கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

By ZaRo_Faz

79.4K 2.5K 187

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள்... More

01-ஹீரோவின் வருகை
02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு
03-அவனுடன் ஒர் பயணம்
04-குன்னூரில் சக்தி
05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்
06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்
07-சிவாவும் சக்தியும்
08-சக்தியே தாயாய்
09-தந்தையும் மகளும்
10-அநாதையாய் சில காலம்
11-தமிழின் சக்தி
12-குற்ற உணர்வில்
13-கண்ணீரில் சக்தி
14-காதலுக்காக
15
16-மீண்டும் ஒரு சந்திப்பு
17-பிரிவொன்றை சந்தித்தேன்
18-ஏன் என்னை பிரிந்தாய்
20-திக் திக்
19-இது என்ன மாயை
35-தாரிணி
21-
36-சந்திப்பு
37-புதிதாய் பிறந்தேன்
22-கல்லுக்குள் ஈரம்
38-சிவதாரிணி
39-தாரிணி
40-உயிரை பிரிந்தேன்
23-உறவை தேடி
41-மூன்றாம் டயரி
42-ஷ்ருதி
43-குற்றம் குற்றமே
24-முதல் காதல்
44-குற்றமா என் காதல்
45-மாற்றம் ஒன்றே மாறாதது
25-காதலே
46- சரத்
26-அழகான நாட்கள்
47-
27-அமேரிக்கா
48-சிந்துவுடன்
28-புது நண்பி
29-சில சந்திப்பு
30-நானும் அவளும்
31-பிரிவு
32
33-மோதல்
49
50

34-புகுந்த வீடு

2.1K 49 7
By ZaRo_Faz

அவன் மாறியது சந்தோசமாகவே இருந்தாளும் கூட  "பீ கன்ட்ரோல்" என்றது அவளுக்கு பிடிபடவே இல்லை...

அப்படியானால் நான் கட்டுபாட்டை இழந்து விட்டதாக கூறுகிறானா ஒரு வேளை இழந்தால் தான் என்ன என்று நான் நினைக்குறேன் என்று நினைக்குறானா?

கட்டுபாடோடு இரு என்றால் என்ன அர்த்தம் புரியவில்லையே நான் அவரோடு தவறாக நடக்க முற்பட்டுடேனா?
இல்லவே இல்லையே சந்தோசத்தில் கட்டி பிடித்ததே தவிற உள்நோக்கம் எதுவும் இல்லையே

வேகமாக அவனருகில் சென்று இதை பற்றி கேட்போம் என்று சென்றாள் அவளது துரதிஷ்டமோ அதிஷ்டமோ அவன் உறங்கி இருந்தான்.

காலையில்  இதை பற்றி கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்து காரில் ஏறும் போது "சார் நேற்று பீ கன்ட்ரோல்ன்னு சொன்னீங்களே" என்றாள் கேள்வியாகவும் கேட்காமல்  பதிலும் எதிர் பார்த்து

"ஸோ வாட்" என்றான் திமிராக "இல்ல நான் கன்ட்ரோல் இழந்துட்டேனா" என்றாள் அப்பவியாக

"நம்மோட உறவுக்கு இது தேவையில்லாதது"
என்று விட்டு அவள் அதற்கு அடுத்து என்ன சொல்ல போகிறாள் என்று கூட கேட்காமல் சென்று விட்டான்.

'அப்போ நம்ம உறவு என்ன?' என்ற யோசனையில் சிவாவுக்கு அழைத்து "சார் நம்ம உறவு என்ன சார்?" என்று கேட்டாள் அப்பாவியாய்

"ஓஹ் தெரியாதா"

"எனக்கு தெரியும் உங்களுக்கு மறந்து போச்சா?"

"மறக்கலை ஏன்னா நினைக்கலை" என்று விட்டு துண்டித்ததோடு ஆப் செய்து விட்டான்.  புரியாத இந்த பேச்சில் தலை சுற்றினாள்   சக்தி

பேசாமல் இருந்து இருக்கனும் "பீ கன்ட்ரோலே" தெளிவாக  தான் இருந்துச்சி என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
பிறகென்ன நன்றாக காலை உணவை சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு ஹெல்ப் பன்னுவோம் என்று கிச்சன் போகும் போதே போன் ரிங் ஆகவும் மொபைலை ஆன்ஸ்வர் செய்து காதில் வைத்தாள்.

"சொல்லுங்க சார்?" என்றாள் கூலாக ஆனால் மறு பக்கம் அவனோ பதற்றமாக "ஹாஸ்பிடல்ல ஏதோ ப்ராப்ளம் போல இப்பவே ஹாஸ்பிடல் போறியா?" என்று கேட்டதும் 'ஒகே" என்றதோடு வேகமாக தாயிடம் சொல்லி விட்டு விரைந்தாள்.

ஹாஸ்பிடலில் நடந்த அந்த பிரச்சிணையை சாதரணமாக்கி விட்டு சிவாவிற்கு அழைத்து "சார் எல்லாம் ஒகே சார்" என்றவளிடம்  "ஐ நோ சக்தி" என்று விட்டு துண்டித்தான்... அவனது இந்த அகங்கார செயல் அவளுக்கு கடுப்பாக தான் இருந்தது  ஆனாலும் எதை பற்றியும் வெளிக்காட்டி கொள்ளாது கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தவள் மதியமானதும் வீட்டுக்கு போவோம் என்று எழுந்து அறையை விட்டு வெளியானதும் "அட சக்திம்மா தானே" என்று கேட்டபடி ஒரு பெண் அவளது ஷோல்டரை  தொட்டதும் "ஆமா" என்றாள் புரியாத பார்வையோடு அவளே "ஆமா நீங்க யாரும்மா?"

"என்ன தெரியாதா? என்ன தான் கல்யாணத்தப்ப சிவா தம்பி அறிமுகப்படுத்தி விட்டார்ல" என்றார் சிரித்த முகமாக "ஞாபகம் இல்லம்மா" என்றதும் "பத்மா...சிவா தம்பி வீட்ல வேலை பார்க்குறவ" என்றதும்

பார்த்ததில்லை என்றாளும் சிவாவின் டயரி வாசித்த வரையில் நல்ல விதமாக தான் எழுதி இருந்தான் அதோடு தாரா எப்போதும் பத்மா அம்மா பத்மா அம்மா என்று மெச்சுவாள். அதோடு ஏதாவது நல்ல விதமாக தாரா செய்தாள் "வெரி குட் ஆமா யார் இதுலாம் சொல்லி தந்தாங்க?" என்று சக்தியோ சகிதாவோ கேட்டாள் "எங்க பத்மாம்மா" என்பாள் தெளிவான முகத்தோடு
எனவே பத்மா ஒரு நல்ல பெண் தான் என்று சக்தி முடிவு செய்திருந்தாள்...

"ஓஹ் நீங்க தானா அது.... எப்டி இருக்கீங்க?" என்று கேட்டு விட்டு ஹாஸ்பிடலை ஒரு பார்வை பார்த்தவள் "என்ன ப்ராப்ளம்?" என்று கேட்டாள்.

"ஓஹ் அதுவா என் சொந்தக்காரங்க ஒருத்தங்கள இங்க தான் எட்மிட் பன்னி இருக்குறதா  கேள்விப்பட்டேன் பக்கத்துல இருந்துட்டு பார்க்க வராம இருக்குறது அவ்ளோ சரியில்லன்னு சாப்பாடு எடுத்து வந்தேன் ம்மா"

"ஓஹ் நீங்க இப்பவும் சிவா சா" என கூற வந்த நாவை நடுத்து கொண்டாள் காரணம் 'அந்நியர் மூன்பூ இப்டி சார்ன்னு சொல்லாத சக்தி'  என்று தாய் எப்போதும் நச்சரிப்பார் அல்லவா 'சார்' என்ற சொல்லை விழுங்கி கொண்டு "வீட்ல தானா இருக்கீங்க?"

"அட ஆமாம்மா நீ வேற சிவா தம்பி வேற எங்கயும் போகவே விட மாட்டார் 'தம்பி,தாராவும் போயி நீங்களும் போயீட்டா நான் யாருக்கு வேலை பார்ப்பேன்' கேட்டதும் 'வீட்ட சுத்தம் பன்னிட்டு வீட்டோட இருங்க பத்மாம்மா சம்பளம் குறையாம பழைய படி வரூம்' ன்னு சொல்லி பிடிச்சி வச்சிறுக்கார்"

"ஓஹ் இங்க பக்கத்துல தானா"

"அட ஆமாம்மா வாங்களேன் போலாம்" என்று அழைத்த பத்மாவின் முகத்தில் பெரிதாக திருப்தி ஒன்றும் இருக்கவில்லை எனவே பொய்யாக ஒரு கதையை அழந்து விட்டாள் சக்தி

"வரனும்மா சிவா கூட எப்பபார் வீட்டுக்கு வா வீட்டுக்கு வான்னு கூப்டுடே இருப்பார். நான் தான் இப்பவே வேண்டாம்ன்னு தள்ளி போட்டுடே இருக்கேன் அன்னைக்கு கூட தாராவ கூட்டிட்டு போயி வாயேன் சக்தின்னூ சொன்னார் நான்... தான் யாருமில்லாத வீட்டுக்கு எதற்கு போகன்னு பிடி கொடுக்கலை" என்ற அவளது பொய்யில் திருப்தியோடு அவளை அழைத்தூ சென்றாள் பத்மா....

வழி முழுவதுமே 'வீட்டுக்கு போறோம் சிவாவோட டயரி தேடி படிக்கிறோம் இல்லேன்னா பத்மா அக்காகிட்டயே மொத்த கதையயும் கேட்க்கனும்' என்ற நோக்கோடு வீ்ட்டை அடைந்தாள்....

வீட்டுக்கு சென்று பத்மாவுடன் பேச பேச பத்மாவை சக்திக்கே பிடித்து தான் போனது தந்திரமோ,வஞ்சகமோ அற்ற ஓர் உண்மையான மனிஷியாக தான் இருந்தாள் பத்மா....

"அக்கா சிவாவோட முதல் மனைவி தாரணி பற்றி தெரியுமா?" என்று அவளை தான் பொறுமை இல்லாது கேட்டாள். ஆனால் பத்மாவின் அந்த அப்பாவி  முகம் மாறி ஒரு மாதிரி பார்த்தாள் .

உடனே பதற்றமும் சிந்தனையுமாக " ஏதாவது தவறாக கேட்டுடேனா?" என்று கேட்டதும்.

"இந்த வீட்டோட ரகசியங்கள் என்னைக்கும்  என் மூலம் வெளி வராது" என்று அந்த வீட்டுக்கு விஸ்வாஸமாக பேசவும் உண்மையிலுமே சக்திக்கு பத்மா மேல் பிடித்தம் தான் உருவாகியது உடனே சிரித்த முகமாக "ஏன்ம்மா நான் இந்த வீட்டால் இல்லயா?"

"சிவா தம்பி உங்க கை பிடிச்சி கூட்டி வந்து இருந்தா உங்கள அவர் வீட்டோட ஆள ஏற்றுகிட்டுன்னு அர்த்தம் அத விட்டு அவர் கூட்டி வரலைன்னா அவங்க வெளி ஆளுதான் ம்மா"

பத்மாவின் இந்த பேச்சில சிரிப்பு தான் சக்திக்கு வந்தது காரணம் அவன் கூட்டி வந்தால் தான் குடும்பத்தில் ஒருத்தி  என்று ஒரு கோட்டை போட்டு அதற்குள் வாழ்கிறாள் இந்த விஸ்வாஷி 

"சரிங்கம்மா நான் அவர்கூடவே வர்றேன்" என்று விட்டு வெளியே சென்றாள்....

அன்று இரவு "சார் உங்க வீட்டுக்கு என்ன கூட்டி போகாமா இருக்க காரணம் என்ன?" என்று கேட்டாள் தாராவின் தலையை கோதியவளாக தன் லெப்பிலிருந்து தலையை கூட உயர்த்தாது "வழி தான் தெரியும்ல" என்றான் நக்கலாக உண்மையிலே புரியாத பார்வயோடு "வழி தெரியும்ன்னா? புரியலை?"

"போன வழி இவ்ளோ சீக்கிரமாகவா மறக்கும்?" என்று கேட்டதும் நாக்கை கடித்து கொண்டாள். "அது வந்து" என்று ஏதோ சொல்ல போனவளை தடுத்து "தெரிஞ்ச பாதையில கூட பிடித்தவர்  கை பிடித்து நடக்க துடிப்பது நியாயமான ஆசை  தான்" என்றான் அவளை கோவப்படுத்தும் விதமாக "என்ன சொல்ல வர்றீங்க எனக்கு உங்கள பிடிக்கும்ன்னா இல்ல உங்க கை பிடிச்சி நடக்க ஆசை படுறேன்னா"

"இரண்டையும் தான்" என்று கூறியதன் பின்னால் 'சக்தி எதாச்சும் பேசினாளா?' என்று சிவாவிடம் கேட்டால் இல்லையே என்று சொல்லும் அளவு அவள் பேச்சை செவிமடுப்பதை விட்டு விட்டான் ஆனால் சக்தியிடம் இதை பற்றி கேட்டால் "ஹா நாக்க புடுங்கி கிட்டு சாகுற மாதிரி நல்லாவே கேட்டேன் என் பேச்சுல மெரசலாகி என் முகத்த கூட பார்க்கலைன்னா பாருங்க" என்று தான் சொல்வாள்.

அடுத்த நாள் காலை ஆபீஸ் போகும் முன்பு "சக்தி நீயும் ரெடியாகு நாம எங்க வீட்டுக்கு போயிட்டு வருவோம்" என்றான்

துள்ளி குதித்து அழகாய் உடுத்தி மூவரும் காரில் ஏறிய அழகு தான் தேவகிக்கு நிறைவான நொடியே... மூற்ற மகளை  அவள் விரும்பியவனுக்கு பெரிய குடும்பத்தில் படித்த பண வசதி உள்ள பையனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டாள்.... இரண்டாம் மகளை அவளை விரும்பின ஒருவனுக்கு அதுவும் பெரிய பணக்காரன் படித்தவன்  அழகானவன் அவ்வளவு பணமிருந்து எளிமையோடு என்னை மதிப்பவனுக்கு  அத்தோடு விரல் விட்டு எண்ண கூடிய பணக்காரனின் மனைவியாக தன் மகள் என்பது அவளுக்கு மட்டில்லலா மகிழ்ச்சி தான்.

கனவனை இழந்து மகனையும் இழந்து வேலைக்கு கூட போக தெரியாதா அப்பாவி பெண்ணும் வயது வந்த மகளும் என்பது மிகவும் இக்கட்டான நிலை தான்...  மகனுக்கு பதில் மகள்களில் ஒருத்தி ஓடி இருந்தால் நிச்சயம் இந்த குடும்பம் இப்படி தலை தூக்கி இருக்காது கடவுளின் கருணை அன்பும் அறிவும் நிறைந்த மகள்களை தன்னை விட்டு பிரிக்காதது என்று நினைத்தே திருப்தி அடைந்தாள்.

நேராக தாராவை ஸ்கூலில் ட்ரோப் செய்து விட்டு வீட்டை நோக்கி செலூத்தினான் . "சார் நேற்று நான் போனத பற்றி பத்மா அக்கா சொன்னாங்களா?"

"பார்த்தேன்" என்றான் சுருக்கமாக அவனது சுருக்கத்தில் புரிந்து கொண்டாள் கெமரா வழியாக பார்த்து விட்டான் என்று "பார்த்தீங்ன்னா நாங்க எதை பற்றி பேசினோம்ன்னு கூட பார்த்து இருப்பீங்கல்ல?"

"கேட்டேன்" என்றான் மீண்டும் சுருக்கமாக 'ஓஹ் இத கேட்டீங்களா'

"பத்மா சொன்னாளா?"

தலையை ஆட்டினான் அத்தோடு வீடும் வந்து விட "நைட் வரை இங்கயே இரு தாராவும்  ஸ்கூல் விட்டு வருவா நானும் வர்க் முடிச்சி வந்து சாப்டுடு போலாம்'" என்றான் இதற்கு சக்தி தலையாட்டினாள்...

"வாய்ல என்ன?" என்றான் திமிராக "நீங்க மட்டும் தான் தலையாட்டுவீங்களா?"

"என் தேவைக்கு நான் மட்டும் தானே ஆட்டனும்" என்றான் நக்கலாக உடனே கடுப்படைந்தவள் "அப்போ நான் தானே என் தேவைக்கு தலையாட்டனும்" என்று திமிராக அவனை மடக்கி விட்டோம்  என்று  புன்னகைக்கும் முன்பே  "ஆட்டு யார் தடுத்தா?" என்று அவளை இன்னும் எரிச்சலுக்கு உள்ளாக்கி விட்டு சென்றான்.
அன்று அந்த வாய்பேச்சு முடிந்து ஒரு மணித்தியாலம் கடந்தும் சக்திக்குள் இருந்த பதற்றமும் கோவமும் குறையவே இல்லை... 'என்ன மனுஷன் இவன் எல்லாத்துக்கும் திமிராகவே பேசுறான் ச்சே இவன் கூட எப்டி அந்த தாரணி குடும்பம் நடத்தி இருப்பாளோ' என்று முனங்களோடு நின்றாள்

பத்மா இருவரையும் கண்டதும் ஆர்த்தி எடுக்க தவறவில்லை கொஞ்சம் நேரம்  நின்றவன் ஆபீஸ் சென்று விட்டான்.   சிவா வெளியேறியதும் நேரம் விரயமாக்காது தாரணியை பற்றி கேட்டே விட்டாள்.

"அம்மாவ பற்றி நான் சொல்றதுன்னா ஒரு நாள் எல்லாம் உதவாது" என்று கூறி விட்டு அறைக்குள் சென்று  மூன்று டயரியை கொடுத்து "இதுலாம் அம்மாவோட டயரி தான் நீங்க படிங்கம்மா நான் போயி சமைக்கனும் தம்பியும் பாப்பாவும் வேற வரும்ல இரண்டு பேருக்கும் பிரியாணி தான் உயிரு அதுவும் என் கையால....அம்மா இருந்தப்ப என் கைய முத்தமே இட்டாங்கன்னா பாருங்க" என்று விட்டு மோதிரம் ஒன்றை காட்டி "இது அம்மா குடுத்தது தான்" என்றாள் சந்தோசமாக

"தாரணிக்கு பிரியாணி பிடிக்குமா?"

"தாரணின்னு சொல்லாதீங்க அம்மா... அவங்க உங்க அக்கா முறை" என்றூ விட்டு "அம்மாவுக்கு பிரியாணின்னா உயிர் தான் அதே ரசணை தான் பாப்பாவுக்கும்... தம்பிக்கும் அம்மாவுக்கு பிடிக்கும் என்றதற்காக பிடிக்கும்" என்றாள் கண்கள் ஒழிற...

பத்மாவுக்கு தான் சமையல்காரி என்ற எண்ணமே இல்லை எதோ தன் பெற்ற பிள்ளைகளுக்கு சமைப்பது போன்ற ஓர் சந்தோசம் அவள் கண்ணில் ... பத்மா இப்படி இருக்க முதல் காரணம் வீட்டில் இருப்பவர்கள் தானே யாரும் அவளை வெளியாளாக பார்த்திருக்க மாட்டார்கள் போலும் என்று நினைக்கும் போது நிஜமாகவே சந்தோசப்பட்டாள்....

______________

எதை மறப்பினும்
நகைக்க மறவாதே

எதை இழப்பினும்
புன்னகையை இழக்காதே

எதை பேசுவினும்
நகையிழந்து பேசாதே

எதை செய்வினும்
நகைக்க மறந்து செய்யாதே....

தாரிணி...
                 ஸஹ்ரா நஸீர்

Continue Reading

You'll Also Like

8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
364K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
4.5K 519 23
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்க...
94.4K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..