தன்மானம்

Start from the beginning
                                    

கதிர்: கோபம் எல்லாம் இல்லை மாமா..அண்ணன் கிட்ட சொன்னா என் கிட்ட சொன்ன மாதிரி தான்.அதுவும் இல்லாம உங்க பொண்ணு என்கிட்ட பேசிட்டு வந்தா என் பேச்சை மீறி செய்யுற மாதிரி ஆகிடும் னு தான் என்கிட்ட சொல்லாமலே வீட்டு தலைவர் கிட்ட வந்துட்டா..

மூர்த்தி: சிரித்துக்கொண்டே..நல்ல புருஷன்..நல்ல பொண்டாட்டி...ஆனா கதிர் நாம முருகன் மாமா..முல்லை சொல்றத தான் இந்த விஷயத்துல கேட்கணும்னு தோணுது.நான் நாளைக்கு நம்ம bank பாஸ்கரன் தம்பி  கிட்ட பேசுறேன். இதுல 4 லட்சம் வரை கடன் வாங்கலாம்..மீதி 4 லட்சத்துக்கு ஏற்பாடு பண்ணு கதிர்.

கதிர்: சரிணே..நான் நாளைக்கு காலையிலே மதுரைக்கு கிளம்புறேன்.

மூர்: ஏண்டா நாளைக்கே கிளம்புறே?

கதிர்: என் office colleagues  கொஞ்ச பேர் கிட்ட கேட்டுறுக்கேன் அண்ணே....நாளைக்கு அவங்கள பார்த்துட்டு முடியலைனா Personal loan மதுரை branch ல monday morning apply பண்ணிடுறேன். அங்க loan apply பண்ணா follow-up பண்ண weekdays போக முடியும் என்று சொல்ல மூர்த்தி தலையசைத்தார்.

மூர்த்திக்கு தன் குடும்பம் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்றும்..தன் குடும்ப ஒற்றுமை ரொம்ப நாள் தாங்காதோ என்ற அச்சமும் அவருக்கு சில நாட்களாக கவலையாக இருந்தது..கதிர் முல்லை கவலை அவருக்கு இப்போது இல்லை..உண்மையில் மூர்த்திக்கு முல்லை மீது அதிக நம்பிக்கை தற்போது..

(முல்லை உண்மையில் இதை செய்ததற்கு இரண்டு காரணம் ஒன்று கதிர் நகையை வைக்க ஒத்துக்கொள்ளமாட்டான்.இரண்டாவது அவள் மூர்த்தியை மீறி இந்த செயல் நடைபெறக்கூடாது..மூர்த்தி மூலமாக வே இதை கொண்டு போகனும் என்று முடிவுடன் இதை செய்தாள்..அவள் நினைத்த படி இரண்டுமே workout ஆனது.உண்மையில் கதிர் வெளிப்படையாக  decisions எடுத்தாலும் அது சிலரை காயப்படுத்திவிடும்..முல்லை அதை நன்கு உணர்ந்ததால் இன்று அவள் வந்து நின்ற புள்ளி மூர்த்தி..தனம்..மூர்த்திக்கு இது ரொம்ப அவசியமான நகர்வு.அந்த நுணுக்கத்தை முல்லை உணர்ந்து அடித்தாள்.கதிர் சற்று தாமதமாக புரிந்து கொண்டான்)

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now