கனிந்தேன் உன் காதலிலே💜

10 2 3
                                    

கொஞ்சும் உன் மொழியினைத்
தஞ்சம் எனத்தான் எண்ணி
நெஞ்சம் அதிலே மகிழ  
பஞ்சம் ஆனதே மொழியும் சிதற !

கன்னி நானும் கனவிலே
சென்னி சரித்துத் தமிழிடம்
கண்ணி அனுப்பி உருக
வன்னி என்னைச் சுட்டதே !

வெள்ளம் உருவில் அடித்தே
கள்ளன் ஆனாய் உன்னையே
உள்ளம் எண்ணித் தவித்திட
பள்ளம் ஆனதே ஆழ்நெஞ்சம் !

கோருகிறேன் நீயே எனக்காக
தருகிறேன் என்னை முழுதாக
பருகுகிறேன் உன் நேசமதை
உருகியதே மேனி முழுவதுமே !

பாவலனே பாடலினை வஞ்சிக்க
நாவலனே கிளவியில் கண்டிக்க
ஏவலனாய் காதலும் மாறிடவே
நாவலனும் விழுந்தான் என்னில்!

எறிந்தேன் தயக்கம் தூரம்தனை
பணிந்தேன் உன் இதயம்தனில்
தணிந்தேன் உள்ளச் சூட்டிலே
கனிந்தேன் உன் காதலிலே !



😍😍😍


நிவி💃யின் கவிகள்💜Donde viven las historias. Descúbrelo ahora