கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

ZaRo_Faz द्वारा

79.7K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... अधिक

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
49
50

38-சிவதாரிணி

1.2K 38 4
ZaRo_Faz द्वारा

காதலித்த ஆறு மாதங்களளின் பின்பு முதல் முறை மீடியாவுக்கு நீயூஸ் கொடுத்தான் சிவா...

தாரிணியை திரூமணம் செய்ய இருப்பதை..

மீடியாவுக்கு கன்டென்ட் கொடுத்த பின்பு மானம் வேண்டும் மறியாதை வேண்டும் என்று பேசுவதெல்லாம் மீன் சந்தையில் இருமிய கதை தான் யாருக்குமே கேட்க்காது...

அவனாக போயி நியூஸ் கொடுக்கவில்லை தான் ஒரு நாள் இருவரும் மாலைதீவுக்கு டூர் போயி வந்தனர் ஏயார்ப்போட்டில் ஏதோ அமைச்சர் எங்கோ செல்கின்றாராம் அதற்காக வந்த மீடியா சிவா தாரிணியின் கைகளை பற்றி கெத்தாக நடந்து வரூவதை பார்த்து விட்டனர். உடனே அவர்களது அருகில் ஓடி வந்து கேள்விகள் கேட்க்க ஆரம்பித்து விடவும் தாரிணி தான் நான் மணக்க போகும் என்னவள் என்று அறிமுகப்படுத்தி அதை நியூஸாக்கினான். அவன் தாரிணியை அந்த இடத்தில் யார் என்று அறிமுகப்படுத்தாவிட்டாலும் பிரச்சிணை தான் "தொழிலதிபர் சிவாப்ரஷாதுடன் வெளிநாட்டு சுற்றுலாவில் குதூகலம் போடும் பெண் யார்?" என்று கண்ட படி சீரழிப்பதை விட அவளை கவுரவமாக வைத்து கொள்வது தன் கடமை என்று தான் அறிமுகம் செய்து வைத்தான்"

"ஸோ நிஜமாகவே என்ன கல்யாணம் பன்னிப்பியா சிவா" என்று ரெஸ்டூரன்ட்டில் டீன்னர் சாப்பிட்டு கொண்டு இருக்கு போது திடீர் என்று கேட்டாள் தாரிணி

வாயில் ஒரு சிக்கன் பீஸை போட்ட படி நின்ற சிவா அப்படியே ப்ரீஸாக தான் செய்தான். ஆனாலும் சுதாகரித்து கொண்டு அதை மென்று விழுங்க விட்டு "மால்டீவ்ஸ்க்கு போயி வந்ததும் ப்ரேக்கப் பன்னிக்க நினைச்சியா?" என்று அவளையே கேட்டான்....

அதிர்ச்சியோடும் பரபரப்போடும் அவனை உற்று நோக்கியபடி "என்ன பேசுற சிவா நீ தான் எல்லாம்ன்னு முடிவு பன்ன பிறகு தான் நான் இந்த ஆறு மாசமும் உன் கூட பழகுறதே அதுவும் வெளிநாட்டுக்குள்ளாம் வந்த பிறகு எதற்கு உன்ன ப்ரேக்கப் பன்னனும் என்ன பேசுற" என்று கோவத்தோடு கர்ஜனையாக முனுமுனுத்தாள் உடனே புன்னகைப்போடு வாயில் எதையோ போட்டு மென்று விழுங்கி விட்டு "ஸேம் ஹியர்" என்றான்.

தாரிணிக்கு பின்பு தான் புரிந்தது 'நான் கேட்ட கேள்விக்கு எனக்கே பதில் சொல்ல வைத்து விட்டான்' என்பது உடனே அவனை பார்த்து புன்னகைத்தாள். அவள் புன்னகைப்பையே உற்று நோக்கிய படி நின்றவன் சட்டென்று அவள் கைகள் பற்றி "எனக்கு இப்போ தான் பதினெட்டு வயசுலாம் கிடையாது இன்னும் ஆறு மன்த்ஸ்ல இருபத்தி ஒன்பது வயசு இப்போல்லாம் சும்மா சும்மா டேட் பன்னிட்டீ ப்ரேக்கப் பன்னிக்க எனக்கு காலமில்ல இன்னும் ஆறு மன்த்ஸ்ல நமக்கு கல்யாணம் உனக்குள்ள ப்ரேக்கப் ஐடியாஸ் இருந்தா ஐ வில் கில் யூ.... " என்றான் நகைப்போடு ஆரம்பித்து கோவத்தோடு முடித்தவனாக

அதிர்ச்சியோடும் பயத்தோடும் அவன் கைகளுக்குள் சிக்கி இருந்த தன் கைகளை தன் பக்கம் எடுத்து கொண்ட படி "கில் யூ மீன்?" என்றாள்

"என்ன ஏமாற்றிட்டு போகனும்ன்னு நினைச்சா உன்ன கொன்றுடுவேன்" என்றான் தீர்மானமாக

"ஏன் இப்டிலாம் பேசுற சிவா? நான் ஏன் உன்ன விட்டுடு போகனும் எனக்கு உன்னா விட்டா யாரு இருக்கா?" என்றாள் கலங்கிய விழிகளோடு உடனே எழுந்து வந்து அவளருகில் அமர்ந்து அவளதூ ஷோல்டரை பற்றி "ஹேய் ஆழுகுறியா ச்சீ லூஸூ அழுகுற அளவு என்ன சொல்டேன் சரி வேற ஏங்குல்ல திங்க் பன்னுவோம்" என்று விட்டு "நாம கல்யாணம் பன்னி நல்ல சந்தோசமாக இருக்கோம் நீ என்ன முழுசா நம்பிட்ட நான் இல்லாம நீ இல்லன்ற அளவு நீ எனக்குள்ள இருக்கன்னு வெச்சிக்கோ அப்போ நான் வேற பொண்ணோட அபேர்ல இருக்கேன்னு உனக்கு கன்போமா தெரிஞ்சிடுது நான் உன்ன சொஸைடிக்காக மட்டும் தான் வெச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் நீ என்ன பன்னுவ?" என்று கேட்டான் அமைதியா கேட்டுக்கொண்டு இருந்த தாரிணி கடைஷி வசனங்களை கேட்டதுமே கோவத்தின் உச்சிக்கு சென்று "வீட்டுக்கு வந்ததுமே சாப்பாட்டுல விஷம் வைப்பேன்" என்றாள் கோவமாக உடனே கலகலவென்று சிரித்து விட்டு "நான் கொலை பன்றேன்னா அழுற நீ பன்றேன்னா நான் சிரிக்கிறேன் இதுல உனக்கு என்ன புரிஞ்சது?" என்று கேட்டான் அவளிடம் டிஷூவை கொடுத்து அவள் கைகளை பற்றியபடி "புரியலயே" என்றாள் அப்பாவியாக

"நான் சாகும் வரை உன்ன தவிர யாரையும் நினக்க மாட்டேன் ஸோ நீ சாப்பாட்டுல விஷம் வைக்கிறது நடக்காது நான் தப்பு பன்ன மாட்டேன் ஸோ கெத்தா சிரிக்கிறேன்.... ஐ ட்ரஸ்ட் யூ பட் நீ அழுகுற?" என்றதூமே 'புரிந்து விட்டது' என்ற திருப்தியோடு புன்னகைத்து விட்டு "நான் பயந்துட்டேன் தெரியுமா நீ கில் யூன்னு சொல்லும் போதூ சைக்கோ மாதிரி இருந்த சிவா" என்றாள் நகைப்போடு "நீ விஷம் வைப்பேன்னு சொல்லும் போது கொலைகாரி மாதிரி தான் இருந்த அதற்கு எல்லாம் இந்த சிவா பயப்படுவானேன்" என்று விட்டு காலரை தூக்கி விட்டு கொண்டான்

அன்று இரவு தாரிணியை அவளது வீட்டில் இறக்கி விட்டவன் நேராக தன் வீட்டுக்கே சென்று விட்டான். க்ருஷ்ணா திருமணத்தை பற்றி கேட்டதும் "இன்னும் கொஞ்ச நாள் வைட் பன்னுங்கப்பா என் லைப்ல எல்லாமே நான் போட்ட ப்லேன்ல தான் இதுவறை நடக்குது கல்யாணம்ன்னா கண்டிப்பா டுவன்டி நைன்ல தான்" என்றான் முடிவாக "தாரிணி சரியான முடிவு தானே" என்று தந்தை கேட்டதும் நகைப்போடு "கண்டிப்பா அப்பா நான் எடுத்த முடிவுலயே தாரிணிய கல்யாணம் பன்னிக்கனும் என்று நினைத்ததூ தான் சரியானது" என்றான்.... தீர்மானமாக

சிவா தாரணியை மணக்க நினைத்தது சரியான முடிவு தான் என்று தனக்குள் உறுதியாக இருந்தாளும் அடுத்த நாள் காலையிலயை தந்தையிடம் "உங்களுக்கு தாரணிய நான் சிலக்ட் பன்னது எதாவது அதிருப்தியா அப்பா?" என்று கேட்டான் உடனே அவன கைகளை பற்றி தலையை வேகமாக ஆட்டி விட்டவர் "அந்த தாரணிய முதல் முறை கண்ட நாள்ல இருந்து உன் முடிவுக்கு முந்திய நாள் வரை அவங்கள கவனிச்சதுல எனக்கு ரொம்பவே திருப்தி தான் அதோட நான் என் வீட்டு மருமகள் இவளாக இருக்க கூடாதா என்று நினைக்காத நாள்லே இல்லப்பா" என்றதும் சிவா தெளிவான பார்வையோடு புன்னகைத்தான்.

அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் என்பதால் சிவாவே தனியாக தேவையானவற்றை பர்சஸ் செய்ய ஆரம்பித்து இருந்தான் தாரிணிக்கு பிடித்தவற்றை பேச்சுவாக்கில் கேட்டு தெரிந்து கொண்டவன் அதன் படி வாங்கியும் வைத்தான் திருமணத்திற்கு தாரிணி பக்கம் யாருமே இல்லை என்று தாரிணி முடிவாக சொல்லி விட்டதால் சிவா அவன் பக்கம் தேவையானவர்களை அழைத்து மும்பாயில் உள்ள ஒரு பிரம்மாண்ட ஹாட்டேலையும் புக் செய்தான்.

திருமணம் அன்று தாரிணி அணிய விரும்புவதை அணியும் அனுமதியை அவளிடமே கொடுத்து விட்டான்.

ஆறு நாட்களில் திருமணம் என்று இருக்கும் போது தான் தாரிணி ஷ்ருதி தன்னோட பழகும் விதத்தையும் 'நமக்குள் நட்பு இருப்பதாகவும்' சொன்னாள்

ஆரம்பத்தில் காச் மூச் என்று கத்தியவன் சற்று நேரத்தில் அமைதியாக வந்து அவளருகில் வந்து "உண்மைய சொல்லு தாரிணி அவ தான் என்ன பழிவாங்க உன்ன ஏவி விட்டாளா இப்பவே சொல்லிறு திருமணத்திற்கு அப்பறம்லாம் ஏமாற்ற நினைக்காத கொன்றே விடுவேன் இப்ப போறதுன்னா போ" என்று விட்டு கதவை திறந்து விட்டான்.

அவன் அப்படி பேசியதுமே தாரிணி தேம்பி அழுது விட்டாள் அதே கண்ணீரோடு ஓடி சென்று அவன் நெஞ்சில் சாய்ந்து "நான் ஷ்ருதி கூட பழகுறேன்னு தான் சொன்னேன் அவ பேச்ச கேட்டு அடிமை மாதிரி அவ விருப்பத்துக்கு ஆடுறேன்னு நினைச்சிட்டல்ல" என்று கூறி கூறி அழுகவும் அவளை சற்று விழகி வந்து "அவ என்ன ஏமாற்றினவ அவ சரியில்லாதவ அவ கூட உனக்கு நட்புன்னா....நான் என்னான்னு நினைக்குறது.... அதுவும் ஒரு வருஷத்துக்கு மேல எனக்கு தெரியாமலே அவளோட பழகி இருக்க... எல்லாவற்றையும் மேலோட்டமாக மட்டுமே பார்த்தூ ஏமார்ந்து நின்ற காலம் எல்லாம் போச்சி இனி நான் எல்லாமே இப்டி தான் யோசிப்பேன்" என்றான் கோவத்தோடு சற்றென்று அவன் கைகளை பற்றி "சிவா நீ அவள மறந்துட்ட அவ எல்லாம் உனக்கு ஒரு ஆளே இல்லேன்னா இது உன் ரியெக்ஷனாக இருக்காது.... " என்றாள்

தாரிணியின் இந்த பேச்சில் திகைத்து நின்றவன் கேள்வியாக அவளை நோக்கினான். "அப்கோஸ் சிவா நீ அவள வெறுக்குறது கூட எனக்கு பிடிக்கலை அவ எல்லாம் ஒரு ஆளே இல்லன்னு விட்டுறு பா அத விட்டுடு அவ பெயர் கேட்டாளே இப்டி ரியக்ட் பன்றன்னா அவ உன் மனசுல இருக்கான்னு தானே அர்த்தம் எனக்கு ஹேர்ட் ஆகுது பா ப்ளீஸ்" என்றுதும் மூச்சை இழுத்து விட்டு விட்டு நேராக வீட்டுக்கு சென்று விட்டான் அடுத்த நாள் அவளை சந்திக்க வந்தவன் ஒரு இன்விடேஷனை அவள் கையில் கொடுத்து "உன்னோட ப்ரென்ட் ஷ்ருதிய கல்யாணத்துக்கே கூப்ட்றதாக இருந்தாளும் பரவாயில்ல கூப்டு...." என்று கூறி திமிராக நின்றிருந்தான்.

"என்ன சிவா சொல்ற... அப்போ உனக்கு ஹர்ட் ஆகாதா பா?" என்று கேட்டதும் அவள் கன்னத்தை பற்றி "அவ யாரு நான் கலங்கி நிற்க.... அவளுக்கு என்ன தகுதி இருக்கு....ஷீ இஸ் ஜஸ்ட் நத்திங் டு மீ... அவ முன்னாடி உன்ன மாதிரி ஒரு அழகான,கன்னியமான,என்ன உயிருக்கு உயிராக காதலிக்க கூடிய ஒரு பொண்ணோட கல்யாணம் நடக்கும் போது கலங்க வேண்டியது அவ தான்" என்றதும் புன்னகைப்போடு "எனக்கு அவளோட பழக அனுமதி தருவியா சிவா?" என்று மெதுவாக கேட்டாள்.

"உனக்கு பகுத்தறிவு இருக்கும் போது உனக்கு நான் எல்லாமே சொல்லி தர வேண்டிய அவசியமில்ல பழகு ஆனால் அளவோட பழகு" என்று விட்டு வீட்டுக்கு சென்று விட்டான்.

திருமணத்திற்கு கூட ஷ்ருதியும் சென்று தான் இருந்தாள்.

அடுத்த மாதமே தாரிணி கருவுற்றும் விட்டதால் பெரிதாக இருவருக்கும் ஊர் சுற்றும் வாய்ப்புக்கள் அமையவே இல்லை ஹனிமூனுக்கு திருமணம் முடித்த ஐந்தாம் நாளே சென்று விட்டனர் திரும்பி வர இருபத்தி ஆறு நாட்கள் ஆகியும் போனது சென்னை வந்த அடுத்த நாளே வாந்தி மயக்கம் என்று சோர்ந்து போனாள் தாரிணி செக் செய்த போது கர்ப்பமாகியுள்ளால் என்பதூ தெரிய வந்தது.

அதன் பின்பு சிவா அவளை கட்டிலை விட்டு கூட எழுந்து கொள்ள விடாமல் பார்த்து கொண்டான். சிவா சென்னையில் உள்ள ப்ரானஷஸில் மேலோட்டாமாக சென்று வந்தாளும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு போக பிடிக்காது சரத் எனும் தனது ஸகூல் நண்பனை அவனது இங்கிலாந்தில் உள்ள பியர் கம்பேனியை பார்த்து கொள்ள அனுமதி கொடுத்தான் இன்னும் சொல்வது என்றாள் நண்பனே இல்லாத சிவாவுக்கு ஒரு நல்ல நண்பனாக மாறினான் அப்போது தான் அவனது ஆபிஸ் வேலைகளை பார்த்து கொண்டிருந்த  சரத்தும் தங்கை சிந்துவும் காதலித்த காலமும்

மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டிருந்த சிவாவின் கண்களை மறைக்கும் விதம் பல விடயங்கள் நடந்தது

பிரசவத்திற்க்கு இங்கிலாந்து போன போது அங்கிருந்த டாக்டர் சொன்ன வார்த்தை சிவாவை கொன்றே விட்டது.....

நம்பிக்கை துரோகம் செய்ததூ இருவரல்ல மூவரே...

நம்பி தோற்பது தான் என் தலை விதி என்று தெரிந்தும் உன்னை நம்பியதும் என் தலை விதி தானே

पढ़ना जारी रखें

आपको ये भी पसंदे आएँगी

185K 8.6K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????
39.7K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
28.8K 1.4K 17
JK POLICE STORY -1 'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி . படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவ...