தன்மானம்

Začít od začátku
                                    

மூர்த்தி: எதுக்கு முல்லை நகையெல்லாம் இப்ப.கதிருக்கு பணம் கிடைக்கலனா எடுத்துக்கலாம்.நான் கூட முயற்சி பண்றேன்.

முல்லை: மாமா இதுல அப்பா contribution இருக்கனும் நான் நினைக்கிறேன்.இந்த நகையெல்லாம் அப்பா அம்மா அவங்க சம்பாத்தியத்துல வாங்குனது..
மீதி பணத்தை உரிமையோடு அவுககிட்ட வாங்கிக்கிறேன்.இதை முதல்ல வச்சு எவ்வளவு கிடைக்கும்னு கேட்டு சொல்றீகளா pls..

மூர்த்தி: எலேய் கதிரு இங்க வா டா.என்ன அங்கயே நின்னு வேடிக்கை பார்க்கிற?

கதிர் உள்ளே வர

தனம்: ஏண்டா நீ கூப்டா தான் உள்ள வருவீயா..அங்கையே நிக்கிற ஏதோ சம்பந்தம் இல்லாத மாதிரி.

கதிர்: அப்படி எல்லாம் இல்லை அண்ணி..
அண்ணனும்..உங்க தங்கச்சி யும்‌ பேசுறாக.. நம்ம எதுக்கு இடையிலேனு இங்கையே நின்னுட்டேன்.அவங்க நகை அவங்க வீடு..

முல்லை கதிர் வந்து நிற்பதை  கவனிக்கவில்லை.. கதிர் அவனிடம் கேட்காமல் direct ஆ இங்க வந்ததை தான் சொல்கிறான் என்று புரிந்தது..

அவள் உண்மையில் அவளாகவே இந்த கடனை அடைக்க வேண்டும்  என்று தான் விரும்பினாள்..அவள் தன் குடும்பத்தின் தன்மானம்..தன் தந்தையின் தன்மானத்தை பொருட்டு இந்த கடனை கதிர் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை..கதிரிடம் பேசினால் அது வேலைக்கு ஆகாது என்பதால் நேரடியாக மூர்த்தியிடம் வந்துவிட்டாள்.

தனம்: ஆமாடா..உன் பொண்டாட்டி நகை யெல்லாம் எடுத்துட்டு வந்து நிக்கிறா..உனக்கு தெரியாதா?

கதிர் ஏதும் பதில் சொல்லவில்லை..

முல்லை: அக்கா..அவுக கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டாக..அதுனால தான் அவுக கிட்ட கேட்கலை..

மூர்த்தி: நீ என்னடா சொல்ற கதிர்?

கதிர்: நான் என்ன சொல்ல..நான் எதுவும் சொல்ல விரும்பலை அண்ணே..மாமா கிட்டையே கேட்டுக்குங்க...எனக்கு அவ நகையை எடுக்கிறது பிடிக்கலை.

முருகன்: மாப்ள..கோவிச்சுக்காதீக...நான் வாங்குன கடன் இது...முல்லை சொல்றது எனக்கு சரியா படுது..நான் போகிறதுக்கு முன்னாடி வீட்டையோ..நகையையோ முல்லைக்கும் உங்களுக்கும் விட்டு போனும்..முல்லைக்கு வீடு தான் பிடிச்சிருக்கு..இன்னொன்னு நான் உயிரோட இருக்கிற வரை என் கடனுக்கு என் பங்களிப்பு இருக்கனும்னு நினைக்கிறேன்..தப்புனா நான் நீங்க சொல்றத செய்யுறேன்.ஆனா முல்லை உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசாமா இந்த முடிவு எடுக்கிறது தப்பு தான்.சொல்லிட்டு பண்ணிருக்கலாம்.கோபபடாதீக...

ஆனந்த பூங்காற்றேKde žijí příběhy. Začni objevovat