பழனி முருகன்

Start from the beginning
                                    

இன்னும் சொல்வதானால் அதை நாம் தான் புரிந்துகொள்ளாமல் அதை பயன்படுத்த தெரியாமல் விழிப்புணர்வுத்தன்மை இல்லாத காரணத்தால் வாழ்வில் உடல் மற்றும் மனநோயால் அவதிப்பட்டு வருகிறோம். *செவ்வாயின் கதிரை உள்வாங்கும் மைக்ரோ ரிஸீவரான இந்த சிலை மட்டும் இந்த பூமியில் நிறுவப்படவில்லை எனில் நாமெல்லாம் இப்படி பேசிக்கொண்டிருக்க இந்த பூமி இருந்திருக்காது.* இந்த அளவுக்கு உலகம் குறித்து சிந்தனை செய்த குழந்தை உள்ளம் கொண்ட ஒருவரை இந்த பூமியில் இருந்தால் காட்டுங்களேன்.

உலகமெங்கும் தன்னுடைய ஆன்மீக ஆய்வுகள் அனைத்திலும்  வெற்றி கண்ட நம் போகர் பெருமான்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி *பூமி மற்றும் ரத்தம் சம்பந்தபட்ட கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சு இந்த பூமிக்கு சீராக கிடைத்தால் இந்த பூமிக்கு சுபிட்சம் கிடைக்கும்* என்று எண்ணினார் என்றும் அதன் விளைவாகத்தான் தண்டாயுதபாணி சிலை நிர்மாணம் என்று சொன்னோம். ஏனெனில் இந்த பூமியில் நடக்கும் இயற்கை மாற்றங்கள், போர் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது செவ்வாயின் கதிர்வீச்சை பொறுத்தே தான் அமைகிறது .ஏனெனில் செவ்வாய் தான் அதற்கு அதிகாரி போல். அதனால் தான் அதனை சீர் செய்வதன் மூலம் பூமிக்கு நன்மைகள் செய்ய முடியும் என எண்ணினார்.

உலகம் எங்கும் சுற்றி ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாயின் கதிர்வீச்சு பூமியில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழனி தலத்தில் மட்டுமே அதிகமாக விழுகிறது என்பதை கண்டறிந்தார். இந்த இரண்டு தலத்திலும் பழனி மலையின் மேல் பகுதியில் மட்டும் சுமார் 95  சதவீதற்கும் மேலாக விழுவதை கண்டுணர்ந்தார். அதன் பின்னர் தான் அணைத்து சித்தர் பெருமக்களையும் கூட்டி செவ்வாயின் கதிர்வீச்சை செம்மை படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் இந்த யோசனை அவர்களுக்கு உதித்தது. பாஷாணங்கள் மொத்தம் 64 . இதில் இயற்கையாக 32 ம் செயற்கையாக 32 பூமியில் கிடைக்கிறது.  அதில் அவர்கள் எடுத்ததோ வெறும் ஒன்பதை மட்டுமே. அந்த ஒன்பதிலும் 4448 மூலிகைகளின் சாரம் அடங்கியுள்ளது. 81 வகை உபரேஷன்களின் தன்மை அதில் அடங்கி உள்ளது.

இந்த ஒன்பது வகையான பாஷாணங்கள் தனித்தன்மைகள் ஆராயப்பட்டன. ஒவ்வொரு பாசனத்தில் அளவுகள் தீர்மானிக்கப்பட்டன. செய்யப்போகும் முறைகள் தீர்மானிக்கப்பட்டன. இத்தனைவிதமான மாபெரும் ஆய்வுகளுக்கு பின்னரே அந்த சிலை நிர்மாணம் செய்யப்பட்டது.

ஒன்பது பாஷாணங்களும் அதன் விகிதாச்சாரப்படி கலக்கும்போது அது செவ்வாயின் கதிர்வீச்சை அப்படியே உள்வாங்கும் திறனை பெரும்  அளவிற்கு செய்யப்பட்டது.  சிலை மொத்தம் மூன்று அடுக்குகளை கொண்டு செய்யப்பட்டுள்ளது. *மேலடுக்கு செவ்வாயின் கதிர்வீச்சை ஈர்க்கும் விதமாகவும் அதன் அடுத்த அடுக்கு அதை கடத்தி உள்ளே கொண்டு செல்லும் விதமாகவும் உள் அடுக்கானது அதை சேமிக்கும் விதமாகவும்* உருவாக்கினார்கள். மேலும் அதிசயமாக அது கதிர்வீச்சின் தன்மையை சீர்படுத்தி வெளியற்றவும் செய்தது.

இதன் அடிப்படை தத்துவம் எளிதாக சொல்வதானால் செல்போன் டவர். அது எவ்வாறு வெளியில் இருந்து அலைகளை பெற்று நமக்கு கிடைக்க செய்கிறதோ அந்த சூத்திரம் தான்.

*தான் கற்றுணர்ந்த வித்தைகளை மொத்தம் தன் குருவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சிலை செய்வதற்காக போகர் பயன்படுத்தினார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.*

சிலை செய்து முடித்தபின்னர் தன்னுடைய ஜீவசக்தியை கொண்டு பிராண பிரதிஷ்டையும் செய்தார். தற்போது அந்த சிலை நூறு சதவீதம் செவ்வாயின் கதிர்வீச்சை உள்வாங்கும் receiver ஆகவே மாறிவிட்டது. ஒழுங்கில்லாமல் வரும் கதிரலைகளை ஒழுங்கு படுத்தி வெளியேற்ற ஆரம்பித்தது.போகர் சாதனையும் நிறைவேறியது.

ஒரு ஆச்சரியமான உண்மை என்னவெனில் இந்த தண்டாயுதபாணி சிலை ஒன்று தான் இந்த உலகிற்கே பாதுகாவல் என்று சொன்னால் நம்பமுடியுமா? ஆனால் அதுதான் உண்மை. ஒருவேளை இந்த சிலை அமையாமல் போயிருந்தால் இந்த பூமி என்றோ தன்னுடைய அழிவை சந்தித்திருக்கும். இயற்கை பேரழிவுகள் போர்கள் என்று இந்த பூமி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சொல்கிறோமோ ஒருவேளை இந்த சிலை பிரதிஷ்டை ஆகவில்லை எனில் அப்போது இந்த பூமியின் நிலையை நம்மால் யோசிக்க கூட முடியாது.

        

 தமிழ் சிந்தனை துளிகள்Where stories live. Discover now