காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

40.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Mood boards!

6

955 52 32
By Madhu_dr_cool

"கல்யாணமா? பாட்டி, என்னதிது? டாடி என்ன சொல்றார்?"

பர்வதம் தலையாட்டினார்.

"உங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் இப்போதைக்கு இண்டியாவுல செட்டிலாகற ஐடியா இல்ல. அதான், நானே உனக்குப் பொண்ணுப் பார்க்கலாம்னு இருக்கேன். அதான், உனக்கு எந்தமாதிரி பொண்ணு வேணும்னு கேட்டுட்டு--"

"நோ பாட்டி! உங்ககிட்ட நான் என்ன சொல்லிட்டு கொல்கத்தா போனேன்? நானா கேக்குற வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்கக்கூடாதுன்னு சொன்னனா இல்லையா?"

"எத்தனை நாள்தான் உன் சம்மதத்துக்காக நாங்க காத்திருப்போம் ஆதி? We aren't getting any younger. நாலரை வருஷமா நாங்களும் 'இப்ப கேப்பான், அப்பறம் கேப்பான்'னு எதிர்பார்த்துட்டே பொறுமையா இருந்தோம். ஆனா இன்னும் அதைப்பத்தி நீ வாய் தொறக்காம இருந்தா எப்படி?"

"ப்ச்.. அதுக்காக? பாட்டி.. நான் இந்த கல்யாணம், கமிட்மெண்ட்டுக்கெல்லாம் ரெடியா இல்ல... எனக்கு ஏகப்பட்ட கோல்ஸ், ஆம்பிஷன்ஸ் எல்லாம் இருக்கு. கல்யாணம்ங்கறது, இப்போதைக்கு என்னோட prioritiesல கட்டக்கடைசியா தான் இருக்கு. என்னை விட்டுடுங்க."

பர்வதம் உஷாவைத் திரும்பிப் பார்க்க, அவர் "கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் லட்சியத்தை கன்டின்யூ பண்ணவேண்டிது தானே? யாரு உன்னை தடுத்தா? யூ ஆர் பீயிங் செல்பிஷ் ஆதி..." என்றார் குற்றம்சாட்டும் தொனியில்.

"மாம்.. அந்த வார்த்தையை எனக்கு சொல்ல வேணாம். நான் சுயநலமா இருந்தா, இந்நேரம் அவசியமில்லாம யாரோ ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காக இவ்ளோ தூரம் ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கமாட்டேன். பாட்டி, உங்களுக்கு பாராவுல இருந்து ஸாரீஸ் வாங்கிட்டு வந்தேன். பேக்ல இருக்கு. அவங்களுக்கும் கிஃப்ட்ஸ் வாங்கினேன், நீங்களே குடுத்துருங்க.."

அவர் மேற்கொண்டு பேசுமுன் ஆதித் எழுந்து மாடிக்குத் தனது அறையைத் தேடிச் சென்றுவிட, பெற்றோர் இருவரும் கவலையான முகத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பர்வதத்திடம் திரும்பினர். அவர் பெருமூச்செரிந்தார்.

"சின்ன வயசுல அவனைக் கவனிக்காம விட்டுட்டதால தானே இப்ப இப்படி எடுத்தெரிஞ்சு பேசறான்..."

"அத்தை.. நாங்க அவனுக்காகத் தானே இதையெல்லாம் செஞ்சோம்?? ஓடி ஓடி சம்பாதிச்சதெல்லாம் நாங்க அனுபவிக்கவா என்ன!? ஒரே பையன் நல்லா வசதியா இருக்கணும்னு தானே?"

"ஆமாம் உண்மைதான், இல்லைங்கல. ஆனா இப்ப அவன் உங்க பணத்தை தொடக்கூட மறுத்துட்டு, அவனா உழைச்சு சம்பாரிக்கறான். பாசத்தையும் பணத்தையும் ஒரே தராசுல வைக்க முடியாதும்மா."

பர்வதமும் எழுந்து வெளியேறினார் அத்துடன்.

*

அதிகாலையில் வழக்கம்போல விழிப்பு வந்தவுடன் எழுந்துவிட்டான் ஆதித். விடுமுறையில் இருக்கிறோமென நினைவு வந்ததும் தனக்குள் புன்னகைத்தவாறே சென்று உடற்பயிற்சிக்குத் தயாராகிக் கீழே வந்தான்.

"யாரும் எந்திரிக்கலையா இன்னும்?"

"இல்லைங்க ஐயா. பெரியம்மா எட்டரை மணிக்கு தான் எழுவாங்க. உங்களுக்கு காபி கொண்டு வரலாங்களா?"

வேண்டாமெனத் தலையசைத்துவிட்டு, "நான் ஜாகிங் போறேன், பாட்டி கேட்டா சொல்லுங்க" என்றவன், தனது காலணிகளை அணிந்துகொண்டு காம்ப்பவுண்டைத் தாண்டி வெளியே ஓடத் தொடங்கினான்.

கொல்கத்தா குளிரையே பார்த்தவனுக்குக் கோவைக் குளிரென்ன மாத்திரம்? பனிபடர்ந்த சாலையில் தன்னந்தனியாக ஓடுவதில் அவனுக்குத் தான் அலாதிப் பிரியமே! மூச்சுவாங்க ஓடியவன், ஆர்.எஸ்.புரம் தாண்டி, காந்திபுரத்தை அடைந்துவிட்டான்.

"இங்கே மார்க்கெட்ல சாத்துக்குடி கிடைக்குமா?"

"ஓ! ஏழு மணிக்குத் திறப்பாங்க சார், எல்லாப் பழமும் கெடைக்கும்"

இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்ததால், நேரம் போக்குவதற்காக அங்கிருந்த பூங்கா ஒன்றினுள் சென்று அமர்ந்தான் அவன். மூன்று நாட்களில் தீபாவளியென்பதால் அங்குமிங்கும் பட்டாசுக் கடை விளம்பரங்கள் சிவப்பிலும் பச்சையிலும் நிறைந்திருக்க, தரையிலும் ஏகப்பட்ட பட்டாசுக் குப்பை சேர்ந்திருந்தது. சாலையில் எதிரிலிருந்த ஆஞ்சநேயர் கோவில் இப்போதுதான் திறக்கப்பட்டு, பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாருதி. குளிர் ஓரளவு குறைந்து, இளமஞ்சள் வெளிச்சம் பூங்காவின் ஊசியிலை மரங்களில் விழத் தொடங்கியிருந்தது. சுற்றுமுற்றும் ரசித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவன், யாரோ அவசரமாய் ஆஞ்சநேயரிடம் ஓடிச் சென்றதைக் கண்டு திரும்பினான் அத்திசையில்.

"காலேஜ் நாளைல இருந்துதான் லீவு! இன்னிக்கு போயாகணுமாமா... ப்ச், ஸ்கூலுக்கெல்லாம் லீவு விட்டாச்சு, எங்களுக்கு மட்டும் லீவு இல்லையா? அதுலயும் கடைசி நாள்ல அசைன்மெண்ட் குடுக்கறதுக்குன்னே வருவாங்க எங்க லெக்சரருங்க! ஆஞ்சநேயா, நீதான் உன் குழந்தைய அவிங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்! அப்பறம், நாளைல இருந்து லீவுங்கறதால, காலைல எழுந்து வந்து உன்னைப் பார்க்க முடியாது, காலேஜ் திறந்ததும் மீட் பண்ணலாம் ஆஞ்சநேயா.. ஹேப்பி தீபாவளி!"

யாரும் பார்க்கவில்லையென நினைத்து அனுமனிடம் உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த கருப்புச் சுடிதாரை, மரங்களினூடே பார்த்தான் ஆதித். முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் குரல் பரிச்சயப்பட்டதுபோல இருந்தது. கையை அசைத்து அசைத்து அவள் பேசும் வேடிக்கையில் தன்னையறியாமல் சிரிப்பு வந்துவிட, கைவைத்து வாய்மூடி அடக்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்து மார்க்கெட்டைத் தேடிச் சென்றுவிட்டான் அவன்.

சாத்துக்குடிப் பழங்களோடு வீட்டிற்கு வந்தபோது, மாதவனும் உஷாவும் அப்போதுதான் தங்கள் அறையிலிருந்து வந்தனர்.
"குட்மார்னிங் டாட்! குட்மார்னிங் மாம்!"

ஆதித்தின் உற்சாகத்தை அவர்கள் பிரதிபலிக்கவில்லை. சோகமான பார்வையோடு அவனையே பார்த்தனர் இருவரும். அவனோ தோளைக் குலுக்கிவிட்டு, வேலையாள் ஒருவரிடம் சாத்துக்குடியைத் தந்து பழரசம் தயாரிக்குமாறு ஆணையிட்டுவிட்டுக் குளிக்கச் சென்றான். திரும்ப வந்தபோது, உஷா அவனுக்காகக் காத்திருந்தார்.

"ஆதித், அம்மாவுக்கு உன்கூட கொஞ்சம் பேசணும்டா.. நீ ஃப்ரீயா?"

"மாம்.. நீங்க எதுவும் பேசவேணாம்.. ஐம் சாரி, நான் நேத்து அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அதை மறந்துடுங்க.."

"இருந்தாலும்--"

அவர் பேசுவதைக் கேட்கக் காத்திருக்காமல், பாட்டியிடம் செல்லப் படியிறங்கினான் அவன்.

அமைதியாகவே காலை உணவு முடிய, பர்வதம் வழக்கத்திற்கு மாறான மவுனத்தோடு இருக்க, ஆதித் கரிசனமாக ஏறிட்டான் அவரை.
"பாட்டி.. ஏன் எதுவும் பேசமாட்டேங்கறீங்க? என்மேல இன்னும் கோபமா?"

"சேச்சே.. எனக்கென்னத்துக்கு கோபமெல்லாம் வரப்போகுது.. நீ சின்னப் பையன் கிடையாது, வளர்ந்தவன். நீ முடிவு எடுத்துட்ட பிறகு, நாங்க என்ன பேசறது?"

பாட்டி இவ்வளவு சீக்கிரமாக எதையும் விட்டுவிட மாட்டாரே என யோசனையானான் ஆதித். ஆயினும் வெளிக்காட்டாமல், உணவருந்திவிட்டுத் தன்னறைக்குச் சென்றுவிட்டான்.

நேரம் போவது தெரியாமல் மடிக்கணினியில் தனது ஆலைகளின் உற்பத்தி நிலவரத்தையும், பங்குச்சந்தை மதிப்புகளையும் அலசிக்கொண்டிருந்தவன், யாரோ கதவைத் தட்டும் ஓசையில் கவனம் திரும்பினான்.
"யெஸ்?"

"ஐயா, உங்களைப் பார்க்க உங்க சினேகிதர் வந்திருக்கறாருங்க" எனப் பணியாளர் ஒருவர் அறிவித்தார்.

அவன் வினவும் விழிகளுடன் நிமிர, கதவைத் திறந்துகொண்டு ஆதித்தின் வயதொத்த இளைஞன் ஒருவன் முகம்கொள்ளாச் சிரிப்புடன் நுழைந்தான்.

"ஆதி! மச்சான்!!"

ஓடிவந்து தன்னை அணைத்துக்கொண்டவனை முதுகில் பலமாகத் தட்டியவாறே, "ஹேய்! எப்டி இருக்க நகுல்?" எனச் சிரித்தான் ஆதித்.

"I'm good. எப்ப ஊர்ல இருந்து வந்த ஆதித்? ஃபோன்கூடப் பண்ணல?"

கட்டிலுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் ஆதித் அமர, நகுலும் அவனுக்கு அருகிலேயே அமர்ந்தான்.

"அப்பறம்..? கல்கத்தாவெல்லாம் எப்படி இருக்கு?"

"நல்லா இருக்கு. உன் வேலை எப்படி இருக்கு? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க.. நரேனுக்கு கூப்பிடறேன், இரு. அவனும் வரட்டும். அவன் சொன்னானா, அவங்க வீட்ல மும்முரமா பொண்ணுத் தேடிட்டு இருக்காங்க.. தை மாசம் கல்யாணம் வச்சே ஆகணும்னு அவங்கம்மா பிடிவாதமா நிக்கிறாங்களாம்"

"ஓஹோ.., கோவையின் காஸனோவா கடைசில குடும்பஸ்தனாகத் தயாராகிட்டாரா!?"

நகுல் சிரித்தான்.
"யாருக்கு நல்லதோ, ஊருக்கு ரொம்ப நல்லது!

நரேன், நகுல், ஆதித் நிவேதன்- மூவருமே பள்ளிப் பிராயத்திலிருந்தே நெருக்கம். கல்லூரிகளால் திசைமாறிப் போனாலும், இன்னமும்கூட பால்ய சினேகிதம் மறையவில்லை. நரேன் பார்ட் டைமாகப் பொறியியல் படித்துவிட்டு, முழுநேரமாகக் கோவையின் கல்லூரிப் பெண்களிடம் கவிதைகள் படித்துக்கொண்டிருக்க, நகுல் சென்னையில் எம்.பி.ஏ படித்துவிட்டு, பர்வதம் க்ரூப்ஸ் அலுவலகத்திலேயே சேர்ந்துவிட்டான்.

தற்போது கைபேசியில் அழைத்த இருபதாவது நிமிடத்தில் உற்சாகமாக உள்ளே நுழைந்தான் நரேன்.

"டேய் பிஸினஸ்மேன்! எப்பப் பாத்தாலும் பிஸியாவே இருப்பியோ? ஃபோன் கூடப் பண்றதில்ல!? எப்படிடா இருக்க??"

வந்தும் வராமலுமே ஆதித்தை உடும்புப்பிடியில் பிடித்து அணைத்துக்கொண்டான் நரேன்.

"நல்லா இருக்கேன்டா ரோமியோ! கல்யாணமாமே!?"

"அதை ஏன் கேக்கற!? இந்தத் தையோட எனக்குக் கல்யாண யோகம் மறையுதாம். அதுக்குள்ள எப்படியாவது ஒரு பொண்ணைப் பிடிச்சு என் தலைல கட்டிடணும்னு மொத்தக் குடும்பமும் தேடுதல் வேட்டைல இருக்கு!"

ஆதித் பலமாகச் சிரித்தான். "ஆழ்ந்த அனுதாபங்கள்!"

"இருக்கட்டும் இருக்கட்டும்.. உனக்கு எப்ப கல்யாணம்?"

"நோ சான்ஸ்! இப்போதைக்கு அந்த ஐடியாவே கிடையாது!!" ஆதித் சிரித்தவாறே சொல்ல, நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கண்களால் ஏதோ பேசிக்கொண்டனர்.

நரேன் மெதுவாக, "கல்கத்தாவுல கேர்ள்ஃப்ரெண்ட் யாராச்சும் இருக்காங்களாடா ஆதி? இல்ல இங்க ஏதாவது பழைய லவ்வர்?" என வினவ, அவன் வினோதமாகப் பார்த்தான்.

"ஏன்டா திடீர்னு இப்படிக் கேக்கற? You know I'm not the committing type"

நகுல் புன்னகையோடு, "அப்ப சிங்கிளா தான் இருக்கற நீ.. கரெக்டா?" என்றிட, ஆதித் உண்மையிலேயே குழம்பிப்போனான்.

"அதை ஏன் புதுசா சொல்ற?"

அவனோ ஆதித்தைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்.
"ஹ்ம்ம்.. ஒருவேளை, உனக்குக் கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் வருதுன்னு வச்சிப்போம். என்ன மாதிரிப் பொண்ணை நீ பார்ப்ப? கேரக்டர், கரியர்.. எல்லாம் எப்படி இருக்கணும்னு நீ நெனைப்ப?"

அவனுக்கு அக்கேள்வியில் புரிந்துவிட்டது அங்கே நடப்பது. நாற்காலியிலிருந்து எழுந்து இருவரையும் முறைத்தான் ஆதித்.

"பாட்டி அனுப்பினாங்களா உங்க ரெண்டு பேரையும்?"
ஆதித் முறைக்க, இருவரும் விழித்தனர்.
"ஹிஹி.. இல்லடா, நாங்களா தான் வந்தோம்.."

நரேன் அசடுவழிய, ஆதித் முறைப்போடே எழுந்து பால்கனிக்குச் சென்று நின்றான். நகுல் பின்தொடர்ந்தான்.

"ஆதித்... உங்க பாட்டி கூப்பிட்டாங்க, இல்லைன்னு சொல்லல. ஆனா எங்களுக்கு உன்மேல அக்கறை இருக்கறதால தான்டா நாங்க வந்தோம். ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற? ஏதாவது காரணம் இருக்கணும்ல??"

"ஒன்னு இல்ல, மூணு காரணம் இருக்கு."

"என்னன்னு சொல்லு ஆதித், நாங்களும் தெரிஞ்சுக்கறோம்!" என வாசலில் குரல் கேட்க, திரும்பியபோது அங்கே பர்வதம் நின்றிருந்தார்.

******************************

பாட்டி எப்படி!? ப்ரில்லியண்ட், இல்ல?🤣😅😁

நகுலும் நரேனும் ஆதித்தை கன்வின்ஸ் பண்ணுவாங்களா? இல்லை அவங்களும் ஆதித்தோட பிடிவாதத்துல தோத்துப் போயிடுவாங்களா?

ஆஞ்சநேய சுவாமிகிட்ட வேண்டிட்டு நின்ன பொண்ணை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குல்ல!?😆

தீபாவளிக் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது? லீவை என்ஜாய் பண்ணீங்களா எல்லாரும்? கதை இதுவரை நல்லா இருக்கா?

படித்தமைக்கு நன்றி! பிடித்திருந்தால் வாக்களித்து, நண்பர்களிடமும் பகிரவும்! அடுத்த வாரம் புதிய அத்தியாயத்துடன் சந்திப்போம்!!

மது.

Continue Reading

You'll Also Like

359K 11.2K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
154K 5K 87
This Fanfiction was initially posted in my Instagram account under ID : kmfanfic_forfun between 2/10 - 7/12/19.
72.4K 4.3K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
20.5K 428 58
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பா...