பர்வதம் அவளை ஆசுவாசப்படுத்தினார். தன்னிலை திரும்பியவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள். பையிலிருந்து பிரித்த ஊதா நிற அனார்கலி சுடிதாரை மடிமீது வைத்துப் பார்த்துப் புன்னகைத்தாள் தாரா.

"ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அத்தை. எனக்கும் அம்மாவுக்கும் வாடாமல்லி கலர்னா ரொம்பவே பிடிக்கும்.."

"உஷாவுக்கும் வயலெட் ரொம்ப எடுப்பா இருக்கும்; அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்" என்றார் மாதவன். உஷா சிரிப்புடன் ஆமோதித்தார்.

"சரி, புது ட்ரெஸ்ஸை போட்டுட்டு எங்காச்சும் வெளிய போயிட்டு வரலாம்ல?" என யோசனை சொன்னார் பர்வதம். தாராவும், "ஓகே பாட்டி.. ஈவ்னிங் ஊரை சுத்திப் பார்க்க போலாமா மறுபடி?" என்றிட, பர்வதமோ சிரித்தார்.

"நாங்க எதுக்கு மறுபடி? நீயும் ஆதித்தும் போயிட்டு வாங்க!"

தாரா அதிர்ந்துபோய் ஆதித்தைப் பார்க்க, அவனோ எங்கோ பார்த்தபடி நின்றான் கைகட்டி.

"அ.. அது.. எதுக்கு பாட்டி..? அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்."

"அதையெல்லாம் அவனோட செக்ரெட்டரி பார்த்துக்குவான். அந்தப் பையன் நல்ல அறிவாளி. ஆதித், நீ தாராவை டின்னருக்கு வெளிய கூட்டிட்டுப் போ."

"ஓகே பாட்டி."

மறுப்பின்றிச் சொன்னவனை புரியாமல் பார்த்தாள் தாரா.

ஆதித் கிளம்புகையில் வாசல்வரை சென்றபோது சன்னமான குரலில், "ஏன் முடியாதுன்னு சொல்லல? நீங்கதான் தைரியமா உங்க வீட்டு பெரியவங்களை எதிர்த்துப் பேசுவீங்களே?" என அவள் வினவ, கோபமாகப் பார்க்க முயன்று முடியாமல் சிரித்துவிட்டான் ஆதித்.

"அவங்க சொல்றபடி எதிர்ப்பில்லாம நடந்துக்கிட்டா அவங்க சீக்கிரம் கிளம்பிப் போவாங்க. இல்லைன்னா மினிமம் மூணு மாசத்துக்கு இங்கதான் இருப்பாங்க. எப்படி வசதி?"

"எனக்கொண்ணும் பெரிய கஷ்டமில்லை அத்தைகூட இருக்க.." என வாய்க்குள் முணுமுணுத்தவாறே அவள் திரும்பிச் செல்ல, மறைத்த புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடந்தான் ஆதித்.

***

ஊதா நிற சுடிதாரில் ஆதித்தின் அறையில் அவனது ஆளுயர நிலைக்கண்ணாடியின் எதிரில் நின்றபோது, ஏனோ தாராவின் இதயம் படபடத்தது.

கூந்தலைப் பின்னாமல் விரித்து, பட்டாம்பூச்சி போலிருந்த சின்ன க்ளிப்பால் இரண்டு கற்றைகளை மட்டும் சேர்த்துப் பிணைத்தவள், தனுஷ் தனக்காக என்றோவொரு பிறந்தநாளுக்கு வாங்கித்தந்த தங்கநிற ஜிமிக்கிகளை எடுத்து அணிந்துகொண்டாள்.

கண்ணாடியில் பார்க்கும்போது தேவலாமென்றிருக்க, படியிறங்கி வந்தபோது பர்வதமும் உஷாவும் மாறிமாறி நெட்டியெடுத்துப் பூரித்துப்போக, தாராவும் பிரகாசமானாள். அதேநேரம் சரியாக ஆதித்தும் உள்ளே நுழைய, படிக்கட்டில் பூப்போல இறங்கிவரும் தாராவைக் கண்டவன் கண்கள்மின்ன நின்றான்.

*****

Hello everybody! Wish you a happy new year!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாசகப் பெருமக்களே! எல்லா வளமும் பெற்று வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

இதேபோல உங்க ஆத்தரை வாழ்த்துங்க, இந்த வருஷம் அரியர் வைக்காம பாஸ் ஆகி, மருத்துவர் மதுவாக எப்படியாச்சும் திருச்சி அரசு மருத்துவமனையிலேயே குப்பைகொட்ட வேண்டும் என்று!

கதை எப்படிப் போகுது? இப்பதான் ஒரு 45% முடிஞ்சிருக்கு. குறைந்தபட்சம் எண்பது அத்தியாயங்கள் வரும் என்பது எனது கணிப்பு. ரொம்ப ஸ்லோவா தான் போகும். 'எப்படா லவ்வை சொல்லுவாங்க' என நீங்கள் மண்டையை பிச்சிக்கிட்டு என்னை கமெண்ட் செக்சனில் திட்டிட்டு இருப்பீங்க. இருந்தாலும் உங்களை ஏமாற்றாத அளவிற்குக் கதையின் தரம் இருக்கும்.

மீண்டுமொருமுறை ஹேப்பி நியூ இயர்! வாக்களித்து, நண்பர்களிடம் பகிரவும்! நன்றி!

அன்புடன்,
மது.

Continue lendo

Você também vai gostar

834 16 5
என்னோட முதல் கதை... இப்போ அமேசான் re எடிட்க்காக மொத்தமா மாத்தி இருக்கேன்🧘🧘
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
133K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
95.1K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...