கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

By ZaRo_Faz

79.7K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... More

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
34-புகுந்த வீடு
49
50

35-தாரிணி

1.6K 44 1
By ZaRo_Faz

"இன்று நான் தூங்கி கொண்டு இருக்கும் போது  ஜான் வந்து என் வீட்டு கதவை தட்டினான்... நான் திறக்கவுமில்லை கட்டிலை விட்டு எழுந்து கொள்ளவுமில்லை ஜான்னும் ஓயாது மிருகத்தனமாக தட்டி கொண்டே இருந்தார்.

பகக்த்து வீட்டு கிரிஸ்டோபர் தம்பதியினர் கோவமாக அவனை கத்த தொடங்கவும் தான் ஜான் தட்டுவதை நிறுத்தி விட்டு அவர்களிடம் கத்த ஆரம்பித்தான்.

இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்று அன்றே அவளுக்கு தெரிந்த ஒருவரிடம் சொல்லி வீட்டை விற்க ஏற்பாடும் செய்தாள்.

ஜான் தாரினி படித்த யுனிஷர்சிடியின் லக்சரர் தான் அவனுக்கு தாரினி மேல் தவறான எண்ணமில்லை தூய்மையான காதல் தான் இருந்தது ஆனால் அந்த ஜான் நாற்பதையும் தாண்டிய ஓருவர்

தாரிணிக்கு அந்த ப்ரபஸர் மேல் இருந்தது மரியாதை தான்
எப்போது அவன் அதை காதல் என்ற பெயர் சூடி வந்து நின்றானோ அன்றிலிருந்து அவனை ப்ரபஸர் என்று மதிப்பதே இல்லை...

எந்த ஒரு உறவும் நாம் நினைத்தது போன்று இருந்தால் தான் நம்மால் மறியாதை கொடுக்க முடியும்

இன்று தாரிணி யுநி்வர்ஸிடி போகாமல் லீவு விட்டாள் 'தாரிணியை க்ளாஸில் காணவில்லை என்ற' பதற்றத்தோடு வீட்டை நோக்கி ஓடி வந்து விட்டான்.
அவன் வரூவான் என்று தெரிந்து தான் கதவை லாக் செய்து கொண்டதே.

தாரிணியின் தாயும் தந்தையும் செய்த காரியத்தால் தாரணி திருமணம் என்ற பந்தத்தை முற்றிலும் வெறுத்து இருந்தாள்.

திருமணம,காதல் என்று எந்த பேச்சிக்கும் இடம் கொடுக்காது அமேரிக்காவில் 3ஆண்டுகள்  வாழ்ந்தவள் திடீர் என்று  இந்த ஜானின் நச்சரிப்பால் எடுத்த கோட்பாடு தான் 

'தனது நாடு இந்தியா ,படிப்பு அமேரிக்கா என்று மாறலாம் ஆனால் திருமணம் லணட்ன், ப்ரான்ஸ் என்று வேறு  நாடு தாவ கூடாது என்றது தான் அவள் கோட்பாடு அமேரிக்காவில் வாழும் இந்தியனை திருமணம் செய்தால் கூட  வெள்ளைகாரனை மணப்பதில்லை என்பது தான்

தாரிணி  சிவாவை சந்திக்கும் போது பெஸ்ட் இயர் ஸ்ட்டூடன்  ஆனால் இது  மூன்றூ வருடம் கழித்து அதாவது   இது நான்காம் வருடம் படிப்பவள் இந்த மூன்று ஆண்டு வரை திருமணம் நஞ்சு என்ற கோட்பாட்டில் இருந்தவள் இந்த ஆண்டு தான் 'இந்தியனை மணக்கலாம்' என்ற கோட்பாட்டை விதித்து கொண்டாள்

இதை பற்றி ஜானிடம் கூறியதும் வேஷ்டி சட்டை உடுத்து வந்து கண் முன் நின்று விட்டான்.  "நான் தமிழன்" என்று   உலறியும் தள்ளினார்.... இவ்வளவு நடந்தும் அவள் மனதில் நுழையவே இல்லை ஜான்.

ஈர்ப்பு என்பது தனக்காக ஒருவர் மாற தயார் என்பதற்க்காக மட்டுமே வந்து விடாது அல்லவா அது ஒரு அழகான உணர்வு....யார் மேல் யாருக்கும் வரலாம் 'ஏன் இந்த ஈர்ப்பு?' என்று கேள்வி கேட்க்கவும் முடியாது  'ஏன் உனக்கு என் மேல் ஈர்ப்பு இல்லை?' என்று  கேள்வி கேட்க்கவும் முடியாது

இந்த ஆண்டு படிப்பு முடிந்த கையோடு வேறு வீடு வாங்க நினைத்தவள் அந்த எண்ணத்தை கை விட்டு விட்டு இந்தியா போவோம் என்ற எண்ணத்தை  கையில் எடுத்து கொண்டாள் காரணம் ஜோனின் காதல் வேகம் கூடியது தான்.

அடுத்த ஒரு மாதத்தில்  அவளது வீடு விற்று காசும் வந்தது உடனே வாடகை ஹாஸ்டலில் சென்று தங்கினாள். ஆறு மாதத்தில் படிப்பு முடிந்ததும் ஜாப்போடு இந்தியா வந்தாள்.

பால்காடு தான் அவள் பிறந்த மண் ஆனால் அங்கு போக பிடிக்காது சென்னையில் வீடு வாங்கி வாழ ஆரம்பித்தாள். அப்போது அவளுக்கு கிடைத்த வேலை சிவாவின் உடை காம்பனியில் மனேஜர் போஸ்ட் அது கூட சிவாவின் தந்தைதான் அவளை மனேஜராக சிலக்ட் செய்தார்....

தான் தன் நண்பன் சிவாவிடம் வேலை பார்க்கின்றேன் என்ற விடயமே அவளுக்கு தெரியாது... ஒரு நாள் மாலை நேரம் கென்டீனில் சாப்பிட்டு கொண்டு இருந்த தாரிணி தூரத்தில் காரில் சிவா பெக்ட்டரியை சுற்றி பார்ப்பதை கண்டு அதிரந்தாள் வேகமாக சென்று காருக்கு முன் பாயாது மெதுவாக சென்று காரில் இறங்கி எதையோ பார்த்து பார்த்து  நான்கு பேருடன் பேசி கொண்டு இருந்தவனது அருகில் சென்று நின்றாள்.

"மெனேஜர் எங்க...?" என்று சிவா கர்ஜனையாக சொன்னதும் சட்டென்று  பின் திரும்பிய சுபர்வைஸர் "சார் இவங்க தான்" என்று கூறி தாரிணி முன்னே போக சொன்னாள்.

கோவத்தோடு  நின்றவன் தாராணியை கண்டதும் "ஹேய் தாரிணி" என்றான் குழந்தையாக அவளும் 'அப்பாடா நாமலே நம்மல சொல்லி புரிய வைக்கும் அளவு சிவா மாறவில்லை' என்ற சந்தோசத்தோடு அவனுக்கு கை கொடுத்தாள்.

உடனே சூபர்வைஸரை  ஒரு பார்வை தான் பார்த்தான்  அவன் விலகியே  ஓடி விட்டான்.

கொஞ்சம் சகஜமாக பேசி விட்டு "ஹேய் எதற்கோ கோவமாக என்ன கூப்டல்ல" என்று தாரிணியே தான் ஞாபக படுத்தினாள் உடனே குழந்தை போன்று புன்னகைத்து விட்டு "இல்ல எக்சுவலி நூற்றி ஐம்பது டெங்க் இந்த வீ்க்ல நம்ம பெக்ட்ரீ விட்டு வெளியாகி இருக்கு கணக்கு படி பார்த்தா அது தான் உண்மை பட் பணத்தின் படி பணம் குறையுது.... அதான் செக் பன்னாம போனதும் விட்டுடு சும்மா இருக்கியான்னு கத்துவோம்ன்னு கூப்டேன்"

"நோ வேய்ஸ் அந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்ல சிவா சார்... இருங்க செக் பன்றேன்" என்றதோடு சென்று விட்டாள். அதோடு அதை விசாரித்து தீர்வை கையில் எடுத்து கொண்டு வந்து சிவாவிடம் எத்தி வைத்தாள்... அவனும் சாரி சொன்னான்.

அதன் பிறகு அதிகமாக இருவரும் சந்திக்க நேர்ந்தனர் தாரிணி சாப்பிங் போக வேண்டும் என்று நச்சரித்து அவனை கூட்டி போவாள் படம் பார்க்க போக வேண்டும் என்றாள் தலை கீழ நின்று கூட்டி போவாள்... இவை அனைத்தும் சி்வாவின் தந்தை ஷ்ருதியின் துரோகத்தையும் சிவா இருந்த நிலையை பற்றியும் சொன்ன பிறகு நடந்தவை.... தான்

சிவா எப்படி பட்டவன் என்று தனக்கு நன்றாகவே தெரியும் சிவா நன்றாக பேச கூடியவன், திமிரற்றவன், நல்லவன், மறியாதையாக நடக்க கூடியவன் ௧ஆனால் அவள் வேலையில் ஜாயின் ஆனாதில் இருந்து சிவா தான் ஓவ்னர் என்று தெரியாமல் கேள்விப்பட்டது எல்லாமே "திமிறுபிடிச்ச அறக்கன்,கெட்டவன்,"வயசுக்கு கூட மறியாதை தர்றதில்ல","நானும் அவ்ளோ பேசுறேன் பேசுறானா இல்லவே இல்ல...பணதிமிர் நாங்க ஏன் இந்த வேலைக்கார பசங்களோட பேசனும் என்ற அகம்பாவம்", "சார் கிட்ட  அவ்ளோ சொல்றேன் செவி மடுக்குறதே இல்ல இவர் கிட்ட உதவிலாம் கேட்டு அசிங்கபட நான் என்ன பிச்சைக்காரனா? ", இது போன்று அங்கு வேலை செய்யும் ஆட்கள் பேசும் போது எல்லாம் சிவா தான் அது என்று தெரியாது தாரிணியும் வெறுக்க தான் செய்தாள்.

அடுத்த சில மாதம் கழித்து தான் சிவாவை சந்தித்தனர்  அப்போதே க்ரிஷ்ண ப்ரசாதிடமும் விசாரித்தாள்.

அவர் சொல்லிய விடயம் தான் ஷ்ருதியின் துரோகம் அதன் பின்பு மகன் ஒரு இயந்திரம் தானாம் இதற்கு மேலும் சிவாவை இப்படி விடவே கூடாது என்று தாரிணி சிவாவுடன் பழைய படி நட்போடு பழகினாள். இன்னும் அதிகமாகவே பழகினாள் என்று சொல்லலாம்... அமேரிக்காவில் பழகியது நோக்கமற்ற பழக்கம் ஆனால் இந்தியாவில் பழகும் நட்பு அவனை மாற்றனும் என்ற நோக்க நட்பு....

"சிவா நாளைக்கு எனக்கு  பர்த்டேய் ஸோ எனக்கு தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான் ஸோ உனக்காக ஒரு ட்ரீட்" என்றாள். கோயிலில் எதார்ச்சையாக சந்தித்த போது தாரிணி கூறினாள்.

"ஹேய் வாவ் கண்டிப்பா வர்றேன்" என்றான் சிரித்த முகமாக.... தாரிணி புன்னகை பூக்க "டைம்க்கு அங்க மீட்டிங் இங்க டேட்டிங்ன்னு மழுப்பினா நான் சும்மாவே விட மாட்டேன் சொல்லிட்டேன்"

"அதுலாம் ஒன்னுமே இல்ல நான் வர்றேன்" என்று கூறி விட்டு புன்னகைப்போடு அவள் கை பற்றி "எட்வான்ஸ் ஹெப்பி பர்த் டேய் தாரிணி" என்றான்.
அவளும் அவளது மறையா புன்னகையோடு  "தேங்க் யூ என்ட் வெல்கம்" என்றாள்.

அப்போது தான் அவ்விடம் வந்தாள் ஷ்ருதி அவளும் ஏதோ ப்ரார்த்தனைக்காக வந்தூ இருப்பாள் போலும்... ஷ்ருதி தாராணியை கண்டதும் வேகமாக அவர்களை நோக்கி வந்தாள்

.தாரிணியும் ஷ்ருதியை கண்டதும் புன்னகைக்க தான் செய்தாள் அதை அவதானித்தவன் அவள் நகைக்கும் திசையை நோக்கியது தான் தாமதம் அவளை கண்டதுமே கோவத்தோடு மின்னல் போன்று "தாரிணி வீட்டுக்கு போலாம் வா" என்று கோவமாக கூறி விட்டு கையை பிடித்து இழுத்து கொண்டே சென்று விட்டான்.

சிவாவின் இச்செயலில் எதுவுமே புரியாது நோக்கியவள் எதுவுமே பேசாது அவனோடு சென்றாள்... முதல் முறை அவன் தொடுகை அதுவும் அவனது உயிர் காதலி ஷ்ருதியை நிராகரிக்க பற்றிய விதம் அவளுக்கு ஏதேதோ செய்தது அதற்கெல்லாம் தூண்டி விடுவது போன்று அன்று அவள் வாழ்வில் ஒருவரை சந்திக்கவும் நேர்ந்தாள்.

அன்று இரவு எட்டு மணி வரையிலும் யோசித்தும் அவள் மூளைக்கு எட்டாத விடயம் இன்று சிவாவின் தொடுகையில் வித்தியாசம் உணர்ந்தது ஏன் என்பது தான்

சிவாவை கேஷ்வலாக ஹங் கூட செய்து இருக்கின்றாள் ஆனால் அப்போது எல்லாமே எதுவுமே தோன்றாத என் மனம் ஏன் இந்த சின்ன தொடுகையில் இப்படி பறக்கின்றது.

அதுவும் அவன் கோவமாக பற்றியது தானே ஏதோ காதலாய் பற்றியது போன்று நான் சந்தோசப்பட என்ன அவசியம்?.

எப்படி யோசித்தாளும் அவள் வினாக்கள் விடை காணாதவையாக தான் இருந்தது.. தன் கேள்விகளை பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு ஷ்ருதியை பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள் தாரிணி

ஷ்ருதி அவ்வளவு துரோகம் செய்தவளாக இருந்தாள் எதற்கு எங்களை பார்த்ததும் நகைக்க வேண்டும்  அதுவும் அவள் செய்த துரோகம் ஞாபகத்திலே இல்லாதது போன்ற ஓர் நகைப்பு....

செய்த துரோகம் மறக்க தகுந்த ஒன்று அல்லவே அதே நேரம் துரோகம் மறந்தவளுக்கு என்னை மட்டும் எதற்கு நினைவில் இருக்க வேண்டும்....

ஏதாவது தேவையான விடயம் பேச வந்து இருப்பாளோ?' என்ற நினைப்பு வந்ததும் 'ச்சே பேசி இருக்கலாம் சிவாவிடம் சொல்லாததை கூட என்னிடம் சொல்ல வாய்ப்பு இருக்கு சிவாவை அவளாக ஏமாற்றினாளோ இல்லை குடும்பத்தின் வற்புறுத்தலாக இருக்குமோ?

எது எப்படியோ அவளிடம் நான் பேசியே  ஆக வேண்டும் அவளை கேட்க வேண்டும் 'சிவாவை ஏமாற்ற எப்படி தான் மனம் வந்ததோ?' என்று

எனக்கு தான் தெரியுமே இவர்களின் காதல் சில்மிஷம் எல்லாம் நான் காதால் கேட்க்காத தொலை பேசி உறையாடளா நான் பார்க்காத காதல் காட்ச்சியா அனைத்தும் என் கண்கள் முன்பே அரங்கேறிய விடயங்கள் தானே...

என்னிடம் வந்து 'நோ தாரிணி நான் சிவாவ ஜஸ்ட் ப்ரன்ட்டாக  தான் பார்த்தேன்' என்று சொன்னால் அவளை கெட்ட வார்த்தையாலே திட்டி விடனும் அதே வேலை அவள் வேறு காரணம் சொன்னாள் அதாவது தந்தையின் பணதிமிர் ப்லெக்மைல்? தாயின் அன்பு ப்லேக்மயீல்?' என்று ஏதாவதாக இருந்தால்... என்று சிந்தித்தவள் "அய்யோ பாவம்" என்று நினைத்தாள்

ஷ்ருதியின் சிந்தணை அவளுக்குள் இருந்தாளும் மேலோங்கி கிடந்தது எல்லாம் அவனது "கை பற்றிய" போது ஏற்பட்ட மாற்றத்தின் காரணம் தான்.

எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல்  அன்று தாரிணியின் இந்த குழப்பநிலைக்கு இன்னும் கோடு கீறினாள் அவள்....

நாம் சந்தோசமாக சிரித்து கொண்டே
இருந்து விடலாம் என்று நினைக்க வைப்பது
நட்பு..

நீ சந்தோசமாக சிரித்து கொண்டே
இருக்கனும் என்று நினைக்க வைப்பது
காதல்..

-ஸஹ்ரா நஸீர்

Continue Reading

You'll Also Like

10.6K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????
45.6K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்