"வீணா என்கிட்ட வாங்கி கட்டிக்காத. அப்பறம் அவ பேசினதெல்லாம் இப்போ சொல்ற நிலமையில இல்ல. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. அவளுக்கு என்னை பிடிக்கலயாம். பார்த்தாலே எரிச்சல் வருதாம். போதுமா??? இன்னொரு தடவை அவளை என்கிட்ட பாவம்'னு சொன்னேன்னுவை... மவனே நீ காலிடா..."

"என்னடா மச்சான் ஆச்சி???? வீட்ல தெரியுமா????"

"வேணாம் மிது. விடுடா. நீ தூங்கு. காலையில பேசிக்கலாம்." சொல்லிட்டு அவன் தனியா ரூம்ல போயி படுத்திட்டு யோசிச்சிட்டு இருக்கான். தூக்கமே வரலை. என்னெல்லாம் பேசிட்டா?????? என்னை ரொம்ப கீழ்தரமா நினைச்சிட்டா. எவளோ கேவலப்படுத்திட்டா??? எவனும் முத இராத்திரில இவ்ளோ கேவலப்பட்டு இருக்கமாட்டான். ச்சே.... அவளை சொல்லி என்ன பிரோஜனம்??? எல்லாம் உன்னாலே தான். நீ எடுத்த முடிவு என்ன????? நீ செஞ்சது என்ன???? முட்டாள்... சரியான முட்டாள். அவ என்மேல கோவப்படுறது சரிதான். அதனால அவமேல கோவப்படாம நாம அவளை மாத்த முயற்சிப்பண்ணனும்.

எப்படி பண்றது??? அவதான் உன்னை பிடிக்கல... உன்னை பார்த்தாலே எரிச்சல் வருதுன்னு சொல்றாலே...

சொன்னா என்ன??? அவ சொன்னா நாம கேட்கறதா??? புதுசா யோசிக்க தேவையில்ல. அவகிட்ட நாம போககூடாது. அவ நமக்கிட்ட வரனும். அப்பறம் முதல அவௌன்னை புரிஞ்சிக்கனும். அப்பறம் பார்த்துக்கலாம்'னு ஒருவழியா தன்னை தானே சமாதானம் பண்ணிட்டு தூக்கறான்.

"வாடா விசாலி. சந்தோசமா இருடா. ஒரு நிமிஷம், இதோ வரேன்." அனு அவசரமா ரூம்க்கு போறாங்க. அப்போ அருணாச்சலபிரசாத்(ஏ.பி),

"எங்க அவன்???? தூங்கறானா???? இன்னைக்கு ஆபீஸ் போக வேணாம். உங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. அப்பா வர சொல்லி இருந்தாங்க. எதோ கோவில் போகனுமாம். நீயே அவன்கிட்ட சொல்லி அழைச்சிட்டு போடா. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க."

"............." அமைதியா இருக்கறதை பார்த்து கொஞ்சம் யோசனையோட அவளை பார்த்துட்டு இருக்கும் போதே அனு வராங்க.

"இந்தாமா... இது உனக்காக.... அருணுக்கு இனிமேல் நீ தான் எல்லாம். உன்மேல கொஞ்சம் கோவம் இருந்தது. அருண் பண்ணது தப்பு தான். ஆனா அவன் ரொம்ப நல்லவன். அவன் எயினியால தான் இப்படி பண்ணிட்டான். அவன் எது செஞ்சாலும் நியாயமா தான் இருக்கும். அவன் வாழ்க்கையிலயே தப்பு'னு அவன் பண்ணியிருக்கான்'னா அது உன்னோட சம்மதம் இல்லாம செஞ்சது மட்டும் தான். ஆனா இப்போ அவனை பத்தி புரிஞ்சிருக்குமே. அவனுக்கு ஒருதரை பிடிச்சா அவங்களுக்கா என்ன வேணுனாலும் செய்வான்." சொல்லி அவ தலையை வருடி தராங்க.

விசாலி யோசனையோட இருக்கா.

"என்னடா யோசனை??? இங்க கொடு நா போட்டு விடுறேன்'னு சொல்லி அவங்க அவளுக்காக வாங்கின நகையை போட்டு பார்க்கறாங்க.

"ரொம்ப அழகா இருக்க விசாலி. அவனையும் எழுப்பி உங்க வீட்டுக்கு கிளம்புங்க. பாட்டி வேற நல்ல நேரத்தில கிளம்பி வர சொன்னாங்க. அருண் கார் ஓட்ட வேணாம். மிதுனை அழைச்சிட்டு போங்க." எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்கார் ஏ.பி. ஏதோ நெருடலா இருக்கே'ன்னு யோசிக்கும் போதே அருண் வெளியே இருந்து உள்ள வர்றான்.  😎

தேவதையே நீ தேவையில்ல (completed)Where stories live. Discover now